யூன் 30,2011


அன்புள்ள சொர்ணலிங்கம் அவர்களுக்கு

சும்மா கிடந்த நாச்சியாருக்கு ஒரு பணத்துத் தாலி போதாதா? என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

இயல் தமிழ் தெரியாவிட்டாலும் இசைத் தமிழையாவது அதிலும் திருப்புகழைத் தமிழ்க் குழந்தைகள் பாடுகிறார்களே

என்று நிறைவு அடையலாம். நேற்றும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். எல்லா மாணவர்களும் இனிமையாகப் பாடுகிறார்கள்.

திருப்புகழ் பாடுவதற்குக் கடினமானது. அதைவிட இசை ஆசிரியர்கள் திவ்யபிரபந்தத்தைச் சொல்லிக் கொடுக்கலாம். திருப்பாவையும் திருவெம்பாவையும்

சொல்லிக் கொடுக்கலாம்.

ஷீலா பரத் ஆங்கிலத்தில் தமிழிசையின் நுட்பங்களைச் சொல்லிக் கொடுப்பதைக் கேட்க பரிதாபமாக இருந்தது. அனந்தநாராயணன் பருவாயில்லை.

சரி போகட்டும். உங்களது நாளாந்த செய்தி அறிக்கையில் வடமொழிக் கலப்பை நீக்க முடியுமா? நான் சொல்லிச் சொல்லிக் களைத்துப் போனேன்.

விசேட செய்தி - சிறப்பு ஒலிபரப்பு அல்லது சிறப்பு செய்தி ஒலிபரப்பு

அங்கத்துவம்         - உறுப்புரிமை

அங்கத்துவர்          - உறுப்பினர்

அங்கீகாரம்            - ஒப்புதல்

அபிவிருத்தி         - மேம்பாடு

அமுல்                   - நடைமுறைப்படுத்தல்

அஞ்சலி               - அக வணக்கம்

ஆரம்பம்               - தொடக்கம்

இராப்போஜனம் - இரவு விருந்து

ஒப்பந்தம்              - உடன்பாடு

கவுன்சில்              - அவை

சகா                       - கூட்டாளி

சந்தேகம்             - அய்யம்

சர்வதேசம்          - அனைத்துலகம், பன்னாட்டு

சுகாதார               - நல்வாழ்வு

நிமிடம்                - மணித்துளி

தினம்                   - நாள்

தொலைநகல்    - தொலைப்படி

பிரதிநிதி            - சார்பாளர்

பிரார்த்தனை  - வேண்டுகோள்

பூர்வாங்க         - தொடக்க

பூஜ்யம்              - சுழி, சுழியம்

வர்த்தகம்          - வாணிகம் அல்லது வணிகம்

வர்த்தகர் (கள்) - வணிகர்(கள்)

வயது                  - அகவை

விமானம்          - வானூர்தி

வீதம்                 - விழுக்காடு

flexible               -
ஈவான, ஈவு

Mortgage         -
ஈடு, அடகு

Stall / Store      -
அங்காடி, கடை


பின்வரும் இணையதளத்தில் காணப்படும் அகரமுதலியை செய்தி தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

http://www.pudhucherry.com/pages/dic.html

http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp?query=administer

http://www.nakkeran.com/Purethamilsanskritwords.htm

தனித்தமிழ் பற்றிய அய்யங்களும் தெளிவுகளும்

தனித்தமிழ் என்றால் என்ன?

தனித்தமிழ் ஏன்? எதற்கு?

தனித்தமிழின் வரலாறு யாது?

தனித்தமிழ் வெற்றி பெற்றுள்ளதா?

தற்காலத்திற்குத் தனித்தமிழ் பொருந்துமா?

தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா?

இது போன்ற கேள்விகளுக்கு வினா - விடை வடிவில் 4 கட்டுரைகள் கீழ்க்கண்ட இணையத்தில் காணப்படுகின்றன. படித்துப் பார்க்கவும்.

http://thirutamil.blogspot.com/2008/04/blog-post_28.html


தமிழ்மொழி பற்றிய ஒரு கட்டுரையை இந்த இணையதளத்தில் படிக்கலாம்.

http://www.seithy.com./breifArticle.php?newsID=45569 <http://www.seithy.com./breifArticle.php?newsID=45569&category=Article&language=tamil> &category=Article&language=tamil

இலக்கியமும் இலக்கணமும் படியாதான்
ஏடெழுதல் கேடு தரும். (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)

 

நக்கீரன்From: Sorna Lingam [mailto:sorna_v@yahoo.com]
Sent: Thursday, June 16, 2011 10:41 PM
To: Thanga
Cc: balisubra@gmail.com; Wicky Param
Subject: Re: Learning isai through English language?ஆன்புடன் நக்கீரனுக்கு

உங்களுக்குள்ள அதே ஆதங்கம்தான் எனக்கும். என்ன செய்வது இயலாமைதான் மிச்சம். தமிழ்தான் ஒலிக்க வேண்டும் என எங்களுக்கும் ஆசைதான்.

தமிழ் தெரிந்த நீதிபதிகளைத் தேடினோம். அவர்களால் நேரத்தை ஒதுக்கி வரமுடியவில்லை. பக்கவாத்திய கலைஞர்களை கேட்டோம்.

சின்ன பிள்ளைகளுக்கா என மறுத்து விட்டார்கள். இந்தப் பிள்ளைகளுக்கு இசையையும் உச்சரிப்பையும் சொல்லிக் கொடுக்கவும் ஒருவரை நியமிக்க படாது பாடுபட்டோம்.

முடியவில்லை. அது தான் உண்மை. கனடாவில் எதுவும் செய்வது கடினம். முயற்சிக்கிறோம்.சொர்ணலிங்கம்.


From: Thanga <athangav@sympatico.ca>
To: sorna_v@yahoo.com
Sent: Thu, June 16, 2011 12:23:38 AM
Subject: Learning isai through English language?

யூன் 15,2011

பொறுப்பாளர்
தமிழ்த் தொலைக்காட்சி
ரொறன்ரோ.

பாதிக் கிணறு தாண்டினால் என்ன நடக்கும் என்பது தெரியாதா?

அன்புடையீர்


தமிழ்த் தொலைக்காட்சியில் இராக சங்கமம் என்ற நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. இராகம் தமிழில்லை. சங்கமம் தமிழில்லை.

தமிழ்த் தொலைக்காட்சிக்கும் தமிழ்மொழிக்கு தீராத பகை என்பது கடந்த கால - நிகழ்கால வரலாறு. அது போகட்டும்.

இராக சங்கம நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் மாணவ மாணவிகள் தேவாரம், திருப்புகழ் பாடல்களை நன்றாக நெட்டுருச் செய்து பாடுகிறார்கள்.

நடுவர்கள் அதனைக் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார்கள்.

ஆனால் அவர்கள் பாடும்போது பாவம் வெளிப்படவில்லை.

பக்தி பாவம் என்பது தமிழ் இசையில் தனியொரு சுவையாகும்.

அதாவது பாடகர்களும் இசைக் கலைஞர்களும் பக்தியோடு இயைந்த போது வெளிப்படும் உணர்விற்கு (பாவத்துக்கு) தனி மதிப்பு கொடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் இந்த பக்தி பாவத்திற்கு வாழும் இலக்கணமாக திகழ்ந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையார். அவர் பாடிய பாடல்களை அதன் பக்தி இயல்புக்காகவே பரவலான கவனத்தைப் பெற்றது. அதே மரபு இன்றுவரை, இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் O.S.அருண், அருணா சாய்ராம் போன்றோர் வரை தொடர்வதே இதன் வீச்சுக்கு இருக்கும் மகத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.

இந்த மாணவர்கள் தேவாரம் திருப்புகழ் போன்ற பாடல்களை பாவத்தோடு பாட முடியாததற்கு முக்கிய காரணம் அவர்களுக்குத் தமிழ் தெரியாததே!

ஆங்கிலத்தில் எழுதி தமிழைப் பாடுவதாலேயே ழ, , ல எழுத்துக்களின் உச்சரிப்புத் தெரிகிறதில்லை. அதனால் ஒரு நாளே என்பதை ஒரு நாலே என்றும் கழுதாட என்பதை கலுதாட என்றும் பெருமாளே என்பதற்குப் பதில் பெருமாலே என்றும் பாடித் தொலைக்கிறார்கள். கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில்தான் பதில் வருகிறது.

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே."
கழுகொடு ..... கழுது ஆடத்" - என்றால் பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன் பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்.

இவற்றை எல்லாம் இந்த மாணவர்களுக்கு இசை சொல்லிக் கொடுத்த ஆசிரியர் விளக்கவில்லை. அவருக்கும் தமிழ் தெரியுமோ தெரியாதோ நாம் அறியோம் பராபரமே!

நடுவர்களும் தமிழுக்குப் பதில் ஆங்கிலத்தில்தான் தமிழ் இசையின் நுட்பங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இசைத் தமிழ் சொல்லிக் கொடுக்குமுன் மாணவர்கள் இயல் தமிழ் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் சொற்களின் பொருள் புரிந்து பக்தி பாவத்தோடு பாடமுடியாது!

கொடுத்தானை

பதம் கொடுத்தானை

பாசுபதம் கொடுத்தானை

அர்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை

யுரித்தானை அர்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை

அடுத்தானை யுரித்தானை அர்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை

இந்தப் பாடலின் பொருள் தெரிந்தால்தான் அதனை பாவத்தோடு பாட முடியும்.

இந்தளவாவது இந்த மாணவர்கள் தமிழில் பாடுவது மெச்சத்தகுந்தது அதைப் போய் நான் குறை சொல்வதாகப் படலாம்.

செய்வன திருந்தச் செய். பாதிக் கிணறு தாண்டினால் போதுமா? அப்படிப் பாதிக்கிணறு தாண்டினால் என்ன நடக்கும் என்பது தெரியாதா?

ஆங்கிலத்தை நுனிநாக்கால் பேச முடியும் என்றால் தாய்மொழி தமிழை ஏன் பிழையறப் படிக்க முடியாது?

