பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்

27 07 2009

மொழியை புனிதமாக கருதுகிற மூடநம்பிக்கையை எதிர்த்து, தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி’ என்று பெரியார் சொன்னார்.

பெரியாரின் இந்த அறிவியல் பார்வையை தமிழர்களுக்கு எதிராக, தமிழனுக்கு எதிரான கண்ணோட்டமாக மாற்றினார்கள், பெரியாருக்கு எதிரான, தமிழர்களின் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து பேசாத, ஒடுக்கப்பட்ட தமிழர்களின் எதிரிகளான, தனித்தமிழ் பேர்வழிகளும், தமிழ்த்தேசிய பேர்வழிகளும்.

இவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பெரியாரின் மொழிப்பார்வை எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று விளக்கி எழுதியிருக்கிறார் தோழர் கவி. இதை இவர் எழுதியது என்பதைவிட, பெரியாரே எழுதினார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். காரணம், அந்த அளவிற்கு பெரியாரின் எழுத்துக்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி, தன் எழுத்தை சுருக்கியிருக்கிறார்.

இவர் சொந்த ஊர் திருவாரூர். இப்போது சிங்ப்பூரில் பணிபுரிகிறார். பெரியாருக்கு எதிரான தமிழ்தேசியவாதிகளை கண்டித்து,  நான் எழுதியதை தொடர்ந்து படித்து வந்த தோழர் கவி, அவர் எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பி வைத்தார்.

இதில், பெரியார் மொழிக்குறித்தும், தமிழ் குறித்தும் சொல்லியிருக்கிற செய்திகள் நிரம்ப அறிவு செறிவுள்ளதாக இருக்கிறது. (பெரியாரின் தமிழ் பற்றிய இந்த சிறப்பான கருத்துக்களும், டாக்டர் அம்பேத்கர் தமிழ் பற்றி சொன்ன கருத்துக்களும் ஓரே தன்மையுடையவை. இதுபற்றி நான் வேறு ஒரு சமயத்தில் எழுதுகிறேன்.)

தமிழ் மொழியை தாய்மொழி என்பதும்,  அதைப் புனிதமாக பார்க்கும் போக்கும், பழைய தமிழ் புலவர்களை பெரிய மேதைகளாக நினைக்கும் எண்ணமும், சில பெரியாரிஸ்டுகளிடமும் இருக்கிறது. இதற்கு காரணம், பெரியார் கருத்துக்களைவிட தமிழ்தேசிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், முறையாக அவரை வாசிக்காததும் அல்லது சில இடங்களில் அவர் கொள்கைகளை கைவிட்டுவிடுவது, வசதியாக இருப்பதுமே காரணம்.

தோழர் கவி எழுதியிருக்கிற இந்தக் கட்டுரை, தமிழ்த் தேசிய வாதிகளுக்கு மட்டுமல்லாமல், ஏதோ ஒரு ஆர்வத்தில் பெரியாரை ஆதரிக்கிற சில பெரியாரிஸ்டுகளுக்கும், பெரியாரின் மொழி கொள்கையை தெளிவாக காட்டும். அதனால இதைத் தொடராக வெளியிடுகிறேன்.

இப்படி வெளியில் இருந்து ஒருவர் எழுதிய கட்டுரையை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இதற்கு முன்பு என் பதிவுகளில் இடம்பெற்ற கட்டுரைகளை ஒட்டி நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்த தோழர் ஏகலைவன், தோழர் விஜய் கோபால்சாமி இவர்களின் கட்டுரைகள் மட்டும்தான் இடம் பெற்றிருக்கிறது.

தோழர் கவியின் இந்தக் கட்டுரை, பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு ஒர் அறிவு சுரங்கம்.

-வே. மதிமாறன்

சுப.வீ எழுதிய ‘பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம்’ நூல் குறித்து ‘தமிழர் கண்ணோட்டம்’ ஆகஸ்ட் 2005 இதழில், திரு. பெ.மணியரசன் எழுதியிருந்தார். சுப.வீ யின் நூலை ஆய்வு செய்கிறவர் அதை ஆய்வு செய்வதில் முனைந்திருக்கலாம். அதை விடுத்து பெரியாரின் பக்கம் போய் பல அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

‘பெரியாரின் கருத்தியல் கடவுள் மறுப்புக் கொண்டது’ என்கிறார் பெ.மணியரசன். இக்கருத்தை அவரே வரையறுத்துக்கொண்டு சுப.வீ யி ன் கருத்தை மறுக்கத் தொடங்குகிறார். பெரியாரின் கருத்தியல் என்பது சமூக நீதி. சாதி ஒழிப்பு. அதைத் தொடர்ந்து வருவது சுயமரியாதை. இவற்றிற்கு தடையாக இருப்பது மதமும் கடவுளும் வருணாசிரம தருமமும். இவைகளை ஒழிக்கப் போராடினார் பெரியார். இதுதான் பெரியாரியல்.

‘பெரியாரின் சமூகவியல் கொள்கை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு.’ இதுவும் பெ.மணியரசன் அவர்களின் பிழையான பெரியார் கொள்கை பற்றிய பார்வை. ஆதிக்க சக்திகள் எல்லாவற்றையும் எதிர்த்திருக்கிறார் பெரியார். பார்ப்பனர்களின் ஆதிக்கம் எல்லா வகையிலும் முன்னிலையில் இருப்பதால் அவர்களை முக்கிய எதிரியாகவும் அவர்களுக்கு ஆதாரமாக உள்ள கடவுளையும் மறுக்கவும் முன்வந்தார்.

பெரியார் சொன்ன ‘திராவிடம்’ என்பது ‘பழைய சென்னை மகாணம்’ தான். அதில் உள்ள தெலுங்கு பேசுபவர்களையும் கன்னடம் பேசுவர்களையும் மலையாளம் பேசுபவர்களையும் மட்டும் உள்ளடக்கியது தான். இப்போது பெ.மணியரசன் போன்றவர்கள் தாங்களாக கொண்டுள்ள கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகம் உள்ளடக்கிய திராவிடம் அல்ல.

‘மொழிக் கொள்கையில் பெரியார் பிழை செய்திருக்கிறார். தமிழ்ப் பேராசிரியர்கள் சம்பள உயர்வுக்குப் பெரியார் ஏற்பாடு செய்தார் என்பதெல்லாம் மொழிக் கொள்கை ஆகாது. தமிழைக் கட்டாயம் மொழி பாடமாகவும் பயிற்று மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று பெரியார் கொள்கை வகுக்க வில்லை. மூட நம்பிக்கை மொழியென்றும் பகுத்தறிவு மொழி என்றும் எதுவுமில்லை. தமிழிறிஞர்கள் குறித்த பெரியாரின் பார்வை சமனற்றது. தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப்பைத்தியங்கள். உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற பெரியாரின் இக்கணிப்பு தவறு.’ என்று பெ. மணியரசன் எழுதியவற்றிற்கு எல்லாம்,  பெரியாரைக் கொண்டே விடை கூறியிருக்கிறேன்.

பெ. மணியரசனின் பெரியார் மீதான் அவதூறுகளை மறுத்து, 2005 ல் நான் எழுதிய நூலினை உங்களுக்கு தொடராக தருகிறேன்.இந்த நூல் சிறியதாக இருந்தாலும் இதுவே பெ.மணியரசன் அவர்களுக்கு போதுமானது என்று கருதுகிறேன்.

-கவி, சிங்ப்பூர்.

-தொடரும்

Dr. V. Pandian
 

மணியரசன் அவர்களை பெரியார் மீது அவதூறு செய்கிறார் என்று சொல்வதே ஒரு அபத்தக் குற்றச்சாட்டு. விமர்சனத்தை அவதூறு எனலாமா? எந்த ஒரு மனிதனின் அனைத்துக் கருத்துக்களுமே சரியாக இருந்ததாக வரலாறு உண்டா? மற்றவரின் கருத்தை மறுதலிப்பதால் அவர் அவதூறு செய்பவராவாரா? ஏன் இந்தப் பெரியார் பக்தி? மணியரசனைப்பற்றி ஓரளவுக்குத் தெரிந்தவன் என்ற வகையில், உங்களின் இந்தப் பழி அவரைச்சேராது.

