நாட்டு நடப்பு
வெள்ளைக்காரர்களிலும் கள்ளர்கள் இருக்கிறார்கள்
திருமகள்
வெள்ளைக்காரர்கள் என்றால் அவர்கள் உத்தமர்கள், நேர்மையானவர்கள் என நாம்
நினைக்கிறோம். அதிலும் அரசியல்வாதிகளை அப்படி நினைக்கிறோம். ஆனால்
அவர்களுக்கும் மூன்றாம் உலக நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அதிக வேற்றுமை
இல்லை என்பது பலருக்குத் தெரிந்திருப்பதில்லை. மக்களாட்சி முறைமையின்
தொட்டில் என்று பலரும் பாராட்டும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பலர் தேன் முட்டிக்குள் கையை வைத்து நக்கியது அம்பலத்துக்கு
வந்திருக்கிறது.
சொந்தத் தேவைகளுக்குப் பணத்தைச் செலவழித்துவிட்டு அரச கருவூலத்தில் இருந்து
முறைகேடாகப் பணத்தை எடுத்திருக்கிறார்கள். இரண்டொருவர் அல்ல. மொத்தம் 400
நா.உறுப்பினர்கள். (மொத்தம் 646 நா.உறுப்பினர்கள்) ஆண்டுக்கணக்காக (2004
-2009) இந்த மோசடியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால்
அகப்பட்டவர்களில் பிரதமர் கோர்டன் பிரவுண் ஒருவர்!
கழிவறைக் கடுதாசி வாங்கியது, வீட்டைத் திருத்தியது, குடியிருக்க வீட்டை
வாடகைக்கு எடுத்ததாகச் சொல்லி பணத்தை எடுத்துட்டு அதனை பணம் வாங்கிக்
கொண்டு இன்னொருத்தருக்கு வாடகைக் விட்டது போன்ற செலவினங்களுக்கு
கருவூலத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த 400 பேரில் 390 பேர் 1.7 மில்லியன் (17 இலட்சம்) டொலர்களைத்
திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அல்லது அவர்களது சம்பளப்பட்டியலில்
இருந்து பெப்பரவரி 22 க்கு முன்னர் கழிக்க ஒப்புக் கொண்டுள்ளார்கள். இந்த
மோசடியை நா.உறுப்பினர்கள் மீது இருக்கும் மரியாதை காரணமாக அதிகாரிகள்
கண்டும் காணாது விட்டுவிட்டார்கள்.
கடந்த ஆண்டு வெடித்த இந்த மோசடியை கட்சி பேதமின்றி எல்லா நா.உ. களும்
செய்திருக்கிறார்கள் என்பது ஒரு சிறப்பு. இதன் காரணமாக நா.உறுப்பினர்களது
மானம் கப்பல் ஏறியுள்ளது. பலர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்
போவதில்லை என அறிவித்துள்ளார்கள். கடுமையான கோபத்தில் இருக்கும் மக்கள்
முன் கறைபடிந்த கையோடு இவர்களால் வாக்குப் பிச்சைக்குப் போக முடியாது
என்பது அவர்களுக்குத் தெரியும்.
மூன்று தொழிற்கட்சி நா.உறுப்பினர்களுக்கும் ஒரு பழமைவாதக் கட்சி பிரபுக்கு
எதிராகவும் கணக்கு மோசடி செய்ததாக குற்றவியல் வழக்கு தொடரப்பட இருக்கிறது.
இதனால் ஒரு நன்மை. அடுத்த நாடாளுமன்றத்துக்கு நூற்றுக்கணக்கான புது
முகங்கள் தெரிவு செய்யப்படப் போகிறார்கள்.
எல்லா நாட்டுக் காவல்துறையும் ஒரே வார்ப்புத்தான்!
துப்பாக்கி முனையில் ஆறுமுகம் இரஜீவன் (அகவை 43) என்ற கணக்காளரை
பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைது செய்து தெருவில் முகக் குப்புறப்படுக்க
வைத்து கைக்கு விலங்கிட்ட அவுஸ்திரேலியா காவல்துறையினரை நீதிபதி எச்சரிக்கை
செய்தார். இரஜீவன் கைது செய்த சூழ்நிலையை வைத்து சம்பந்தப்பட்ட
காவல்துறையினர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு வைக்க முடியுமென்று
நீதிபதி கூறினார். இரஜீவனது வழக்கறிஞர் பேசும்போது இரஜீவனை அவர் ஒட்டிவந்த
காரில் இருந்து பலவந்தமாக இறக்கிக் கைது செய்தது சட்ட முரணானது முறையற்றது
என்றும் அவருக்கு தண்டனை வழங்கும் போது அதனை நீதிபதி கவனத்தில் கொள்ள
வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மூன்று தமிழர்கள் பயங்கரவாத அமைப்புக்கு ஒரு மில்லியன் டொலர்
சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்கள்.
அப்பாவிகளைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பெரிய பட்டாளமாகப் போய்த்
துவக்கைக் காட்டி கைது செய்து விலங்கிட்டு அழைத்துச் செல்வது எல்லா
நாடுகளிலும் காணப்படும் காட்சியாகும்.
உலகத்தமிழர் இயக்கப் பொறுப்பாளர் சுரேஷ் மாணிக்கவாசகர் இவ்வாறுதான் 1995
ஆம் ஆண்டு ஒரு நாள் காலை படுத்த படுக்கையில் வைத்துச் கைதுசெய்யப்பட்டார்.
அவரது இருப்பிடத்தை இரண்டு டசின் காவல்துறையினர் உளவுத்துறையினர் இந்தப்
படையெடுப்பில் கலந்து கொண்டார்கள். கைது செய்த வீர தீரக் காட்சியைப் படம்
பிடிக்க கையோடு ஊடகவியலாளர்களையும் காவல்துறையே கூட்டிவந்தது!
கனடாவுக்கு அண்மையில் சீமான் வந்த போது படுத்த பாயில் அதிகாலை அவரைக் கைது
செய்த கனடிய குடிவரவு அதிகாரிகள் அவரது கைகளைப் பின்னால் கட்டி விலங்கிட்டு
ஒரு சிறிமினல் குற்றவாளிபோல் அழைத்துச் சென்றார்கள். பல மணித்தியாலம்
கழித்தே பின்புறமாகக் கைகளில் கட்டப்பட்ட விலங்கு முன்புறமாகக்
கட்டப்பட்டது!
அவரை விசாரிதத ஒரு சீக்கிய அதிகாரி “இராஜீவ் காந்தி கொலையைப் பற்றி என்ன
நினைக்கிறீர்” என்ற அனாவசியமான கேள்வியைக் கேட்டார். பதிலுக்கு “இந்திரா
காந்தி கொலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என சிமான் அந்த சீக்கிய
அதிகாரியிடம் திருப்பிக் கேட்டார்! இந்திரா காந்தியை அவருடைய இரண்டு
சீக்கிய மெய்பாதுகாப்பாளர்களே சுட்டுக் கொன்றார்கள் என்பது நினைவு
கூரத்தக்கது.
தமிழ் மரபுத் திங்களில் ஏராளமான நடன ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை மேடையில்
ஏற்றினார்கள். அவர்களும் நன்றாக ஆடினார்கள். பாரதியார் பாடல்களுக்கு
அபிநயம் பிடித்தார்கள். கேள்வி என்னவென்றால் இந்தப் பிள்ளைகளுக்குத்
தமிழ்மொழி அறிவு இருக்கிறதா? பாரதியார் பாடல்களின் கருத்தை புரிந்து
கொள்ளும் தமிழறிவு இருக்கிறதா? நான் அறிந்தளவில் இந்த நடன ஆசிரியர்கள்
ஆங்கில மூலம்தான் நடனத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள். இசை ஆசிரியர்களும்
அவ்வாறே! பாரதியார் பாடல்களை எப்படி அதன் பொருள் புரியுமாறு ஆங்கிலத்தில்
சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
குரு சீடன்
குரு – நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது?
சீடன் - நாட்டு நடப்பு நல்லாகத்தான் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில்
ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னரும் மக்கள் தமிழ்த் தேசியத்தையே
நேசிக்கிறார்கள் என்பது நடந்து முடிந்த ஆட்சித்தலைவர் தேர்தல் முடிவுகள்
துல்லியமாக எடுத்துக் காட்டிவிட்டது.
குரு – ஆட்சித்தலைவர் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டே தீருவேன். எதுவரினும் அஞ்சேன் துஞ்சேன் என்று மார்தட்டினாரே? அவருக்கு என்ன நடந்தது?
சீடன் - முட்டாள் நெருப்புச் சுடும் என்பதை கைவைத்துப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறான். ஆனால் புத்திசாலி மற்றவர்களது அனுபவத்தைக் கொண்டு நெருப்புச் சுடும் என்பதைத் தெரிந்து கொள்கிறான். தனியே ஆவர்த்தனம் வாசித்த சிவாஜிலிங்கம் தனிமரம் தோப்பாகாது என்ற உண்மையை கட்டுக்காசை இழந்துதான் படித்துள்ளார் என நினைக்கிறேன்.
குரு – வி.புலிகளிடம் சிக்கியுள்ள தமிழ்மக்களை விடுவிக்கவே “மனிதாபிமான நடவடிக்கை” மேற்கொள்ளப்பட்டது என்று மார்தட்டிய மகிந்தர் வட-கிழக்கில் மண்கவ்வியுள்ளாரே?
சீடன் - மகிந்தர் அப்படித்தான் நம்பினார். தனது கைக் கூலிகளான தேவானந்தா, கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் தனக்கு வெற்றி தேடித்தருவார்கள் என நம்பி மகிந்தர் ஏமாந்து போனார்.
குரு – தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். வட – கிழக்கு நீங்கலாக ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்கள் தங்கள் வாக்கை விக்கிரமபாகு கருணரத்தினாவுக்குப் போட வேண்டும் என்று கோட் சூட் போட்ட புலம்பெயர் தமிழ்த்தலைவர்கள் அறிக்கைகள் விட்டார்களே?
சீடன் - தமிழ்மக்கள் அதனைப் புறக்கணித்துவிட்டார்கள்.
நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் இந்தத் தமிழ்த் தலைவர்களுக்கு சாதாரண
தமிழ்மக்களது நாடித் துடிப்புத் தெரிந்திருக்கவில்லை. அவர்களது உணர்வு
புரியவில்லை.
குரு – அவர்கள் சொல்லைக் கேட்டுத் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
சீடன் - என்ன நடந்திருக்குமா? இலங்கை வரைபடத்தில் வடக்கும் - கிழக்கும் நீல
நிறமாகப் போயிருக்கும். அப்டியில்லாமல் அரச தேர்தல் ஆணையமே இலங்கை
வரைபடத்தில் வட-கிழக்கை பச்சை நிறமாகக் காட்டியது!
குரு - இலங்கையின் மத்தியில் உள்ள நுவரேலியா கூட பச்சை நிறம் பூசப்பட்டிருக்கிறதே?
சீடன் - அங்கும் மகிந்தருக்குப் படுதோல்வி. அவருக்கு முண்டு கொடுத்த
ஆறுமுகம் தொண்டமானுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் பட்டை நாமம்
போட்டிருக்கிறார்கள். குருவே ஒரு உண்மை தெரிகிறது. அது என்னவென்றால்
தமிழ்வாக்காளர்கள் எங்கிருந்தாலும் - வடக்குக் கிழக்கு, மத்திய மாகாணம்,
கொழும்பு மாவட்டம் - அவர்கள் ஒரே மாதிரிச் சிந்திக்கிறார்கள். மகிந்தருக்கு
எதிராகவும் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் பலத்த அச்சுறுத்தலுக்கு
மத்தியிலும் தங்கள் வாக்குகளைத் துணிச்சலோடு போட்டார்கள்! யாழ்ப்பாணத்தில்
டக்லஸ் வழங்கிய மது, பதவி, வேலை, பணம், மிதிவண்டிகள், கழிவறைகள், கோயில்
புனருத்தாரணம் என எதற்கும் விலைபோகாமல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக
வாக்களித்தார்கள்.
குரு - இலங்கைத் தீவில் இரண்டு இனங்கள், இரண்டு தேசங்கள் இருப்பது மீண்டும் பன்னாட்டுச் சமூகத்திற்கு எண்பிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு வலுவான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது என்கிறாய்?
சீடன் - ஆமாம் குருவே! . இரண்டு கொலைஞர்களில் யார் நல்ல கொலைஞன்? இரண்டும்
பிசாசுகள் இரண்டும் வேண்டாம என்று கட்டுரை எழுதியவர்கள் இப்போது தேர்தல்
முடிவு வெளியாகிய பின்னர் "இலங்கைக்குள் இரு நாடுகள்" “நாங்கள் வேறு
நாடய்யா! நீங்கள் வேறு நாடய்யா? நிலத்தைப் பிரித்தவர்களால் தமிழர் மனதைப்
பிரிக்க முடியவில்லை என்றெல்லாம் தலைப்புச் செய்தி போட்டும் இலங்கைப்
படத்தில் தமிழீழத்தை பச்சை நிறத்திலும் சிங்களத்தை நீல நிறத்திலும்
போட்டும் தங்கள் மகிழ்ச்சியைக் காட்டியுள்ளார்கள்.