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் இளையவராக இருந்தும் அருமையாகத் தமிழ் பேசுகிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.

ஏனைய இசைக் கச்சேரிகளில் பாடுபவர்களும்

சமானமெவரு

நீ சமானமெவரு

ராம நீ சமானமெவரு

என்று தெலுங்கில் பாடித் தொலைக்கிறார்கள். பாரதி கேட்டது போல தமிழ்த் தொலைக்காட்சி தமிழர்களது காது இரும்பால் ஆனது என நினைக்கிறதா?நக்கீரன்

 திரு நெடுமாறன்


சிறிலங்காவுக்கு செல்லும் இந்திய அதிகாரிகள் தமிழர் சிக்கல்பற்றித்தான் பேசப் போகிறார்கள் என யார் சொன்னது?
நீங்கள் அல்லது நாங்கள்தான் அப்படிப் பிழையாக விளங்கிக் கொண்டு இருக்கிறோம்.

இந்தியநாட்டு அதிகாரிகளால் 60 ஆண்டு காலம் புரையோடிப் போய்க் கிடக்கும் இனச்சிக்கலுக்கு தீர்வு காணமுடியுமா?

தமிழக முதல்வரை அமைச்சர்களுக்குப் பதில் இந்தத் தூதுக்குழுகள் தான் சந்திக்கின்றன. இந்திய தலைமை அமைச்சருக்கு
அடுத்த நிலையில் உள்ள மாநில முதல்வரை அதிகாரிகள் சந்திப்பது அவமானமாகப் படவில்லையா
?

வீடு கொளுத்த கொள்ளி கொடுத்தவனிடம், ஆளைவெட்ட கத்தி கொடுத்தவனிடம் நீதி கேட்கிறீர்களே? இது நியாயமா?

இந்திய முதலாளிகள் பல பொருளாதார திட்டங்களை நிறைவேற்ற சிறிலங்காவோடு உடன்படிக்கைகள் எழுதியுள்ளார்கள்.

சம்பூரில் 500 மில்லியன் டொலர் செலவில் ஓர் அனல்மின் நிலையம் கட்ட உடன்பாடு எழுதப்பட்டுள்ளது. இதற்காக 500 ஏக்கர்
நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்துக்குச் சொந்தமான தமிழர்கள் தெருவிலும் மரங்களுக்குக் கீழும் கடந்த 4 ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.

காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானதளம், ஆனையிறவு தொடங்கி காங்கேசன்துறை வரையிலான தொடர்வண்டி
தண்டவாளம் போடுதல் போன்றவற்றை மேம்படுத்த அல்லது கட்ட உடன்படிக்கைகள் எழுதப்பட்டுள்ளன.

இவை தொடர்பாகத்தான் இந்திய தூதுக் குழுக்கள் சிறிலங்கா போகின்றன.

50,000
வீடுகள் கட்டப் போவதாக இந்தியா அறிவித்த்தே? அதில் அய்ந்து வீடு தன்னும் இன்னும் கட்டப்படவில்லை.

400
உழவு யந்திரங்களை இந்தியா போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பளிப்புச் செய்தது. இதில் 200 யை சிறிலங்கா
தென்னிலங்கைக்கு அனுப்பிவிட்டது.நக்கீரன்
 


 

பெப்ரவரி 04, 2007
ரொறன்ரோ

அனைத்து செய்தித்தாள் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களுக்கு


தமிழில் எழுதுவோம்! தமிழில் பேசுவோம்! தமிழின் தூய்மை காப்போம்!

 

அன்புடையீர்!


வணக்கம். எமது கழகம் எழுத்திலும் பேச்சிலும் தமிழின் தூய்மை காக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டது.

இன்று தமிழ்நாட்டு ஊடகங்கள் தமிழ் மொழியின் தூய்மையைக் கெடுக்குமாறு தமிழோடு ஆங்கிலத்தையும் வடமொழியையும் தாராளமாகக் கலந்து எழுதுவது தாங்கள் அறிந்ததே. தமிழைக் கெடுத்தே தீருவோம் என்று பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, மாலைமலர், தினமலர் போன்ற ஏடுகள் மட்டுமல்ல தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்களால் நடத்தப்படும் தினமணி, தினகரன், சன்தொலைக்காட்சி போன்றவையும் கங்கணம் கட்டி நிற்கின்றன. கைவிரல்விட்டு எண்ணக்கூடிய செய்தித்தாள்கள், கிழமை இதழ்கள் ஏடுகளே தமிழின் தூய்மையை ஓரளவு காக்கின்றன.

தமிழ்மொழியின் தூய்மை காக்கப்படாததால் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ அடிகள் பிறந்த நாட்டில் மலையாளம் என்ற ஒரு புது மொழியே பிறந்து விட்டது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மணிப்பிரவாள நடையில் எழுதுவது தமிழ்ப் பண்டிதர்களால் 'பாண்டித்தியம்' என்று கருதப்பட்டது.

மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு. வி..க. பரிதிமாற்கலைஞன், திருமதி தி. நீலாம்பிகை அம்மையார், பாவேந்தர் பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், இரா. இளங்குமாரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் முன்னெடுத்த தனித் தமிழ் இயக்கத்தின் பயனாக தமிழ் மொழியை மூடியிருந்த அழுக்கு நீக்கப்பட்டு அதன் தூய்மை கடந்த நூற்றாண்டில் காக்கப்பட்டது. மொழித் தூய்மைதான் தமிழை என்றுமுள தென்தமிழாக இளமையுடன் வாழவைத்திருக்கிறது.

இன்று தமிழ்நாட்டை விட தமிழீழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த் தூய்மை பெருமளவு காக்கப்படுகின்றது. இருந்தும் சோற்றுக்குள் கற்கள் இருந்து நெருடுவது போல இங்குள்ள ஊடகங்களும் தமிழ் எது வடமொழி எது என்ற வேற்றுமை தெரியாது பேச்சிலும் எழுத்திலும் தேவையற்ற வடமொழி மற்றும் ஆங்கிலம் கலந்த கலப்பு மொழியைக் கையாள்கின்றன.

தமிழில் நல்ல பொருள் செறிந்த சொற்கள் இருக்க வடமொழி மற்றும் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தல் கனியிருக்கக் காய் கவர்ந்தது போன்றது. எடுத்துக்காட்டாக சிறப்புச்செவ்வி அல்லது நேர்காணல் என்பதை விசேட பேட்டி என்று சொல்லியும் எழுதியும் வரப்படுகிறது.

'எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே' என்பது தொல்காப்பிய நெறி. எடுத்துக்காட்டாக வளையல்- வளைந்த அணி, பரிதி -வட்டமான கதிரோன், கறவை- பால் கறப்பது. பறவை - பறப்பது. கோயில் -அரசன் அல்லது இறைவன் உறையும் இடம்.

தமிழில் பொருத்தமான சொற்கள் இல்லாத போது பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் குற்றம் இல்லை. எடுத்துக்காட்டாக எச்ஐவி, எயிட்ஸ், லேசர், அமெரிக்கா, ஆபிரிக்கா, குருச்சேவ், கிலோ மீட்டர் போன்ற சொற்கள். ஆனால் 99 விழுக்காடு தமிழில் கலைச்சொற்களை ஆக்க முடியும். வடசொற்கள் அத்தனையும் தள்ளத்தக்கன.

இத்துடன் இருக்கும் இணைப்பில் ஊடகங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் வடமொழி, ஆங்கிலச் சொற்களுக்குரிய தூய தமிழ்ச் சொற்களைத் தந்திருக்கிறோம். அவற்றைப் பயன்படுத்தி தமிழ்மொழியின் தூய்மையைக் காக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

திரு.அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? திரு. இராசகோபாலன் எழுதிய செந்தமிழ் இலக்கணம், தமிழண்ணல் எழுதிய இனிய தமிழ்மொழியின் இயல்புகள், முனைவர் இராம. சண்முகம் எழுதிய காலந்தொறும் தமிழ் மொழி, எஸ்.ஆர். கோவிந்தராஜன் எழுதிய தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி? மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்மொழிப் பயிற்சி போன்ற நூல்களைப் படித்தல் (இதுவரை படிக்காவிட்டால்) மிக்க பயன் பயக்கும்.


சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.


தேவை ஏற்படின் இது தொடர்பாக உங்களுடன் கலந்துரையாட நாங்கள் எப்போதும் அணியமாக இருக்கிறோம். நன்றி.

மிக்க அன்புடன்நக்கீரன்
தலைவர்
 


                                                     தூய தமிழ்ச் சொற்கள்

திசைச் சொற்கள்  

தமிழ்   

திசைச் சொற்கள்  

தமிழ்   

அக்கிரமம்

KiwNfL

jpdk;

ehs;

அகதி

Vjpyp

jpdrup

md;whlk;>ehs;NjhWk;

அகங்காரம்

jd;Kidg;G

jPl;rz;ak;

$H;ik

அகந்தை

Mztk;

JNuhfk;

,uz;lfk;

அகம்பாவம்

nrUf;F

Jthuk;

njhis

அகிம்சை

mwtop

Jhuk;

njhiyT>Nra;ik

அங்கம்

cWg;G

Njfk;

cly;>fhak

அங்கத்தினர்

cWg;gpdH

Njjp>jpfjp

ehs;

அங்கத்துவம்

cWg;Gupik

epj;jpiu

cwf;fk;

அங்கீகாரம்;

xg;Gjy;

epGzH

ty;YeH

அசம்பாவிதம்

Kuzpfo;T

epkp\k;

kzpj;Jsp

அசரீரி

tpz;nzhyp

etPdk;

GJik>Gjpdk;

அசாக்கிரதை

tpopg;gpd;ik

espdk;

eak;

அசாத்தியம்

elf;fKbahj

ehrk;

mopT

அசீரணம்;

nrupahik

epr;rak;

cWjp

அசுத்தம்;

