கருநாடக மாநில அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி - சுரங்கத் தொழிலில்
செய்த தில்லு முல்லுகள் காரணமாக இப் பொழுது சிறையில் உள்ளார்.
ரூ. 45 கோடி செலவில் திருப்பதி ஏழுமலை யானுக்கு தங்கத்திலான பொருளைப்
பரிசாக அளித்தார்.
திருப்பதி அறங்காவலர்களிடம் பக்தர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். ஊழல்
செய்த பணத்தில் ஏழுமலையானுக்குக் காணிக்கை யாகக் கொடுத்த பொருளைத்
திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் ஆர்ப் பாட்டம் கூட
நடத்தியுள்ளனர்.
அப்படியெல்லாம் பார்த்தால் ஆகக்கூடிய காரியமா என்று பதில்
சொல்லியிருக்கிறார்கள்.
கோயிலுக்குள் கறுப்புப் பணத்தைத்தானே காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.
காசோலை யாக, வரைவோலையாக, முகவரியுடன் கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்
என்று சொன்ன தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் முத்தாய்ப்பாக ஒரு கருத்தை
முன்வைத்தார்.
கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் இருக்கிறது என்கிறார்கள். அவை பறிமுதல்
செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
அதற்கு முன் கோயில்களில் பதுங்கி இருக்கும் கறுப்புப் பணத்தைப் பறிமுதல்
செய்ய முன்வரவேண்டுமே! முன்வருவார்களா?
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ரோடுகளில் திருஷ்டி
பூசணிக்காய் உடைக்க போலீஸ் கமிஷனர் தடை உத்தரவு
பிறப்பித்து இருந்த நிலையில், களரம்பட்டி
பகுதியில் திருஷ்டி பூசணிக்காயால் ஏற்பட்ட
விபத்தில், ஒரு சிறுமி பரிதாபமாக இறந்தார்.
சேலம், களரம்பட்டி ஆஸ்பத்திரியான் காட்டை
சேர்ந்தவர் மாரியப்பன். இவரது பேத்தி நந்தினி(13).
மாரியப்பன் மொபட்டில் பேத்தியை ஏற்றிக் கொண்டு,
பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்துள்ளார்.
களரம்பட்டி மூன்றாவது சந்தில் வந்த போது, ரோட்டில்
உடைத்துக் கிடந்த திருஷ்டி பூசணிக்காய் மீது மொபட்
ஏறி உள்ளது. இதில், நிலை தடுமாறியதில், இருவரும்
தூக்கி வீசப்பட்டனர். ரோட்டில் விழுந்த நந்தினி
மீது, குப்பை அள்ளுவதற்காக வந்த மாநகராட்சி
டிராக்டரின் பின் பக்க டயர்கள் ஏறியது.
இந்த விபத்தில், நந்தினி சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,
சம்பத்குமார், செல்லப்பன் ஆகியோர் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் போது ரோட்டில்
திருஷ்டி பூசணிக்காய் உடைத்ததால் ஏற்பட்ட
விபத்துக்களில் மட்டும், 22 பேர் காயம் அடைந்து,
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ரோட்டில் திருஷ்டி
பூசணிக்காயை உடைப்பதற்கு கமிஷனர் சொக்கலிங்கம் தடை
விதித்த போதும், நேற்று அதிக அளவில் ரோடுகளில்
திருஷ்டி பூசணிக்காய்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
பதில்
சொல்வாரா
தென்னரசு ??
திமுக
தலைவரின்
திமுக
மகன்
ஸ்டாலினின்
திமுக
மகள்
செந்தாமரை
சென்னை
வேளச்சேரியில்
நடத்தும்
சன்ஷைன்
சீனியர்
செகண்டரி
பள்ளியில்
ஏன்
சமச்சீர்
தமிழ்க்
கல்வி
இல்லாமல்
மய்ய
அரசின்
சி.பி.எஸ்.சி.
பாடத்திட்டம்
வழங்கப்படுகிறது??
பள்ளிக்கு
அழகான
கதிரொளிப்
பள்ளி
என்று
தமிழ்ப்
பெயர்
ஏன்
இல்லை??
இந்தி
எதிர்ப்பில்
வளர்ந்த
இயக்கத்தின்
குடும்பப்பள்ளியில்
ஏன்
இந்தி
பாடமாக
வைக்கப்பட்டுள்ளது??
சமச்சீர்
தேவைதான் ...
ஆனால்
திமுக
அனுதாபிகளே
....... மாநில
சுயாட்சி,
இந்தி
எதிர்ப்பு,
சமச்சீர்
கல்வி
என்று
மேடைபோட்டு
பேசிக்கொண்டு
.... ஸ்டாலின்
குடும்பத்தினர்
நடத்தும்
சன்ஷைன்
பள்ளியில்
இருப்பதோ
மத்திய
அரசின்
சி.பி.எஸ்.ஈ.
(ச்ப்ஸே)
கல்வித்திட்டம்
!!! மேலும்
முதல்
வகுப்பிலிருந்து
நான்காம்
வகுப்புவரை
தமிழுடன்
இந்தியும்
கட்டாயம்
படிக்கவேண்டும்
!! !!!!! அவர்கள்
வலைத்தளத்தில்
பாருங்கள்
அய்யமிருந்தால்
!!!! Sunshine Chennai Senior secondary school follows the Central Board
of Secondary Examination module of syllabus # The second language for
the children of 1. Std I to IV is Tamil and Hindi both compulsorily #
இந்த
அநீதியையும்
எதிர்த்து
பள்ளியின்
வாயிலில்
நீங்கள்
ஏன்
போராட்டம்
நடத்தக்கூடாது ???
தமிழ்,
தமிழர்கள்
மீது
அதீத
அக்கறையுள்ளதாக
சொல்லிக்கொள்ளும்
கலைஞர்
டீவீ,
சன்
டீவீயெல்லாம்
ஏன்
மத்த
டாண்ஸ்,
உடாண்ஸ்,
சீரியல்
எல்லாத்தையும்
ஒரு
வாரம்
நிறுத்திவிட்டு,
சமச்சீர்
கல்வி
பற்றிய
நிகழ்ச்சி
மட்டும்
போட்டு
விழிப்புணர்ச்சி
ஏற்படுத்தக்கூடாது
>???
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ரோடுகளில் திருஷ்டி
பூசணிக்காய் உடைக்க போலீஸ் கமிஷனர் தடை உத்தரவு
பிறப்பித்து இருந்த நிலையில், களரம்பட்டி
பகுதியில் திருஷ்டி பூசணிக்காயால் ஏற்பட்ட
விபத்தில், ஒரு சிறுமி பரிதாபமாக இறந்தார்.
சேலம், களரம்பட்டி ஆஸ்பத்திரியான் காட்டை
சேர்ந்தவர் மாரியப்பன். இவரது பேத்தி நந்தினி(13).
மாரியப்பன் மொபட்டில் பேத்தியை ஏற்றிக் கொண்டு,
பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்துள்ளார்.
களரம்பட்டி மூன்றாவது சந்தில் வந்த போது, ரோட்டில்
உடைத்துக் கிடந்த திருஷ்டி பூசணிக்காய் மீது மொபட்
ஏறி உள்ளது. இதில், நிலை தடுமாறியதில், இருவரும்
தூக்கி வீசப்பட்டனர். ரோட்டில் விழுந்த நந்தினி
மீது, குப்பை அள்ளுவதற்காக வந்த மாநகராட்சி
டிராக்டரின் பின் பக்க டயர்கள் ஏறியது.
இந்த விபத்தில், நந்தினி சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,
சம்பத்குமார், செல்லப்பன் ஆகியோர் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் போது ரோட்டில்
திருஷ்டி பூசணிக்காய் உடைத்ததால் ஏற்பட்ட
விபத்துக்களில் மட்டும், 22 பேர் காயம் அடைந்து,
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ரோட்டில் திருஷ்டி
பூசணிக்காயை உடைப்பதற்கு கமிஷனர் சொக்கலிங்கம் தடை
விதித்த போதும், நேற்று அதிக அளவில் ரோடுகளில்
திருஷ்டி பூசணிக்காய்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
ஈழவேந்தன் கோமாளித்தனமாக ததேகூட்டமைப்பைப்
பார்த்து வாள் வாள் என்று குரைப்பதை நிறுத்த வேண்டும்
திருமகள்
நாடகத்திலும்
சரி,
திரைப்படங்களிலும் சரி கதாநாயகனும் கதாநாயகியும் எவ்வளவு முக்கியமோ அதே
போல் கோமாளியும் முக்கியம்.
படம்
சரியாக ஓடவேண்டும் என்றால் கதைக்குத் தொடர்பில்லாத ஒரு கொமடி கதையையும்
நுழைத்துவிடுவார்கள்.
அவ்வளவு மவுசு நகைச் சுவைக்கு.
இதனால் வடிவேலு போன்ற நடிகர் ஒரு கதாநாயகனுக்குக் கொடுக்கும் சம்பளத்துக்கு
ஈடான சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்.
நாடகத்துக்கும் திரைப்படத்துக்கும் சொல்லியது அரசியலுக்கும் பொருந்தும்.
அரசியலில் கோமாளிகள் இல்லாவிட்டால் அரசியல் சோபிக்காது!
அரசியலில்
இப்போது முன்னணிக் கோமாளிப் பாத்திரத்தை வகிப்பவர் ஒரு முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்.
அவர் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். இங்குள்ள வானொலி ஒன்றில் காலை மாலை
எடுக்கும் வாந்தியைத்தான் கட்டுரையாக்கியுள்ளார்.
அதனைத் தமிழ்வின் இணையதளம் வெளியிட்டுள்ளது.
சிலருக்கு
சில வியாதிகள் உண்டு. தனது அரசியல் எதிரிகளை
இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மட்டந்தட்டி தன்னை ஒரு அரசியல்
அறிஞராகக் காட்டிக் கொள்வது.
மா.க.
ஈழவேந்தன் அவர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் போதும்.
சோனகனுக்குப் பண்டியைக் காட்டியது போல என்றும் சொல்லலாம் அல்லது காளை
மாட்டுக்கு சிவப்புத் துணி காட்டுவது என்றும் சொல்லலாம்.
உடனே குரைக்கத் தொடங்கிவிடுவார்.
வேண்டாப்
பெண்ணுக்குக் கால்பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம் என்று
சொல்வார்களே?
அதே வியாதிதான் இவருக்கும்.
ததேகூ இன்
"தலைவர் சம்பந்தன் ஆற்றல் வாய்ந்த வழக்கறிஞர்;
வழக்கை வெல்லும் ஆற்றலும் அவருக்கு உண்டு;
ஆனால் கொள்கை உறுதியோடு செயற்படும் திறன் அவருக்கு உண்டென்பதை நாம் ஏற்க
முடியாது.
HE IS AN ABLE ARTICULATED
LAWYER WHO CAN WIN A CASE BUT
we are
DOUBTFUL WHETHER HE CAN WIN A CASUE
"
என்பது ஈழவேந்தனின் மதிப்பீடு.
இவர்
ஏதோ தன்னைப் பெரிய கொள்கைக் கோமான் போலவும் குன்றில் இட்ட விளக்குப்
போலவும் சம்பந்தர் அப்படியில்லை அவர் குட்டையில் கிடக்கும் குண்டுமணி போன்ற
சாதாரண மனிதர் என்பது
போலவும்
கதை விடுகிறார். இப்படிச் சொல்லும் இந்தக் கொள்கைக் கோமான் இதுவரை தாவிய
கட்சிகளின் பெயர்களைச் சொல்லி மாளாது.
தமிழரசுக்
கட்சி,
அதன்பின் ஊர்காவத்துறை வி.நவரத்தினம்
தமிழரசுக்கட்சியிலிருந்து வெறியேறி 1969
ஓகஸ்ட் 27 இல்
தொடக்கிய
தமிழர்
சுயாட்சிக் கழகம்,
அதன் பின்னர்
தமிழ் ஈழம் விடுதலை முன்னணி
(Tamil Eelam Liberation Front)
என்ற ஒரு கடிதத் தலைப்புக் கட்சியின் பொதுச் செயலாளர்,
பின்னர்
2001 இல் தமிழ் ஈழ விடுதலை முன்னணி
(TELO)
தொடர்ந்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படி எல்லா சாமுத்திரிகா இலட்சணங்களும்
ஒருங்கே
பொருந்தி ஒருவர் -
கூடுவிட்டுக் கூடு பாய்ந்த ஒருவர் -
சம்பந்தரைப் பார்த்து கொள்கை உறுதியோடு செயற்படும் திறன் அவருக்கு
உண்டென்பதை நாம் ஏற்க முடியாது என்கிறார்.