குரு - இது திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்று
சொல்லிவிட்டு பேரன் பிறந்ததும் அள்ளிவாரி கண்ணே, மணியே, கற்கண்டே, என்
செல்வமே என்று கொஞ்சி மகிழ்வது போல இருக்கிறது என்று சொல்? அல்லது இரவல்
புடவையில் இது நல்ல கொய்யகம் என்பது மாதிரி?
சீடன் - அதுதான் சொல்வது ஒன்றில் ஈணத்தெரிய வேண்டும் அல்லது நக்கத் தெரிய வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் ஒருவரால் எந்தப் பயனும் சமூகத்திற்கு இல்லை!
குரு – வேறென்ன புதினம்?
சீடன் - கடந்த காலங்களில் தமிழ்மொழிக் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால்
இந்த ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் என்ற பெயரில் தைமாதம் முழுதும்
நிகழ்ச்சிகளை நடத்தி தைக் கடைசி நாளை பெரிய விழாவாக இளையோர்
கொண்டாடினார்கள்.
குரு – சனம் எப்படி?
சீடன் - பருவாயில்லை. ஆனால் மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். குறிப்பாக நடன ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களும் தங்கள் நடனம் முடிந்தவுடன் மண்டபத்தை விட்டு ஒரே ஒட்டம். சும்மா சொல்லக் கூடாது விழா ஏற்பாட்டாளர்கள் ரொறன்ரோவில் உள்ள அத்தனை நடனப்பள்ளிகளையும் மேடையேற வைத்தார்கள்!
குரு – கனடாவில் தமிழ் வளருது என்று சொல்?
சீடன் - அப்படியும் சொல்லிவிட முடியாது. மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளைதான் தமிழ் படிக்குது. மிச்சம் இரண்டு பிள்ளைகள் தமிழ் படிப்பதில்லை. விழா தொடர்பாக வெளியிட்ட தமிழ் மரபுத் திங்கள் என்ற கையேடு சுத்தமாக ஆங்கிலத்தில் இருந்தது. அறிவிப்புக்கள் கூட ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழ்விழாக் கொண்டாடினாலும் சரி, வேறெந்த விழா கொண்டாடினாலும் சரி நம்மாக்கள் ஆங்கிலத்தை விட மாட்டார்கள்!
குரு – பட்டிமன்றம் நடந்ததாமே?
சீடன் - அதை ஏன் கேட்கிறீர்கள். தமிழ் மரபுத் திங்களுக்கு எள்ளளவேனும் பொருத்தமில்லாத தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது.
குரு – என்ன தலைப்பு?
சீடன் - தமிழ்மக்களின் அடையாளத்தைப் பேணுவதில் தமிழ்மொழி இன்றியமையாதது? இது ஒரு பாமரத்தனமான கேள்வி. தமிழ்மொழி அல்ல என்று பேசவந்தவர்கள் முட்டாள்த்தனமான வாதங்களை முன்வைத்தார்கள். சீக்கியனது குடுமியையும் முஸ்லிம்களது தொப்பியையும் மேற்கோள் காட்டி மொழி அல்ல இன்றியமையாதது என வாதிட்டார்கள். சீக்கியர், முஸ்லிம்கள், யுதர்கள் இவர்களது அடையாளம் மதம். மொழி அல்ல. ஆனால் தமிழர் கதை வேறு. அவர்களது அடையாளம் மொழிதான்.
குரு - தமிழ்மக்களின் அடையாளத்தைப் பேணுவதில் தமிழ்மொழி
இன்றியமையாதது? என்ற தலைப்புக்குப் பதில் புலம்பெயர் நாடுகளில் தமிழ்
வாழுமா? அல்லது மெல்லச் சாகுமா? என்று போட்டிருக்கலாம்.
சீடன் - ஆமாம். நல்ல காலம் நடுவர் தமிழ்மக்களின் அடையாளத்தைப் பேணுவதில்
தமிழ்மொழி இன்றியமையாதது என்று சொல்லாடல் புரிந்த கன்னை வென்றதாக அறிவித்து
நிலமையை சரிசெய்து கொண்டார். இன்னொரு வேடிக்கை. அவ்வையார் எழுதிய
ஆத்திசூடிப் புத்தகம் வீட்டில் வைத்திருப்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்று
கேடடபோது........
குரு – பல கைகள் உயர்ந்திருக்குமே?
சீடன் - அப்படித்தான் நான் நினைத்தேன். ஆனால் ஒரு கையும் மேல் எழவில்லை. பிள்ளைகளுக்கு பட்டும் பொன்னும் போட்டு அழகு பார்க்கும் பெற்றோர்கள் சின்னப் பிள்ளைகளுக்காகவே எழுதப்பட்ட ஒழுக்க நூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை போன்ற நூல்களை வாங்கிக் கொடுப்பதில்லை. சொல்லிக் கொடுப்பதும் இல்லை!
குரு – ஒழுக்கம் இல்லாத வீரம், கல்வி, செல்வம் இவற்றால் பயனில்லை.
அதனால்தான் வள்ளுவர் ஒழுக்கம் விழுப்பம் தருவதால் ஒழுக்கம் உயிரினும்
ஓம்பப்படும் என்றார். சரி போகட்டும். இது முதல் முயற்சிதானே? அடுத்த ஆண்டு
தமிழ் மரபத் திங்களை குறைகள் கழைந்து நிறைவாகக் கொண்டாடுவார்கள் என
எதிர்பார்ப்போம். ( நம்நாடு - 05-02-2010)
உலகில் நானறிந்த வரையில் நம் நாட்டு மக்களிடம் இந்துக்கள் என்பவர்களிடம் தயக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100-க்கு 90 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன?
நமக்கு கடவுள் இல்லையா? நாம் கடவுள் பக்தி இல்லாதவர்களா? நாம் மதம் அற்றவர்களா? நமக்குக் கடவுள்பயம் இல்லையா? கடவுள் நெறி இல்லையா? நன்மை செய்தால் நற்பயன் கிடைக்கும், தீமை செய்தால் தீய பயன் கிடைக்கும் என்கின்ற-தான எச்சரிக்கை சாதனங்கள் இல்லையா? நம்மில் பெரியவர்கள் தெய்வீகத் தன்மை கொண்ட மக்கள் என்பவர்கள் ஏற்பட்டு நமக்கு அறிவுரை கூறியவர்கள், கூறுப-வர்கள், கூறும்படியான நீதி நூல்கள் இல்லையா? நமக்கு நற்கதி அளிக்கும்-படியான கோயில்கள் இல்லையா? நமக்கு குருமார்கள் - மடாதிபதிகள் இல்லையா? இவையும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும்போது நமக்கு, நம் மக்களுக்கு - ஏன் ஒழுக்கம், நாணயம், இன-உணர்ச்சி, பொதுநல உணர்ச்சி, யோக்கியத் தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை? இப்படிப் பட்ட நிலை நமக்கு ஏற்படக் காரணம் என்ன? என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனக்குப் பல ஆண்டுகளாகவே இந்தக் கவலை உண்டு என்பதோடு, எனது தொண்-டில் இதை - அதாவது மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தனம், இன உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதை - முக்கிய லட்சிய-மாகக் கொண்டு தொண்டாற்றி வந்திருக்-கிறேன். அதை முதன்மையாகக் கொண்டு பிரச்சாரமும் செய்து வருகிறேன்.
எனது இத்தனை ஆண்டு வாழ்க்கையில் - 80 ஆண்டு உலக அனுபவத்தில் - நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தன்மைகள் குறைந்துகொண்டே வந்திருப்பதுடன், இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனித சமுதாயமானது சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்து?
இது பற்றி நான் மிகவும் கவலையடை-கிறேன். இவ்விஷயங்களில் இன்றைய நிலை மாறுமா என்பதில் நான் மிகவும் கவலைப்-படுகிறேன். மேற்சொன்னபடி எனது பல நாள் 30_-40 ஆண்டுகள்- இதற்காகவே நான் செய்து கொண்டு வந்த தொண்டின் காரணமாய் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தால், அடியோடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவேதான் மேலும் மேலும் கவலையோடு, இந்த நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கு என்ன பரிகாரம்? என்பதில் நான் மிகவும் சிந்திக்க முயற்சித்து, சதா சிந்திக்கிற வண்ணமாகவே இருக்கிறேன்.
நமக்கு சுயராஜ்யம் வந்து என்ன பயன்? சுதந்திரம் - பூரண சுயேச்சை வந்து என்ன பயன்? நம்மை நாமே ஆண்டுகொள்வதில் (ஜனநாயகத்தில்) என்ன பயன்? இந்த நிலை-யில் வாழும் மக்களுக்கு அந்நிய ஆட்சி ஏற்படுவதால் தீமை என்ன? என்றெல்லாம் என் மனம் சிந்தனையில் - கவலையில் மூழ்கிக் கிடக்கின்றது. ஏனெனில் இந்த நாட்டில், பொது வாழ்வில் எல்லா மக்களை-யும் பொறுத்த பொதுத் தொண்டில் - சிறிதும் சுய நலமில்லாமல் - எனக்குள்ள சகலத்-தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல், உண்மை-யாகவே ஒரு தொண்டன் - தொண்டனாகவே வாழ்பவன், வாழ வேண்டியவன் என்று கருதிக் கொண்டு, உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாருமில்லையென்-னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் என்று கருதிக் கொண்டு தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை -அதாவது நம் மக்களில் யோக்கியமானவன் நாணயமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக்கூடக் காண-முடியவில்லையே? இருப்பதாகக் கருதக்கூட முடியவில்லையே? - என்பனவற்றைக் கருதக் கூடியவனாக, கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகிறேன்.
இந்த நீண்ட நாள் கவலையில் - சிந்தனையின் பயனாக இதற்கு- அதாவது இந்த நாட்டில் இன்று இந்தக் காலத்திலும் ஒரு யோக்கியன், நாணயமானவன், ஒழுக்க-மானவன், யோக்கியப் பொறுப்புக்கு ஆளான-வன் எந்தத் தரத்திலும் எவனும் இல்லாமல் போனதற்குக் காரணம் : நமது நாட்டிலுள்ள சூழ்நிலை, சுற்றுச்சார்பு, நமது கடவுள்கள், நமது நீதிநெறி, சாத்திரங்கள், தர்மங்கள் இவைபற்றிய புராணங்கள், இதிகாசங்கள், பிரசாரங்கள், பெரியவர்கள், மகான்கள், மகாத்மாக்கள், இன்று இருந்துவரும் அரசாங்க முறை, அரசியலில் ஈடுபடும் மக்கள் தன்மை, அரசியலில் ஒழுக்கம், மத ஒழுக்கம், சமுதாய அமைப்பு முதலிவைகள்-தாம் என்கிற முடிவுக்கு வரவேண்டிய-வனாகி விட்டேன். அது மாத்திரமல்லாமல், மேற்கண்ட காரண காரியங்களில் நல்ல அளவுக்கு மாறுதல் ஏற்படாதவரை - மாறுதல் செய்யப்படாதவரை - நமக்கு மேற்கண்ட தீய குணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்பட-முடியாது என்துடன், ஏற்படுத்த எவராலும் ஆகாது என்கிற முடிவுக்கு வரவேண்டிய-னாகி விட்டேன்.
நமது கடவுள்களில் ஒன்று கூட ஒழுக்க-மாய், யோக்கியமாய், நாணயமாய், யோக்கியப் பொறுப்புடன் இருந்ததாகக் கடவுள் சம்பந்தப்-பட்ட எந்த ஆதாரங்களிலுமே காண முடிய-வில்லை. அது மாத்திரமல்லாமல், இன்றுள்ள மக்களில் எந்த இழி மக்களிடமிருந்தும் எப்படிப்பட்ட ஒழுக்கம் ஈனம், யோக்கிய ஈனம், நாணயமான காரியங்கள் எதுவும் இன்றுள்ள நம் கடவுள்கள் எதனிடமும் இல்லை என்று சொல்ல முடியாத நிலைமை-யில்தானே நம் கடவுள்கள் இருந்து வருகின்றன! ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, யோக்கியக்கேடு இல்லாத நம் பதினாயிரக்-கணக்கான கடவுள்கள், அவர்களின் பெண்டு பிள்ளைக் கடவுள்களில் ஒரு கடவுளையாவது காட்ட எந்த பக்தனாலாவது குருமார்களினா-லாவது கடவுள் கதைகளினாலாவது காட்ட-முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.
மற்றும் வேத சாஸ்திர - தர்ம புராண - இதிகாசங்கள் எதிலாவது இன்று நாம் கூறும், விரும்பும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, யோக்கியமாகக் கருதும், நடக்கும் தன்மை மிகுந்திருப்பதாக எந்தப் பக்தன், குரு, பண்டிதன், புலவன் ஒருவனாலாவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். அல்லது நமது பெரியோர்கள், முன்னோர்கள், தெய்வீகத்-தன்மை பெற்ற ரிஷிகள், மகான்கள், மகாத்-மாக்கள் என்பவர்களில் யாரிடமாவது மேற்கண்ட குணங்களோ அல்லது அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.
(விடுதலை தலையங்கம் 31-7-1942)
குரு – சீடன்
மடு தேவாலயப் பகுதியை மீட்டுத்தந்த சிங்கள அரசுக்கு யாழ்ப்பாண ஆயர் நன்றி!
சீடன் -
தேரோட்டம் தெய்வததுக்கு
போராட்டம் மக்களுக்கு!
கொண்டாட்டம் தெய்வத்துக்கு
திண்டாட்டம் மக்களுக்கு!
