நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்!

அவனொரு தமிழன் என்றே அடையாளம் காட்டுங்கள்!

திருமகள்

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் திருநாள், வள்ளுவர் பிறந்த நாள்  விழாவின் போது தூய தமிழ்ப் பெயருடைய குழந்தைகளுக்கு 1,500 வெள்ளி பரிசாக அளித்து வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள்  கிடைக்கும் போது குடவோலை மூலம் பரிசாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

இந்த ஆண்டு (தி.ஆ.2043) நடத்தப்பட்ட போட்டிக்கு 68 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. அதில் 28 பெயர்களே தனித்தமிழ் வரைவிலக்கணத்துக்கு அமைய இருந்தன. எஞ்சிய பெயர்கள் வட மொழிப் பெயர்களாகவோ அல்லது   பெயரில் பொருளோ, இனிமையோ இல்லாமல் இருந்தன. அந்தப் பெயர்களில் சில பின்வருமாறு.

அரிணி, ஓவியா, தாமிரன், கவிநயா, ஆரன், தணிகா,  சுஜேன், அவனி, மிதுசா, மாதினி,      காவியா, காவியன்,  தாரகன்,  அகரன்,  கவிநயன்,  கார்த்திபன், கவின், சங்கவி, நிவேதினி, அகிலன், ஈசன், ஆரன்,  புகழாளன்,  மாதினி,      காவியா,  தாரகன்,   கார்த்திபன், சிறிலக்ஸ்மனா, மாதுனம, அஞ்சலி, ஒவியா, செல்வாகினி, ஒளிமயன், ஆரபி, நர்த்தகி, கார்த்திகன், கங்கா, தாமிரன், கவீஸ், அரினி.

இந்தக் காலத்தில் பெரும்பான்மைத் தமிழ்ப் பெற்றோர் கிரந்த எழுத்துக்களான ஷ், ஸ், ஜ, ஹ, ஸ்ரீ இடம்பெறும் பெயர்களை விரும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். காரணம் அதனைப்  புதினம் அல்லது நாகரிகம் என நினைக்கிறார்கள். பல பெற்றோர்களுக்கு வட மொழிப் பெயர் எது தமிழ்  மொழிப் பெயர் எது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால வடமொழிப் பெயர்களை தமிழ்ப் பெயர்கள் எனக் கருதி வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து விடுகிறார்கள்.  

கஜன், டிலஷ்சனா, டிலக்க்ஷன், சாதனா, ரதிஷா, ஷாரா, ஷிரோமி, யூரேனியா, ஜெனாத், தர்ஷா, ஜசோன், ஆசா, கோசா, வவியன், லட்சிகா, நிருஜா, நிருபிகா, அபிஷா, சுஜுதா, ஜீவிதன், நிரோஜன், நிரோஜி, சுரேஷ், சுரேஷி, வர்ஷன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

 வடமொழியாளர் (சமற்கிருதம்)  உயிரை அச்சு, சுரம் எனவும்  மெய்யை அல், வியஞ்சனம் எனவும் கூறுவர். ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது எழுத்தாலாகி விகாரமின்றித் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்சமம்  எனப்படும். அமலம், கமலம், காரணம், குங்குமம் பொது எழுத்தாலாகிய தற்சம  மொழி.  

ஆரியத்திற்கே உரிய சிறப்பு எழுத்தாலும் பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகித் திரிதல் முதலிய விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்பவம் எனப்படும். சுகி, போகி, சுத்தி. இவை சிறப்பெழுத்தாலாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் தற்பவ மொழி.

அரன், செபம், ஞானம், அரி. இவை பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் தற்பவ மொழி.  ஹரன் அரன் ஆகவும் ஜெபம் செபம் ஆகவும்  ஞான் ஞானம் ஆகவும் தமிழில் வரும். (நன்னூல் - நல்லூர் ஆறுமுகநாவலர் உரை)

ஞானம் என்ற வடசொல்லுக்கு தமிழில் நேரடியான பொருள் 'அறிவு', ஞானி என்றால் அறிவாளி, வடமொழி 'தேவபாடை' என்று கற்பிக்கப் படுவதால்  ஞானம் என்ற சொல் மிகச் சிறந்த பொருளைத் தருவதாகத் தமிழ்மக்கள் நினைக்கிறார்கள். 'ஞானிகள் சொன்னார்கள், எழுதினார்கள்' என்று எழுதப்பட்டதை படிக்கும் போது அதில் மிகப் பெரிய தத்துவம்,  புனிதம் பொதிந்திருப்பதாக தமிழர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதையே 'அறிவாளிகள் சொன்னார்கள், எழுதினார்கள்' என்று படித்தால் ஏதோ படித்தவர், சிந்தனை செய்பவர் எழுதி இருக்கிறார் என்ற பொருள் தருவது போல் தோன்றும். உண்மையிலேயே ஞானி என்றாலும் அறிவாளி என்றாலும் ஒரே பொருள் தான்.  ஆனால் தமிழர்கள் தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்கள் குழந்தைகளுக்கு அறிவாளி என்றோ, பேரறிவாளன் என்றோ பெயர் வைக்கப் பின்நிற்கிறார்கள்.

இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொருள் மயக்கம் காரணமாக கமலம், அரன், ஞானம், அரி எனப் பெயர் வைக்கிறார்கள்.  அவை வடமொழிப்பெயர்களாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்திய தூய தமிழ்ப் பெயர் போட்டியில்  வெற்றி பெற்ற தூயதமிழ்ப் பெயர்கள் கனிமொழி, எல்லாளன், தமிழ், அகரன், தமிழினி, கரிகாலன், திருமகள், முகிலன், இனியவன் மற்றும்  சேயோன். தூய தமிழ்ப் பெயர்களாக இருந்தும் பரிசு பெறத் தவறிய பெயர்கள்  செங்கோன், தமிழ்ச்செல்வன், ஆரூரன், தாமரை, புகழாளன், ஈழன், தாயகன், இனியவன்,  போன்ற  பெயர்கள்.

நாகரிகம் அடைந்த காலம் தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர்.

'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தே' எனத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். தமிழில் பேரளவானவை காரணப் பெயர்களே. பிற்காலத்தில் காரணம் தெரியாத சொற்கள் இடுகுறிப் பெயர்கள் என அழைக்கப்பட்டன. 

'அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ்ப் பெண்ணைப் போல இருக்கிறதே' என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம். 

நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள், இவையாவும் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும். முக்கியமாகப்  பெயர்கள் தமிழர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் குறியீடுகள்.

தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. சங்க காலத்தில் பெயர்கள் தூய தமிழில் இருந்தன. பின்னர் வடமொழி ஆதிக்கத்தின் காரணமாக மன்னர்கள், புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன ஆரியமயப் படுத்தப் பட்டன. 

கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர் மகேந்திரவர்மன், இராஜவர்மன், இராசராசன், குலோதுங்கன், வரகுணபாண்டியன் என வடமொழிப் பெயர்கள் ஆகின. 

முதுகுன்றம் - விருத்தாசலம் ஆனது. மரைக்காடு - வேதாரணியம் ஆனது. மாமல்லபுரம் மாபலிபுரம் ஆனது. மயிலாடுதுறை என்ற அழகான பெயர் மாயூரம் ஆனது. கீரிமலை நகுலேஸ்வரம் ஆனது.

சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள்,  பாவலரேறு புலவர் பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் தொடக்கிய தனித் தமிழ் இயக்கம் காரணமாக வடமொழிப் பெயர்களை நீக்கித் தனித் தமிழில் பெயர்கள் வைக்கும் பழக்கம் செல்வாக்குப் பெற்றது. 

குழந்தைகளது பெயர்கள் மட்டும் அல்லாது வயது வந்தவர்களுடைய வடமொழிப் பெயர்களும் தமிழாக்கப்பட்டன.

சுவாமி வேதாசலம் அவர்கள் மறைமலை அடிகள் (சுவாமி - அடிகள், வேதம் - மறை, அசலம் - மலை) எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் (சூரியன் -  பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி - கலைஞர்) எனவும் நாராயணசாமி நெடுஞ்செழியன் எனவும் கிருஷ்ணன் நெடுமாறன் எனவும் சாத்தையா தமிழ்க்குடிமகன் எனவும் இராமையா அன்பழகன் எனவும் சோமசுந்தரம் மதியழகன் எனவும் தங்கள் பெயர்களைச் சங்க காலப் புலவர்கள் மன்னர்கள் பெயர்போன்று மாற்றிக் கொண்டனர்.

ஈராண்டுகளுக்கு முன்னர் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களது வடமொழிப் பெயர்களை நீக்கிவிட்டுத் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தனது தந்தை இராமசாமியின் பெயரைத் தொல்காப்பியன் என மாற்றினார்.

அண்மைக் காலம்வரை திருமண அழைப்பிதழ்களில் விவாகம், சுப முகூர்த்தம், பத்திரிகை, ஸ்ரீ, வருஷம், மாஸம், தேதி, சிரஞ்சீவி, சௌபாக்கியவதி, கனிஷ்ட, சிரேஷ்ட, நிச்சயம், இஷ்டமித்திர, பந்து, ஜன சமேதராக விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்து ஏகுமாறு பிரார்த்திக்கின்றேன் என்றுதான் எழுதப்பட்டது.

தனித்தமிழ் இயக்கம் காரணமாக இன்று திருமணம், நல்வேளை, அழைப்பிதழ், ஆண்டு, திங்கள், நாள், திருநிறைச் செல்வன், திருநிறைச் செல்வி, தலைமகன், தலைமகள்,  உற்றார் உறவினர், வந்திருந்து, மணமக்களை வாழ்த்தியருளும்படி வேண்டுகிறோம் என மாற்றப்பட்டு விட்டது.

தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவர் தமிழனாகி விடமுடியாது. தமிழ்நாட்டில் பிறப்பதால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது. தமிழ் வாழையடிவாழையாக  (Heritage)வருவதனால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது.  தமிழ் மீது காதல் வேண்டும். தமிழ் மீது பற்றுதல் வேண்டும்.  தமிழ் மீது தாகம் வேண்டும். அவ்வாறு இருப்பவனே தமிழன்.

அண்மைக் காலமாகத் தமிழ்ப் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் அல்லாத பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது.  தலைவர்கள்,  புகழ் பெற்றவர்கள், குடும்பத்தின்  முன்னோர்கள் பெயர் சூட்டும் வழக்கமும் அருகி வருகிறது. பேரன், பேத்தி என்று சொல்லே பெயரன் (தாத்தாவின் பெயரைக் கொண்டவன்), பெயர்த்தி என்பதால் வந்தது தானே!

தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு விழுக்காடுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.

அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவது காண்க.

        (1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.

        (2) தூஷிகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷித்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷிகை, தூஷத்தல், தூஷணம் ஆகிய சொற்கள்  வழியாகவே தூஷிகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.

        (3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக் கொள்ளலாம். பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.

        (4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிஷன், மகிஷா  என்ற பெயர்கள் ஆகும். மகிஷம் என்பது எருமை எனப் பொருள்படும்.

     (5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.

தமிழர்களது பெயர் அவர்களது தேசிய அடையாளத்தின் குறியீடாகும். தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு வடமொழிப் பெயர்களை வைப்பது தமிழர் பண்பாட்டைச் சீரழிப்பதாகும். தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாகும். தன்மானத்தையும் இனமானத்தையும் இழப்பதாகும்.

தமிழர்கள் தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழின் தொன்மை, வண்மை, இளமை இனிமை, நீர்மை தெரிவதில்லை.  தமிழ் எது வடமொழி எது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை.  தற்காலத் தமிழர்கள் பஞ்சாங்கம், சோதிடம், எண் சாத்திரம் பார்த்து பல்வேறு மொழிகளில் பொருள் இல்லாமலோ, தெரியாமலோ பெயரிட்டு விடுகின்றனர். இன்ன எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று சொல்லும் சோதிடர்கள், எண் சோதிடர்கள் மேல் மக்களுக்கு கூடி வரும் நம்பிக்கைக்கு இதற்குக் காரணம் ஆகும்.  இன்னும் சிலருக்குத் தங்கள் பெயர்களில் கிரந்த ஒலிகள் வரவேண்டும் என்ற தீராத மயக்கம் இருக்கிறது.

தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. ட, ண, ற, ண, ன, ர, ல, ழ, ள என்ற வரிசை எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை இலக்கண விதியை அறியாதவராய் இந்த எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள்.

தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி,  கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா, திருமகள், கலைமகள், பூமகள், தமிழ்ச்செல்வி, கோதை, பூங்கோதை, மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன் போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன.

தமிழ் இலக்கணப் படி  ஆண்களின் பெயர்கள்  “அன்”  "அர்” விகுதியிலோ, “அம்” விகுதியிலோ முடிய வேண்டும். எடுத்துக்காட்டு  கம்பன், வள்ளுவன், இளங்கோவன், திருமாவளவன், தொல்காப்பியன். பெண்களின் பெயர்கள் "இ" விகுதியிலோ, "ஐ"  "அள்" விகுதியிலோ முடிய வேண்டும். எடுத்துக்காட்டு கண்ணகி, வாணி, குந்தவை,  கோதை, கலைமகள், திருமகள், நாமகள்.  அப்படி முடிந்தால் சந்த இனிமை மிகும். அதேபோல முடிந்த மட்டும் பெயர்களில் வல்லின எழுத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம்தான் இப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் முக்காலே மூன்று விழுக்காடு வடமொழிப் பெயர்களையே வைத்துத் தொலைக்கிறார்கள்.

05.12.2008 தினமலர் கோவை பதிப்பில் பிறந்த நாள் வாழ்த்துப் பெற்ற குழந்தைகள் பெயர்கள்:

ஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார், கார்த்திகா, விஜயபாரதி, தருண், நவீன், ஹிரன்விகாஷ், சர்வேஸ்,ஸ்ரீஇமி, கார்த்திகா, நித்திலன், ரித்விக், மதன், கவுதம், வினுதர்ஷினி, முகிலா, பரத்ராம், சுமையா, பிரநீஷ், பிரகாஷ், ரஞ்சித், அமிர்வர்சினி, ரணீட்டா, உமயாள்தர்சினி, அகிலேஷ், சுவேதா, வசுந்தரா, சுபஸ்ரீ, கீர்த்தனா, ரித்திக், யோகேஸ்வரி, விகாஸ், கவின், முஹமதுஷைத், தனகவுரி, கார்த்திகாதேவி, பிரணதி, தனுஷா, அக்ஷயா, அனுகிரஹா, கீர்த்திவாசன், சுஜேஸ் கார்த்திக், பிரனேஷ், ருத்ரேஷ்பாரதி, அப்ரீன், ஹேமா, மிருதுளா, ரக்ஷனா, அனுஷ், நித்யாஸ்ரீ, ஹரிஷ், திரிஷிதா, சுருதி, நிகிதாஸ்ரீ, அகிலேஷ், சுஜன், சத்தியநாராயணன், ரிதிகா, பிரக்னா, சாமுவேல்ராஜ், சிவவிஷ்வா, ஸ்ரீஹரிணி, வைஷ்ணவி, ஸ்ரீராம், ரித்திகா, இலக்கியா, முத்துவிஷால், அருண் ஆதித்யா, விக்வின், சந்தியா, சிவராஜ், கிரண்குமார், லாவண்யா, தர்ஷினிஸ்ரீ, பர்ஷன்பானு, திவ்யா, சூர்யபிரகாஷ், கோகுல்பிரசாத், அனு, ஹரிசுதன், ஹர்ஷவர்தன், சிபு, காயத்ரி, ஓம், இந்துபிரியா, சுபஹரிணி, ரோஹித், ஸ்ரீநிதிவருணா, மணிகண்டன், பரத், சங்கமித்திரை, நேத்ரா, பாலகிருத்திக், சஞ்ஜெய் பிரணவ், அவ்வீஸ், ஹர்ஷினி, யுவநிதர்ஷனா, சிவசங்கர், ரதேஷா, ஹரினிசூர்யா, ஷியாம், பர்ஜானா, கிருஷ்ணன், பில்ஜோபினோய், தேன்மலர், பிரியதர்ஷினி, ஹரிசுதன், ஹையகிரிவி, நேத்ரா, மானஷா, கேத்ரின் சஹானா, தீபன்ஸ்ரீ, விக்னேஷ், அப்ரோஸ், தனுஷ்ராகவ், ரோஸ்மால், ஆதிஷ், ஸ்ரீஜித்குமார், ஆதிஷ், கிறிஸ் ரையன்.

இதில் தேன்மலர் என்ற ஒரு பெயர்தான் தூய தமிழ்ப்பெயர். கார்த்திகா, கார்த்திக், மணிகண்டன், கவின் ஆகிய நான்கும் தமிழாக இருக்குமோ என்று தோன்றுபவை. ஏனையவை தமிழ் இல்லை என்று உறுதியாகத் தெரியும் வடமொழிப்  பெயர்கள்.  தினமலர் பார்ப்பனர்களால் நடத்தப்படும் நாளேடு என்பதால் அதில் பிறந்த நாள் வாழ்த்துக்கு வந்த பெயர்களில் 98விழுக்காடு வடமொழிப் பெயர்களாக இருப்பதில் வியப்பில்லை. 

தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை.  (இலக்குவனார் திருவள்ளுவன்)

எனவே நல்ல தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் அவனொரு தமிழன் என்றே அடையாளம் காட்டுங்கள்!


ஏழை இந்திய நாட்டில் பணக்காரச் சாமிகள்!

திருமகள்

கோயில்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் என்பவற்றின் பெயரால் உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன.  எடுத்துக்காட்டாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா கார்த்திகை தீப விழா வரும் 8 ஆம் நாள் நடக்க இருக்கிறது.  அன்று அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இதற்காக, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். இதற்கான நெய், மதுரை காந்தி கிராம ஊரக வளர்ச்சி துறையிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.  இந்த  3500 கிலோ நெய் நெருப்பில் கொட்டப் பட்டு எரிக்கப்படுகிறது. ஆயிரம் மீட்டர் துணி வேள்வித் தீயில் எரிக்கப்படுகிறது. இது போன்ற மூடநம்பிக்கையால் ஆண்டு ஒன்றுக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் இந்தியாவில் வீணடிக்கப்படுகிறது.

நெய் சத்தான உணவு.  இந்தியாவில் 50  விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்து இன்மையால் சோகநோய்க்கு (Anemic)  ஆளாகிறார்கள்.  

போதிய ஊட்டச் சத்து இல்லாமையால் 30 விழுக்காடு குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கிறார்கள்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 75 விழுக்காடும் பெண்களில் 52 விழுக்காடும் இரும்புச் சத்துக் குறைவால் குருதி  சோகையால் பீடிக்கப்படுகின்றனர். மேலும் 5 வயதுக்குட்பட்ட 57 விழுக்காடு குழந்தைகள் வைட்டமின் ஏ குறைவால் பாதிக்கப்படுகின்றனர் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் புள்ளி விவரங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றன.

வறுமைக் கோட்டின் கீழ் என்ற வரையறை  நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.  உலக காப்பகத்தின் வரையறையின்படி மேம்பாடு அடையாத நாடுகளின் வறுமைக் கோடு என்பது நாளொன்றுக்கு ஒரு ஆள் வருமானம் ஒரு அமெரிக்க  டொலர் அல்லது ஆண்டொன்றுக்கு 365 அமெரிக்க டொலர்கள் ஆகும்.  இந்த வரையறையின் அடிப்படையில் 75 விழுக்காடு இந்தியர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாடுகிறார்கள்.  அதாவது 80 கோடி மக்கள் வறுமையில் உழல்கிறார்கள்! இது உலக வறுமையாளர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்!

இந்திய அரசின் கணிப்பின்படி வறுமைக் கோட்டின் கீழ் எல்லை நகர்ப்புறங்களில் மாதம் ரூபா 296. ஊர்ப்புறங்களில் மாதம் ரூ276. அதாவது நாளொன்றுக்கு ரூபா 10 மட்டுமே.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் மதப் பண்டிகை என்ற பெயரால் 3500 கிலோ நெய் பாழடிக்கப்படுகிறது. ஒரே ஒரு கோயிலில் வீணடிக்கப்படும் நெய்யின் அளவு இது. ஊர்தோறும் கார்த்திகை பண்டிகைக்காக இவ்வாறு வீணாக்கப்படும் உணவுப் பொருள்களின் அளவைக் கணக்கிடுவது மிகவும் கடினமாகும்.  நெய் மட்டுமல்ல வெவ்வேறு பெயர்களில் நடக்கும் வேள்வித் தீயில் கொட்டப்படும் உணவு, பட்டாடை போன்றவற்றையும் கணக்கிட முடியாது. உலக அமைதிக்கு வேள்வி என்று சொல்லி தீமூட்டி நெய்யைக் கொட்டுவதும் அதில் பட்டுப் புடவைகளைப் போட்டுப் பொசுக்குவதும் அன்றாட நிகழ்ச்சி ஆகும்.  ரொறன்ரோ கோயில்களிலும் அபிசேகம் என்ற பெயரில் பால், தயிர், பழங்கள், இளநீர் வீணாக்கப்படுகின்றன!

இதே ஏழை இந்திய நாட்டில்தான் உலகப் பணக்கார சாமிகளும் இருக்கின்றன. திருப்பதி ஆண்டு வருமானம் கத்தோலிக்க வத்திக்கானையும் தாண்டிவிட்டது.

ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில்

ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவிலில் கள், பழமையான ஆயிரக்கணக்கான நகைகள் துண்டுகள் மற்றும் தங்ககுழாய்கள் போன்ற பொக்கிசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொத்து மதிப்பு ரூ 1,00,000 கோடி. கோல்டன் பட்டம், 17 கிலோ தங்க நாணயங்கள், 2.5 கிலோ எடையுள்ள 18 அடி நீண்ட தங்க நகை, தங்க கயிறுகள்,வைர நகைகள், பழமையான ஆயிரக்கணக்கான நகைகள் துண்டுகள் மற்றும் தங்கக் குழாய்கள் போன்ற பொக்கிசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி பாலாஜி

ஆண்டு தோறும சுமார் ரூ 650 கோடி வருமானம் பெறும் திருப்பதி பாலாஜி இந்தியாவின் இரண்டாவது பணக்கார கடவுள். கோவிலின் தங்கம் 3000 கிலோ, ரூ 1000 கோடி ரூபாய் பணம் பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. ரூ 300 கோடி, 350 கிலோ தங்கம் மற்றும் நன்கொடைகள்இ 500 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் நன்கொடையாகப் பெறப்படுகிறது.

ஸ்ரீ சாய்பாபா கோவில்

மகாராஷ்டிரா ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவில் பணக்காரகோவில்களில் ஒன்றாகும். ரூ. 32 கோடி முதலீடுகள், 450 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் கோவில் நம்பிக்கை ரூ 1,288 கோடி மற்றும் ரூ 1,123 கோடி மதிப்புள்ள தங்க பதக்கங்கள், ரூ 6,12 லட்சம் மதிப்புள்ள தங்கநாணயங்கள்இ ரூ 3.26 கோடி மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் கொண்டிருக்கிறது. ஆண்டு வருவாய் சுமார் ரூ 450 கோடி உள்ளது.

மாதா வைஷ்ணவ தேவி

திருப்பதி பாலாஜி பிறகு நாட்டின் இரண்டாவது அதிகம் பக்தர்கள் தரிசிக்கும் செய்யும் கோவில் இது. ஜம்மு காஷ்மீர் கட்ரா அருகே உள்ளது. வைஷ்ணவ தேவி கோவிலின் ஆண்டுவருமானம் ரூ.500 கோடி. மாதம் ரூ 40 கோடி வருமானம் கிடைகிறது.

சித்தி விநாயகர் கோவில்  

மகாராஷ்டிரமாநிலத்தில் மும்பை மையப் பகுதியில் அமைந்துள்ள  இரண்டாவது பணக்கார கோயில் இது. ரூ 46 கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறது.  மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ 125 கோடி உள்ளது. பக்தர்களால்  பிரபலமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடைகள்  மூலம் ரூ 10-15 கோடி கிடைக்கிறது. ஸ்ரீ சித்தி விநாயகர் கணபதி கோயில் அறக்கட்டளை கோவில் சொத்துக்களை மார்ச்  2009 ஆண்டு வரை  கணக்கிட்ட போது  சுமார் 140கோடி சொத்துகள் இருந்தது.


 

தங்கம் வாங்கலையோ தங்கம்! 

திருமகள்

ஸ்காபரோ பகுதியில் பட்டப்பகலில் கள்ளர்கள் கதவை உடைத்து உட்புகுந்து களவு எடுப்பது அதிகரித்துள்ளது. காவல்துறை வீடு

வீடாக சென்று வீட்டு உரிமையாளர்களை எச்சரித்து வருகிறார்கள். இருந்தும் களவுகள் நின்ற பாடில்லை.  காவல்துறையும் கள்ளர்களை பிடித்த

பாடாக இல்லை.  கள்ளனைக்  கண்டால் எங்களைக் கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

 வீட்டை உடைக்கும் கள்ளர்கள் கணினி, கமரா வகைகளை விட்டு விட்டு தங்க நகைகளையே எடுத்துப் போகிறார்கள். அதற்காக பீரோவைக் கவுட்டுக்கொட்டி அங்குலம் அங்குலமாகத் தேடுதல் நடத்துகிறார்கள். 

தங்க நகைகளை திருடர்கள் இலக்கு வைப்பதற்குக் காரணம் அதற்குக் கிடைக்கும் உச்ச விலை. ஒரு அவுன்ஸ் தங்கம்

சந்தையில் 1,666 டொலர் விற்பனையாகிறது. வேறு எந்த இனத்தவரையும் விட தமிழர்கள்தான் தங்க நகைகளை வாங்கி கழுத்து முதல் கைவரை

அடுக்குகிறார்கள்.  திருமண வீட்டுக்கு வரும் சில பெண்கள் குறைந்தது ஒரு கிலோ தங்க நகைகளை சுமந்த வண்ணம் வருகிறார்கள்.

ஒரு அவுன்சில் (1 troy  ounce)  31.1034768 கிராம் உள்ளது.  ஒரு கிராமில் 0.0321507466 அவுன்சு ( 1 gram = 0.0321507466 troy ounces) உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு பவுன் (8 கிராம்)  ரூ.20 ஆயிரத்தை தாண்டியதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தங்க விற்பனை குறைந்தபாடாக இல்லை.

இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பவுன் ரூபா 100 விற்றது! 

உலகத்தில் இந்தியாதான் தங்கத்தை  இறக்குமதி செய்வதில் முதலாவது இடம் வகிக்கிறது.  சென்ற ஆண்டு 958 தொன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு 1,000 தொன்னை எட்டலாம்.  

தென்னிந்தியாவில் தங்கம் வாங்குவதில்  தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது என, இந்திய நகைத்  துறையின் வாணிப கண்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், "இந்திய ஜுவல்லரி துறையின் வர்த்தக கண்காட்சி, 2011' கடந்த 14 ஆம் தேதி தொடங்கி  நேற்று நிறைவடைந்தது.

கண்காட்சியில் நவீன டிசைன்களில் வைரம், தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் இடம் பெற்று இருந்தன.கண்காட்சி துவக்க விழாவில், தங்கம் 

விலை உயர்வு குறித்து பேசிய தமிழ்நாடு தங்க நகை மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், " உலகம் முழுவதும், தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் 

அதிகரித்து வருவதால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெண்கள் தங்க நாணயங்களை அதிகமாக வாங்குகின்றனர்.  

உலக பொருளாதாரம் மந்தம் அடைந்திருப்பதால் தங்கத்துக்கு ஆன தேவை அதிகரித்துள்ளது. மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. சென்ற ஓகஸ்ட் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,878 டொலரை எட்டியது. மிக விரைவில் அது 2,000 டொலரை எட்டிவிடும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்கூறுகிறார்கள்.  

தங்கம் மீது மக்களுக்கு இருக்கிற  மோகம் அதன் மஞ்சள் நிறம். அது எளிதில் கிடைப்பதில்லை என்பது இரண்டாவது காரணம். 

தங்க நகைகள் மீது தமிழ்ப் பெண்களுக்கு உள்ள மோகம் எப்போது தொலையும் என்று தெரியவில்லை.


