54 ஆவது அகவை காணும் தானைத் தலைவன் பிரபாகரன்
ஊழிகாலம்
நீடூழி வாழ வாழ்த்துகிறோம்!

இன்றைய காலம் தானைத் தலைவன் பிரபாகரனின் காலம!
அவன் காலத்தில் நாம் இழந்த தமிழீழ அரசை
ஆயுத முனையில் மீட்டெடுக்கப் பெரும் போர் நடக்கிறது!
மண்மீட்புப் போரில் வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
அந்த முருகனுக்கே நிகரான தானைத் தலைவன் புலிப்படை!
குருதிசிந்தி
உயிரைப் பணயம் வைத்துக் களமாடி நிற்கிறது!
வன்னிமண் புலிகள் சிந்திய குருதியால் சிவப்பாகி வருகிறது
!

எதிரி வீறாப்போடு பெரும் படையுடன் களத்தில் நிற்கிறான்!
எதிரியோடு தமிழ்த் துரோகிகளும் கை கோர்த்து நிற்கிறார்கள்
பூனகரியைப் பிடித்து விட்டோம் அடுத்து கிளிநொச்சி என்கிறான்!
வெற்றி எமக்கேயென்று சிங்கள இராணுவத் தளபதி கொக்கரிக்கிறான்!
ஆனால் வன்னிமண் வீரத்தின் விளைநிலம் மறவரின் பிறப்பிடம்!
அந்த மண்ணில் புலிப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
எதிரிபடைக்கு வன்னிமண்ணில் புலிப்படை நிச்சயம் சமாதி கட்டும்
!

தமிழீழம் தலைவர் பிரபாகரன் காலத்தில் முழுமையாக மலரும்!
எமதுகாலில் பூட்டப்பட்ட அடிமை விலங்குகள் முற்றாக உடையும்!
புலிக் கொடி பட்டொளி வீசி அய்யன்னாவில் பறக்கும்!
காவிரிக்குக் கல்லணை கட்டிய சோழன் கரிகாலனது மறுபிறப்பே!
புறநானூற்று வீரத்துக்குப் புதிய பொழிப்புரை எழுதிய மாவீரனே!
உலகத் தமிழ் இனத்தின் குன்றா ஒளி விளக்கே!
நீ ஊழிகாலம் நீடூழி வாழ நெஞ்சார வாழ்த்துகிறோம்
!

 

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்