இது மிகவும் "ஓவர்" ஆக அவருக்குப் படவில்லையா?
மொட்டைத் தலைச்சி கூந்தல் அழகியைப் பார்த்து சிலிப்பிக் காட்டியது போல இது
இல்லையா?
இரா.
சம்பந்தன்
1977
இல்
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருகோணமலையில்
போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றவர். பின்னர் 6 ஆவது சட்ட
திருத்தத்தின் கீழ் உறுதிமொழி எடுக்க மறுத்து 1981 இல் தனது பதவியைத்
துறந்தவர். 2001 ஆம் ஆண்டு தொடக்கம் திருகோணமலை மாவட்ட நா.உறுப்பினராக
இருந்து வருகிறார்.
வட தமிழீழத்தையும் தென் தமிழீழத்தையும் இணைக்குப் பாலமாக இருந்து
வருகிறார்.
இவரைப்
பார்த்துத்தான் கட்சிமாறிக் கட்சி தாவிய ஒருவர்,
ஒரு பிரதேச சபையில் கூட போட்டியிட்டு வெல்லாத ஒருவர்,
தலைவர் பிரபாகரனின் கருணையால் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் பதவி பெற்ற
ஒருவர்,
அதையும் ஒழுங்காகக் காப்பாற்ற முடியாது கோட்டைவிட்ட ஒருவர் "கொள்கை
உறுதியோடு செயற்படும் திறன் அவருக்கு உண்டென்பதை நாம் ஏற்க முடியாது"
என்கிறார்.
இந்த ஞானம் ததேகூ இன் தேசியப் பட்டியல் நா. உறுப்பினராக இருந்த போது ஏன்
தோன்றவில்லை? இவர் ஒரு நல்ல நாடாளுமன்றவாதியாக வினைசெய்திருந்தால் தலைவர்
அவரை மீள்நியமனம் நிச்சயம் செய்திருப்பார்.
ஏன் செய்யவில்லை?
ஈழவேந்தன்
தரம் தாழ்ந்து நரகல் நடையில் எழுதுவதற்கு அல்லது சொல்வதற்கு மூன்று
காரணங்கள்தான் இருக்க முடியும்.
(1) அறியாமை (2)
அழுக்காறு (3)
தலைக்கனம்.
"நான் நாடு
திரும்பினால் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்னைக் கைது செய்து
சித்திரவதை செய்து சிறையில் அடைத்துப் போடுவார்கள். நான் ஒரு ஏதிலி. எனக்கு
அரசியல் புகலிடம்" தாருங்கள் என்று கெஞ்சும் வீரவான் அங்கே களத்தில்
நிற்பவர்களைப் பார்த்து வாள்,
வாள் என்று கத்துவது முரண்நகையாக
இல்லையா?
சென்ற
நாடாளுமன்றத் தேர்தலில் இவர் கொடுக்கை இழுத்துக் கட்டிக் கொண்டு
திருமலையில் சம்பந்தனையும் யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா மற்றும் சுரேஷ்
பிரேமச்சந்திரனையும் தோற்கடிக்கப் போவதாக கோதாவில் இறங்கி வாளைச்
சுழட்டினார்?
முடிவு?
இந்த மூவரும் பெருவாரியான வாக்குகளால் வென்றார்கள். ஓட்டத்தில்
பஞ்சகல்யாணிக் குதிரைகள் என நம்பி இவர் பணம் கட்டிய கழுதைகள் தேர்தலில்
கட்டுக் காசை இழந்தன. அதுமட்டுமல்ல வாக்குகளைப் பிரித்ததால் டக்லஸ்
தேவானந்தாவுக்கு மேலும் ஒரு இருக்கையைத் தங்கத் தாம்பாளத்தில்
வைத்துக் கொடுத்தார்கள்!
பேசும் போது
நன்கு யோசித்துவிட்டுப் பேச வேண்டும். ஆனால் இவர் பேசுவதற்கு முன்னர்
யோசிப்பதும் இல்லை. யோசித்துவிட்டுப் பேசுவதும் இல்லை.
இவரது
கட்டுரையின் தலைப்பு "வெண்ணை திரண்டு வருகையில் தாலி உடைந்தால் ஆபத்து"
என்பதாகும். அது தாலி இல்லை தாழி என்றிருக்க வேண்டும்.
ஈழவேந்தனுக்குத்தான் தமிழ் தெரியவில்லை என்றால் தமிழ்வின்னுக்கும் தமிழ்
தெரியவில்லை என்பதுதான் சோகம்.
ஈழவேந்தன்
யாரையும் வாழ்நாளில் பாராட்டியது கிடையாது. அப்படிப் பாராட்டினாலும் அது
வஞ்சகப் புகழ்ச்சியாகத் தான் இருக்கும். இது பலருக்குத் தெரிவதில்லை. அவரது
பொழுது போக்கு மற்றவர்களைத் திட்டுவதுதான். பிழை கண்டுபிடிப்பதுதான்.
பல்லியைப் போல் எதற்கெடுத்தாலும் “ச்” கொட்டுவதுதான்.
"தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு
அழைத்துச் செல்வதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தையும் ஏக்க
நிலைக்கு தள்ளி விடும்" என்கிறார். இது அவரது தலைக்கனத்துக்கு
எடுத்துக்காட்டு.
தமிழினத்தை அழிவுக்குக் கொண்டு போனவர்கள் யார்?
ஆக்கபூர்வமான அரசியல் செய்பவர்கள் யார்?
என்பது தாய்நிலத்தில் உள்ள எமது மக்களுக்குத் தெரியும்.
பலத்த
நெருக்குவாரத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆசைவார்த்தைக்கும் மத்தியிலும்
எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
உள்ளாட்சி தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்களித்து வெற்றிபெறச்
செய்தார்கள். ஈழவேந்தனைவிட அந்த மக்கள் மிகத்
தெளிவாக இருக்கிறார்கள். இவர்தான் தானும் குழம்பி மற்றவர்களையும்
குழப்பும் பைத்தியக்காரனைப் போல நடந்து கொள்கிறார்.
"ஒரு
குடும்ப வாழ்வில் தன் மனைவியைக் கைவிடுகின்ற கணவன் சரி,
தன் மனைவியின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத கணவன் சரி,
முடிவில் தன் மனைவியைக் கைவிட்டதாகவே கொள்ளப்படும்.
A betraying husband is dangerous but a weak husband is equally bad.
எம்மைப் பொறுத்த வரையில் தன் மனைவியின் அடிப்படைத் தேவைகளை
நிறைவேற்றமுடியாத பலவீனமான கணவனாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்சி
அளிக்கிறது.
கைவிட்ட கணவன் சரி,
தன் மனைவியின் தேவையை நிறைவு செய்யமுடியாத கணவன் சரி,
பயனற்றவர்களாகத் தான் கொள்ளப்படுவர்.
நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற ஒரு தலைவன் அல்லது இயக்கம் தான் இன்று
எமக்குத் தேவை.
நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை
எம்மால் கணிக்க முடியாது" என்கிறார் ஈழவேந்தன்.
இதிலும்
அவரது அறியாமையும் அழுக்காறும் தலைக்கனமும்தான் விஞ்சி நிற்கின்றன. இந்தக்
கணவன் - மனைவி கதை அவரது சொந்த அனுபவம் போல் தெரிகிறது. அல்லது யாரோ
சொன்னதை பொறுக்கி வைத்துச் சொல்கிறார்.
"நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற ஒரு தலைவன் அல்லது இயக்கம் தான் இன்று
எமக்குத் தேவை.
நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை
எம்மால் கணிக்க முடியாது" என்கிறார் ஈழவேந்தன். மெத்தச் சரி. ஈடுகொடுக்கிற
தலைவன் தான் தான் என்று நினைக்கிறாரோ?
"அடுத்த வரவு - செலவுத்திட்ட விவாதம் தமிழரின் தலைநகரம் திருமலையில்
கூடும் தமிழீழ நாடாளுமன்றத்தில் இடம்பெறும்" என்று நாடாளுமன்றத்தில்
கைதட்டலுக்காக வெற்றுப் பேச்சுப்
பேசுகிற ஒருவர்தான் சரியான தலைவர் என்கிறாரா?
அல்லது "40,000
சடலங்கள் வடக்கில் இருந்து வருகின்றன. 40,000 சவப்பெட்டிகளைத் தயார் செய்து
வைத்துக் கொள்ளுங்கள்" என்று நாடாளுமன்றத்தில் பேய்த்தனமாகப் பேசுகிற
ஒருவர்தான் நெருக்கடிக்கு ஈடு கொடுக்கும்
தலைவர் என்கிறாரா?
ஒரு
வாதத்துக்கு இதனை ஒத்துக் கொள்வோம்?
நெருக்கடிக்கு ஈடு கொடுக்கிற தலைவன் யார்?
அல்லது அந்த இயக்கம் எது?
என்று ஈழவேந்தன் கொஞ்சம் மனது வைத்து மக்களுக்குச் சொல்வாரா?
தலைவனையோ
இயக்கத்தையோ இணக்க முடியாது. அது ஒரு பரிணாமவளர்ச்சி. காலத்துக்குக் காலம்
தமிழினத்தில் வல்லமை வாய்ந்த,
பதவிக்கும்
பட்டத்துக்கும் விலை போகாத தலைவர்கள் தோன்றிய வண்ணம் இருக்கிறார்கள்.
நெருக்கடிக்கு ஈடு கொடுக்கிற தலைவன் பற்றிய
கவலை தன்னை
அரசியலில் ஒரு அரிஸ்தோட்டல் என்று நிகைக்கும் ஈழவேந்தன் கைவிட வேண்டும்.
எட்டுச் சுற்றுப் பேச்சுவார்த்தை பேசியாகி விட்டது. கண்ட பலன் ஒன்றும்
இல்லை. ததேகூ பேச்சுவார்த்தை மேசையை விட்டு வெளியேற வேண்டும் என்று
ஈழவேந்தன் சும்மா விசர்த்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஒரு
வினையைச் செய்யும் போது பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனும் ஆகிய
அய்ந்தினையும் சீர்தூக்கிப் பார்த்து மயக்கம் அற எண்ணிச் செய்ய வேண்டும்.
எடுத்தேன் கவிழ்த்தேன் என ஈழவேந்தன் பேசலாம் எழுதலாம். திரு. சம்பந்தனால்
அப்படிச் செய்ய முடியாது.
பேச்சுவார்த்தையை நிறுத்திவிடலாம். அது சுலபம். அதில் இருந்து வெளியேறி
விடலாம். அதுவும் சுலபம். அதனையே மகிந்தா இராசபக்சே விரும்புகிறார். ததேகூ
வெளியேறிய அடுத்த கணம் மகிந்த இராசபக்சே “நான் தமிழர் சிக்கலைப்
பேசித்தீர்க்க முயற்சி செய்தேன். ஆனால் அதை விரும்பாத ததேகூ பேச்சுவார்த்தை
முறித்துக் கொண்டு வெளியேறி விட்டது. இது அவர்களுக்கு பேச்சுவார்த்தையில் –
சனநாயக முறையில் – தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் நம்பிக்கை இல்லை
என்பதைக் காட்டுகிறது” எனத் தட்டை மாற்றி வாசிப்பார் என்பது நிச்சயம்.
நான்கு
ஆண்டுகளாக இராணுவ சமபலத்தோடு விளங்கிய வி.புலிகள் சிங்கள அரசுகளோடு பல
சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அரசு பேச்சுவார்த்தையை
இழுத்தடித்தது. பேச்சுவார்த்தைக் காலத்தை தனது படைபலத்தைப் பெருக்கப்
பயன்படுத்தியது. கடந்த காலத்தில் போர்க்களத்தில் விட்ட பிழைகளைக் களையப்
பயன்படுத்தியது. அரசு அமைதி உடன்படிக்கையை கிழித்தெறிந்துவிட்டு மீண்டும்
போரைத் தொடங்கியது.
