"கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்று - நித்தம்
பரிதவித்து உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே"


"மண்ணிலின்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?

திருவள்ளுவர் பொருட் பாலில் அரசியல் பற்றிப் பேசுகிறார். இறைமாட்சி என்ற அதிகாரத்தில் (39) அரசனது நற்குண நற்செய்கை பற்றியும் வினை செயல் வகை என்ற அதிகாரத்தில் (68) அமைச்சன் செய்ய வேண்டிய வினை பற்றியும் (68) பத்துப் பத்துக் குறள் மூலம் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
(குறள் 383)


நாட்டை ஆளும் அரசனுக்கு காலம் தாழ்த்தாத விரைவான வினைத்திறனும் அதனை அறிதற்கேற்ற கல்வி அறிவும் அவற்றைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் என்றும் நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவை ஆகும்.

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (குறள். 671)

ஆராய்ச்சியின் முடிவு துணிபு கொள்வதே ஆகும். அவ்வாறு துணிவு பெற்ற பிறகு காலம் தாழ்த்துவது குற்றமாகும்.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (குறள். 672)


காலம் தாழ்த்திச் செய்யத் தக்கவற்றை அவ்வாறே செய்ய வேண்டும். விரைவாகச் செய்ய வேண்டியவற்றில் காலம் தாழ்த்துதல் கூடாது.

இன்றைய மக்களாட்சி முறைமையில் அரசன் இல்லை. மக்கள்தான் அரசர்கள். எனவே அரசனக்கும் அமைச்சனுக்கும் சொன்ன இலக்கணம் மக்களுக்கும் பொருந்தும்.

 


`தெள்ளிய ஆலின் சிறுபழத்தொருவிதை
தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையிலும்
நுண்ணிதே ஆயினும்
அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி - ஆட்பெரும்படையோடு
மன்னர்க்கு இருக்க நிழலாகும்மே'

என்ற தமிழ்ப் பாடலுக்கொப்ப, `தெள்ளிய ஆலின் சிறு பழத்தொரு விதை' ஆலமரத்தினுடைய மிகச்சிறிய விதை.

உங்களை அழித்தவர்களைப் பழிவாங்குவோம்!
உங்கள் தாயகக் கனவினை நினைவாக்குவோம்!
உங்கள் ஈகை வீண்போகாது என்று
கார்த்திகை 27 இல் உங்கள் கல்லறைகளில் 
விளக்கேற்றி உறுதி எடுத்துக் கொள்கிறோம்! 

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

 

நக்கீரன்


 

வாரணம்  பொருத மார்பும்,
வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,
சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,
வெறுங்கையோடு இலங்கை புக்கான்"

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் - அடீ கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ
பார்த்தவிடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
பாவை தெரியுதடீ!"


அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல் தமிழ்மொழி வாழ்த்து

தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!

தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும் தான்
அக்குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ
குக்கலே குக்கல் அல்லால் குலந்தனில் பெரியதாமோ? 3.

சற்றே சரிந்த குழலே துவள தரளவடம்
துற்றே அசையக் குழையூசலாட துவர்கொள்ச் செவ்வாய்
நற்றேன் ஒழுக நடனசிங்கார நடையலங்காரப்
பொற்றேர் இருக்கத் தலையங்காரம் புறப்பட்டதே!

சற்றே சரிந்த குழல் - லேசாகக் கலைந்த கூந்தல்
துவள தரளவடம் துற்றெ அசைய - முத்து மாலை அசைய (துவள தரளவடம் = முத்து மாலை)
குழையூசலாட -காதணிகள் அதிர்ந்து அசைய (குழை = ஒரு வித காதணி, இன்று நாம் உபயோகிக்கும் ஜிமிக்கி)
செவ்வாய் நற்றேன் ஒழுக - செவ்வாய் = சிவந்த வாய், நற்றேன் = நல்ல தேன்

இதில் எங்கே விரசம் வந்தது, பெண்மைக்குத்தான் என்ன களங்கம் உள்ளது இதில்?

நிற்க.

இந்தப் பாடல் உண்மையில் அம்பிகாபதி பாடிய பாடலே அல்ல, அது தனிப் பாடல் திரட்டில் வரும் ஒரு பாடலே என்று ஒரு ஆணித்தரமான கருத்தும் உள்ளது.  ஆனால் அது பற்றிய சர்ச்சை இங்கு வேண்டாம் என்று கருதி இவ்வளவில் விட்டு விடுகிறேன்.
 

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை வுயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே...
                                                                             -அகத்தியர்


உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே!


வெங்காயமுண்டு மிளகுண்டு சுக்குண்டு
உன் காயம் ஏதுக்கடி!குதம்பாய்
உன் காயம் ஏதுக்கடி!
மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி?
தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவார மேதுக்கடி - குதம்பாய்
தேவார மேதுக்கடி?


 

மெய்வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்: செவ்வி
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.

கறந்த பால் முலை புகா, கடைந்த வெண்ணை மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதாமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...
                                                                  -காடுவெளி சித்தர்


 

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பதும் பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டபவன் மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆற


ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை"


பாரதி கவிதை: ‘வரம் கேட்டலிலிருந்து’ ஒரு பகுதி

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

இசைப்பேன் கேளாய் கணபதி!
மனதிற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலைவந்திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாய்.

காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்! - என்றன்
காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்"
என்று காலனுடன் வீரம் பேசினார். ஆனால் 'மரணத்தை வெல்வது எப்படி?' என்று உபாயம் சொன்ன மகாகவி பாரதி கூட அந்த மரணத்தை வெல்ல முடியவில்லை! அவரது முப்பத்தொன்பதாவது அகவையில் அந்தக் காலன் என்;ற பாபி கூட்டிச் சென்றான்.
நொந்த புண்ணைக் குத்துவதால் பயனொன்றில்லை
நோ யாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராச் சார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்!
பார்மீது நான் சகா திருப்பேன், காண்பீர்! (பாரதியார் சுயசரிதை)


மரணம் மனிதனுக்கு உலகம் தொடங்கிய காலம் தொட்டே ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அந்தப் புதிரை யாரும் இன்னும் அவிழ்த்த பாடாக இல்லை. மரணத்தின் பின் (மறு) பிறப்பு உண்டா? உண்டு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் மறுபிறப்பு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்.


கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும் போய் மரம்புகா,
இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லைஇல்லை இல்லையே! (சித்தர் பாடல்கள்)இளமைக் கால லீலைகள் முதுமையில் நோய்வடிவில் அறுவடையான போது கவிஞர் கண்ணதாசனை மரணபயம் கவ்விக் கொண்டது. பாரதி நீண்ட நாள் வாழ ஆசைப்பட்டது போல் தானும் வாழ ஆசைப்பட்டார்.

"நூறுவய தாகும்வரை ஓடி விளையாட ஒரு
நோயிலா உடல் வேண்டும்
நுண்ணறிவு ஊறி இள வெண்ணிலவு போல ஒரு
நூலை எழுத வேண்டும்
பண்ணிசையில் என் தமிழைப் பால்போல் தெளித்து நான்
பரமார்த்த னாக வேண்டும்
பக்தியொடு நின்னடியைப் பற்றிஇதைக் கேட்கிறேன்
பாரதச் சக்தி உமையே!" (கண்ணதாசன் பாடல்கள்)

"'நூறுவயது ஆகும்வரை ஓடி விளையாட ஒரு நோயிலா உடல் வேண்டும்' என்று கடவுளிடம் மன்றாடிக் கேட்டும் கண்ணதாசன் தனது 55 வது அகவையில் காலனுக்கு இரையானார்.


முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!

In bricks and in granite, in the red rubbed lingam, in copper and brass, is Siva’s adobe-
thats what you tell us,
and you are wrong.
Stay where you are
and study your own selves.
Then you will BECOME
the Temple of GOD,
full of his dance and spell
and song.
 பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
 

What does it mean - a Pariah woman?
What does it mean - a Brahmin woman?
Is there any difference in flesh, skin,or bones?
Do you feel any difference when you sleep with a Pariah or Brahmin woman?
 

Poet: Civavakaviyar
Translated by Kamil V Zvelebil


நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவழக்கூர் வாய் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே.

சோம்பலின் விளைவு வறுமை, முயற்சியின் விளைவு மூலதனம்.


`நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளிய'

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு!

- கண்ணதாசன்


சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட துவள் கொள் செவ்வாய்
நற்றேனிழொழுக நடன சிங்கார நடையழகில்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே

திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 6.95.10
 

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
.. தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
.. மாதேவர்க்(கு) ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்(து) அழுகு தொழுநோயராய்
.. ஆ உரித்துத் தின்(று) உழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக் கரந்தார்க்(கு) அன்பர் ஆகில்
.. அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.

குபேரனிடம் உள்ள எடுக்க எடுக்கக் குறையாத சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் போன்ற
பெரு நிதியைத் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும் நமக்கு ஒருவர்
தந்தாலும், அவர் சிவபெருமான்மேல் ஒரு தலையாய அன்பு இல்லாதவராக இருந்தால்,
நிலையின்றி அழிபவராகிய அவருடைய செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உடல்
உறுப்புகள் எல்லாம் அழுகிக் குறையும் தொழுநோய் உடையவராய்ப், பசுவை உரித்துத்
தின்று திரியும் புலையர் ஆனாலும், கங்கையை நீண்ட சடையில் வைத்த
சிவபெருமானுக்குப் பக்தராக இருப்பவர் என்றால், அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர். - ஔவையார். நல்வழி

When the people fear their government, there is tyranny. When the
government fears the people, there is liberty"- Thomas Jefferson


"பொங்கிடும் அன்புடன்
பொலிவுறு முகத்துடன்
அன்பினில் சிறந்த்
நங்கையும் நம்பியும்
திருமணம் கொண்ட
அருமைக் காட்சிகள்
கண்டேன் களி கொண்டேன்
என்றும் இணைந்து
இல்லறம் நடத்தி
இணையிலாப் புகழ்
எய்துக இனிதே
அறிவிற் சிறந்த
மக்க்ளைப் பெற்று
அகிலம் போற்றிடும்
தகைமை அடைக
சுற்றம் ஓம்புக
நண்பரைப் பேணுக
மொழியையும்
இனத்தையும்
கண்ணெனக் காக்க
அய்யா வழங்கிய
அறிவுரை நினைந்து
சுயமரியாதையை
உயிரெனக் கொள்க!
வாழ்க நீவிர்
வளமெலாம் பெற்றே!
என்றும் அன்புடன்,
மறைமலை
படம்: ஊமை விழிகள்
பாடல்: தோல்வி நிலையென நினைத்தால்

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…
வாழ்வை சுமையென நினைத்து…
தாயின் கனவை மிதிக்கலாமா…

உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா…
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா…

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…

விடியலுக்கு இல்லை தூரம் …
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா…
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா…

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா…

விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா…
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா…

யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.


சாதி பேதம்

சாதி ஆவது ஏதடா? கலந்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம் ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளி