இரணடாயிரம் ஆண்டுகளாக மறக்கப்பட்ட - மறைக்கப்பட்ட திருக்குறள்

நக்கீரன்
 

திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் இன்று பரவலாகப் பேசப்படுகிறது. இலக்கிய மேடைகளில் மட்டுமல்ல அரசியல், பொருளாதார மேடைகளிலும் திருக்குறள் பேசப்படுகிறது. திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டாவிட்டால் பேச்சாளர்களது உரை நிறைவாக இருக்காது என்ற ஒரு படிமம் கூட இன்று இருக்கிறது.

இன்று திருக்குறள் பற்றி வானளவு கற்றோராலும் மற்றோராலும் போற்றிப் பேசப்பட்டாலும் நீண்ட காலமாக மறக்கப்பட்ட நூலாகவும் மறைக்கப்பட்ட நூலாகவும் இருந்து வந்திருக்கிறது.

சோழ, சேர, பாண்டிய மன்னர்களில் எவருமே திருக்குறளைப் போற்றவில்லை. வாழ்க்கை நெறி காட்டும் குறள்களில் ஒன்றாவது கல்வெட்டில் வெட்டப்படவில்லை. கோயில் சுவர்களில் எழுதப்படவில்லை. என்ன காரணம்?

வள்ளுவர் குறளில், கடவுள், கோயில், சாதி, ஆத்மா, பிரார்த்தனை, அருச்சனைஈ அபிசேகம், தோச பரிகாரம் போன்ற சொற்களை 1330 பாக்களில் எங்கு தேடினாலும் பார்க்க முடியாது. பிள்ளையைக் கொன்றாலும் மனைவியைக் கொலை செய்தாலும் கை காலை வெட்டினாலும் கணிகையருடன் காலம் கழித்தாலும் ஒரு இரவு கண்விழித்திருந்தால் போதும் சிவபதம் கிட்டும் என்ற குறுக்கு வழிகள் திருக்குறளில் மருந்துக்கும் இல்லை.

புத்தர், மனித இனத்தின் முதல் புரட்சியாளர் ஆவார். இந்திய சிந்தனையாளர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர். புத்தர். அறிவுடையோர் தங்கத்தை உரைத்துப் பார்த்து ஏற்பது போலவே மக்கள் தான் சொல்வதை நன்கு ஆய்ந்த பின்னரே ஏற்க வேண்டும் என்றார். “யார் எதைச் சொன்னாலும் எங்கு படித்துக் கொண்டாலும் நானே சொல்லியிருந்தாலும் அவை பகுத்தறிவுக்கு ஒத்துப் போகிறதா? என்பதைக் கண்டறிந்த பின்னரே நம்ப வேண்டும். அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களை மற்றவர் எவரும் காப்பாற்ற மாட்டார்கள். எங்களை நாங்கள்தான் காப்பாற்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனது உடல் நலம் நோயின்மை ஆகியவற்றுக்கு தானே பொறுப்பாவான். மற்றவர்கள் பொறுப்பாக இருக்க முடியாது. நாங்களே வழியைத் தெரிந்து கொண்டு அதில் நடக்க வேண்டும்” என்றார்.

புத்தர் நால்வருண வேறுபாட்டை நிராகரித்தார். மனிதன், உலகம், அண்டம் இவற்றுக்குக் காரணமாக ஒரு கருத்தா இருப்பதை மறுத்தார். கடவுள் பற்றிய விசாரணை அல்லது நம்பிக்கை வீடுபேற்றிற்கு (நிர்வாணம்) அவசியம் அற்றது என்பது அவரது நிலைப்பாடாகும்.

‘உலகை விட்டு ஓட’ விரும்பும் சமய - சமூகக் கருத்துகள் எல்லாம் ஆரியர் எனப்படுவோரால் திராவிட - தமிழ் - இனத்தாரைத் தாழ்த்துவற்கும் சுரண்டுவதற்கும் உருவாக்கப் பட்டவை ஆகும்.

புத்தர் வழியில் தோன்றிய சிந்தனையாளர் திருவள்ளுவர் ஆவார். திருவள்ளுவர் எந்த மதத்தையோ, மதவாதிகளையோ பின்பற்றி அறநெறிகளைக் கூறவில்லை. உலக நிலமைகளை ஆராய்ந்து மக்கள் வாழும் வழியைக் கூறியவர். நாம் வாழ்க்கையில் கொள்ள வேண்டியவை எவையெவை, தள்ள வேண்டியவை எவையெவை
(Do’s and Dont’s)  என்பதைப் பட்டியல் போட்டுச் சொன்னவர்.

திருக்குறள் நல்லொழுக்கம், நற்பழக்கம், நற்சிந்தனை, நல்லறிவு போன்றவற்றைப் படிப்பிக்கிறது. சுருங்கச் சொன்னால் ஒரு நாகரிகம் படைத்த, பண்பாடுடைய மனிதன் எப்படி இருப்பான், இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறள் எடுத்துச் சொல்கிறது. உண்மையில் திருக்குறள் இன்ன மதத்தினர் என்றில்லாது எல்லோருக்கும் அதுவொரு பொதுவான மறை நூலாகத் திகழ்கிறது.

மேலும் அறன்வலியுறுத்தல், அன்புடமை, ஒழுக்கம் உடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, அருள் உடைமை, கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, மெய்யுணர்தல், அவா அறுத்தல், கள் உண்ணாமை பற்றிய திருவள்ளுவரின் கோட்பாடுகள் புத்தரின் கோட்பாடுகளை எதிரொலிப்பதாக இருக்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருவள்ளுவர் அறுதியிட்டுக் கூறியதன் மூலம் சநாதன தர்மத்தின் அடிநாதமான வருணாச்சிரம தர்மத்தையும் அதன் உட்பிரிவான சாதி அமைப்பையும் வள்ளுவர் முற்றாக நிராகரித்தார்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின்.                                            
(குறள் 280)

என்ற குறள் மூலம் திருவள்ளுவர் தலையை மொட்டை அடிக்கும் பவுத்த தேரர்களையும் சடை முடிவளர்க்கும் சமண – வைதீக முனிவர்களையும் கடிகிறார்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்டாலும் - காட்சியும் கருத்துமாகிய எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினும் - அதனை அப்படியே ஏற்றுவிடாமல் அதன் உண்மையை அறிந்து கொள்வதே அறிவு ஆகும். குணம், கல்வி, பொருள் ஆகியவற்றால் வரும் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம் தம் வினையே அன்று வேறு காரணம் இல்லை. ஒருவன் மேற்கொண்ட முயற்சி தெய்வத்தால் ஆகாதெனினும் அம் முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன் தரும். உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்தின் வடிவு என்;பது திருவள்ளுவரின் மதம். மனிதனே தனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக இருக்கிறான் என்றார்.

பார்ப்பனர் பார்வையில் திருக்குறள் தீண்டத்தகாத நூலாகப் பார்க்கப்பட்டது!

1723 இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி தமிழ் படிக்க விரும்பினார். அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தார் அயோத்திய தாசரின் பாட்டனரானா கந்தசாமி என்பவர்.

எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க வந்த பிராமணர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்தா ரென்றார். அதற்கு அவர்கள் அவர் தீண்டத்தகாதவர். அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலைச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம். ஏன் இப்படி பிராமணர்கள் கருதுகிறர்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் துரை கேட்க, எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால், உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சென்ற வழியிலும் சாணத்தை கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கந்தசாமி கூறினாராம்.

உண்மையான காரணத்தைப் புரிந்துகொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். 1819 இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று. (குறளும் அயோத்திதாசரும் என்ற தலையங்கத்தில் செந்தமிழ்ச் செல்வி, மார்ச் 2000)

தமிழ்நாட்டில் மட்டுமல்ல தமிழ்கூறும் நல்லுலகத்தில் பாரதம், இராமாயணம் பரவிய அளவிற்கு, கீதைப் பரப்பப்பட்ட அளவிற்கு மற்ற மத நூல்கள் பரப்பப்பட்ட அளவிற்கு திருக்குறள் பரப்பப்படவில்லை என்பது ஒரு சோக வரலாறு.

இரட்டைக் காப்பியம் என்று போற்றப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டின் ஆசிரியர்கள் மட்டும் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார்கள். சாத்தனார் திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் எனப் பாராட்டியிருக்கிறார்.

சைவ நாயன்மார்களோ, வைணவ ஆழ்வார்களோ திருக்குறளை மேற்கோள் காட்டிப் பாடல்கள் பாடியதாகச் சான்றில்லை.

தமிழகத்தை ஆண்ட பிற்கால தமிழ் மன்னர்கள் ஆரியப் பண்பாட்டுக்கு அடிமைப்பட்டுப் போனதால்; ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுநீதி வழிதான் செங்கோல் செலுத்தினார்கள். அதனால் பொதுமறையான திருக்குறள் புறந்தள்ளப்பட்டது. தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் தாழ்த்தப்பட்டு வட மொழியும் வடமொழி இலக்கியங்களும் ஏற்றம் பெற்றன.

பவுத்தர், சமணர் கழுவேற்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். பௌத்த, சமணப் பள்ளிகள் விகாரைகள் இடிக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்பட்டன. பௌத்த, சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்பட்டனர். சமயம் மாற மறுத்தோர் தீண்டாதவர்களாக ஒதுக்கப்பட்டனர். சமண, பவுத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பித்தார்கள்.

வைணவ - சைவ – பவுத்த – சமண சமயங்களுக்கு இடையே இடைவிடாது நடைபெற்ற போர்களினால் தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்பட்டன.

வைணவ - சைவ – பவுத்த – சமண சுவடிகளின் தகைமையும் தகுதியும் இரண்டு முறைகளில் சோதிக்கப்பட்டன. நெருப்பில் இடப்பட்டும் ஓடும் நீரில் இடப்பட்டும் சோதிக்கப்பட்டன. தோற்றவை அழிந்து போயின. ஆற்று வெள்ளப்பெருக்கில தமிழ்ச் சுவடிகளை எறிந்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொன்னதை நம்பிய தமிழர்கள் அவற்றை வைகையிலும் காவிரியிலும் எறிந்தார்கள்!

இன்று கிடைத்திருக்கும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இலக்கியங்களும், அய்ம்பெரும் காப்பியங்களும் அய்ம்சிறு காப்பியங்களும் நெருப்புக்கும் நீருக்கும் தப்பிய நூல்களாகும்.

தொகை நூல்களில் தொகுக்கப்பட்ட சில ஆயிரம் பாடல்களுக்கு வெளியே தொகுக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் பாடல்கள் மறைந்துபோயின. அதனால் தமிழர்தம் விரிவான ஒரு இலக்கியப் பரப்பை, பெருந்திணை மற்றும் புறத்திணைக் களத்தை இழந்துவிட்டோம்.

தமிழ் அறிவின், அறத்தின் அடையாளமான திருக்குறள் கூட இவ்வாறு நீருக்கும் நெருப்புக்கும் தப்பிய நூலே.

சங்க இலக்கியத் தொகையும், சில காப்பியங்களும் மட்டுமே இன்று தமிழ் வரலாற்றின் தடையங்களாக எஞ்சியிருக்கின்றன. அவை இல்லையென்றால் தமிழ் வரலாறு மறைக்கப்பட்டிருக்கும். தமிழரின் நாகரிகச் சிறப்பு தெரியாது போயிருக்கும்.

திருக்குறள் மக்கள் இந்த உலகத்தில் வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் அரிய நூல். திருக்குறள் என்ற அறநூல் உலக மாந்தர் அனைவருக்கும் வழிகாட்டிடும் ஒரு நூல். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கட்டியம் கூறிய நூல்.