பெரியாரின் பகுத்தறிவுத் தொடக்கமே பாரப்பனீய எதிர்ப்புதான். அவர் இளம்பிராயத்தில் தொடங்கி தனது 93 வது வயதில் இறக்கும் வரை, அவருடைய அறிவும் வளர்ந்துதானே வந்துள்ளது. அது தானே அனைவருக்குமான இயல்பு. ஆக, பெரியார் சொன்னதெல்லாம் சரியே என்பது பக்தியின் வௌிப்பாடாகத்தன் இருக்க முடியும். அங்கே எங்கு பகுத்தறிவு உள்ளது?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், பெரியாருக்கப்புறமும் கடவுள் பக்தி வளர்ந்துள்ளதா, சரிந்துள்ளதா? ஆக, நாம சாடுவது கடவுளை வைத்து ஏய்ப்பவனைத்தானே ஒழிய, கடவுளை அல்ல என்பது ஒரு அனுபவ உண்மை! உலக மாந்தர்கள் எல்லோருமே ஹீரோக்கள் அல்லர். சாமானிய மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது ஒரு உளவியல் தேவை. எனவே ஏய்ப்பவர்களைத் தூற்றுவோம். கடவுள் இல்லை என்பதை கீழ்த்தரமாகச் சொல்லாமல் அறிவு பூர்வமாக பரப்புவோம். இந்து மதத்தில் கடவுளைக் கீழத்தரமாக, திட்டமிட்டு திரிபு செய்த பார்ப்பனீய சதிகளை அம்பலப் படுத்துவோம். தமிழின் ஐந்து திணைகளின் கடவுள்களை எடுத்து, அவற்றை ஒழுக்கங்கெட்ட கடவுளாக சித்தரித்து (அசிங்க கதைகள், நிறைய பெண்டாட்டிகள்) பார்ப்பனீயத்தால் இந்து மதம் உருவாக்கப்பட்டது. ஒழுக்கங்கெட்ட கடவுளை வணங்குகிறவன் ஒழுக்கங்கெட்டவனாக இருப்பான். ஒழுக்கங்கெட்டவன் வாழக்கையில் முன்னேர மாட்டான். ஆக, அப்படி நலிந்த சமுதாயத்தை ஏய்த்துப் பிழைப்பது, சிறுபாண்மை பார்ப்பனீயத்திற்கு எளிதானது. புரிகிறதா? எனவே, நாம் எதிர்க்க வேண்டியது பாரப்பனீயத்தைத் தானே தவிர, கடவுள் என்ற கோட்பாட்டை அல்ல. அது ஓரளவுக்கு இருந்தால் குடிமுழுகிப் போய்விடாது. தமிழரின் ஐந்து திணைக்கடவுள்கள் அசிங்கமானவை அல்ல!

மொழி பற்றிய பெரியாரின் பார்வை மலிவானது என்பது அப்பட்டமான உண்மை. அயோக்கியர்கள் மொழியை தீய பயன்பாட்டுக்குப் பயன்படுத்தியதால், அந்த மொழி காட்டுமிராண்டி மொழியாகிவிடுமா? தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது அவரது குருகிய பார்வை. பொருத்துக் கொள்ள முடியாத ஒரு கூற்று. தமிழ் மொழி மற்ற மொழிகளைப் போலல்லாமல் ஒரு இயற்கை மொழி. நான் பாவாணரின் நூல்களைப் படித்துள்ளேன். நானும் தமிழ் பற்றிய, இயற்பியல் நோக்கில், ஆய்வுகள் செய்துள்ளேன். தமிழ், அறிவின் கொள்கலன். அதையொற்றிய அறிவார்ந்த மொழி உலகில் இல்லை என்பது தான் உண்மை. இயற்கையான மொழி என்பதோடல்லாமல் அறிவியல் ரீதியாக தொல்பழங்காலத்திலேயே செழுமைப் படுத்தப்பட்ட மொழி. எழுத்துகளுக்கும் உச்சரிக்கும் மாத்திரைகள் (நேர அளவைகள்) கொண்ட மொழி தமிழ். இசைக்கும், அதனாலேயே இயல்பான மொழியும் அது. தொல்காப்பியம் கிடைத்தது 1927ல் தான். அதில் உள்ள அறிவு நுணுக்கங்கள் எத்தகையன?

பெரியார் பக்தர்கள் தமிழின் பரிமாணங்களைப் படித்ததில்லை. பெரியாரே தமிழைப்பற்றி அதிகம் தெரியாதவராகவே இருந்தார். தமிழுணர்வாளர்களும் பெரியாரைப் படிக்கவேண்டும், முழுவதுமாக.

கவியின் கட்டுரையை எதிர்பார்ப்போம்


 

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

29 07 2009

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்-

-கவி, சிங்கப்பூர்.

மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை பிழையானது என்று பெ.மணியரசன் அவர்கள் பிழையாகக் கூறி வருகிறார்கள். மொழிப் பற்றி பெரியார் கொண்டுள்ள தெளிவான பார்வை பின்வருமாறு வெளிப்படுகிறது:

“மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? என்று முதலில் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க ‘மொழி’ முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருக்கிறது. மேலும் இச் சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும் பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும் சில வித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மொழி என்று கூறா விட்டாலும் ‘ஒலிக் குறிப்பு’ என்று கூறலாம்”.

இப்படி மொழிப் பற்றி வரையறை செய்த பெரியார், மேலும் கூறுகிறார், “ஒருவரை பார்த்து, ‘உங்கள் மொழி என்ன? என்று கேட்பதற்கு, ‘நீங்கள் எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்? என்றுதானே பொருள். ஆக, மேலே தெரிவித்ததிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு விளங்குகிறது”.

இப்படி பெரியார் விளக்கிய பிறகு மீண்டும் அவரைப் பார்த்து குதர்க்கமாக கேள்வி கேட்க விரும்புபவர்களுக்கு மீண்டும்  விளக்கம் கூறுகிறார்,

“மக்களிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சாதனம் மொழி என்றால் அம்மக்களிடையே பல மொழிகள் வழங்கப்படக் காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். பல மொழிகள் வழங்க வேண்டுமென்று யாரும் விரும்பியதில்லை என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் எம்மொழியும் கற்பனை செய்யப்பட்டதல்ல வென்றும் உங்களுக்கு விளக்கிக் காட்ட விரும்புகிறேன்”

என்றால்லாம் கூறிய பெரியார் சில உதாரணங்களையும் கூறுகிறார், “யாழ்ப்பாணத்தான், ‘அவர்கள் அப்பொழுதே வந்துவிட்டார்கள்’ என்று கூறுவதை, திருநெல்வேலியான், ‘அவா அப்பமே வந்தா’ என்பான். கிராமத்தான், ‘அவியயா அப்படியே வந்தாங்கோ’ என்பான். இப்படி ஒரு மொழி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பேசப்படக் காரணம் என்ன? அவர்கள் ஒருவருக்கொருவர் சுலபத்தில் கலந்து கொள்ள வசதியான போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமையும், அவர்களைப் பிரித்து வைக்கும் மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள் உள்ளமையும் ஆகிய இவைகள்தான் காரணம்” என்று பகுத்தறிவு கொண்டு விளக்கிக் காட்டியுள்ளார்.

இதோடு விட்டுவிட வில்லை  பெரியார். அறிவியல் பூர்வமாகவும் விளக்குகிறார்,

“மற்றும் மொழியானது அந்தந்த நாட்டுச் சீதோஷ்ணத் திற்கேற்பவும் அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கைப் பழக்க, வழக்க, பண்பு, குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி செலவிடாமல் சுலபமாய் பேசக் கூடிய ரீதியிலும், சில அதிக சக்தியைச் செலவிட்டுச் சிரமத்தோடு பேசக்கூடிய ரீதியிலும் அமைந்திருக்க காண்கிறோம். உதாரணமாக வடமொழியிலுள்ள ‘ஹ’ போன்ற சப்தங்கள் அடிவயிற்றிலிருந்து ஆழ் து³Θத்துக் கொண்டு வருவது போல் ஒலிக்கிறது.