Jg;gutpd;ik

eprg;jk;

mikjp

அசூசை

nghwhik

epe;jid

,fo;r;rp

அஸ்தமனம்

kiwT

epge;jid

Kd;dPL

அஞ்சலி

(mf)tzf;fk;

epGzH

ty;YeH

அத்தாட்சிp

rhd;W

epk;kjp

kdmikjp

அட்சரம்;

xypg;G

epajp

tiuaiw

அதிகபட்சம்

Nky;tuk;G

epakdk;

mkHj;jk;

அதிகாரி

NkyhsH

epHthfk;

nrayhiz

அதிசயம்

tpe;ij

epue;juk;

epiyg;G

அதிர்ஷ்டம்

FUl;lhk;Nghf;F

epuguhjp

Fw;wkw;wtH

அதிதி

tpUe;jpdH

epH%yk;

NtuWg;G>KO mopT

அதிபர்

Kjy;tH

epHzak;

KbT

அதைரியம்;

Jzptpd;ik

epUgH

nra;jpahsH

அந்தகாரம்

,Us;

epuhfup

Gwf;fzp

அந்தரங்கம்

kiwKfk;

epHg;ge;jk;

tYf;fl;lhak;

அந்நியன்

mayhd;

epahak;

eLTepyik

அந்நியம்

neUf;fk;

epkpj;jk;

nghUl;L

அநாதை

Mjutpyp

epthuzk;

Jilg;G> ePf;fy;

ePjp

eLTepiyik

அநாவசியம்

Njitaw;wJ

ePjpgjp

eLtH

அநேகம்

gy

Nerk;

el;G> md;G

அபகரி

ifg;gw;W>ftHe;Jnfhs;

gf;Ftk;

KjpHr;rp

அபராதம்

jz;lk;

gr;rjhgk;

,uf;fk;

அபயம்

milf;fyk;

gR

M

அபாண்டம்

ngha;g;gop>

gz;bif

ngUehs;> tpoh

அபிவிருத்தி

Nkk;ghL

gfp\;fupg;G

Gwf;fzpg;G

அபிப்பிராயம்

fUj;J

ge;Jf;fs;

cwtpdH

அபிராமி

mofk;ik

gj;jpupif

nra;jpj;jhs;

அபிமானம்

gw;W

gjpQhdk;

,iwAzHT

அபிஷேகம்

jpUKOf;F

guk;giu

jiyKiw

அபூர்வம்

mUik

guhf;fpukk;

Nguhz;ik

mky;

nray;gLj;jy;

gupfhrk;

Vsdk;>ieahz;b

mNkhfk;

kpFjp

gupfhuk;

jPHT

ma;f;fpa

xd;wpize;j

gupr;rak;

gof;fk;

mHj;jk;

nghUs;

guprPyid

Ma;T

mHj;jk;

ghjp

gupjhgk;

,uf;fk;

mHj;juhj;jpup

es;spuT

gupzhkk;

cUkyHr;rp

mHj;jehuP];tuH

khnjhUghfd;

gupkhzk;

mstPL

mNahf;fpaj;jdk;

faik

gupghydk;

Ml;rp

mNahf;fpad;

fatd;

gNuhgfhuk;

gpwHf;F cjTjy;

mHr;rid

Nghw;wp

guPl;ir

NjHT

mHg;gzk;

<if>jw;nfhil

gypj;jy;

if$ly;

muh[fk;

murpay; Fog;gk;

gtdp

cyh

m&gk;

cUtpyp

gyk;

typik

m&gk;

cUtpyp

gyte;jk;

fl;lhak;

myq;fhuk;

mzp

gytPdk;

FiwghL

myl;rpak;

Gwf;fzpg;G

gyhj;fhuk;

td;Kiw

mtfhrk;

Xa;T

gyp

fhT

mtrpak;

Njit

gTHzkp

KOepyh

mtyl;rzk;

mofpd;ik

ghj;jpaj;ij

cupikr;nrhj;J

mw;Gjk;

GJik

ghjfk;

jPik

md;dk;

NrhW

ghuk;

Rik

mD$yk;

ed;ik

ghuhSkd;wk;

ehlhSkd;wk;

mDruiz

cWJiz

ghf;fp

epYit

mDrup

gpd;gw;W>filg;gpb

ghyfd;

Foe;ij

mDgtk;

gl;lwpT

ghHtjp

kiykfs;

mDge;jk;

gpd;dpizg;G

ghuk;gupak;

jiyKiw

mDkjp

,irT

ghuhazk;

Xjy;> nel;L

mDjhgk;

,uq;fy;

ghy;ak;

,sik

mDkhdk;

ca;j;JzHT

ghtk;

jPtpid

mDl;bj;jy;

ifg;gpbj;jy;

ghi\

nkhop

Mrdk;

,Uf;if

gpr;ir

,ug;G

Mfhrk;

thdk;

gpjhkfd;

ghl;ld;

Mfhuk;

czT

gpjpH

je;ij

Mjpf;fk;

tho;j;J

gpjpHjHg;gzk;

ePHf;fld;>Kbf;if

Mjpgj;jpak;

ty;yhz;ik

gpk;gk;

cU

Mgj;J

,lHg;ghL

gpbtpwhe;J

gpbahiz

Mguzk;

mzpfyd;

gpur;rpid

rpf;fy;

Mghrk;

nfhr;ir

gpurhjk;

jpUtKJ

Ml;Nrgiz

kWg;G

gpuj\;zk;

tyk;tuy;

MNkhjpj;jy;

topnkhopjy;

gpujpgyd;

ifkhW

Muk;gk;

njhlf;fk;

gpukk;

flTs;

MNuhf;fpak;

ey;tho;T

gpuahr;rpj;jk;

fOtha;

MNtrk;

glglg;G

gpurhuk;

gug;Giu

Myak;

Nfhapy;

gpufhrk;

xsp

My;gk;

nrUNtL

gpui[

Fbkfd;

MNyrid

fye;jha;T

gpu[hTupik

FbAupik

MAs;

mfit

gpuahzk;

gazk;

Mde;jk;

,d;gk;

gpuahzpfs;

gazpfs;

M];jp

nry;tk;

gpuhHj;jid

$l;LtopghL

,uj;jk;

FUjp

gpF

,Wf;fk;

,uj;J

ePf;fk;

gpufldk;

mwptpf;if>rhw;Wif

,uh[pdhkh

gjtp tpyfy;

gpurtk;

kfg;NgW

,uhfk;

gz;

gpurpj;jp

Gfo;

,uhZtk;

gil

gpujpf;iQ

#Siu

<kk;

R),)LfhL

gpukhjk;

NeHj;jp

<ikf;fpupiffs;

,Wjpr; rlq;F

gpuik

kdkaf;fk;

<dk;

Fiw> ,opT

gpuaj;jdk;

ngUKaw;rp

cf;fpuk;

fLik

gpuahir

tplhKaw;rp

cr;rupg;G

xypg;G

gpuNahfk;

gad;ghL

cj;juk;

tlf;F

gpusak;

nts;sg;ngUf;F

cj;juthjk;

cWjp>nghWg;GWjp

gputhfk;

ngUf;F

cj;juT

Miz

gpufpahjp

Gfo;

cj;Njrk;

Fj;Jkjpg;G

gpujk

Kjd;ik

cj;jpNahfk;

mYty;

gpujl;rak;

fz;$L> vjpH

cj;jpNahfG+Jt

murKiw

gpujhgk;

Gfo;

cjak;

vOjy;> fhiy

gpujhdk;

Kd;ik

cjhrPdk;

Gwf;fzpg;G

gpujp

gb

cjhuzk;

vLj;Jf;fhl;L

gpujpepjp

NguhsH

cjpuk;

FUjp

gpugQ;rk;

Nguz;lk;

cgfuzk;

Jizf;fUtp

gpugykhd

ngaHngw;w

cgfhuk;

cjtp

gpukpg;G

kiyg;G>jpifg;G

cgj;utk;

DW>njhe;juT

gpuKfH

ngUkfdhH

cgNjrk;

mwpTiu

gpuNtrk;

EioT

cgup

kpif

gpuhar;rpj;jk;

fOtha;

cgNahfk;

gad;

gpuNahfk;

nraw;gLj;jy;

cghak;

top

gpuNahrdk;

gyd;

cw;rtk;

tpoh

gpuhzd;

capH

cw;rhfk;

tpWtpWg;G>Cf;fk;

gpUJtp

epyk;

cy;yhrk;

ctif

gpNujk;

gpzk;> G+jTly;

c\hH

tpopg;G

gpNuik

,r;ir> fhjy;

CH[pjk;

cWjp

gPjhk;guk;

nghd;dhil

Cdk

(cWg;Gf;)FiwghL

gPlk;

Nkil

vrkhd;

Kjyhsp

gPlG+kp

Nkl;Lepyk;

vjhHj;jk;

cz;ik>elg;gpak;

GfhH

KiwaPL

vNjr;ir

jd;tpUg;gk;

Gj;jfk;

Ehy;

Vfkdjha;

xUkdjha;

Gl;gk;

G+

VNfhgpj;J

xd;Wgl;L

Gjy;td;

kfd;

If;fpak;

xw;Wik

Gj;jpud;

kfd;

fnrl;

murpjo;

Gj;jpup

kfs;

fLjhrp

jhs;

Gjy;tp

kfs;

fjk;gk;

fyit

Gz;luPfk;

ntz;jhkiu

fuNfh\k;

ifnahyp> ifjl;ly;

Gz;zpak;

mwk;>ey;tpid

ftHdH

MSeH

Gj;jp

mwpT

fTutk;

ngUik> Nkd;ik

Gdpjk;

Jha;ik

fz;lk;

ngUepyk;

G+fk;gk;

vupkiy

fz;zpak;

ngUe;jd;ik

Guhzk;

njhd;kk;

fjp

Nghf;F>Gfyplk;

Guhjdk;

goik

fjpiu

ehw;fhyp> ,Uf;if

Gsfhq;fpjk;

rpypHg;G>

fk;gPuk;

kpLf;F

GdH(n[d;kk);

kW(gpwtp)

fghyk;

kz;ilNahL

GdH(tho;T)

kW(tho;T)

fUiz

mUs;

G+r;rp([)ak;

Ropak;

fyhl;lh

mbjb>Fog;gk;