 கனடாவில் முன்னுக்கு வருவதற்கும் வாய்ப்புண்டு கெடுவதற்கும் வாய்ப்புண்டு

திருமகள்

காலையில் எழுந்து குளித்துவிட்டு அன்று வந்த செய்தித்தாளைப் படிப்பதுதான் எனது முதல் வேலை.  செய்தித்தாளில் வரும் எல்லாச் செய்திகளையும் கட்டுரைகளையும் தலையங்கத்தையும் படிக்க முடியாது. எது தேவையோ அதைப் படிப்பதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

இப்போதெல்லாம் கொலை, கொள்ளை, ஏமாற்றுப் போன்ற செய்திகள் வந்தால் நம்மாக்களுடைய பெயர்களும் தேவைக்கு அதிகமாகவே வரத்தொடங்கியுள்ளது.  இதனால் செய்தித்தாள்களைக் காலைவேளையில் படிக்கவே பயமாக இருக்கிறது.

தொண்ணூறுகளில் தமிழ் இளைஞர்கள் இரண்டு கன்னையாகப் பிரிந்து ஆளை ஆள் அடித்துச் சண்டை போட்டார்கள். அதில் சம்பந்தப்பட்ட சிலர் நாடுகடத்தப்பட்டார்கள். இன்னும் சிலர் மாமியார் வீட்டிற்கு விருந்தாளியாகப் போனார்கள்.  தமிழ் சமூகத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய இந்தச் சண்டை எப்படியோ  முடிவுக்கு வந்தது. 

 இன்றைய காலைச் செய்தித்தாளில் "வீட்டுமுகவர் கொலையில் மூன்று பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு" (Three  face charges in real estate agent's death)  என்ற தலைப்போடு ஒரு செய்தி.   கொலைக் குற்றச்சாட்டோடு கப்பம் கறக்கும் நோக்கோடு ஆட்கடத்தல்,  வீட்டுமுகவர் Johnny Fei  யை தாக்கிப் படுகாயப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுக்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.  கொலை செய்யப்பட்டவரது பெயர் ரோனி  ஹான்.  இவரும் வீட்டுமுகவர் Johnny Fei  யும்  கடந்த சனவரி 15 இல்  அவரது 2.4 மில்லியன் பெறுமதியான வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்கள்.  சிலநாட்களில் Johnny Fei  யை கடத்தியவர்கள் அவரை விட்டுவிட்டார்கள்.  மற்றவரைப் பற்றித் தகவல் இல்லை. இப்போது ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் இருந்து மனித எலும்புத் துண்டுகளைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

சரி இது சீனர்களுக்கு இடையிலான சிக்கல் என்றுதான் முதலில் எண்ணத்தோன்றியது.  உண்மை அதுவல்ல. குற்றம் சாட்டப்பட்ட மூவரில் இரண்டு பேர் தமிழ் இளைஞர்கள்.  பெயர் செந்தூரன் சபேசன் (23)  கோபிநாத் சாந்தகுமார் (23). எஞ்சியவர் Sohiab Malick (21)    என்ற  பாகிஸ்தானியர்.  இன்னொரு சீனரைக் காவல்துறை தேடுகிறது.

 உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கனடாவுக்கு ஏதிலிகளாக வந்தவர்களது பிள்ளைகள் ஒழுங்காகப் படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் அமரவேண்டியவர்கள் ஏன் இப்படியான தவறுகளைச் செய்து மாட்டிக் கொள்கிறார்கள்?  அதுவும் கொலைக் குற்றம்? தவறு யாருடையது? பெற்றோர்களா? இந்த சமூகமா?

உலகத்திலேயே மிகச் சிறந்த நாடு கனடா. இங்கு போல் சட்டம் ஒழுங்கு வேறு எந்தநாட்டிலும் இல்லை. கனடாவில் உள்ள கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒருவர் முன்னுக்கு வரலாம்.  பெரும்பான்மையோர்  வருகிறார்கள். அதே சமயம் கெடுவதற்கும் வாய்ப்புகளும் வசதிகளும் உண்டு. தேர்வு எமது கையில் உண்டு. இதற்கு எடுத்துக்காட்டு இந்த இரண்டு இளைஞர்கள்.


உங்கள் வீட்டுத் திசை மேற்குத் திசையா? 

திருமகள் 

மூன்றாவது உலக நாட்டில் இருந்து முதலாவது உலக நாட்டுக்குப் புலம்பெயர்ந்தாலும் மூடநம்பிக்கைகளைக் கைவிடாது தொடர்ந்து எம்மில் சிலர் அதற்கு அடிமையாக இருந்து  வருகிறார்கள்.

அண்மையில் தான் வாழும் வீடு சரியில்லை, அந்த வீட்டை வாங்கி அதில் குடிபுகுந்த நாள்த்தொட்டு வாழ்க்கையில் ஒன்றுமாறி ஒன்று இழப்புக்கள், பின்னடைவுகள் நடைபெறுவதாக அந்த வீட்டுச் சொந்தக்காரர்கள் நம்பினார்.  வண்டியை அதிவேகத்தில் ஓட்டிப் போனதற்கு காவல்துறை பிடித்து வழக்கு வைத்ததும் அதற்கு ஒரு தொகை தண்டம் கட்டினார்.  எதற்கும் சாத்திரியாரிடம் யோசனை கேட்போம் என நினைத்து சாத்திரியாரிடம் போனார்.  சாத்திரியார் யோசித்து விட்டு வாசல்  மேற்குத்திசையில் அமைந்திருப்பதுதான்  எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் எனச் சொன்னார்.  அதனை நம்பி 2,250 சதுர அடியுள்ள அந்த வீட்டைய விற்றுப்போட்டு 1,800  சதுர அடியுள்ள இன்னொரு வீட்டை சில ஆயிரம் குறைவான விலைக்கு வாங்கினார்.

இதில் அவருக்கு காணி மாற்றுவரி, எழுத்துக் கூலி என ஏகப்பட்ட செலவு. இவற்றைச் சமாளிக்க மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக திங்கள் முதல் சனிவரை இரண்டு வேலை செய்கிறார். ஞாயிறுக் கிழமையில் ஒழுங்காக தேவாலயத்துக்குப் போகிறார். என்ன மனிதர் கிறித்தவரா?  அவர் இந்தச் சாத்திரம் எல்லாம் பார்க்கிறாரா என்று கேட்கிறீர்களா? ஆமாம் அவர் கிறித்தவர். கேட்டால் "நான் மதம்மாறிய கிறித்தவன். பழைய நம்பிக்கைகளை கைவிட முடியாது" என்கிறார்.  இன்னொருவர் வாஸ்து சாத்திரப்படி கீழ்த்தளத்தில் இருந்த தண்ணீர்தொட்டியை பலத்த செலவில் கராச்சுக்கு மாற்றியிருக்கிறார். ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தின்மை, உயர்வு தாழ்வு,  நோய் நொடி, சுகம் துக்கம், வெற்றி தோல்வி இவற்றுக்கும் வீட்டு வாசல் மேற்காக இருப்பதற்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை. சிலர் 8 இலக்கம் இருந்தால் வீடு நல்லதாக இருந்தாலும் பயத்தில் அந்த வீடு வேண்டாம் எனத் தள்ளி விடுகிறார்கள்.   எட்டு என்ற எண் சனிக் கிரகத்தோடு (அட்டமத்துச் சனி) தொடர்பு படுத்துவதால்தான் அது கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது.  கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நாலு திசையும் பார்க்கும் வீடுகளைத்தான் இலட்சக் கணக்கில் கட்டிவைத்திருக்கிறார்கள். அது போல 1,2,3 ...என்று இலக்கம் இடும்போது 8,17, 26, 35, 44, 53, ...... 88 என்ற எண்கள் வரத்தான் செய்யும்.  இதற்குத்தான் சொல்வது நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான் என்று.


 இந்தியாவும் - சீனாவும்

திருமகள்

இந்தியாவை புண்ணிய பூமி என்கிறார்கள். ஆனால் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டால் சீனாவின் முன்னேற்றம் அளப்பரியது.  இந்தியா இன்னும் பின்தங்கிய நாடாகவே இருக்கிறது.  சீனா பல துறைகளிலும் அபரிமிதமாக முன்னேறி வருகிறது. உலக ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் சீனா சிறப்பாக விளையாடித் தங்கப் பதக்கங்களை அள்ளி வருகிறது. ஆனால்,ஒரு தங்க மெடல் வாங்கவே இந்தியா திணறுகிறது. இப்போது, டென்னிஸ் விளையாட்டிலும் சீனா முன்னேறி வருகிறது. இராணுவத்தில் இந்தியாவிடப் பல மடங்கு பலம்  வாய்ந்ததாக சீனா வளர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த யப்பானைப் பின்தள்ளிவிட்டு  அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவு பல மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. கல்வி முறையில்,  தொடக்க  முதல்  பட்டப்படிப்பு வரை கட்டுக் கோப்பாக முன்னேறி வருகிறது. சமீபத்தில் சீனா பீஜிங்கிலிருந்து ஹாங்காங் வரை 1,318 கிமீ தூரத்தை அய்ந்து மணி நேரத்தில் கடக்கும் உலகிலேயே அதிவேக புல்லட் தொடர்வண்டியை அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளது.  இந்தியா தண்டவாள விரிசலைக் கூட உடனடியாக சரிப்படுத்த முடியாத நிலையில்  இருக்கிறது.

மதுரை - சென்னை இடையே இயக்கப்படும் வைகை அதிவேக தொடர்வண்டி 120 கிமீ க்கு வெள்ளோட்டம் செய்து  100 கிமீ வேகத்தில் இயக்க, இரயில்வே பாதுகாப்பு ஆணையர்  அனுமதியளித்தும்  80 கிமீ வேகத்தில் தான் இயக்கப்படுகிறது. டில்லி - ஆக்ரா இடையே செல்லும் ராஜ்தானி அதிவேக  தொடர்வண்டி  100 - 120 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. மணிக்கு, 260 கிமீ வேகத்தில் இயக்கும் சீனாவை இந்தியா முந்தப்போவது எப்போது? இன்று உலகிலேயே கையூட்டு  ஊழலில் முதலிடம் பிடிக்க  இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்பதே அதன் சாதனை! (யூலை 05, 2011)


உள்ளுரில் தடைசெய்யப்பட்ட அஸ்பெஸ்ரஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!

திருமகள்

ஒரு ஊரிலே ஒரு பாதிரியார் இருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர் தேவாலயத்தில் பிரசங்கம் செய்வார். அப்போது பாதிரியாரின் மனைவி முன்வரிசையில் இருந்து அவரது பிரசங்கங்களை செவிமடுப்பார். அப்படி ஒரு நாள் பிரசங்கம் செய்யும் போது கொல்லாமையின் சிறப்பைப் பற்றிப் பாதிரியார் பேசினார். உயிர்களைக் கொன்று உண்பது பாபம் என்றார்.  தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பிய பாதிரியார் மதிய உணவு உண்பதற்கு உட்கார்ந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கமாகப் பரிமாறப்படும் கோழிக்கறியை கோப்பையில் காணோம். அவர் முகத்தில்  ஏமாற்றம்.  பாதிரியார் மனைவியைக் கேட்டார். "என்ன இன்று கோழிக் கறியைக் காணோம்?"  மனைவி சொன்னார் "நீங்கள்தான் உயிர்களைக் கொல்வது பாவம். அந்தப் பாவத்தை நாம் செய்யக்கூடாது என்று இன்று காலை பிரசங்கம் செய்தீர்களே!  அதனால் கறிசமைப்பதற்கு கடகத்தால்  மூடி வைத்த கோழியை திறந்து விட்டு விட்டேன்" என்றார். திகைத்துப் போன பாதிரியார்  உடனே மனைவியைப் பார்த்து "ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே! உனக்கல்லடி என் கண்ணே" என்றார்.

இந்த ஊருக்குச் சொல்லும் பாதிரியார் மாதிரி கனடா அஸ்பெஸரஸ்  பயன்பாட்டை உள்நாட்டில் 99 விழுக்காடு தடைசெய்து விட்டது. ஆனால் அதே அஸ்பெஸ்ரை கனடா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இராக், ஆப்கனிஸ்தான் போன்ற மூன்றாவது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது!  இப்படிக் கனடா ஏற்றுமதி செய்யும் அஸ்பெசின்  எடை ஆண்டொன்றுக்கு 500,000 மீட்றிக் தொன் ஆகும். உள்ளுரில் 6,000  மீட்றிக் தொன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அஸ்பெஸ்ட் பயன்பாடு நுரைஈரல் புற்றுநோயை உண்டாக்குகிறது. அஸ்பெஸ்டை உடைக்கும் போதோ, உராயும் போதோ அதிலுள்ள நார் காற்றில் கலந்து மூச்சை  இழுக்கும் போது நுரைஈரலில் ஒட்டிக் கொள்கிறது.

என்டிபி கட்சி உடல்நலத்துக்கு கேடு செய்யும் இந்த அஸ்பெஸ்ரஸ்  ஏற்றுமதியை தடைசெய்யுமாறு பெரிய இயக்கம் ஒன்றை நடத்துகிறது.  அதன் கேடுகளை விளக்கி ஒட்டாவா சன், எட்மன்ரன் யேர்னல் ஆகிய இரண்டு நாளேடுகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்தது.  நூற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள்,  நல்வாழ்வு ஆதரவு அமைப்புக்கள் அந்த விளம்பரத்தை வழிமொழிந்திருந்தன. ஆனால் கார்ப்பர் அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில் அஸ்பெஸ்டின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.

முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும் அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பின் நிற்பதில்லை.  முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமை பற்றி உலகுக்கு உபதேசம்!

கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம்  செய்கிறது. ஆனால்  உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும் பொருளை -  ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ  நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீது படையெடுத்து இலட்சக்கணக்கில்மக்களை கொன்று குவித்தது. இப்போது  ஆப்கனிஸ்தான் மீது படையெடுத்து மக்களைக் கொன்று குவிக்கிறது! 

உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில் அஸ்பெஸ்டின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.

முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும் அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பின் நிற்பதில்லை.  முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமைப் பற்றி உலகுக்கு உபதேசம்!

கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம்  செய்கிறது. ஆனால்  உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும் பொருளை -  ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ  நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீதும் ஆப்கனிஸ்தான் மீதும் படையெடுத்து மக்களைக் கொன்று குவிக்கிறது!

உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய அஸ்பஸ்டோஸ் தகடுகளைப் பயன்படுத்துவதற்கு கனடா தடை விதித்துள்ளது.

எனினும், அஸ்பஸ்டோஸ் வளங்களை அகழ்ந்து தகடுகளை உற்பத்தி செய்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பணம் ஈட்டுவதற்காக தீங்கு ஏற்படக் கூடிய பொருட்களை விற்பனை செய்வது நியாயமாகாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ஸ்டீவன் ஹார்பரின் அரசாங்கம் அஸ்பஸ்டோஸ் பாவனை தொடர்பில் கவனயீனமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு அதிகளவில் அஸ்பஸ்டோஸ் தகடுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய பாராளுமன்றக் கட்டடங்களை புனரமைப்பதற்காக எதிர்வரும் தசாப்தங்களில் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படவுள்ளன.

குறிப்பாக அஸ்பஸ்டோஸ் தகடுகள் பயன்படுத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள கூரைகள் புனரமைக்கப்பட உள்ளன.

அஸ்பஸ்டோஸ் தகடுகளுக்கு தடை விதிக்கும் பிரகடனத்தில் கைச்சத்திடும் கனடா மறுபுறத்தில் வறிய நாடுகளுக்கு அஸ்பஸ்டோஸ் தகடுகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அஸ்பஸ்டோஸ் தகடுகளினால் உடலுக்கு ஏற்படக் கூடிய தீங்குகள் குறித்து மருத்துவர்கள் மிகத் தெளிவான அறிக்கையை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அஸ்பஸ்டோஸ் தகடுகளை உற்பத்தி செய்வதை தடை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த கோரிக்கையை கனடா நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


உள்ளுரில் தடைசெய்யப்பட்ட அஸ்பெஸ்ரஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!

திருமகள்

உள்ளுரில் தடைசெய்யப்பட்ட அஸ்பெஸ்ரஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி! என்ற தலைப்பில் கடந்த நொவெம்பர் 'இன்றைய நாள் குறிப்பு' என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தேன்.  அதில் சொல் ஒன்று செயல் ஒன்று நடப்பவர்களைச் சித்தரிப்பதற்கு பாதிரியார்   மனைவியைப் பார்த்து "ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே! உனக்கல்லடி என் கண்ணே" என்ற கதையை மேற்கோள் காட்டினேன். 

அந்தப் பாதிரியார் மாதிரி கனடா அஸ்பெஸரஸ்  பயன்பாட்டை உள்நாட்டில் 99 விழுக்காடு தடைசெய்து விட்டது. ஆனால் அதே அஸ்பெஸ்ரை கனடா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இராக், ஆப்கனிஸ்தான் போன்ற மூன்றாவது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது!  இப்படிக் கனடா ஏற்றுமதி செய்யும் அஸ்பெசின்  எடை ஆண்டொன்றுக்கு 500,000 மீட்றிக் தொன் ஆகும். உள்ளுரில் 6,000  மீட்றிக் தொன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அஸ்பெஸ்ட் பயன்பாடு நுரைஈரல் புற்றுநோயை உண்டாக்குகிறது. அஸ்பெஸ்டை உடைக்கும் போதோ, உராயும் போதோ அதிலுள்ள நார் காற்றில் கலந்து மூச்சை  இழுக்கும் போது நுரைஈரலில் ஒட்டிக் கொள்கிறது" என்று எழுதியிருந்தேன்.

என்டிபி கட்சி உடல்நலத்துக்கு கேடு செய்யும் இந்த அஸ்பெஸ்ரஸ்  ஏற்றுமதியை தடைசெய்யுமாறு பெரிய இயக்கம் ஒன்றை நடத்துகிறது.  அதன் கேடுகளை விளக்கி ஒட்டாவா சன், எட்மன்ரன் யேர்னல் ஆகிய இரண்டு நாளேடுகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்தது.  நூற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள்,  நல்வாழ்வு ஆதரவு அமைப்புக்கள் அந்த விளம்பரத்தை வழிமொழிந்திருந்தன. ஆனால் கார்ப்பர் அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில் அஸ்பெஸ்டின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.

முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும் அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பின் நிற்பதில்லை.  முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமை பற்றி உலகுக்கு உபதேசம்!

கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம்  செய்கிறது. ஆனால்  உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும் பொருளை -  ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ  நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீது படையெடுத்து இலட்சக்கணக்கில்மக்களை கொன்று குவித்தது. இப்போது  ஆப்கனிஸ்தான் மீது படையெடுத்து மக்களைக் கொன்று குவிக்கிறது! 

உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில் அஸ்பெஸ்டின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.

முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும் அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பின் நிற்பதில்லை.  முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமைப் பற்றி உலகுக்கு உபதேசம்!

கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம்  செய்கிறது. ஆனால்  உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும் பொருளை -  ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ  நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீதும் ஆப்கனிஸ்தான் மீதும் படையெடுத்து மக்களைக் கொன்று குவிக்கிறது!


எங்களுக்குள்ளும் இலட்சுமி மிட்டல்கள் முளைத்துவிட்டார்களா?

திருமகள்

தமிழர்கள் பொதுவாக கையிறுக்கக்காரர்கள் எனப் பெயர் எடுத்தவர்கள். பொதுக் காரியங்களுக்குக் கொடுக்கப் பின்னடிப்பார்கள். ஆனால் இரண்டு வேறு நிகழ்ச்சிகளுக்குப் பணத்தைத் தண்ணீர் போல் செலவழிப்பார்கள். ஒன்று கோயில் மற்றது திருமணம்.

கனடாவில் உள்ள கோயில்கள் அதை நடத்துபவர்களுக்கு காசு மரம். தங்கச் சுரங்கம். அள்ள அள்ள வற்றாத அட்சர பாத்திரம். கற்பகதரு. காமதேனு. தனிப்பட்ட  கோயில்களை நடத்தும் முதலாளிகள் காட்டில் ஒரே டொலர் மழைதான்.  இரண்டு சில்லு மிதிவண்டியில் ஓடினவர்கள் ஒன்றுக்குப் பல விலையுயர்ந்த ஆடம்பர மகிழுந்துகளில் உலா போகிறார்கள்.  இது நல்ல முன்னேற்றம்.

பிராமணர்களை அறுதொழிலோர் என அழைப்பார்கள். அதாவது வேதம் ஓதல் ஓதுவித்தல்,  வேள்வி செய்தல் செய்வித்தல், பிச்சை எடுத்தல் பிச்சை கொடுத்தல் (கற்றல் கற்பித்தல், வேதல் வேட்டல், ஈதல் ஈட்டல்) என்ற ஆறு தொழில்கள் என அர்த்த சாஸ்திரம் கூறும்.  

பிராமண, ஸத்திரிய, வைச்ய, சூத்ர என்ற நான்கு வர்ணங்கள் என்னால் தோற்றுவிக்கப்பட்டன அதனை  என்னால் கூட மாற்றமுடியாது  (சாதுர்வர்ணியம் மயா ஸ்ருஷ்டம்) என்று கிருஷ்ண பகவான் கீதையில் கூறுகிறார். இந்த நான்கிலும் பிராமணன்தான் முதலில் வைக்கப்படுகிறான்.

வேதங்களின் விளக்கநூலான சதபத பிராமணத்தில்தான் பிராமணர்களின் ஆறு தொழில்கள் சுட்டப்படிருக்கின்றன. பின்னர் யாக்ஞவல்கிய ஸ்மிருதி பத்துவகையான ஆசாரங்களை அவர்களுக்குப் பட்டியலிடுகிறது. பின்னர் வந்த ஸ்மிருதிகளில் பதினாறு ஆசாரங்களாக அவை மேலும் விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன. இவையனைத்துமே கல்வியையும் வேள்வியையும் மட்டுமே செய்து அதற்குரிய வாழ்க்கைநெறியைக் கடைப்பிடித்து வாழவேண்டியவர்களாக பிராமணர்களை வகுத்துரைப்பவை.  அடுத்த வேளைக்கு எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறவனே உண்மையான பிராமணன்.

ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று றுபுரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் .. ..

எனப் பதிற்றுப்பத்துக் (24) கூறுகிறது.  தொல்காப்பியரும் “ அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்" (சொல்-75 ) எனக் கூறுகிறார்.

“ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்

ஈதல், ஏற்றல் என்றிவை ஆறும்

ஆதி காலத்து அந்தணர் அறுதொழில்” - (திவாகரம் - 2365)

இன்று  “அறுதொழிலோர்” என்ற இலக்கணம் மாறி “அந்தணர்” என்பவரில் எண்ணற்ற பலர் ஏனைய வர்ணத்தவரின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் தங்களது வழிமுறைகளை மறந்தும் பண்பாடுகளைத் துறந்தும் ஒரு இழிவான நிலைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.  நிறைய பிராமணர்கள் சந்தியா வந்தனம், அக்னி காரியங்கள், ஸ்ரார்த்தம் முதலான பித்ரு கர்மாக்களை மிகவும் சிரத்தையுடன் செய்துவருகிறார்கள் என்று ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள் எழுதியிருப்பதையும் ஏற்க முடியாது. இந்தக் கோர கலியில் ஸ்வதர்மத்தை சிரத்தையுடன் சிலர் (A very small percentage of Brahmins) மட்டுமே அனுஷ்டித்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. ஸ்வதர்மத்தில் பிராமணர்களிடையே சிரத்தை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்." (Brahmin Today Magazine)

இன்றைய கலியுக பிராமணர்கள் செய்யாத தொழில் இல்லை.  உழவுத் தொழில், கூலித்தொழில் நீங்கலாக வணிகம், வழக்கறிஞர், பொறியாளர், அர்ச்சகர் என எல்லாத் தொழிலும் செய்கிறார்கள்.

 ஒரு காலத்தில் அருச்சகத் தொழில் செய்யும் பிராமணர்களை ஏனைய பிராமணர்கள் மதிப்பதில்லை. ஆனால் இன்று கனடாவில் அர்ச்சகத்தொழில் செய்பவர்கள்தான் கோடீசுவரர்களாக வலம் வருகிறார்கள்.  விளக்குப் பூசை செய்தால் ஒரே நாளில் 50,000 டொலர் சேர்ந்துவிடும்.  செலவு எண்ணெய்யும் திரியும்தான்.   இதைவிடகோடிநாம அருச்சனை, மோட்ச அருச்சனை, குடமுழுக்கு  என வெவ்வேறு வடிவில் பக்தியை மூடர்களிடம் சந்தைப் படுத்தி பணம் சேர்க்கிறார்கள்.  இந்த ஒரு தொழிலை மட்டும் நால்வருணத்தில் பிராமணர் நீங்கலாக மற்ற வருணத்தார் செய்ய முடியாது. சூத்திரத் தமிழர்களும் தங்களுக்கு மணி அடிக்கத் தெரியாது என எப்போதோ ஒப்புக்கொண்டு விட்டார்கள்.

கோயிலை அடுத்து தமிழர்கள்  ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் நிகழ்ச்சி  திருமணம்.  திருமணச் செலவு அய்யாயரம், அய்ம்பதினாயிரம், இலட்சம் என்று போய் இன்று பத்து இலட்சத்தை எட்டிவிட்டது. மாட்டு வண்டிலில் போன  மாப்பிள்ளை - பெண்பிள்ளை இப்போது உலங்குவானூர்தியில் வந்து இறங்குகிறார்கள். கூறைச்சேலைக்கு மட்டும் அய்ம்பதினாயிரம் செலவாம்.  நம்பமுடியவில்லை ஆனால் சொல்கிறார்கள். 

இலட்சுமி மிட்டல் பெரிய கோடீசுவரர்.  தொழில் எஃகிரும்பு உற்பத்தி. அவரது 23 அகவை  மகளின் திருமணம் 2004 இல் பாரிசில் நடந்தது. செலவு 60   மில்லியன் டொலர்! 

எங்களுக்குள்ளும் இலட்சுமி மிட்டல்கள் முளைத்துவிட்டார்களா?


 

http://www.ponguthamil.com/agappakkam/agappakkamcontent.asp?sectionid=7&contentid={32006131-EF87-46FD-B44A-F71725947F00}

பொங்குதமிழ் ஆசிரியருக்கு

வணக்கம். பொங்குதமிழின் ஆசிரிய குழு எழுதியுள்ள  ஆசிரிய தலையங்கத்தைப் படித்த பின்னர்தான் நாக.க.த. அரசுக்குப்  போட்டியாக இன்னொரு நா.க.த.அரசு முளைவிட்டுள்ளதை அறிந்து கொண்டேன்.

கொஞ்சக் காலமாக நாகதஅ சனநாயக முன்னணி என்ற குறியீட்டோடு செய்தித்தாள்களில் இயங்கி வந்தவர்கள் இப்போது நா.க.த.அரசாகவே தோற்றம் பெற்றுள்ளார்கள்.  ஆசிரிய தலையங்கம் சொல்வது போல் .து வேண்டாத திருப்பணி. கடந்த காலங்களில் இப்படியான தலைமைப் போட்டி காரணமாகவே நமது போராட்டம் பலவீனம் அடைந்தது. 1976 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தொடங்கிய பின்னரே பேரளவு ஒற்றுமை ஏற்பட்டது.

இன்று வி.புலிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களுக்குள் பிரிந்து நின்று போட்டி அமைப்புக்களை நடத்துகிறார்கள். ஒரு தட்டில் உணவு உண்டவர்கள் இப்படி பிரிந்து நின்று அரசியல் நடத்துவது தேவையில்லாத வேலை.

தலைமையகம் ஒரு கன்னமாகவும் அனைத்துலகம் மறு கன்னமாகவும் பிரிந்து நிற்பதால் மாவீரர் அறிக்கை ஒன்றுக்குப் பதில் இரண்டு வருகிறது.  தலைவர் இதனை ஒரு போதும் விரும்பி இருக்கமாட்டார். அனுமதித்தும் இருக்க மாட்டார்.