உதாரணமாக ஆங்கிலேயனை எடுத்துக் கொள்வோம். அவன் சாதாரணமாகக் குளிர் தேசத்தில் வாழ்பவன். குளிரானது அவனுக்கு ‘ஹா’ என்கிற பெரும் காற்றைத் தள்ளிக் கொண்டு உச்சரிக்க வேண்டிய சப்தத்தை இயற்கையாக உண்டாக்கச் சுலபமாக அம் மொழியும் ஏன் அது போன்ற வட மொழியும் பேச முடிகிறது. ஆனால் என்னதான் அவன் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில் இலக்கணக் குற்றமில்லாமல் பேசினாலும் ‘ழ’, ‘ள ’ இந்த சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. இந்த சப்தத்திற்கு அவருக்குப் பழக்கமான அந்தச் சீதோஷ்ணம் சரிப்படாமற் போவதுதான் காரணம். அந்தச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவர் நாக்கு, இந்த சப்தத்தை உச்சரிப்பதற்கேற்பச் சுலபத்தில் திரும்ப முடியவில்லை என்பது தான் காரணம்”.

‘ழ’, ‘ள’ என்ற எழுத்துக்களின் ஒலி அமைப்பையும் உச்சரிப்பு முறையையும் விளக்கிய பெரியாருக்கு மொழிப் பற்றிய பார்வை இல்லை என்று தமிழ் நன்கு கற்றறிந்த  பெ. மணியரசன் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

ஒரு மொழிக்குச் சிறப்பு எவ்வாறு அமைகிறது என்பதை பற்றியும் கூறுகிறார் பெரியார்,

“இனியும் கவனிக்கும் பட்சத்தில் ஒரு மொழியில் சுலபமாக விளக்கக் கூடும் ஒரு கருத்தை, மற்றொரு மொழியில் விளக்குவது வெகு கஷ்டமாயிருக்கும். அதாவது அந்தக் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய வார்த்தைகள் அம்மொழியில் இருக்காது. காரணம் என்ன? அந்த மொழி பேசும் மக்களிடத்து அந்தக்  கருத்து இருந்ததில்லை என்பது தான்”.

இத்தோடு பெரியார் விட்டுவிட வில்லை. மேலும் ஒரு அழுத்தம் கொடுக்கிறார். அதாவது, “அந்தக் கருத்து அவர்களிடம் ஏற்பட வேண்டிய அவசியமோ, தேவையோ இருந்ததில்லை என்பதுதான் காரணம்” என்று வலியுறுத்துகிறார்.

இந்த இடத்தில் “ஜாதி என்ற வட மொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்கங்ளேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தையில்லையே! ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் ஜாதிப் பிரிவினை இல்லை என்பதும் இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் ஜாதி பேத உணர்ச்சி அற்றுப் போகுமா, இல்லையா? கூறுங்களேன். இதே போல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள், வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால்  நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப பாருங்கள்” என்று கூறியுள்ளதையும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும்.

“எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம் மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துக்களைப் பொறுத்துதான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துக்களைக் கொண்டு பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட அறிவைக் கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள சில பிரபலமான புத்தகங்களை வாங்கிப் படித்தால் அவற்றில் காணப்படும் கருத்துக்களைக் கொண்டே அம்மக்களின் நாகரிகத்தின் முன்னேற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் அறிந்து கொள்ள முடிகிறது.

 

 

‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

30 07 2009

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

-கவி, சிங்கப்பூர்

மிழை ‘நமது தகைமைசால்  தமிழ்’ என்று அழைத்து அது பற்றியும் பெரியார் கூறுகிறார்.

“ ‘தமிழ்’ என்றால் என்ன? மக்களா? நாடா?  மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து, மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும், மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா! என்ற கேள்விகள், தமிழைப் பொறுத்த வரை வித்து முந்தியா? மரம் முந்தியா என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகின்றன.  எப்படி இருந்தாலும் தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்று மூன்று பண்டங்கள் இருக்கின்றன.

 

இந்த மூன்றையும் முதல் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால்  தமிழ் , தமிழ் நாடு, தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றை காணாதவர்களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும் படியாக திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும் அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும் கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும் , ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன”.

“வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத் திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து  சென்று ஆங்காங்கு குடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வட நாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களுக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும் படி செய்து, அதன் மூலம் தமது கலை, ஆசசார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்தி விட்டனர். அந்த வட மொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும் , அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது”.

“ஆனால் என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழி களென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது  தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்”.

இவ்வளவு ஆழ்ந்த விளக்கத்தை தமிழ் மொழிக்குக் கொடுத்த பெரியார்,  தமிழிலிருந்து சிதைந்தவைதான் மலையாளம், தெலுங்கு  மற்றும் கன்னடம் என்று வலியுறுத்திய பெரியார் மேலும் விளக்குகிறார்:

“நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ்ச் சப்தத்தில் தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்து பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில் தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர் களுக்கும் மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது”.

இதையெல்லாம் இன்று வரை தமிழறிஞர்கள் ஆராய்ந்தார்களா அல்லது பெரியாருக்கு மறுப்புத் தெரிவித்து கருத்துக்களையாவது வெளியிட்டார்களா என்பதற்கு ஆதாரம் இல்லை.

மொழி வழி மாநிலம் அமைக்கப்படும் போது தமிழ்நாட்டிலிருந்து   ஆந்திரம் பிரிந்து சென்றதை “தொலைந்தது சனியன்” என்று கூறிய பெரியார், அதற்கு முன் கூறிய கருத்துக்களையும் இங்கு காண்போம்.

“வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக்குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ் தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்”.

இவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் தமிழ்புலவர்களின், அறிஞர்களின் நடத்தையின் காரணமாக அவர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது.

-தொடரும்

ஒரு மொழியை ஏற்பதும் தள்ளுவதும் கூட, பெரும்பாலும் அந்தந்த மொழியின் பாற்பட்ட முன்னேற்றக் கருத்துக்களைப் பொறுத்து தான் இருக்கிறது. ஒரு மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் மற்றொரு காரணமும் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாக கற்றுக் கொள்ளப் படுவதற்கு எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசிய மாகும்”.

ஒரு மொழி சிறப்புத் தன்மையடைவதற்கு அடிப்படையான விசயங்களை பெரியார் இவ்வாறு தெளிபடுத்தியுள்ளதை பெ. மணியரசன் ஊன்றிப் படிக்க வேண்டும்.

-தொடரும்


‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4

31 07 2009

கவி, சிங்கப்பூர்

மிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார்,

“அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது.

இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.

வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால் தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல”.

தனித் தமிழ் குறித்தெல்லாம் பெரியார் இங்கு கூறியுள்ளார். இவற்றையயல்லாம் பெ.மணியரசன் படித்தாரா? இல்லையா என்ப தெல்லாம் தெரியவில்லை. ஆனால் தமிழ்க் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியதை மட்டும் இவரும் தமிழறிஞர்களும் மேற்கோள்காட்டி கூறி வருவது இவர்களின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

“அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்பு கூட அல்ல. தமிழில், அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்கள் இல்லை”. அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்பதைக் கூட அழகாக ஆனால் ஆழமாக மறுக்கிறார் பெரியார்.