ததேகூ இன்று
வெறும் கையோடுதான் அரசோடு பேசுகிறது. அதற்கு இன்றிருக்கிற ஒரே பலம்
போரினால் தங்கள் பொருளாதார வாழ்வாதாரங்களை இழந்து குடிசைகளில் அடிப்படை
வசதிகள் இன்றித் தவிக்கும் ஏழை எளிய தமிழ்மக்கள்தான். பன்னாட்டு சமூகம்
எம்மீது அனுதாபம் தெரிவிக்கிறது. ஆனால் உதவிக்கு வருமா? சிறீலங்காவின்
உள்நாட்டுச் சிக்கலில் தலையிடுமா? என்பதெல்லாம் இன்று கேள்விக்குறியாக
இருக்கிறது. முள்ளிவாய்க்கால் போரில் சிறிலங்கா அரசு பொதுமக்களைத்
தாக்கியது, மருத்துவமனைகள் மீது குண்டுவீசிக் கொன்றது இவை
போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகும். அதற்கான
நம்பகத்தனமான சாட்சியங்கள் இருக்கிறதாகவும் அதையிட்டு ஒரு பன்னாட்டு
விசாரணை தேவை என்றும் அய்யன்னா வல்லுநர் குழு அறிக்கை கொடுத்துள்ளது. சனல்
4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டது இனப்
படுகொலைதான் என்பதை காணொளி ஆதாரத்தோடு எண்பிக்கிறது. இவற்றை ஆயுதங்களாக
கையில் எடுத்து மகிந்த இராசபக்சேயையும் அவரது இராணுவ தளபதிகளையும்
பன்னாட்டு நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். இதனைப்
புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் செய்ய வேண்டும். நாகதஅ, உலகத்தமிழர் பேரவை
போன்ற அமைப்புக்கள் வீச்சோடு வினை ஆற்றவேண்டும்.
எடுத்தேன்
கவிழ்த்தேன் என்று ஈழவேந்தன் பேசலாம். இச் செயலை இவ்வாறு செய்யலாம் என்று
சொல்லுதல் யார்க்கும் எளிது. சொல்லியவண்ணம் செய்தல்தான் அரியது. உலக
ஒழுங்குமுறைக்கு ஏற்ப ததேகூ அரசியல் சதுரங்கத்தில் முன் எச்சரிக்கையோடும்
இராசதந்திரத்தோடும் காய்களை நகர்த்த வேண்டிய நிலையில் உள்ளது. ததேகூ
தலைமைக்குக் காலம் தாழ்த்திச் செய்யத் தக்கவற்றை காலம் தாழ்த்தியும்
விரைவாகச் செய்ய வேண்டியவற்றில் காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும் என்பது
தெரியும். இதனைக் கனடாவில் இருந்து கொண்டு வாய்வீரம் பேசும் ஈழவேந்தன்
புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழவேந்தன்
நாடுகடந்த தமிழீழ அரசின் பேராளராக இருக்கிறார்.
அதில் அவர் ஆற்ற வேண்டிய பணிகள்
மலைபோல் குவிந்து கிடக்கிறது.
அய்யன்னா வல்லுநர் குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச்
செயலளார் நாயகம் பான் கீ மூன் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தியா,
அமெரிக்கா, பிரித்தானியா, அய்ரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் ஆதரவைத் திரட்ட
வேண்டும். தமிழ்நாட்டு ஈழ ஆதரவுத் தளத்தை விரிவாக்க வேண்டும். இந்தியாவின்
ஆளும் கட்சியோடு மட்டுமின்றி எதிர்க்கட்சிகளோடும் பேச வேண்டும். எமது
சிக்கலுக்கான திறவு கோல் தமிழ்நாடு வழியாக இந்தியாவிடமே இருக்கிறது.
எனவே ததேகூ
பார்த்து வாள் வாள் என்று குரைப்பதை
ஈழவேந்தன் விட்டுவிட வேண்டும். தமிழ்த்
தேசியத்தை முதுகில் குத்தும் திருப்பணியை நிறுத்த வேண்டும். நா காக்க
வேண்டும்.
தனக்குக்
கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்ய
வேண்டும். இதைத்தான் மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.
வெண்ணை திரண்டு
வருகையில் தாலி உடைந்தால் ஆபத்து
-
மா.
க.
ஈழவேந்தன்
[
திங்கட்கிழமை,
11 யூலை
2011, 10:29.05 AM GMT ]
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும்
தமிழினத்தை அழிவிக்கு
அழைத்துச் செல்வதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
எதிர்காலத்தையும் ஏக்க
நிலைக்கு தள்ளி விடும்.
ஈழத் தமிழினத்தால்
தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு
கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை ஒட்டி மாறுபட்ட
கருத்தில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற
பேரழிவைத் தடுக்க முடியுமா என்பது பெரும் கேள்வி
எனினும் இன்றைய
சூழ்நிலையில் எமக்கு வேறு மாற்று இயக்கமில்லை.
விலை போவதற்கென்றே பிறந்த
டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.
டி.
பி.
இயக்கம் சரி,
கிழக்கில் கருநாகமாக
விளங்குகின்ற கருணாவின் இயக்கம் சரி,
அவரின் அடிவருடியாக தொடங்கி
தான் ஒரு தனி
இயக்கம் என்று காட்ட முயலும் பிள்ளையான் சரி,
அரசியலில் அழுகு தொழு
நோயாளியாக விளங்கும் ஆனந்தசங்கரி சரி,
சிந்தை கலங்கிய
சித்தார்த்தனின்
புளொட் இயக்கம் சரி,
நாம் ஒரு பொருளாகக் கொள்ள
முடியாத விலை போன
இயக்கங்கள்.
அவர்களை நாம் ஒரு பொருளாகக்
கொண்டு நாம் திறனாய்வு செய்வது
எம் நேரத்தை வீணாக்குவதாகும்.
கஜேந்திரகுமாரையும்,
கஜேந்திரனையும்
உள்ளடக்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடைபெற்ற
தேர்தலில் அரசியல்
தெளிவோடும் கொள்கைக் கோட்பாடோடும் தேர்தலில் குதித்த போதும்
அன்று நிலவிய
அரசியல் நெருக்கடி காரணமாக தோல்வியைத் தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இவர்கள் இருவரையும்
உள்வாங்கிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வெற்றி பெற்றிருப்பின் இன்று நிலவும் தடுமாறும்
தன்மையையும் தடம் புரளும்
தன்மையையும் தவிர்த்திருக்க முடியும்.
தமிழினத்தின் சாபக்கேடு
இவ்விரு
கட்சிகளின் மோதலுக்கு வழி வகுத்தது.
நடந்தது நடந்தவையாக இருக்க
இனி நடப்பவை
நல்லவையாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் கேள்விக் குறியுடன் நாம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழினத்தை காட்டிக் கொடுக்கும் என்று நாம்
கூறவில்லை.
முன்னே கூறிய
காட்டிக் கொடுப்பவர்களோடு இவர்களை இணைக்க நாம்
விரும்பவில்லை.
கை விடும் கணவனும்
பலவீனமான கணவனும் பயனற்றவர்களே
ஒரு குடும்ப வாழ்வில் தன்
மனைவியைக் கைவிடுகின்ற கணவன் சரி,
தன்
மனைவியின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத கணவன் சரி,
முடிவில் தன் மனைவியைக்
கைவிட்டதாகவே கொள்ளப்படும்.
A betraying husband is dangerous but
a weak husband is equally bad.
எம்மைப் பொறுத்த வரையில் தன் மனைவியின் அடிப்படைத்
தேவைகளை நிறைவேற்றமுடியாத பலவீனமான கணவனாகவே தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
காட்சி அளிக்கிறது.
கைவிட்ட கணவன் சரி,
தன் மனைவியின் தேவையை நிறைவு
செய்யமுடியாத கணவன் சரி,
பயனற்றவர்களாகத் தான்
கொள்ளப்படுவர்.
நெருக்கடிக்கு ஈடு
கொடுக்கின்ற ஒரு தலைவன் அல்லது இயக்கம் தான் இன்று
எமக்குத் தேவை
.
நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற கட்சியாக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பை எம்மால் கணிக்க முடியாது.
கட்சியின் தலைவர் ஆற்றல்
வாய்ந்த
வழக்கறிஞர்;
வழக்கை வெல்லும் ஆற்றலும்
அவருக்கு உண்டு;
ஆனால் கொள்கை
உறுதியோடு செயற்படும் திறன் அவருக்கு உண்டென்பதை
நாம் ஏற்க முடியாது.
HE IS AN ABLE ARTICULATED LAWYER WHO
CAN WIN A CASE BUT we are DOUBTFUL WHETHER HE CAN WIN A CASUE .
வாதத் திறமையோடு வழக்கை வெல்லும்
ஆற்றல்
அவருக்கு உண்டு.
ஆனால் உள்ள உறுதியோடு
கொள்கையில் தொலைநோக்கு சிந்தனையுடன்
வெற்றி பெரும் ஆற்றல் அவருக்கு உண்டோ என்பது
ஐயத்துக்குரியது.
அவர் சரி,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சரி,
ஆவது அறிதல் நிலையில்-
தொலைநோக்கு
சிந்தனையுடன் செயற்படுவதாக தெரியவில்லை.
இந்தியாவின் நிகழ்ச்சி
நிரலுக்கு
கட்டுப்பட்டு தொடர்ச்சியாக இயங்குகின்றனர்.
மகிந்த ராஜபக்ச சரி,
ஆளும்
சிங்கள கட்சி சரி,
அல்லது எந்த சிங்கள கட்சி
சரி எமது வெளிப்படையான
எதிரிகள் என்பதை காலம் உணர்த்தி நிற்கிறது.
1948 ல் இருந்தே
நாம் ஏமாற்றப்படுகிறோம்
1948 ல் இலங்கைக்கு விடுதலை
கிடைத்ததாக சொல்லப்படினும் அது வெள்ளையர்
ஆட்சிக்குப் பதில் சிங்கள ஆட்சிக்கு வழி வகுத்தது.
1920
களிலேயே சேர்.
பொன்.
இராமநாதன்
,
சேர்.
பொன்.
அருணாசலம் போன்ற பெரும்
தலைவர்கள் சிங்கள
தலைமைப் பீடத்தால் ஏமாற்றப்பட்டு,
ஏக்கத்தோடு தம் வாழ்வை
முடித்துக்
கொண்டனர்.
அவற்றின் விரிவு இப்பொழுது
வேண்டாம்.
ஆனால்
1948
தொடங்கி
2011
வரையான
63
ஆண்டுகள் சிங்கள தலைவர்களால் தமிழ்த் தலைவர்கள்
தொடர்ச்சியாக
ஏமாற்றப்பட்டதையே நாம் கண்டுள்ளோம்.
திரு.
ஜி.ஜி.
பொன்னம்பலம்,
திரு.
சுந்தரலிங்கம் போன்றோர்
சிங்களவர்களால் ஏமாற்றப்பட்டதோடு ஏமாறுவதற்கும்
ஆயத்தமாக இருந்தனர்.
பதவி மயக்கத்தில் அவர்கள்
செய்த காட்டிக்கொடுப்புகள்
தமிழினத்திற்கு மீள முடியாத அழிவைத் தந்தது.
மலையக தமிழ் மக்களை
காட்டிக்கொடுத்த பொன்னம்பலத்தின் வஞ்சனையை வரலாறு
மறக்காது.
அரச ஆதரவோடு
நடைபெற்ற சிங்கள குடியேற்றத்தைக்கூட அவர்
எதிர்த்ததற்கு சான்றில்லை.
மெத்தப் படித்த மேதை
சுந்தரலிங்கம்
1936
தன் கணித மூளையை வைத்துக்கொண்டு
தனியே சிங்களவரைக் கொண்ட அமைச்சரவை உருவாகுவதற்கு
வழிவகுத்தார்.
இதனை
pan sinhala cabinet
என்று ஆங்கிலத்தில்
குறிப்பர்.
ஆனால் இதே சுந்தரலிங்கம்
தன் தவறுக்காக வருந்தி கண்ணீர் விட்டதோடு தமிழீழம்
தான் தமிழனுக்கு தீர்வு
என்று காலம் கடந்த நிலையில் ஞானம் பெற்றார்.
தந்தை செல்வா செய்த
ஒப்பந்தங்கள்
தந்தை செல்வா தொலைநோக்கு
சிந்தனையுடன் அரசியலை நடத்திய போதும் அவர்
சிங்கள தலைவர்களோடு செய்த பண்டா-
செல்வா ஒப்பந்தம்,
டட்லி-செல்வா
ஒப்பந்தம்,
சிறிமாவோ
-செல்வா
புரிந்துணர்வு அனைத்தும் அவர் காலத்திலேயே
கிழித்து எறியப்பட்டன.