G+i[

G+ir

ftp(ftpij)

gh

G+Hj;jp

epiwT

ftpQd;

ghtyd;

G+HtPfk;

Kw;fhyk;>gioik

ftpj;Jtk;

ghjjpwk;

G+kp

Gtp

fTutk;

kjpg;G

G+uzk;

epiwT

f(H)Ukk;

nray;>tpid

Ngjk;

gpsT> gpupT

fHr;rid

cWky;

Ngl;b

NeHfhzy;>nrt;tp

fHzguk;giu

nrtptop

nghf;fpr(\)k;

fUT+yk;

fHg;gk;

#y;

Nghfk;

Ja;g;G> EfHT

fHtk;

nrUf;F

Nghij

ntwp

fy;ahzk;

jpUkzk;

igry;

jPHj;jy;

fyrk;

Flk;

nghJ[dk;

nghJ kf;fs;

f\;lk;

my;yy;

Nghyp];

fhty;Jiw

fdfrig

nghd;dk;gyk;

ngshpftpay;

,aw;gpay;

fdp\;l

,isa

kN`hw;rtk;

jpUtpoh

f[hdh

fUT+yk;

kQ;rk;

fl;by;> kQ;riz

fuhf;fpufk;

rpiwr;rhiy

kQ;rup

khiy

fhupak;

nray;

kfhd;

ngupahH

fhupahyak;

mYtyfk;

kfhj;kh

ngUkfd;

fhyhtjp

nfLKbT

kFlk;

Kb

fhdk;

,irg;ghly;

kfpik

ngUik

fpQ;rpj;Jk;

rpwpJk;>nfhQ;rKk;

kj;jpa

ika> eLtd;

fpufk;

Nfhs;

kj;jpahdk;

ez;gfy;

fpuhkk;

rpWWhH

kJuk;

,dpik

fpuPlk;

Kb

ke;jhuk;

kg;G

fPjk;

ghly;

ke;jpup

mikr;rH

fPHj;jp

Gfo;

ke;jpuprig

mikr;ruit

ifq;fupak;

jpUg;gzp> njhz;L

kkij

nrUf;F

ifyhrk;

nts;spkiiy

kHkk;

kiwnghUs;

Fryk;

eyk;

kuzk;

rhT> ,wg;G

FJhfyk;

kfpo;r;rp

kupahij

kjpg;G> khdk;

Fk;ghtpN\fk;

FlKOf;F

kTdk;

mikjp

FU

MrpupaH

kdpjd;

khe;jd;

Nfe;jpuk;

ikak;

khjk;

jpq;fs;

Nftyk;

,opT

khkprk;

,iwr;rp

Nfhgk;

rpdk;

kh%y;

tof;fk;

Nfhukhl;Nlhk;

Nfl;fkhl;Nlhk;

kha;khyk;

grg;G> ghrhq;f

Nfh\;b

Fohk;>FO>fd;id

khHf;fk;

top> newp

Nfh\k;

Kof;fk;>Ngnuhyp

kpjthjk;

kd;Nghf;F

Nfhj;jpuk;

Fb

kpUfk;

tpyq;F

Qhgfk;

epidT

kpUJ

nkJ>nkd;ik

Qhdk;

mwpT

K$Hj;jk;

ey;Ntis

rNfhjud;

cld;gpwg;G

Kjw;gpujp

Kjw;gb

rNfhjup

cld;gpwe;jhs;

%j;jpuk;

rpWePH

rf;fuk;

cUis>rpy;T

%yjdk;

Kjy;

rf;futHj;jp

Nguurd;

Kyhk;

Nkw;G+r;R

rf;jp

Mw;wy;

Nkfk;

Kfpy;

rf[k;

,ay;G

Nkij

NguwpQH

rfyKk;

vy;yhKk;

ikjhdk;

muq;F

rfthrk;

gof;fk;

ikak;

eLtk;

rfh

Njhod;

Nkhfk;

ikay;> kaf;fk;

rfhak;

cjtp

Nkhrk;

NfL

rfpjk;

cld;

Nkhl;rk;

tPL

rfpg;G

nghiw

ahfk;

Nts;tp

rq;flk;

,f;fl;L

Aj;jk;

NghH

rq;fPjk;

,ir

ufrpak;

Fl;L> G+lfk;

rq;Nfhrk;

ntl;fk;> $r;rk;

Urp

Rit

rj;jpahf;fpufk;

mwg;Nghuhl;lk;

uj;Jnra;

ePf;F>tpyf;fpf;nfhs;

rjh

vg;nghOJk;

uPjp

mbg;gil>xOq;F

rq;Njfk;

ma;ak;

tf;fpuk;

Nfhzy;

re;Njh\k;

kfpo;r;rp

tre;jk;

njd;wy;

rQ;ryk;

Jauk;>fyf;fk;

trdk;

ciuahly;

rQ;rhuk;

elkhl;lk;

trPfuk;

ftHr;rp

r%fk;je;J

tUifje;J

tje;jp

ngha;r;nra;jp

rgjk;

#Siu

tij

nfhiy

rg;ghj;J

fhyzp

tk;rk;

kuG

rgjk;

#Siu

tk;rhtop

nfhbtop

rig

mit

tkprk;

Fb

rk;ge;jk;

njhlHG

tUzid

tpupthd tpsf;fk;

rk;gtk;

epfo;r;rp

tUj;jk;

Jd;gk;

rk;gpujhak;

njhd;kuG

tHf;fk;

tFg;G>,dk;

rk;kjk;

,irT

tHzid

Gfo;e;Jiu

rk;Nksdk;

Nguit

tHj;jfk;

thzpf(g)k;

rk;ul;riz

fhg;ghw;Wjy;

tHj;jfHfs;

tzpfHfs;

rk\;b

,izg;ghl;rp>$l;likg;G

tHj;jfepiyak;

mq;fhb

rkurk;

cld;ghL

tHkk;

cl;gif

rkhjhdk;

mikjp

tU\k;

Mz;L

rkhsp

<LnfhL

tq;fp

fhg;gfk;

rkPgk;

mz;ik>mUF

tug;gpurhjk;

nfhil

r%fk;

FKfhak;

taJ

mfit

rHtNjr

midj;Jyf

tNahjpfk;

KJik

ruz;

milf;fyk;

tdk;

fhL

rupj;jpuk;

tuyhW

tdhe;jpuk;

clfhL

re;jHg;gk;

tha;g;G

th];jtk;

cz;ik nka;ik

re;jpud;

epyh>kjp

thjk;

nrhy;yhly;

re;Njh\k;

kfpo;r;rp

thf;F

tha;nkhop

rf[k;

,ay;G>tof;fk;

thf;Fthjk;

nrhw;NghH

rHt[dthf;nfLg;G

nghJthf;nfLg;G

thfdk;

CHjp

ruzhfjp

mbgzpT

thrfH

gbf;FeH>gbg;NghH

ru];tjp

fiykfs;

thr(id)k;

kzk;

ruPuk;

cly;>clk;G

thrp

gb

ryNjh\k;

kfpo;r;rp

thg];

jpUk;gg;ngwy;

rtk;

gpzk;

thlif

Fb$yp

rtuk;

kopg;G

thbf;if

,ay;G

rthy;

miw$ty;

thjk;

nrhw;NghH>nrhy;yhly;

rd;khHf;fk;

ed;ndwp

the;jp

ff;fy;

rhfrk;

Jzpr;ry;

thupR

kuGupik

rhl;rp

rhd;W

thypgk;

,sik

rhj;jpakhd

,ayf;$ba

thypgH

,isQH>,se;jhup

rhjk;

NrhW

thA

fhw;W

rhjfk;

MjuT

tpQ;Qhdk;

mwptpay;

rhjhuzkha;

,ay;gha;>vspjha;

tpQ;Qhdp

mwptpayhsH

rhe;jk;

mlf;fk;

tpuf;jp

kdKwpT

rhe;jp

mikjp

tpurk;

Mghrk;

rhk;uhr;rpak;

NguuR

tpujk;

Nehd;G

rhkhd;ad;

vspatd;

tpNuhjk;

gif

rhaul;ir

khiy

tp];jupg;G

tpupthf;fk;

rhuk;

gpopT

tpjjpahrk;

NtWghL

rhuhk;rk;

gpopT

tpjpfs;

newpfs;

rhtfhrk;

Xa;T

tpepNahfk;

toq;fk;

rpfuk;

cr;rp>KfL

tpfpjk;

tpOf;ghL

rpfpr;ir

kUj;Jtk;>gz;Ltk;

tpf;fpufk;

jpUTUtk;

rpif

jiykapH

tp\ak;

nghUs;

rpq;fk;

mupkh

tpNrl

rpwg;G

rpq;fhuk;

xg;gid>moF

tpkHrdk;

jwdha;T

rpR

Foe;ij

tp[ak;

tUif>nryT

rpj;jg;gpuik

kdkaf;fk;

tpahjp

Neha;

rpj;jhe;jk;

Nfhl;ghL>nfhz;KbT

tpthfk;

jpUkzk;

rpjpyk;

rpijT

tPjk;

tpOf;fhL

rpejid

vz;zk;

Ntfk;

tpiuT

rpNefk;

el;G

n[d;kk;

gpwtp

rpuk;

jiy

[kPd;

gpiz

rpukk;

fLik

[dq;fs;

kf;fs;

rpiy

gbkk;

[djpgjp

Ml;rp;j;jiytH

rPf;fpuk;

RUf;fh

[hf;fpuij

tpopg;G

     rP([P)uzk;

nrupkhdk;

[Ptd;

capH

rPtdk;)

tho;T

n[d;kk;

gpwtp

Rfk;

eyk;

n[gk;

njhOif

RftPdk;

eyf;FiwT

`Hjhy;

fjtilg;G

Rfhjhuk;

ey;tho;T

];jpuk;

cWjp

Rj;jk;

Jha;ik

];jhgdk;

epiyak;>epWtdk;

Rj;jpfupg;G

Jg;guT>Jha;ikg;gLjjy;

];NuhH

mq;fhb>fil

rje;jpuk;

tpLjiy>cupik

=uq;fk;

jpUtuq;fk;

Rghtk;