இப்படிக் குரங்கும் பூனைகளும் அப்பம் பிரித்த கதையாக தமிழ்மக்களைப் பிரிப்பது எதிரிக்குத்தான் இலாபம்.  எதிரி மகிந்த இராசபக்சே செய்யவேண்டிய வேலையை அனைத்துலகம், உலக தேசிய அவை,  நாகதஅ சனநாயக முன்னணி, தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி  ஆகியவை சேர்ந்து செய்கின்றன. இதனால் எமது பகைவர்களது பணி சுலபமாகிவிடுகிறது.

ஆசிரிய தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது போல உருத்திரகுமாரனது  தலைமை அமைச்சர் பதவி நிரந்தரமானது அல்ல.  நான்கு ஆண்டுகளுக்குத்தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதில் ஓராண்டு முடிந்து விட்டது.  மக்களது ஆதரவு இருந்தால் அடுத்த தேர்தலில் அவரைத் தோற்கடித்து நா.க.த. அரசைக் கைப்பற்றலாம்.

புலம்பெயர் தமிழர்களை கூறுபோடுவதில் தமிழ்நெட் ஆசிரியர் பாரிய பங்காற்றுகிறார் என்பது தெளிவாகிறது. புலம்பெயர் தமிழர்களை ஒரு குடைக்குள்  கொண்டுவர வேண்டிய ஒருவர் மாற்று அணிகளை

உருவாக்கும் திருப்பணியில் இறங்கியிருப்பது ஏன் என்பது தெரியவில்லைதமிழ்நெட் ஆசிரியர்  தானும் தனது அணியைச் சேர்ந்தவர்கள்தான் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் பத்தரைமாற்றுத் தங்கக் கட்டிகள் போலவும் மற்றவர்கள் பித்தளை போலவும் அவர் நினைக்கிறார்.   தமிழ்த் தேசியத்துக்கு முரணாக செயற்படுபவர்களை மக்கள் அடையாளம் காண்பார்கள். 

சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தனையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவை சேனாதிராசா மற்றும் சரேஷ் பிரேமச்சந்திரனையும் தோற்கடிப்போம் என்று கொடுக்குக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி கட்டுக்காசையும் இழந்த கூட்டமே இப்போது புலம்பெயர் தமிழர்களைப் பிரிப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது. இதனை மக்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். 

உண்மை என்னவென்றால் தமிழ் தேசியத்துக்கும் தமிழ் இனமானத்துக்கும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.  சொந்தம் கொண்டாடக் கூடாது. தமிழினத்தின் ஒற்றுமையைக் குலைப்பவர்கள் உண்மையான தேசியவாதகளாக இருக்க முடியாது.  அவர்கள் உள்ளுக்குள் இருந்து போராட வேண்டும்.

ஒரு வீட்டை இடிப்பது சுலபம். அதற்கு சில முட்டாள்க்கள் போதும். வீட்டைக் கட்டுவதற்குத்தான்  கட்டுமானப் பணியாளர்கள் தேவை.

புலம்பெயர் தமிழ்மக்கள்  யார் உண்மையான தேசியவாதிகள் யார் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் தேசியவாதிகள் என்பதை இனம் காண வேண்டும். அப்படிச் செய்வார்கள் என நம்புகிறேன். (June, 2011)

 


 நீங்கள் இருவரும் பத்தரைமாற்றுத் தேசியவாதிகள் நாங்கள் எல்லாம் பித்தளைகள் அப்படித்தானே? கவலையை விடுங்கள்.

நீங்கள் இருவரும் தமிழினத்தை கரைசேர்க்கும் பாரிய பொறுப்பு உங்கள் தோள்மீதும் தலைமீதும் சுமத்தப்பட்டிருப்பதாகவும் அதனால் "எங்கே இந்தியா இலங்கையைக் காப்பாற்ற விரிக்கும் சதிவலையில் விழுந்து, போர்க்குற்றத்திலிருந்து மகிந்தாவைக்காப்பாற்றுவதற்கு  ஆதரவாகச் செயற்பட்டு, தெரிந்தோ தெரியாமலோ அல்லது நிற்பந்தத்திலோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழினத்தைக் காட்டிக்கொடுக்க முனையும்போது, இவர்களுக்குப் பணபலம் மற்றும் தார்மீக ஆதரவைவழங்கிவரும் புலம்பெயர் தமிழ்த்தலைமைகள் இவர்களைத் தடுத்து நிறுத்துவார்களா அல்லது இவர்களும் சேர்ந்து எம்மினத்தைக் காட்டிக் கொடுப்பார்களா?" என்று அன்னவிசாரம் அதுவே விசாரம் ஆக இருப்பதைப் போல நடந்து கொள்கிறீர்கள். அதைப் பார்த்து நகைப்பதைவிட வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

நீங்கள் இருவரும் பத்தரைமாற்றுத் தேசியவாதிகள் நாங்கள் எல்லாம் பித்தளைகள் அப்படித்தானே? கவலையை விடுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தங்கள் பொன்னான வாக்குகளைப் போட்டு அவர்களை நாடாளுமன்றம் அனுப்பிய தமிழ்மக்கள் ததேகூ தமிழினத்தைக் காட்டிக் கொடுக்க முனையுமா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள்.

வெளிநாட்டில் இருக்கும் உங்கள் இருவருக்கும் அந்தக் கவலை வேண்டாம். அதுமட்டுமல்ல "பணபலம் மற்றும் தார்மீக ஆதரவைவழங்கிவரும் புலம்பெயர் தமிழ்த்தலைமைகள்"  பற்றியும் உங்களுக்குக் கவலை வேண்டாம்.

புலம்பெயர் தலைமைகள் உங்களைப் போல் தனி ஆவர்த்தனம் வாசிப்பவர்கள் அல்ல. அமைப்பாகச் செயல்படுபவர்கள். அதில் உங்களைவிட பட்டறிவும் படிப்பும் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

உங்களை அதிக புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டு இப்படி மனம்போன போக்கில் சதிவலை அது இது என்று எழுதுகிற நீங்கள் இருவரும்தான் இந்தியாவை சிறிலங்கா பக்கம் தள்ளிவிடுகிறீர்கள். சிங்களவனிடம் காணப்படும் இராசதந்திரத்தில் நூறில் ஒரு பங்குகூட உங்கள் இருவரிடமும் இல்லை.  இன்றைய உலக ஒழுங்கில் இந்தியாதான் இந்து சமுத்திர பிராந்தியத்தின்  பெரியண்ணன். அமெரிக்கா கூட அங்கே வாலாட்ட முடியாது. போரின் போது அதைப் பார்த்தோம். இது கூட உங்களுக்குத் தெரியாதது அல்லது புரியாதது பெரிய சோகம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழினத்தின் ஒற்றுமையை உடைத்து அதை எதிரிக்குக் காட்டிக் கொடுத்தது நீங்கள்தான். நாங்களல்ல. நீங்கள் வழங்கிய பணபலம் வானொலிப் பலம் காரணமாகத்தான் டக்லஸ் தேவானந்தாவுக்கு மேலதிகமாக ஒரு இருக்கையை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாரை வார்த்தீர்கள்! அதைத்தான் இப்பவும் செய்ய மெத்தப் பாடுபடுகிறீாகள்.

 

நக்கீரன் 


 

அறம் முதலில் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்!

(இன்றைய நாட்குறிப்பு)

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "Charity should begin at home" அதாவது முதலில் ஒருவன் தனது மக்களுக்கு அறம் செய்ய வேண்டும். அதன்பின்னர் மற்றவர்களுக்கு அறம் செய்யலாம். தமிழீழத்தில் எமது மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கும் வழியில்லாமல் தறப்பாள் குடிசைக்குள் வாழும் போது இங்குள்ள கனடிய தமிழர்களுக்கான தேசிய அவை (NCCT)  "Heart and Stroke"  என்ற அறக் கட்டளையோடு இணைந்து நிதி சேகரிப்பில்  ஈடுபட்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது நல்ல செயல் எனப் படும். கொஞ்சம் ஊன்றி சிந்தித்தால்  "பெற்றதாய் கிண்ணிப்பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம்." என்ற பழமொழியை நினைவூட்டும்.   "Heart and Stroke"  போன்ற அறக் கட்டளைகளுக்குக் கொடுக்கும் நன்கொடையில் பாதிக்கு மேல் நிருவாகச் செலவுக்குப் போய்விடுகிறது. சிலசமயம் நிருவாகச் செலவு 75 விழுக்காட்டையும் தாண்டுவது  உண்டு.  இந்த நிறுவனங்கள்  தலைமை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பள விபரத்தை  வெளியிடுவதில்லை. ஆனால் அது ஆண்டுக்கு 300,000 - 500,000 டொலர்களாக இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இது தொடர்பாக ஏப்ரில் 14, 2010 நாளிட்ட குளோப் அன்ட் மெயில் நாளேட்டில் Six-figure salaries the norm at top charities  என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை பல முக்கிய தகவல்களைத் தருகிறது.

Some of Canada’s largest and best-known charities are paying top officials more than $300,000 annually, government filings show.

Top earners include executives at Plan International Canada Inc., Heart & Stroke Foundation of Ontario, York University Foundation and five hospital foundations. Those charities all paid their chief executives more than $300,000 last year and some, including York, doled out more than $350,000.

Several other charities – including the British Columbia’s Children’s Hospital Foundation and Toronto General & Western Hospital Foundation – paid top executives between $250,000 and $300,000. And still others, including the Canadian Red Cross, paid officials between $200,000 and $250,000.

The compensation figures are contained in the charities’ 2009 filings with the Canada Revenue Agency and they mark the first time Canadian charities have disclosed compensation information for their ten highest-paid officials. Previously charities only had to provide limited information about their five best-paid officers.

The new filings still offer an incomplete picture. There are no exact salary figures or names of the highest-paid individuals. Instead, charities must identify the number of people who earn a salary within a certain range, with the top range "$350,000 and over." 9Compensation among charities has been a hot topic since last fall when Toronto’s Hospital for Sick Children revealed it paid its former president $2.7-million in 2008.

Liberal MP Albina Guarnieri recently introduced a private member’s bill to require charities to reveal details about their five highest-paid executives and cap salaries at $250,000.

Ms. Guarnieri said Tuesday that the more expanded disclosure in the CRA filing doesn’t go far enough.

The new form "doesn’t really provide the donor with the type of disclosure that he really deserves," she said. "What I am asking is for the same disclosure that companies have to give to their shareholders and that governments give taxpayers."

Ted Garrard, chief executive of Sick Kids Foundation, whose annual salary is $400,000 plus up to $100,000 as a bonus, agreed that more disclosure was needed. "Donors, like shareholders, should have the opportunity to know," he said Tuesday. (http://www.albinaguarnieri.com/media/articles/six_figure.asp)

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகள் இன்று பெருமளவு குறைந்து போய்விட்டது. அது நன்றாக இயங்கிய காலத்தில் அதன் நிருவாகச் செலவு 5 விழுக்காட்டுக்குக் குறைவாகவே இருந்தது. இயக்குநர் அவைியல் இருந்த எவருக்கும் எந்தக் கொடுப்பனவும் கொடுக்கப்படவில்லை.

அறம்  செய்ய வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. முதலில் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றாகத் தொலைத்துவிட்டு அல்லல் படும் எமது உடன்பிறப்புகளுக்குக் கைகொடுங்கள். போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் இருந்து காயப்பட்ட 5,000 பேர் செஞ்சிலுவைக் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர்கள் பள்ளிக்கூடங்களிலும் குடிசைகளிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கொடுக்கும் உணவை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இவர்களில் பலர் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்து விட்டார்கள்.  அண்மையில் இவர்களை முன்னாள் திருகோணமலை நா.உ. துரைரத்தினசிங்கம் சென்று பார்த்தார். அந்த மக்கள் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்.  நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் கனடிய தமிழர்களுக்கான தேசிய அவை உறுப்பினர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கிறார்கள்.

நக்கீரன்


தங்கமே தங்கம்!

(இன்றைய நாட் குறிப்பு)

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.  இதனால்  ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். 

ஒரு அவுன்ஸ் தங்கம் உலகச் சந்தையில் 1486.46 அமெரிக்க டொலராக ஏறியுள்ளது. கடந்த 30 நாட்களில் 70 டொலராலும், கடந்த ஆண்டைவிட 350 டொலராகவும் (30.84 விழுக்காடு) கடந்த 5 ஆண்டில் 870 டொலராகவும் (144.12 விழுக்காடு)  உயர்ந்துள்ளது.  தங்கத்தின் விலை இந்த ஆண்டு முடிவில் 2000  டொலரை எட்டும் எனச் சொல்லப்படுகிறது.  தங்க நாணயங்கள் 1530 டொலராக உயர்ந்துள்ளது.

ஒரு அவுன்சில் (1 troy  ounce)  31.1034768 கிராம் உள்ளது.  ஒரு கிராமில் 0.0321507466 அவுன்சு ( 1 gram = 0.0321507466 troy ounces) உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு பவுன் (8 கிராம்)  ரூ.16 ஆயிரத்தை தாண்டியதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏழை மற்றும் நடுத்தர மக்களை மட்டுமல்லாது வசதி படைத்த பணக்காரர்களையும் இந்த விலையேற்றம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தங்க நகை அணிவதை விரும்பாதவர்கள் அதிலும் குறிப்பாக தங்கத்தின் மேல் ஆசை கொள்ளாத பெண்களே இல்லை. திருமணம், கோயில் விழா உட்பட எந்த விழாவாக இருந்தாலும் பெண்கள் கழுத்து நிறைய நகை அணிந்து வலம் வருவதைத்தான் பெருமையாக கருதுகிறார்கள். திருமணம் பேசி முடிக்கும் மணப் பெண்களுக்கு மணமகன் வீட்டார் முதலில் கேட்கும் கேள்வி பெண்ணுக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? என்பதுதான்.

பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கழுத்தில் சங்கிலி,  கைவளையல்,  இரண்டு மூன்று மோதிரம் என்று நகை அணிவதை விருப்பமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த 1  ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் 3 ஆயிரத்து 240 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. 

கடந்த ஆண்டில் (2010) இதே மாதத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.1,598-க்கு விற்றது. அதாவது 1 பவுன் விலை ரூ.12 ஆயிரத்து 784-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று மாலையில் (திங்கட்கிழமை)  ஒரு கிராம் 2003-க்கும், 1 பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 24 க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.16 ஆயிரத்தை கடந்துள்ளது. 

கடந்த 1920-ம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் 21 ரூபாய்க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தங்கம் இறக்கமே காணாமல் தொடர்ந்து உயர்வே கண்டு வந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தங்கம் என்ன விலையில் விற்பனை ஆனது என்ற விவரம் வருமாறு: 

1921- ரூ.21

1962 - ரூபா 100

2000- ரூ.3,320

2002- ரூ.3,368

2003 முதல் 2005-ம் ஆண்டு வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.4 ஆயிரம் அளவில் கட்டுக்கோப்புடன் விற்பனையாகி வந்தது.

2006- ரூ.6,160

2007- ரூ.7,076

2008- ரூ.8,072

2008 ஆம் ஆண்டிற்கு பிறகு தங்கம் விற்பனையில் சூடு பிடித்தது. 2009 ஜனவரியில் முதல் முறையாக ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்தது. அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இது ரூ.11 ஆயிரத்து 232-க்கு உயர்ந்தது. 

ஒரே வருடத்தில் அதாவது 2010 ஜனவரியில் தங்கம் விலை ரூ.12 ஆயிரத்து 104-க்கு அதிகரித்தது. அடுத்த 6 மாத காலத்தில் யுன் 2 ஆம் நாள் விலை ரூ.14 ஆயிரத்தை கடந்தது. அதன் பின்னர் மாதா மாதம் தொடர்ந்து உயர்ந்து, டிசம்பர் மாதத்தில் இந்த விலை ரூ.15 ஆயிரத்தை எட்டியது.

தங்கத்துக்கு ஏன் இத்தனை மவுசு? அதன் மஞ்சள் நிறம் முதற் காரணம். இரண்டாவது காரணம் அது பெருமளவில் கிடைப்பதில்லை. 


புலம்பெயர் தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றவர்களுக்குத் தமிழே தெரியாது!

திருமகள்

அண்மையில்  நாட்டு மக்களுக்கு  தொலைக்காட்சியில் உரையாற்றிய ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே "புலம்பெயர் தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றவர்களுக்குத் தமிழே தெரியாது.  அது மட்டுமன்றி அவர்கள் தமிழில் ஒரு வார்த்தையைக் கூடப் பேசத் தெரியாதவர்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊர்களின் பெயர்களைக் கூடச் சரியாக அறியாதவர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் தமிழைப் படிக்காது இருக்கிறார்கள் என்ற கவலையில் இராசபக்சே இதனைச் சொல்லாவிட்டாலும் அவர் சொல்லியதில் பாதி உண்மை இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறையினரில் அநேகருக்குத் தமிழில் எழுதவோ பேசவோ தெரியாது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.  தங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களது பிள்ளைகளுக்கே தமிழ் தெரியாது என்பதுதான் மிகப் பெரிய கவலை!

கனடாவில் மொத்தம் உள்ள 30,000 மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினரே தமிழ் படிக்கிறார்கள்.  இவ்வளவுக்கும் தமிழ்படித்தால் பல்கலைக் கழக நுழைவுக்குத் தேவைப்படும் 32 தேர்வுப் பாடங்களில் 4 பாடங்களை தமிழில் பெற்றுக்கொள்ளலாம். அப்படி இருந்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் வகுப்புகளில் சேர்க்கப் பஞ்சிப்படுகிறார்கள். தமிழ் சோறு போடாதது என்பது காரணமாக இருக்கலாம்.

தமிழ்ப் பிள்ளைகள் பலர் இசை, நடனம் கற்கிறார்கள். ஆனால் அவற்றை தமிழ்மொழியில் கற்பதில்லை.  ஆசிரியர்கள்  ஆங்கிலத்தில் சுரங்களையும் தாளங்களையும் உருப்படிகளையும் பாடல்களையும் எழுதிக் கொடுத்துப் படிப்பிக்கிறார்கள். நான் அறிந்தவரையில் இரண்டொரு ஆசிரியர்களே இதற்கு விதி விலக்காக இருக்கிறார்கள்.

தமிழ்ப் பிள்ளைகள் தமிழைப் படிக்காதது  மட்டுமல்லாமல் அவர்களது பெயர்களிலும் தமிழைக் காணோம். "நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச சூட்டுங்கள், நானொரு தமிழன் என்றே அடையாளம் காட்டுங்கள், சொல்லி அழைக்கும்போதே இன உணர்வை ஊட்டுங்கள்......" என்று பெற்றோர்களை கேட்டுக் கொண்டாலும் அவர்கள் அசைவதாக இல்லை.

புலம் பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்ல தமிழர் பண்பாட்டின் தலைநகரமான யாழ்ப்பாணத்திலும் தமிழ்ப் பெயர்கள் மறைந்து வருகின்றன. அண்மையில் அங்கு கல்லூரிகளுக்கு இடையிலான துடுப்பாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களது பெயர்கள் நமக்குத் தெரியாத மொழிப் பெயர்களாக இருக்கின்றன.  எடுத்துக்காட்டாக வதூசன், டார்வின், விகிந்தன், யதுர்ஷன். ஜெரிக் துஷாந்தன், தர்சன், ஹரிவதனன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதித் தமிழொலி மரபை அழிக்கின்ற பெயர்களை வைப்பவரும் உளர். (எ. கா.) ஜனகன், ஜனா, ரமேஸ், ரதி, லஷ்மன், றஞ்சன், றஞ்ஜினி, ஸ்ரெலா, ஸ்கந்தராசா, ஹம்ஷன், லஷ்மி, புஸ்பா, சதீஸ்  எனப் பெற்றோர் பெயரிடுகிறார்கள்..

ஒலிப்பு நயமுள்ளவை எனக் கருதியும் தமிழர் என இனங் காட்டக் கூடாதெனவேண்டியும்  சிலர் பெயர் வைப்பதுண்டு. எடுத்துக்காட்டு  டிவகலாலா, கனகரட்ண, இந்திரபாலா, ஹரிச்சந்திரா,

ஒலிப்பு நயமுள்ளவை எனக்கருதியோ ஆகூழெண் (அதிட்ட எண்) நயம் கருதியோ எம்மவரால் இடப்படும் பொருளற்ற பெயர்களிற் சில: சுவீறஜன், லிபீசன், கரிஸ், டிலக்ஷன், டிலான், டிலானி.

சீனனும் யூதனும் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் தங்கள் தாய்மொழியைப் படிப்பிக்கிறார்கள்.  பெயர்களும் அப்படியே. ஆனால் சைவமும் தமிழும் ஒன்று சைவம் இன்றேல் தமிழ் இல்லை என்று சொல்லும் சைவர்களுடைய  பெயர்களில் தமிழைக் காணோம்!

இதனால் அய்நூறு, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தைத் தோண்டும் தொல்லியளார்கள் பெயரை வைத்து இனத்தை அடையாளம் காணாமல் வில்லங்கப்படுவார்கள் என்பது மட்டும் உண்மை. 

இங்குள்ள தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சிக்குப் பெயர் Hello Doctor, Comedy Express, Super Star Senior, Super Star Junior,  மசாலா போன்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மருத்துவர் அய்யா  என்று தமிழில் சொன்னால் அது தமிழர்களுக்கு விளங்காது என்று இந்த தொலைக்காட்சி நிறுவனம் நினைக்கிறது போலும்!

தமிழர்களுக்கு எதைச் சொன்னாலும அது உறைப்பதாக இல்லை!


 தனித்  தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்

நேற்று நாட்டு மக்களுக்கான தொலைக்காட்சி உரையினை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் எமது நாட்டுக்கு எதிரான தகவல்களைப் பரப்புவதில் முன்னிற்கின்றனர். ஆயினும் அவர்களுக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட ஒழுங்காக வராது.

அதே நேரம் எமது நாட்டைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்பவர்களில் ஒருசிலர் இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தது கூட இல்லை. இன்னும் சிலர்  இங்கு அடிக்கடி வந்து போகவும் செய்கின்றார்கள். அவர்களின் பெரும்பாலான உறவினர்கள் இங்குதான் நன்றாக வாழ்கின்றார்கள்.

ஆயினும் அவர்கள் அநியாயமான முறையில் எமது நாட்டைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். 


 யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கு சூடு, சொரணை, மானம், வெட்கம் இல்லையா?

திருமகள்

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி  தமிழ் கூறும் நல்லுலகம் எங்கணும் வீர வணக்கங் கூட்டங்கள் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அவரது நினைவேந்தல் கூட்டங்கள் எல்லா மாவட்டங்களிலும் நகரங்களிலும் இடம் பெற்றன.

தாயார் பார்வதி அம்மாளின்  இறுதிச் சடங்கில் சிங்கள - பவுத்த வெறிபிடித்த  அரசின் அடக்குமுறைக்கும் அச்சறுத்தலுக்கும் மத்தியிலும் அரசியல் தலைவர்களும் பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

ஆனால் சிங்கள - பவுத்த அரசுக்கு சேவகம் செய்யும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவோ அல்லது அவரது கட்சியினரோ பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டால் தங்களது சிங்கள எசமானர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக வேண்டும் என்ற பயமே காரணமாகும்.

டக்லஸ் தேவானந்தாவின் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாண மாநகர சபையில் பார்வதி அம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொண்டுவந்த போது தேவானந்தாவின் அடிவருடியான முதல்வர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.  அவருக்கு சூடு, சொரணை, மானம், வெட்கம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க அதனை ஏற்றால் தனக்குப் படியளக்கும் எசமானர்கள்  கோபித்துக் கொள்வார் என்ற பயம் அவருக்கு.

மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவது ஒரு குறைந்த பட்ச அரசியல் நாகரிகம் ஆகும். ஆனால் அந்தக் குறைந்த பட்ச நாகரிகம் கூட இந்த இரண்டகர்களிடம் இல்லாதிருக்கிறது.

 உலகத் தமிழ் இனத்தின் தாய் என  அன்போடு போற்றப்படும்  பார்வதி அம்மாளின்  சாம்பல்  மீது மனித பண்பாட்டுக்கு அறைகூவல்  விடுமாறு  மகிந்த அரசு மேற்கொண்ட கீழ்த்தரமான,  அருவருப்பான, கோழைத்தனான, அசிங்கமான, காட்டுமிராண்டித்தனமான ஈனச் செயலைக் கூட இபிடிபி மாநகர சபை உறுப்பினர்களால் கண்டிக்க  முடியவில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தின் போது அதனை எதிரிக்குக்  காட்டிக் கொடுத்து அதன் முதுகில் குத்தினார்கள் என்று பார்த்தால் இப்போதும் அவர்களது துரோக வரலாறு தொடர்கிறது.

யாழ்ப்பாண மாநகர சபைக்கு இயல்பான சூழ்நிலையில், நேர்மையான முறையில்,  சுதந்திரமான தேர்தல் நடந்திருந்தால் இபிடிபி கட்சி மண் கவ்வியிருக்கும். ஆனால் தேர்தல் அப்படி நடைபெறவில்லை. துப்பாக்கி முனையில் வாக்காளர்கள் பயமுறுத்தப்பட்டார்கள். பரப்புரைக்கு அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டன. சிங்கள இராணுவமும் அய்க்கிய மக்கள் முன்னணி அமைச்சர்களும் இபிடிபி கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார்கள்.

இவர்களது கூத்து சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தை தனது இரும்புப் பிடியில் வைத்திருக்கும் வரையில்தான். சிங்கள இராணுவம் விலகிக் கொண்டால் இபிடிபி கட்சியினர் ஓடி ஒளிவதற்குக் கூட இடம் இருக்காது. அந்தக் காலம் ஒரு நாள் வராமல் போகாது.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலினந்நிலையே

கெட்டா னெனப்படுத னன்று.  (குறள் - 967)

தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்;  அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று.

பார்வதியம்மாவின் அஸ்தியைச் சிதைத்து மகிழும் சிங்களம்

காட்டு மிராண்டித்தனத்தின் மொத்த அடையாளம்

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார், பார்வதியம்மாவின் அஸ்தியைச் சிதைத்தும், அதன்மீது வாகனக் கழிவு எண்ணையைக் கொட்டி, சுட்டு வீசப்பட்ட நாய்களின் உடல்களை அதில் போட்டு எரித்து அசிங்கம் செய்தும், பௌத்த சிங்கள இனவெறி அரசு மிகக்கீழ்த்தரமான, காட்டுமிராண்டித்தனமான தனது போக்கை அப்பட்டமாக வெளிக்காட்டி நிற்கின்றது. 

தமிழினத்தின் தாயாக, உலகத்தமிழ் இனத்தால் அன்போடு போற்றிவணங்கப்படும், பார்வதியம்மாவின் அஸ்தி மீது சிங்கள அரசு நடத்திய அசிங்கமான இந்தப் ‘போரால்’ தமிழீழ மக்கள் மட்டுமன்றி, உலகத் தமிழர் அனைவரும், கோபத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.

மனித நாகரீகத்துக்குச் சவால் விடும் வகையில், மகிந்த அரசு மேற்கொண்டுள்ள கீழ்த்தரமான, மோசமான, அசிங்கமான இந்தச் செயற்பாட்டை, பிரான்ஸ் தமிழர் நடுவம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. 

பார்வதியம்மாவின், இறுதிவணக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிடாமல், பொதுமக்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் சிறீலங்காப்படையினரால் தடைகளைப் போட்டும் மிரட்டியும் தடுக்கப்பட்டிருந்தனர்.

பார்வதியம்மாவிற்கு வணக்கம் செலுத்தி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிங்களப்படையினரால் கிழித்தெறியப்பட்டன.

துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கறுப்புக்கொடிகள் அகற்றப்பட்டன.

இறுதிப்பயணத்தைக் கனப்படுத்தும் வகையில் தமது வணிக நிறுவனங்களைப் பூட்டி ஆதரவு வழங்கிய வணிகர்கள், சிங்களப்படையினரால் கடுமையாக விசாரிக்கப்பட்டனர்.

சிங்கள இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த பார்வதியம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்றோர் அனைவரும், ஒளிப்படக்கருவிகளில் சிங்கள இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் படம்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய இந்து மதகுரு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டுள்ளார். 

சிங்கள இராணுவத்தாலும், சிங்கள இராணுவப் புலனாய்வுப் பிரிவினராலும், கூலிக்குழுக்களாலும், முழுநேரமாகக் கண்காணிக்கப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்துவருகின்றனர்.