இந் நிலையில் தான்
தொடர்ச்சியாக சிங்கள
தலைமைப்பீடத்தால் ஏமாற்றப்பட்ட நிலையில் இணைப்பாட்சியிலும்
இனிய வாழ்வு
காணமுடியாது என்ற முடிவுக்கு வந்த நிலையில் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த தமிழீழத் தீர்மானம் தந்தை செல்வாவின்
தலைமையில்
1976 ல்
வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்டது.
அவர் இறப்பதற்கு முன்பு
இறுதி உயிலாக
1976
நவம்பர்
19
ல் இலங்கைப் பாராளுமன்றத்தில் சிங்களவன் பிடியில் இருந்து
நாம் விடுபடாவிட்டால் எமக்கு வாழ்வே இல்லை,
எனவே எமது இறுதித் தீர்வு
தமிழீழம் தான் என்பதனை ஓங்கி ஒலித்தவர் தந்தை செல்வா.
தந்தை செல்வா
அடிக்கடி கூறும் சொற்றொடர்
"தமிழீழத்தை
எந்த சிங்களவனும் வெள்ளித்
தட்டத்தில் வைத்து தரமாட்டான்.
தமிழீழத்தை அடைவது என்பது
வில்லங்கமான
காரியம் தான்
.
ஆனால் தமிழினம் தப்பிப் பிழைக்க வேண்டுமெனில் இதை விட
எமக்கு வேறு வழியில்லை"
என்று கூறிய தந்தை செல்வா
1977
ம் ஆண்டு ஏப்ரல்
26
ல் தனது
79
வது அகவையில் எம்மை மீளாத் துயரில் ஆழ்த்தி உயிர் நீத்தார்.
ஜே.
ஆர்
-
அமிர் ஒப்பந்தம்
1977 ல் ஜே.
ஆர்.
ஆட்சிக்கு வர முற்றிலும்
எதிர்பாராத நிலையில்
எதிர்க்கட்சித் தலைவராக திரு.
அமிர்தலிங்கம் பதவி ஏற்க ஜே.
ஆருக்கும்
அமிர்தலிங்கத்திற்குமிடையில் மாவட்ட சபை
அடிப்படையில் ஒப்பந்தம்
நிறைவேறியது.
இவ் ஒப்பந்தம்
உப்புச்சப்பற்ற மாவட்டமாக உருவெடுத்தது.
இவ்
ஒப்பந்தமும் உருப்படி பெறாத நிலையில் செத்தது.
இலங்கை-
இந்திய ஒப்பந்தம்
பின்பு
1987
ஜுலை
29
இலங்கை-இந்திய
ஒப்பந்தம் இலங்கை சார்பில் ஜே.
ஆரும்
இந்தியா சார்பில் ராஜீவும் கையொப்பமிட்டனர்.
இவ் ஒப்பந்தத்தை முதலில்
எதிர்த்த நாம் சென்னை இந்து செய்தி இதழுக்கு விடுத்த
அறிக்கையில்
" it is
a joint conspiracy by both governments (
இரு நாடுகளின் கூட்டுச் சதி)
என்று குறிப்பிட்டிருந்தேன்.
இவ் அறிக்கையைக் கண்ட இந்திய
உளவுப் பிரிவு
(RAW )
சென்னையில் என் இல்லத்தில் சந்தித்த
வேளையில் சீற்றத்தோடு இவ்
அறிக்கையை எவ்விதம் நீங்கள் விடமுடியும் என்று கேட்டனர்.
அதற்கு விடையாக
எமக்கு சார்பாக இதில் ஒன்றும் இல்லை என்று கூறிய
நான் ஒப்பந்தத்தின்
முன்னுரையில் மட்டும் இலங்கையின் வட-கிழக்கு
மாகாணம் தமிழரின் வரலாற்றுத்
தாயகம் என்ற கூற்றினை மட்டும் வரவேற்பதாக குறிப்பிட்டேன்.
ஆனால் இதை
நடைமுறைப்படுத்துவீர்களா என்று கேட்டதற்கு ஆம் என்று
பதில் கூறினார்கள்.
ஆனால் இப்பொழுது
24
ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் வட கிழக்கு
மாகாணம்
திட்டமிட்டு சிங்கள அரசினால் சிங்கள நீதிபதியின் தீர்ப்பின் அடிப்படையில்
துண்டாடப்பட்டபோதும் திட்டமிட்ட அமைதியை இந்திய அரசு
மேற்கொண்டுள்ளது.
மாநிலங்களுக்கான ஒன்றியம்
பின்பு சந்திரிக்கா
ஆட்சியில்
UNION OF REGIONS (
மாநிலங்களுக்கான
ஒன்றியம்)
மசோதா கொண்டுவரப்படும் என்று
சொல்லப்பட்டது.
ஆனால்
மாநிலங்களுக்கான ஒன்றியம் உருவாகுவதற்குப் பதிலாக
சந்திரிக்காவின் மாமா
ரத்வத்த யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சிங்கக் கொடி ஏற்றி
தமிழ் மக்களை
வெளியேற்றினார்.
பிரபா-
ரணில் ஒப்பந்தம்
இதை அடுத்து
2001
ம் ஆண்டு பெப்ரவரி
11
ம் திகதி எங்கள் தலைவர்
பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்
இடையில் ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டது.
இவ் ஒப்பந்தமும்
காலப் போக்கில் கிழித்தெறியப்பட்டது.
இவ் ஒப்பந்தத்தில் கையொப்பம்
இட்ட நீங்கள் இதனை உங்களால்
நிறைவேற்றமுடியவில்லையே என ரணில் விக்கிரமசிங்காவை நான்
பாராளுமன்றத்தில்
கேட்டபோது புன்முறுவல் பூத்த நிலையில் கையை விரித்தார்.
தொடரும் இனப்படுகொலைகள்
1956 தனிச் சிங்களச் சட்டம்
நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாட்டில் கலவரம்
ஏற்பட்டது.
1958
ல் இனப் படுகொலை நடைபெற்றது.
1961
ல் சிங்களச் சட்டத்தை
தமிழர்கள் பகுதியில் நடைமுறைப்படுத்த சிறிமாவோ அரசு
முயன்ற போது அறப்போர்
நடாத்திய தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்.
1968
தமிழுக்கு சலுகை வழங்க முயன்ற
போது சிறிய அளவில் கலவரம் வெடித்தது.
1977
ல் மீண்டும் இனக்கலவரம் ஏற்பட்டு
தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
.
1981
ல் தென்னாசியாவின் தலை சிறந்த
நூலகமான யாழ்ப்பாண நூலகம் சிங்கள காடையர்களால்
தீக்கிரையாக்கப்பட்டது.
1983
ல் தமிழர்கள் நாட்டை விட்டு-
தமிழ் மண்ணில் இருந்தும்
வெளியேறும் அளவுக்கு
உலகத்தின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் தமிழ் இனப்படுகொலை
நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் படுகொலை
இவை அனைத்தையும் விஞ்சுகின்ற
அளவுக்கு
2009 மே மாதத்தில் வன்னியில்
ஒரு
லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களும் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட
விடுதலைப் போராளிகளும் சாகடிக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்காவின் இவ்
இனப்படுகொலைக்கு இந்தியா தலைமையில்
20
நாடுகள் துணை நின்றன.
இனப் படுகொலை
ஒட்டிய விபரத்தை நாம் விரிக்கத் தேவையில்லை.
சனல்-4
ன் ஆவணக்காட்சியான
இலங்கையின் கொலைக்களம்
(
Sri Lanka 's Killing Fields )
பார்த்து விபரங்களை
அறிந்து கொள்ளவும்.
தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு தெரிவு
இக் கொடூர பின்னணியில்
2010
ல் நடைபெற்ற தேர்தலில்
தென்பகுதியில்
சிங்களவர் தலைவராக மகிந்தா தெரிவு செய்யப்பட்டார்.
தமிழர்கள் வேறு வழியற்ற
நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவு
செய்தனர்.
அரசுக்கும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் உத்தியோகபூர்வமாக
8
பேச்சுவார்த்தைகள்
நடைபெற்றன.
உத்தியோகப்பற்றற்ற நிலையில்
எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்ததோ
நாம் அறியோம்.
இப் பேச்சுவார்த்தைகளில்
அதிகாரப் பரவல் பேசப்பட்டதாக
சொல்லப்படுகிறது.
வட-கிழக்கு
இணைப்பு மறக்கப்பட்டுள்ளது.
13
வது
திருத்தத்தை நடைமுறைப்படுத்துக என்று ஸ்ரீலங்கா அரசை இந்திய
அரசு
கேட்டுள்ளது.
இதை மறுத்த சிங்கள அரசு
காணியையும் காவற்துறை அதிகாரங்களை
மாகாணங்களுக்கு வழங்க முடியாதென வெளிப்படையாக
கூறுகிறது.
எட்டுப்
பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு உறுப்பினர்
பலருக்கே என்ன பேசப்பட்டது என்பது தெரியாது.
இதன் மர்மம் யாதோ?
எனினும்
தாம் பேசியதை ஒட்டி மகிந்த அரசு ஒரு அறிக்கை
தரவேண்டும் என்று சம்பந்தர்
தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்கிறது.
மகிந்த அரசோ பேச்சு
வார்த்தையின் குறிப்பை எழுத்தில் தருவதாக கூறிய
நிலையிலும்
தட்டிக்கழிக்கிறது.
மகிந்த அரசு தாம் ஒரு
தெரிவுக் குழுவை அமைத்து தீர்வு
காணப் போவதாகக் கூறுகிறது.
ஏமாற்றியது போதும் இனியும்
ஏமாற்றாதே,
தெரிவுக்
குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
கூறியுள்ளது.
தமக்கு பேச்சு வார்த்தையில்
நம்பிக்கை அற்ற நிலையிலும்
வல்லரசுகளின் நிர்ப்பந்தம் காரணமாகவும் இந்தியாவின்
நெருக்குதல்
காரணமாகவும் தாம் விரும்பாத நிலையிலும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து
கலந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்று
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு கூறுகிறது.
எம்மைப் பொறுத்தவரையில்
தமிழினத்தை உங்களால் காப்பாற்றமுடியாவிடினும்
மேலும் தமிழினத்தை படுகுழியில் தள்ளாது பேசியது
போதும் என்ற நிலையில்
வெளியே வாருங்கள்.
டக்லஸ்,
கருணா போன்ற கயவர் கூட்டம்
பாராளுமறத்தில்
தலைதூக்காதிருக்க நீங்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில்
இருந்து எமக்காக
குரல் எழுப்புங்கள்.
பாராளுமன்றத்துக்கு உள்ளே
நாம் முன்பு செய்தது போல்
உலகின் கவனத்தை ஈர்க்கின்ற முறையில் ஆர்ப்பாட்டங்கள்
சிலவற்றை செய்யுங்கள்.
மாவை சேனாதிராஜா
கூறியதற்கமைய மக்கள் ஆட்சி அடிப்படையில் அறப்போரை
நடத்துங்கள்.
பாராளுமன்றத்தில் வெட்டி
விழுத்தி வேலியோடு சாய்ப்பதற்கு
உங்களுக்கு ஒன்றும் இல்லை எனிலும் யார்
பாராளுமன்றத்தில் இருக்கிறார்
என்பதற்கு மேலாக யார் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில்
இப்போதைக்கு
பாராளுமன்றத்தில் உங்கள் பணி தொடரட்டும்
.
சூழ்நிலை மாறும் போது புதிய
சிந்தனைகள் உருவாகக் கூடும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில்
இணையத்தின்
பங்களிப்பு பெரிது.
ஈழத் தமிழர் இன்னல் நீங்க
இணையத்தோடு இணையுங்கள்.
நாடு
கடந்த தமிழீழ அரசு உங்களுக்கு பக்க துணையாக அமைய
உலகெங்கும் உங்கள்
பரப்புரையை தொடருங்கள்.
உடனடியாக தமிழக முதல்வரையும்
தமிழக அரசையும்
திரண்டு வரும் தமிழக மக்களின் சக்தியையும் உங்கள் சார்பில்
குரல் எழுப்ப
வையுங்கள்.
தமிழகம் ஈழத்து மக்கள்
சார்பில் தொடர்ந்து ஓங்கிக் குரல்
எழுப்பின் டெல்லி நீண்ட நாட்களுக்குத் தட்டிக்
கழிக்க முடியாது.