“இதே போல் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய் நம்மைப் பெற்றெடுத்தும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ , துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியோ பேசுவோமா? அல்லது நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக, நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா?” என்று தாய்மொழி என்ற கருத்துருவையே கேள்விக்குள்ளாக்கும் பெரியார்,

“நம் தாய் குழந்தையாக இருந்த போது பேசியதென்ன? பாய்ச்சி குடிக்கி, சோச்சி தின்னு, மூத்தா பேய், ஆய்க்கு போ, என்றுதானே பேசியிருப்பாள்! இப்போது நாம் பாச்சி , சோச்சி, மூத்தா, ஆயி என்றா பேசுகிறோம்? இந்தக் காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும்  அறியாமை என்று தோன்றவில்லையா?” என்று விளக்குவதையும் தமிழறிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

“தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்த பிறகு தானே நம் பெண்கள் கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள்? அதன் பிறகுதானே சிறிது சச்சரவு நேர்ந்து தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து. ‘ஆமாம்மா! உன்னைக் கன்னிகாதானம் செய்தாயிற்றே! உன்னை உன் புரு­னுக்குக் கொடுத்துவிட்டோம். தானம் செய்து விட்டோமே!  இனி, உனக்கு இடம் அவன் இருப்பிடம் தானம்மா’ என்று கூறும் தகப்பன்மார் தோன்றினார்கள். கன்னிகாதானம் என்பதற்குத் தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்களேன். திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணை’ என்றுதானே கூறுகிறார். அதாவது புரு­ஷனும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்கு பொருள்.

‘மோட்சம்’ என்பதற்குத் தமிழ் வார்தை ஏது? மோட்சத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும் கருத்தையும் பொருளையும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி?  நெறி, கோள் என்றால், வெறி ஏது? ‘பதிவிரதாத தன்மை’ என்பதற்காவது தமிழில் வார்த்தையுண்டா? ‘பதிவிரதம்’ என்ற வார்த்தை இருந்தால், ‘சதி விரதம்’ அல்லது ‘மனைவி விரதம்’ என்கின்ற வார்த்தையும் இருக்கவேண்டுமே! இதுவும் வடமொழி தொடர்பால் ஏற்பட்ட வினைதான். ஆத்மா என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூட நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்துவிட்டன?

தமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையின் மீதும், பகுத்தறிவு  என்ற அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம். நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை”.

மூட நம்பிக்கை மொழி என்று ஒன்று இல்லை என்று கூறிய பெ.மணியரசன் ஆங்கில மொழியிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் என்று அடுத்த வரியிலேயே ‘பல்டி’ யடித்தவர் மேலே பெரியார் கூறியவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

-தொடரும்


 

‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5

4 08 2009

கவி, சிங்கப்பூர்

ங்கில மொழியை விரும்புவதற்கு பல காரணங்களை பெரியார் அடுக்குகிறார், “வடமொழித்தொடர்பால் ஏற்பட்ட இன்னல்கள் ஒருவாறு மேலே விளக்கப்பட்டன. அதற்கு மாறாக ஆங்கில மொழித் தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள நன்மைகளையும் அம் மொழியிலுள்ள கருத்துச் செறிவுகளையும் பாருங்கள்.  ஆங்கில மொழி நூல்களில்  முன்னேற்றக் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவு நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘அடிமை வாழ்வே ஆனந்தம்’ என்று நினைத்திருந்த இவ் இந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில மொழி அறிவுதான் என்று கூறினால் மிகையாகாது. இராஜா வேண்டாம். குடியரசு தான் வேண்டும் என்கிற அறிவு. சமதர்மம் வேண்டும், சனாதனம் ஒழிய வேண்டும் என்கின்ற அறிவு ஆணும் பெண்ணும் சமம் என்கிற அறிவு ஆகிய சகல அரசியல் பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துக்களையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது”.

“தந்தியையும், மின்சாரத்தையும், படக் காட்சியையும், ஆகாய விமானத்தையும் ரேடியோவையும், எக்ஸ்ரேயையும் அதுதான் அறிமுகப்படுத்தியதேயயாழிய, நமது தமிழ் மொழியோ அல்லது அதை அழிக்க வந்த  வடமொழியோ அல்ல”.

வீட்டு வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள். குழந்தைக்கு தாய்பாலில் ஆங்கிலத்தை கலந்து கொடுங்கள் என்று பெரியார் சொல்லியதற்கு அடிப்படை காரணம் இவை தான் என்பது  நன்றாகவே தெரிகிறது. ஆனால் பெ.மணியரசன் போன்றவர்கள் பெரியாரைப் படிப்பதுமில்லை. படிக்க முயற்சிப்பதுமில்லை.

மேலும் பெரியார் கூறுகிறார், “அறிவு வளர்ச்சிக்கு பெரும்பாலும் சுற்றுச் சார்பு தான் காரணம்.  ஒரே தகப்பனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்து பாருங்கள். இங்கிலாந்தில் வளர்ந்த மகன் இந்தியாவில் வளர்ந்த மகனை விடப் பல மடங்கு அறிவு விசாலம் அடைந்தவனா யிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக் கண் கொண்டு பார்ப்பான்”. பெரியார் இப்படி ஒப்பிட்டுக் கூறுவதையும் அவர் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.

தமிழ் ஒரு காலத்தில் சிறந்த மொழியாக இருந்தது என்று கூறும் பெரியார் அது சீரழிந்து போனதற்கு காரணம் மதம் அதில் புகுந்ததுதான் என்று கூறுகிறார்.

“தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல் பிற்படுத்தப் பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக் கத்தக்கது”.

பெரியாரை தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தேசிய வாதிகளும் கடும் விமர்சனம் செய்வதற்கு காரணம் அவர்கள் பெரியாரால் பலமாக தாக்கப்பட்டது தான் . தமிழறிஞர்களைப் பற்றி பெரியாரின் பார்வை இதுதான்,

“தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு “கவைக் குதவாத” கட்டுக் கதைகளை நம் குழந்தைகளுக்குப் போதித்து விட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை விட்டு, திருவாசக அறிவையும் பாரத, இராமாயண அறிவையும் பரப்பி விட்டனர். சிந்திக்கத் தவறினார்கள்.

சிலப்பதிகாரத்தை தலை சிறந்த நூலென்று இன்னமும் போற்றி வருகிறார்கள். அதில் கண்ணகி என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள், கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றிக் கொள்கிறது. இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக் காட்டு. அந்த சமயத்திலும் அவள் நெருப்புக்கு ஆணை யிடுகிறாள், பார்ப்பனரை அழிக்காதே என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரிய பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்”.

இன்னுமும் பெரியார் தமிழ் கீழ் நிலையை  அடைந்ததற்கு மிகவும் வேதனையடைகிறார்,

“தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்”.

மொழி என்பதை பற்றிய மற்றொரு கருத்தை இங்கு பெரியார் வெளியிடுகிறார். இதையயல்லாம் தமிழிறிஞர்கள் உணர வேண்டும்,

“மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்.  நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்துவிட்டார்கள். தமிழ் சிவனும் சுப்பிரமணியனும் பேசிய மொழி. உண்டாக்கிய மொழி என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதே சிவனும் சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு பயன்படுமா? இயற்கையின் தத்துவம் நமது அறிவு வளர்ச்சிக்கேற்ப மாறுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும் வசதியளிக்கக் கூடியதேயாகும்”.

தமிழை விட தமிழறிஞர்களைத்தான் பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர். இதற்கும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காக கடவுள் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்திய பெரியாரை பார்ப்பனர்கள் சாமார்த்தியமாக மத நம்பிக்கையில் கைவைக்கிறார் என்று திசை திருப்பியதற்கும் தொடர்பு இருக்கிறது என்று நாம் உணரலாம்.

தமிழைப் பற்றி கூறும் போது, “தமிழைப் பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனும் அல்ல. தமிழுக்காக எவ்வித தொண்டும் புரிந்தவனும் அல்ல” என்றும் அடக்கமாகக் கூறுகிறார்.

“மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது”.

“உதாரணமாக, மக்கள் தேவர் நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விடப் புராண ஞானங்கள்தானே அதிகமாய் இருக்கின்றன”. (குடி அரசு 26.1.1936).