,ay;G

];Nyhfk;;

Kof;fk;

Rthrk;

%r;R

mg;G

ePH

RAepHzak;

jd;dhl;rp

NjA

jP

Rakupahij

jd;khdk;

thA

tsp>fhw;W

RahjPdk;

jd;Dupik

kPdhl;rp

faw;fz;fp

RNal;ir

jd;tpUg;gk;

fhkhl;rp

fhkf;fz;zp

Rthkpfs;

mbfs;

tprhyhl;rp

jlq;fz;zp

#rfk;

kiwKfk;

tpj;jpahuk;gk;

VLnjhlf;fk;

#l;rkk;

El;gk;

tpujk;

Nehd;G

#upad;

QhapW>fjputd;

rupif

xOf;fk;

#d;ak;

gho;>ntWik

fpupif

topghL

Nrit

njhz;L

Nahfk;

Xfk;

nrhw;gk;

nfhQ;rk;

Qhdk;

mwpT

Nrhfk;

Jauk;

=

jpU

Nrhid

Ma;T

=y=

jtj;jpU

Nrhjplk;

fzpad;

N\j;jpuq;fs;

jpUg;gjpfs;

NrhjplH

nra;jp

[d;dy;

gy;fzp>rhsuk;

Nrhuk;

xOf;ff;NfL

Application

tpz;zg;gk;

jfty;

nra;jp

Bakery

ntWg;gfk;

jfdk;

vupA+l;ly;

BandMusic

,d;dpak;

jz;lid

xWg;G

Calendar

ehs;fhl;b

jj;Jtk;

nka;apay;

Computer

fzpdp

jghy;

mQ;ry;

confederation

,izg;ghl;rp

jug;G

gf;fk;

Data

juT

jupj;jpuk;

tWik

Doctor

kUj;JtH

jUzk;

Ntis

Email

kpd;dQ;ry;

jUkk;

mwk;

Emergency

rLjpg;gzp

jyh

jiyf;F

Experience

gl;lwpT

jahH

mzpak;

Fax

njhiyg;gb

jhf;fy;

xg;gilg;G

Feedback

gpd;Dhl;lk;;

jhrd;

mbik

Highway

neLQ;rhiy

jhl;rz;ak;

fz;Nzhl;lk;>,uf;fk;

Internet

njhlHtiy

jhdk;

nry;tk;

Professionalism

njhopy;rhHjpwik

jhdk;

nfhil

Qualification

jifik

jplfhj;jpuk;

fl;Lly;>clYWjp

Receptionist

tuNtw;ghsH

jpahfk;

<fk;

Referendum

Neubthf;nfLg;G

jputk;

ePHkk;

skill

Ez;ik

jputpak;

nry;tk;

Volunteer

njhz;lH

jpuhzp

njk;G

Website

,izajsk;

jpUg;jp

kdepiwT

 

 

jpU\;b

ghHit

 

 

   

 

 

 

 

வேற்றுமொழிச் சொற்களை எமது பயன்பாட்டில் இருந்து நீக்கி தூய தமிழ் சொற்களை பேச்சிலும்இ எழுத்திலும் பயன்படுத்த வேண்டுமென்பதற்காக கனடாவில் இயங்கும் தமிழ் படைப்பாளிகள் கழகம் வெளியிட்ட தூய தமிழ்ச்சொற்களுடன் நாமும் சில சொற்களை இணைத்து இங்கே பதிவு செய்திருக்கிறோம்.

திசைச்சொற்கள்

தூய தமிழ் சொற்கள்

திசைச்சொற்கள்

தூய தமிழ் சொற்கள்

அக்கிரமம்
அகதி
அகங்காரம்
அகந்தை
அகம்பாவம்
அகிம்சை
அங்கம்
அங்கத்தினர்
அங்கத்துவம்
அங்கீகாரம்
அசம்பாவிதம்
அசரீரி
அசாக்கிரதை
அசாத்தியம்
அசீரணம்
அசுத்தம்
அசூசை
அஸ்தமனம்
அஞ்சலி
அத்தாட்சி
அட்சரம்
அதிகபட்சம்
அதிகாரி
அதிசயம்
அதிர்ஷ்டம்
அதிதி
அதிபர்
அதைரியம்
அந்தகாரம்
அந்தரங்கம்
அந்நியன்
அந்யேந்யம்
அநாதை
அநாவசியம்
அநேகம்
அபகரி
அபராதம்
அபரிமிதம்
அபயம்
அபாண்டம்
அபிவிருத்தி
அபிப்பிராயம்
அபிராமி
அபிமானம்
அபிஷேகம்
அபூர்வம்
அமல்ப்படுத்தல்
அமோகம்
அய்க்கிய
அர்த்தம்
அர்த்தம்
அர்த்தராத்திரி
அயோக்கியத்தனம்
அயோக்கியன்
அர்ச்சனை
அர்ப்பணம்
அராஜகம்
அரூபம்
அலுமாரி
அலங்காரம்
அலட்சியம்
அவசியம்
அவலட்சணம்
அற்புதம்
அன்னம்
அனுகூலம்
அனுசரணை
அனுசரி
அனுபவம்
அனுபந்தம்
அனுமதி
அனுதாபம்
அனுமானம்
அனுட்டித்தல்
ஆசனம்
ஆசாரம்
ஆக்கிரமித்தல்
ஆகாசம்
ஆகாரம்
ஆசீர்வாதம்
ஆச்சரியம்
ஆசை
ஆடம்பரம்
ஆதங்கம்
ஆதாரம்
ஆதிக்கம்
ஆதிபத்தியம்
ஆபத்து
ஆபரணம்
ஆபாசம்
ஆட்சேபணை
ஆமோதித்தல்
ஆரம்பம்
ஆரோக்கியம்
ஆவேசம்
ஆலயம்
ஆல்பம்
ஆலோசனை
ஆயுள்
ஆனந்தம்
ஆஸ்தி
இரத்தம்
இராஜினாமா
இராகம்
இராணுவம்
ஈமம்
ஈமைக்கிரிகைகள்;
ஈனம்
உக்கிரம்
உச்சரிப்பு
உத்தரம்
உத்தரவாதம்
உத்தரவு
உத்தேசம்
உத்தியோகம்
உத்தியோகபூர்வ
உதயம்
உதாசீனம்
உதாரணம்
உதிரம்
உபகரணம்
உபகாரம்
உபசாரம்
உபத்ரவம்
உபதேசம்
உபரி
உபயோகம்
உபாயம்
உற்சவம்
உற்சாகம்
உல்லாசம்
ஊர்ஜிதம்;
ஊனம்
எசமான்
எதார்த்தம்
எதேச்சை
ஏகமனாதாய்
ஏகோபித்து
ஐக்கியம்
கசெட்
கடுதாசி
கதம்பம்
கரகோஷம்
கவர்னர்
கவுரவம்
கண்டம்
கண்ணியம்
கதி
கதிரை
கம்பீரம்
கபாலம்
கருணை
கவி (கவிதை)
கவிஞன்
கவித்துவம்
கவுரவம்
கருமம்
கர்ச்சனை
கர்ணபரம்பரை
கர்ப்பம்
கர்வம்
கல்யாணம்
கலசம்
கஷ்டம்
கனிஷ்ட
கார்
காராக்கிரகம்
காரியம்
காரியாலயம்
காலாவதி
கானம்
கிஞ்சித்தும்
கிரகம்
கிராமம்
கிரீடம்
கீதம்
கீர்த்தி
கைங்கரியம்
கைலாசம்
குசலம்
குதூகலம்
கும்பாபிஷேகம்;
குரு
கேந்திரம்
கேவலம்
கோபம்
கோரமாட்டோம்
கோஷ்டி
கோஷம்
கோத்திரம்
ஞாபகம்
ஞானம்
சகோதரன்
சகோதரி
சக்கரம்
சக்கரவர்த்தி
சக்தி
சகஜம்
சகலமும்
சகவாசம்
சகா
சகாயம்
சகிதம்
சகிப்பு
சங்கடம்
சங்கீதம்
சங்கோசம்
சத்தியாக்கிரகம்
சதா
சந்தேகம்
சந்தோஷம்
சஞ்சலம்
சஞ்சாரம்
சமூகம்தந்து
சபதம்
சப்பாத்து
சபதம்
சபை
சம்பந்தம்
சம்பவம்
சம்பிரதாயம்
சம்மதம்
சம்மேளனம்
சம்ரட்சணை
சமஷ்டி
சமரசம்
சமாதானம்
சமாளி
சமீபம்
சமூகம்
சர்வதேச
சரண்
சரித்திரம்
சந்தர்ப்பம்
சந்திரன்
சந்தோஷம்
சகஜம்
சர்வஜனவாக்கெடுப்பு
சரணாகதி
சரீரம்
சலதோஷம்
சவம்
சவரம்
சவால்
சன்மார்க்கம்
சாகசம்
சாட்சி
சாத்தியமான
சாதம்
சாதகம்
சாதாரணமாய்
சாந்தம்
சாந்தி
சாம்ராச்சியம்
சாமான்யன்
சாயரட்சை
சாரம்
சாராம்சம்
சாவகாசம்
சிகரம்
சிகிச்சை
சிகை
சிங்கம்
சிங்காரம்
சிசு
சித்தப்பிரமை
சித்தாந்தம்
சிதிலம்
சிந்தனை
சிநேகம்
சிரம்
சிரமம்
சிருங்காரம்
சிருஷ்டி
சிரேஷ்ட
சிலை
சீக்கிரம்
சீரணம்
சீவன்
சீவனம்
சுகம்
சுகவீனம்
சுகாதாரம்
சுத்தம்
சுத்திகரிப்பு
சுதந்திரம்
சுந்தரம்
சுபாவம்
சுவாசம்
சுயநிர்ணயம்
சுயமரியாதை
சுயாதீனம்
சுயேட்சை
சுவாமிகள்
சூசகம்
சூட்சுமம்
சூரியன்
சூன்யம்
தருணம்
தருமம்
தலா
தாக்கல்
தாட்சண்யம்