கட்சி
கடந்த நிலையில் தமிழகத் தலைவர் அனைவரும்
உங்களுக்குத் துணை நிற்க ஆயத்தம்
என்று அறியத் தந்துள்ளார்கள்.
உலகம் எம் சார்பில்
கருத்துத் தெரிவிக்கின்ற
சூழல் உருவாகிக்கொண்டிருகிறது.
இந்த சூழலை நீங்கள்
முழுமையாக
பயன்படுத்திக்கொள்ளவேண்டியது உங்களது கடமையாகும்.
வேறு வழியற்ற நிலையில்
நீங்கள் தான் ஏதாவது செய்வீர்கள் என்று தமிழினம்
எதிர்பார்க்கின்றது.
நம்பிய தமிழினத்தை நடுக்
கடலில் தத்தளிக்க விடாதீர்கள்.
மா.
க.
ஈழவேந்தன்
Eelaventhan Mankikavasakar
கனடாவில் முன்னுக்கு வருவதற்கும் வாய்ப்புண்டு
கெடுவதற்கும் வாய்ப்புண்டு
திருமகள்
காலையில் எழுந்து குளித்துவிட்டு அன்று வந்த
செய்தித்தாளைப் படிப்பதுதான் எனது முதல் வேலை. செய்தித்தாளில் வரும்
எல்லாச் செய்திகளையும் கட்டுரைகளையும் தலையங்கத்தையும் படிக்க முடியாது.
எது தேவையோ அதைப் படிப்பதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
இப்போதெல்லாம் கொலை, கொள்ளை, ஏமாற்றுப் போன்ற செய்திகள்
வந்தால் நம்மாக்களுடைய பெயர்களும் தேவைக்கு அதிகமாகவே வரத்தொடங்கியுள்ளது.
இதனால் செய்தித்தாள்களைக் காலைவேளையில் படிக்கவே பயமாக இருக்கிறது.
தொண்ணூறுகளில் தமிழ் இளைஞர்கள் இரண்டு கன்னையாகப் பிரிந்து
ஆளை ஆள் அடித்துச் சண்டை போட்டார்கள். அதில் சம்பந்தப்பட்ட சிலர்
நாடுகடத்தப்பட்டார்கள். இன்னும் சிலர் மாமியார் வீட்டிற்கு விருந்தாளியாகப்
போனார்கள். தமிழ் சமூகத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய இந்தச்
சண்டை எப்படியோ முடிவுக்கு வந்தது.
இன்றைய காலைச் செய்தித்தாளில் "வீட்டுமுகவர்
கொலையில் மூன்று பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு"
(Three
face charges in real estate agent's death)
என்ற தலைப்போடு ஒரு செய்தி. கொலைக்
குற்றச்சாட்டோடு கப்பம் கறக்கும் நோக்கோடு ஆட்கடத்தல், வீட்டுமுகவர்
Johnny Fei
யை
தாக்கிப் படுகாயப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுக்களும் இவர்கள் மீது
சுமத்தப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்டவரது பெயர் ரோனி ஹான்.
இவரும் வீட்டுமுகவர்
Johnny Fei
யும்
கடந்த சனவரி 15 இல் அவரது 2.4 மில்லியன்
பெறுமதியான வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்கள். சிலநாட்களில்
Johnny Fei
யை கடத்தியவர்கள் அவரை விட்டுவிட்டார்கள்.
மற்றவரைப் பற்றித் தகவல் இல்லை. இப்போது ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில்
இருந்து மனித எலும்புத் துண்டுகளைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
சரி இது சீனர்களுக்கு இடையிலான சிக்கல் என்றுதான் முதலில்
எண்ணத்தோன்றியது. உண்மை அதுவல்ல. குற்றம் சாட்டப்பட்ட மூவரில் இரண்டு
பேர் தமிழ் இளைஞர்கள். பெயர் செந்தூரன் சபேசன் (23) கோபிநாத்
சாந்தகுமார் (23). எஞ்சியவர்
Sohiab Malick (21)
என்ற
பாகிஸ்தானியர். இன்னொரு சீனரைக் காவல்துறை
தேடுகிறது.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கனடாவுக்கு ஏதிலிகளாக வந்தவர்களது
பிள்ளைகள் ஒழுங்காகப் படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில்
அமரவேண்டியவர்கள் ஏன் இப்படியான தவறுகளைச் செய்து மாட்டிக் கொள்கிறார்கள்?
அதுவும் கொலைக் குற்றம்? தவறு யாருடையது? பெற்றோர்களா? இந்த சமூகமா?
உலகத்திலேயே மிகச் சிறந்த நாடு கனடா. இங்கு போல் சட்டம் ஒழுங்கு வேறு
எந்தநாட்டிலும் இல்லை. கனடாவில் உள்ள கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்தி
ஒருவர் முன்னுக்கு வரலாம். பெரும்பான்மையோர் வருகிறார்கள். அதே
சமயம் கெடுவதற்கும் வாய்ப்புகளும் வசதிகளும் உண்டு. தேர்வு எமது கையில்
உண்டு. இதற்கு எடுத்துக்காட்டு இந்த இரண்டு இளைஞர்கள்.
உங்கள் வீட்டுத் திசை
மேற்குத் திசையா?
திருமகள்
மூன்றாவது
உலக நாட்டில் இருந்து முதலாவது உலக நாட்டுக்குப் புலம்பெயர்ந்தாலும்
மூடநம்பிக்கைகளைக் கைவிடாது தொடர்ந்து எம்மில் சிலர் அதற்கு அடிமையாக
இருந்து வருகிறார்கள்.
அண்மையில் தான் வாழும் வீடு சரியில்லை,
அந்த வீட்டை வாங்கி அதில் குடிபுகுந்த நாள்த்தொட்டு வாழ்க்கையில் ஒன்றுமாறி
ஒன்று இழப்புக்கள், பின்னடைவுகள் நடைபெறுவதாக அந்த வீட்டுச்
சொந்தக்காரர்கள் நம்பினார். வண்டியை அதிவேகத்தில் ஓட்டிப் போனதற்கு
காவல்துறை பிடித்து வழக்கு வைத்ததும் அதற்கு ஒரு தொகை தண்டம் கட்டினார்.
எதற்கும் சாத்திரியாரிடம் யோசனை கேட்போம் என நினைத்து சாத்திரியாரிடம்
போனார். சாத்திரியார் யோசித்து விட்டு வாசல் மேற்குத்திசையில்
அமைந்திருப்பதுதான் எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் எனச் சொன்னார்.
அதனை நம்பி 2,250 சதுர அடியுள்ள அந்த வீட்டைய விற்றுப்போட்டு 1,800
சதுர அடியுள்ள இன்னொரு வீட்டை சில ஆயிரம் குறைவான விலைக்கு வாங்கினார்.
இதில் அவருக்கு காணி மாற்றுவரி, எழுத்துக் கூலி என ஏகப்பட்ட செலவு.
இவற்றைச் சமாளிக்க மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக திங்கள் முதல் சனிவரை இரண்டு
வேலை செய்கிறார். ஞாயிறுக் கிழமையில் ஒழுங்காக தேவாலயத்துக்குப் போகிறார்.
என்ன மனிதர் கிறித்தவரா? அவர் இந்தச் சாத்திரம் எல்லாம் பார்க்கிறாரா
என்று கேட்கிறீர்களா? ஆமாம் அவர் கிறித்தவர். கேட்டால் "நான் மதம்மாறிய
கிறித்தவன். பழைய நம்பிக்கைகளை கைவிட முடியாது" என்கிறார்.
இன்னொருவர் வாஸ்து சாத்திரப்படி கீழ்த்தளத்தில் இருந்த தண்ணீர்தொட்டியை
பலத்த செலவில் கராச்சுக்கு மாற்றியிருக்கிறார். ஒருவரது வாழ்க்கையில்
ஏற்படும் நன்மை தின்மை, உயர்வு தாழ்வு, நோய் நொடி, சுகம் துக்கம்,
வெற்றி தோல்வி இவற்றுக்கும் வீட்டு வாசல் மேற்காக இருப்பதற்கும் என்ன
தொடர்பு என்பது தெரியவில்லை. சிலர் 8 இலக்கம் இருந்தால் வீடு நல்லதாக
இருந்தாலும் பயத்தில் அந்த வீடு வேண்டாம் எனத் தள்ளி விடுகிறார்கள்.
எட்டு என்ற எண் சனிக் கிரகத்தோடு (அட்டமத்துச் சனி) தொடர்பு
படுத்துவதால்தான் அது கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. கனடா,
அமெரிக்கா போன்ற நாடுகளில் நாலு திசையும் பார்க்கும் வீடுகளைத்தான் இலட்சக்
கணக்கில் கட்டிவைத்திருக்கிறார்கள். அது போல 1,2,3 ...என்று இலக்கம்
இடும்போது 8,17, 26, 35, 44, 53, ...... 88 என்ற எண்கள் வரத்தான் செய்யும்.
இதற்குத்தான் சொல்வது நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத்
தண்ணீர்தான் என்று.
இந்தியாவும் - சீனாவும்
திருமகள்
இந்தியாவை
புண்ணிய பூமி என்கிறார்கள். ஆனால் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டால்
சீனாவின் முன்னேற்றம் அளப்பரியது.
இந்தியா இன்னும் பின்தங்கிய நாடாகவே இருக்கிறது.
சீனா பல துறைகளிலும் அபரிமிதமாக முன்னேறி வருகிறது. உலக ஒலிம்பிக் போட்டி,
ஆசிய
விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் சீனா சிறப்பாக விளையாடித் தங்கப்
பதக்கங்களை அள்ளி வருகிறது. ஆனால்,
ஒரு
தங்க மெடல் வாங்கவே இந்தியா திணறுகிறது. இப்போது,
டென்னிஸ் விளையாட்டிலும் சீனா முன்னேறி வருகிறது. இராணுவத்தில்
இந்தியாவிடப் பல மடங்கு பலம்
வாய்ந்ததாக சீனா வளர்ந்துள்ளது. பொருளாதாரத்தில்
இரண்டாவது இடத்தில் இருந்த யப்பானைப் பின்தள்ளிவிட்டு
அமெரிக்காவுடன்
போட்டி போடும் அளவு
பல
மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. கல்வி முறையில்,
தொடக்க
முதல்
பட்டப்படிப்பு வரை கட்டுக் கோப்பாக முன்னேறி வருகிறது. சமீபத்தில் சீனா
பீஜிங்கிலிருந்து ஹாங்காங் வரை 1,318
கிமீ தூரத்தை அய்ந்து மணி நேரத்தில் கடக்கும் உலகிலேயே அதிவேக புல்லட்
தொடர்வண்டியை அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளது.
இந்தியா தண்டவாள விரிசலைக் கூட உடனடியாக சரிப்படுத்த முடியாத நிலையில்
இருக்கிறது.
மதுரை -
சென்னை இடையே இயக்கப்படும் வைகை அதிவேக தொடர்வண்டி 120
கிமீ
க்கு வெள்ளோட்டம் செய்து
100
கிமீ வேகத்தில் இயக்க,
இரயில்வே பாதுகாப்பு ஆணையர்
அனுமதியளித்தும்
80
கிமீ வேகத்தில் தான் இயக்கப்படுகிறது. டில்லி - ஆக்ரா இடையே செல்லும்
ராஜ்தானி அதிவேக தொடர்வண்டி 100 - 120 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.
மணிக்கு,
260 கிமீ வேகத்தில் இயக்கும் சீனாவை இந்தியா முந்தப்போவது எப்போது?
இன்று உலகிலேயே கையூட்டு
ஊழலில் முதலிடம் பிடிக்க
இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்பதே அதன் சாதனை! (யூலை 05,
2011)
உள்ளுரில் தடைசெய்யப்பட்ட அஸ்பெஸ்ரஸ்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!
