திருவள்ளுவர் பற்றி நாம் அறியக் கூடிய  சில உண்மைகள். 

நக்கீரன்

திருவள்ளுவரது  வாழ்க்கைக் குறிப்பை எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி புலைச்சிக்கும் - பகவன் என்ற  பிராமணனுக்கும்  பிறந்ததாக  சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் கூட குத்து மதிப்புத்தான்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்தார் என தமிழ் அறிஞர்கள் புறச்சான்றுகளை வைத்து கணித்துள்ளார்கள். எனவே திருவள்ளுவர் பிறந்து இந்த ஆண்டுடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் ஒரு பவுத்தர், அவர் ஒரு சைவர், ஒரு வைணவர் என்றெல்லாம் மதவாதிகள் அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு வலிந்து பொருள் கொண்டு  எல்லா  மதத்தினருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவரது குறள்களில் சமணக் கருத்துக்கள் (முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து) ஏனைய மதங்களின் கருத்தைவிட அதிகமாகக் காணப்படுகிறது. அவர் முனிவர்கள் என்ற பொருளில் தெய்வம் உண்டென நம்புகிறார்.

இது போலத்தான் வள்ளுவரின் தோற்றமும்.  மழித்தல் வேண்டா என்று சொன்னவர் சடை வைத்திருக்க வாய்ப்பே இல்லை.  அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகள் இல்லை. ஆனால் அவர் ஒரு பெண்ணை மணந்து இல்லறம் நடத்தி மக்களைப் பெற்று வாழ்ந்தவர்.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250 கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே  அரங்கேற்றம்  செய்யப்பட்டது.  கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோத  வள்ளுவர் என்ற  அறிஞர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும் விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர்.  மக்கள் கொலை,   களவு, பொய், கள் கொ செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று  கூறினார்.  அறம் செய்ய வேண்டும் அன்பு பாராட்ட வேண்டும்  விருந்து ஓம்பல் வேண்டும்  இனியவை கூறல் வேண்டும், அழுக்காறு,  வெகுளி, இன்னாச் சொல், புறங்கூர்தல் ஆகியவற்றைத்  தவிர்க்க வேண்டும் ஒழுக்கம்  உடையவர்களாக இருக்க வேண்டும் அடக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும் கள் குடிக்கக் கூடாது புலால் உண்ணக் கூடாது பொய் சொல்லக் கூடாது எப்போதும் உண்மை பேச வேண்டும் என வாழ்வாங்கு வாழுவதற்குரிய அறிவுரைகளைக் கூறுகிறார். ஆட்சி செய்கிறவர்கள்  நடுவுநிலை தவறாது,  செங்கோல் கோணாது, நீதி தவறாது மனித நேயத்துடன் ஆட்சி செய்ய வேண்டும்  எனச் சொல்கிறார்.  இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள்  எக்காலத்துக்கும்  உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர்  தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து  கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்கள்  தெரிவிக்கின்றன. 

திருவள்ளுவர்  காலததில்  சாதிப் பிரிவுகள்  இருந்திருக்கின்றன.  அதனால் சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று எழுதா வேதங்களை விட  திருவள்ளுவர் யாத்த திருக்குறள் உயர்ந்தது என்பது புலவர்களின் கருத்து.  அந்தப்  பாடல்:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால் இதனை உணர்ந்த தமிழர்கள் எத்தனை விழுக்காடு? திருக்குறள் உள்ள வீடுகளின் விழுக்காடு எத்தனை?


‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’

என்ற குறளுக்கு உத்தம உதாரணம்.

சுஜாதா பதில்கள் – பாகம் 1 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

மணக்குடவர் உரை:

செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க. இது வலியறியும் இடம் கூறிற்று.

103. குடிசெயல்வகை குறள் 1028

குடிசெய்வார்க்கு இல்லை பருவம்: மடிசெய்து
மானம் கருதக் கெடும்.

பொருள்
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரியகாலம் என்று ஒன்று இல்லை. சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும். 1028