 
முறைகேடு
ஏதிலி
தன்முனைப்பு
செருக்கு
ஆணவம்
அறவழி
உறுப்பு
உறுப்பினர்
உறுப்புரிமை
ஒப்புதல்
முரணிகழ்வு
விண்னொலி
விழிப்பின்மை
நடக்கமுடியாத
செரியாமை
துப்புரவின்மை
பொறாமை
மறைவு
(அக)வணக்கம்
சான்று
ஒலிப்பு
மேல்வரம்பு
மேலாளர்
விந்தை
குருட்டாம்போக்கு
விருந்தினர்
முதல்வர்
துணிவின்மை
இருள்
மறைமுகம்
அயலான்
நெருக்கம்
ஆதரவிலி
தேவையற்றது
பல
கைப்பற்று,கவர்ந்துகொள்
தண்டம்
அளவின்மை
அடைக்கலம்
பொய்ப்பழி
மேம்பாடு
கருத்து
அழகம்மை
பற்று
திருமுழுக்கு
அருமை
நடைமுறைப்படுத்தல்
மிகுதி
ஒன்றிணைந்த
பொருள்
பாதி
நள்ளிரவு
கயமை
கயவன்
போற்றி
ஈகை,தற்கொடை
அரசியல் குழப்பம்
உருவிலி
பெட்டகம்,அணி
புறக்கணிப்பு
தேவை
அழகின்மை
புதுமை
சோறு
நன்மை
உறுதுணை
பின்பற்று,கடைப்பிடி
பட்டறிவு
பினினிணைப்பு
இசைவு
இரங்கல்
உய்த்துணர்வு
கடைப்பிடித்தல்
இருக்கை
ஒழுக்கம்
கையகப்படுத்தல்
வானம்
உணவு
வாழ்த்து
வியப்பு
அவா
பகட்டு
ஏக்கம்
அடிப்படை
வல்லாண்மை
தலைமை
வில்லங்கம்
அணிகலன்
கொச்சை
மறுப்பு
வழிமொழிதல்
தொடக்கம்
உடல்நலம்
படபடப்பு
கோயில்
செருகேடு
கலந்தாய்வு
வாழ்நாள்
இன்பம்
செல்வம்
குருதி
பணி விலகல்
பண்
படை
இ(சு)டுகாடு
இறுதிச்சடங்கு
குறை, இழிவு
கடுமை
ஒலிப்பு
வடக்கு
உறுதி,பொறுப்பு
ஆணை
குத்துமதிப்பு
அலுவல்
அரசமுறை
எழுதல்,காலை
புறக்கணிப்பு
எடுத்துக்காட்டு
குருதி
துணைக்கருவி
உதவி
பணிவிடை
ஊறு,தொந்தரவு
அறிவுரை
மிகை
பயன்
வழி
விழா
விறுவிறுப்பு,ஊக்கம்
உவகை
உறுதிப்படுத்தல்
உறுப்புக்குறைபாடு
முதலாளி
உண்மை
தன்விருபபம்
ஒருமனதாய்
ஒன்றுபட்டு
ஒற்றுமை
அரசிதழ்
தாள்
கலவை
கையொலி
ஆளுநர்
பெருமை, மேன்மை
பெருநிலம்
பெருந்தன்மை
போக்கு, புகலிடம்
நாற்காலி
மிடுக்கு
மண்டையோடு
அருள்
பாவலன்
பாத்திறம்
மதிப்பு
செயல், வினை
உறுமல்
செவிவழி
சூல்
செருக்கு
திருமணம்
குடம்
அல்லல்
இளைய
மகிழுந்து,சிற்றூந்து
சிறைச்சாலை
செயல்
அலுவலகம்
கெடுமுடிவு
இசைப்பாடல்
சிறிதும்,கொஞ்சமும்
கோள்
சிற்றூர்
முடி
பாடல்
புகழ்
திருப்பணி
வெள்ளிமலை
நலம்
மகிழ்ச்சி
குடமுழுக்கு
ஆசிரியர்
மையம்
இழிவு
சினம்
கேட்கமாட்டோம்
குழாம்,குழு
முழக்கம்,பேரொலி
குடி
நினைவு
அறிவு
உடன்பிறந்தான்
உடன்பிறந்தாள்
உருளை,சில்லு
பேரரசன்
ஆற்றல்
இயல்பு
எல்லாமும்
பழக்கம், நட்பு
தோழர்
உதவி
உடன்
பொறை
கூச்சம்,இக்கட்டு
இசை
வெட்கம்,கூச்சம்
அறப்போராட்டம்
எப்பொழுதும்
அய்யம்
மகிழ்ச்சி
துயரம்,கலக்கம்
நடமாட்டம் ;
வருகைதந்து
வஞ்சினம்,சூள்
காலணி
சூளுரை
அவை
தொடர்பு
நிகழ்ச்சி
தொன்மரபு
இசைவு
கூட்டமைப்பு
காப்பாற்றுதல்
இணைப்பாட்சி
உடன்பாடு
அமைதி
ஈடுகொடு
அண்மை,அருகு
குமுகாயம்
அனைத்துலக
அடைக்கலம்
வரலாறு
வாய்ப்பு
நிலா, மதி
மகிழ்ச்சி
இயல்பு,வழக்கம்
பொதுவாக்கெடுப்பு
அடிபணிவு
உடல், உடம்பு
தடுமம்
பிணம்
மழிப்பு
அறைகூவல்
நன்னெறி
துணிச்சல்
சான்று
இயலக்கூடிய
சோறு
ஆதரவு
இயல்பாய்,எளிதாய்
அடக்கம்
அமைதி
பேரரசு
எளியவன்
மாலை
பிழிவு
பிழிவு
ஓய்வு
உச்சி,முகடு
மருத்துவம்,பண்டுவம்
தலைமயிர்
அரிமா
ஒப்பனை,அழகு
குழந்தை
மனமயக்கம்
கோட்பாடு,கொண்முடிவு
சிதைவு
எண்ணம்
நட்பு
தலை
கடுமை
காமம்
படைப்பு
மூத்த
படிமம்
சுருக்கா
செரிமானம்
உயிர்
வாழ்வு
நலம்
நலக்குறைவு
நல்வாழ்வு
தூய்மை,துப்புரவு
தூய்மைப்படுத்தல்
விடுதலை,உரிமை
எழில்
இயல்பு
மூச்சு
தன்னாட்சி
தன்மானம்
தன்னுரிமை
தன்விருப்பம்
அடிகள்
மறைமுகம்
நுட்பம்
ஞாயிறு,கதிரவன்
பாழ், வெறுமை
வேளை
அறம், கடமை
தலைக்கு
ஒப்படைப்பு
கண்ணோட்டம்,இரக்கம்


 
தருணம்
தருமம்
தலா
தாக்கல்
தாட்சண்யம்
திரவியம்
தரித்திரம்
தானம்
திடகாத்திரம்
தியாகம்
திரவம்
திராணி
திருப்தி
திருஷ்டி
தினம்
தினசரி
தீட்சண்யம்
தீர்க்காயுசு
தீவிரம்
துரிதம்
துரோகம்
துவாரம்
துவிச்சக்கரவண்டி
தூரம்
தேகம்
தேதி, திகதி
நட்சத்திரம்
நதி
நகல்
நட்டம்
நத்தார்
நவரசம்
நாடா
நித்திரை
நிபுணர்
நிமிஷம்
நவீனம்
நளினம்
நாசம்
நிச்சயம்
நிசப்தம்
நிந்தனை
நிபந்தனை
நிம்மதி
நியதி
நியமனம்
நிர்வாகம்
நிரந்தரம்
நிரபராதி
நிர்மூலம்
நிர்ணயம்
நிருபர்
நிராகரி
நிர்ப்பந்தம்
நீதி
நீதிபதி
நேசம்
பக்குவம்
பண்டிகை
பகிஷ்கரிப்பு
பந்துக்கள்
பத்திரிகை
பதிஞானம்
பரம்பரை
பரீட்சை
பவுர்ணமி
பச்சாத்தாபம்
பட்சணம்
பரஸ்பரம்
பராக்கிரமம்
பரிகாசம்
பரிகாரம்
பரிச்சயம்
பரிசீலனை
பரிதாபம்
பரிணாமம்
பரிமாணம்
பரிபாலனம்
பரோபகாரம்
பரீட்சை
பலித்தல்
பவனி
பலம்
பலவந்தம்
பலவீனம்
பலாத்காரம்
பலி
பவுர்ணமி
பஸ்
பாத்தியத்தை
பாதகம்
பாரம்
பாராளுமன்றம்
பாக்கி
பாலகன்
பாலர்கள்
பாரம்பரியம்
பாராயணம்
பால்யம்
பாவம்
பாஷை
பிதாமகன்
பிதிர்
பிதிர்தர்ப்பணம்
பிம்பம்
பிடிவிறாந்து
பிரச்சினை
பிரசாதம்
பிரதஷ்ணம்
பிரதிபலன்
பிரமம்
பிரயாச்சித்தம்
பிரசாரம்
பிரகாசம்
பிரசை
பிரசாhவுரிமை
பிரயாணம்
பிரயாணிகள்
பிரார்த்தனை
பிகு
பிரகடனம்
பிரகாசம்
பிரசவம்
பிரசித்தி
பிரதிக்ஞை
பிரமாதம்
பிரமை
பிரயத்தனம்
பிரயாசை
பிரயோகம்
பிரளயம்
பிரவாகம்
புராணம்
பிரக்கியாதி
பிரதம
பிரதம
பிரதட்சயம்
பிரதாபம்
பிரதானம்
பிரதி
பிரதிநிதி
பிரபஞ்சம்
பிரபலமான
பிரமிப்பு
பிரமுகர்
பிராணன்
பிருதுவி
பிரேதம்
பீடம்
பீடபூமி
புகையிரதம்
புத்தகம்
புட்பம்
புதல்வன்
புத்திரன்
புத்திரி
புதல்வி
புண்டரீகம்
புண்ணியம்
புண்ணியம்
புத்தி
புனிதம்
பூகம்பம்
புராணம்
புராதனம்
புளகாங்கிதம்
புனர்(சென்மம்)
பூச்சியம்
பூசை
பூர்த்தி
பூர்வீகம்
பூமி
பூரணம்
பேதம்
பொக்கிசம்
போகம்
போதை
பைசல்
பொதுஜனம்
பேட்டி
பௌதிகவியல்
போலிஸ
மஹோற்சவம்
மஞ்சம்
மஞ்சரி
மகான்
மகாத்மா
மகுடம்
மகிமை
மத்திய
மத்தியானம்
மதுரம்
மந்தாரம்
மந்திரி
மந்திரிசபை
மமதை
மர்மம், புதிர்
மரணம்
மரியாதை
மவுனம்
மனிதன்
மாதம்
மாமிசம்
மாமூல்;
மாய்மாலம்
மார்க்கம்
மிதவாதம்
மிருகம்
மிருது
முகூர்த்தம்
முதற்பிரதி
மூத்திரம்
மூலதனம்
மேகம்
மேதை
மிருகம்
மைதானம்
மையம்
மோகம்
யுத்தம்
ரகசியம்
ருசி
ரத்துசெய்
ரீதி
வக்கிரம்
வசந்தம்
வசனம்
வசீகரம்
வம்சம்
வம்சாவழி
வமிசம்
வருத்தம்
வர்க்கம்
வர்ணனை
வர்த்தகம்
வர்த்தகர்கள்
வர்த்தகநிலையம்
வர்மம்
வருஷம்
வங்கி
வரப்பிரசாதம்
வருடம்
வயது
வயோதிகம்
வனம்
வனாந்தரம்
வாஸ்தவம்
வாதம்
வாக்கு
வாக்குவாதம்
வாகனம்
வாசகர்
வாசனை
வாசி
வாபஸ்
வாடகை
வாடிக்கை
வாதம்
வாந்தி
வாலிபம்
வாலிபர்
வாயு
விஞ்ஞானம்
விஞ்ஞானி
விரதம்
விஸ்தரிப்பு
வித்தியாசம்
விதிகள்
விநியோகம்
விகிதம்
விக்கிரகம்
விஷயம்
விசேட
விமர்சனம்
விமானம்
விஜயம்
வியாதி
விவாகம்
வேகம்
சென்மம்
ஜமீன்
ஜனங்கள்
ஜனாதிபதி
ஜாக்கிரதை
ஜபம்
ஜீவனோபாயம்
ஹர்த்தால்
ஸ்திரம்
ஸ்தாபனம்
ஸ்ரோர்
ஸ்லோகம்
அப்பு
தேயு
வாயு
வித்தியாரம்பம்
விரதம்
சரிகை
கிரிகை
யோகம்
ஞானம்
ஸ்ரீ
ஸ்ரீலஸ்ரீ