திருமகள்
ஒரு ஊரிலே ஒரு பாதிரியார் இருந்தார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர் தேவாலயத்தில்
பிரசங்கம் செய்வார். அப்போது பாதிரியாரின் மனைவி முன்வரிசையில் இருந்து அவரது
பிரசங்கங்களை செவிமடுப்பார். அப்படி ஒரு நாள் பிரசங்கம் செய்யும் போது
கொல்லாமையின் சிறப்பைப் பற்றிப் பாதிரியார் பேசினார். உயிர்களைக் கொன்று உண்பது
பாபம் என்றார். தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பிய பாதிரியார் மதிய உணவு
உண்பதற்கு உட்கார்ந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கமாகப் பரிமாறப்படும்
கோழிக்கறியை கோப்பையில் காணோம். அவர் முகத்தில் ஏமாற்றம். பாதிரியார்
மனைவியைக் கேட்டார். "என்ன இன்று கோழிக் கறியைக் காணோம்?" மனைவி சொன்னார்
"நீங்கள்தான் உயிர்களைக் கொல்வது பாவம். அந்தப் பாவத்தை நாம் செய்யக்கூடாது என்று
இன்று காலை பிரசங்கம் செய்தீர்களே! அதனால் கறிசமைப்பதற்கு கடகத்தால்
மூடி வைத்த கோழியை திறந்து விட்டு விட்டேன்" என்றார். திகைத்துப் போன பாதிரியார்
உடனே மனைவியைப் பார்த்து "ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே! உனக்கல்லடி என் கண்ணே"
என்றார்.
இந்த ஊருக்குச் சொல்லும் பாதிரியார் மாதிரி கனடா அஸ்பெஸரஸ்
பயன்பாட்டை உள்நாட்டில் 99 விழுக்காடு தடைசெய்து விட்டது. ஆனால் அதே அஸ்பெஸ்ரை
கனடா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இராக், ஆப்கனிஸ்தான் போன்ற மூன்றாவது
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது! இப்படிக் கனடா ஏற்றுமதி செய்யும் அஸ்பெசின்
எடை ஆண்டொன்றுக்கு 500,000 மீட்றிக் தொன் ஆகும். உள்ளுரில் 6,000 மீட்றிக்
தொன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அஸ்பெஸ்ட் பயன்பாடு நுரைஈரல் புற்றுநோயை உண்டாக்குகிறது.
அஸ்பெஸ்டை உடைக்கும் போதோ, உராயும் போதோ அதிலுள்ள நார் காற்றில் கலந்து மூச்சை
இழுக்கும் போது நுரைஈரலில் ஒட்டிக் கொள்கிறது.
என்டிபி கட்சி உடல்நலத்துக்கு கேடு செய்யும் இந்த அஸ்பெஸ்ரஸ்
ஏற்றுமதியை தடைசெய்யுமாறு பெரிய இயக்கம் ஒன்றை நடத்துகிறது. அதன் கேடுகளை
விளக்கி ஒட்டாவா சன், எட்மன்ரன் யேர்னல் ஆகிய இரண்டு நாளேடுகளிலும் முழுப்பக்க
விளம்பரம் செய்தது. நூற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள், நல்வாழ்வு
ஆதரவு அமைப்புக்கள் அந்த விளம்பரத்தை வழிமொழிந்திருந்தன. ஆனால் கார்ப்பர் அரசு
அசைந்து கொடுப்பதாக இல்லை.
உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய
ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில்
அஸ்பெஸ்டின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட்
இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.
முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும்
அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி
செய்வதில் பின் நிற்பதில்லை. முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமை பற்றி
உலகுக்கு உபதேசம்!
கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம் செய்கிறது. ஆனால்
உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும்
பொருளை - ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை
முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி
பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீது படையெடுத்து இலட்சக்கணக்கில்மக்களை
கொன்று குவித்தது. இப்போது ஆப்கனிஸ்தான் மீது படையெடுத்து மக்களைக்
கொன்று குவிக்கிறது!
உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய
ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில்
அஸ்பெஸ்டின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட்
இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.
முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும்
அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி
செய்வதில் பின் நிற்பதில்லை. முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமைப் பற்றி
உலகுக்கு உபதேசம்!
கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம் செய்கிறது. ஆனால்
உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும்
பொருளை - ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை
முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி
பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீதும் ஆப்கனிஸ்தான் மீதும் படையெடுத்து
மக்களைக் கொன்று குவிக்கிறது!
உடல்
நலனுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய அஸ்பஸ்டோஸ் தகடுகளைப்
பயன்படுத்துவதற்கு கனடா தடை விதித்துள்ளது.
எனினும், அஸ்பஸ்டோஸ் வளங்களை அகழ்ந்து தகடுகளை உற்பத்தி செய்து
வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
பணம் ஈட்டுவதற்காக தீங்கு ஏற்படக் கூடிய பொருட்களை விற்பனை
செய்வது நியாயமாகாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமர் ஸ்டீவன் ஹார்பரின் அரசாங்கம் அஸ்பஸ்டோஸ் பாவனை
தொடர்பில் கவனயீனமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குற்றம்
சுமத்தியுள்ளார்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு குறிப்பாக ஆசிய
நாடுகளுக்கு அதிகளவில் அஸ்பஸ்டோஸ் தகடுகள் ஏற்றுமதி
செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய பாராளுமன்றக் கட்டடங்களை புனரமைப்பதற்காக எதிர்வரும்
தசாப்தங்களில் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படவுள்ளன.
குறிப்பாக அஸ்பஸ்டோஸ் தகடுகள் பயன்படுத்தப்பட்டு
நிர்மாணிக்கப்பட்டுள்ள கூரைகள் புனரமைக்கப்பட உள்ளன.
அஸ்பஸ்டோஸ் தகடுகளுக்கு தடை விதிக்கும் பிரகடனத்தில்
கைச்சத்திடும் கனடா மறுபுறத்தில் வறிய நாடுகளுக்கு அஸ்பஸ்டோஸ்
தகடுகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதாக குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
அஸ்பஸ்டோஸ் தகடுகளினால் உடலுக்கு ஏற்படக் கூடிய தீங்குகள்
குறித்து மருத்துவர்கள் மிகத் தெளிவான அறிக்கையை தொடர்ச்சியாக
வெளியிட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அஸ்பஸ்டோஸ் தகடுகளை உற்பத்தி செய்வதை தடை செய்யுமாறு
ஐக்கிய நாடுகள் சபை விடுத்த கோரிக்கையை கனடா
நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளுரில்
தடைசெய்யப்பட்ட அஸ்பெஸ்ரஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!
திருமகள்
உள்ளுரில்
தடைசெய்யப்பட்ட அஸ்பெஸ்ரஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி! என்ற தலைப்பில் கடந்த
நொவெம்பர் 'இன்றைய நாள் குறிப்பு' என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தேன்.
அதில்
சொல் ஒன்று செயல் ஒன்று நடப்பவர்களைச் சித்தரிப்பதற்கு
பாதிரியார் மனைவியைப் பார்த்து "ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே!
உனக்கல்லடி என் கண்ணே" என்ற கதையை மேற்கோள் காட்டினேன்.
அந்தப் பாதிரியார் மாதிரி கனடா அஸ்பெஸரஸ் பயன்பாட்டை
உள்நாட்டில் 99 விழுக்காடு தடைசெய்து விட்டது. ஆனால் அதே அஸ்பெஸ்ரை கனடா, இந்தியா,
இலங்கை, பாகிஸ்தான், இராக், ஆப்கனிஸ்தான் போன்ற மூன்றாவது நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்கிறது! இப்படிக் கனடா ஏற்றுமதி செய்யும் அஸ்பெசின் எடை
ஆண்டொன்றுக்கு 500,000 மீட்றிக் தொன் ஆகும். உள்ளுரில் 6,000 மீட்றிக்
தொன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அஸ்பெஸ்ட் பயன்பாடு நுரைஈரல் புற்றுநோயை
உண்டாக்குகிறது. அஸ்பெஸ்டை உடைக்கும் போதோ, உராயும் போதோ அதிலுள்ள நார்
காற்றில் கலந்து மூச்சை இழுக்கும் போது நுரைஈரலில் ஒட்டிக் கொள்கிறது"
என்று எழுதியிருந்தேன்.
என்டிபி கட்சி உடல்நலத்துக்கு கேடு செய்யும் இந்த அஸ்பெஸ்ரஸ்
ஏற்றுமதியை தடைசெய்யுமாறு பெரிய இயக்கம் ஒன்றை நடத்துகிறது. அதன் கேடுகளை
விளக்கி ஒட்டாவா சன், எட்மன்ரன் யேர்னல் ஆகிய இரண்டு நாளேடுகளிலும் முழுப்பக்க
விளம்பரம் செய்தது. நூற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள், நல்வாழ்வு
ஆதரவு அமைப்புக்கள் அந்த விளம்பரத்தை வழிமொழிந்திருந்தன. ஆனால் கார்ப்பர் அரசு
அசைந்து கொடுப்பதாக இல்லை.
உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய
ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில்
அஸ்பெஸ்டின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட்
இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.
முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும்
அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி
செய்வதில் பின் நிற்பதில்லை. முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமை பற்றி
உலகுக்கு உபதேசம்!
கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம் செய்கிறது. ஆனால்
உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும்
பொருளை - ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை
முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி
பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீது படையெடுத்து இலட்சக்கணக்கில்மக்களை
கொன்று குவித்தது. இப்போது ஆப்கனிஸ்தான் மீது படையெடுத்து மக்களைக்
கொன்று குவிக்கிறது!
உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) நடத்திய
ஆய்வின் படி உலகில் 125 மில்லியன் (12.5 கோடி) மக்கள் தங்கள் வேலைத்தளங்களில்
அஸ்பெஸ்டின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். அய்ம்பது நாடுகள் அஸ்பெஸ்ட்
இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.
முதலாளித்துவ நாடுகள் எந்தப் பொருள் எக்கேட்டை விளைவித்தாலும்
அந்தப் பொருளால் இலாபம் வருகிறது என்றால் அப்படியயான பொருட்களை ஏற்றுமதி
செய்வதில் பின் நிற்பதில்லை. முதலில் இலாபம். பின்புதான் மனிதவுரிமைப் பற்றி
உலகுக்கு உபதேசம்!
கனடா உலகுக்கு மனிதவுரிமை பற்றி உபதேசம் செய்கிறது. ஆனால்
உள்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு ஆபத்தான பொருளை- புற்றுநோய்க்கு ஆளாக்கும்
பொருளை - ஏழை நாடுகளுக்கு வருவாய் கருதி ஏற்றுமதி செய்கிறது. இந்த இரட்டை
முகம், இந்த இரட்டை அணுகுமுறை முதலாளித்துவ நாடுகளுக்குக் கைவந்த கலை. அமைதி
பற்றிப் பேசும் அடமெரிக்காதானே இராக் மீதும் ஆப்கனிஸ்தான் மீதும் படையெடுத்து
மக்களைக் கொன்று குவிக்கிறது!
எங்களுக்குள்ளும் இலட்சுமி மிட்டல்கள்
முளைத்துவிட்டார்களா?
திருமகள்
தமிழர்கள் பொதுவாக கையிறுக்கக்காரர்கள் எனப் பெயர்
எடுத்தவர்கள். பொதுக் காரியங்களுக்குக் கொடுக்கப்
பின்னடிப்பார்கள். ஆனால் இரண்டு வேறு நிகழ்ச்சிகளுக்குப்
பணத்தைத் தண்ணீர் போல் செலவழிப்பார்கள். ஒன்று கோயில் மற்றது
திருமணம்.
கனடாவில் உள்ள கோயில்கள் அதை நடத்துபவர்களுக்கு காசு மரம்.
தங்கச் சுரங்கம். அள்ள அள்ள வற்றாத அட்சர பாத்திரம். கற்பகதரு.
காமதேனு. தனிப்பட்ட கோயில்களை நடத்தும் முதலாளிகள்
காட்டில் ஒரே டொலர் மழைதான். இரண்டு சில்லு
மிதிவண்டியில் ஓடினவர்கள் ஒன்றுக்குப் பல விலையுயர்ந்த ஆடம்பர
மகிழுந்துகளில் உலா போகிறார்கள். இது நல்ல முன்னேற்றம்.
பிராமணர்களை அறுதொழிலோர் என அழைப்பார்கள். அதாவது வேதம்
ஓதல் ஓதுவித்தல், வேள்வி செய்தல் செய்வித்தல், பிச்சை
எடுத்தல் பிச்சை கொடுத்தல் (கற்றல்
கற்பித்தல், வேதல் வேட்டல், ஈதல் ஈட்டல்) என்ற
ஆறு தொழில்கள்
என
அர்த்த சாஸ்திரம் கூறும்.
பிராமண, ஸத்திரிய, வைச்ய, சூத்ர என்ற
நான்கு வர்ணங்கள் என்னால் தோற்றுவிக்கப்பட்டன
அதனை என்னால் கூட மாற்றமுடியாது (சாதுர்வர்ணியம்
மயா ஸ்ருஷ்டம்) என்று கிருஷ்ண பகவான்
கீதையில் கூறுகிறார். இந்த நான்கிலும்
பிராமணன்தான் முதலில் வைக்கப்படுகிறான்.