-தொடரும்

பதில்கள்

30 07 2009

Dr. V. Pandian
 

இவ்வளவும் சொன்னப் பெரியார், தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது பொருந்தவில்லையே!

கணியன் பூங்குன்றனின் ஒரு சங்க காலப் பாடலே பெரியாரின் வாயை அடைத்திருக்க வேண்டுமே!
பத்துப் பன்னிரண்டு வரிகளில் பெரும் தத்துவங்களையே சொல்லிச் சென்றாரே! முதல் வரியிலேயே மனித நேயத்தைப் பேசினாரே!

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா……..
………….. …. ….. …
நிற்க.

தமிழுக்கு எப்போது தமிழ் என்ற பெயர் வந்தது என்பது தெரியவில்லை. ஆனால், அது ஆரியர் வருகைக்கு முன்பே என்று கேள்வி.

வல்லினத்தில் ஒரு மெய்யும், இடையினத்தில் ஒரு மெய்யும், மெல்லினத்தில் ஒரு மெய்யும் எடுத்து, அற்றோடு அ, இ, உ என்ற அடிப்படை (சுட்டும்) உயிர்களைச் சேர்த்து “தமிழு” என்று உருவாக்கி, பிறகு காலப்போக்கில் இறுதி எழுத்தின் உயிரை நீக்கி தமிழ் என்ற பெயர் உருவானது. தமிழ் என்பதைத் திரும்பத்திரும்பச் சொன்னால் அமிழ்து, அமிழ்து என்று காதில் விழும்.

திராவிடம் என்பது தமிழ் என்பதை உச்சரிக்கத் தெரியாமல் தடுமாறியதால் உண்டான சொல்தான். ஜெர்மானியர்களும், ரஷ்யர்களும் எப்படி ஆங்கிலம் பேசுகின்றனர் என்பதை ஹாலிவுட் படங்களைப் பார்த்தாலே புரியும். 4000 ஆண்டுகளுக்கு முன்பு ழ வுக்கு ஆரியர்கள் எப்படியெல்லாம் தடுமாறி இருப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

தென்னிந்தியர்கள் அனைவரும் தமிழர்களே என்பதைத்தான் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மதிமாறனும் அவரது சகாக்களும் ஏற்றுக்கொண்டார்களோ என்னவோ? ஆனால், தமிழகத் தெலுங்கர்கள் சிலர், தமிழுக்கு செம்மொழித் தகுதியை, பொறுத்துக்கொள்ள முடியாமல் தவித்தனர் என்பது எனக்கு சொந்த அனுபவத்தில் தெரியும்.

இப்போது தண்ணீர் தர மறுக்கின்றவனா தன்னை தமிழன் என்று உணரப்போகிறான்? அங்குள்ள பாரப்பான் அப்படி அவர்கள் உணர்வதை அனுமதிப்பானா?

 

30 07 2009

வேந்தன்
 

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா……..//

இதை படித்த பின்பும் ஏன்யா தமிழ் தமிழன்னு பாசிச வெறியை உண்டு செய்கிறீர்கள்?

எல்லோரும் நம் மக்கள், உறவினர் என்றால்
ஏன் என் மொழி உயர்ந்தது? ஏன் என் இனம் உயர்ந்தது?
ஏன் என் மதம் உயர்ந்தது? ஏன் என் சாதி உயர்ந்தது?

ஏன் மொழி பிரிவினை? இன பிரிவினை? மத பிரிவினை?
சாதி பிரிவினை?

மற்றவன் மொழி பிரிவினை பார்ப்பதால், நீங்கள் அதற்கு பதிலாக
நம் மொழியின் ஆளுமையை வைத்து எதிர்ப்பது சரியா?
மொழி பிரிவினை கூடாது எனும் சமூக பார்வைதான் சரி.
அதை விடுத்து எங்கள் மொழிக்கு இவ்வளவு இலக்கியம் இருக்கிறது, சென்றது என்கிற பெருமையெல்லாம் எதற்காக?

இது மொழி பிரிவினையை தகர்க்குமா அல்லது மொழி பிரிவினையை இறுக பிடிக்குமா?

சாதியின் பெயரால் மக்கள் ஒடுக்கபடும் போது, ஆதிக்க சாதியை எதிர்த்து தன் சாதியே உயர்ந்தது என்று போராட வேண்டுமா? அல்லது எல்லோரும் சமம் என்று சாதியை ஒழிக்கும் நோக்கில் போராட வேண்டுமா?

ஆதிக்க சாதியை விட தன் சாதிதான் உயர்ந்தது் எனும் தன் சாதிபற்று எவ்வாறு தவரானதோ, அவ்வாறே தான் மொழிபற்றும்.

மக்கள் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டால் சாதிபிரிவினையை எதிர்த்து சாதி ஒழிப்பிற்க்காக போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும்.

மக்கள் மதரீதியாக ஒடுக்கப்பட்டால் மதபிரிவினையை எதிர்த்து மத ஒழிப்பிற்க்காக போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும்.

மொழி ரீதியாக ஒடுக்கப்பட்டால் மொழிபிரிவினையை எதிர்த்து போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும்.

இனரீதியாக ஒடுக்கப்பட்டால் இனவேற்றுமைகளை களைய போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும்.

பாசித்திற்கெதிராக உங்கள் இனத்தை, மொழியை, மதத்தை, சாதியை முன்னிருத்தினால் அதுவும் பாசிசமே!

அதை தான் பகுத்தறிவு பகலவன்
“மனிதனுக்கு சாதி பற்று, மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று இருக்க கூடாது. அனைவரும் சமம்” என்று வழிகாட்டினார்.

ஏனெனில் இவையனைத்தும் பாசிசத்திற்கு இட்டு செல்லும் காரணிகள்.

 

30 07 2009

முகமது பாருக்
 

//இவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் தமிழ்புலவர்களின், அறிஞர்களின் நடத்தையின் காரணமாக அவர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது//

இவ்வளவு தெளிவா பச்சப்புள்ளைக்கு சொல்றமாதிரி சொன்ன பிறகும், முனைவர் வே. பாண்டியன் அவர்கள் எதை முண்டுக்கொடுக்க (தமிழ்) மொழியை தூக்கி பிடிக்கிறார் என்று தெரியவில்லை.. இங்கே உள்ள அனைவருக்கும் தாய்மொழிப்பற்று (தமிழ்) உண்டு. ஆனால் வெறி = மதம் இருக்க கூடாது என்பதை புரியாமலா இருப்பார்..

திராவிட வரலாற்றில் ஆட்சி செய்த மன்னர்கள், அவர்களை நக்கி பிழைத்த புலவர்கள் மற்றும் மதவாதிகள் மொழியை அவர்கள் தேவைக்குதான் பயன்படுத்தினார்களே தவிர சமகால மக்களுக்கும் எதிர் கால தலைமுறைக்கும் (மொழியால்) எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை.

ஏனெனில் ஒரு உலக பழமையான மொழியை, அரபிக், லத்தின், சைனீஸ் வரிசையில் சேர்க்காமல், இந்திய (உருப்படாத) பண்பாட்டு கழகத்தின் கீழ் செம்மொழி அங்கிகாரம் கொடுத்துள்ளது. தமிழோட சமஸ்கிருத கலப்பினால் உண்டான தெலுங்கு, கன்னடத்துக்கும் இப்போது செம்மொழி அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்குத்தான் என்ன நன்மை கிடைத்தது ஒன்றுமே இல்லை வெறும் வெறுப்பு அரசியலே உருவானது..

தமிழ் தேசியம் என்று ஒன்றை எதிகாலத்தில் நாம் உருவாக்கினால் அதன் தந்தை (வழிகாட்டி) தந்தை பெரியாரே என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை..மனிதனை மனிதனாக பார்க்க சொன்னவரை உங்களால் ஏன் ஏற்க முடியவில்லை என்றால் உள்குத்து ஒன்றே ஒன்று சைவம் அல்லது ஜாதிகூறுகள் (உங்கள் மனம் புண்பட்டால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்)..