பால் பழம் தெய்வதுக்கு
பசி பிணி மக்களுக்கு
பட்டுப் பீதாம்பரம் தெய்வத்துக்கு
கட்டத் துணியில்லை மக்களுக்கு!
திருப்பலி மடுமாதாவுக்கு
ஒருநேர சோறில்லை மக்களுக்கு ....
குரு – கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு?
சீடன் - எமது மக்கள் ஆடு மாடு போல் முட்கம்பி வேலிக்குப் பின்னால் சிங்கள இராணுவத்தால் சிறைப்பிடித்து வைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள். அதே சமயம் நல்லூர்க் கந்தனுக்குத் தேர்த் திருவிழா மடுமாதாவுக்குத் திருப்பலி விழா!
குரு – தலைக்கு மேல் துன்பம் வரும் போது சராசரி மனிதன் மன ஆறுதலுக்கு தெய்வம், கோயில், குளம், அருச்சனை, தேர், தீர்த்தம் என்று ஓடுவது இயற்கையே!
சீடன் - இருக்கலாம். ஆனால் மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் போது கந்தனுக்குத் தேரோட்டமும் மடுமாதாவுக்குத் திருவிழாவும் அவசியம்தானா?
குரு - சமய அனுட்டானங்களை எப்படிக் கைவிட முடியும்?
குரு - மடு தேவாலயப் பகுதியை மீண்டும் பழைய பெருமையோடு மீட்டுத் தந்தமைக்காக அரசுக்கும் படையினருக்கும் நன்றி தெரிவிப்பதாக யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்தார்.மேலும் சகல இனமக்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து திருநாள் வைபவத்தில் கலந்து கொள்ளக் கூடியவிதமாகப் பாதைகள் செப்பனிடப்பட்டு சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்தமைக்காகவும் அரசுக்கு நன்றியும் தெரிவித்தார்.
சீடன் - இப்போதுதான் ஆயர்மார்கள் ஒப்பனை (அயமந - ரி) இல்லாமல் காட்சி தருகினம்! விபுலிகளுக்கு ஆதரவுமாதிரி நடித்துக் கொண்டு மக்களை வேட்டையாடி அவர்களது உயிரைக் குடித்த கொடிய சிங்கள இராணுவத்துடன் கத்தோலிக்க மத பீடம் கைகோர்த்து அய்ந்தாம் படைபோல் நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை வெளிப்பட்டு இருக்கிறது. மடு சிங்களவர்களுடைய நிலப்பரப்பு என்றும் அதனை வி.புலிகள் கைப்பற்றி வைத்திருந்தார்கள் என்றும் இப்போது அதனை வி.புலிகளிடம் இருந்து சிங்கள இராணுவம் மீட்டுத் தந்துள்ளதாக ஆயர் கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் சொல்கிறார். தமிழ்மக்களைக் கொன்றொழித்த ஒரு கசாப்புக் கடைக்காரனை ஆயர் பாராட்டுவது வியப்பாக இருக்கிறது! மகிந்தா இராபச்சேக்கு நன்றி சொல்வது அவர் நடத்தி முடித்த தமிழினப் படுகொலையை நியாயப்படுத்துவதற்கு ஒப்பானது.
குரு – கடந்த ஆண்டு வி.புலிகளை ஏமாற்றிவிட்டு மடுமாதாவை நோய்காவி வண்டியில் ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக பாதிரிமார் கடத்திச் சென்ற கதையை முன்னர் ஒருமுறை நீ சொன்னது நினைவுக்கு வருகிறது.
சீடன் - ஆமாம்! யேசுவின் சீடர்கள்தான் சாதாரண கள்ளக் கடத்தல்காரர்கள் போல் மடுமாதா சொரூபத்தைக் கடத்தினார்கள்!
குரு - இதற்கிடையில், இந்த நிகழ்வில் அதிகமான யாத்திரிகர்கள் கலந்து கொண்ட போதும் வன்னி மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து திருவிழாவுக்கு வந்த தமிழர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததாக கொழும்பு பேராயர் ரஞ்சித் மல்கம் சொன்னாராம்!
சீடன் - மானரோச முள்ள தமிழ்க் கத்தோலிக்கர்கள் விழாவைப் புறக்கணித்து விட்டார்கள். பேராயர் ரஞ்சித் மல்கம் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். ஆயுதங்களை நம்பிய தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினரால் தவறாக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியால் இந்த நாடு அறிவற்ற விதத்தில் குருதி சிந்த நேரிட்டது எனக் குற்றம் சாட்டினார். ஆண்டாண்டு காலமாக தமிழ்மக்கள் மீது சிங்கள ஆட்சியாளர் காட்டிய பாகுபாடு, அவர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனக் கலவரங்கள், அடக்குமுறை போன்றவையே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது என்ற உண்மையை பேராயர் ஏனைய சிங்கள – பவுத்த பேரினவாதிகள் போலவே வசதியாக மறந்துவிட்டார்.
குரு - மடுமாதாவை விட மக்களை நேசிக்கும் குருமாரும் இருக்கிறார்கள். மன்னார் மறை மாவட்டத்தைச் சார்ந்த 10 குருமார் மடுமாதா திருவிழாவைப் புறக்கணித்து விட்டார்களாமே?
சீடன் - ஆமாம், மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 கத்தோலிக்க குருமார்கள் மடுத் திருவிழாவை புறக்கணித்தனர் என அருட்தந்தை விக்டர் சூசை பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் மதகுருமார்களுக்கும் தமது ஆதரவைத் தெரிவிப்பதற்காகவே திருவிழாவை புறக்கணித்தார்கள் என அவர் கூறினார். முகாம்களில் 5 மதகுருமாரும் 3 இளம் பெண் துறவிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் செய்த குற்றம் கடைசி வரை குண்டுகள் மழைபோல் பொழிந்தபோதும் உயிரைத் துச்சமாக மதி;த்து மக்களோடு மக்களாகக் களத்தில நின்றதுதான்!
குரு - மன்னார் மறைமாவட்ட ஆயர் யோசேப்பு இராயப்பும் திருவிழாவில் கலந்து கொள்ளவில்லையாமே?
சீடன் - ஆமாம். உடல் நலக்கேடு காரணமாகத்தான் அவர் திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்று மேலுக்குச் சொல்லப்பட்டாலும் அவர் வேண்டும் என்றே திருவிழாவைப் புறக்கணித்து விட்டதாகச் சொல்கிறார்கள்.
குரு – எந்தத் தமிழ் ஆயரும் பேராயராக நியமிக்கப்படுவதில்லை. என்ன காரணம்?
சீடன் - தமிழ் ஆயர்கள் பேராயர்களாகத் தெரிவு செய்யத் தகுதியிருந்தும் அவர்களைப் பேராயராக நியமிக்காமல் சிங்கள ஆயரையே ஆயர் மாநாடு பேராயராக உரோமுக்கு பரிந்துரை செய்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண ஆயர்களாக இருந்த டீழதெநயn மற்றும் ஊழரனநசவ இருவரும் கொழும்பு பேராயராக பதவி உயர்வு பெற்றார்கள். 1948 க்குப் பின்னர் சிங்களவர் ஆட்சியில் ஒரு தமிழரும் அந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடியாது போய்விட்டது.
குரு – கத்தோலிக்க தேவாலயம் சிங்களம் - தமிழ் எனப் பிரிந்து நிற்கிறது என்று சொல்?
சீடன் - ஆமாம் குருவே! இன மோதல் மதத்தையும் விட்டபாடில்லை!
குரு – சீடன்
நாட்டைக் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள்!
சீடன் - வெள்ளைக்காரர்கள் என்றால் நாணயமானவர்கள் என எங்களில் பலர் நினைக்கிறார்கள். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள், களவெடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். தமிழர்கள் அவர்களைப் பூலோக தேவர்களாக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
குரு – பின்னே இருக்காதா? நானூறு ஆண்டுகளுக்கு மேலாக எங்களைக் கட்டி ஆண்டவர்களாயிற்றே? எமது அடிமைப் புத்தி இலேசில் போய்விடுமா என்ன?
சீடன் - ஆனால் அந்த நம்பிக்கையில் இப்போது இடி விழுந்துள்ளது! சாமானியர்கள் அல்ல, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விதிகளை மீறியும் பொய் சொல்லியும் பல ஆயிரம் பவுண்களை கையாடியுள்ளார்கள்!
குரு – நம்பமுடியவில்லையே?
சீடன் - Julie Kirkbride என்ற நா.உ. வரியிறுப்பாளர்களது பணத்தில் 50,000 பவுணை தனது வீட்டைப் பெருப்பிக்கப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். அந்த வீட்டில் தனது தம்பியாரை குடிக்கூலி இல்லாமல் குடியமர்த்தினாராம்.
குரு – பருவாயில்லையே?
சீடன் - Nicholas மற்றும் Ann Winterton என்ற இணையர்கள் தங்கள் பிள்ளைகள் சார்பாக இலண்டனில் அறக்கட்டளை வைத்திருந்த மாடிவீட்டுக்கு 80,000 பவுண்கள் குடிக் கூலியாகக் கொடுத்துள்ளார்கள். Anthony Steen Will என்பவர் தனது ஊர்ப்புற வீட்டைப் பராமரிக்க திணைக்களப் பணியாளர்களது உதவியைப் பெற்றிருக்கிறார். Margaret Moran என்ற நா.உ. தனக்குச் சொந்தமான வீட்டுக்குக் காய்ந்த பசளை இட 22,500 பவுணைப் பெற்றுள்ளார். ஏற்கனவே இலண்டன் மற்றும் லூற்றனில் உள்ள வீடுகளுக்கும் அதே பாணியில் பணம் பெற்றுள்ளார்.
குரு - இதற்கெல்லாம் யார் பொறுப்பு? யார் தலையும் உருளவில்லையா?
சீடன் - நாடாளுமன்ற அவைத்தலைவர் Michael Martin தான் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார். அவர் இந்தக் கையாடல்களை ஊக்கிவித்ததாகத் தெரிகிறது. முதலில் பதவி விலக மறுத்த அவர் பின் தனது பதவியை உதறிவிட்டார். நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு அவைத்தலைவர் தனது பதவிக் காலம் முடியுமுன்னர் பதவியை விட்டு விலகியது இதுவே முதல் தடவையாம்.
குரு - இவ்வளவுதானா? அல்லது இன்னும் இருக்கிறதா?
சீடன் - இன்னும் இருக்கிறது. இந்த ஊழலை The Daily Telegraph என்ற செய்தித்தாள்தான் அம்பலப்படுத்தியது. Ben Chapman என்ற நா.உ. ஏற்கனவே கட்டிமுடித்த ஈட்டு வட்டியைக் கட்டவில்லை என்று சொல்லி 15,000 பவுணை ஏப்பம் இட்டுள்ளார். இதே பாணியில் Elliot Morley என்பவர் தனது வீட்டு ஈட்டுவட்டியைக் ஏற்கனவே கட்டிவிட்டார். ஆனால் ஈட்டுவட்டியைக் கட்டவில்லை என்று கூறி 16,000 பவுணை கையாடல் செய்துள்ளார். இன்னொரு நா.உ. Douglas Hogg தனது வீட்டைச் சுற்றி இருந்த வாய்க்காலைத் திருத்த 2,000 பவுண் கேட்டுப் பெற்றிருக்கிறார். Douglas Hogg என்ற நா.உ. தனது வீட்டுத் தடாகத்தில் அழகுக்காக வைக்க ஒரு வாத்து வீட்டை வாங்குவதற்கு 1,645 பவுண் எடுத்துள்ளார். இப்படியே ஊழல் செய்த நா.உ. களது பட்டியல் அனுமார் வால் போல் நீண்டு கொண்டு போகிறது.
குரு – அமைச்சர்கள் யாரும் இந்த ஊழலில் அகப்படவில்லையா?
சீடன் - ஏன் இல்லை? ஷாகித் மாலிக் என்ற நீதி அமைச்சர் சந்தைவிலையைவிட குறைந்த குடிக்கூலிக்கு ஒரு வீட்டை எடுத்திருந்தார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதை அடுத்து அவர் பதவி விலகிவிட்டார்.
குரு - இவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்?
சீடன் - அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட மாட்டோம் எனச் சிலர் அறிவித்துள்ளார்கள். சிலர் கையாடிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சம்மதித்துள்ளார்கள்.
குரு – என்ன சொன்னாலும் கனடிய நா.உ. கள் நாணயமானவர்கள் என நினைக்கிறேன்.
சீடன் - அப்படி முற்றாகச் சொல்லிவிட முடியாது. முன்னாள் பிரதமர் மல்றோனி ஒரு ஜெர்மன் நாட்டு வணிகரிடம் 250,000 டொலர்களை காசாகப் பெற்றுள்ளார். வணிகரின் வணிக நலன்களைக் கவனிக்கவே அந்தப் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை வருவாய்த் திணைக்களத்துக்கு அவர் காட்டவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து தாமாகவே முன்வந்து அதனை வெளியிட்டு அந்தத் தொகையில் பாதிக்கு வரிகட்டித் தப்பித்துக் கொண்டார்.
குரு – எப்படி இது வெளியில் வந்தது?
சீடன் - பணம் கொடுத்த வணிகரே போட்டு உடைத்துவிட்டார்.
குரு – eHealth முகவர் நிலையத்திலும் ஏதோ தில்லு முல்லு நடந்திருகிறதாமே?