அவர்கள் வாழும் போதும் சிங்கள அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைக்கும், அவமானப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். 

அதேபோன்று, அவர்கள் இறந்தபின்னும் சிங்கள அரசால் அவமானப்படுத்தப்பட்டு வருவது நடைபெறும் சம்பவங்களுக்கூடாக வெளிப்பட்டுநிற்கின்றது. 

தமிழீழ மக்களுக்காக தம் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களை, சிதைத்தழித்து அதன்மீது, இராணுவ முகாம்களை அமைத்து, தமது தமிழின அடக்குமுறையையும், தமிழர் மீதான தமது அவமானப்படுத்தலையும் குறியீட்டு முறையிலும் செயற்பாடுகள் மூலமும் வெளிப்படுத்தும், சிங்கள அரசு, பௌத்தம் அல்லாத பிற மதங்களை அவமானப்படுத்தவும், புண்படுத்தவும் செய்கின்றது. இது பலவழிகளில் நடந்தேறிவருகின்றது.

இந்து மத அனுட்டானங்களை அவமானப்படுத்தும் சிங்கள அரசின் போக்கு பார்வதியம்மாவின் அஸ்தி மீதான தாக்குதலின் மூலம் மீளவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பௌத்த சிங்களப் பேரினவாதம், தமிழ் மக்கள் மீது உடல் ரீதியாகவும் உளரீதியாகவும், சமூக பண்பாட்டு, தளங்களில் மேற்கொள்ளும் இத்தகைய தாக்குதல்கள் இலங்கைத்தீவில் சிங்களமும் தமிழும் சேர்ந்து வாழக்கூடிய எந்த ஏற்பாடுகளும் சாத்தியமில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது. 

சிங்கள அரசின் இக்காட்டுமிராண்டித்தனமான செய்கைகளை, தொடர்ச்சியாக, சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு நாம் எல்லோரும் எடுத்துச் செல்வோம்.


டக்ளஸ் அமைச்சராக இருக்கலாம்! மாநகரசபை விடயங்களில் தலையிடக்கூடாது - த.கூட்டமைப்பு உறுப்பினர்கள் காட்டம்

[ வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011, 03:34.05 PM GMT ]

தமிழர்களைக் காட்டிக்கொடுத்து வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகிகளாகிவிட்ட நீங்களெல்லாம் தமிழ் மக்களைப் பற்றியும் தமிழ் மக்களின் நலன்கள் பற்றியும் பேசத் தகுதியற்றவர்கள், யாழ்.மாநகரசபையின் விடயங்களில் அமைச்சர் டக்ளஸ் தலையிட்டால் அதற்கெதிராக நாம் உரிய இடங்களில் பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றபோது, என்றுமில்லாத வகையில் ஈ.பி.டி.பியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினற்குமிடையில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. இதன்போதே கூட்டமைப்பு மேற்கண்டவாறு ஈ.பி.டி.பியினரை எச்சரித்துள்ளது.

நேற்றைய கூட்டத்தில் யாழ்.மாநகரசபையின் செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்வது தொடர்பில் கூட்டமைப்பு தனது அதிருப்தியை வெளியிட்டது.

இதற்கு பதிலளித்த மாநகர முதல்வர் அமைச்சர் டக்ளஸ் அவர் வருவார், அவர் வருவது தொடர்பில் கதைப்பதற்கு யாருக்கும் அருகதையில்லை என பதிலளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கூட்டமைப்பினர் அமைச்சராக அவர் இருக்கலாம் ஆனால் சட்டப்படி மாநகரசபையின் விடயங்களில் அவர் தலையிடக்கூடாது. அதற்கு உரிமையும் இல்லை என் வாதிட்டனர். இதற்கிடையில் சபையில் ஈ.பி.டி.பியினர் எங்கள் தலைவரை பற்றிப் பேச வேண்டாம் என பெரும் கூச்சலிட்டனர்.

இதேவேளை யாழ்.மாநகரசபையில் தீர்மானங்களை எடுப்பது முதல்வரல்ல அமைச்சர் டக்ளஸ்தான்! எனச்சாடியுள்ள கூட்டமைப்பினர் மாநகர முதல்வர் வீதித் திருத்தத்திற்குக் கூட அமைச்சரின் அனுமதிக்கு காத்திப்பதாக கேலிசெய்துள்ளனர்.

மேலும் இந்திய அரசாங்கம் வழங்கிய பேருந்துகள் முலம் பெரும் நஷ்டமே ஏற்பட்டுள்ளதாக இன்றைய சபையில் வாசிக்கப்பட்டது. எனினும் அது பிழையெனவும் பெரும் இலாபத்திலேயே செல்வதாக முதல்வர் மறுத்துக் கூறியுள்ளார்.


நல்ல சமயம் இது! இதனை நழுவ விடக்கூடாது!

திருமகள்

தமிழீழம் விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கையோடு தீக்குளித்து தன்னைத்தானே அழித்துக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உணர்வோடு கொண்டாடப்பட்டுள்ளது. முத்துக்குமார் மட்டுமல்ல மேலும் 16 இனவுணர்வாளர்கள் தங்கள் இனிய இளைய உயிர்களை தீக்குத் தீனியாக்கினார்கள். ஆனால் முத்துக்குமார் மற்றும் அவரோடு தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட உணர்வாளர்களால் தமிழகத்தில் ஒரு சிறு கலகத்தைத்தானும் உருவாக்க முடியவில்லை. ஒரு சிறு நெருப்பையேனும் ஏற்றிட முடியவில்லை. என்ன காரணம்?

தியூனிஷா நாட்டில் ஒரு இளைஞன். பெயர் மொகமது பூசிசி (Mohammed Bouazizi) அகவை 23. வேலை இல்லா பல்கலைக் கழகப் பட்டதாரி. காய்கறி பழங்கள் விற்று குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்தான். ஆனால் அந்த நாட்டுக் காவல்துறை அவனை நடைபாதை வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை. விரட்டி அடித்தது. விளைவு? கடந்த டிசெம்பர் மாதம் 17 ஆம் நாள் பெட்ரோலை உடம்பு முழுதும் ஊற்றித் தனக்குத்தானே தீ மூட்டி இறந்து போனான். அவன் மூட்டிய தீ அவனை மற்றும் பற்றவில்லை. தியூனிஷாவைப் பற்ற வைத்தது. நாட்டின் ஆட்சித்தலைவர் குடும்பத்தோடு நாட்டை விட்டு விமானத்தில் பறந்து சவுதி அரேபியாவில் அரசியல் அடைக்கலம் கேட்டார். மொகமது பூசிசி மூட்டிய தீ இன்று துயூனிஷாவையும் கடந்து மத்திய கிழக்கில் பரவி வருகிறது. யோர்டான் தொடக்கம் எகிப்து வரை மக்கள் புரட்சி வெடித்துள்ளது. எகிப்தின் ஆட்சித்தலைவர் கொசனி முபராக்கின் பதவி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் அவர் நாட்டை விட்டு விமானத்தில் ஓடித் தப்பிக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. Toronto Star  நாளேடு தனது முன்பக்கச் செய்திக்கு "Mubarak, your plane is waiting”  என  மகிடமிட்டுள்ளது!

ஆனால் முத்துக்குமார் மூட்டிய தீ மட்டும் தமிழகத்தில் பரவ வில்லையே? காரணம் என்ன? ஒவ்வொரு தமிழ்த் தேசியவாதியும் தன்னைத்தானே கேட்க வேண்டிய கேள்வி இது.

தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்கள் இனமானத்தைவிடப்  பதவி சுகம் பெரிது என்ற எண்ணியதே காரணமாகும். குறிப்பிட்டுக் கேட்ட அமைச்சர் பதவிகள் கிடைக்கவில்லை என்றால் கருணாநிதி சோனியாவின் உறவையும் அறுத்தெறியத் அணியமாக இருந்தார். மந்திரிப் பதவிகள் வீடு தேடியே வந்தன. ஈழத் தமிழர்கள் கொலைக்களத்தில் நின்று அவலக் குரல் எழுப்பிய போதும் பொய்யாகக் கூடக் கருணாநிதி கோபம் காட்டவில்லை. தனது தொப்புள்க் கொடி உறவுகள் முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்ததைப் பற்றி ஒரு எள்முனை அளவுகூட கருணாநிதி கவலைப்படவில்லை. முள்ளிவாய்க்காலில் ஓடிய குருதி காயு முன்னரே முதல்வர் கருணாநிதி தில்லி சென்று தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொடுப்பதிலேயே கண்ணாய் இருந்தார். 'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டும்' ' 'தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்' எனற வீரப் பேச்சு எல்லாம் வெற்றுப் பேச்சாகப் போய்விட்டது.

எனவேதான் எதிர்வரும் ஏப்ரில் மாதத்தில் நடக்க விருக்கும் சட்ட சபைத் தேர்தலில் பதவி சுகத்துக்காக தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் தோற்கடிக்கப் படவேண்டும். சிறீலங்கா நடத்த வேண்டிய போரை காங்கிரஸ் - திமுக அரசு நடத்தியது என கொடுங்கோலன் மகிந்த இராசபக்சே ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கிறான்.  இந்த இரண்டகத்துக்கு உரிய தண்டைனையை உணர்வுள்ள தமிழர்கள் காங்கிரஸ் - திமுக இரண்டுக்கும் வழங்க வேண்டும்.  தன் இனிய உயிரை ஈகை செய்த முத்துக்குமாருக்கு  நாம் எழுப்பக் கூடிய  நினைவாலயமும் இதுதான்.

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ளன. நல்ல சமயம் இது! இதனை நழுவ விடக்கூடாது!

"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு வரலாற்று  நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது."(தமிழீழத்  தேசியத் தலைவர்) 


அய்யப்ப பக்தர்கள் நேரே சிவலோகம்!  அய்யப்பா இதெல்லாம் என்னப்பா?

திருமகள்

செய்த பாவங்களைக் கழுவவும் பொன் பொருள் வேண்டும் என வேண்டுகோள் விடுக்கவுமே பக்தர்கள் கோயில், குளம் என அலைகிறார்கள்.

அண்மைக் காலமாகப்  புகழ்பெற்று  வரும் சபரிமலை அய்யப்ப தரிசனம் கேரளத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் இருந்தும் அய்யப்ப பக்தர்களை சுண்டி இழுக்கிறது. சபரிமலை போகும் பக்தர்களில் பெரும்பான்மையோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாம். கனடாவில் இருந்தும் நூற்றுக் கணக்கில் பெரும் பணம் செலவழித்து அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்கிறார்கள்.

அய்யப்பன் வழிபாடு தமிழனுக்குப் புதிது. தமிழ்நாட்டுக்கும்  புதியது. அய்யப்பன் ஆகமத்தில் சொல்லப்படாத கடவுள். கடந்த 50 ஆண்டுகளாகத்தான் “சாமியே சரணம் அய்யப்பா" என்றகூச்சல் கேட்கிறது. அதற்கு முன் தமிழன் "பழனி முருகனுக்கு அரோகரா"  எனச் சொல்லிக் காவடி எடுத்தான். தில்லை போய் நடராச தரிசனம் செய்தான்.

எதிலும் புதியதைத் தேடும் மனித  மனம் புதிய புதிய கடவுளையும் தேடுகிறது. அவ்வாறு புதிய கடவுளைத் தேடியதன் விளைவே கேரள அய்யப்பன் புகழ் ஏறுவதற்கும் தமிழ்நாட்டுக் கடவுள்கள் மதிப்பு இறங்குவதற்கும் காரணமாயின. இதனால் வருவாயைப் பொறுத்தளவில் மலையாள - ஆந்திரக் கடவுளர்க்குக் கொண்டாட்டம். தமிழ்நாட்டுக் கடவுளர்க்குத் திண்டாட்டம் என்றாகிவிட்டது. இந்த கேரள அய்யப்பனால்  பக்தி போதையில் இருக்கும் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது.

மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருமுறை கேட்டார் “குன்றக்குடி முருகனுக்கும், பழனி தண்டாயுதபாணிக்கும் 'பவர்' குறைந்துவிட்டதா?" என்று. நிச்சயமாகக் குறைந்துதான் போய்விட்டது. வருவாயில் அய்யப்பன், பழனி முருகனையும் மதுரை மீனாட்சியையும் தில்லை நடராசரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டார்! கேரள அரசு சபரிமலை அய்யப்பனை காசு காய்க்கும் மரமாகப் பார்க்கிறது!

சபரிமலையைச் சுற்றியுள்ள காடு அழிக்கப்பட்டு அதன் சூழல் மாசுபடுத்தப் பட்டுவிட்டது. அருகில் ஓடும் பம்பை நதி அசுத்தமாகிக் குளிப்பதற்குக் கூட உதவாமல் போய்விட்டது.

அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலை போட்டுக் கொள்கிறார்கள். நாற்பத்தெட்டு  நாள்கள் விரதம் இருந்தால் சிறப்பாம். பணவசதி படைத்த முதலாளிகள் மூன்று நாள்கள் மட்டும் விரதம் இருந்தாலும் சரிதானாம். இந்து மதம் எதற்கும் வளைந்து நெளிந்து கொடுக்கும் நெகிழ்வு படைத்தது.  அய்யப்பசாமிக்கு மாலை போட்டால் 48 நாள் நல்ல உணவு கிடைக்கும் வீட்டில் யாரும் திட்ட மாட்டார்கள், நல்ல மரியாதை, அதுவும் சாமி.. சாமி.. என்று. இந்தச் சலுகைகளால் பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களும் ஊர் சுற்றும் இளைஞர்களும் அய்யப்பன் சாமி ஆகிவிடுகிறார்கள். இதனால் இலட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை போட்டு 48 நாள் விரதம் இருக்கிறார்கள். வசதியுள்ளவாகள் சபரிமலைக்கு யாத்திரை போகிறார்கள். அங்கே மகரசோதி தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும் என நம்புகிறார்கள்.

சபரிமலை அய்யப்ப சுவாமி கோயிலில் மகர விளக்கு பூசை திருவிழா கடந்த 30 ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் உச்சக் கட்டமாக சனவரி 15 ஆம் நாள் சபரிமலை கோயிலில் மகர விளக்கு பூசை நடந்தது. அப்போது, பொன்னம்பல மேட்டில் 3 முறை மகரசோதி தெரிந்தது. சோதி வடிவில் அய்யப்ப சுவாமி காட்சி அளித்ததை பாண்டித்தாவளம், புல்மேடு, உரல்குழி, பெரியானை வட்டம் மற்றும் பம்பை முதல் சன்னிதானம் வரை பல்வேறு இடங்களில் காத்து இருந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து பக்திப் பரவசம் அடைந்தனர். சோதியை வணங்கிய அய்யப்ப பக்தர்கள் "சுவாமியே சரணம் அய்யப்பா'' என்று முழங்கிய முழக்கம் சபரிமலை எங்கும் விண்ணதிர ஒலித்தது.

இப்படி மனம் குளிர மகரசோதி தரிசனம் செய்து மலையிறங்கிய 106 பக்தர்கள் கேரள மலைப்பாதையில் பயங்கர விபத்தில் சிக்கிப் பலியாகியுள்ளார்கள். கேரள மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பெரியாறு நோக்கி ஒரு பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர். புல்லுமேடு அருகே அந்த வண்டி வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக ஓடியது. சாலையோரத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீதும் அங்கிருந்த ஒரு ஜீப் மீதும் மோதி சுமார் 400 அடி பள்ளத்துக்குள் பேருந்தும் ஜீப்பும் விழுந்தன.  இதனால் பேருந்தில் இருந்த பக்தர்கள் பள்ளத்தில் விழுந்தனர். பேருந்து இடித்துத் தள்ளியதால் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பக்தர்களும் பள்ளத்துக்குள் விழுந்தார்கள்.

இது போன்ற விபத்துக்கள் நாள் தோறும் நடைபெறுகிறது. இவர்களை எல்லாம் வல்ல அய்யப்பனால் காப்பாற்ற முடியவில்லை. இருந்தும் பக்தர்கள் மீண்டும் மீண்டும் கோயில் குளம் என்று அலைகிறார்கள்.

இந்த மகரசோதி தரிசனம் என்பது பெரிய மோசடி. அந்த சோதியை தேவசம் வாரியமும் மற்றும் சிலரும் சேர்ந்து கற்பூர தீபத்தை கொளுத்தி வெளிச்சத்தை உண'டாக்குகின்றனர். அதனை மகரசோதியாக உலக மக்களுக்கு அறிவித்து விடுகிறார்கள்.   மூட பக்தர்கள் அது அய்யப்பன் செய்யும் அற்புதம் என்று நினைக்கிறார்கள்.

உண்மையில் இந்த அய்யப்ப சுவாமியே ஒரு மோசடிதான். மனிதனே கடவுளை உருவாக்கினான் என்பதற்கு இந்த அய்யப்பன் கதை அருமையான  எடுத்துக்காட்டு.

அய்யப்பன் கடவுள் அல்ல. அவனது பிறப்பு 300 நூற்றாண்டுகளுக்குள் நிகழ்ந்ததாகும். அய்யப்பன் சபரிமலைப் பகுதியில் உள்ள பம்பா என்னும் ஆற்றங்கரையில் சிறு குழந்தைப் பருவத்தில் கண்டெடுக்கப்பட்டான். ஒழுக்கந் தவறியவள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பெற்றுத் தூக்கியெறிந்து விட்டுச் சென்றிருந்த குழந்தை  ஒன்றை  காட்டிற்கு வேட்ட ஆடச் சென்றவர்கள் அந்த ஊர்பேர் தெரியாத குழந்தையை எடுத்துச் சென்று பந்தள அரசனிடம் சேர்ப்பித்தனர். இந்த அரசன் பாண்டி நாட்டிலிருந்து பந்தளத்திற்கு கொல்லம் ஆண்டு 345+இல் வந்தவர்  என்று திருவாங்கூர் வராலாறு கூறுகிறது.

பந்தள நாட்டு அரசனோ பிள்ளைப் பாக்கியம் இன்றி வருந்திக் கொண்டிருந்தான். இந்த நிலையில் இந்தக் குழந்தையை எடுத்து சீராட்டிப் பாராட்டி வளர்த்தான். மணிகண்டன் என்று பெயருமிட்டான். இதற்கிடையில் அரசன் மனைவி கருவுற்று ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். இருவரும் வளர்ந்து பெரியவர்களான பிறகு இளவரசுப் பட்டம் யாருக்கென்ற சிக்கல் எழுந்தபோது, அரசி தன் வயிற்றுப் பிள்ளைக்கே இளவரசுப்பட்டம் என்று கூறினாள். இதனால் வேறு வழியின்றி மணிகண்டன் தன் பிறந்த வீட்டுக்கே அதாவது காட்டுக்கே சென்று விட்டான். அவனோடு அவனது தோழர்களும் சென்றனர். நாளடைவில் இந்தக் கூட்டம் கொள்ளைக் கூட்டமாக உருவெடுத்தது. வழிப்பறியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்தக் கூட்டத்திற்கு மணிகண்டன் தலைவன் ஆனான். சுற்றுப்புறங்களில் இவர்கள் கொள்ளையடிக்கச் சென்றபோது, மணிகண்டனைக் கண்ட பொது மக்கள் ``அய்யோ அப்பா" என்று கூச்சல் போட்டனர். அந்தக் கூச்சலே நாளடைவில் அவனுக்கே பெயராகிவிட்டது. இரவில் திருடச் செல்லவும் காட்டில் மறைந்து வாழவும் கறுப்புடைகளை மேலும் கீழும் அணிந்து கொண்டனர். ஆளுக்கொரு தீப்பந்தமும் தடியும் வைத்துக் கொண்டனர். அய்யப்பன் பக்தர்கள் கறுப்பு உடை அணிவதற்கு இதுதான் காரணம் ஆகும்.

கொள்ளைக்கூட்டத் தலைவனான அய்யப்பன் முதுமை அடைந்து நோயால் மாண்டான். உடனே அவனது  தோழர்கள் அவனுக்கு மலயுச்சியில் நடுகல் நட்டுக் கோயிலும் எழுப்பினர். அந்தக் கோயிலுக்குச் செல்லப் பதினெட்டுப் படிகளும் வெட்டி வைத்தனர். அய்யப்பனின் முன்னோடியாக இருந்த ``கறுப்பு" என்பவன் மாண்டதும் அந்தப் படிக் கட்டுக்குப் பக்கத்தில் புதைத்துப் "பதினெட்டாம்படிக் கறுப்பு" என்றொரு தெய்வத்தை உருவாக்கினர்.

மலைவாசிகள் இறந்தவர்களைப் புதைத்துக் கல்நட்டு ஆண்டுக்கொரு முறை படையல் போட்டு, ஆடிப்பாடிக் களிப்பது வழக்கம். இந்த முறையிலே அமைந்ததுதான் இந்த அய்யப்பன் கோயிலும் பூசையும்.  இப்படியொரு கர்ண பரம்பரைச் செய்தி!

அய்யப்பன் பிறப்புப் பற்றி ஒரு புராணப் புளுகும் உண்டு. பத்மாசூரன் என்பவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து ஒரு வரம் வேண்டினான். சிவனும் முன் யோசனை இன்றி கேட்ட வரத்தினைத் தருவதாக வாக்களித்தான். `நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை பஸ்பமாகிவிட வேண்டும்' என்று வேண்டினான். சிவனும் அவ்வாறே வரம் அளித்தான். வரத்தைப் பெற்ற பத்மாசூரன் சிவன் தலையிலேயே கையை வைத்துச் சோதி்க்க விரும்பினான். சிவன் ஓடினான். விடவில்லை பத்மாசூரன் `விடாதே பிடி' என்று விரட்டினான்.

இந்த நிலையில் தனது மைத்துனருக்கு ஆபத்து வந்தது என்று கருதி, அதிலிருந்து அவனைக் காப்பாற்ற   விஷ்ணு, மோகினி உருவெடுத்து எதிரே வந்தான். பத்மாசூரன் மதிமயங்கி மோகினியிடம் நெருங்கினான். `இப்படி வந்தால் இணங்க மாட்டேன்.  குளித்து சுத்தமாய் வர வேண்டும்' என்று கூற, குளிக்கச் சென்று தன் தலையைத் தேய்த்த போது பத்மாசூரன் தலை எரிந்து பஸ்பமாகி விடுகிறான்.

பிறகு, பயந்து ஒளிந்திருந்த சிவனை விஷ்ணு அழைத்து நடந்ததைக் கூறினான். சிவனுக்குச் சபலம் ஏற்பட்டது. அந்த மோகினி உருவத்தை மீண்டும் காட்டச் சொன்னான். விஷ்ணு மீண்டும் மோகினி உருவெடுத்தான். அவ்வளவுதான் சிவன் நிலை குலைந்தான். அவனோடு கூடினான். வெளிவந்த இந்திரியத்தைக் கையிலே பிடித்தான். `ரிஷிப் பிண்டம் இராத் தங்காது' என்றபடி கையிலே பிள்ளை பிறந்தது. கையிலே பிறந்ததால் `கையப்பன்' என்றும் நாளட வில் அய்யப்பன் என்றும் மருவிற்று. அரிக்கும் அரனுக்கும் பிறந்ததால் அரிஹரப் புத்திரன் என்ற பெயரும்  அய்யப்பனுக்கு உண்டு. 

முதல் கதையின்படி கொள்ளைக்கூட்டத் தலைவன் அய்யப்பன். இரண்டாவது கதையின்படி அசிங்கத்திலும் ஆபாசத்திலும் பிறந்தவன் அய்யப்பன். மூன்றாவது கதையின்படி ஆணுக்கும் ஆணுக்கும் நடந்த கலவியில் பிறந்தவன் அய்யப்பன்.   இப்படி ஆபாசத்தைப் பக்தியாக்கிய  மதம்  இந்துமதம் போல் உலகில் வேறு உண்டா?

பகுத்தறிவுக்கும் உண்மைக்கும் கடுகத்தனை அளவுக்குக்கூடப் பொருத்த மற்ற   அய்யப்ப சுவாமியை பாமரர்கள் மட்டுமல்ல, படித்தவர்களும் பட்டதாரிகளும் கூட அய்யப்பா சரணம் என்று காட்டுக் கூச்சலிட்டு அலைகின்றார்கள் என்றால் அவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?


 

இன்றைய நாள் குறிப்பு (சனவரி 14  2011)

கறந்த பால் முலை புகா, கடைந்த வெண்ணை மோர் புகா! 

திருமகள்

எல்லோருக்கும் எனது தமிழர் புத்தாண்டு 2042 பொங்கல் வாழ்த்துக்கள். தென் தமிழீழம் வெள்ளத்தில் மூழ்கிய சோகம் இருந்தாலும் முன்னர் எப்போதும் இல்லாதவாறு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்தி்ய  தமிழர் புத்தாண்டு 2042 பொங்கல் விழா அரங்கம் நிறைந்து காணப்பட்டது.  தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் போல  கந்தமுருகேசனார் தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் தமிழர் புத்தாண்டு 2042 பொங்கல் விழாவைக் கொண்டாடியிருக்கிறது.  இன்னும் சில அமைப்புக்கள் பொங்கல் விழாவை மட்டும் கொண்டாடியிருந்தன.

தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டுத் தொடக்கம் என்ற கோட்பாட்டுக்கு முன்னைய காலங்களில் இருந்த எதிர்ப்பு இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது. இங்குள்ள வானொலிகளின் காற்றலையில் வந்த நேயர்கள், குறிப்பாக கனடிய தமிழ் வானொலி நேயர்கள்,  பொங்கல் வாழ்த்து என்று வாழ்த்தாமல் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தினார்கள். 

1921 ஆம் ஆண்டு தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் முன்னெடுத்த முயற்சி நிறைவுபெற 90 ஆண்டுகள் எடுத்துள்ளது. ஏன் இதனை முன்னரே நடைமுறைப் படுத்தவில்லை என்று என்னை ஒரு நண்பர் கேட்டார். 1920 இல் இருந்து 1950 வரை அன்றைய சென்னை மாகாணத்தில் (இன்றைய கன்டம், தெலுங்கு மலையாளம், தமிழகம்) 99 விழுக்காடு தமிழர் அல்லாத  தெலுங்கா, கன்னடர், மலையாளிகள் போன்றோரே முதல் அமைச்சர்களாக இருந்தார்கள்.  1950  1967 வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இராசா, இராசகோபாலச்சாரி, காமராஜ், பக்தவத்சலம் முதலமச்சர்களாக இருந்தார்கள். இந்திய தேசியக்கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ்

 கட்சிக்கு தமிழ்ப் பற்றோ தமிழ் உணர்வோ இருக்கவில்லை. இராசகோபாலச்சாரியார் (1952-1954) முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் இந்தியை கட்டாய பாடமாகக் கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   1967 இல் தமிழாய்ந்த தமிழர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடித்த பின்னரே தமிழ்மொழி வளர்ச்சியில் அரசு கவனம் எடுத்தது. தமிழக அரசு தை முதல் நாளே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் என்பதை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாள்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வந்தது.  1969 ஆம் ஆண்டு தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நினைவாக  விடுமுறை அறிவிக்கப்பட்டது.கடந்த பெப்ரவரி முதல் நாள் 2008 அன்று தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்ற முடிவுக்கு ஒரு மனதாகச் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது.  தமிழீழ நிழல்  அரசும் தை முதல்  நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என அறிவித்திருந்தது.