ஆயிரம் ஆண்டு-களுக்குப் பின்னர் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் அதற்கு வேத ஆரிய பண்பாட்டு சாயத்தை பூசிவிட்டார். பார்ப்பன இன உணர்வுக்கும் வைதீக சமய கோட்பாட்டிற்கும் ஏற்ப உரைகளையும் விளக்கங்களையும் எழுதி வைத்துவிட்டார்.

பரிமேலழகர் எழுதிய உரைப்பாயிரத்தில் மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

அவற்றுள் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று, அவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது, ஒரு பொருளை தனித்தனியே "எனது எனது" என்று இருப்பார். அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள் மேல் செல்வது. அது 'கடன் கோடல்" முதல் பதினெட்டுப் பதத்தது ஆம்.

தண்டமாவது, அறவொழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழீஇயினாரை, அறநெறி நிறுத்துதற் பொருட்டு, ஒப்ப நாடி, அதற்குத் தக ஒறுத்தல்.

இந்த உரைப் பாயிரம் நால்வேத வருண பாகுபாட்டுக் கண்ணாடி மூலம் திருக்குறளைப் பரிமேலழகர் பார்த்ததன் விளைவாகும். திருவள்ளுவர் குறிப்பிடாத வீடு பேறு பாயிரத்தில் புகுத்தப்பட்டுள்ளது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல பரிமேழலகரின் வருண பார்வை உரை முழுதும் விரைவி நிற்கின்றது. அதனால் வள்ளுவரின் கருத்துக்கள் திரிபுபடுத்தப் பட்டுள்ளன.

மனிதருள் ஒரு பிறப்பாளர், இருபிறப்பாளர் என்ற பேதம் இல்லை. ஆனால் புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்துக்கு உரைசெய்த பரிமேலழகர் “அதாவது இருபிறப்பாளர் மூவராலும் இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றினுள் முனிவர் கடன் கேள்வியாலும், தேவர் கடன் வேள்வியாலும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலாலும் அல்லது இறுக்கப் படாமையின், அக்கடன் இறுத்தற் பொருட்டு நன்மக்களைப் பெறுதல் அதிகார முறைமை மேலே கூறப்பட்டது" என்று கூறுகிறார்.

இந்த உரை பரிமேலழகர் தனது காலத்தில் தமிழர் சமூகத்தில் வலுப்பெற்றுவிட்ட வருணாச்சிரம தர்மத்துக்கு ஏற்ப உரை செய்ததைக் காட்டுகிறது. பிதிர் கடன் செய்வது என்பது தமிழர் ஆரியச் சேற்றில் காலை வைத்தபின் பூசிக்கொண்ட அழுக்காகும். இருபிறப்பாளர், வேள்வி போன்றவற்றை வள்ளுவர் வெளிப்படையாகக் கண்டிக்கிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக மறக்கப்பட்ட - மறைக்கப்பட்ட திருக்குறளுக்கு மறுவாழ்வு கொடுத்தவர் நாத்திகரான பெரியார். இது பலருக்கு வியப்பாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். (தகவல்)


 
புத்தாயிரத்தில் வான்புகழ் வள்ளுவருக்கு வான் முட்டும் சிலை!

(திருமகள்)


இந்தப் புத்தாண்டு பலவகையில் சிறப்புடையது. ஒரு நூற்றாண்டு கழிந்து இன்னொரு நூற்றாண்டு மலர்ந்துள்ளது. அது மட்டும் அல்லாமல் ஒரு புத்தாயிரமும் கழிந்து இன்னொன்று பிறந்துள்ளது. இப்படி புத்தாண்டு, புதியநூற்றாண்டு, புத்தாயிரம் ஒன்றாகப் பிறப்பதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

நீளம், அகலம், உயரம் போன்ற முப்பரிமாணத்தோடு காலத்தையும் சேர்த்து நாற்பரிமாணம் வகுத்த அறிவியலாளர் ஐன்ஸ்டீன். அது மட்டும் அல்லாமல் காலம் என்பது ஒரு ஒப்பீட்டு அளவுதான் என்ற கோட்பாட்டை முதலில் நிறுவி அறிவியலில் வியத்தகு திருப்புமுனையை ஏற்படுத்தியவரும் அவர்தான். அவரது
E=mc²  பின்னம் மிகவும் புகழ்வாய்ந்தது.