சீடன் - ஆமாம். ஒன்ரோறியோ மகாண அரசு முன்னர் இருந்த Smart Systems for Health Agency (SSHA) யைக் கலைத்துவிட்டு eHealth யை உருவாக்கியது. அதற்கு Sarah Kramer என்பவரை நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO) தலைவராகவும் நாளொன்றுக்கு 2,700 டொலர் கணக்கில் பணிக்கு அமர்த்தியது.
குரு – ஒரு நாளைக்கு 2,700 டொலரா?
சீடன் - ஆமாம். அவர் பதவிக்கு வந்த முதல் நான்கு மாதங்களில் 5 மில்லியன் பெறுமதியான உடன்படிக்கைகளை கேள்விக்கு (tender) விடாமலேயே தனக்குத் தெரிந்தவர்களுக்குக் கொடுத்துத் தள்ளிவிட்டார். ஓரே நாளில் 1,915,000 பெறுமதியான கேள்விகளை 3 ஆலோசனை குழமங்களுக்குக் கொடுத்துவிட்டார். 64,000 டொலருக்கு மேலதிகமான உடன்படிக்கைகள் கேள்விக்கு விட வேண்டும் என்பது விதி. தனக்கும் ஏதாவது எடுக்க வேண்டாமா? மேலதிகப் படியாக (Bonus) 114,000 டொலர்களை எடுத்துப் போட்டார்! அத்தேர்டு நில்லாமல் தனக்குத்தானே ஆலோசனை வழங்கியதற்காகப் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டார்!
குரு – கிணற்றுத் தவளையைப் பார்த்து தண்ணீர் குடிக்காதே என்று சொல்ல முடியுமா?
சீடன் - ஒரு ஆலோசகரது 72 மணித்தியால வேலைக்கு 30,000 டொலர்கள் கொடுப்பனவு செய்யப்பட்டது! இன்னொருவர் மாதம் 48,000 டொலர் பெற்றுக் கொண்டார். ரிம் கோட்டனில் கோப்பி குடித்தது, நொருக்கல் சாப்பாடு போன்றவற்றுக்குச் செலவான தொகையையும் மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டார்!
குரு - Sarah Kramer விட்டு வைத்திருக்க மாட்டார்களே?
சீடன் - ஆமாம் வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள். சும்மா இல்லை 316,670 டொலர்களை இழப்பீடு கொடுத்துத்தான் அவரை தூக்க முடிந்தது. இது மட்டுமல்ல அதற்கு முந்திய Smart Systems for Health Agency (SSHA) இயக்குநர் அவையைக் கலைத்தபோது 2 மில்லியன் அவர்களுக்கு இழப்பீடாகக் கொடுக்கப்பட்டது!
குரு – யானை இருந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்!
சீடன் - வரியிறுப்பாளர்கள் பணத்தை சிலர் எப்படிச் சூறையாடுகிறார்கள் என்பதற்கு இவை நல்ல எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளும் உயர்பதவி வகிப்பவர்களும் இவ்வாறு பொதுப் பணம் சூறையாடுவதை இட்டு வரியிறுப்பாளர்கள் கவலைப்படுவதில்லை. இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என இருந்து விடுகிறார்கள். இவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதும் இல்லை.
குரு – மக்கள் இடையறாது விழிப்பாக இருக்க வேண்டும். தேர்தலில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். அதுதான் நல்லாட்சிக்கு வழிவகுக்கும். இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் நாட்டையே முழுதாகக் கொள்ளை அடித்து விடுவார்கள்! (Muzzhakkam - June 12,2009)
குரு – சீடன்
முயல் வெல்லும். ஆமை வெல்லும்.
ஆனால் முயலாமை வெல்லாது!
குரு – அடிக்கடி காணாமல் போய் விடுகிறாய். என்ன காரணம்?
சீடன் - நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எழுதித் தள்ளினால் மட்டும் போதுமா?
எழுதுவதைச் செய்து காட்ட வேண்டாமா? அதுதான் வெள்ளைமாளிகைக்கு முன்னால் கடந்து
இரண்டு கிழமைக்கு மேலாக நடந்து வரும் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் கலந்து
கொண்டேன். உரக்க முழக்கம் இட்டோம். ஒரு மருத்துவர் தீவிரமாகக் கலந்து கொண்டு
முழக்கம் இட்டார். நாங்கள் முழக்கமிடுவது ஆட்சித்தலைவர் ஒபாமாவின் காதுக்கு
சரியாகக் கேட்கவில்லையாம் என்று சொன்னார்கள். “ஒபாமா என்ற சொல் மட்டும்
கேட்கிறது. மிச்சம் கேட்கவில்லை. சொல்வதை ஆறுதலையாகச் சொல்ல வேண்டும் என
ஒபாமா விரும்புகிறார்” என்று வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர் வந்து சொன்னார்.
அதுமட்டுமல்ல உங்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது என்று கூட வெள்ளைமாளிகை
அதிகாரிகள் நாங்கள் நின்ற இடத்துக்கு வந்து சொன்னார்கள்.
குரு – என்ன நல்ல செய்தி?
சீடன் - அதை அவர்கள் சொல்லவில்லை. அடுத்த நாள் வெளிவந்த
USA Today என்ற நாளேட்டில் இராசாங்க
செயலாளர் கிலாரி கிளின்டன் தொலைபேசியில் இராசபச்சாவோடு பேசியதாகச் செய்தி
போடப்பட்டிருந்தது,
குரு - இப்படி வெள்ளைமாளிகை, அமெரிக்க துணைத் தூதுவராலயம் போன்ற வற்றுக்கு
முன்னால் நின்று முழக்கம் இடுவதால் ஏதாவது பயன் இருக்கிறதா?
சீடன் - குருவே! எங்களது சிக்கல்களை அவிழ்ப்பதற்கு யாரிடமும் மந்திரக் கோல்
இல்லை. எதையெதை செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்ய வேண்டும். செய்த உடனேயே
பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.
குரு – கடிதம், தொலைபேசி, தொலைப்படி, மின்னஞ்சல், ஆர்ப்பாட்ட ஊர்வலம்,
மனிதச்சங்கிலி இவற்றால் ஏதாவது பயன் உண்டா?
சீடன் - ஏதேது விட மாட்டீர்கள் போலிருக்கிறதே? கோயிலுக்குப் போய் கும்பிட்டு
அருச்சனை செய்தால் பக்தர்களுக்கு ஒரு மனநிம்மதி ஏற்படுகிறது. மற்றப்படி
அம்பாள் பாலிக்கும் அருளை மடியிலா கட்டிக் கொண்டா வீட்டுக்குப் போகிறார்கள்?
அது போலத்தான் இவையும்.
குரு – முடியாது என்று ஒன்றும் இல்லை. முயற்சி திருவினையாக்கும்.
சீடன் - சரியாகச் சொன்னீர்கள். ஒருவன் தன்னை இஸ்லாமியன் என அழைக்க
விரும்பினால் அவன் அய்ந்து அடிப்படை தூண்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில்
ஒன்று ஈகை. தனது வருமானத்தில் 2 ½ விழுக்காட்டை வறியவர்களுக்குக் கொடுத்து
விட வேண்டும்.
குரு – அது போல?
சீடன் - ஒவ்வொரு தமிழனும் தனது வருமானத்தில் குறைந்தது 2 ½ விழுக்காட்டை
நாட்டின் விடுதலைக்குக் கொடுத்து விட வேண்டும். நாடு விடுதலை அடையும் மட்டும்
கோயிலுக்குக் கொடுப்பதை நிற்பாட்ட வேண்டும். முற்றாக முடியாவிட்டால்
கொடுப்பதைக் குறைத்துக் கொடுக்க வேண்டும்.
குரு – நல்ல யோசனைதான். ஆனால் எமது மக்கள் கோயிலுக்குப் போய் அர்ச்சனை
செய்யாவிட்டால் அபிசேகம் செய்யாவிட்டால் சாமி கோபித்துக் கொள்ளும் எனப்
பயப்படுகிறார்கள்.
சீடன் - அப்படியில்லை. மக்கள் சேவைதான் மகேசன் சேவை. எனக்கு கடவுள் கனவில்
வந்து சொன்னார் ......................
குரு – என்ன சொன்னார்?
சீடன் - எனக்கேதுக்கப்பா பாலும் பழமும் வடையும் முறுக்கும் புக்கையும்
மோதகமும். என்னைக் குளிப்பாட்டும் பாலை வன்னியில் பசியால் வாடும்
குழந்தைகளுக்குக் கொடு. அது எனக்குத் தந்தது மாதிரி இருக்கும் எனத் திருவாய்
மலர்ந்தார்.
குரு – எனக்கும் அப்படித்தான் சொன்னார்!
சீடன் - இப்போ பொருளுக்கு வருகிறேன். இந்த உலகில் எல்லாம் வல்ல பொருள் பொருள்
ஒன்றுதான். பொருளை வைத்துக் கொண்டு எதையும் செய்யலாம். புலம் பெயர் தமிழர்கள்
10 இலக்கம் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் நால்வர் என்று வைத்துக்
கொண்டால் 2.5 இலக்கம் குடும்பங்கள் இருக்கின்றன. தேச விடுதலைக்கு ஒரு
குடும்பம் ஆயிரம் டொலர் ஆண்டொன்றுக்குக் கொடுத்தால் 25 கோடி டொலர்கள் தேறும்.
அதை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், தரகர்கள் என
எல்லோரையும் விலை பேசி வாங்கிவிடலாம்!
குரு – சரி என் பங்கைத் தந்து விடுகிறேன். வேறு என்ன செய்யலாம்?
சீடன் - வன்னியில் முகாம்களில் முடக்கப்பட்டுள்ள எங்களது உறவுகளது
மறுவாழ்வுக்கும் மீள்குடியிருப்புக்கும்; உதவலாம். அவர்களுக்கு உணவு, மருந்து
கொடுத்து உதவலாம். தமிழர்களது தன்னாட்சி உரிமையை வற்புறுத்தி உலகளாவிய அளவில்
பரப்புரை செய்யலாம். இராசபக்சே உடன்பிறப்புக்களை போர்க்குற்றம் சாட்டி நீதி
மன்றக் கூட்டில் ஏற்றலாம். சிறிலங்காவிற்கு பன்னாட்டு நிதியம் கொடுக்க
இருக்கும் 1.9 பில்லியன் டொலர்களைத் தடுக்க தீவிரமாகப் பரப்புரை செய்யலாம்.
சிறிலங்கா உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் முற்றாகப் புறக்கணிக்கலாம்.
இப்படி எவ்வளவோ செய்யலாம்.
குரு – நல்ல யோசனைகள். வேறு ஏதாவது யோசனைகள் உண்டா?
சீடன் - உலகளாவிய புலம்பெயர் தமிழர்களது அமைப்புக்களை ஒரு குடையின் கீழ்
கொண்டு வர வேண்டும். அதற்கு உலகத்தமிழர் பேரவை எனப் பெயரிடலாம். அந்தப் பேரவை Thamil Eelam Government in Exile என்ற ஒரு அமைப்பைத் தெரிவு செய்ய வேண்டும். இந்த
அமைப்பே முழுத் தமிழர்களின் சார்பில் பேசும் அதிகாரத்தைக் கொண்டிருக்க
வேண்டும்.
குரு – மெத்தச் சரி. முயல் வெல்லும். ஆமை வெல்லும். ஆனால் முயலாமை வெல்லாது!
முயன்றால் எல்லாம் முடியும்.
(Muzhakkam - May 29, 2009)
குரு – சீடன்
தேர்தலில் முதல் இடம்பிடித்துள்ள
தமிழீழச் சிக்கல்
குரு – தமிழகத்தில் மக்களவைக்கான தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே
இருக்கிறது. தேர்தலில் யார் வெல்லப் போகிறார்கள்?
சீடன் - இது என்ன கேள்வி குருவே! 40 – 40 துமா அல்லது 40 - 35
தா என்பதுதான் இன்றைய சிக்கல் என்கிறார்கள். நெடுமாறன் 35 தொகுதிகளைப்
பிடிப்போம் என என்னிடம் பந்தயம் பிடிக்கிறார்.
குரு – நீ என்ன சொல்கிறாய்? சற்று விளக்கமாகச் சொல். நான் புத்திசாலியும்
அல்ல பகுத்தறிவுவாதியும் அல்ல நீ சொல்வதை எளிதில் புரிந்து கொள்ள?
சீடன் - ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணி. நாற்பதும் நமதே என்று
மருத்துவர் இராமதாஸ் வழக்கம் போல் சொல்கிறார். அந்த எண்ணிக்கை அவருக்கு
பாடமாகப் போய்விட்டது.
குரு – கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் மக்களுக்கு பல இலவசங்கள் அள்ளி
இறைக்கப்பட்டுள்ளன. தொலைக் காட்சி, உழவர்களுக்கு நிலம், ஒரு ரூபாவுக்கு ஒரு
கிலோ அரிசி இப்படியெல்லாம் பல நல்ல காரியங்களை அவர் செய்திருக்கிறார். மக்கள்
அவற்றை மறப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
சீடன் - நீங்கள் நினைக்காவிட்டால் போங்கள். தேர்தல் களத்தில் இந்த இலவசங்கள்
எல்லாம் பின் தள்ளப்பட்டுவிட்டன. விலைவாசி, ஊழல், மின்சார வெட்டு,
வேலையில்லாத் திண்டாட்டம் இவைதான் தேர்தல் சிக்கல்களாக இருக்கின்றன.