ஆனால் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பது போல  சூரியன் மேட இராசி, அச்சுவனி நட்சத்திரத்தில் புகும் சித்திரை முதல் நாளே தமிழர்களுடைய புத்தாண்டு என ஒரு சில பழமை விரும்பிகள் சொல்கிறார்கள்.  இங்குள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் சித்திரைக்கு வலு சேர்க்குமாப்போல் பேராசிரியர் ஒருவரையும், பண்டிதர் ஒருவரையும் வேறு சிலரையும் நேர்காணல் கண்டு ஒளிபரப்பியது. நேர் காணல் கண்டவர்களில் யாருமே தைமுதல் நாள்த்தான் தமிழரின் புத்தாண்டின் - திருவள்ளுவர் ஆண்டு 2042  இன் தொடக்கம் - எனச் சொல்லவில்லை.  ஆனால் இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரும் தொலைக்காட்சியும் சென்ற காலத்திலேயே நிற்கின்றது.  சூரியனது (புவியினது) அசைவை வைத்து காலத்தை கணிப்பது என்றால் சூரியன் தனது ஆறு மாத கால வடதிசைப் பயணத்தை (உத்தராயணம்) மகர இராசியிலேதான் தொடங்குகிறது.   அதாவது தை முதல்நாள் தொடங்குகிது.  எனவே அதுதான் ஆண்டின் தொடக்கமாகும். முருகன் கோயில் அர்ச்சகர் இதே கருத்தை கனடிய வானொலியில் சொன்னார்.  எனவே சென்றதினி மீளாது மூடரே, நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கறந்த பால் முலை புகா, கடைந்த வெண்ணை மோர் புகா,

உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,

விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,

இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!

என்பது திருமூலர் திருவாக்கு.

சபரிமலைக்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் 102 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்.மேலும் 50 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர.

கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்திலேயே இந்த விபத்து நடந்துள்ளது. 

மகர ஜோதி தரிசனத்தின் பின்னர் சொந்த இடங்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். 

விபத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது.வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 

பக்கதர்களை ஏற்றிக்கொண்டு குறுகலான பாதையில் வந்த ஜீப் ஒன்று திடீரென இடை நடுவே நிற்கவே அதை மீண்டும் இயக்கிய போது அவ்வண்டி நிலை தடுமாறி பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து கட்டுப்பாடு இல்லாமல் ஓடி பிறகு பள்ளத்தில் விழுந்துள்ளது. 

ஒதுங்க இடம் இல்லாமல் பக்தர்கள் இருட்டில் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு அதிகம் பேர் உயிரிழக்க நேர்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது. 


 

மீட்புப்பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய நாள் குறிப்பு (சனவரி 10  2011)

ஓநாய்களும் ஆடுகளும் கூட்டணி வைக்க முடியாது.

திருமகள்

பிள்ளையார் பிடிக்கக்  குரங்கான கதையாக பெரிய எடுப்பில் பத்துத் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து "தமிழ்க் கட்சிகளின் அரங்கு" என்ற அலங்காரப் பெயரோடு தொடக்கப்பட்ட கூட்டணி அற்ப ஆயுளில் உயிரை விட்டுள்ளது.

ஆட்சித்தலைவர் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கட்டுக்காசை இழந்த அண்ணர் சிவாஜிலிங்கம் அவர்கள்தான் இந்த அரங்கு மேடையேற   உழைத்தவர். அவருக்கு போக்கிடம் இல்லாததால் ஒரு கடிதத் தலைப்புக் கட்சி ஒன்றைப் பதிவு செய்து அரசியல் வியாபாரம் செய்து வருகிறார். அந்தக் கட்சிக்குப் பெயர் தமிழ்த் தேசிய விடுலைக் கூட்டமைப்பு. சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம். தலைவர் சிறீகாந்தா. ஆனால் சிறீகாந்தாவின் சத்தத்தைக் காணோம். எங்கேயாவது குடித்துவிட்டுக் கிடக்கிறாரோ தெரியவில்லை.

இந்த அரங்கில் இரண்டொன்று நீங்கலாக எல்லாம் தனி ஆள் கட்சிகள்தான். கடிதத் தலைப்பு மட்டும் இருக்கிறது. வேறொரு கோவணமும் இல்லை. எடுத்துக்காட்டாக  தீவிர புலி எதிர்ப்பாளர் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி. இவரும் ஆட்சித்தலைவர் நாடாளுமன்றத் தேர்தல் உட்பட எல்லாத் தேர்தல்களிலும்  கட்டுக்காசைக் கோட்டை விட்டவர்தான்!

ஆக மொத்தம் இந்த அரங்கு  அரசியல் கோமாளிகளின் கூட்டணி. இந்த கூட்டணியில் இருந்து டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி, பிள்ளையானின் தமிழ்மக்கள் விடுதலை பு(எ)லிகளின் கட்சி வெளியேறியுள்ளன. இது முற்றிலும் எதிர்பார்த்ததுதான்.

தலைமுடியை மகிந்த இராசபக்சேயின் கையில் கொடுத்து விட்ட இந்த இருவரும் ஆளும் கட்சியைப் பகைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும். தெரியாமல் இருக்கும் அளவுக்கு அவர்கள் மடையர்கள் அல்லர்.

டக்லஸ் தேவானந்தாவைப் பொறுத்தளவில் அரசைப் பகைத்தால் மகேஸ்வரி பவுண்டேசன் என்ற பெயரில் மண்கொள்ளை அடிக்கும் வியாபாரம் படுத்துவிடும். அதே போல் தீவுப்பகுதி கருவாட்டு வியாபாரமும் நாறிவிடும். இந்த வியாபாரங்கள்  மூலம் கிடைக்கும் பணத்தைத்தான் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைக்கு ஆயிரம்  கொடுத்து விலைக்கு வாங்கினார். இது கூடப் பருவாயில்லை.  அரசைப் பகைத்தால் மயிலவாகனம் நிமலராசன் கொலை,  நாரந்தனை இரட்டைக் கொலை, புங்குடுதீவு சாரதாம்பாள் சரவணபவானந்த குருக்கள் கொலை, ஊர்காவத்துறை ஏ.நிக்கலஸ், உதவி அரச அதிபர் கொலை,   சாவகச்சேரி மாணவன் கபிலநாத் படுகொலை போன்றவற்றுக்கு தூக்கில் தொங்க வேண்டி வரும்! இதெல்லாம் டக்லஸ் தேவானந்தாவுக்கு விளங்காத சங்கதிகள் அல்ல.

கூட்டணி அமைக்க விரும்புவோர்களுக்கு இடையில் அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் ஒத்த கருத்துக்கள் இருந்தால் மட்டுமே கூட்டணி சாத்தியப்படும். ஓநாய்களும் ஆடுகளும் கூட்டணி வைக்க முடியாது.


 

இன்றைய நாள் குறிப்பு (சனவரி 07, 2011)

அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சிங்களத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார் - இமெல்டா சுகுமார்!

திருமகள்

இனவெறி பிடித்த சிறிலங்கா பவுத்த - சிங்கள அரசு சிங்கள  தேசிய கீதத்தைத் தமிழர்கள் தொண்டைக்குள் தள்ள முடிவு செய்து அதனைத் திணிக்கத் தொடங்கியுள்ளது.  அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாதுகாப்பு நாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் சிங்களத்தில் தேசிய கீதம் பாட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் கல்வி அதிகாரிகள் மாணவர்களைக் கட்டாயப்படுத்தினார்கள். அதற்கான  தீவிர பயிற்சியும் அவர்களால் அளிக்கப்பட்டது. 

தேசிய பாதுகாப்பு நாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் 26.12.2010  நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தலைமை அமைச்சர் டி.எம்.ஜயரத்ன"இலங்கையில் 5 இனங்களும் 4 மதங்களும் உள்ளன.  எல்லோரும் இலங்கையர்களே எனற சம உணர்வோடு எல்லா மக்களும் வாழும் சூழலையே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.  மேலும் பேசுகையில்  "ஒவ்வொருவரும் தங்களுடைய மொழியைக் கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கான உரிமையுண்டு. அதுவே ஆட்சித்தலைவரின்  நோக்கமும் குறிக்கோளும் ஆகும்.  நாம் அனைவரும் ஆசியாவில் ஆச்சரியத்திற்குரிய நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும்" எனக்  குறிப்பிட்டார். இது  சாத்தான் வேதம் ஓதின  பழமொழியை நினைவு படுத்துகிறது.

சிங்கள தேசிய கீதத்தை தமிழ் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தாலேயே வலிகாமம் வலய  துணைக்  கல்விப்பணிப்பாளர் மாணிக்கம் சிவலிங்கம் (வயது 54) உரும்பிராய் மேற்கில் உள்ள அவரது வீட்டில் வைத்து 26.12.2010 இரவு 10 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்ற  கொலையாளி தன்னை  கள்வன் போன்று சித்திரித்துக் காட்டுவதற்காக  சிவலிங்கத்தின்  13  அகவை மகளின் தோடுகளை மட்டும் பறித்துச் சென்றுள்ளான். 

ஆங்கிலப் புத்தாண்டில்  பணிகளைத் தொடங்கும் போது அரச ஊழியர்கள் உறுதி மொழி  செய்து பணிகளைத் தொடங்குமாறு  பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு பணிப்புரை விட்டிருந்தது. அதற்கு அமைவாக கடந்த 3 ஆம் நாள்  யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள அரச அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு பணிகள் தொடங்கப்பட்டன. யாழ் மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் உதவி அரச அதிபர் பணிமனைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்கள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டதால் அரச அலுவலர்கள்  சிங்கள அரசு சொல்வதைச் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.  

இதைத்தான் இலங்கையைக் கைப்பற்றிய  ஆங்கிலேயரும் செய்தார்கள்.  அவர்கள் காலத்தில் யூனியன் யக் கொடி ஏற்றப்பட்டது. God Save the King  பாடப்பட்டது.  ஆங்கில மொழியில் அலுவல்கள் இடம்பெற்றன!

இப்போது இமெல்டா சுகுமார் ஒரு குண்டைப் போட்டுள்ளார். தமிழ்மாணவர்கள் சிங்களத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தாதான் தன்னை கட்டாயப் படுத்தியதாகச் சொல்கிறார். இதில் எந்த வியப்பும் இல்லை. அற நனைந்தவனுக்கு கூதல் என்ன? குளிர் என்ன? கடந்த  இருபது ஆண்டுகளாக தமிழினத்தை ஒரு அமைச்சர் பதவிக்காக மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்று வயிறு வளர்த்து வருபவர் டக்லஸ் தேவானந்தா.  இனிமேல் தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என அமைச்சரவை முடிவு எடுத்த போது டக்லஸ் தேவானந்தா உடன் இருந்திருக்கிறார். ஆனால் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சிங்கள அமைச்சர்கள் வாசுதேவா நாணயக்காரா,  இராஜித சேனரத்தினா இருவருமே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால் வெளியில் வந்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தா முதலில் அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்று சொன்னார். பின்னர் சிங்கள தேசிய கீதம் பாடுவதில் தவறில்லை என்றார்.  இப்போது அவரே அதனை முன்னின்று கட்டாயப்படுத்தி பாட வைக்கிறார். அடிமைகளுக்கு எங்கேயாவது எசமான் சுதந்திரம் கொடுத்தது உண்டா?

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கிய காலம் கனவாய் பழங்கதையாய் போய்விட்டது! பதவி தரும் சுகத்திலும் பணம் சம்பாதிப்பதிலும்தான் தேவானந்தா குறியாக இருக்கிறார். இவையே பிறவி எடுத்ததன் பலன் என அவர் நினைக்கிறார்.

ஆனால் சும்மா சொல்லக் கூடாது. இன்னொரு அடிமை பிள்ளையான் "இலங்கையின் தேசிய கீதம் வடகிழக்கில் தமிழில்தான் பாடவேண்டும்.  வடகிழக்கின் நிரு்வாக மொழியாக தமிழ் மொழியுள்ளதுடன் இலங்கையின் தேசிய மொழி ஒன்றாகவும் தமிழ் உள்ளது.  ஒரு நாட்டின் தேசியக்கொடி போன்று தேசிய கீதமும் அந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவருக்கும் சொந்தமானது"  எனத் திருவாய் மலர்ந்துள்ளார். இது இராசபக்கே நெற்றிக் கண்ணைத் திறக்காது இருக்கு மட்டுந்தான். திறந்தால் பிள்ளையான் பெட்டிப் பாம்பாகி விடுவார். இதற்கு முன்   சிங்கள எசமானர்களைப் பகைக்கக் கூடாது என்பதற்காக வாலைச் சுருட்டி வைத்திருந்திருக்கிறார்!

தமிழ் மக்களுக்கு சேவை செய்கிறேன் அதனால்தான் மக்கள் என்னைத் தேர்தலில் வெற்றியடையச் செய்து நாடாளுமன்றம் அனுப்பி வைக்கிறார்கள்  என்று மார் தட்டும் தேவானந்தாவிடம் ஒரு சின்ன வேண்டுகோள்.

பயங்கரவாதச் சட்டத்தையும் அவசர கால விதிகளையும் நீக்கிவிட்டு, சிங்கள இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி  விட்டு யாழப்பாணத்தில் ஒரு சுதந்திரமான,  நேர்மையான தேர்தலை நடத்த முடியுமா? அப்போது தெரியும் மக்கள் தீர்ப்பு எதுவாக இருக்கும் என்று.  இதற்கு தேவானந்தா தயாரா?


 

இன்றைய நாள் குறிப்பு (டிசெம்பர் 29, 2010)

கோழிக் குஞ்சுகளுக்கு நரிகள் காவல்!

திருமகள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வலய துணைக் கல்விப் பணிப்பாளர்  மார்க்கண்டு சிவலிங்கம் (52) கடந்த டிசெம்பர் 26 ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) 11 மணியளவில் உரும்பிராயில் உள்ள அவரது வீட்டில் வைத்து  சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.   மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளிகள் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.  துணைக் கல்விப் பணிப்பாளரின் மகள் அணிந்திருந்த நகைகளைப்  பறிக்க முயன்ற கொள்ளையர்கள் அவருடன் தவறாக நடக்க முயன்றதாகவும்  கொல்லப்பட்டவர் மகளின் அருகில் வந்து அதனைத் தடுக்க முயன்ற போது அவரைச் சுட்டு விட்டுத்  தப்பியோடியுள்ளனர்.  கல்விப்பணிப்பாளரை சுட்டுக்கொன்ற கொலையாளிகள்  அவரது 13 வயது மகளின் தோடுகளை மட்டும் பறித்துச் சென்றுள்ளனர். 

இதேமாதிரியான நிகழ்வு கடந்த டிசெம்பர் 12 ஆம் நாள்  வலிகாமம் சங்கானையில் இடம்பெற்றது. . அதன் போது வீடு புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முருகமூர்த்தி ஆலய முதன்மைக் குருவான நித்தியானந்த சர்மா மற்றும் அவரது பிள்ளைகள் படு காயமடைந்தார்கள். அவர்களில் நித்தியானந்த சர்மா வைத்தியம் பயனளிக்காமல் நான்கு நாட்களில் இறந்துபோனார். இவ்விரு நிகழ்வுகளும் யாழப்பாண மக்களிடம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

முதலில் இந்தக் கொலை,   கொள்ளை முயற்சியில்  ஆயுதக் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டது என எண்ணப்பட்டது. இப்போது இந்தப் படுகொலையை யாழ்ப்பாணக் குடாநாட்டை வல்வளைப்புச் செய்துள்ள  சிங்கள இராணுவம் செய்திருப்பதாகச்    செய்திகள் தெரிவிக்கின்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட துணைக் கல்வி இயக்குநர் சிவலிங்கம் அதே நாளில் யாழ்ப்பாணத்தில் நடந்த பாதுகாப்பு நிகழ்வில்  பள்ளி மாணவர்களைக்  கட்டாயப்படுத்தி சிங்கள தேசிய கீதத்தைப் பாட வைத்ததை அவர் விரும்பவில்லை என்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த  சிங்கள  இராணுவமே கொள்ளை என்ற போர்வையில் இந்தப் படுகொலையைச் செய்திருக்கிறது எனக்  குற்றம்சாட்டும் துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் வெளிவந்துள்ளன. 

துணை இயக்குநரின் சாவீட்டுக்கு வட மாகாண ஆளுநர் சந்திரசிறியோ, படைத்துறை அதிகாரிகளோ, அரசாங்க அதிபர் இமல்டா சுகுமாரோ, மாகாண சபைப் பணியாளர்களோ செல்லாதது சிங்கள இராணுவத்தின் மீதான அய்யத்தை மேலும் வலுப்படுத்துகிறது.  யாழ்ப்பாணத்தின் அரசர் என்று பசில் இராசபக்சேயால் முடிசூட்டப்பட்ட அமைச்சர் டகலஸ் தேவானந்தாவும் சாவீட்டில் கலந்து கொள்ளவில்லை.

சாவீட்டில் பேசிய  இளவாலை . கென்றிஸ் கல்லூரி அதிபர் மற்றும் கல்வி இயக்குநர் இரத்தினம் தமிழ்மாறன் இந்தப் படுகொலையைக் காட்டமாகக் கண்டித்துள்ளார்கள். இந்தப் படுகொலையைக் கண்டித்து புதன்கிழமை  வலயக் கல்வி அலுவலகம் முன்பாக பணிப் புறக்கணிப்புப்  போராட்டம் நடைபெறறு இருக்கிறது.   

யாழ்ப்பாணத்தில் 50,000 இராணுவத்தினரும் 5,000 காவல்துறையினரும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கணக்கின்படி பத்துப் பேருக்கு ஒரு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் யாழ்ப்பாணத்தில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம், பாலியல் வன்முறை  இடம்பெறுகிறது. கடந்த நொவெம்பர் 29 ஆம் நாள்  வீட்டிலிருந்து வெளியே சென்ற வேளை காணாமல் போன 19 அகவையுடைய  அரியநாயகம் துளசி  என்ற பெண்  ஒருவரின் சடலம் அருகிலுள்ள கிணறொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்படு முன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 

கோழிக் குஞ்சுகளுக்கு நரிகளைக்  காவலுக்கு வைத்த கதையாகவே யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் இந்தக் கொலைகள் கொள்ளைகள் சாட்சி பகருகின்றன.


   

‘Sri Lankan forces planned education officer’s assassination in Jaffna’

[TamilNet, Tuesday, 28 December 2010, 21:56 GMT]

Sri Lankan forces occupying Jaffna planned the assassination of the Deputy Director of Education for Valikaamam, Mr. Markandu Sivalingam, on Sunday night, media sources in Jaffna said. “We cannot keep quiet seeing such murders. If we do so, tomorrow even we will not remain. We have to mobilise ourselves very urgently,” said Rev. Fr. Jesudas, the principal of St. Hendry’s College, I’lavaalai, speaking at the funeral of Mr. Sivalingam at Maruthanaamadam, Tuesday. It was attended by large number of students, teachers, principals and the public. But neither SL military officials, nor the officials of the provincial administration attended the funeral. On the day of his assassination there was the ‘disaster management’ gala attended by SL prime minister forcing students to ‘sing’ Sinhala anthem. “Whenever academics and intellectuals were assassinated in the past, we were keeping quiet. But we have not achieved anything by that silence. Such assassinations are escalating now. Our continued silence will invite dangerous consequences,” Fr. Jesudas further said in making obituary.

Speaking at the funeral, the Director of Education for Jaffna, Mr. Ratnam Tamilmaran asked all sections to condemn such assassinations of academics. Attack on academics in on the escalation. Stopping that is in the hands of everybody, he said.

The funeral procession started from the house of Mr. Sivalingam at Urumpiraay. Amidst heavy rains there was a big crowd. His colleagues took charge of the body at Maruthanaamadam junction, where the Valikaamam regional education office is located. Principals of all leading schools, teachers, students and education officers paid homage.

The cremation took place at Maruthanaamadam Saiva crematorium.

Mr. Sivalingam was a peace-loving person who was looking after Tamil language curriculum as part of his deputy director duties. He was keeping himself away and was aloof from the ongoing manoeuvrings of the government with the schools and students in Jaffna. He didn't resist his assassins. His daughter pleaded that if the killers had come for robbery, she would part with her jewellery. Yet, Mr. Sivalingam was shot on the chest. 


இன்றைய நாள் குறிப்பு (டிசெம்பர் 08, 2010)

உலகில் ஆண்டுதோறும் 90,000 மக்கள் அஸ்பெஸ்ரக்ஸ் பயன்பாட்டால் இறக்கிறார்கள்

திருமகள்

இப்போது அஸ்பெஸ்ரஸ் பயன்பாட்டால் புற்றுநோய்க்கு ஆளான தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஜியோங் றிம் லீ கனடாவுக்கு வந்திருக்கிறார். வாடும்  தடைசெய்யுமாறு கேட்டுஜியோங் றிம் லீ (44) என்பவர் கனடாவுக்கு நேரடியாக வந்து இங்குள்ள கியூபெக் ஆட்சியாளர்களைக் கண்டு பேசியிருக்கிறார். " கனடா ஒரு வளர்ந்த நாடு, நாகரிகம் படைத்த நாடு, அந்த நாடு ஏன் இந்த நச்சுப் பொருளை உற்பத்தி செய்கிறது? கனடா ஏன் குடும்பங்களின் மகிழ்ச்சியை அழிக்கப்பார்க்கிறது" (“I want to ask why Canada, an advanced country, a civilized country, wants to continue to produce this toxic product?” Lee asked through an interpreter. “Why does Canada want to destroy the joy of families?”) என  மொழிபெயர்ப்பாளர் மூலம் அழுதவண்ணம் கேட்டார். அவருக்கு 9, 13 அகவையில் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன. 

அஸ்பெஸ்ரஸ் ஒரு நச்சுப் பொருள். அதன் பயன்பாடு புற்றுநோயை உண்டாக்குகிறது. அதனைப் புரிந்து கொண்ட கனடா அதன் பயன்பாட்டை தடை செய்துள்ளது. ஆனால் அதே நச்சுப் பொருளை கனடா வளர்முக நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. என்ன காரணம்? எல்லாம் பணம் திரட்டத்தான். கனடா ஒரு முதலாளித்துவ நாடு. முதலாளித்துவ கோட்பாடு பொருளை எந்த வழியிலும் திரட்டலாம் என்கிறது. முதலாளித்துவ கோட்பாட்டுக்கு சுற்றுச் சூழல் மாசுபடுதல் மற்றும்  பருவமாற்றம் பற்றித் துளியும் கவலைப்படுவதில்லை.  அதன் குறி பொருள் ஈட்டல்தான்.

கியூபெக் மாநிலத்தில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள Jeffrey Mine in Asbestos என்ற நிறுவனம் இப்போதுள்ள குழி சுரங்கத்தின் கையிருப்பு குறைந்து விட்ட தால் வேறு புதிய சுரங்கங்களை உருவாக்க முயற்சி செய்கிறது.  அதற்கு கியூபெக் மாநில அரசு 58 மில்லியன் டொலர்களை கடனை உறுதிசெய்துள்ளது. பன்னாட்டு தேசிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் அந்தச் சுரங்கத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.   கனடா இந்தக்  புதிய சுரங்கத்தின் மூலம் பெறப்படும் அஸ்பெஸ்ரஸ் தகடுகளை அடுத்த 20 ஆண்டுகளுக்குஏற்றுமதி செய்து  வருவாய் ஈட்டலாம்.  

அண்மைக் காலத்தில் யப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் அஸ்பெஸ்ரஸ் இறக்குமதியை தடைசெய்துவிட்டன. ஆனால் அதன் முன்னைய பயன்பாட்டின் காரணமாக அந்த நாடுகளில் இறப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.  கனடிய புற்றுநோய் சங்கம் உலகில் ஆண்டுதோறும் 90,000 மக்கள் அஸ்பெஸ்ரக்ஸ் பயன்பாட்டால் இறக்கிறார்கள் எனச் சொல்கிறது.

கனடாவில் அஸ்பெக்ரஸ் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் புதிய சனநாயகக் கட்சி மட்டுமே எதிர்த்து இயக்கம் நடத்துகிறது. எஞ்சிய லிபரல் மற்றும் பழமைவாதக் கட்சிகள் ஆதரிக்கின்றன. கேட்டால் வேலைவாய்ப்புப் போய்விடும் என்கின்றன.

தமிழ்க் கனடியர்களும் இந்த நாட்டின் சமூக, பொருளாதாரக் கோட்பாடுகள் பற்றி அக்கறை காட்ட வேண்டும். நமக்கென்ன என்று ஓதுங்கி வாழக் கூடாது. 

வன்னியில் இந்தியா மற்றும் சீனா அரசுகளால் கட்டப்பட இருக்கும் பல ஆயிரம் வீடுகளுக்கு அஸ்பெஸ்ரஸ் தகடுகளால் கூரை வேயப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


 தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியமான இந்திய சமயத் தலைவர்

* விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.

தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.

பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.

மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.

'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.

ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவன் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவான். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.

எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.

நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன; நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.

நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள். விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளம் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?

‘நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது’ என்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.


டிசெம்பர் 07,2010

 திரு வாசுதேவன் பத்தன்

தலைவர்

கொழும்பு விவேகானந்தா பழைய மாணவர் சங்கம் - கனடா

ரொறன்ரோ.

 அன்புடையீர்

 கொழும்பு விவேகானந்தா பழைய மாணவர் சங்கம் - கனடா தனது ஆண்டுக் கூட்டத்திற்கு என்னைச் 

சிறப்பு விருந்தினராக அழைத்துச் சிறப்பித்திருப்பது கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

சுவாமி விவேகானந்தர் பேரில் ஒரு கல்லூரி கொழும்பில் இருப்பதும் அதில் படித்து வெளியேறிய மாணவர்கள் கனடாவில் கொழும்பு விவேகானந்தா பழைய மாணவர் சங்கம் - கனடா என்ற பெயரில் ஒரு அமைப்பை

நல்லமுறையில் நடத்தி வருவதும் எனக்கு மன மகிழ்ச்சியைத்  தருகிறது.

இந்தியாவில் சுவாமி விவேகானந்தர் (12-01-1863 - 4-07-1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின்  தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்திருந்தன. . இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத  வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய   சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. இந்தச் சொற்பொழிவுகளின் மூலம் சுவாமி விவேகானந்தர்  இந்து மதத்தை வெளிநாடுகளிலும் அறியச் செய்தார். 

உன் எதிர்காலம் உன் கையில் உண்டு என்று சொல்லி மக்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் அறிவுறுத்தினார்.  ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடியபோதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை என்றார்.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய். மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.

'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால்  பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.

இது போன்ற பொன்மொழிகளை சுவாமி் விவேகானந்தர் நிறையச் சொல்லியிருக்கிறார்.

தமிழர்கள் பண்டு தொட்டுக்  கல்விக்கு முதலிடம் கொடுத்தவர்கள். கற்கை நன்றே கற்கை நன்றே  பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஔவையார் வாக்கு. இதன் பொருள்  பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பதல்ல.  நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே உண்மையான பொருள். அதாவது காலில் விழுந்தாவது சாதித்துக் கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் தாம் எழுதிய திருக்குறளில் கல்வி கற்பதனால் வரும் நன்மைகள், கல்லாமையால் வரும் தீமைகள், கற்றறிந்தார் கூறக் கேட்பதால் வரும் அறிவு,  கல்வி கேள்விகளால் வரும் அறிவோடு உண்மை அறிவு உடையவராதல் பற்றி  அரசியலில்  தனித்தனி அதிகாரங்களில் எடுத்துக் கூறுகிறார்.

இன்றைய  எமது பள்ளிக்கூடக் கல்வியில் ஒருவன் அல்லது ஒருத்தி எப்படித் தனது  வாழ்க்கையைச்  செப்பமிட வேண்டும் என்பது அனேகமாகச் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. அதாவது இயற்பியல்,  வேதியல், வரலாறு, கணக்கியல்  சொல்லிக்கொடுப்பது போன்று மாணவர்களுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பதில்லை. அதன் காரணமாகவே இன்று சமூகத்தில் பொய், கள், களவு, காமம், கொலை என்ற அய்ந்துவகை குற்றங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.

ஒரு மனிதனுக்கு கல்வி, பொருள், வீரம் வேண்டும். ஆனால் அதைவிட ஒழுக்கம் வேண்டும். பெரும்பாலான  தமிழ் இலக்கியங்கள் ஒழுக்கத்தை வலியுறுத்தும் அற இலக்கியங்களாகவே காணப்படுகிறது. திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்றவை அற நூல்களே.  ஒழுக்கம் இல்லாத கல்வி, பொருள் ஆகியவற்றால்  பலன் இல்லை என்பது எனது கருத்தாகும்.

கொழும்பு விவேகானந்தா பழைய மாணவர் சங்கம் - கனடா சுவாமி விவேகானந்தரின் அறிவுரைக்கு இணங்க வாழ்வதோடு மற்றவர்களையும் விவேகானந்தர், திருவள்ளுவர் போன்ற மகான்கள்  வழி  வாழச் செய்தல் வேண்டும்.