***அப்புறம் விஜயகோபால்சாமி குறித்து நீங்கள் கொடுத்த தனி மனித தாக்குதல்கள் கண்டிக்கதக்கது***

தோழமையுடன்

முகமது பாருக்

 

31 07 2009

எம். முருகன்
 

டாக்டர் பாண்டியன்,
நீங்கள் நிறைய உணர்ச்சி வசப்படுகறீர்கள். உங்கள் விளக்கங்கள், உங்களை மேலும் குழப்பமானவராக, விசயங்களை மேலோட்டமாக புரிந்து கொள்பவராக அடையளாப்படுத்துகிறது.

நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீ்ர்கள் என்று கேட்டால், நீ ஏன் முருகன் என்று கடவுள் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள், இரண்டும் ஒன்றா?

சரி ஒரு கடவுள் நம்பிக்கையாளர் உங்களை கேட்கிறார் தமிழ்உணர்வாளராக இருக்கிற நீங்கள் ஏன் உங்கள் பெயரை Dr. V. Pandian என்று ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

///அடையளங்காட்டியதால் சிக்கல்களையும் சந்திப்பவன் நான். ஒரு உண்மையான போராளி! // என்று தற்புகழ்ச்சியில் மிதக்கிறீர்கள்.

ஆனால் ஒரு முறை தோழர் வேந்தன், சாதிய உணர்வாளராக, தலித் மக்களின் எதரியாக, தேசியத்தை வலியுறு்த்திய முத்துராமலிங்கத் தேவரை பற்றி ஏன் விமர்ச்சிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு…. பதில் சொல்லமால் நழுவிய ஓடிய நீங்கள்தான்
/// ஒரு உண்மையான போராளி! // என்று உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
ஆனால் பெரியாரை கடுமையாக விமர்சிக்கிறீர்கள். இதுதான் பெரியார். அவரிடம் ஜனநாயகத் தன்மையும் அறிவு நாணயமும் இருந்ததால் அவரை உங்களால் விமரிச்சிக முடிகிறது.

உங்களிடம் அறிவு நாணயம் இல்லாததாலும், சாதிய கண்ணோட்டம் இருப்பதாலும்தான் உங்களால் முத்துராமலிங்கத்தேவர் போன்ற சாதி வெறியர்களை, இந்திய தேசிய வெறியர்கைள கண்டிக்க முடியவில்லை.
பெரியார் ஒன்றும் தவறாக சொல்லிவில்லை. உணர்ச்சவசப்படாமல் எதையும் அறிவு கொண்டு பார் என்றார். உங்களிடம் நாங்களும் அதைத்தான் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

 

31 07 2009

NithiChellam
 

கவி அவர்களுக்கு நன்றி…
கட்டுரை மிகவும் நன்றாக இருக்கு..
கொஞ்சம் ஆழமாக படித்தல் நன்கு puriyum இந்த கட்டுரை…

சாதி என்ற சொல் தமிழ் மொழியல் இல்லை.. இது ஏன் தமிழ் தேசம் பேசும் நண்பர்களுக்கு புரியவில்லை….

உங்களுக்கு ஆரியன் வேண்டாம் ஆனால் அவங்க தந்த சாதி மட்டும் வேண்டுமா…?

இது சாதிக்கு எதிரான கட்டுரை என்று புரிந்துகொளுங்க…

பெரியார் சாதிக்கு எதிரான பல போராட்டங்களை மேற் கொண்டர் என்று பெரியார் இஸட் நண்பர்களுக்கு புரிய வேண்டும்..

 

31 07 2009

Dr. V. Pandian
 

தோழர்களே!
உங்களுக்கெல்லாம் எழுதி அலுத்துவிட்டது. தூங்குகின்றவனை எழுப்பமுடியும். பாசாங்கு செய்பவனை?

தமிழ் ஒரு நீச பாஷை என்று அழைக்கப்பட்டது!

இசையை உலகுக்கு அளித்த தமிழை, சென்னை கான சபைகளின் வௌியே நீறுத்திவிட்டு, தெலுங்கிலும், கன்னடத்திலும், மளையாளத்தில்ம், ஹிந்துஸ்தானியிலும் பாடி மகிழ்ந்தனர் வந்தேறிகள்.

தமிழன் இளச்சவாயன். எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு பேசாமல் இருந்தால் தமிழன் நல்லவன். தமிழனின் தன்மானத்தை மீட்க நினைத்தால், நாங்கள் பாஸிசவாதிகள்!

தற்போது தமிழன் ஆங்கில மோகத்தில் சிக்குண்டு தவிப்பதற்கு இவை காரணம். எனது தாய் மொழியைப் பேண எனக்கு உரிமை உண்டு. அதன் மேண்மைகளை எடுத்து விளக்கி, அதை வாழவைப்பது உங்களின் “பகுத்திறிவுக்கு” முரணாகப் பட்டால் அது எனது கவலையல்ல.

உலகின் மூத்தமொழியை சாவுமணியடிக்கச் சொல்வது உங்களுக்கு ஞாயமாகப் பட்டால், அதில் எனக்கு உடன்பாடல்ல.

அடச்சீ……

யவனாவது ஒருவன் தமிழில் பேசுகிறானா? ஆங்கிலத்தைக் கலந்து பேசுவது உங்களுக்கு அசிங்கமாகப் படவில்லை? ஏன் இந்தப் பழக்கம்? தமிழனின் சுயமறியாதை குறைந்ததால் தானே! அதனால் அதன் பெருமைகளைப் பேசுவது, தமிழனது தன்மானத்தை மீட்கவே! அவனது மொழியின் அழகியலை, அறிவியலைச் சொல்லி தமிழனை பெருமைகொள்ள வைக்கிறோம். அது தமிழைக் காக்க!

அதற்கு வந்தேறிகளின் அனுமதி தேவையில்லை.

இந்த தளத்திற்கு வருபவர்கள் நேர்மையான, சிந்தனைக்காரர்களாக இருந்தால் என்னைப் புரிந்து கொள்வார்கள். அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பவர்களிடம் பேசிப் பயனில்லை.

சில காலம் கழித்து மீண்டும் வருகிறேன்! அதுவும் கவியின் கட்டுரை முடியும் வரை மட்டுமே!

 

31 07 2009

NithiChellam
 

///அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பவர்களிடம் பேசிப் பயனில்லை.///

டாக்டர் பாண்டியன் அருமையான சுயவிமர்சனம்.

 

31 07 2009

முகமது பாருக்
 

//NithiChellam (09:43:55) :

///அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பவர்களிடம் பேசிப் பயனில்லை.///

டாக்டர் பாண்டியன் அருமையான சுயவிமர்சனம்.//

அருமையான பதில் தோழர் nithichellam அவர்களே..

//உலகின் மூத்தமொழியை சாவுமணியடிக்கச் சொல்வது உங்களுக்கு ஞாயமாகப் பட்டால், அதில் எனக்கு உடன்பாடல்ல.

அடச்சீ……//

முனைவருக்கு இது போன்று எழுதுவது அழகல்ல.

//தமிழ் ஒரு நீச பாஷை என்று அழைக்கப்பட்டது!

என்று சொன்ன பார்ப்பண கூட்டத்தை நோக்கி கேள்வி கேக்காதது ஏன்?… ஒன்று பூநூல் பாசம்.. இல்லை ஏற்கனவே சொன்ன ஜாதி என்னும் சாக்கடை..

எவனாவது ஒருவன் தமிழில் பேசுகிறானா? ஆங்கிலத்தைக் கலந்து பேசுவது உங்களுக்கு அசிங்கமாகப் படவில்லை? ஏன் இந்தப் பழக்கம்? தமிழனின் சுயமறியாதை குறைந்ததால் தானே! அதனால் அதன் பெருமைகளைப் பேசுவது, தமிழனது தன்மானத்தை மீட்கவே! அவனது மொழியின் அழகியலை, அறிவியலைச் சொல்லி தமிழனை பெருமைகொள்ள வைக்கிறோம். அது தமிழைக் காக்க!