எல்லாவற்றையும் விட தமிழீழச் சிக்கல்தான் முதல் இடம் பிடித்துள்ளது. எனது
உதவியோடு மத்தியில் ஆட்சி அமைந்தால் இந்திரா காந்தி செய்ததைப் போல இந்திய
இராணுவத்தை இலங்கைக்க அனுப்பித் தமிழீழத்தை பிரித்துக் கொடுப்பேன் என்று மேடை
தோறும் இடியென முழங்கி வருகிறார்.
குரு – நேற்றுவரை ஈழம் என்ற சொல்லையே சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா. அவர் எப்படி
மனம் மாறினார்? தேர்தல் வெற்றிக்காக அவர் அள்ளி வீசும் வாக்குறுதி அது என்று
சிலர் சொல்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னர் வேதாளம் மீண்டும் முருக்க
மரத்தில் ஏறிவிடாதா?
சீடன் - சரி ஒரு வாதத்துக்கு அப்படி நடக்கம் என்றே வைத்துக் கொள்வோம்.
இப்போது அவர் சொல்வதை நம்புவதில் யாருக்கு என்ன இழப்பு? அவர் மனம் மாறினாலும்
மக்கள் மாற மாட்டார்கள். சட்டசபைக்கான தேர்தல் வரும் போது மக்கள்
ஜெயலலிதாவைக் கவனித்துக் கொள்வார்கள்.
குரு – கருணாநிதியும் இப்போது பல்லவியை மாற்றி வாசிக்கிறாரே? "இலங்கைத்
தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என
அறிக்கை விட்டிருக்கிறாரே? அதுவம் அப்போலோ மருத்துவமனையில் படுத்த படியே
அறிக்கை விட்டிருக்கிறார். அதை நம்பலாமா?
சீடன் - அந்த அறிக்கை தேர்தல் தோல்வி பயத்தில் விடப்பட்ட அறிக்கை. மக்கள்
கருணாநிதியை ஒரு செல்லாக் காசுக்கும் நம்ப மாட்டார்கள். தமிழீழம் தொடர்பாக
அவர் பல குத்துக்கரணங்களை ஏற்கனவே போட்டுவிட்டார். நாள்தோறும் 100 க்கும்
அதிகமான மக்கள் குண்டுமழைக்குப் பலியாகிறார்கள். உணவு, மருந்து இல்லாமல்
பட்டினி கிடந்து தவணமுறையில் செத்துக் கெண்டிருக்கிறார்கள். கருணாநிதி பாலும்
பழமும் ; பருகும் போது வன்னி மக்கள் மாட்டுக்கு வைக்கும் தவிட்டைக் குழைத்து
சாப்பிடுகிறார்கள். கருணாநிதி ஒவ்வொரு முறையும் தமிழீழ மக்களின் மனங்களை
நோகடிக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. புத்தர் போதிமரத்தின் கீழ் இருந்த
போது ஞானம் பெற்றார். கருணாநிதி அப்போலோ மருத்துவமனையில் இருக்கும் போது
ஞானம் பெற்றார். ஒரு நாள் பார்த்து தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்
என்பார். அடுத்த நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்க ஆதரவு இல்லை ஆதரவை
எப்போதோ திமுக விலக்கிக் கொண்டு விட்டது என்பார். ஒரு நாள் பிரபாகரன் எனது
நண்பர் என்பார். மறு நாள் அவர் ஒரு பயங்கரவாதி, சர்வாதிகாரி, சகோதர யுத்தம்
செய்தவர் என வசை பாடுவார். உண்மை என்னவென்றால் தமிழீழ விடுதலை பற்றி
திமுகவுக்கு சித்தாந்த அடிப்படையில் ஒரு கொள்கை இல்லை. பேராசிரியர் அன்பழகன்
ஒரு போடுதடி. சுயமாகச் சிந்திக்கத் தெரியாத பேராசிரியர். கருணாநிதி சொல்வதும்
எழுதுவதும்தான் திமுக வின் வேதமாக இருக்கிறது.
குரு - இயக்குநர் பாராதிராசாவின் தமிழீழ திரையுலக ஆதரவு இயக்கமும் களத்தில்
இறங்கி உள்ளதாமே?
சீடன் - ஆமாம். திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் காங்கிரசை குறிவைத்து தேர்தல்
வேலை செய்கிறது. பெரியார் திராவிடர் கழகமும் பெரிய அளவில் பரப்புரை
செய்கிறது. அவர்கள் விட்ட குறுவெட்டு காங்கிரஸ்காரர்களிடம் குலைப்பன்
காய்ச்சலை உண்டாக்கியுள்ளது. குறுவெட்டை தடை செய்யுமாறு காங்கிரஸ் ஒப்பாரி
வைக்கிறது.
குரு – அப்படி என்ன அந்தக் குறுவெட்டில் இருக்கிறது? ஆய்வாளர்கள் போலல்லாது
விளக்கமாகச் சொல்?
சீடன் - வன்னியில் நடந்தேறும் மனித அவலங்களை, இனப்படுகொலைகளை, மக்கள் விடும்
கண்ணீரை, சிந்தும் குருதியை அந்த குறுந்தட்டு படம் பிடித்துக் காட்டுகிறது.
அதனைப் பார்த்துவிட்டு மக்கள் முதலில் மூக்கில் விரல் வைத்து
வியப்பெய்துகிறார்கள். பின்னர் வியப்பு திமுக – காங்கிரஸ் வெறுப்பாக
மாறுகிறது.
குரு – திமுகவுக்கும் - காங்கிரசுக்கும் ஏதோ நெருடல் என்று சொல்கிறார்களே?
அது உண்மையா?
சீடன் - அது முக்காலும் உண்மை. இராகுல் காந்திதான் காய்ச்சலால் அப்போலோ
மருத்துவமனையில் கிடக்கும் முதல்வர் கருணாநிதிக்கு மேலும் வெப்பத்தைக்
கூட்டுவது போல் பேசி .இருக்கிறார்.
குரு – என்ன பேசினார்?
சீடன் - இரு நாட்களுக்கு முன் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் என
எதிர் தரப்பில் உள்ளவர்களை இராகுல் காந்தி புகழ்ந்து பேசினார். தேர்தலை
அடுத்து காங்கிரஸ் கட்சி அரசமைக்கும் போது இவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின்
கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் எனக் கூறினார். இராகுல் காந்தியின்
கருத்தை ஆதரிப்பது போல் நேற்று (புதன்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம்
பேசிய தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத்தும்
தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி
எடுக்கப்படும் என்றார்.
குரு - காங்கிரஸ் தலைவர்களின் இந்தப் பேச்சுக்கள் கருணாநிதிக்குக் கடும்
எரிச்சலை உண்டாக்கி இருக்குமே? கருணாநிதி தமிழினத் தலைவர் ஆயிற்றே?
சீடன் - தாலி திமுகவுடன் குடும்பம் அதிமுகவுடன் எனக் காங்கிரஸ் தலைவர்கள்
கூறுவதை கருணாநிதியால் செரிக்க முடியவில்லை. இருந்தும் காங்கிரஸ் வாலைப்
பிடிக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் தவிக்கிறார்.
குரு – தேர்தல் பரப்புரை எப்படி இருக்கிறது? ஜெயலலிதா பேசுவதோடு நில்லாமல்
எம்ஜிஆர் பாடிய பாடல்களைப் பாடி அசத்துகிறாராமே?
சீடன் - உண்மைதான். மக்களைப் பார்த்துக் கேள்விகள் கேட்டு மக்களிடம் இருந்தே
பதில்களை வரவழைக்கிறார். அதிமுக கூட்டணியில் மதிமுக செயலாளர் வைகோதான்
நட்சத்திரப் பேச்சாளர். மருத்துவர் இராமதாஸ், தா.பாண்டியன் போன்றவர்களுக்கும்
கூட்டம் அலைமோதுகிறது. இயக்குநர் சீமான் பிச்சு வாங்குகிறார். இத்தாலி
நாட்டுக்காரியை காங்கிரஸ்காரன் அன்னை சோனியா என்று அழைக்க முடியுமென்றால்
நான் என் தொப்புள்க்கொடி உறவை அண்ணன் என்று அழைக்கக் கூடாது என எதிர்க்
கேள்வி கேட்டு காங்கிரஸ்காரர்களை பின்னி எடுக்கிறார்.
குரு – அது சரி வெற்றி யாருக்கு?
சீடன் - முதலில் இந்த உரையாடலைக் கேளுங்கள்.
அழகிரி: தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அழகிரி வந்திருக்கேன். எனக்குப்
போடுவீங்களா?
அழகம்மா: (மூதாட்டி) நாங்க ஓட்டுப் போடுவம். நீங்க எப்ப நோட்டைப் போடுவீங்க.
அழகிரி: பெரியம்மா என்னைப் பாருங்க. நான் கலைஞர் மகன் அழகிரி... உங்கட்ட
ஓட்டுக் கேட்டு...
அழகம்மா: அய்யா நீ தானா அந்த ராசா... திருமங்கலத்தில போல இங்கையும்
கவனிங்கய்யா...
குரு - இது நல்ல பகிடி. வேறு ஏதாவது கைவசம் இருக்கிறதா?
சீடன் - இல்லாமல்? முக்கியமான தமிழக கட்சி அலுவலகம் ஒன்றில் நடந்த வேட்பாளர்
நேர்காணல் ஒன்றைக் கேளுங்கள்.
"வாங்க... உங்களைப் பத்தி எதுவும் சொல்லவேணாம். எங்களுக்குத் தெரியும்...
எவ்வளவு தேர்தலுக்கு செலவு செய்வீங்க.. அதை மட்டும் சொல்லுங்க!"
"5 கோடி வரை செய்யலாம். கேட்டால் பக்கத்துத் தொகுதியையும் கவனிக்கிறேன்.
"இரண்டு கோடி உடனே கட்ட முடியுமா?"
"இப்பவே கட்டிடறங்க..."
"சரி போங்க... உங்களுக்குத்தான் சீட்! " ( May 08,
2009)
குரு – சீடன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!
சீடன் - குருவே! உயிர் உடலில் இருக்கிறதா? மனிதன் இறக்கும் போது அது உடலை
விட்டுப் போகிறதா?
குரு – அப்படித்தான் மதவாதிகள் சொல்கிறார்கள். உயிர் உடலைவிட்டு நீங்கும் போது
இறப்பு நிகழ்கிறது?
சீடன் - உயிர் உடலை விட்டுப் பிரியும் போது இறப்பு ஏற்படுகிறதா? அல்லது இறப்பு
ஏற்பட்டபின்னர் உயிர் பிரிகிறதா?
குரு – என்னைக் குழப்பாதே! இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது என்று வைத்துக்
கொள்.
சீடன் - மெத்தச் சரி. உயிரும் ஆன்மாவும் ஒன்றா?
குரு – உயிரும் ஆன்மாவும் ஒன்றென்று சொல்கிறார்கள். இல்லை உயிர் வேறு ஆன்மா
வேறு என்கிறார்கள். உன் உயிர். என் உயிர். அவன் உயிர். அதன் உயிர். - இவை
ஒவ்வொன்றும் வௌ;வேறானவை. இவற்றையும், இவை அல்லாதவற்றையும் அரவணைத்துக்கொண்டு,
இவற்றுக்குள்ளும் இவற்றிற்கு வெளியேயும் இயங்குவதும் உறங்குவதும்தான் ஆன்மா.
நீரை வெய்யில் உறிஞ்சி மேகமாக மாற்றுகிறது. மேகம் பின்னர் குளிர்ந்து நீராக
மாறுகிறது. ஆன்மாவை மேகத்தோடும் உயிரை நீரோடும் ஒப்பிடலாம். அறிவியலாளர்களும்
ஆன்மா ஒரு தனித்த பொருள் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. என்னைக் கேட்டால் உயிர்
தமிழ்ச் சொல். ஆன்மா வட சொல் என்பேன்.
சீடன் - ஒருவர் இறந்த பின்னர் அவரது ஆன்மா தனது நல்வினை தீவினைக்கு ஏற்ப மறு
பிறப்பு எடுக்கிறது என்று சமயவாதிகள் சொல்கிறார்களே?
குரு – எல்லாச் சமயவாதிகளும் அப்படிச் சொல்லவில்லை. இந்து மதம் அப்படிச்
சொல்கிறது. இந்து மதம் ஆன்மா கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில்
சுவர்க்கம் அதாவது முக்தி பெறுகிறது எனக் கூறுகிறது. கிறித்துவம் - பாவம்,
மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய
அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி
நிலையை ‘நிர்வாண நிலை’ என்றழைக்கின்றன. அதுவும் இந்நிலை உயிருள்ளபோதே எய்யும்
நிலையாம். புத்தம் ஆன்மாவை மறுக்கிறது. ஆனால் மறுபிறப்பு உண்டு என்கிறது. அது
சரி ஏன் இந்த விசாரணை?
சீடன் - எனது கெழுதகை நண்பர் ஒருவர் சென்ற கிழமை தனது 79 ஆவது அகவையில்
உறங்கும் போது இயற்கை எய்திவிட்டார். அவர் ஒரு அறிவியல்வாதி. பகுத்தறிவுவாதி.