உங்களது ஆண்டுப் பொதுக் கூட்டம் இனிது இடம்பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

வண. பிரான்சிஸ் சேவியர் அடிகளார்


 

 இன்றைய நாள் குறிப்பு (டிசெம்பர் 03, 2010)

இராசபக்சேயின் ஆணவப்போக்குக்கு விழுந்த முதல் அடி

 திருமகள்

 புகழ்பெற்ற ஒக்ஸ்போட் மாணவர் கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்ட மகிந்தா இராசபக்சேக்கு எதிராக தமிழர்கள் காட்டிய வலுவான எதிர்ப்புக் காரணமாக அவரது பேச்சு கைவிடப்பட்டது. இது அவர் ஆட்சிக்கு வந்த பின்னர்   சந்தித்த பாரிய தலைக்குனிவும்   மூக்குடைப்பும் ஆகும்.  போன் மச்சான் திரும்பி வந்தான் வெறுங்கையோடு என்பது போல  இராசபக்சே தனது பரிவாரங்களோடு சிறீலங்காவுக்கு வெறுங்கையோடு திரும்பியுள்ளார். அவரது ஆணவப் போக்குக்குக் கிடைத்த முதல் அடி இதுவாகும்.  இனிப் போகப் போக மேலும் அடிகள் விழும். தலைக்கனத்துக்கும்  

சிறீலங்கா ஒரு தீவாக இருக்கலாம். ஆனால் அரசியல், இராசதந்திர மட்டத்தில் அது ஒரு தீவு அல்ல.  அதன் இறைமை பன்னாட்டு சட்டங்கள் மற்றும் மரபுகளுக்குக் கட்டுப்பட்டது.  

 மகிந்தா இராசபக்சே மீதும் அவரது இராணுவம் மீதும் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் தமிழர்களால் மட்டுமல்ல மனிதவுரிமை அமைப்புகளாலும் சுமத்தப்பட்டு வருகின்றன. தமிழ்ப் போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிங்கள இராணுவத்தினரால் முதுகுப்புறம் சுட்டுக் கொல்லப்படும் காணொளிக் காட்சிகள் பெருமளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன. கற்பழிக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் போராளிகளது  காணொளிப்படங்கள் வெளிவந்துள்ளன. இலண்டன்  தொலைக்காட்சி 4  போராளிகள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் கண், கை கட்டப்பட்ட நிலையில் பின்புறமாக சிறீலங்கா இராணுவத்தினரால் சுடப்படும் காணொளியை  (http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims ) ஒளிபரப்பியுள்ளது. பின்னணியில் வெடிச் சத்தங்கள் கேட்கின்றன.  

இராணுவத்திடம் சரணடைந்த  மட்டக்களப்பு மாவட்ட தளபதி ராமேஷ் சிங்கள இராணுவத்தால் விசாரணை செய்யப்படும் காணொளி ((http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33152) வெளிவந்துள்ளது.  அதே சமயம் சிறிலங்கா இராணுவம் ராமேஷை தாங்கள் கைது செய்யவோ சுட்டுக்கொல்லவோ இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கப்பார்க்கிறது. அவரை விசாரணை செய்யும் காணொளி வெளிவந்துள்ள நிலையில் இராணுவத்தின் தலைமைத்  தளபதி மகிந்த இராசபக்சேயும் இராணுவமும்  கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளது.   

 சிறீலங்காவின் அப்பட்டமான மனிதவுரிமைகள் பற்றி மவுனம் சாதித்த இந்திய ஆங்கில ஊடகங்கள் அது பற்றி எழுத தொடங்கியுள்ளன. விதிவிலக்கு இந்து. இந்துக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் போர் தொடுக்கக்  கிளம்பியுள்ளனர்.  

சிறிலங்கா அரசின் இந்த மோசமான மனிதவுரிமை மீறல்களை இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, பயிற்சி எல்லாம் கொடுத்தது இந்தியாதான். இந்தியாவின் போரைத்தான் சிறிலங்கா செய்து முடித்தது என்று இராசபக்சே பலமுறை இந்தியாவுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார். இதன் பொருள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஆகியோரின் கைகளிலும்  தமிழர்களின் பச்சை இரத்தம் படிந்துள்ளது என்பதாகும்.  வரும் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ் - திமுக ஊழல் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும். அப்போதுதான் போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள், தளபதிகள், போராளிகள் ஆகியோரது ஆத்மா சாந்தியடையும்.


இன்றைய நாள் குறிப்பு (நொவெம்பர் 21 2010)

சிங்களவர்  - தமிழர் முரண்பாடு இருக்குவரை நாடு பிரிவதைத்  தடுக்க முடியாது!

திருமகள்

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். வடக்கில் நிலை கொண்டுள்ள சிங்களப் படையினருக்கு போர் முடிந்தும் புலிப்பயம் போன பாடில்லை.

இன்று தமிழர்கள் வாழும் பகுதிகளில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டது.  இது தமிழர்களுடைய ஒரு பாரம்பரிய  சமய நிகழ்வாகும். ஆனால் கார்த்திகை விளக்கீட்டிற்கு தீபமேற்றச் சென்றவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் மற்றும் யாழப்பாண .மாவட்டம் ஆகியவற்றில்  இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக யாழப்பாண மாவட்டத்தில் அளவெட்டி மற்றும் பளை, சோரன்பற்று, வடமராட்சி கிழக்கு போன்ற பகுதிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதேபோல் கிளிநொச்சியில் வட்டக்கச்சியில் படையினர் காட்டு மிராண்டித்தனமாக நடந்துள்ளனர்.  வீதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வட்டக்கச்சியில் ஆறுமுகம் வீதியில் பாடசாலை மாணவர்கள்  தாக்கப்பட்டுள்ளனர்.

இன்று முதல் ( நொவெம்பர் 21 - 27) ஒரு கிழமைக்கு மாவீரர் நினைவு நாள் புலம்பெயர்ந்த நாடுகளில் வழக்கம் போல் மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகின்றது.

தமிழ் மண்ணின் விடுதலைக்காகக் களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக மாவீரர் விழா தமிழ் மக்களால் சீரோடும் சிறப்போடும் வீறோடும் மறவுணர்வோடும்  கொண்டாடப்படுகிறது.

2009 மே 17 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டது முதல்  தமிழீழத்தில் எமது மாவீர தெய்வங்களுக்கு விழா எடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. தமிழ்மக்களின் பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கை வல்வளைப்புக்குள் உட்படுத்தி இருக்கும் சிங்களப் படையினருக்கு  மாவீரர் விழாவின் போது மாவீரர்களுக்கு ஏற்றும் தீபங்களுக்கும் கார்த்திகை விளக்கீட்டிற்கு ஏற்றும் தீபங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரியாததால் கார்த்திகை விளக்கீட்டிற்று தீபம் ஏற்றிய பொது மக்களைத் தாக்கி இருக்கிறார்கள்.

ஒரு புறம் படித்தறிந்த படிப்பினையும்  நல்லிணக்கமும் என்ற  ஆணையம் 2002 - 2009 இடையில் இடம்பெற்ற  மனிதவுரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்துகிறது. மறுபுறம் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

கன்னியாவில் உள்ள ஏழு சுடு தண்ணீர் கிணறுகள் பற்றி திருகோணமலை கிராம சபை எழுதி வைத்த அறிவித்தல் பலகை 'தவறான வரலாற்றுத் தரவுகளை' தெரிவிப்பதாக குற்றம்சாட்டி திருகோணமலை அரச அதிபரும் முன்னாள் இராணுவ தளபதியும் ஆன இரஞ்சித் டி சில்வா அதனை பிடுங்கிக் கொண்டு போனது மட்டுமல்லாமல் அந்த இடம் தொல்லியல் துறைக்குச் சொந்தமானது என்றும் கூறியுள்ளார். அதனை எண்பிக்கும் முகமாக அங்கே ஒரு புத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. நிரந்தரமாக விகாரை அமைக்க ஒரு ஏக்கர் காணியும் வழங்கப்பட்டுள்ளது.

கார்த்திகை விளக்கீட்டுக்குத் தீபம் கொளுத்தச் சென்ற மக்கள் தாக்கப்படுவதும் கன்னியா சுடுதண்ணீர் கிணறுகள் தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு அங்கு பவுத்த விகாரை கட்டப்படுவதும் வடக்கும் கிழக்கும் சிங்கள - பவுத்த இராணுவ மயப்படுத்தப் பட்டிருப்பதற்கு தக்க சான்றாகும்.

சிங்களவர்  - தமிழர் இணைந்து ஒரே நாட்டில் வாழ வேண்டும் என இன்னும் இணைப்பு அரசியல் நடத்தும் ஒத்துழைப்பு அரசியல்வாதிகளான பிள்ளையான், கருணா, தேவானந்தா போன்றவர்கள் தங்கள் வயிற்றை வளர்க்கத்தான் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை விட வேறு அவர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

நாட்டைப் பிரித்தால் ஒழிய சிங்களவர்  - தமிழர் முரண்பாட்டை ஒழிக்க முடியாது! இந்த முரண்பாடு இருக்குவரை நாடு பிரிவதையும் தடுக்க முடியாது!

இதேவேளை வீதியால் சென்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவரும் மறிக்கப்பட்டு அவர் பயணித்த வாகனத்தின் ஆவணங்களை சோதித்த படையினர் அவரை உளரீதியாக பாதிக்கும் வகையில் நடத்தியுள்ளனர்.

இவ்வாறன செயல்கள் கண்டிக்கப்பட வேண்டும். இந்த நிலையில்தான் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இது வடக்கில் இராணுவ ஆட்சியொன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதை காட்டுகின்றது.

இது எங்களின் பாரம்பரிகங்கள் கலாச்சாரங்களை சிதைக்கும் ஓரு செயற்பாடாகும் என்றார். 

ஒரு காலத்தில் ஊடகங்களினட பரபரப்புச் செய்திகளுக்கு தீனிபோட்ட பிரேமானந்த சுவாமியை நினைவிருக்கா? சாயி பாபா போலவே இவரும் கையை அசைத்து விபூதி வரவழைப்பது, அடிவயிற்றில் இருந்து சிவலிங்கத்தை வரவழைப்பது போன்ற மந்திர தந்திரங்களைச் செய்து காட்டி தனக்குப் பின்னால் ஒரு பக்த கோடியை உருவாக்கியவர். இவரது பூர்வீகம் மாத்தள. தனக்குள் தெய்வீக சக்தி ஒன்று திடீரென்று புகுந்து விட்டதாக கதையளந்து காவி உடை உடுத்து பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்க தொடங்கினார். சொஞ்சக்காலம் யாழ்ப்பாணத்திலும் கடை விரித்தார். ஆளால் அவரது பருப்பு யாழ்ப்பாணத்தில் அவியலை. மீண்டும் மாத்தளை திரும்பிய  பிரேமானந்தா 1983 இல் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு சென்று திருச்சியில் கடைவிரித்தார்.  பாத்திமா நகரில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட  ஆசிரமத்தை உருவாக்கி நடத்தி வந்தார். வாயிலிருந்து சிவலிங்கம் வரவழைக்கும் சக்தி பெற்றதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய இவருக்கு தமிழ்நாடு மற்றும் வெளி நாடுகளில் ஏராளமான பக்தர்கள் இருந்தனர். இதனால் அவரது ஆச்சிரமத்துக்குக் கோடிக் கணக்கில் பணம் குவிந்தது.

பக்தி வியாபாரம் ஓகோ என்று நடை பெற்றது. காணி வாங்கி அங்கே ஒரு ஆச்சிரமத்தையும் நிறுவினார். அனாதைப் பிள்ளைகள் என்று சொல்லி சில பெண்களையும் ஆச்சிரமத்தில் வேலைக்கு வைத்துக் கொண்டார். நண்டு கொழுத்தால் பொந்துக்குள் இருக்காது என்பார்கள். பிரேமானந்த சாமியாரும் ஆச்சிரமத்தில் இருந்த பெண்களை தனது உடல் பசிக்கு இரையாக்கினார். ஆச்சிரமத்தில் இருந்த இரண்டு இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி காவல்துறையிடம் முறைப்பாடு செய்தார்கள். ஆச்சிரமத்துக்கு குறி கேட்கவரும் பெண்களிடம் பிரேமானந்தா சாமியார் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இரவி என்ற பொறியாளரை கொலை செய்து ஆச்சிரமத்தில் புதைத்ததாகவும்  13 பெண்களைக் கற்பழித்தாகவும் காவல்துறையினர் 1994 ஆம் ஆண்டு அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறை விசராணை தொடங்கிய கையோடு பிரேமானந்த சுவாமியாரை சனியன் பிடித்துக் கொண்டது. 

இந்த வழக்கை புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதி பானுமதி விசாரித்து பிரேமானந்தாவுக்கு 2 ஆயுள் தண்டனையும் ரூபா 66 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்தத் தீர்ப்பை தொடர்ந்து பிரேமானந்தா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள பிரேமானந்தா பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பல முறை மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்து அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி நீதிமன்றத்தில் வாதாடியும் பயன் இல்லாமல் போய்விட்டது.

 கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுண்டக் காய்ச்சிய பால், பழம், தயிர், மோர் சாப்பிட்டு பஞ்சணையில் படுத்துறங்கிய  பிரேமானந்தாவுக்கு சிறையில் அளவு சோறும் சாம்பாரும் கஞ்சியும்தான் சாப்பாடு. பாயில்தான் படுக்கை.

புதுக்கோட்டை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரேமானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு  செய்தார். 1997 ஆம் ஆண்டு தாக்கல் செய்த பிரேமானந்தவின் மேன்முறையீடு 5 ஆண்டுகளுக்குப்  பிறகு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் சண்முகம் இ. சொக்கலிங்கம் ஆகியோர தங்கள் தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.  

சிறு வயது முதலே, இந்தப் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரேமானந்தாவின் கருணையினாலும் பராமரிப்பினாலும் ஆச்சிரமத்தில் வளர்ந்துள்ளனர் இந்தக் குழந்தைகளை சிறுவயதிலேயே அவர்களது பெற்றோருக்குத் தெரியாமல் தான் இலங்கையிலிருந்து கடத்தி வந்துள்ளார் இவர்களை ஈவு இரக்கமின்றி பூசை அறையையும் அருள்வாக்கு சொல்லும் இடத்தையும் படுக்கை அறையாக மாற்றிக் கற்பழித்துள்ளார்.

இந்தப் பெண்களை 11 நாள்களுக்குள் வற்புறுத்தி கற்பழித்துள்ளார் சாமியாருடன் உடலுறவு கொண்டால் நல்லதென்றும், இதனால் அருள் வாக்கு பலிக்கும் என்றும் கூறி ஏமாற்றியுள்ளார் 16 வயதுக்கு குறைவான பெண்களை அவர்கள் சம்மதத்துடன் உடலுறவு கொண்டாலும் அதுவும் கற்பழிப்புதான். துறவியாக இருந்து கொண்டு தன் பாதுகாப்பில் உள்ள பெண்களை கற்பழித்ததும் இதனை தட்டிக் கேட்க முயன்ற என்ஜினீயர் ரவியை கொலை செய்ததும் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

கையில் விபூதியும் வாயில் சிவலிங்கமும் வரவழைத்த பிரேமானந்தாவால் சிறைச்சாலைப் பூட்டைத் திறக்க ஒரு சின்னத் திறப்பைக் கூட  வரவழைக்க முடியவில்லை! மனமும் நொந்து உடலும் வெந்து போன  பிரேமானந்தா இப்போது சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

'நான் இங்கே வந்த பிறகு அய்ந்து பேர் இறந்துட்டாங்க ராஜா. இங்கே நாமளே ஒரு பெட்ஷீட் வைத்திருக்கணுமாம். செத்துப்போயிட்டா, அதில் படுக்கவெச்சு நேரா மார்ச்சுவரிக்கு அனுப்பிடுவாங்களாம்... தோ பாருங்க அந்த பெட்ஷீட்...'' என்று காட்டியவர், ''அந்த அளவுக்கு உடல்நிலை மோசமா இருக்கிறவங்களைத்தான் இங்கே அனுமதிக்கிறாங்க ராஜா. ரெண்டு காலும் வீங்கிடுச்சு. என்னால் சரியா மூச்சுவிடக்கூட முடியலை. 'யாரிடமும் பேசக் கூடாத என்று டாக்டர் சொல்லி இருக்கார்'' என்று தட்டுத் தடுமாறி வார்த்தைகளை வெளியிட்டார் தன்னை நேர்காணல் காணவந்த விகடன் செய்தியாளர்களிடம். வேடிக்கை என்னவென்றால் அவரது வெளிநாட்டு பக்தர்கள் கடலூர் சிறைச்சாலைக்கு முன்னால் நின்று கொண்டு ஆண்டுக் கணக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். "சுவாமி கொலை செய்யவில்லை! பாலியல் வன்புணர்ச்சி செய்யவில்லை! அரசு அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டது" எனக் கண்ணீர் வடிக்கிறார்கள்!  இந்த நூற்றாண்டிலும் இப்படியான மூட பக்தர்கள் இருக்கிறார்கள்!

பக்தி, ஒழுக்கத்தை வளர்க்காது என்பதற்கு பிரேமானந்தா சாமியாரே எடுத்துக்காட்டு!

புதுக்கோட்டை செசன்சு கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரேமானந்தா சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். 1997ம் ஆண்டு தாக்கல் செய்த பிரேமானந்தா அப்பீல் மனு 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் சண்முகம் இ சொக்கலிங்கம் ஆகியோர் முன்பு இன்று பரபரப்பான இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 


  யாக்கை நிலையாமை

குடை நிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர்
நடைமெலிந்தோரூர் நண்ணிலும் நண்ணுவர்.

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக் கூழ் சாலை அடையினும் அடைவர் 51

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆள்வர் 52

குன்று அத்தனை இரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர் 53
 

எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு
கழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும் 54

“இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது”

என உணர்த்துகின்றாள். இதன் வழியாகத் தாமை செய்ய வலியுறுத்துவதையும் அறியலாம். உலகில் வாழும் மக்கள் அனைவரும் பட்டினியால் வருந்திச் சாகாமல் உணவளிக்க வேண்டும். இவ்வாறு உணவளிப்பவர்கள் தாம் உயிர் கொடுத்தவர் என்பதை, “மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணி 11 95-96) எனும் இவ்வரிகள் கூறுகின்றன.


 

  இன்றைய நாள் குறிப்பு (நொவெம்பர் 18, 2010)

கோயில்களில் உணவுப் பொருள்கள் வீணடிப்பு!

கோயில்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் என்பவற்றின் பெயரால் உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன.  எடுத்துக்காட்டாக திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபம் என்ற பெயரால் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கு  3500 கிலோ நெய் நெருப்பில் கொட்டப் பட்டு எரிக்கப்படுகிறது. ஆயிரம் மீட்டர் துணி வேள்வித் தீயில் எரிக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் இந்தியாவில் வீணடிக்கப்படுகிறதாம்.

நெய் சத்தான உணவு.  இந்தியாவில் 50  விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்து இன்மையால் சோகநோய்க்கு (Anemic)  ஆளாகியுள்ளனர். 

போதிய ஊட்டச் சத்து இல்லாமையால் 30 விழுக்காடு குழந்தைகள் எடைக் குறை வாகப் பிறக்கிறார்கள்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 75 விழுக்காடும், பெண்களில் 52 விழுக்காடும் இரும்புச் சத்துக் குறைவால் ரத்த சோகையால் பீடிக்கப்படுகின் றனர். மேலும் 5 வயதுக்குட்பட்ட 57 விழுக்காடு குழந்தைகள் வைட்டமின் ஏ குறைவால் பாதிக்கப்படுகின்றனர் என் றெல்லாம் ஒரு பக்கத்தில் புள்ளி விவரங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றன.

வறுமைக் கோட்டின் கீழ் என்ற வரையறை  நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.  உலக காப்பகத்தின் வரையறையின்படி மேம்பாடு அடையாத நாடுகளின் வறுமைக் கோடு என்பது நாளொன்றுக்கு ஒரு ஆள் வருமானம் ஒரு அமெரிக்க  டொலர் அல்லது ஆண்டொன்றுக்கு 365 அமெரிக்க டொலர்கள் ஆகும்.  இந்த வரையறையின் அடிப்படையில் 75 விழுக்காடு இந்தியர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாடுகிறார்கள்.  அதாவது 77 கோடி மக்கள் வறுமையில் உழல்கிறார்கள்! இது உலக வறுமையாளர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்!

இந்திய அரசின் கணிப்பின்படி வறுமைக் கோட்டின் கீழ் எல்லை நகர்ப்புறங்களில் மாதம் ரூபா 296. ஊர்ப்புறங்களில் மாதம் ரூ276. அதாவது நாளொன்றுக்கு ரூபா 10 மட்டுமே.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் மதப் பண்டிகை என்ற பெயரால் 3500 கிலோ நெய் பாழடிக்கப்படுகிறது. ஒரே ஒரு கோயிலில் நாசமாக்கப்படும் நெய்யின் அளவு இது. ஊர்தோறும் கார்த்திகை பண்டிகைக்காக இவ்வாறு வீணாக்கப்படும் உணவுப் பொருள்களின் அளவைக் கணக்கிடுவது மிகவும் கடினமாகும்.  நெய் மட்டுமல்ல வெவ்வேறு பெயர்களில் நடக்கும் வேள்வித் தீயில் கொட்டப்படும் உணவு, பட்டாடை போன்றவற்றையும் கணக்கிட முடியாது. உலக அமைதிக்கு வேள்வி என்று சொல்லி தீமூட்டி நெய்யைக் கொட்டுவதும், அதில் பட்டுப் புடவைகளைப் போட்டுப் பொசுக்குவதும் அன்றாட நிகழ்ச்சி ஆகும்.  ரொறன்ரோ கோயில்களிலும் அபிசேகம் என்ற பெயரில் பால், தயிர், பழங்கள், இளநீர் வீணாக்கப்படுகின்றன!


 

இன்றைய நாள் குறிப்பு (நொவெம்பர் 17, 2010)

உள்ளுரில் தடைசெய்யப்பட்ட அஸ்பெஸ்ரஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!

திருமகள்

உள்ளுரில் தடைசெய்யப்பட்ட அஸ்பெஸ்ரஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி! என்ற தலைப்பில் கடந்த நொவெம்பர் 'இன்றைய நாள் குறிப்பு' என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தேன்.  அதில் சொல் ஒன்று செயல் ஒன்று நடப்பவர்களைச் சித்தரிப்பதற்கு பாதிரியார்   மனைவியைப் பார்த்து "ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே! உனக்கல்லடி என் கண்ணே" என்ற கதையை மேற்கோள் காட்டினேன். 

அந்தப் பாதிரியார் மாதிரி கனடா அஸ்பெஸரஸ்  பயன்பாட்டை உள்நாட்டில் 99 விழுக்காடு தடைசெய்து விட்டது. ஆனால் அதே அஸ்பெஸ்ரை கனடா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இராக், ஆப்கனிஸ்தான் போன்ற மூன்றாவது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது!  இப்படிக் கனடா ஏற்றுமதி செய்யும் அஸ்பெசின்  எடை ஆண்டொன்றுக்கு 500,000 மீட்றிக் தொன் ஆகும். உள்ளுரில் 6,000  மீட்றிக் தொன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அஸ்பெஸ்ட் பயன்பாடு நுரைஈரல் புற்றுநோயை உண்டாக்குகிறது. அஸ்பெஸ்டை உடைக்கும் போதோ, உராயும் போதோ அதிலுள்ள நார் காற்றில் கலந்து மூச்சை  இழுக்கும் போது நுரைஈரலில் ஒட்டிக் கொள்கிறது" என்று எழுதியிருந்தேன்.

என்டிபி கட்சி உடல்நலத்துக்கு கேடு செய்யும் இந்த அஸ்பெஸ்ரஸ்  ஏற்றுமதியை தடைசெய்யுமாறு பெரிய இயக்கம் ஒன்றை நடத்துகிறது.  அதன் கேடுகளை விளக்கி ஒட்டாவா சன், எட்மன்ரன் யேர்னல் ஆகிய இரண்டு நாளேடுகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்தது.  நூற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள்,  நல்வாழ்வு ஆதரவு அமைப்புக்கள் அந்த விளம்பரத்தை வழிமொழிந்திருந்தன. ஆனால் கார்ப்பர் அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில் அஸ்பெஸ்டின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.

முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும் அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பின் நிற்பதில்லை.  முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமை பற்றி உலகுக்கு உபதேசம்!

கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம்  செய்கிறது. ஆனால்  உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும் பொருளை -  ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ  நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீது படையெடுத்து இலட்சக்கணக்கில்மக்களை கொன்று குவித்தது. இப்போது  ஆப்கனிஸ்தான் மீது படையெடுத்து மக்களைக் கொன்று குவிக்கிறது! 

உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில் அஸ்பெஸ்டின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.

முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும் அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பின் நிற்பதில்லை.  முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமைப் பற்றி உலகுக்கு உபதேசம்!

கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம்  செய்கிறது. ஆனால்  உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும் பொருளை -  ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ  நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீதும் ஆப்கனிஸ்தான் மீதும் படையெடுத்து மக்களைக் கொன்று குவிக்கிறது!


 இன்றைய நாள் குறிப்பு (நொவெம்பர் 17, 2010)

உள்ளுரில் தடைசெய்யப்பட்ட அஸ்பெஸ்ரஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!

திருமகள்

ஒரு ஊரிலே ஒரு பாதிரியார் இருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர் தேவாலயத்தில் பிரசங்கம் செய்வார். அப்போது பாதிரியாரின் மனைவி முன்வரிசையில் இருந்து அவரது பிரசங்கங்களை செவிமடுப்பார். அப்படி ஒரு நாள் பிரசங்கம் செய்யும் போது கொல்லாமையின் சிறப்பைப் பற்றிப் பாதிரியார் பேசினார். உயிர்களைக் கொன்று உண்பது பாபம் என்றார்.  தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பிய பாதிரியார் மதிய உணவு உண்பதற்கு உட்கார்ந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கமாகப் பரிமாறப்படும் கோழிக்கறியை கோப்பையில் காணோம். அவர் முகத்தில்  ஏமாற்றம்.  பாதிரியார் மனைவியைக் கேட்டார். "என்ன இன்று கோழிக் கறியைக் காணோம்?"  மனைவி சொன்னார் "நீங்கள்தான் உயிர்களைக் கொல்வது பாவம். அந்தப் பாவத்தை நாம் செய்யக்கூடாது என்று இன்று காலை பிரசங்கம் செய்தீர்களே!  அதனால் கறிசமைப்பதற்கு கடகத்தால்  மூடி வைத்த கோழியை திறந்து விட்டு விட்டேன்" என்றார். திகைத்துப் போன பாதிரியார்  உடனே மனைவியைப் பார்த்து "ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே! உனக்கல்லடி என் கண்ணே" என்றார்.

இந்த ஊருக்குச் சொல்லும் பாதிரியார் மாதிரி கனடா அஸ்பெஸரஸ்  பயன்பாட்டை உள்நாட்டில் 99 விழுக்காடு தடைசெய்து விட்டது. ஆனால் அதே அஸ்பெஸ்ரை கனடா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இராக், ஆப்கனிஸ்தான் போன்ற மூன்றாவது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது!  இப்படிக் கனடா ஏற்றுமதி செய்யும் அஸ்பெசின்  எடை ஆண்டொன்றுக்கு 500,000 மீட்றிக் தொன் ஆகும். உள்ளுரில் 6,000  மீட்றிக் தொன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அஸ்பெஸ்ட் பயன்பாடு நுரைஈரல் புற்றுநோயை உண்டாக்குகிறது. அஸ்பெஸ்டை உடைக்கும் போதோ, உராயும் போதோ அதிலுள்ள நார் காற்றில் கலந்து மூச்சை  இழுக்கும் போது நுரைஈரலில் ஒட்டிக் கொள்கிறது.