வேதங்களின் விளக்கநூலான சதபத பிராமணத்தில்தான் பிராமணர்களின்
ஆறு தொழில்கள் சுட்டப்படிருக்கின்றன. பின்னர் யாக்ஞவல்கிய
ஸ்மிருதி பத்துவகையான ஆசாரங்களை அவர்களுக்குப்
பட்டியலிடுகிறது. பின்னர் வந்த ஸ்மிருதிகளில் பதினாறு
ஆசாரங்களாக அவை மேலும் விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.
இவையனைத்துமே கல்வியையும் வேள்வியையும் மட்டுமே செய்து
அதற்குரிய வாழ்க்கைநெறியைக் கடைப்பிடித்து வாழவேண்டியவர்களாக
பிராமணர்களை வகுத்துரைப்பவை. அடுத்த
வேளைக்கு எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது
என்று நினைக்கிறவனே
உண்மையான
பிராமணன்.
ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று றுபுரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் .. ..
எனப்
பதிற்றுப்பத்துக்
(24)
கூறுகிறது. தொல்காப்பியரும் “ அறுவகைப்பட்ட பார்ப்பனப்
பக்கமும்" (சொல்-75
) எனக் கூறுகிறார்.
“ஓதல், ஒதுவித்தல், வேட்டல்,
வேட்பித்தல்
ஈதல், ஏற்றல் என்றிவை ஆறும்
ஆதி காலத்து அந்தணர் அறுதொழில்” - (திவாகரம் -
2365)
இன்று “அறுதொழிலோர்” என்ற
இலக்கணம் மாறி “அந்தணர்” என்பவரில் எண்ணற்ற பலர் ஏனைய
வர்ணத்தவரின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல்
தங்களது வழிமுறைகளை மறந்தும் பண்பாடுகளைத்
துறந்தும் ஒரு இழிவான நிலைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.
நிறைய பிராமணர்கள்
சந்தியா வந்தனம், அக்னி காரியங்கள், ஸ்ரார்த்தம் முதலான பித்ரு
கர்மாக்களை மிகவும் சிரத்தையுடன் செய்துவருகிறார்கள் என்று
ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள் எழுதியிருப்பதையும் ஏற்க முடியாது.
இந்தக் கோர கலியில் ஸ்வதர்மத்தை சிரத்தையுடன் சிலர்
(A very small percentage of Brahmins)
மட்டுமே அனுஷ்டித்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
ஸ்வதர்மத்தில் பிராமணர்களிடையே சிரத்தை நாளுக்கு நாள்
குறைந்துவருகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறேன்." (Brahmin
Today Magazine)
இன்றைய கலியுக பிராமணர்கள் செய்யாத தொழில்
இல்லை. உழவுத் தொழில், கூலித்தொழில் நீங்கலாக வணிகம்,
வழக்கறிஞர், பொறியாளர், அர்ச்சகர் என எல்லாத் தொழிலும்
செய்கிறார்கள்.
ஒரு காலத்தில் அருச்சகத் தொழில்
செய்யும் பிராமணர்களை ஏனைய பிராமணர்கள் மதிப்பதில்லை. ஆனால்
இன்று கனடாவில் அர்ச்சகத்தொழில் செய்பவர்கள்தான்
கோடீசுவரர்களாக வலம் வருகிறார்கள். விளக்குப் பூசை
செய்தால் ஒரே நாளில்
50,000
டொலர் சேர்ந்துவிடும். செலவு எண்ணெய்யும் திரியும்தான்.
இதைவிட
கோடிநாம அருச்சனை,
மோட்ச அருச்சனை, குடமுழுக்கு என
வெவ்வேறு வடிவில் பக்தியை மூடர்களிடம் சந்தைப் படுத்தி
பணம் சேர்க்கிறார்கள்.
இந்த
ஒரு தொழிலை மட்டும் நால்வருணத்தில் பிராமணர் நீங்கலாக மற்ற
வருணத்தார் செய்ய முடியாது. சூத்திரத் தமிழர்களும் தங்களுக்கு
மணி அடிக்கத் தெரியாது என எப்போதோ ஒப்புக்கொண்டு விட்டார்கள்.
கோயிலை அடுத்து தமிழர்கள்
ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் நிகழ்ச்சி திருமணம்.
திருமணச் செலவு அய்யாயரம், அய்ம்பதினாயிரம், இலட்சம் என்று
போய் இன்று பத்து இலட்சத்தை எட்டிவிட்டது. மாட்டு வண்டிலில்
போன மாப்பிள்ளை - பெண்பிள்ளை இப்போது உலங்குவானூர்தியில்
வந்து இறங்குகிறார்கள். கூறைச்சேலைக்கு மட்டும்
அய்ம்பதினாயிரம் செலவாம். நம்பமுடியவில்லை ஆனால்
சொல்கிறார்கள்.
இலட்சுமி மிட்டல் பெரிய கோடீசுவரர். தொழில் எஃகிரும்பு
உற்பத்தி. அவரது
23
அகவை மகளின் திருமணம்
2004 இல்
பாரிசில் நடந்தது. செலவு
60
மில்லியன் டொலர்!
எங்களுக்குள்ளும் இலட்சுமி மிட்டல்கள்
முளைத்துவிட்டார்களா?
http://www.ponguthamil.com/agappakkam/agappakkamcontent.asp?sectionid=7&contentid={32006131-EF87-46FD-B44A-F71725947F00}
பொங்குதமிழ் ஆசிரியருக்கு
வணக்கம். பொங்குதமிழின் ஆசிரிய குழு எழுதியுள்ள ஆசிரிய
தலையங்கத்தைப் படித்த பின்னர்தான் நாக.க.த. அரசுக்குப்
போட்டியாக இன்னொரு நா.க.த.அரசு முளைவிட்டுள்ளதை அறிந்து
கொண்டேன்.
கொஞ்சக் காலமாக நாகதஅ சனநாயக முன்னணி என்ற குறியீட்டோடு
செய்தித்தாள்களில் இயங்கி வந்தவர்கள் இப்போது நா.க.த.அரசாகவே
தோற்றம் பெற்றுள்ளார்கள்.
ஆசிரிய தலையங்கம் சொல்வது போல் .து வேண்டாத திருப்பணி. கடந்த
காலங்களில் இப்படியான தலைமைப் போட்டி காரணமாகவே நமது போராட்டம்
பலவீனம் அடைந்தது. 1976 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி
தொடங்கிய பின்னரே பேரளவு ஒற்றுமை ஏற்பட்டது.
இன்று வி.புலிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களுக்குள்
பிரிந்து நின்று போட்டி அமைப்புக்களை நடத்துகிறார்கள். ஒரு
தட்டில் உணவு உண்டவர்கள் இப்படி பிரிந்து நின்று அரசியல்
நடத்துவது தேவையில்லாத வேலை.
தலைமையகம் ஒரு கன்னமாகவும் அனைத்துலகம் மறு கன்னமாகவும்
பிரிந்து நிற்பதால் மாவீரர் அறிக்கை ஒன்றுக்குப் பதில் இரண்டு
வருகிறது.
தலைவர் இதனை ஒரு போதும் விரும்பி இருக்கமாட்டார். அனுமதித்தும்
இருக்க மாட்டார்.
இப்படிக் குரங்கும் பூனைகளும் அப்பம் பிரித்த கதையாக
தமிழ்மக்களைப் பிரிப்பது எதிரிக்குத்தான் இலாபம்.
எதிரி மகிந்த இராசபக்சே செய்யவேண்டிய வேலையை அனைத்துலகம்,
உலக தேசிய அவை,
நாகதஅ சனநாயக முன்னணி,
தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி
ஆகியவை சேர்ந்து செய்கின்றன. இதனால் எமது பகைவர்களது பணி
சுலபமாகிவிடுகிறது.
ஆசிரிய தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது போல உருத்திரகுமாரனது
தலைமை அமைச்சர் பதவி நிரந்தரமானது அல்ல.
நான்கு ஆண்டுகளுக்குத்தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதில் ஓராண்டு முடிந்து விட்டது.
மக்களது ஆதரவு இருந்தால் அடுத்த தேர்தலில் அவரைத் தோற்கடித்து
நா.க.த. அரசைக் கைப்பற்றலாம்.
புலம்பெயர் தமிழர்களை கூறுபோடுவதில் தமிழ்நெட் ஆசிரியர் பாரிய
பங்காற்றுகிறார் என்பது தெளிவாகிறது. புலம்பெயர் தமிழர்களை ஒரு
குடைக்குள்
கொண்டுவர வேண்டிய ஒருவர் மாற்று அணிகளை
உருவாக்கும் திருப்பணியில் இறங்கியிருப்பது ஏன் என்பது
தெரியவில்லைதமிழ்நெட் ஆசிரியர்
தானும் தனது அணியைச் சேர்ந்தவர்கள்தான் தமிழ் தேசியத்தை
முன்னெடுக்கும் பத்தரைமாற்றுத் தங்கக் கட்டிகள் போலவும்
மற்றவர்கள் பித்தளை போலவும் அவர் நினைக்கிறார்.
தமிழ்த் தேசியத்துக்கு முரணாக செயற்படுபவர்களை மக்கள் அடையாளம்
காண்பார்கள்.
சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருமலை
மாவட்டத்தில் இரா.சம்பந்தனையும்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவை சேனாதிராசா மற்றும் சரேஷ்
பிரேமச்சந்திரனையும் தோற்கடிப்போம் என்று கொடுக்குக் கட்டிக்
கொண்டு களத்தில் இறங்கி கட்டுக்காசையும் இழந்த கூட்டமே இப்போது
புலம்பெயர் தமிழர்களைப் பிரிப்பதிலும் முழு மூச்சாக
ஈடுபட்டுள்ளது. இதனை மக்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.
உண்மை என்னவென்றால் தமிழ் தேசியத்துக்கும் தமிழ்
இனமானத்துக்கும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
சொந்தம் கொண்டாடக் கூடாது. தமிழினத்தின் ஒற்றுமையைக்
குலைப்பவர்கள் உண்மையான தேசியவாதகளாக இருக்க முடியாது.
அவர்கள் உள்ளுக்குள் இருந்து போராட வேண்டும்.
ஒரு வீட்டை இடிப்பது சுலபம். அதற்கு சில முட்டாள்க்கள் போதும்.
வீட்டைக் கட்டுவதற்குத்தான்
கட்டுமானப் பணியாளர்கள் தேவை.
புலம்பெயர் தமிழ்மக்கள்
யார் உண்மையான தேசியவாதிகள் யார் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும்
தேசியவாதிகள் என்பதை இனம் காண வேண்டும். அப்படிச் செய்வார்கள்
என நம்புகிறேன்.
(June, 2011)
நீங்கள் இருவரும் தமிழினத்தை கரைசேர்க்கும்
பாரிய பொறுப்பு உங்கள் தோள்மீதும் தலைமீதும்
சுமத்தப்பட்டிருப்பதாகவும் அதனால் "எங்கே இந்தியா இலங்கையைக்
காப்பாற்ற விரிக்கும் சதிவலையில் விழுந்து,
போர்க்குற்றத்திலிருந்து மகிந்தாவைக்காப்பாற்றுவதற்கு
ஆதரவாகச் செயற்பட்டு, தெரிந்தோ தெரியாமலோ அல்லது
நிற்பந்தத்திலோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழினத்தைக்
காட்டிக்கொடுக்க முனையும்போது, இவர்களுக்குப் பணபலம் மற்றும்
தார்மீக ஆதரவைவழங்கிவரும் புலம்பெயர் தமிழ்த்தலைமைகள்
இவர்களைத் தடுத்து நிறுத்துவார்களா அல்லது இவர்களும் சேர்ந்து
எம்மினத்தைக் காட்டிக் கொடுப்பார்களா?" என்று அன்னவிசாரம்
அதுவே விசாரம் ஆக இருப்பதைப் போல நடந்து கொள்கிறீர்கள். அதைப்
பார்த்து நகைப்பதைவிட வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.
நீங்கள் இருவரும் பத்தரைமாற்றுத் தேசியவாதிகள்
நாங்கள் எல்லாம் பித்தளைகள் அப்படித்தானே? கவலையை விடுங்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தங்கள்
பொன்னான வாக்குகளைப் போட்டு அவர்களை நாடாளுமன்றம் அனுப்பிய
தமிழ்மக்கள் ததேகூ தமிழினத்தைக் காட்டிக் கொடுக்க முனையுமா
இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள்.