எந்தக் கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகாதவர். உடல் நலத்தில் மிகவும் கவனமாக
இருந்தார். ஒரு மனித உடலின் இயக்கம்தான் ‘உயிர்’ எனப்படுகிறது. இயக்கம்
நின்றால் உடல் இறந்துபடுகிறது. மின்கலத்தின் ஆற்றல் குறைந்தால் மணிப்பொறியின்
ஓட்டம் தடைபடுகிறது. மின்கலத்தின் ஆற்றல் நின்றுவிட்டால் மணிப்பொறி
நின்றுவிடுகிறது. ‘உயிருக்கு’ அவர் கொடுத்த விளக்கம் இது.
குரு – நீ சொல்வத சரிதான். ஆனால் மதவாதிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
சீடன் - மதவாதிகள் மனிதனது பிறப்பு இறப்பு எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று
சொல்லி பாரத்தை விதியின் மேல் போட்டுவிடுகிறார்கள். ஆனால் விதியை மதியால் வெல்ல
முடியும்!
குரு – எப்படி?
சீடன் - கடந்த கிழமை எனக்குத் தெரிந்த வேறு இரு நடுத்தர வயது நண்பர்கள் இறந்து
போனார்கள். ஆனால் அது அநியாயச் சாவு. ஒருவருக்கு நெஞ்சு நோ வந்திருக்கிறது.
பக்கத்தில் மருத்துவமனை இருந்ததால் தனது வண்டியைத் தானே ஓட்டிச்
சென்றிருக்கிறார். வண்டியை விட்ட இறங்கிய மறு வினாடி மயங்கி விழுந்து இறந்து
போனார். மற்றவருக்கும் அதே நெஞ்சு நோ. தன்னோடு வேலை செய்து கொண்டிருந்த சக
நண்பரிடம் சொல்லி அவரோடு வண்டியில் மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். ஆனால்
போகு முன் இறந்துவிட்டார்.
குரு - இதைத்தான் மதவாதிகள் விதி என்கிறார்கள்.
சீடன் - இல்லை குருவே! இவர்கள் இரண்டு பேரும் மதியைப் பயன்படுத்தி 911
தொலைபேசியை அழைத்து முதல் உதவியின் பின்னர் நோய்காவியில் மருத்துவமனைக்கு
விரைந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்கள். அதற்கான வாய்ப்பு நிறைய உண்டு.
குரு - நீ சொல்வது சரிதான்.
சீடன் - ஒரு மனிதன் தனது உடலைக் கோயில் போல் பாவனை செய்து பாராட்டினான் என்றால்
நீண்ட நாள் வாழலாம். ஒருவருக்கு குடிப் பழக்கம் இருந்தால் அவரது வாழ்நாளில் 4
ஆண்டுகளைக் கழிக்க வேண்டும். அத்தோடு புகைப்பழக்கமும் இருந்தால் மேலும் 4
ஆண்டுகளைக் கழிக்க வேண்டும்.
குரு – வள்ளுவர் நீண்ட காலம் வாழ்வதற்குரிய உத்திகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே சொல்லியிருக்கிறார். அவற்றை திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில்
காணலாம். உணவும் செயலும் ஒருவனுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் அவர்பால்
உண்டாகும். குறைந்தளவு நல்லது என்று அநிந்து உண்பவன் இடத்தில் இன்பம் நீங்காது
நிற்பது போல், அளவு மீறி உண்பவனிடத்த்pல் நோய் நீங்காது நிற்கும். இப்படிப்
பத்து குறளிலும் நீண்ட காலம் வாழ்வதற்குரிய அறிவுரைகளை வள்ளுவர்
எடுத்துரைக்கிறார்.
சீடன் - நன்றாகச் சொன்னீர்கள் குருவே! .ஒருவனது ஆயுளைப் பேரளவு அவன் உண்ணும்
உணவு. குடிக்கும் தண்ணீர். சுவாசிக்கும் காற்று, உறையும் உறையுள், செய்யும்
தொழில், உடற்பயிற்சி, மருத்தவ வசதிகள்தான் தீர்மானிக்கின்றன. இதனால்தான் ஒரு
இந்தியனது சராசரி அகவை 65 ஆக மட்டும் இருக்கும் போது கனடியனது சராசரி அகவை 80
ஆக இருக்கிறது! .
திருமூலரும் உடம்பு அழியின் உயிர் அழியும். அதனால் உடம்பை வளர்க்கும் உபாயம்
அறிந்து உடம்பை வளர்த்ததாகவும் அதன் மூலம் உயிர் வளர்த்ததாகவும்
பாடியிருக்கிறார்.
உடம்பான் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானம் தேறவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயமறிந்து
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!
எனவே விதி விதி என்று புலம்பாமல் மதியால் விதியை வெல்லுங்கள்! நீண்ட காலம்
வாழுங்கள்! நீண்ட ஆயுளுக்கும் மதநம்பிக்கைக்கும் தொடர்பில்லை. ஒருவனது இறப்பு
அவன் தலைவிதிப்படி நடக்கிறது என்பதில் உண்மை இல்லை.
குரு – எனக்குச் சொல்லி என்ன பயன்? மற்றவர்களுக்கும் இதனை எடுத்துச் சொல்!
(Muzhakkam -April 02, 2009 )
குரு – சீடன்
சோதிடத்தால் கெட்டேன்!
சீடன் - சோதிடத்தை முழுமையாக நம்பி அன்றாட வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும்
சோதிடத்தின் வழிகாட்டுதலோடு வாழ்வை அமைத்துக் கொணடவர்கள் நாட்டில் நிறையப்பேர்
உண்டு! அப்படி சோதிடத்தை முழுமையாக நம்பி வாழ்க்கையை அமைத்துக் கொண்ட
ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது!
குரு – சோதிடத்தை நம்பினால் ஏன் ஆயுள் தண்டனை கிடைக்க வேண்டும்?
சீடன் - அப்படிக் கேளுங்கள் குருவே! ஒருவனைக் கொலை செய்வதாயிருந்தாலும்
சோதிடனைக் கேட்டுவிட்டுச் செய்தால் தப்பலாம் என சில மூடர்கள் நினைக்கிறார்கள்.
அதில் அண்ணாச்சியும் ஒருவர்!
குரு – யார் அந்த அண்ணாச்சி? சொல்வதை அரசியல் ஆய்வாளர்கள் போல் சுற்றி
வளைக்காமல் நேரடியாகச் சொல்வதுதானே?
சீடன் - அண்ணாச்சி வேறு யாருமில்லை. சரவணபவன் உரிமையாளர். ஹோட்டல் துறையில்
சக்ரவர்த்தியாக வலம்வந்த இராசகோபால். மளிகைக் கடையில் இருந்து ஹோட்டல் சரவணபவன்
வரை உயர்ந்தவர். 1982 ஆம் ஆண்டு ; சென்னை கே.கே.நகரில் முதல் சரவணபவன் ஹோட்டல்.
அதன் பின் நூற்றுக் கணக்கில் தமிழ்நாட்டிலும் வெளியிலும் கிளைகளை தொடங்கிய
அண்ணாச்சியின் வாழ்க்கையில் அதன் பிறகு அவர் ஏறியது எல்லாமே
வெற்றிப்படிகள்தான்! கிட்டத்தட்ட ஆயிரம் கோடியை எட்டும் அண்ணாச்சியின் ஹோட்டல்
சாம்ராஜ்ஜியம்!
குரு – கடும் உழைப்பும் விடாமுயற்சியும் அவரை உயர்த்தியது என்று சொல்?
சீடன் - அண்ணாச்சி அப்படி நினைக்கவில்லை. எல்லாம் பழனி முருகன் அருள் என்று
நினைத்தார். அடுத்தது தனது ஆஸ்தான சோதிடர் காரணம் என நினைத்தார்?
குரு – முருகன் ஓ.கே. கலியுக வரதன் ஆயிற்றே! ஆனால் சோதிடருக்கும் ஹோட்டல்
வணிகத்துக்கும் என்ன தொடர்பு?
சீடன் - உங்களுக்கு உலக நடப்புத் தெரியாமல் இருக்கிறது குருவே! அண்ணாச்சி தனது
ஆஸ்தான சோதிடரது ஆலோசனையின்றி ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டார். நல்லநாள்,
கெட்டநாள் சாந்தி பரிகாரம், பூசை புனர்க்காரம் எல்லாம் சோதிடர் சொற்படியே
நடந்து கொள்வார்.
குரு – அது சரி. அண்ணாச்சிக்கு ஏன் ஆயுள் தண்டனை? ஆயுள் தண்டனை கொலை செய்த
குற்றம் அல்லது கொலை முயற்சி அல்லது கொலைக்கு உடந்தை இதில் எதற்காவது
ஒன்றுக்குக்குக் கொடுக்கும் தண்டனை ஆயிற்றே?
சீடன் - அண்ணாச்சிக்கு பேர், புகழ், பணம் எல்லாம் இருந்தது. அதனால் எதையும்
செய்யலாம் - கொலையும் செய்யலாம் - என்று தப்புக் கணக்குப் போட அவரை
வைத்துவிட்டது. சோதிடரும் “உங்களை எந்தக் கொம்பனும் அசைக்க முடியாது. உங்கள்
சாதகம் அப்படி ஒரு இராசியான சாதகம் என உசுப்பேற்றி விட்டான்!
குரு – விளக்கமாகச் சொல்?
சீடன் - அண்ணாச்சி முருக பக்தன் என்று சொன்னேன் அல்லவா? அங்கேதான் அண்ணாச்சி
பிழை விட்டுவிட்டார். முருகனைப் போலவே தெய்வானை இருக்க வள்ளியை மணந்து
கொண்டார். பின்னர் முருகனையும் மிஞ்சும் வண்ணம் தெய்வயானை, வள்ளி இருக்க
ஜீவசோதி என்ற பெண்ணுக்கும் வலை வீசினார்!
குரு – பலதார மணம் குற்றமில்லை. எங்கள் கடவுளர்களே ஒன்றுக்கு பல பெண்களை
மணந்துள்ளார்கள். இந்திரன் இந்திராணி இருக்க அகலியை அடையவில்லையா?
சீடன் - அவையெல்லாம் புராணக் கதைகள். அண்ணாச்சி விரும்பிய ஜீவசோதி ஏற்கனவே
மணமானவர். எனவே அண்ணாச்சியின் வலையில் அவர் அகப்பட மறுத்தார்.
குரு – கிட்டாதாயின் வெட்டென மற என அண்ணாச்சி நடந்திருக்க வேண்டியதுதானே?
சீடன் - புத்திசாலி என்றால் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பான். அண்ணாச்சி
வள்ளியை வளைத்த பட்டறிவை வைத்து தனது முயற்சியைக் கைவிட வில்லை. தனது
சாதகத்தையும் அந்தப் பெண்ணின்(ஜீவசோதி) சாதகத்தையும் சோதிடரிடம் கொடுத்துப்
பொருத்தம் பார்த்துள்ளார். கில்லாடி சோதிடனோ ‘இந்தப் பெண்ணை மட்டும் நீங்கள்
மணந்தால் உங்கள் கதையே வேறு. அவளது ராசிப் பலனால் உங்கள் வணிகம் ஒகோ என்று
நடக்கும் எனத் தூபம் போட்டான்.
குரு – அப்புறம்?
சீடன் - அப்புறம் என்ன? ஜீவசோதியினுடைய கணவன் பிரின்ஸ் சாந்தகுமாரை தீர்த்துக்
கட்டிவிட்டால் ஜீவசோதியை அடைவது சுலபம் என நினைத்து சில அடியாட்களை வைத்து
அவனைக் கொலை செய்து விட்டு ஒரு மலையடிவாரத்தில் சடலத்தைப் போட்டு எரித்து
விட்டார்கள்!
குரு – அப்புறம்?
சீடன் - தனது கணவன் எங்கே என்று கேட்ட ஜீவசோதியை அண்ணாச்சி தனது ஆஸ்தான
சோதிடரிடம் அனுப்பி வைத்தார். அவனோ “உனது கணவனுக்கு மனம் சரியில்லை. ஊர் ஊராக
அலைந்து கொண்டிருக்கிறான். திரும்பி வர இரண்டு ஆண்டுகள் செல்லும்” எனக் கூறி
அனுப்பிவிட்டான். ஆனால் அண்ணாச்சியின் பொல்லாத காலம் பாதி எரிந்த நிலையில்
கிடந்த சாந்தகுமாரை ஊர்மக்கள் கண்டு காவல்துறைக்குச் சொல்ல காவல்துறை
விசாரணையில் இறங்கியது. தன் ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்த இராமசாமியின் மகள்
ஜீவஜோதி மீது ஆசைப்பட்டு, அவருடைய கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைக் கொலை செய்தார்
என்ற குற்றச்சாட்டு சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் பதிவானது. தலைமறைவானார்
அண்ணாச்சி! உடனே, அவருடைய மறுபக்கத்தை செய்தித்தாள்கள் அலசத் தொடங்கின.
குரு – பின் என்ன நடந்தது,
சீடன் - காவல் துறை அண்ணாச்சியையும் அவரது அடியாட்களையும் கைது செய்து
நீதிமன்றத்தில் நிறுத்தி;யது. கீழ் நீதிமன்றம் விசாரணைக்குப் பின்னா 2004 ஆம்
ஆண்டு ; ஏப்ரல் 25 ஆம் தேதி பூந்தமல்லி நீதிமன்றத்தில் சாந்தகுமாரின் கொலை
வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் அண்ணாச்சிக்கு பத்து ஆண்டு சிறை
தண்டனையும் அய்ம்பத்தைந்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்லகுமார்
தீர்ப்பளித்திருந்தார்.
குரு – தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்துக் மேன்முறையீடு செய்திருப்பாரே?
சீடன் - செய்தார். அது ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற
கதையாக முடிந்து விட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா,
பானுமதி ஆகியோர் அளித்த தீர்ப்பில் இராசகோபாலோடு குற்றம் சாட்டப்பட்டிருந்த
டேனியல், காசி, உசேன், கார்மேகம், பட்டுராஜன் ஆகியோருக்கும் ஆயுள்தண்டனை
வழங்கித் தீர்ப்பளித்துள்ளனர்! இவர்களைத் தவிர மற்ற குற்றவாளிகளான
முருகானந்தம், சேது, தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு மூன்று வருட சிறை தண்டனை!
தீர்ப்பைத் தொடர்ந்து அண்ணாச்சி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யத் தீர்மானித்திருக்கிறது. அத்தோடு அண்ணாச்சியையும் உள்ளே தள்ளிவிட்டது.
குரு – பாவம் அண்ணாச்சி! முருகன் அவரைக் கைவிட்டு விட்டார் போல் தெரிகிறது.
சீடன் - எப்போதுமே சோதிடம், சாhதகம், நாடி பார்ப்பதில் அலாதி பிரியம்கொண்ட
அண்ணாச்சியிடம் அண்மையில் அறிமுகமான ஒரு சோதிடர், 'வெங்கடா சலபதிக்கு ஒரு
கோயில் கட்டி குடமுழுக்கு ; நடத்தினால்... சட்டச் சிக்கல்கள் தீர்ந்து
எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். உடனே, புன்னையடி
கிராமத்தில் பிரமாண்டமான பெருமாள் கோயில் கட்டத் தொடங்கினார். கூடவே, அந்தக்
கோயிலில் தன் சிலையையும் வைக்கத் திட்டமிட்டார். அதற்காக, ஸ்தபதிகளை அங்கே
அழைத்து, தன் மார்பளவு சிலையை வடித்தார். 'இந்தக் கோயிலைக் கட்டியவர்... இந்த
கிராமத்திலிருந்து கிளம்பி ஹோட்டல் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர்' என்ற
வாசகங்கள் சிலையின் அடிபாகத்தில் இடம்பெறச் செய்யவும் முடிவானது. கோயில்
வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், யூன் மாதம் குடமுழுக்குக்கு நாள்
குறித்திருந்தார். இந்நிலையில், அண்ணாச்சியை சந்தித்த இன்னொரு ஜோதிடர்
பெருமாளுக்குக் கோயில் கட்டுவது, குடமுழுக்குச் செய்வது எல்லாம் பொதுமக்களிடம்
பிச்சை எடுத்த பணத்தில்தான் நடைபெற வேண்டும். பெருமாளுக்கு எல்லாம் நானே
செய்வேன் என்ற தோரணையில் செய்தவர்கள் எல்லோரையும் துன்பங்கள்
சூழ்ந்திருக்கின்றன. குடமுழுக்குக்கு முன்பாக உங்களுக்குக் கெட்ட சேதி வந்து
சேரும்! என்று சொல்லியிருக்கிறார்.
அவர் வாக்கு பலிக்க... உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளன்று அதே சோதிடரை
வரவழைத்த அண்ணாச்சி, அடுத்த கட்டப் பரிகாரங்களைக் கேட்டுக்
குறிப்பெடுத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன!
குரு – அட பாபமே! (Muzhakkam - March 27,
2009)
குரு – சீடன்
வானுயரத் தமிழ்த் தேசியக் கொடிகள்
குரு – என்ன உனது முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி வழிகிறது? என்ன சங்கதி?
சீடன் - இப்போதுதான் கீழ்நகர் ரொறன்ரோவில் நடந்த உரிமைப் போர் - மனித சங்கிலிப்
பேரணியில் கலந்துவிட்டு வருகிறேன். மக்கள் வெள்ளத்தால் கீழ்நகர் ரொறன்ரோ திக்கு
முக்காடியது. சனவரியில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தின் போது ஏகக்
கட்டுப்பாடுகள். தேசியத் தலைவர் பிரபாகரனது பெயரைச் சொல்லக் கூடாது. தேசியக்
கொடி பிடிக்கக் கூடாது. தெருவில் பிச்சைக்காரர்கள் போல் நின்றுகொண்டு “ர்யசிநச
ர்நடி ருள” என்று சத்தம் போட வேண்டும்.... ஆனால் இந்தமுறை அப்படியில்லை.
பார்க்கும் திசையெல்லாம்; தலைவரின் படங்கள். நீக்கமறத் தேசியக் கொடிகள்.
செவிப்பறையைப் பிளக்கும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்ற முழக்கம். தமிழீழத்தை
ஏற்பிசைவு செய், ஸ்ரீலங்கா ஒரு பயங்கரவாத அரசு, இனப்படுகொலையைத் தடுத்து
நிறுத்து, இராசபக்சே ஒரு கொடுங்கோலன் என மக்கள் முழக்கம் இட்டார்கள்.
இராசபக்சேயின் உருவப் பொம்மையை பாடையில் வைத்து பறை மேளத்துடன் காவிச்
சென்றார்கள்.
குரு – தமிழ்த் தேசியக் கொடியைப் பிடித்தால் “எங்களுக்கு அசவுரியம்” “இது கலை
நிகழ்ச்சி. அதில் கொடிபிடிக்கக் கூடாது. முழக்கம் எழுப்பக் கூடாது” என்றெல்லாம்
சொல்லப்பட்டதே?
சீடன் - சொன்னார்கள் சுரக்காய்க்கு உப்பில்லை என்று! மக்கள் தெளிவாக
இருக்கிறார்கள். ‘தலைவர்’கள் என்று சொல்கிற சிலரிடம்தான் தெளிவில்லை!
குரு – விளக்கமாச் சொல்! சுற்றி வளைக்காதே?
சீடன் - இப்போது காவல்துறையே (RCMP)
சொல்லிவிட்டது. கொடி பிடிப்பது சட்ட முரண்பாடு அல்ல என்று. என்ன இருந்தாலும்
கனடா ஒரு மக்களாட்சி முறைமை நாடு. இந்த நாட்டில் சில அடிப்படை உரிமைகள்
யாப்பில் எழுதப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் தங்களை சின்ன இட்லர் என
நினைத்துக்கொண்டு மக்களது உரிமைகளில் கைவைக்க ஆசைப்படுவது உண்டு. ஆனால் அது
நீண்ட காலத்துக்கு நிலைக்காது. புஷ் மாமாவின் சட்டத்துக்கு மாறான கட்டளைகளை
ஆட்சித்தலைவர் ஒபாமா ஒவ்வொன்றாக மாற்றிவருகிறார். கனடிய யாப்பில் பேச்சுச்
சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் அடிப்படையானவை. எங்களது தேசியக் கொடி
எமது இனத்தின் குறியீடு. எமது வரலாற்றின் அடையாளம். எமது வேட்கையின் சின்னம்.
எமது உணர்வின் வெளிப்பாடு. 25,000 அதிகமான மாவீரர்கள் குருதி சிந்திக் காத்த
கொடி. மேப்பிள் இலைக் கொடிக்கு எவ்வளவு முக்கியமோ அந்தளவு முக்கியம்
புலிக்கொடிக்கும் உண்டு.
குரு – பின்னர் ஏன் கொடி பிடிக்க பின்னடித்தார்கள்? எங்கடை ஆட்களில்
சிலபேருக்கு இறக்கை கொடுத்தாலும் பறக்க மறுக்கிறார்கள் என்று சொல்?
சீடன் - ஆமாம் குருவே! உண்மையில் இந்தப் புலிக்கொடி வி.புலிகளது கொடியல்ல.
அப்படியே வைத்துக்கொண்டாலும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகளை நாம்தான்
முதலில் பிடித்தோம் என்றல்ல. ஹெஸ்புல்லா, ஹாமாஸ் கொடிகள் காசா மீது இஸ்ரேல்
படையெடுத்து பலஸ்தீனியர்களைக் கொன்று குவிப்பதை எதிர்த்து நடந்த
ஆர்ப்பட்டங்களில் பிடிக்கப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால் B'nai Brith என்ற யூத
அமைப்புத்தான் புலிக்கொடி பிடிப்பது பற்றி காவல்துறை விசாரணை செய்யும் போது
ஹெஸ்புல்லா, ஹாமாஸ் இயக்கக் கொடிகள் பற்றியும் விசாரணை செய்யக் கேட்டது.
யூதர்கள் தங்களது ‘பயங்கரவாதத்தை’ மறந்து விட்டார்கள். அடக்கப்பட்டவர்கள்
ஆட்சியைப் பிடித்ததும் அடக்குமுறையாளர்களாக மாறுகிறார்கள். தமிழர்களிடம்
போர்க்குணம் இல்லை. முட்டையை உடைக்காமல் பொரியல் செய்ய நினைக்கிறார்கள்.
இதற்குக் காரணம் மேற்குலக நாடுகளிடம் சரியாக 329 ஆண்டுகள் (கிபி 1619 – 1948)
அடிமைகளாக இருந்தோம். பின்னர் கடந்த 61 ஆண்டுகளாக சிங்களவனிடம் அடிமைகளாக
இருக்கிறோம். நல்லகாலமாக எமது தேசியத் தலைவரின் வருகைக்குப் பின் மாண்ட வீரம்
மீண்டும் துளிர்த்துள்ளது.
குரு – புலத்தில் தமிழீழ உரிமைப் போராட்டம் தியாகி தீலீபன் கனவை
மெய்ப்பித்திருக்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம்
மலரட்டும் என்று திலீபனின் ஆசை நிறைவேறிவருகிறது. அழுது கொண்டும் தொழுது
கொண்டும் இன்னும் வாழ்வதோ? அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆள்வதோ? என்ற முழக்கம்
உரக்கக் கேட்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாணவர்களிடம்.
சீடன் - முற்றிலும் உண்மை. இன்று போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் இருந்து விலகி இருந்தவர்களும் மதில்மேல் பூனையாக இருந்தவர்களும்
இன்று போராட்டத்தில் குதித்துள்ளார்கள். மனிதசங்கிலியில் நான் பார்த்த முகங்கள்
எல்லாம் புதிய முகங்கள்!
குரு – தேசத்தின் குரல் பாலசிங்கம் கூட மாவீரர் விழாவில் பேசும்போது. நாங்கள்
எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும். தேசியத்தலைவரின் கைகளை நாம் பலப்படுத்த
வேண்டும். இப்படியே எமது மக்கள் அழிந்து கொண்டு இருக்க முடியாது. மக்கள் பொங்கி
எழவேண்டும் என்று பேசியிருந்தார்.
சீடன் - ஆம் குருவே! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழீழம் என்ற விதை
மக்கள் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. இன்று அது மரமாக ஓங்கி வளர்ந்துள்ளது.
அதனை யாரும் எளிதில் வெட்டி எறிந்து விட முடியாது. யூதர்கள் 1,800 ஆண்டுகள்
நாடோடிகளாக நாடு விட்டு நாடு அலைந்து திரிந்தார்கள். ஆனால் தாய் நாட்டை
மறக்கவில்லை. இரண்டு யூதர்கள் சந்தித்துவிட்டுப் பிரியும் போது “அடுத்த முறை
ஜெரூசலத்தில” என்று சொல்லிப் பிரிவார்களாம். அவர்கள் கண்ட கனவு 1948 இல்
நனவாகியது. அது போலவே நாமும் சந்தித்துப் பிரியும் போது அடுத்த முறை
தமிழீழத்தில் என்று சொல்லிப் பிரிய வேண்டும்.
குரு – தமிழ்நாட்டிலும் கொந்தளிப்பாமே?
சீடன் - ஆம் குருவே! இதுவரை 11 தமிழ்நாட்டுத் தமிழர்கள் தீக்குளித்து வீரமரணம்
எய்தியுள்ளார்கள். மலேசியா இராசா (27) பிரித்தானியா குமாரதாசன் வருணகுலசிங்கம்
(26) ஆகியவர்களையும் சேர்த்தால் உயிர் நீத்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக
உயர்ந்துள்ளது. தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக்
கொள்ள வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டும் அவர்கள் கேட்பதாக இல்லை. 1965 இல்
இந்திக்கு எதிரான போராட்டத்தில் 7 பேர்தான் தீக்குளித்து சாவைத் தழுவினார்கள்.
அந்தப் போராட்டத்தை முதலாக வைத்துத்தான் திமுக 1967 இல் ஆட்சியைப் பிடித்தது.
குரு – அதே திமுக இப்போது தீக்குளித்தவர்களுக்கு இரங்கல் கூடத்
தெரிவிக்கவில்லையே?
சீடன் - அப்போதிருந்தது அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்.
இப்போது இருப்பது திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி தலைமையிலான கழகம்.
இரண்டுக்கும் வேறுபாடு உண்டு! முன்னது ஏழை, எளிய மக்களது கழகம். பின்னது
கோடீசுவரக் குடும்பத்தின் கழகம். அதில் அப்பா தலைவர். மகன் பொருளாளர், இன்னொரு
மகன் தென்மண்டல அமைப்புச் செயலாளர், மகள் நா.உறுப்பினர், பேரன்
நா.உறுப்பினர்..........
குரு – நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே (ஏப்ரில் 16) உண்டு.
கூட்டணி அமைப்பதில் தாமதமாமே?