என்டிபி கட்சி உடல்நலத்துக்கு கேடு செய்யும் இந்த அஸ்பெஸ்ரஸ்  ஏற்றுமதியை தடைசெய்யுமாறு பெரிய இயக்கம் ஒன்றை நடத்துகிறது.  அதன் கேடுகளை விளக்கி ஒட்டாவா சன், எட்மன்ரன் யேர்னல் ஆகிய இரண்டு நாளேடுகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்தது.  நூற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள்,  நல்வாழ்வு ஆதரவு அமைப்புக்கள் அந்த விளம்பரத்தை வழிமொழிந்திருந்தன. ஆனால் கார்ப்பர் அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில் அஸ்பெஸ்டின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.

முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும் அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பின் நிற்பதில்லை.  முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமை பற்றி உலகுக்கு உபதேசம்!

கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம்  செய்கிறது. ஆனால்  உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும் பொருளை -  ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ  நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீது படையெடுத்து இலட்சக்கணக்கில்மக்களை கொன்று குவித்தது. இப்போது  ஆப்கனிஸ்தான் மீது படையெடுத்து மக்களைக் கொன்று குவிக்கிறது! 

உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில் அஸ்பெஸ்டின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.

முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும் அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பின் நிற்பதில்லை.  முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமைப் பற்றி உலகுக்கு உபதேசம்!

கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம்  செய்கிறது. ஆனால்  உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும் பொருளை -  ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ  நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீதும் ஆப்கனிஸ்தான் மீதும் படையெடுத்து மக்களைக் கொன்று குவிக்கிறது!

இன்றைய நாள் குறிப்பு (நொவெம்பர் 15, 2010

மகிந்தாவின் கழுத்தில் கத்திவிழா விட்டாலும் அது மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது!

இந்த மாதம் முதலாம் நாள்  இஸ்ரேல் நாட்டு புலனாய்வு  அணு ஆற்றல் அமைச்சர் டான் மெரிடோர் இலண்டனுக்குப் போக இருந்தார். ஆனால் அவரைக் கைதுசெய்யப்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட செய்தி அறிந்து தனது பயணத்தை விலக்கிக் கொண்டார். இவர் மே 31 இல்  காசாவுக்கு உதவிப் பொருட்களை  ஏற்றிச் சென்ற Mavi Marmara  என்ற கப்பல் மீது இஸ்ரேலிய  அதிரடிப்படை நடத்திய தாக்குதலில் இவருக்கும் பங்குண்டு என்று கூறப்பட்டது. இந்தத் தாக்குதலில் 9 துருக்கி செயல்வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதே கதி  2009 ஆண்டு இலண்டன் செல்ல  இருந்த இஸ்ரேலிய  வெளியுறவு அமைச்சர் லிவினி என்பவருக்கும் ஏற்பட்டது.

பிரித்தானியாவில் இரண்டு வகை சட்டங்கள் உண்டு. ஒன்று அந்த நாட்டுச் சட்டங்கள். மற்றது உரோம் உடன்படிக்கைச் சட்டம். இந்த இரண்டுவகைச் சட்டங்களையும் பிரித்தானியாவைக் கட்டுப்படுத்துகிறது.

உரோம்நாட்டு உடன்படிக்கைச் சட்டத்தின் கீழ் யார் நடைவடிக்கை எடுக்கலாம்?

1) உரோம் உடன்படிக்கையில் கையெழுத்த நாடு முறையிட்டால்.

2) பன்னாட்டுப் பாதுகாப்பு அமைதி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அவை தீர்மானம் நிறைவேற்றினால்.

3) பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடருநர்.

சுடான் நாட்டு ஆட்சித்தலைவர் ஒமார் பசீருக்கு எதிராக அமெரிக்காதான் பாதுகாப்பு அவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.  அமெரிக்கா நீங்கலாக இதுவரை இந்தச் சட்டத்தின் கீழ் உகண்டா, கொங்கோ, வட உகண்டா, கென்யா மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு நாடுகள் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு முறையிட்டதன் பலனாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் வழமைவாத - மக்களாட்சி கூட்டணி அரசின் தலைமை அமைச்சர்  உரோம் உடன்படிக்கைச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக  அண்மையில் அறிவித்துள்ளார். அதாவது ஆட்சித்தலைவர்கள், தலைமை அமைச்சர்கள் அரச பயணம் மேற்கொண்டு வரும்போது அவர்களைக் கைது செய்யும் உரிமையை இல்லாது செய்ய பிரித்தானிய தலைமை அமைச்சர் முயற்சிக்கிறார். இதன் பின்னால் இஸ்ரேல் நாட்டின் அழுத்தம் இருப்பது பற்றி சொல்லத் தேவையில்லை!

மகிந்தா இராசபச்சே தனது பயணத்தை வேலை நெருக்கடி காரணமாகவே ஒத்திப் போட்டுள்ளதாக சிறீ லங்கா அரசு சொல்கிறது. அது சரியாகவும் இருக்கலாம்.  இருந்தும் கைது செய்யக்கூடிய சாத்தியமும் அதனால் ஏற்படுகிற  மனப் பயமும் மகிந்த இராசபக்சேக்கு இருக்கவே செய்யும். கழுத்தில் கத்திவிழா விட்டாலும் அது தொங்கிக் கொண்டிருப்பதை அவர் காணாமல் இருக்க  முடியாது.


     இன்றைய நாள் குறிப்பு (நொவெம்பர் 12,2010)

 

"தெருநாயின் பாதுகாவலராக இருங்கள்"

இன்று எனக்கு மனிதநேய அவை (கனடா) இல் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தெரு நாய்களது வாழ்வைச் சிறப்புற உதவி செய்யுமாறு கேட்டிருந்தார்கள். 

"தெருநாயின் பாதுகாவராக இருங்கள்" என்பதுதான் இந்த அமைப்பின் முழக்கம்.

சில நாய்களின் படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். 

இந்த நாய்கள் கனடா நாட்டு நாய்கள் அல்ல. ஒரு நாய் பூட்டான் நாட்டைச் சார்ந்தது. 

அந்த நாய்க்கு pyometra என்ற தொற்று நோயாம். அந்த நோய்க்கு மருத்துவம் செய்யாதிருந்தால் அந்த நாய் இறந்திருக்கும். மருத்துவம் செய்தபடியால் அதன் உயிரைக் காப்பாற்றிவிட்டதாக இந்த அமைப்புப் பெருமிதப்பட்டுக் கொள்கிறது. 

பூட்டானில் உள்ள விலங்கு மருத்துவர்கள் கடந்த மாதத்தில் மட்டும் 900 தெருநாய்களைக் காப்பாற்றி இருக்கிறார்களாம். இதுவரைஇந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 15,000 தெருநாய்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பு இந்தியா, பிலிப்பையின்,கரிபீன், இலத்தீன் அமெரிக்கா மற்றம் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இருக்கும் தெருநாய்களையும் காப்பாற்ற செயற்படுகிறதாம். 

இந்தத் தொண்டு மிக நல்லதுதான். ஆனால் நாயிலும் மேலாக வாழும் மனிதர்களைப் பற்றி இப்படியான தொண்டு அமைப்புக்கள் பெரிதும் கவலைப்படுவதாக இல்லை. 

இந்தியாவில் பால் வெண்ணீறணிந்த பவள மேனியராம் சிவ பெருமான், பச்சைக் கொடியாம் பார்வதி தேவியும்  பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிகள், அஷ்ட வசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகந்தர்வர், சித்த வித்யாதரர், ஜனகஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புரு நாரதர், மற்றுமுண்டான தேவரிஷிகள் இருந்தும் அந்த நாட்டில் வறுமை, ஏழ்மை, நோய்நொடி தீர்ந்தபாடில்லை.   

உலக வங்கி, உலகெங்கும் வறுமையில் வாடும் மக்கள் குறித்த ஆய்வறிக்கையை அவ்வப்போது வெளியிடுகிறது. அந்த அறிக்கைப்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். இது ஏற்கெனவே தெரிந்த சங்கதி்தான். இரண்டாவதாக, அந்த அறிக்கை தரும் புதிய செய்தி என்னவெனில், உலக வங்கி, மக்களின் வாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டு, வறுமையின் அளவைக் கணக்கிடுகிறது என்பதுதான். 

உலக வங்கியின் ஆய்வு, நாள் ஒன்றுக்கு, ஒரு நபருக்கு 1.25 டாலர் வருவாய் என்னும் அளவுகோலின்படி வறுமையாளர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2005-ம் ஆண்டு விலைவாசி அடிப்படையில், இது நகர்ப்புறங்களில் 21 ரூபாய் 60 பைசா வருவாய்க்குச் சமம். கிராமப்புறங்களில் 14 ரூபாய் 30 பைசா வருவாய்க்குச் சமம்.

இந்த அளவுகோலின்படி, 2005-ல் இந்தியாவில் 42 சதவீத மக்கள் - அதாவது 42 கோடி மக்கள் வறுமையில் உள்ளார்கள் என்று ஆகிறது. இது அதிர்ச்சி தரும் செய்தி ஆகும். இது நாய்கள் மீது  காட்டப்படும் அக்கறை மனிதர்களுக்குக் காட்டப்படவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.


 இன்றைய நாள் குறிப்பு ( நொவெம்பர் 03, 2010)

வறியவர்களுக்குக் கொடுப்பதுதான் உண்மையான கொடை!

திருமகள்

கடந்த ஒக்தோபர் 17 ஆம் நாள் ரொறன்ரோவில் கறுப்பு யுலை 1983 : குற்றச்சாட்டு  என்ற நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்த நூலைப் பேராசிரியர் கோபன் மகாதேவா போன்றோரது துணையுடன் தமிழின  உணர்வாளர் அய்.தி. சம்பந்தன் தொகுத்து வெளியிட்டிருந்தார். நால் வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இலண்டனில் இருந்து ரொறன்ரோ வந்த சம்பந்தன் நூல் வெளியீடு தொடர்பாக அவரது உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாது கடுமையாகப் பாடுபட்டார். வானொலிகளில் நூல்பற்றிய தரவுகளைக் கொடுத்தார். தன் கைப்பட 250 நண்பர்கள், உறவினர்கள் என  அழகாக அச்சடித்த அழைப்பிதழ்களை அஞ்சலில் அனுப்பியிருந்தார். நூல் வெளியீட்டு விழா பதாதையைக் கண்ணைக் கவரும் விதத்தில் வடிவமைத்திருந்தார். 250 விருந்தினர்களுக்கு சிற்றுண்டி தேநீர் தயாராக வைத்திருந்தார்.  

நூல் சரி, அது தொடர்பான வெளியீட்டு ஏற்பாடு சரி எதுவானாலும் சம்பந்தன் எதையும் திருத்தமாகவும் நேர்த்தியாகவும் செய்யக் கூடியவர் எனபது துலாம்பரமாகத்  தெரிந்தது. இருந்தும் நூல் வெளியீட்டு விழாவுக்கு அதிகபட்சம்  75 உணர்வாளர்கள் மட்டும் வருகை தந்திருந்தார்கள்! விழாவுக்குச்  செலவான பணம் திரும்பி வரவில்லை. ஒரு காரணம் நூலின் விலை படி ஒன்று 20 கனடிய டொலர் மட்டுமே! எனவே நூல் விற்பனையாலும் கூடிய பணம் சேரவில்லை. சேரவும் வாய்ப்பில்லை. இதுவே ஒரு திருமண விழா அல்லது பூப்பு நீராட்டு விழா என்றால் அழைத்தவர்கள் எல்லோரும் தவறாது வந்திருப்பார்கள். தலைக்கு குறைந்தது ஒரு நூறு வெள்ளிகள் ஆவது கொடுத்திருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது? இப்படியான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நினைப்போ அல்லது ஒரு நூலை பணம் கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும் என்ற எண்ணமோ எமது மக்களில் பெரும்பாலோருக்கு இல்லை என்பதாகும். 

எமது மக்களுக்கு எதற்குக் கொடுக்க வேண்டும் எதற்குக் கொடுக்கக் கூடாது என்பது தெரியாமல் இருக்கிறது. ஒரு அந்தியேட்டி என்றால் இரண்டு மூன்று பிராமணர்களைக் கூப்பிட்டு புண்ணியதானம் செய்து அவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி மூட்டைகள், தானியங்கள், காய்கறி, வேட்டி, பாதணி, குடை, பாய், தட்சணை எனக் கொடுக்கிறார்கள். இதே பேர்வழிகள் வன்னியில் கஞ்சிக்கு ஏங்கும் மக்களுக்கு ஒரு சதமேனும் கொடுக்க மாட்டார்கள்.  பிராமணர்களுக்குக் கொடுத்தால் அது மேல் உலகத்தில் இருக்கும் தங்கள் தாய், தந்தையர்களுக்குப் போய்ச் சேரும் என்ற மூட நம்பிக்கைதான் அதற்குக் காரணம்.  பசித்தவர்களுக்குப் புசிக்கக் கொடுத்தால் அதனால்  புண்ணியமில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.

இன்று ஒரு செய்தி படித்தேன். சுவிஸ்லாந்து நாட்டில் வாழும்  க.மணியழகன் தனது தாயாரின் நினைவாக  போரினால்  பாதிக்கப்பட்ட   அய்ந்து பள்ளிக்கூட மாணவர்களுக்கு மிதிவண்டிகளை  அன்பளிப்புச் செய்துள்ளாராம்.  புங்குடுதீவில் பிறந்தவரும் வட்டக்கச்சியில் வாழ்ந்தவருமன மணியழகன் தற்போது சுவிஸ் நாட்டில் (3014 Bern)  வாழும்  சுவிஸ்வாழ் வட்டக்கச்சி இராமனாதபுரம் மக்கள் ஒன்றியத்தின் செயல்குழு உறுப்பினர் ஆவார்.

மணியழகன் போல் பாதித் தமிழர்கள் சிந்தித்துச் செயலாற்றினால் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும் வன்னி மக்களைக் காப்பாற்ற முடியும்.  ஆயிரக்கணக்கில் ஆடம்பரமாகச் செலவு செய்து திருமணங்கள், தேர், தீர்த்தத் திருவிழாக்கள் செய்யும் தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

படமாடும் கோயில் பரமர்க்கு ஈவதிலும் நடமாடும் கோயில் நம்பர்க்குக் கொடுத்தால் அது பரமர்க்குச் சென்று சேரும் என திருமந்திரத்தில்  திருமூலர் அறிவுறுத்துகிறார்.  திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் எட்டாவது திருமுறையகச் சேர்க்கப்பட்டுள்ளது தெரிந்ததே.

    படமாடும்  கோயில்  பரமர்க்கொன்று  ஈயில்

    நடமாடும்  கோயில்  நம்பர்க்  கங்கா

    நடமாடும்  கோயில்  நம்பர்க் கொன்று  ஈயில்

    படமாடும்  கோயில்  பரமர்க் கங்காகும்       (திருமந்திரம்)           

 இன்றைய நாள் குறிப்பு ( செப்தெம்பர் 26, 2010)

அமெரிக்காவில் உள்ள Houston நகரில் அய்யன்னா அவையின் அமர்வுக்கு வந்த மகிந்தா இராசபச்சேக்கும் அங்கு வாழும் சிங்களவர்களால் ஒரு வரவேற்று விருந்து அளிக்கப்பட்டது. வேற்று இனத்தவர்களும் விருந்தில் கலந்து கொண்டார்கள். மகிந்தாவுக்கு கண்டிய நடனத்தோடு வரவேற்கப்பட்டார். பின்னர் அவரைப் பாராட்டி சிலர் பேசினார்கள். அதில் George R Willy  என்ற தமிழரும் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனைவி பதுளையைச் சேர்ந்தவர்.  தொழில்முறையில் இவர் ஒரு வழக்கறிஞர்.  ஆனால் அவர் பேசியது பாராட்டாக இருக்கவில்லை. வஞ்சகப் புகழ்ச்சியாக இருந்தது. மகிந்தாவை மாண்புமிகு அவைத்தலைவர் என்று அடிக்கடி விளித்தார்! எந்த அரசியல்வாதியும் பேசத் துணியாத கருத்துக்களை அவர் பேசியது பலரை வியப்பில் ஆழ்த்தியது. இதே பேச்சை அவர் சிறீலங்காவில் பேசியிருந்தால் தலை சீவப்பட்டிருக்கும். குறைந்தது வெலிக்கடைச் சிறையில் அலுமினியத் தட்டில் சாப்பாடு கிடைத்திருக்கும்.

மகிந்தா இராசபக்சேயை எல்லாளனை வெற்றி கொண்ட 21 ஆம் நூற்றாண்டின் துட்டகைமுனுவோடு ஒப்பிட்ட  ஜோர்ஜ் வில்லி,  துட்டகைமுனு எல்லாளனைப் போரில் வென்றாலும் அவனது வீரத்தைப் பாராட்டி எல்லாளனுக்கு நினைவுச் சின்னம்  எழுப்பியதை நினைவூட்டினார். பிரபாகரனுக்கும் மகிந்தர் நினைவுச் சின்னம் எழுப்பக் கேட்பாரோ என்று பயந்தவர்களுக்கு அப்படிக் கேட்காமல்   1958 ஆம் ஆண்டு இனக் கலவரம், பல்கலைக்கழக நுழைவில் தமிழர்களுக்கு தரைப்படுத்தல்,  சம ஒதுக்கீடு என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, மகிந்தரை தனது இருக்கையில் நெளிய வைத்தார். மிகுந்த சங்கடத்தில் இவர் ஆழ்த்தியதை எவராலும் மறுக்கமுடியாது."தமிழர்களை இரண்டாந்தர குடிமக்கள் என அவர்களை நினைக்க வைத்துவிடாதீர்கள். அவர்களது சமயத்துக்கு மதிப்பிளியுங்கள். அவர்களது மொழிக்கு மதிப்பளியுங்கள். தமிழர்களைப் பற்றி மாண்பு மிகு ஆட்சித்தலைவர் ஒன்றை அறிந்து வைத்திருக்க வேண்டும்.  அவர்களுக்கு அவர்களது மொழி கடவுள் போன்றது! நீங்கள் ஒரு பிரபாகரனை வென்றிருக்கலாம், ஆனால் அது போல பலர் தோன்றலாம், அவர்கள் அவ்வாறு தோன்றுவதும் தோன்றாமல் இருப்பதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.

இந்த வழக்கறிஞருக்கு இருக்கிற துணிச்சலும், மொழிப்பற்றும் துணிச்சலும் எத்தனை புலம்பெயர் வழக்கறிஞர்களுக்கும் மருத்துவர்களுக்கும் அறிவுப் பிழைப்பாளர்களுக்கும்  ஏனையவர்களுக்கும் உண்டு?  அவரது ஆங்கிலப் பேச்சு கீழே தந்துள்ளேன். படித்து விட்டு மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுங்கள்!


 மகிந்தவுக்கு ஆப்புவைத்த அமெரிக்க தமிழ் வழக்கறிஞர்

நாட்டை இணைத்த நல்ல ஜனாதிபதி என ஆரம்பித்த வரவேற்புரை, சிறிது சிறித்தாக போரையும், தமிழர்கள் படும் அவஸ்தையையும் விவரித்தன. அமெரிக்கர்களும், வேற்றின மக்கள் பலரும் கலந்துகொண்ட இன் நிகழ்வில், அவர் உரையை நிறுத்தமுடியாமல் ஏற்பாட்டாளர்கள் திண்டாடியதாக அறியப்படுகிறது. அவரை மேடைக்கு அழைக்கும்போது, ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறோம் என்று கூறி அழைத்திருந்தார்கள் ஏற்பாட்டாளர்கள். இருப்பினும் வரவேற்புரையை ஜோர்ஜ் வில்லி நீண்டநேரமாக உரையாற்றி தான் சொல்லவந்த அனைத்தையும் சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில், துட்டகைமுணுவுக்கு ஒப்பாக ஜனாதிபதியை ஒப்பிட்ட ஜோர்ஜ் வில்லி, துட்டகைமுணு, எல்லாளனை போரில் வென்றாலும் பலமான எதிரியை வீழ்த்தியமைக்காவும், எல்லாளன் வீரத்தைப் பாராட்டியும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார், ஒரு கணம் எங்கே இவர் விடுதலைப் புலிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கச் சொல்லிவிடுவாரோ என பலர் திகைப்பில் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. 1958ம் ஆண்டு கலவரம், பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு சம ஒதுக்கீடு என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதையை மிகுந்த சங்கடத்தில் இவர் ஆழ்த்தியதை எவராலும் மறுக்கமுடியாது.

மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி விழா ஏற்ப்பாட்டாளரை அடிக்கடி உத்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். கடைசியாக இனி பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களின் வெள்ளைச் சட்டையில் இரத்தம் படியக்கூடாது, நீங்கள் ஒரு பிரபாகரனை வென்றிருக்கலாம், ஆனால் அது போல பலர் தோன்றலாம், அவர்கள் அவ்வாறு தோன்றுவதும் தோன்றாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது என அவர் பேசிமுடிக்க , என்ன நடந்தது என சற்றும் புரியாமல், அமெரிக்கர்களும், வேற்றின மக்களும் எழுந்து நின்று கைதட்டியதே மிகக் கொடுமையான விடையமாக ஜனாதிபதிக்கு இருந்தது. அசடுவழியும் முகத்தை ஒருவாறு சீர்திருத்திக்கொண்டு, மற்றைய நிகழ்ச்சிகளுக்கு நகர்ந்தார் ஜனாதிபதி. இருந்தாலும் அவர் இந்த அவமானத்தை இலகுவில் மறக்கப்போவது இல்லை. 

விழா முடிவில் யாரை எல்லாம் திட்டித் தீர்த்தாரோ தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கா அவருக்கு பல அவமரியாதைகளை கொடுத்த நாடாக அமைந்துவிட்டது.... முழத்திற்கு முழம் தனது உரையில் "யுவர் எக்சலன்ஸி"( மாண்புமிகு) "யுவர் எக்சலன்ஸி" your excellency என்று ஜோர்ஜ் வில்லி கதைத்ததால், மகிந்த அவர் என்ன கதைக்கிறார் என்பதைக் கூட விரைவாக சுதாரித்துக்கொள்ளவில்லை ! 

அமெரிக்க செனட்டர், ஜனாதிபதி மகிந்த, புத்திஜீவிகள், கல்விமான்கள், வேற்றின மக்கள் என பலர் கலந்துகொண்ட இவ் விழாவில் மிகத் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ஜோர்ஜ் வில்லி அவர்களை நாம் பாராட்டாமல் இருக்கவே முடியாது. இதைத் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்பார்களோ?

Mr.GEORGE R WILLY

Your Excellency, Mr. Rajapaksa, Hon Congressmen, General Sheela Jackson Lee. Sheela thanking for making this, really appreciate this and Consul General Laura, thank you for making this.

Distinguished guests, Ladies and Gentlemen, welcome Your Excellency to this great city. It is an ignore the oak trees and mocking birds we could mitake this for Sri Lanka. It is in Sri Lanka that I was born. Our grand fathers and grand mothers and my mother and aprents of my wife were all buried under the sacred soil of my motherland. I grew up Your Excellency, in Jaffna and moved to Colombo when I was only 10 years old. My wife is from Badulla and grew up in Diyatalawa where her father was a well a respected captain in the army.

I smelt the sweetness of Magoza trees in Jaffna and taste of the Red Jumbu fruits and left red stains on my white shirt as I walked to school in Colombo. I know the lure of Jack fruits ripening on the trees as crows begin to open them. I have seen the bright colour of pandals during Wesak and shamelessly ate food at Dansala meant for the poor. And I have heard the chanting of Kovils and inhaled the smell of jasmine and Joss sticks. I have heard the bell of All Saint’s church as I assisted Father Herath during Mass.

But since I left Sri Lanka in 1975 there has been such pain, such sorrow and such agony. The mighty Mahaweli Ganga that usually brings its sacred water to the paddy fields spat out blood. Both the Sinhalese and Tamils. From up here in the United States I have watched the land of my forefathers descend from paradise deep into hell. No one can say with certainty whom is to blame but the time for blaming is gone for long.

Your Excellency, your power be descended from Dutugemunu and my people from Elara. Remember how Dutugemunu fought Elara on his Elephant Kandula and killed Elara. Dutugemunu of course still remembered for uniting Sri Lanka for the first time. But he is also remembered for something else. After defeating and killing Elara he built a monument for Elara out of respect for his worthy opponent. He ordered all the citizens of the land to stop, mount and pay respect to Elara. In so doing he not only showed what a great noble man he was. But also proved to be a great politician. He knew that He had to rule the Tamil people after the defeat of Elara.

Your Excellency, faith and fortune and your great political skill have placed you at a unique point in history. Children years to come, will read in their history books, that a great leader, a great warrior by the name of Mahinda Rajapaksa finally defeated the rebellion after nearly 25 years where several before him failed. They may even say that you are Dutugamunu of the 21 century. But it you want to wear Gamunu’s mantle Your Excellency, you will have to build a monument too. That monument does not have to be a Dagoba or a building. It will have to be new policy backed by laws to enforce.

Do not make the mistake that parts 58 riots. Do not hold back Tamils who want to get into Universities. Do not make the Tamils feel like they are second class citizens. Respect their religion, and respect their language. There is something about the Tamil people you need to know Your Excellency. To them their language is God. There are only few cultures in the world. Which has such devotion to the language. You were trained as a lawyer and in your early career you were a formidable defender of human rights. Now you have the popularity, you have the power of the hero, like Julius Caeser, returning to Rome from his conquests. No one can deny what you are, you and I read in law school. Then we have had to study the Soulbury Constitution. Ask the parliament to pass the required legislations. If you need my help I will give it free like many of this audience were. The Tamil people are naked and hungry looking for you to assure them that there is a place for them.

Make sure they have one. You killed [?] one Prabhakaran but do not let another grow. You cannot prevent another one with swords and guns. You can only do it with your heart and wisdom. Compassion truth and justice you learnt from Buddha are the only weapons you need. According to Dhamma Pada Buddha said that hatred does cease by hatred at any time. Hatred ceases by love. This is an old rule. That what the Buddha said.

Your Excellency as you leave this city and return to Sri Lanka, promise me that a 10 year boy walking to school tomorrow in his white shirt will have no other red stain than from Jumbu fruits. A morning crow will not open anything other than the jackfruit. That there is nothing else hanging from the Magoza trees.

Your Excellency return us to paradise, return us to paradise. Thank You 

NOTE: Dutugemunu never obtained help from China or India.


 

இன்றைய நாள் குறிப்பு (ஒக்தோபர் 15, 2010)

சிங்கள - பவுத்த இராணுவ மயமாகும் வடக்கு!

யாழ்ப்பாணத்தில் பல நாள்கள் நின்றுவிட்டு கனடா திரும்பிய ஒரு நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் யாழ்ப்பாணம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன். ஒரு பெருமூச்சுத்தான் பதிலாக வந்தது. "யாழ்ப்பாணத்து மக்கள் வாயைத் திறக்கப் பயப்படுகிறார்கள். அவர்களைக் குறை கூறிப் பயனில்லை. கண்ட கண்ட  இடமெல்லாம் சிங்கள இராணுவத்தினர்  துப்பாக்கியோடு நிற்கிறார்கள். அவர்களோடு மிண்ட முடியாது. மிண்டினால் அடுத்த நாள் இரவு வெள்ளை வான் வந்து வாசலில் நிற்கும் என்றார்.