 
வேளை
அறம்,கடமை
தலைக்கு
ஒப்படைப்பு
கண்ணோட்டம்,இரக்கம்
செல்வம்
வறுமை
கொடை
கட்டுடல்உடற்கட்டு
ஈகம்
நீர்மம்
தெம்பு
உளநிறைவு,மனநிறைவு
பார்வை
நாள்
அன்றாடம்,நாள்தோறும்
கூர்மை
நீண்ட வாழ்நாள்
கடுமை
விரைவு
இரண்டகம்
தொளை
ஈருருளி,மிதிவண்டி
தொலைவு,சேய்மை
உடல், காயம்
நாள்
விண்மீன்
ஆறு
படி
இழப்பு
திருப்பிறப்பு
தொண்சுவை
இழை
உறக்கம்
வல்லுநர்
மணித்துளி
புதுமை,புதினம்
நயம்
அழிவு
உறுதி
அமைதி
இகழ்ச்சி
முன்னீடு
மனஅமைதி
வரையறை
அமர்த்தம்
செயலாண்மை
நிலைப்பு
குற்றமற்றவர்
வேரறப்பு,முழுஅழிப்பு
முடிவு
செய்தியாளர்
புறக்கணி
வலுக்கட்டாயம்
நடுவுநிலைமை
நடுவர்
நட்பு, அன்பு
முதிர்ச்சி
பெருநாள்
புறக்கணிப்பு
உறவினர்
செய்தித்தாள்,இதழ்,ஏடு
இறையுணர்வு
தலைமுறை
தேர்வு
முழுமதி
இரக்கம்
சிற்றுண்டி,
ஒருவர்க்கொருவர்
பேராண்மை
ஏளனம்,நையாண்டி
விடிவு
பழக்கம்,அறிமுகம்
ஆய்வு
இரக்கம்
உருமலர்ச்சி
அளவீடு
ஆட்சி
பிறர்க்குஉதவுதல்
தேர்வு
கைசுடல்
உலா
வலிமை
கட்டாயம்
குறைபாடு
வன்முறை
காவு
முழுநிலா
பேரூந்து
உரிமை, சொந்தம்
தீமை
சுமை
நாடாளுமன்றம்
நிலுவை
குழந்தை
சிறுவர்கள்
மரபு
ஓதல், நெட்டுரு
இளமை
தீவினை
மொழி
தந்தை
நீர்க்கடன்
முடிக்கை
உரு
பிடியாணை
சிக்கல்
திருவமுது
வலம்வரல்
கைம்மாறு
கடவுள்
கழுவாய்
பரப்புரை
ஒளி
குடிமகன்
குடியுரிமை
பயணம்
பயணிகள்
கூட்டு வழிபாடு
இறுக்கம்
அறிவிக்கை,சாற்றுகை
பேரொளி
மகப்பேறு
புகழ்
சூளுரை
நேர்த்தி
மனமயக்கம்
பெருமுயற்சி
விடாமுயற்சி
பயன்பாடு
வெள்ளப்பெருக்கு
பெருவெள்ளம்
தொன்மைக்கதை
புகழ்
முதன்மை
தலைமை அமைச்சர்
கண்கூடு,எதிர்
புகழ் முன்மை
படி
சார்பாளர், நிகராளி
பேரண்டம்
பெயர்பெற்ற
மலைப்பு, திகைப்பு
பெருமகனார்
உயிர்
நிலம்
பிணம்
மேடை
மேட்டுநிலம்
தொடரூந்து
நூல்
பூ
மகன்
மகன்
மகள்
மகள்
வெண்தாமரை
அறம்
நல்வினை
அறிவு
தூய்மை
நிலநடுக்கம்
தொன்மம்
பழமை
சிலிர்ப்பு, உவகை
மறு(பிறவி)
சுழியம்
பூசை
நிறைவு,
முற்காலம், பழைமை
புவி
நிறைவு
பிளவு, பிரிவு
கருவூலம்
துய்ப்பு, நுகர்வு
வெறி
தீர்த்தல்
பொதுமக்கள்
நேர்காணல்,செவ்வி
இயற்பியல்
காவல்துறை
திருவிழா
கட்டில்,பஞ்சணை
மாலை
பெரியார்
பெருமகன்
முடி
பெருமை
மைய, நடுவண்
நண்பகல்
இனிமை
மப்பு
அமைச்சர்
அமைச்சரவை
செருக்கு
மசைபொருள்
இறப்பு, சாவு
மதிப்பு, மானம்
அமைதி
மாந்தன்
திங்கள்
இறைச்சி, புலால்,தசை
வழக்கம்
பசப்பு, பாசாங்கு
நெறி,வழி,மென்போக்கு
விலங்கு
மெது, மென்மை
நல்வேளை
முதற்படி
சிறுநீர்
முதல்
முகில்
பேரறிஞர்
விலங்கு
அரங்கு
வேள்வி
மையல், மயக்கம்
போர்
குட்டு,மறைபொருள்
சுவை
நீக்கு,விலக்கிக்கொள்
அடிப்படை,ஒழுங்கு
வளைவு,கோணல்
தென்றல்
உரையாடல்
கவர்ச்சி
மரபு
கொடிவழி
குடி
துன்பம்
வகுப்பு, இனம்
புகழ்ந்துரை
வாணிப(க)ம்
வணிகர்கள்
அங்காடி
உட்பகை
ஆண்டு
காப்பகம்,
கொடை
ஆண்டு
அகவை
முதுமை
காடு
உட்காடு
உண்மை, மெய்மை
சொல்லாடல்
வாய்மொழி
சொற்போர்
ஊர்தி
படிக்குநர்,படிப்போர்
மணம்
படி
திரும்பப்பெறல்
குடிகூலி
இயல்பு
சொற்போர்,சொல்லாடல்
கக்கல்
இளமை
இளைஞர்,இளந்தாரி
காற்று
அறிவியல்
அறிவியலாளர்
நோன்பு
விரிவாக்கம்
வேறுபாடு,நெறிகள்
வழங்கல்
விழுக்காடு
திருவுருவம்
பொருள்
சிறப்பு
திறனாய்வு
வானூர்தி
வருகை,செலவு
நோய்
திருமணம்
விரைவு
பிறவி
பிணை
மக்கள்
அரசுத்தலைவர்
விழிப்பு
தொழுகை
வாழ்க்கை
கதவடைப்பு
உறுதி
நிலையம்,நிறுவனம்
அங்காடி,கடை
முழக்கம்
நீர்
தீ
வளி, காற்று
ஏடுதொடக்கல்
நோன்பு
ஒழுக்கம்
வழிபாடு
ஓமம்
அறிவு
திரு
தவத்திரு
 

 


News

 

Last Updated :

 


வணிக நிலையங்கங்களுக்கன தமிழ்ப் பெயர்கள்:
 

பிற மொழிப்பெயர்கள்                                                         -       தமிழ்ப் பெயர்கள்

1 டிரேடரஸ்                                                                             -       வணிக மையம்
2 கார்ப்பரேஷன்                                                                     -        நிறுவனம்
3 ஏஜென்சி                                                                               -        முகவர்
4 சென்டர்                                                                               -         மையம்,  நடுவம், நிலையம்
5 எம்போரியம்                                                                      -         விற்பனையகம்
6 ஸ்டோரஸ்                                                                        -          பண்டகசாலை
7 ஷாப்                                                                                    -          கடை, அங்காடி
8 அண்கோ                                                                            -          குழுமம்
9 ஷோரூம்                                                                           -          காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ்                                                   -          பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி                                                         -         சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ்                                                                       -         போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்


http://123tamilchat.com/images/imported/2012/08/376707_493168057377476_1818341617_n-1.jpg

 

 

 


 

03--01-2010

 திரு. மதியழகன்
செய்தி ஆசிரியர்
கனடிய தமிழ் வானொலி
கனடிய பல்பண்பாட்டு வானொலி
தமிழ்த் தொலைக்காட்சி  

ஊடகங்களில் தூய தமிழ்ப் பயன்பாட்டின் தேவை  

திருவுடையீர்  

வணக்கம். தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஊடகங்கள் முடிந்த மட்டும் பிறமொழிக் கலப்பில்லாது தூய தமிழ் நடையைக் கையாள வேண்டும் என்ற கோட்பாட்டை முன்னெடுத்து வருகிறது. இது பற்றி முன்னரும் உங்கள் நிறுவனத்தின் தலைவர் திரு. ஸ்ரான் அன்ரனி அவர்களுக்கு 2009-09-08 இல் ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தோம். ஆனால் பலன் எதுவும் கிட்டவில்லை. உங்கள் அமைப்பின் செய்தி, அறிவித்தல் போன்றவற்றில் பிறமொழிக் கலப்பு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.  