அப்புறம் என்ன —— (மன்னிக்க), ஆங்கிலத்தில் பெயர் எழுதுகிறீர் தமிழ் வலைப்பக்கத்தில்.. இப்படி கேட்டால் ஏன் நீங்க சாமி பெயர் வைக்கிறீங்கன்னு மழுப்பல் வேற, இல்ல எதாவது பெயர் குறித்து விவாதத்தை திசை திருப்பிவிடுகிறீர்..நீங்கள் ஒரு தெளிந்த திரிபு வாதி (உதாரணம்: கருணாநிதி)

அதற்கு வந்தேறிகளின் அனுமதி தேவையில்லை. //

யாரின் மேல் உங்களுக்கு வன்மம். மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் முனைவர் வே. பாண்டியரே..

/இந்த தளத்திற்கு வருபவர்கள் நேர்மையான, சிந்தனைக்காரர்களாக இருந்தால் என்னைப் புரிந்து கொள்வார்கள்//

இதற்கும் நீங்களே பதில் தருகிறீர்கள்

சில காலம் கழித்து மீண்டும் வருகிறேன்! அதுவும் கவியின் கட்டுரை முடியும் வரை மட்டுமே!//

ஆக கவியின் கட்டுரை உங்களுக்கு மனரீதியில் தாக்கத்தை உண்டு செய்துள்ளது. அதுதான் உண்மையும் கூட வாழ்த்துக்கள் தோழர் கவி அவர்களே இந்த தமிழ் தேசியவாதியை மீண்டும் ஒருமுறை அம்பலபடுத்தியதற்கு வாழ்த்துகள்..

முனைவர் வே. பாண்டியன் அவர்களுக்கு மனரீதியில் எதோ தடை உள்ளது அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள் முனைவரே… அது அவமானமோ அசிங்கமோ அல்ல ஏனெனில் நீங்கள் முனைவரே புரிந்து கொள்ளுவீர்கள்..

தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைப்பவன்)

 

                31 07 2009

vimarisanam
 

திராவிடம் – திராவிடம் என்று பேசுபவர்கள் -

ஒரே ஒரு தெலுங்கரையாவது, கன்னடியரையாவது, மலையாளியையாவது – தமிழ் தான் எங்கள் தாய்மொழி நாம் எல்லாரும் ஒரே இனத்தவர் தான் என்று கூறச்செய்யுங்கள் பார்ப்போம்.

திராவிடம் – ஆரியம் என்பது எல்லாம் சரித்திரம் !

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சரித்திரம் !!

இன்றைய தினத்தில் எது நடைமுறை சாத்தியம் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

தனித்தனி நாடுக்ளாக இருந்த நிலங்களை – அதில் வாழும் மக்களை – ஒன்றிணைத்து – ஒரே நாடக்கி நானூறு வருடங்களாக ஒரு குடைக்குள் – ஒரு நிர்வாகத்திற்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர் – நம்மை அழைத்தது – உணற வைத்தது ‘இந்தியன்’ என்று !!

சுதந்திரம் பெற்ற பிறகு – மொழி வழி மாநில அரசுகள் அரசியல் சட்டம் மூலமாக உருவாகி – இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னர் – நாம் இயற்கையாக நம்மை உணர்வது – முதலில் தமிழன் என்றும் பிறகு இந்தியன் என்றும் மட்டும் தான். (சிலர் முதலில் இந்தியன் என்றும் பிறகு தமிழன் என்றும் கூறலாம் ). சத்தியமாக திராவிடன் என்கிற உணர்வு மிகப்பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுவது இல்லை. திராவிட இயக்கத்தில் ஊறி வளர்ந்த வெகு சிலர் மட்டுமே இன்றும் திராவிடன் – ஆரியன் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் !!

நடைமுறை சாத்தியம் இல்லாத திராவிடர் பற்றிய பேச்சை விட்டு விட்டு – தமிழைத் தாய்மொழியாக கொண்டுள்ள அனைவரும் தமிழர்க்ள் என்கிற – இன்றைய தேதிக்கு பொருத்தமான – ஒரு நிலையை ஏற்பதே பொருத்தமாக இருக்கும்.

காவிரியில் கன்னடத்தாரும், பாலாற்றில் தெலுஙக்ரும், பெரியாரில் மலையாளத்தாரும் படுத்தும் பாட்டை பார்த்தபின்பும் – தமிழர்கள் பெரும் துன்பத்திற்கும் அவதிக்கும் உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலும் இன்னும் திராவிட உணர்வைப் பற்றி பெருமையாக பேசுபவர்க்ளை மக்களே வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் இன்று இருக்கிறோம்.

-விருப்பு வெருப்பு இன்றி – இதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் !!!

-காவிரிமைந்தன் (vimarisanam.wordpress.com)

 

            3 08 2009

வேந்தன்
 

காவிரியில் கன்னடத்தாரும், பாலாற்றில் தெலுஙக்ரும், பெரியாரில் மலையாளத்தாரும் படுத்தும் பாட்டை பார்த்தபின்பும் – தமிழர்கள் பெரும் துன்பத்திற்கும் அவதிக்கும் உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலும் இன்னும் திராவிட உணர்வைப் பற்றி பெருமையாக பேசுபவர்க்ளை மக்களே வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் இன்று இருக்கிறோம்.

-விருப்பு வெருப்பு இன்றி – இதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் !!! //

தமிழனில் ஆதிக்க சாதி தமிழன் தாழ்த்தப்பட்ட மக்களை சாதிய வன்கொடுமைகளால் படுத்தும் பாட்டை பார்த்தபின்பும் – தமிழ் மக்களிலே ஒரு பிரிவினர் மாத்திரம் பெரும் துன்பத்திற்கும் அவதிக்கும் உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலும் இன்னும் தமிழின உணர்வை பற்றி பெருமையாக பேசுபவர்களை, ஒடுக்கபட்ட மக்களே வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் இன்று இருக்கிறோம்.

-விருப்பு வெருப்பு இன்றி – இதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் !!!

ஒப்பு கொள்வீரா காவிரிமைந்தனே??

 

                3 08 2009

siruthai
 

வருணாசிரமத்துக்கும் தமிழர்களின் சாதிமுறைக்கும் தொடர்பு கிடையாது, தமிழர்களின் சாதிப்பிரிவுகள் தமிழர்களுடையதே
தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள்
The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள்.

வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல.

தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் – அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும்.

பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா?
தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இக்களத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம்.

உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர்.

இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு

அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது.

இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களான, மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.

என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், எம்முடைய இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும்.

இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.

அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.

ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.

உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை – அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் – தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள்.

இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது.

 

3 08 2009

siruthai
 

யார் ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தமிழா
தம்மை ஆரியர்கள் எனவும், சமக்கிருதம் தமது மொழி எனவும் ஆரியசமாஜங்கள், ஆரிய கழகங்கள் எல்லாம் அமைத்துக் கொண்டு தம்மை உயர்ந்த ஆரியர்கள் எனவும் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள இணையத்தளங்களில் உலாவும் போது மட்டும் தமிழ் என்ற போர்வையைப் போர்த்துக் கொண்டு, ஆரியப்படையெடுப்பு உண்மையில்லை, அதற்கான ஆதாரமெதுவுமில்லையென்றும் கூட பதிவுகள் செய்வதைப் பார்க்கும் போது அவர்களின் பச்சோந்தித் தனம் மட்டுமல்ல, கூழுக்கும் ஆசை அதேவேளையில் மீசைக்கும் ஆசைப்படும் அவர்களைப் பார்க்க அடக்க முடியாத சிரிப்புத் தான் வருகிறது.