 நாளொன்றுக்கு 50 கும் மேற்பட்ட  பேருந்துகளில் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்துக்கு படையெடுத்துச் செல்கிறார்கள். ஏ9  சாலையில் சிங்கள இராணவமே ஏகப்பட்ட உணவகங்களை இவர்களுக்காகத் திறந்து வைத்திருக்கிறது. வழிபடுவதற்கு அநேக பவுத்த விகாரைகளை சாலையின் இருபுறமும் கட்டி வைத்திருக்கிறார்கள். இவர்கள் சிங்களக் கிராமங்களில் இருந்து வருகிறார்கள். செலவுக்கு பணமும் கொடுத்து பேருந்துகளில் ஜாதிக ஹெல உறுமய, சிங்கள அங்காடி உரிமையாளர் சங்கம் போன்றவை அனுப்பிவைக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் 100,000 இலட்சம் சிங்கள இராணுவத்தினர் நிலைகொண்டு இருப்பதால் இப்படி வருகிறவர்களை இராணுவமே தனியார் வீடுகளிலும் துரையப்பா விளையாட்டு அரங்கிலும் தங்க வைக்கின்றன. வெறுமையாக  இருக்கும் வீடுகளை உடைத்து உட்சென்று தங்குவதும் நடைபெறுகிறது.  காலைக் கடன் எல்லாம் துரையப்பா விளையாட்டு அரங்கிலேயே நடைபெறுகிறது. கீரிமலைக்கத் தமிழர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றிப் போக முடியாது. ஆனால் சிங்களவர்கள் கீரிமலை, நிலாவரை, நயினாதீவு என்று எங்கும் சுதந்திரமாகப் போய்வருகிறார்கள்.  தமிழ்ப் பெண்கள் இரவானதும் வீடுகளில் பதுங்கி விடுகிறார்கள்.  இரவில் சிங்கள இராணுவத்தினரில் சிலர் வீடுகளுக்குள் புகுந்து பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். இரண்டொரு துணிச்சல் பேர்வளிகள் அவர்களைப் பிடித்துக் கட்டிப் பூசை போடுவதும் இடம் பெறுகிறது.

நல்லூர்த் திருவிழாவில் கந்து கொண்டவர்களில் பாதிப்பேர் சிங்களவர். மீதிப் பேரில் வெளிநாடுகளில் இருந்து செல்லும் நம்மவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். சிங்களவர்களின் படையெடுப்பால் பண்பாட்டுச் சீரழிவுக்கும்  பஞ்சமில்லை. முறையான திருமணப் பதிவு செய்யாதவர்கள் தொகை 379 பேர். பதின்ம வயதில் மணம் முடித்தோர் தொகை 184.  இவர்களில் 77 பேர்  கற்ப்பிணிகள்.   தாய் தந்தை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 444! யாழ்ப்பாணம் இப்படியென்றால் வன்னியில் நாளொன்றுக்கு 4 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்! இப்போது 1,500 சிங்களவர்கள் தாங்கள் 1983 ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் தங்களை மீள்குடியமர்த்த வேண்டும் என்றும் கச்சேரிக்கு முன்னால் நின்று அட்டகாசம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு சமைத்த உணவு மூன்று நேரமும் அரசாங்க   செலவில் கொடுக்கப்படுகிறது. அவர்களது தேவைகளைக் கவனிக்கச் சிங்கள அரசு கொழும்பில் இருந்து சமுர்த்தி அதிகாரிகளை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளது! இதே சமயம் வன்னியிலும் சம்பூரிலும் இடம் பெயர்ந்த மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கு ஆலாயப் பறந்கொண்டு இருக்கிறார்கள்!  அவர்களுக்கு எல்லாம் வல்ல எம்பெருமான் கஞ்சி வடிவில் காட்சி அளிக்கிறார்! வன்னிக்குச் சென்று தனது வட்டக்கட்சி வீட்டைப் பார்த்துவிட்டு கொழும்பு திரும்பிய ஒருவர்  "வன்னியை அடையாளம் காணமுடியாமல் இருக்கிறது. அங்கே தமிழர்களை விட சிங்களவர், சீனர், வெள்ளைக்காரர் அதிகம்"  என்றார். முன்னர் வடக்கில் மக்களைச் சுற்றி இராணுவம் இருந்தது. இப்போது இராணுவத்தைச் சுற்றி மக்கள் இருக்கிற கொடுமை நடக்கிறது.


 

இன்றைய நாள் குறிப்பு (ஒக்தோபர் 02, 2010)

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!

குடை நிழலிருந்து குஞ்சரம் (யானை) ஊர்ந்தோர் நடைமெலிந்து அயலூர் நண்ணினும் நண்ணுவர் என்பது அரசனுக்கு மட்டுமா? அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். படைத்தளபதிகளுக்கும் பொருந்தும்.  அய்ந்து நட்சத்திர பதக்கத்தோடு படைச் சீருடையில் ஆனை சேனை புடை சூழ வலம் வந்த சரத் பொன்சேகா இன்று வெலிக்கடைச் சிறையில் சிறைக் கைதிகள் அணியும் சீருடையோடு சிறு  கொட்டிலில் தரையே பாயாகப் பள்ளிகொள்கிறார்! சிறை வாசலில் வைத்து தான் அணிந்திருந்த வெள்ளை நிற தேசிய  உடையைக் கழற்றி மனைவி கையில் கொடுத்துள்ளார். காலை உணவு தேங்காய் சம்பலோடு பால்புக்கை! 

சிலப்பதிகாரம் பாடிய இளங்கோ அடிகள் காப்பியத்தின் மூன்று கருப் பொருள்களை  கதைத் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்துவார். 

அரசியல் பிழைத்தோர்க்கு

அறங் கூற்றாவதூ உம்

உரைசால் பத்தினிக்கு

உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்து வந்து

ஊட்டும் என்பதூ ஊம்…. ”

அவர் கருத்துப்படி (1) அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும். (2) உரைச்சால் பத்தினியை உயர்ந்தோரேத்துவர்.

(3) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

திருக்குறளில் வள்ளுவர் "ஊழ்'" என்னும் அதிகாரத்தில் 'ஊழிற் பெருவலி யாவுள' என்று கூறியவர் "ஆள்வினை உடைமை" என்ற அதிகாரத்தில் இடைவிடா முயற்சியை மேற்கொள்பவர் 'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் இளங்கோ அடிகள் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்"  என்கிறார். முன்வினையின் பயனை துய்த்தே ஆக வேண்டும் என்கிறார். விதி விலக்கு இல்லை.  வினை என்பது நல்வினை தீவினை இரண்டுமாகும்.  பகுத்தறிவுவாதிகள் முன்வினை பின்வினை என்று இல்லை இந்த உலகில் செய்கின்ற  வினைக்கு ஏற்ப எதிர்வினை இருக்கிறது என்கிறார்கள்.

 முன்னாள் படைத்தளபதி பொன்சேகாவால் எத்தனை தமிழ்ப் பெண்கள் தாலி இழந்தார்கள். கற்பை இழந்தார்கள். கண்ணீர்விட்டு கதறி அழுதார்கள். முள்ளிவாய்க்காலில் செல்லடிக்கும் குண்டு வீச்சுக்கும் 40,000 பொதுமக்கள் செத்து மடிந்தார்கள். 1996 ஆம் ஆண்டு செப்தெம்பர் 6 ஆம் நாள் கிருசாந்தி குமாரசுவாமி என்ற 18 அகவை பள்ளி மாணவி பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு மாலை சாவகச்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு மிதிவண்டியில் திரும்பும் போது வழியில் கைதடி சோதனைச் சாவடியில் நின்ற இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். தடுத்தி நிறுத்திய அவரை காவலரும் இராணுவத்தினரும் மாறி மாறி கூட்டாக வன்புணர்ச்சி செய்தார்கள். களைத்துப் போன அந்த  மான் குடிக்கத் தண்ணீர் கேட்து.  தண்ணீர் கொடுத்துவிட்டு மீண்டும் வன்புணர்ச்சியில் அந்த மிருகங்கள் ஈடுபட்ன.  பின்னர் கிருசாந்தியை உயிரோடு குழிக்குள் போட்டு மூடினார்கள். அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார், தம்பி, அயலவர் மூவரும் கொலை செய்யப்பட்டார்கள். அப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டுத் தளபதியாக சரத் பொன்சேகாதான் இருந்தார். எமது தாய்மார்களும், தங்கைமார்களும் அல்லல்பட்டு அழுத கண்ணீர் இன்று பொன்சேகாவைத் தேய்த்து சிறைக் கம்பிகள் எண்ண வைத்திருக்கிறது. மகிந்த இராசபக்சே, கோத்தபாய இராசபக்சே போன்ற கொடியவர்களுக்கும் இதே தண்டனை காத்திருக்கிறது என எதிர்பார்க்கலாம்.  (http://nakkeran.com/Krishanti96.htm)


 

இன்றைய நாள் குறிப்பு

செப்தெம்பர் 29,2010

ஜெயா தொலைக்காட்சியில் 'கண்ணாடி' என்ற சமூகச் சிக்கல் தொடர்பான ஒரு நிகழ்ச்சி புதன்கிழமை தோறும் ஒளிபரப்பாகிறது. இதனை அனு என்பவர் நெறிப்படுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பெண் தொழிலாளிகள் தொழிற்சாலைகளில் படும் அவலங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க  வேளாண் நிலங்களைக் கையகப்படுத்துவதால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு சுற்றாடல் மாசுபடுவது போன்ற தலைப்புக்கள் அலசப்படுகின்றன.  விவாதத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பொது  மக்களும் அந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

கடந்த இரண்டு புதன்கிழமைகளில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட பெண்களும், குற்றவியல் நிபுணர் (Criminologist) ஒருவரும் வழக்கறிஞர் அதே நேரம் மனிதவுரிமை அமைப்பின் பொறுப்பாளர் ஒருவரும் கலந்து கொண்டார்கள்.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் 25 எதிர்கொள்ளல் (encounter) கொலைகளில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

கலந்து கொண்ட பெண்களில் பலர் தங்கள் கணவன்மாரை  எதிர்கொள்ளலில் எப்படி காவல்துறையினர் போட்டுத் தள்ளிவிட்டார்கள் என்பதை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்கள்.  முதல் பேசிய  இரண்டு குழந்தைகளுக்குத் தாயான திருமதி கமலம் தனது கணவன் வெள்ளை ரவியை கர்நாடகத்தில் வைத்து தமிழ்நாடு காவல்துறை சுட்டுக் கொன்று விட்டதாகச் சொன்னார்.  2002 ஆம் தொடக்கம் தமிழ்நாடு காவல்துறைக்குப் பயந்து கர்நாடகத்தில் வெள்ளை ரவி வாழ்ந்து வந்திருக்கிறார். வழக்கம் போல வெள்ளை ரவி துப்பாக்கியால் சுட்டான் நாம் திருப்பிச் சுட்டோம் எனக்  காவல்துறை சொல்லி கதையை முடித்துவிட்டது. இதில் இன்னொரு கொடுமையும் நடந்தேறியுள்ளது.  வெள்ளை ரவிக்கு கன்னட மொழிபெயர்ப்பாளராக போன ஒருவர் அந்தக் கொலையைப் பார்த்து விட்டதால் அவரையும் காவலர்கள்  சுட்டுக் கொன்று விட்டார்கள்.  இப்படி காவல்துறையின் வன்முறைக்குப் பலியான நடுத்தர அகவைப் பெண்கள் சின்னக் குழந்தைகளோடு அடுக்கடுக்காக தங்கள் மனச் சுமையை இறக்கி வைத்தார்கள்.

இன்னொரு கடைக்காரரிடம் பழுதடைந்த போன வண்டியின் tyre யை செம்மைப்படுத்தித் தரும்படி ஒரு காவலர்  கேட்டிருக்கிறார்.  தனது குழந்தைக்கு காய்ச்சல் என்றும் தான் அவசரமாக மருத்துவமனைக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும் வேறு இடத்தில் திருத்த வேலையைச் செய்யுமாறு வினயமாகச் சொல்லியிருக்கிறார். அடுத்த நாள் அவரது தொழிற்கூடம் மூடும் நேரமாக  வந்த அந்த காவலர் அந்தக் கடயை மூடி திறவுகோலை பறித்துக் கொண்டு "காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்" என்று கூறிவிட்டுப் போய்விட்டார். அடுத்த நாள் காவல்துறைக்குப் போன கடைக்காரரை காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் அடித்து காலை முறித்துவிட்டார்கள். (காலைக் காட்டுகிறார்).

இன்னொருவர் பக்கத்து வீட்டுக்காரியின் மோதிரத்தை திருடிவிட்டதாகக் கூறி தன்னைப் பிடித்த காவலர்கள் காவல் நிலையத்துக் கொண்டு போய் அடித்துத் துவைத்து எடுத்து விட்டார்கள் என்றார். பின்னர் அந்த மோதிரத்தை அவர் எடுக்கவில்லை என்பது எண்பிக்கப்படுகிறது. நடந்தது இதுதான். மோதிரத்தை அந்த ஆள் களவெடுத்துவிட்டதாக காவல்துறையில் பொய் முறைப்பாடு செய்த  அந்தப் பெண்மணி காவலருக்கு கையூட்டாக ரூபா 500  கொடுத்திருக்கிறார்! அது வேலை செய்திருக்கிறது!

கேள்வி என்னவென்றால் பொற்கால ஆட்சி என வர்ணிக்கப்படும் கலைஞர் ஆட்சியில், திருக்குறளுக்கு உரை எழுதிய கருணாநிதி ஆட்சியில் இப்படியான கற்கால கொடுமைகள் எப்படி இடம்பெறுகின்றன?

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 

இறையென்று வைக்கப் படும்.

கலைஞர் உரை:

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.

மு.வ உரை: 

நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை: 

நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

Translation:

Who guards the realm and justice strict maintains, 

That king as god o'er subject people reigns.

தொல்காப்பியன்

கேபியை மாத்தையாவோடும் கருணாவோடும் ஒப்பிடுவது சரி என்று எனக்குப் படவில்லை. இந்த இருவரும் புலிகள் இயக்கத்தைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. ஆனால் கேபி அதனை முனைப்போடு செய்ய முற்பட்டார்.

கஸ்ரோவால் நியமிக்கப்பட்டவர்களை ஓரங்கட்டிவிட்டு தனது காலத்தில் தன்னால் நியமிக்கப்பட்டவர்களை அணுகி அவர்களது ஆதரவைப் பெற்றார். அதனால் புலம்பெயர் நாடுகளில் இரண்டு குழுக்கள் இப்போது மல்லுக்கு நிற்கின்றன.

முள்ளிவாய்க்காலுக்குப் பின் கேபி விட்ட அறிக்கைகள், நேர்காணல்கள் கஸ்ரோவையும் நெடியவனையும் வசை பாடுவதுபோல் அமைந்திருந்தது.

அண்மையில் கேபி புலிகளின் ஜென்ம விரோதியான டிபிஎஸ் ஜெயராசுக்கு கொடுத்த நீண்ட செவ்வி அவர் ஆயுதக் கொள்வனவில் புலியாக இருந்தாலும் அரசியலில் அவர் ஒரு கற்றுக்குட்டி என்பதை எண்பித்துள்ளார்.

வைகோவைச் சாடியதன் மூலம் தனக்கு  இராசதந்திரம் சூனியம் என்பதை எண்பித்துள்ளார்.  தலைவரால் மிகவும் நேசிக்கப்பட்ட வைகோவை பழிப்பதன் மூலம் அவர் எதைச் சாதிக்க நினைக்கிறார்?

இப்போது கூட தனது ஆதரவாளர்களோடு ஒரு மீள்வாழ்வு அமைப்பைத் தொடங்கி நிதி சேகரிக்கிறார். கனடாவில் அப்படியான முயற்சி நடக்கிறது.

பலர் கேட்கும் கேள்வி இருக்கிறது. கேபி ஏன் சைனயிட் எடுத்து தற்கொலை செய்யவில்லை?  முன்னைய போராளிகள், தளபதிகள் (குமரப்பா, புலேந்திரன், கிட்டு) செய்திருக்கிறார்கள்.

கேபியைப் பிடித்த சிறிலங்கா உளவுத்துறை அவரை நேரடியாக கோத்தபாயாவின் இல்லத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்போது தான் தனது உயிருக்குப் பயந்ததாகவும் ஆனால் வீட்டு வாசலில் தனது மனைவி வழிபடும்  புத்தர் சிலையைப் பார்த்த போது தனக்கு பயம் விட்டுப் போய்விட்டதாகச் சொல்கிறார். ஒரு மூத்த புலி உறுப்பினர் பேசுகிற பேச்சா இது?

தலைவர் தனது புத்திமதியைக் கேட்கவில்லை கேட்டிருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என்றெல்லாம் மனம் போன போக்கில் கேபி பேசுகிறார். ஒரு நாள் கூட களத்தில் ஆயுதத்தோடு நிற்காத கேபி தன்னை ஒரு மேதாவி என நினைத்துக் கொண்டு இப்படிப் பேசலாமா?

கேபி காலத்தில் பொறுப்பில் இருந்த பலர் நிதி் கையாடல் செய்திருக்கிறார்கள். கஸ்ரோதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களைப் பொறுப்பில் இருந்து விடுவித்தார். இப்படி நிதி கையாடல் செய்தவர்களில் சிலர்தான் அவரோடு இன்று கைகோர்த்து நிற்கிறார்கள்.

இனி ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கான காரணங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

1) ஒரு போரில் மனிதவளம், பொருள்வளம் உள்ள கட்சியே வெல்லும். இந்த வளங்கள் புலிகளிடம் இருக்கவில்லை. சிறிலங்காவிடம் இருந்தது.

2) கருணாவின் வெளியேற்றம் புலிகளைப் பலவீனப் படுத்தியது. தென் தமிழீழத்தை சிங்கள இராணுவம் இலகுவாகக்  கைப்பற்ற இது வழிவகுத்தது.  இதனால் கிழக்கில் காலூன்றி நின்ற இராணுவத்தை அங்கிருந்து எடுத்து வடக்குப் போர்முனையில் அரசு  பயன்படுத்தியது.

3) குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றாமல்  போர் நிறுத்தத்துக்கு போனது தவறான முடிவு. இது பின்னர் இராணுவம் வடக்கில் இருந்து தெற்காகவும் தெற்கில் இருந்து வடக்காகவும் புலிகளை நெருக்க வழிவகுத்தது.

4) ஒன்றல்ல ஒன்பதுக்கும் மேலான ஆயுதக் கப்பல்களை நடுக்கடலில் இழந்தது.

5) அமைதிக் காலத்தில் வன்னிக்குள் இராணுவ புலனாய்வுத் துறையின் ஊடுருவல்.  இராணுவத்தின் ஊடுருவித் தாக்கும் அணிகள் ஒட்டிசுட்டான் வரை ஊடுருவி இருந்தது.

6) 9 - 11  உலக ஒழுங்கில் ஏற்படுத்திய மாற்றத்தை சரியாகக் கணக்கில் எடுக்கத்  தவறியது.

7) 2005 ஆம் ஆண்டு ஆட்சித் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தது தவறான முடிவு. இதனால் இராசபக்சேயின் வெற்றிக்கு புலிகள் தங்களை அறியாமலே வழிவகுத்து விட்டார்கள். தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது அப்படிச் செய்தால் அது இராசபக்சேக்கு அனுகூலமாகப் போய்விடும் என்று இரா.சம்பந்தனது ஆலோசனையை புலிகள் நிராகரித்து விட்டார்கள்.  மேலும் மேற்குலக நாடுகளின் வெறுப்பையும் புலிகள் சம்பாதிக்க நேரிட்டது. தேர்தல் புறக்கணிப்பு வன்னி மக்களின் சுதந்திரமான மக்களாட்சி உரிமையை - தேர்தலில் பங்கு கொள்ளும் உரிமையை - புலிகள் தடுத்து விட்டார்கள் என மேற்குலக நாடுகள் நினைத்தன.   மகிந்தாவை ஒரு மூன்றாவது அரசியல்வாதிகளாகவே பார்த்தார்கள். அவகையும் அவரது  தேர்தல் அறிக்கையையும் சரியாகப் படிக்க புலிகள் தவறிவிட்டார்கள். இராசபக்சேயின் தேர்தல் அறிக்கை தமிழர்களது தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைக் கோரிக்கைகளை முற்றாக மறுத்தது.  இராசபகசே ஆட்கிக்கு வந்ததும் முதல் செய்த வேலை முன்னைய காலங்களில் இராணுவத்துக்கு கிடைத்த தோல்விக்குரிய காரண காரியங்களை தனது இராணுவ தளபதிகளோடு ஆராய்ந்தார்.  தோல்விக்குக் காரணம்-

(அ) ஆட்பற்றாக்குறை. அதை நிவர்த்தி செய்ய மேலும் 100,000 பேரை இராணுவத்துக்குச் சேர்த்தல்.  

(ஆ) நவீன ஆயுதங்களை இறக்குமதி செய்தல் என்ற முடிவுக்கு வந்தார். மிகுதி வரலாறாகிவிட்டது.

8) முன்னைய காலங்களில் (ஜே.ஆர். பிரேமதாசா, சந்திரிகா) இராணுவ முடிவுகளை தளபதிகள் ஆட்சித்தலைவரோடு பேசி அவரது கட்டளைக்கு இணங்கவே நடந்து கொண்டார்கள். ஆனால் இராசபக்சே காலத்தில் முன்னாள் இராணுவ தளபதியாகவும் இன்னாள் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாயாவே முடிவெடுத்தார். மகிந்த இராசபக்சே பெயருக்கு மட்டும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

9) முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் புலிகளைப் பலவீனப்படுத்தி பேச்சு வார்த்தை மேசைக்கு அவர்களைக் கொண்டுவருவதே இராணுவ நடவடிக்கைகளின் நோக்கமாக இருந்தது. ஆனால் இராசபக்சே காலத்தில் புலிகளை முற்றாக அழித்தொழிப்பதே இலக்காக இருந்தது. There was no half - hearted war. It was an all out war to destroy the LTTE.

10) இப்போது திரும்பிப் பார்க்கும போது சமாதானத்தை முன்னெடுக்க நோர்வேக்கு எந்தத் தகுதியும் இருக்கவில்லை. ஒரு சுண்டைக் காய் நாடு எப்படி சமாதானத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதை புலிகள் சிந்திக்கத் தவறிவிட்டார்கள். குறிப்பாக பாலஸ்தீனியர்களுக்கும் இஸரேலுக்கும் கைச்சாத்தான ஒஸ்லோ உடன்பாடு தோல்வியில் முடிந்தது பாடமாக இருந்திருக்க வேண்டும்.

11) புலிகளின் கட்டாய ஆட் சேர்ப்பு வெற்றியளிக்கவில்லை.  சிறார்களை படையில் சேர்த்தது மனிதவுரிமை அமைப்புக்களின் பலத்த கண்டனத்து வழி சமைத்தது.

12) வன்னியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த சிலர் (தயாமாஸ்டர். யோர்ஜ்,)  புலிவேடம் போட்டது இப்போது அம்பலமாகியுள்ளது.  

13) ஒரு நாடு விதி விலக்கில்லாமல் எல்லா நாடுகளும் வி.புலிகளின் அழிவை உள்ளுர விரும்பியது. இதில் இந்தியாவுக்கு முதலிடம்.

14) தமிழ்நாட்டு முதலமைச்சரின் காட்டிக் கொடுப்பு. பதவியா? இனமானமா என்ற கேள்வி எழுந்த  போது கருணாநிதி பதவி பெரிது என்று முடிவெடுத்தார். திமுக மத்திய அரசில் இருந்து வெளியேறி இருந்தால் இந்திய அரசு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும். பதவிகளைக்  கொடுத்து கருணாநிதியை சோனியா, மன்மோகன் சிங் போன்றோர் கருணாநிதியை விலைக்கு வாங்கிவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் அழிவின் உச்ச கட்டத்தில் இருந்த போது கருணாநிதி மகன், மகள், பேரன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகளைப் பெற சோனியாவோடு பேரம் பேசிக் கொண்டிருந்தார். 

இன்னும் சின்னதும் பெரியதுமான காரணங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பால்ராஜ், தமிழ்ச்செல்வன்  போன்ற மூத்த தளபதிகளின் இழப்பு. தேசத்தின் குரல் பாலசிங்கத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த மடல் உமக்கு மட்டும்.  மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.

 

நக்கீரன்


 

அன்புடையீர்
வணக்கம்
 

உண்மையில் நாம் நேசித்தது எமது தலைவனையும் மாவீரரையும் தாயகத்தையும்........

உங்களைப் போன்றவர்களோடு இதுவரை காலமும் பணிபுரிந்தோம் என்பதை எண்ணும் போது வெட்கப்படுகின்றோம், வேதனைப்படுகின்றோம்.
எனவே தயவு செய்து இவ்வாறான இழிநிலைத் தகவல்களை எமக்கு அனுப்பாதீர்கள். உங்களுக்கு சரி என்று தெரிவதை
 உங்கள் பாதையில் செய்யுங்கள் எம்மை மேலும் மேலும் மேலும் சாகடிக்காதீர்கள்.

நாங்கள் எமது நிலைப்பாட்டை தெளிவா இன்போதமிழில் கே.பி முடிந்து போன அத்தியாயம் என்ற பகுதியினூடாக உலகத்துக்கு சொல்லியுள்ளோம் ஒருபோதும் நாம் கண்னாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவும் குணமோ அல்லது  உண்மைக்குப் புறம்பாக வசை பாடியது கிடையாது . ஆனால் உண்மை இது தான். 

 நாம் ஒன்றும் கற்பனையில் இதை எழுதவில்லை. 

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் கடந்த ஒரு வருடத்துக்குள் நடந்தேறிய சம்பவங்களை வைத்துக் கொண்டும் சிங்களப் பேரினவாதிகள் காலம்காலமாக எமக்குத் தந்த படிப்பினைகளை வைத்துக் கொண்டும் தான் இதை குறிப்பிடுகின்றோம். 

உண்மையை உணர்ந்து இனியாவது ஒன்றுபடமாட்டோமா? என்ற ஆதங்கத்தில் பருடன் கருத்துப்போர் புரிந்தோம் அவ்வளவே?   

கானல்நீரைக் காண்பித்து கற்பனைக் கோட்டைகளை மனதில் கட்டிக் கொள்ளச் செய்யும்; எண்ணம் எம்மிடம் கிடையாது. 

எனவே நாங்கள் எம்மால் முடிந்ததை எமது மக்களுக்கு செய்லின்றோம் அது எங்கள் மனச்சாட்சிக்கு தெரியும்.

அன்புடன் உங்களிடம் வேண்டுவது,
 

இவ்வாறான தகவல்களை உங்களைப் போன்ற தெருப்பொறுக்கி விடுதலை வியாபாரிகளுக்கு மன்னிக்கவேண்டும் பாசிச வாதிகளுக்கு அனுப்புங்கள் எங்களை விட்டுவிடுங்கள். 

காரணம் நாங்கள் காஸ்ரோவை மதித்தோம் தேசியத்தலைவரை உயிரிலும் மேலாக நேசித்தோம் அவ்வளவுதான் எமக்கும் பாசிசவாதிகளான உங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு. 

ஒருவேளை நாம் காஸ்ரோவை புகழ்ந்திருந்தால் இன்று உங்கள் மொழியில் சொல்வதானால் இலட்சியவாதிகள். 

ஆனால் நாங்கள் ஒருபோதும் வரலாற்றுத் தவறு செய்யமாட்டோம். 

ஒன்று மட்டும் உங்களுக்கு தெழிவாகச் கொல்லுகின்றோம்,

என் ஆத்தாள் உன்மையான தமிழனுக்கு முந்தாணை விரித்துத்தான் என்னைப் பெற்றாள் ஈனப்பிறவிகள் இனத்தை விற்கினும் மானத்தமிழிச்சின் மகன் தலைவன் காட்டிய பாதையில் தொடர்ந்து நடப்பான். 

பிரபாகரம் மறையாது"! அது "அகிலம் எங்கும் வியாபிக்கும்"! 

தனிவழிப்பயணம் தான் தயங்கேன் ... எந்த இடர் வரினும் மயங்கேன் ........

 புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்...

உண்மையுடன்

தொல்காப்பியன்

முள்ளிவாய்க்கால் அழிவுகளின் முடிவு அல்ல அவலங்களின் திறவுகோல்?

விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில்: போராட்டத்தைப் பொறுத்தவரையில் கே.பி முடிந்து போன ஒரு அத்தியாயம் 


 இன்றைய நாள் குறிப்பு ( செப்தெம்பர் 26, 2010)

கல்விக்கு என்றே தனிக் கடவுள் உள்ள இந்தியாவில் பன்னாட்டு அளவில் வெளியிடப்பட்ட தர வரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் ஒரே ஒரு இந்திய கல்வி நிறுவனம் மட்டுமே இடம் பிடித்துள்ளது.  இலண்டனைச் சேர்ந்த குவாக்குரேலி சைமண்ட்ஸ் (க்யூ.எஸ்.) (Quacqaelli Symonds (Q.S)  என்ற நிறுவனம் பன்னாட்டு அளவில், கல்வி நிறுவனங்களின் தரத்தை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து, தர வரிசைப் பட்டியல் வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலில் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்க