உலகில் 40க்கும் மேலான நாட்காட்டிகள் இருக்கின்றன. இரண்டாவது புத்தாயிரம் என்பது யேசுநாதர் பிறந்ததாகச் சொல்லப்படும் ஆண்டில் இருந்து (கி.பி. 1) ஆண்டுகளை வரிசைப்படி எண்ணத் தொடங்கியதால்தான். சீனர்களுக்கு இப்போது நடப்பது 4697 ம் ஆண்டு. முஸ்லிம்களுக்கு 1418 AH. ம் ஆண்டு. வள்ளுவர் ஆண்டு 2030. வள்ளுவர் பிறந்த பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் 1969ம் ஆண்டு தொடக்கம் தமிழகத்தில் பொதுவிடுமுறை நாளாக இருந்து வருகிறது. எது எப்படி இருப்பினும் புத்தாயிரம் ஆண்டில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் உண்மையிலேயே நல்ல காலம் பிறந்துள்ளது.

வங்கக் கடலும், அரேபியக் கடலும் இந்து மகா சமுத்திரமும் சங்கமம் ஆகும் குமரிமுனையில் திருவள்ளுவருக்கு 133 உயர அடியில் வான்முகிலைத் தொடும் கற்சிலை ஒன்று தமிழ்நாடு அரசினால் நிறுவப் பட்டுள்ளது. சுமார் பத்துக் கோடி ரூபா செலவில் நிறுவப்பட்டுள்ள சிலையை வடித்தவர் புகழ்பெற்ற சிற்பி டாக்டர் கணபதி ஸ்தபதி. திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தவர் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி. வெறும் கட்சி மாநாட்டிற்கே கோடிக்கணக்கில் பணம் செலவழித்துப் பழக்கப்பட்ட தமிழக அரசியல்வாதிகள் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை விட்டு விடுவார்களா என்ன? பணத்தை தண்ணீராக இறைத்து விழாக் கொண்டாடியுள்ளார்கள்.

நூற்றி முப்பத்து மூன்று அடி உயரம் உள்ள வள்ளுவர் சிலை உலகத்தின் 8வது அதிசயம் (அமெரிக்காவின்
Statue of Liberty சிலையின்; உயரம் 305 அடி ஆனால் அது செப்புத் தகட்டினால் செய்யப்பட்டது) என்று வர்ணிக்கப் படுகிறது.

முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி "உலக அதிசயங்கில் ஒன்றாக திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது. இது மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தில் என்ன காரணத்தினாலோ வரலாற்று உண்மைகள் இல்லாமல் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழன் கல்லணையைக் கட்டினான். இதுபற்றி வரலாற்றில் கால் பக்கத்தில் கூடக் குறிப்பிடப்படவில்லை. இது போன்று தஞ்சை கோவிலைப் பற்றிய முழுமையான வரலாறு இல்லை. ஆனால் கோட்டம் (வள்ளுவர் கோட்டம்) முதல் குமரி வரை உள்ள இந்தப் படைப்பில் பல தகவல்கள் துல்லியமாகக் குறிக்கப் பட்டுள்ளது" என்று அந்த சிலை திறப்பு விழா தொடர்பாக வெளியிடப்பட்ட "கோட்டம் முதல் குமரி வரை" என்ற மலர்பற்றிப் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றை முறையாகத் தமிழன் எழுதி வைக்கவில்லை. இப்போது அந்தத் தவறு தவிர்க்கப் பட்டுள்ளது என்பதைத்தான் முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கன்னியாகுமரிக் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு அருகிலுள்ள பாறையில் திருவள்ளுவருக்கு சிலை அமைப்பதென்ற முடிவு 1975ல் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்டது. அதற்கான அடிக்கல் அதே ஆண்டு மார்கழியில் முதல்வர் கருணாநிதியால் இடப்பெற்றது. அதன்பின் அவரது ஆட்சி மாறியது. முதலமைச்சர் எம்ஜிஆர் காலத்தில் (1979ம் ஆண்டு சித்திரை 15ம் நாள்) மீண்டும் அன்றைய பிரதமர் மொராசி தேசாய் அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டது. ஆனால் சிலைமட்டும் எழும்பவில்லை. நிதிப் பற்றாக்குறை காரணம் என அப்போது சொல்லப் பட்டது. மீண்டும் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது 1990-91ல் சிலை எழுப்புவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. திரும்பவும் 1996ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அர்போது சிலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. 1998ம் ஆண்டு பங்குனித் திங்கள் 20ம் நாள் திருவள்ளுவர் சிலைக்கான அடித்தளக் கற்கள் நிறுவப்பட்டு பணிகள் தொடங்கின.