மொழித்தூய்மை என்பது தமிழ்த் தேசியத்தின் பிரிக்க முடியாத உறுப்பு. மொழித் தூய்மை காக்கப்படாத காரணத்தால்  தமிழில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளம் பிரிந்து புது மொழியானது.   

இரண்டொரு மலைப்பிஞ்சுகள் சோற்றில் கலந்திருந்தால் உண்ண முடியாது. அது பல்லை உடைக்கும். அது போலவே பிறமொழிச் சொற்கள் கலந்த உரைநடை தமிழைக் கெடுக்கும்.  

ஒரு காலத்தில் பயன்பாட்டில் இல்லாது இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள தூய தமிழ்ச் சொற்களைக் கூட பயன்படுத்தப் படுவதில்லை என்பது எமக்குக் கவலை அளிக்கிறது.


எடுத்துக்காட்டாக சிறப்பு ஒலிபரப்பு அல்லது சிறப்புச் செய்தி ஒலிபரப்பு என்பதை விசேட செய்தி என்றும் உறுப்புரிமை என்பதை  அங்கத்துவம் என்றும் குடிமக்கள் என்பதை பிரஜைகள் என்றும் செவ்வி அல்லது நேர்காணலை பேட்டி என்றும் தொடக்கம் என்பதை ஆரம்பம் என்றும் மேப்பாடு என்பதை அபிவிருத்தி என்றும் சொல்லப்படுகிறது. செய்தி வாசிப்பவர்கள் தவறு தங்களுடையது அல்லவென்றும் செய்தி ஆசிரியர் எழுதிக் கொடுத்ததையே தாங்கள் வாசிப்பதாகச் சொல்கிறார்கள்.  

இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) செய்தி அரங்கில் பிரஜைகள் (குடிமக்கள்)  சர்வதேசம் (அனைத்துலகம் அல்லது பன்னாட்டு)  கோரிக்கை (வேண்டுகோள்)  விஜயம் (பயணம் அல்லது செலவு)  போன்ற வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கேட்டால் பொதுமக்களுக்குத் தெரிந்த சொற்களைப் பயனன்படுத்துவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த விளக்கம் ஏற்புடையதல்ல. 

கொஞ்சக் காலத்துக்கு முன்னர் பூஜ்ஜியம் என்று வளங்கிய சொல் இன்று சுழியம் எனத் தனித் தமிழில் சொல்லப்படுகிறது. அது மக்களுக்கு விளங்குகிறது. இது மனம் இருந்தால் இடம் இருக்கும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.   

செய்தி ஆசிரியர்கள் முடிந்த மட்டும் பிறமொழிக் கலப்பு இல்லாமல் செய்தியைத்  தயாரிக்க வேண்டும். பிற தளங்களில் இருந்து செய்தியை உருவும்போது அப்படியே உருவாமல் வடமொழிச் சொற்களை நீக்கி தனித் தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால் ஒருவரது வாழ்நாள் பாழானாலும் குற்றமில்லை. வீழ்வது நாமென்றாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!   

தனித்தமிழ் என்றால் என்ன?
தனித்தமிழ் ஏன்? எதற்கு?
தனித்தமிழின் வரலாறு யாது?
தனித்தமிழ் வெற்றி பெற்றுள்ளதா?
தற்காலத்திற்குத் தனித்தமிழ் பொருந்துமா?
தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா?  

இது போன்ற கேள்விகளுக்கு வினா - விடை வடிவில் (தனித்தமிழ் பற்றிய அய்யங்களும் தெளிவுகளும்) 4 கட்டுரைகள் கீழ்க்கண்ட இணையதளங்களில் காணப்படுகின்றன. கட்டாயம் படித்துப் பார்க்கவும். 

http://thirutamil.blogspot.com/2008/04/blog-post_28.html  

இது தொடர்பான மேலதிக விளக்கத்தைக் கீழ்க்கண்ட இணைய தளங்களிலும் படித்துக் கொள்ளலாம். 

http://nakkeran.com/Purethamilsanskritwords.htm,
http://nakkeran.com/Purethamilwordsvikadan.htm  

எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து தமிழ்மொழியை வாழவிடுவீர்கள் என நம்புகிறேன்.  

இலக்கணமும் இலக்கியமும் படியாதோன் 
ஏடெழுதல் கேடு தரும்.
                                                         (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)

 ஏட்டுக்குச் சொன்னது ஒலி, ஒளி பரப்புக்கும் பொருந்தும்.  நன்றி. 

 

 
நக்கீரன்
தலைவர்          


 
2009-09-08

திரு. ஸ்ரான் அன்ரனி
தலைவர்
கனடிய தமிழ் வானொலி
கனடிய பல்பண்பாட்டு வானொலி
தமிழ்த் தொலைக்காட்சி

ஊடகங்களில் தூய தமிழ்ப் பயன்பாட்டின் தேவை

திருவுடையீர்

வணக்கம். தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்மொழித் தூய்மை பற்றி மிகவும் விருப்புக் கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததே. இது பற்றி முன்னரும் உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். இருந்தும் உங்கள் அமைப்பின் செய்தி, அறிவித்தல் போன்றவற்றில் பிறமொழிக் கலப்பு இடம்பெறுகிறது.

மொழித்தூய்மை என்பது தமிழ்த் தேசியத்தின் பிரிக்க முடியாத உறுப்பு. மொழித் தூய்மை காக்கப்படாத காரணத்தால் தமிழில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளம் பிரிந்து புது மொழியானது.

இரண்டொரு மலைப்பிஞ்சுகள் சோற்றில் கலந்திருந்தால் உண்ண முடியாது. அது பல்லை உடைக்கும். அது போலவே பிறமொழிச் சொற்கள் கலந்த தமிழ்மொழியைச் சுவைக்க முடியாது. அது மொழியை சொல்லை உடைக்கும்.

ஒரு காலத்தில் பயன்பாட்டில் இல்லாது இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள தூய தமிழ்ச் சொற்களைக் கூட பயன்படுத்தப் படுவதில்லை என்பது எமக்குக் கவலை அளிக்கிறது.
எடுத்துக்காட்டாக சிறப்பு ஒலிபரப்பு அல்லது சிறப்புச் செய்தி ஒலிபரப்பு என்பதை விசேட செய்தி என்றும் உறுப்புரிமை என்பதை அங்கத்துவம் என்றும் குடிமக்கள் என்பதை பிரஜைகள் என்றும் செவ்வி அல்லது நேர்காணலை பேட்டி என்றும் தொடக்கம் என்பதை ஆரம்பம் என்றும் மேப்பாடு என்பதை அபிவிருத்தி என்றும் சொல்லப்படுகிறது. தவறு அறிவிப்பாளர்களிடம் இல்லை. செய்தி ஆசிரியரிடம் இருக்கிறது.

செய்தி ஆசிரியர்கள் முடிந்த மட்டும் பிறமொழிக் கலப்பு இல்லாமல் செய்தியைத் தயாரிக்க வேண்டும். பொருத்தமான தமிழ்ச் சொல் இருக்கும் போது ஆங்கிலச் சொல்லையோ வடமொழிச் சொல்லையோ பயன்படுத்தல் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் ஒருவரது வாழ்நாள் பாழானாலும் குற்றமில்லை. வீழ்வது நாமென்றாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!

தனித்தமிழ் என்றால் என்ன?
தனித்தமிழ் ஏன்? எதற்கு?
தனித்தமிழின் வரலாறு யாது?
தனித்தமிழ் வெற்றி பெற்றுள்ளதா?
தற்காலத்திற்குத் தனித்தமிழ் பொருந்துமா?
தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா?

இது போன்ற கேள்விகளுக்கு வினா - விடை வடிவில் (தனித்தமிழ் பற்றிய அய்யங்களும் தெளிவுகளும்) 4 கட்டுரைகள் கீழ்க்கண்ட இணையதளங்களில் காணப்படுகின்றன. கட்டாயம் படித்துப் பார்க்கவும்.

http://thirutamil.blogspot.com/2008/04/blog-post_28.html  

இது தொடர்பான மேலதிக விளக்கத்தைக் கீழ்க்கண்ட இணைய தளங்களிலும் படித்துக் கொள்ளலாம்.

http://nakkeran.com/Purethamilsanskritwords.htm,
http://nakkeran.com/Purethamilwordsvikadan.htm  


எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன். சந்தித்துப் பேசும் தேவை இருப்பினும் உங்களைச் சந்திக்க அணியமாக இருக்கிறோம்.

இலக்கணமும் இலக்கியமும் படியாதோன்
ஏடெழுதல் கேடு தரும்.

ஏட்டுக்குப் பாரதிதாசன் சொன்னது ஒலிபரப்புக்கும் பொருந்தும். நன்றி.

வீழ்;வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்.

மிக்க அன்புடன்

நக்கீரன்
தலைவர்