அந்தளவுடன் நிறுத்தி விடுகிறார்களா?, இல்லை. ஆரியப் படையெடுப்பு என்பது கிடையாது ஆனால் நாங்கள் ஆரியர்கள், நாங்கள் எங்கிருந்தும் வரவில்லை, இந்தியாவைச் சேர்ந்தவ்ர்கள் தான் ஆனால் ஆரியர்களாகிய எங்களிடமிருந்து தான் தமிழர்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதை நிரூபிப்பதில் அவர்களுக்கு அதிகப் பிரியம். அதனால் ஈழத்தமிழர்களையும் இளிச்ச வாயர்களாக நினைத்துக் கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தமது ஆரிய பிராமண மேலாதிக்கத்தை, அறிமுகமேயில்லாதவர்களின் கட்டுரைகளினாலும், இணைப்புக்களின் மூலமும் ‘நிரூபிக்கப்’ பாடுபடும், பல பார்ப்பனப் பரதேசிகள் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தமிழர்களுக்குக் குழிபறிக்கும் போது, தமிழர்களுக்கு விடிவு காலமேற்படுமா?

தமிழினம் இன்று சிங்களவர்களால் படும் நெருக்கடியை விட, தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டே, தமிழர்களுக்கு எதிராக இயங்கும் பார்ப்பனர்களின் நெருக்கடி பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. சிங்களவர்களின் நேரடி எதிர்ப்பை முகம் கொள்வதை விட, பார்ப்பனர்களின் மறைமுகமான எதிர்ப்பை எதிர்கொள்வது தமிழினத்துக்கு என்றும் சவாலாகவே இருந்து வந்துள்ளது.

உதாரணமாக, தமிழ்நாட்டு உறுப்பினர்கள் யாவரும் கட்சி வேறுபாடின்றி இலங்கை சனாதிபதியைச் சந்திக்க மறுத்து ஈழத்தமிழர்களுக்காக தமது சகோதரத்துவத்தைக் காட்டிய போது, தமிழர்களின் முகத்திலறைந்து விட்டு, இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தது மட்டுமல்ல, தனது வீட்டுக்கும் அழைத்து விருந்து வைத்தது யார்? வேறு யாருமல்ல, அதுவும் தமிழ் பேசும் பார்ப்பான் தான்.

ஈழத்தமிழினம் படுகொலை செய்யப்படும் போது, ஈழத்தமிழினம் அழிக்கப்படும் போது அதற்குத் துணைபோய், இலங்கை அரசுடன், இந்திய அரசுக்குத் தெரியாமலே பாதுகாப்புக்குழு அமைத்துத் தமிழர்களை அழிக்கச் சதி செய்வது வேறு யாருமல்ல, அதுவும் ஒரு பார்ப்பான் தான்.

ஈழவிடுதலையைக் கொச்சைப் படுத்தி, பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிச் சிங்களவர்களுக்கு ஆதரவாகப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களும் பார்ப்பனர்கள் தாம்.

உண்மையிலேயே எப்படித்தான் தமிழைப் பேசித் தமிழால், தமிழர்களின் தயவில் வாழ்ந்தாலும் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் தம்மைத் தமிழர்களாகக் கருதுவதேயில்லை. இரண்டாயிரமாண்டுகளாகத் தமிழர்களுடன், தமிழர்களின் தயவில் வாழ்ந்து கொண்டே, அவர்களை ஆதரித்த, இன மக்களுக்கெதிராக இயங்கும், உலகின் முதலாவது மனிதக்குழு பார்ப்பனர்களாகத் தானிருக்க வேண்டும். வள்ளுவப் பெருந்தகையின் “வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு” என்ற வரிகளைத் தமிழர்கள் மறக்கவே கூடாது.

பார்ப்பனர்களின் கருத்துப்படி அவர்கள் இன்று தமிழைப் பேசித் தமிழ்மண்ணில் வாழ்ந்தாலும் அவர்கள் ஆரியர்கள், சமஸ்கிருதம் அவர்களின் மொழி என்பதாகும், அவர்களின் முன்னோர்கள் ஆரியவர்த்தாவிலிருந்து தான் தமிழ்நாட்டுக்கு வந்ததாகத் தான் பார்ப்பனத் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்களின் இணையத்தளங்களும், மனுச்மிருதியும் கூறுகின்றன். அதனால் தான் ஈழத்தமிழர்களின் நாடித்துடிப்பாக இருந்த இந்த இணையத் தளத்திலேயே “ஆரிய” பார்ப்பனர்கள் நாசூக்காக தமது ஆரிய மேலாதிக்கத்தையும், சங்கத்தமிழில் கூட ஆரியர்களைப் பற்றிக் கூறப்பட்ட்டுள்ளது என ஆரம்பித்து, சங்கத்தமிழ்ப் புலவர்கள் எல்லாம் ஆரியர்கள் தான் என நிரூபிக்கும் பணியில் இறங்கி விட்டார்கள் போலிருக்கிறது. சங்கத்தமிழில் ஆரியர்கள் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது, அதனால் வந்தேறி ஆரியர்களுக்கும் சங்கத்தமிழுக்கும் தொடர்பு என்றோ அல்லது ஆரியர்களிடமிருந்து தான் சங்கத்தமிழ்ப் பாடல்கள் உருவாகின என்றாகி விடுமா.

தமிழர்களின் ஆரியக் கலப்பற்ற தனித்துவமான மொழி, கலாச்சார அடையாளங்களைக் குலைத்துக் கொச்சைப்படுத்தி, அவற்றைத் தமிழர்கள் இரவல் வாங்கியதாக அல்லது தமிழர்களின் தனித்துவமான இணையற்ற் மொழி, கலாச்சார, இலக்கியங்களில் ஆரியக்கலப்பிருப்பதாக இணைய்த்தளங்களில் ‘நிரூபிக்க’ பார்ப்பன பிரியர்கள் பலர் கிளம்பியிருப்பதை நாம் காணலாம். ஆனால் பார்ப்பனப் பிரியர்கள் என்னதான் இங்கு தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் தொடர்பு கற்பித்தாலும், தமிழர்களின் அறிவு, கலை, கட்டிட, தொழிநுட்பத்துக்குள் வந்தேறி ஆரியர்களையும் நுழைத்துப் பங்கு கேட்டுத் தமிழர்களையும், தமிழையும் தாழ்மைப்படுத்த முனைந்தாலும் தமிழர்கள் வந்தேறி ஆரியர்களை நம்மவர்களாகவே எப்பொழுதுமே ஏற்றுக் கொண்டதில்லை. வடக்கர்களை தம்மிலிருந்து விலக்கித் தான் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதற்குத் தமிழர்களின் வரலாற்றில் போதியளவு ஆதாரங்களுண்டு.

கிறித்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டுத் சங்கத்தமிழ் நூலான அகநானூற்றில் ஒரு இளந்தமிழ்ப் பெண் கூறுகிறாளாம் ” எப்படிச் சோழர்கள் ஆரியர்களை வல்லத்தில் நொருக்கினார்களோ அப்படி என்னுடைய வளையல்களை நொருக்குகிறேன் பார்” என்று. (யாராவது தெரிந்தவர்கள் அந்தப் பாடலைத் தரவும்)

அது மட்டுமல்ல, தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் பழித்தார்கள் என்பதற்காகப் படையெடுத்துப் போய் ஆரிய வடக்கர்களை கல் சுமக்கச் செய்து, தமிழ்த்தாய்க்குச் சிலையெடுத்ததும், கங்கை வரை படையெடுத்து, வடக்கர்களைக் கொன்று, வெற்றி வாகை சூடி, கங்கை கொண்ட சோழபுரம் அமைத்த வரலாறும், எமது முன்னோர்கள் ஆரியர்களை எதிரிகளாகத் தான் கருதினார்கள் என்பதற்காகச் சான்றாக எம்மிடமுண்டு.

அதனால் தமிழெதிரிப் பார்ப்பனர்கள் என்ன தான் ஆரியக் கூத்தாடினாலும். ஏமாந்து போகாமல், அவர்களின் கோமாளிக் கூத்தை மட்டும் இரசித்து விட்டுக் காரியத்தில் கண்ணாக, விழிப்புடன் இருக்க வேண்டியது தான் உலகத்தமிழர்களின் கடமையாகும்