திருக்குறளின் 133 அதிகாரத்தை குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இதன் தத்துவ விளக்கம் என்ன?

பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப் பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பதாகும். பீடத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பதாகும். ஆம் அறத்தை அடித்தளமாகக் கொண்டு பொருளும் இன்பமும் அடைந்திட வேண்டும் என்னும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் வள்ளுவமாகவே சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் 7 ஆயிரம் தொன் எடையுள்ள இந்தச் சிலை 3,631 வடிவமைக்கப்பட்ட கற்களைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது.
இந்தச் சிலையைத் தாங்கி நிற்கும் பீடம் 15 அடுக்குகளைக் கொண்டது. மூன்று மாடிகளைக் கொண்ட மண்டபமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணி கடந்த ஆண்டு ஐப்பசித் திங்கள் 10ம் நாள் முடிவடைந்தது.

அதன்பின் ஐப்பசி 12ம் நாள் திருவள்ளுவர் சிலையின் கால் பாதம் படிய வைக்கப்பட்டு சிலை அமைப்புப் பணி தொடங்கியது. இந்தச் சிலை மொத்தம் 21 அடுக்குகளைக் கொண்டது. சிலையின் உட்புறம் 463 வடிவமைக்கப்பட்டுள்ள கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 2,500 தொன். ஆதார பீடத்தைச் சுற்றி 38 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதன் வெளிப்பகுதியில் ஒரே கல்லில் செதுக்கிய, ஒவ்வொன்றும் ஐந்து தொன் எடையுள்ள பத்து யானைச் சிலைகள் வைக்கப்பட உள்ளது. ஒரே பார்வையில் திருவள்ளுவர் சிலை பற்றிய விபரம் பின்வருமாறு. சிலையின்

உயரம் - 95 அடி

சிலையின் பீடம் - 38 அடி

சிலையும் பீடமும் - 133 அடி

முகத்தின் உயரம் - 10 அடி

உடல் பகுதி - 30 அடி

தொடைப் பகுதி - 30 அடி

கால் பகுதி - 20 அடி

உச்சந்தலை, கழுத்து, முட்டி மற்றும் பாதமும் சேர்ந்தது - 10 அடி

கை தலம் - 10 அடி

சுவடியின் நீளம் - 10 அடி

தோள்பட்டை அகலம் - 30 அடி

ஆதாரபீடம் உள்ளிட்ட சுற்றுச் சுவர் - 60 அடி தர 50 அடி

ஒவ்வொன்றும் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட 10 யானைகள்

ஆதாரபீடம் சிறை மற்றும் சுற்றுச் சுவர் ஆகிய வற்றின் மொத்த எடை - 7,000 தொன் திருவள்ளுவருக்கு அழியாத நினைவுச் சின்னத்தை எழுப்பி தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னர் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை நிறுவி திருவள்ளுவரையும் அவரது திருக்குறளையும் கருணாநிதி பெருமைப் படுத்தியுள்ளார். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக எந்தப் பாண்டியனோ, சோழனோ, சேரனோ செய்து காட்டாத சிறப்பை கலைஞர் கருணாநிதி செய்து முடித்துள்ளார். தமிழனை தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும் சாதனை இது. முதல்வர் கருணாநிதியின் அரசியல் பிடிக்காதவர்கள் கூட அவரது இந்தச் சாதனையை கண்டிப்பாகப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளார்கள்.

 


The Thirukkural

(Culture Editor Tamil Guardian 23 January 2008)

The 2000 year old Kural is often described by classical scholars, such as Professor George Hart of the Berkeley California, as one of the world's greatest works on ethics.

Widely attributed in terms of authorship to Thiru Valluvar, a weaver of cloth, who is said to have lived circa 30 BC, this is a secular work that cuts across religion, class and race. Its earliest translators were like Rev Pope, Christian missionaries to Tamil Nadu, who fell in love with the literature of the region.  

It was they who made it available to the rest of India, including to Mahatma Gandhi who later said: “ I wanted to learn Tamil, only to enable me to study Valluvar’s Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him.”  

The German-born Nobel prize winner, Dr Albert Schweitzer described the Kural thus: “On the most varied questions concerning the conduct of man to himself and to the world, Thirukural's utterances are characterised by nobility and good sense. There hardly exists in the literature of the world a collection of maxims in which we find so much lofty wisdom ..”. 

In Tamil the word Kural means “couplet” and also “voice”, whereas the prefix Thiru means “Sacred”. But equally in Tamil – a language which exudes courtesy - “Thiru” is the equivalent to the English “Mr”, an everyday honorific prefix.

The Kural is hence a set of 1330 couplets organised in chapters of ten, each chapter dedicated to a single concept. The concepts are wide ranging from “Possessing Love”, “Truthfulness”, “Rain” to “The Avoidance of Tyranny”. Each chapter explores different facets of the concept to which it is devoted, starting simply and becoming progressively more complex. There is often a link between chapters where concepts are related: so for example there are five consecutive chapters on friendship entitled “Friendship”, “Testing fitness for friendship”, “Old friendship”, “Harmful friendship” and “False friendship”. It is often said of the Kural that there is no aspect of life not covered by it.  

The last 25 chapters are split into two parts, premarital and marital love, separately, yet because of their different style there is controversy whether these chapters were part of the original work. Nevertheless there is a line of thought that the inclusion of sensuality in works, which are otherwise philosophical is part of the tradition, the ancient Tamils being of the view that sexuality was conducive to spirituality: witness the sculptures that adorned the ancient temples. 

The Kural follows a disciplined poetic structure. Signifying its comprehensive intent, the first couplet begins with the first letter of the Tamil alphabet, A and the last couplet ends with the letter N, completing the alphabet. Each couplet consists of seven cirs: a cir is a word or combination of words joined together (a compound word). And so the Kural begins, with a couplet praising “God Primordial”: 

Akara muthal elluthellam aathi,
Bhagavan mutharae ulaghu

 “A, as its first of letters, every speech maintains;

The "Primal Deity" is first through all the world's domains.” (Translation of G Pope)

 And, perhaps unexpectedly, it concludes with the last of ten couplets on the benefits of sulking (in the chapter entitled “Wedded love”) 

“Uuduthal Kamathitku inbam,
athatinbam kuudi mayanga perrin”
 

The joy of love lies in sulking, for that joy is realized
While embracing in union. (Translation of NVK Ashraf)
 

The structural organisation of the Kural also reveals much about the values and philosophy of Tamil society. The chapters of ten couplets are grouped into three themes or “books”, namely “Virtue”, “Wealth” and “Love”.  

The introduction to the book on virtue contains 4 chapters: “Praising God”, “The Importance of Rain”, “Greatness of Renunciates”, “Asserting Virtue”. These four concepts are a foundation to the whole work and not just the book on virtue – they are the core horizontal themes, across which the weaver weaves his multitude of vertical threads, each thread being a concept.  

In the first of the four introductory chapters, Valluvar, acknowledges “God Primordial” and places his values in the context of the whole. So for example he says on learning and the limits of rationalism: 

“What has learning profited a man, if it has not led him to worship the good feet of him who is pure knowledge itself” 

He says of the concepts of “good” versus “evil”, that these opposites are illusionary and one may transcend these opposites by meditating on that which is immutable: 

“Good and bad, delusion’s dual deeds, do not cling to those who delight in praising the immutable, worshipful one” 

Note the non-sectarian references to “God” refered to as “infinity, the immutable one, the gracious one “ etc.  