வெளிநாட்டில் இருக்கும் உங்கள் இருவருக்கும்
அந்தக் கவலை வேண்டாம். அதுமட்டுமல்ல "பணபலம் மற்றும் தார்மீக
ஆதரவைவழங்கிவரும் புலம்பெயர் தமிழ்த்தலைமைகள்" பற்றியும்
உங்களுக்குக் கவலை வேண்டாம்.
புலம்பெயர் தலைமைகள் உங்களைப் போல் தனி
ஆவர்த்தனம் வாசிப்பவர்கள் அல்ல. அமைப்பாகச் செயல்படுபவர்கள்.
அதில் உங்களைவிட பட்டறிவும் படிப்பும் உள்ளவர்கள்
இருக்கிறார்கள்.
உங்களை அதிக புத்திசாலிகள் என நினைத்துக்
கொண்டு இப்படி மனம்போன போக்கில் சதிவலை அது இது என்று எழுதுகிற
நீங்கள் இருவரும்தான் இந்தியாவை சிறிலங்கா பக்கம்
தள்ளிவிடுகிறீர்கள். சிங்களவனிடம் காணப்படும் இராசதந்திரத்தில்
நூறில் ஒரு பங்குகூட உங்கள் இருவரிடமும் இல்லை. இன்றைய
உலக ஒழுங்கில் இந்தியாதான் இந்து சமுத்திர பிராந்தியத்தின்
பெரியண்ணன். அமெரிக்கா கூட அங்கே வாலாட்ட முடியாது. போரின்
போது அதைப் பார்த்தோம். இது கூட உங்களுக்குத் தெரியாதது அல்லது
புரியாதது பெரிய சோகம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழினத்தின்
ஒற்றுமையை உடைத்து அதை எதிரிக்குக் காட்டிக் கொடுத்தது
நீங்கள்தான். நாங்களல்ல. நீங்கள் வழங்கிய பணபலம் வானொலிப் பலம்
காரணமாகத்தான் டக்லஸ் தேவானந்தாவுக்கு மேலதிகமாக ஒரு இருக்கையை
தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாரை வார்த்தீர்கள்! அதைத்தான்
இப்பவும் செய்ய மெத்தப் பாடுபடுகிறீாகள்.
நக்கீரன்
அறம் முதலில் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்!
(இன்றைய நாட்குறிப்பு)
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி
உண்டு
"Charity should begin at home"
அதாவது முதலில் ஒருவன் தனது மக்களுக்கு அறம் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் மற்றவர்களுக்கு அறம் செய்யலாம். தமிழீழத்தில் எமது
மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கும் வழியில்லாமல் தறப்பாள்
குடிசைக்குள் வாழும் போது இங்குள்ள கனடிய தமிழர்களுக்கான தேசிய
அவை (NCCT) "Heart and Stroke" என்ற அறக்
கட்டளையோடு இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறது.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இது நல்ல செயல் எனப் படும்.
கொஞ்சம் ஊன்றி சிந்தித்தால் "பெற்றதாய் கிண்ணிப்பிச்சை
எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம்." என்ற
பழமொழியை நினைவூட்டும்.
"Heart and Stroke"
போன்ற அறக்
கட்டளைகளுக்குக் கொடுக்கும்
நன்கொடையில் பாதிக்கு மேல்
நிருவாகச் செலவுக்குப் போய்விடுகிறது. சிலசமயம் நிருவாகச்
செலவு 75 விழுக்காட்டையும் தாண்டுவது உண்டு. இந்த
நிறுவனங்கள் தலைமை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பள
விபரத்தை வெளியிடுவதில்லை. ஆனால் அது ஆண்டுக்கு 300,000
- 500,000 டொலர்களாக இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இது
தொடர்பாக ஏப்ரில் 14, 2010 நாளிட்ட குளோப் அன்ட் மெயில்
நாளேட்டில்
Six-figure salaries the norm at top charities
என்ற தலைப்பில்
வெளிவந்த கட்டுரை பல முக்கிய தகவல்களைத் தருகிறது.
Some of Canada’s largest and best-known charities are paying
top officials more than $300,000 annually, government
filings show.
Top earners include executives at Plan International Canada
Inc.,
Heart & Stroke Foundation of Ontario,
York University Foundation and five hospital foundations.
Those charities all paid their chief executives more than
$300,000 last year and some, including York, doled out more
than $350,000.
Several other charities – including the British Columbia’s
Children’s Hospital Foundation and Toronto General & Western
Hospital Foundation – paid top executives between $250,000
and $300,000. And still others, including the Canadian Red
Cross, paid officials between $200,000 and $250,000.
The compensation figures are contained in the charities’
2009 filings with the Canada Revenue Agency and they mark
the first time Canadian charities have disclosed
compensation information for their ten highest-paid
officials. Previously charities only had to provide limited
information about their five best-paid officers.
The new filings still offer an incomplete picture. There are
no exact salary figures or names of the highest-paid
individuals. Instead, charities must identify the number of
people who earn a salary within a certain range, with the
top range "$350,000 and over." 9Compensation among charities
has been a hot topic since last fall when Toronto’s Hospital
for Sick Children revealed it paid its former president
$2.7-million in 2008.
Liberal MP Albina Guarnieri recently introduced a private
member’s bill to require charities to reveal details about
their five highest-paid executives and cap salaries at
$250,000.
Ms. Guarnieri said Tuesday that the more expanded disclosure
in the CRA filing doesn’t go far enough.
The new form "doesn’t really provide the donor with the type
of disclosure that he really deserves," she said. "What I am
asking is for the same disclosure that companies have to
give to their shareholders and that governments give
taxpayers."
Ted Garrard, chief executive of Sick Kids Foundation, whose
annual salary is $400,000 plus up to $100,000 as a bonus,
agreed that more disclosure was needed. "Donors, like
shareholders, should have the opportunity to know," he said
Tuesday. (http://www.albinaguarnieri.com/media/articles/six_figure.asp)
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகள் இன்று பெருமளவு
குறைந்து போய்விட்டது. அது நன்றாக இயங்கிய காலத்தில் அதன்
நிருவாகச் செலவு 5 விழுக்காட்டுக்குக் குறைவாகவே இருந்தது.
இயக்குநர் அவைியல் இருந்த எவருக்கும் எந்தக் கொடுப்பனவும்
கொடுக்கப்படவில்லை.
அறம் செய்ய வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. முதலில்
தங்கள் வாழ்வாதாரங்களை முற்றாகத் தொலைத்துவிட்டு அல்லல் படும்
எமது உடன்பிறப்புகளுக்குக் கைகொடுங்கள். போரின்
இறுதிக்கட்டத்தில் வன்னியில் இருந்து காயப்பட்ட 5,000 பேர்
செஞ்சிலுவைக் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டு
செல்லப்பட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர்கள்
பள்ளிக்கூடங்களிலும் குடிசைகளிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள்
கொடுக்கும் உணவை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.
இவர்களில் பலர் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்து விட்டார்கள்.
அண்மையில் இவர்களை முன்னாள் திருகோணமலை நா.உ.
துரைரத்தினசிங்கம் சென்று பார்த்தார். அந்த மக்கள் விரக்தியின்
விளிம்பில் இருக்கிறார்கள். நுனிநாக்கில் ஆங்கிலம்
பேசும் கனடிய தமிழர்களுக்கான தேசிய அவை உறுப்பினர்களுக்கு இது
பற்றி ஒன்றும் தெரியாது. சும்மா இருப்பதே சுகம் என்று
இருக்கிறார்கள்.
நக்கீரன்
தங்கமே தங்கம்!
(இன்றைய
நாட் குறிப்பு)
தங்கம் விலை வரலாறு காணாத
உயர்வை எட்டியுள்ளது. இதனால்
ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி
அடைந்துள்ளார்கள்.
ஒரு அவுன்ஸ் தங்கம்
உலகச் சந்தையில் 1486.46 அமெரிக்க டொலராக ஏறியுள்ளது. கடந்த 30
நாட்களில் 70 டொலராலும், கடந்த ஆண்டைவிட 350 டொலராகவும் (30.84
விழுக்காடு) கடந்த 5 ஆண்டில் 870 டொலராகவும் (144.12
விழுக்காடு) உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை இந்த
ஆண்டு முடிவில் 2000 டொலரை எட்டும் எனச்
சொல்லப்படுகிறது. தங்க நாணயங்கள் 1530 டொலராக
உயர்ந்துள்ளது.
ஒரு அவுன்சில் (1
troy ounce)
31.1034768 கிராம் உள்ளது.
ஒரு கிராமில் 0.0321507466 அவுன்சு ( 1 gram =
0.0321507466 troy
ounces) உள்ளது.
தமிழ்நாட்டில்
ஒரு பவுன் (8 கிராம்) ரூ.16
ஆயிரத்தை தாண்டியதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களை
மட்டுமல்லாது வசதி படைத்த பணக்காரர்களையும் இந்த விலையேற்றம்
அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தங்க நகை அணிவதை
விரும்பாதவர்கள் அதிலும் குறிப்பாக தங்கத்தின் மேல் ஆசை
கொள்ளாத பெண்களே இல்லை. திருமணம், கோயில்
விழா உட்பட எந்த விழாவாக இருந்தாலும்
பெண்கள் கழுத்து நிறைய நகை அணிந்து வலம் வருவதைத்தான்
பெருமையாக கருதுகிறார்கள். திருமணம் பேசி முடிக்கும் மணப்
பெண்களுக்கு மணமகன் வீட்டார் முதலில் கேட்கும் கேள்வி
பெண்ணுக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்?
என்பதுதான்.
பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும்
கழுத்தில் சங்கிலி,
கைவளையல், இரண்டு மூன்று
மோதிரம் என்று நகை அணிவதை விருப்பமாகக் கொண்டுள்ளனர்.
கடந்த 1 ஆண்டில்
மட்டும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் 3
ஆயிரத்து 240 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.
கடந்த ஆண்டில் (2010) இதே
மாதத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.1,598-க்கு விற்றது. அதாவது 1
பவுன் விலை ரூ.12 ஆயிரத்து 784-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது நேற்று மாலையில் (திங்கட்கிழமை) ஒரு
கிராம் 2003-க்கும், 1 பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 24
க்கும் விற்பனை ஆனது. இதன்
மூலம் ஒரு பவுன் தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.16 ஆயிரத்தை
கடந்துள்ளது.
கடந்த 1920-ம் ஆண்டு ஒரு பவுன்
தங்கம் 21 ரூபாய்க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு
ஆண்டும் தங்கம் இறக்கமே காணாமல் தொடர்ந்து உயர்வே கண்டு
வந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தங்கம் என்ன
விலையில் விற்பனை ஆனது என்ற விவரம் வருமாறு:
1921- ரூ.21
2000- ரூ.3,320
2002- ரூ.3,368
2003 முதல் 2005-ம் ஆண்டு வரை
தங்கம் விலை பவுனுக்கு ரூ.4 ஆயிரம் அளவில் கட்டுக்கோப்புடன்
விற்பனையாகி வந்தது.
2006- ரூ.6,160
2007- ரூ.7,076
2008- ரூ.8,072
2008 ஆம்
ஆண்டிற்கு பிறகு தங்கம் விற்பனையில் சூடு பிடித்தது.
2009 ஜனவரியில் முதல் முறையாக ஒரு பவுன் தங்கத்தின்
விலை ரூ.10 ஆயிரத்தை கடந்தது. அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில்
இது ரூ.11 ஆயிரத்து 232-க்கு உயர்ந்தது.
ஒரே வருடத்தில் அதாவது 2010
ஜனவரியில் தங்கம் விலை ரூ.12 ஆயிரத்து 104-க்கு அதிகரித்தது.
அடுத்த 6 மாத காலத்தில் யுன்
2 ஆம் நாள் விலை ரூ.14 ஆயிரத்தை
கடந்தது. அதன் பின்னர் மாதா மாதம் தொடர்ந்து உயர்ந்து,
டிசம்பர் மாதத்தில் இந்த விலை ரூ.15 ஆயிரத்தை எட்டியது.
தங்கத்துக்கு ஏன் இத்தனை மவுசு? அதன் மஞ்சள்
நிறம் முதற் காரணம். இரண்டாவது காரணம் அது பெருமளவில்
கிடைப்பதில்லை.