Having set in place the limitations of reason, good, evil and so on, the weaver, focuses on the importance of the ecology and man’s relation to it: 

“It is the unfailing fall of rain that sustains the world
therefore, look upon rain as the nectar of life
Rain produces man’s wholesome food;
And rain itself forms part of his food besides”
 

Emphasising the cyclical destructive and creative powers of nature, he says:

“It is rain that ruins and rain again
that raises up those it has ruined”

On man’s reliance on nature, and the importance of nature relative to human functions such as charity and spirituality: 

“Unless the heavens grant their gifts, neither the giver’s generosity
nor the ascetic’s detachment will grace this wide world”

Following on after the importance of the primal spirit and nature, are the qualities and importance of spiritual leaders or “renunciates”. This echoes the ancient Tamil belief that the world is sustained not just by the forces of the physical plane (i.e. the force of nature such as rain) but also by spiritual forces, an imbalance in either could lead to destruction of the world. As with the rest of the Kural, which is a secular work, the chapter makes no reference to organised or institutionalised religion, merely noting by way of definition of spirituality that: 

“Pious men are called the priestly ones
for they are clothed in robes of compassion for all life”

The final introductory theme is the nature of virtue, outlined in broad brush strokes, across the ten couplets in this chapter. For example the alternative interpretations of virtue include:
 

“Virtue is living in such a way that one does not fall into these four:
envy, anger, greed and unsavoury speech” and
 

“Virtue is merely that which should be done in life
and vice merely that which should be avoided ..”

 The body of the book of virtue, following on from the introduction is structured into the following themes: “the way of the householder”, “the way of the renunciate” and “destiny”.

 The second of the three books, the book on wealth, has the following themes:

“Royalty”, “Ministers”, “Qualities of a country” and a general section on the qualities of people and miscellaneous other aspects of wealth. The Kural concludes as mentioned above with the book on love.

 While “The way of the householder” is a description of the core personal values of Tamil culture, the book on wealth addresses themes of leadership and group structures.

 Thus, on what it takes to be a “householder”, the Kural says:

 “He alone may be called a householder who supports
students, elders and renunciates pursuing their good paths”
 

By way of example, in discussing the functions of a householder, the Kural has an entire chapter on hospitality, that most familiar of Tamil values: 

“The whole purpose of earning wealth and maintaining a home
is to provide hospitality to guests”
 

“When a guest is in the home, it is improper to hoard one’s meal,
even if it happens to be the nectar of immortality”

“Charity’s merit cannot be measured by gifts given
It is measured by the measuring the receiver’s merits”

Thus the Kural is more than a book on ethics or philosophy. It is a description of a way of life. So much so that the Rev. G. Pope, one of the early Christian missionaries to Tamil Nadu who translated the Kural to English described the work as: “ an integral painting of a civilization which is harmonious in itself and which possesses a clearly recognizable unity.”

In the second of the series, due in the next edition, Kural we will consider in more detail each of the three books: virtue, wealth and love. 

Suggested references 

1. ‘Weaver’s Wisdom: Ancient Precepts for a perfect life’. English translation By Satguru Sivaya Subramuniyaswami and the monastics of the Saiva Siddhanta Order (Kauai, Hawaii), Himalayan Academy Publications (http://www.himalayanacademy.com/resources/books/weaver/) 

2. ‘The Sacred Kural of Tiruvaluva Nayanar’ by Dr. G. U. Pope, Laurier Books Ltd  

3. International Thirukkural Conference 2005 (Washington)  http://www.thirukkural2005.org/  

4. Thirrukural Browser http://www.cs.utk.edu/~siddhart/thirukkural/

5. Comparison of translations at http://www.geocities.com/nvashraf/kur-eng/closeindex.htm

6. Wikipedia: http://en.wikipedia.org/wiki/Thirukkural