சீடன் - ஆமாம். மருத்துவர் இராமதாசின் பாமகவும் நடிகர் விஜகாந்தின் தேமுதிகவும்
திமுக அணியா அல்லது அதிமுக அணியா இதில் எது என்பதுபற்றி முடிவெடுப்பதில்
குழப்பத்தில் உள்ளனர். இரண்டு கட்சியுமே கூடுதலான தொகுதிகள் ஒதுக்கப்பட
வேண்டும் என்று இரண்டு அணிகளிடமும் பேரம் பேசுகின்றன. அதனால் கூட்டணி அமைவதில்
தாமதம் ஏற்படுகிறது.
குரு – தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள்?
சீடன் - அது வாக்காளர்கள் கட்சி உணர்வோடு வாக்களிக்கப் போகிறார்களா? சாதி
அடிப்படையில் வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது தமிழ் உணர்வோடு வாக்களிக்கப்
போகிறார்களா? என்பதைப் பொறுத்தது. மதிமுக, பாமக, வி.சிறுத்தைகள், இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை நிச்சயம் மக்கள் ஆதரிப்பார்கள். அதே சமயம்
இந்திய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள். இவ்வளவுதான்
இப்போதைக்குச் சொல்லக் கூடிய எதிர்கூறல். (முழக்கம் -
மார்ச்சு 20, 2009)
குரு – சீடன்
தமிழ்நாடு காங்கிரசுக்கு வாக்குப் போடாதே!
சீடன் - குருவே! தமிழகம் கொதி நிலையில் உள்ளது. காங்கிரஸ்காரர்களின் அன்னை சோனியா காந்தி தமது தேர்தல் பரப்புரையைத் தமிழ்நாட்டில் தொடக்குவதற்கு சிறிபெரும்புத்தூர் வருவதாக இருந்தார். ஆனால் பாதுகாப்பைக் காரணம் காட்டி அவர் தனது வருகையை நிறுத்திவிட்டார்.
குரு – காங்கிரஸ் ஆளும் கட்சி. சோனியா காந்தி அந்தக் கட்சியின் தலைவி. அவருக்;கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லையா? அப்படி யார் சொன்னது?
சீடன் - உள்துறை அமைச்சுத்தான் அப்படிச் சொல்லிவிட்டது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் மாங்கொல்லையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் வி.புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்; எந்த இராணுவமும் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது, எப்படி இந்தியா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தாதோ, அவ்வாறே இன்னொரு நாட்டைப் பார்த்து போராளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்து என்று கூறு முடியாது. இதில் காங்கிரஸ் - திமுக – அதிமுக – ஒரே கருத்தோடு இருக்கின்றன எனக் கூறியிருந்தார்.
குரு - இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்தித் தனிநாடு கோரும் இயக்கங்களோடு இதே இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களோடு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த (2006-2007 ஆம் ஆண்டு) உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறுகியதே? ஆயுதங்களைக் கீழே போடாத இந்தப் போராளி இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னாள் உள்துறை செயலாளர் பத்மநாபய்யா என்ற அதிகாரிக்கு அதிகாரங்களை வழங்கி யிருந்தார்;களே?
சீடன் - குருவே! 1985 ஆம் ஆண்டில் பூடான் தலைநகரான திம்புவில் இலங்கை அரசோடு நடந்த பேச்சுவார்த்தையின் போது வி.புலிகள் உட்பட எந்தப் போராளிக் குழுக்களும் ஆயுதங்களைக் கீழெ போடுமாறு கேட்கப்படவில்லை. எச். டபிள்யூ ஜெயவர்த்தனா தலைமையில் இலங்கை அரசின் தூதுக் குழு போராளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதை எல்லாம் மக்கள் மறந்திருபபார்கள் என்று அமைச்சர் .சிதம்பரம் நினைக்கிறார் போலும்.
குரு – காங்கிரஸ் கட்சிக்கு வாக்குப் போடாதீர்கள் என்ற ஒரு இயக்கமே தமிழ்நாட்டில் நடக்கிறதாமே?
சீடன் - ஆமாம். எந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்ற இயக்கம் பட்டி தொட்டி எல்லாம் மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறது. பிரபாகரனைப் பிடித்துத் தரவேண்டும் என்று கூக்குரல் போடும் காங்கிரஸ் கட்சி மீது தமிழ்மக்களின் சீற்றம் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. சோனியா காந்தி தனது வருகையை நிறுத்தியதற்கு அதுவும் ஒரு காரணம். பல காங்கிரஸ் தலைவர்கள் தலைமறைவாகி விட்டார்கள்.
குரு – வோஷிங்டனில் நடந்த பேரணிக்கு நீ போகவில்லையா?
சீடன் - போகாமல் விடுவேனா? கொடி பிடிக்க வேண்டாம், மெல்லக் குரல் கொடுங்கள், நாங்கள் தருகிற முழக்கங்களை மட்டும் சொல்லுங்கள். அதையும் பராக் ஒபாமா காதுக்கு எட்டதவாறு சொல்லுங்கள் என பேரணி ஏற்பாட்டாளர்கள் சொன்னதை அங்கு திரண்டிருந்த அய்யாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சட்டை செய்யவில்லை. புலிக்கொடிகள் வானுயரப் பறந்தன! எங்கள் தலைவர் பிரபாகரன் என்ற முழக்கம் வானைப் பிளந்தன! ஒபாமா படம், கிலாரி கிளின்டன் படம் தாங்கிய அட்டைகளை மக்கள் பிடித்திருந்தார்கள். அவற்றில் -
President Obama! Free Tamil Eelam! Save Tamil People!
Madam Secretary Hillary Clinton! Tamil Tigers are Freedom Fighters! They are Not Terrorists!
Madam Secretary Hillary Clinton! Lift Ban on Tamil Tigers! Stop the War on Tamils!
என எழுதப்பட்டிருந்தது!
குரு - இங்கு புலிக்கொடி பிடிக்காதே! சுதந்திரம் வேண்டும் என்று கோட்காதே! புலிகள் மீதான தடையை நீக்கு என்று முழங்காதே! அவை காவல்துறைக்குப் பிடிக்காது, செய்தியாளர்கள் வெருளுவார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேடைக்கு வர மாட்டார்கள் என்று பயமுறுத்துகிறார்களாமே?
சீடன் - ஆமாம் அப்படிச் சொல்லி மக்களின் உணர்வுகளுக்கு அணை போட நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் தலைமையைவிட ஆயிரம் மடங்கு உணர்வோடு இருக்கிறார்கள். குறிப்பாக மாணவமணிகள் தீவிரமாக இருக்கிறார்கள். யோர்க் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் எல்லோர் கையிலும் புலிக் கொடி இருந்தது. ஆனால் கனடிய தமிழ் வானொலியில் செய்தி வாசித்தவர் யோர்க் பல்கலைக் கழக மாணவர்கள் வித்தியாசமனா முறையில் போராட்டம் நடத்தினார்கள் என்று மொட்டையாக முடித்து விட்டார். புலிக் கொடிகளை பிடித்திருந்தார்கள் என்று சொல்லப் பயம் என்றால் தமிழீழத் தேசியக் கொடிகளைப் பிடித்திருந்தார்கள் என்றாவது சொல்லியிருக்காலாம் அல்லவா? இங்கு மக்கள் வேறு புலிகள் வேறு என்று காட்டச் சிலர் முனைகிறார்கள். இனிமேல் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லாவிட்டால் மக்கள் அவர்களை வறுத்து எடுத்துவிடுவார்கள். தலைக்கு மேல் வெள்ளம் போனபின் சாண் ஏறினால் என்ன? முழம் ஏறினால் என்ன? தொடர்வண்டியின் என்ஜின் பெட்டிகளை இழுக்க வேண்டும் இல்லா விட்டால் மக்கள் வேறு என்ஜினைத் தேடவேண்டி வரும்!
குரு – கனடிய நாடாளுமன்றத்தில் 5 மணித்தியால அவசர விவாதம்
கடந்த 4 ஆம் திகதி நடந்ததாமே?
சீடன் - ஆமாம்! வன்னியில் நடந்த மனிதப் படுகொலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனச்சாட்சியைத் தொட்டதுதான் அந்த நீண்ட விவாதத்திற்கான காரணம். ஆனால் சிலர் தங்களது முயற்சியால்தான் அந்த அவசர விவாதம் நடந்ததாகச் சொல்கிறார்கள். எது எப்படி இருப்பினும் விவாதம் நடந்த மறுநாளே கனடிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கனன் இணைத் தலைமை நாடுகளது அறிக்கைக்கு ஒத்தூதுமாறு வி.புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சிங்கள அரசோடு பேச வேண்டும் என்றார்.
குரு – அப்படியா? ஆயுதம் கையில் இருந்த போது பேச மறுத்தவர்கள் ஆயுதத்தைக் கீழே போடடால் எதைப் பேசப் போகிறார்கள்?
சீடன் - நல்ல காலமாக சிறிலங்கா அரசே சிக்கலை அறுத்துவிட்டது.
வி.புலிகள் ஆயுதங்களைக் கழே போட்டாலும் அவர்களோடு பேச மாட்டோம் எனப் பிரதமர்
இரட்ணசிறி விக்கிரமநாயக்காவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய
இராசபக்க்ஷேயும் சொல்லிவிட்டார்கள்.
குரு - இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதாமே?
சீடன் - ஆமாம் பெப்ரவரி 26 அன்று நாடாளுமன்றம் (கீழவை)
முடிவுக்கு வந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெறப்
போகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ கூட்டணி தோற்றால் மத்தியில் அந்தக் கட்சி
ஆட்சிக்கு வருவது குதிரைக் கொம்பாகி விடும். பாஜக ஆட்சியைப் பிடிக்கும்
வாய்ப்பு இப்போது ஒளிமயமாக இருக்கிறது. (முழக்கம் - 26-02-2009)
குரு - சீடன்
தமிழர்களைத் திருத்த முடியாது!
சீடன் - தமிழீழ விடுதலைப் போராட்டமும் குருதியும் சதையும் கொட்டி வன்னியில்
மண்ணையும் மக்களையும் காப்பாற்ற போர் நடந்து கொண்டிருக்கிறது. போர் வெற்றிபெற
வேண்டும் என்பதற்காக களத்தில் உயிர்கள் பலி கொடுக்கப்படுகின்றன. ஆனால்
கனடாவில் குருதி சிந்திப் போராட வேண்டியதில்லை. உயிர்களைப் பலி கொடுக்க
வேண்டியதில்லை. அந்தணர்களைக் கொண்டு ஹோமம் நடத்தினால் போதும் மக்களைக்
காப்பாற்றலாம் என்று சொல்லி ஒரு கோயில் ஹோம் நடத்தியது.
குரு – நானும் கேள்விப்பட்டேன். அவர்கள் புதுக்குடியிருப்பில் பட்டினியால்
வாடும் மக்களுக்கு நிதி சேர்க்கத்தான் பகலிரவு ஹோமம் நடத்தியதாகச்
சொன்னார்கள்?
சீடன் - நிதி திரட்ட வேண்டியதுதான். அதற்கா மூடநம்பிக்கையை வளர்க்க வேண்டுமா?
தன்னம்பிக்கையைக் கெடுக்க வேண்டுமா? நாட்டில் செய்யாத ஹோமமா? இழுக்காத தேரா?
ஆடாத தீர்த்தமா? எடுக்காத காவடியா? உடைக்காத தேங்காயா? அங்கு நடக்காத
அற்புதம் இங்கு எப்படி நடக்கப் போகிறது? முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்ந்த
நாட்டைத்தான் அந்நியர்கள் பிடித்து எழுநூறு ஆண்டுகள் ஆண்டார்கள். சோமநாதர்
கோயிலைச் சூறையாடிய கஜனி முகமது அங்குள்ள விக்கிரகத்தை எடுத்துச் சென்று தனது
அரண்மனைப் படிக்கட்டுக்குப் பயன்படுத்தினான். இராபர்ட் கிளைவ் வந்த காலத்திலே
இலட்சார்ச்சனைகள், அபிசேகங்கள், ஆராதனைகள் ஹோமங்கள் நடத்தினோமே கண்டதென்ன?
கிளைவின் கல்லறை மீது இந்தியாவை வென்ற வீரன் என்றுதானே
பொறிக்கப்பட்டிருக்கிறது! இந்தப் பிரிட்டிஷ் வல்லரசை இன்று யப்பான் சில
இடங்களிலே தோற்கடித்தது. அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? பொன்னும்
பொருளும் நேரமும் நினைப்பும் போருக்குச் செலவிட வேண்டிய இந்த இக்கட்டான
வேளையிலே ஹோமம் செய்யுங்கள், இலட்சார்ச்சனை செய்யுங்கள் கடவுள்
காப்பாற்றுவார் என்று புரோகிதக் கூட்டம் கூறி மக்களின் பணத்தையும்
நேரத்தையும் பாழாக்குகிறதே இதை என்னென்பது?
குரு – ஒரு நம்பிக்கைதான். கடலில் மூழ்கப் போகிறவன் துரும்பைப் பிடித்தாவது
கரைசேர நினைப்பதில்லையா?
சீடன் - பார்ப்பனர்கள் நடத்திய பூசை, சொல்லிய மந்திரம், செய்த ஹோமம்
அந்நியப்படையெடுப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை. சர்வசக்தி வாய்ந்தவர்
கடவுள் என்று ஒரு பக்கத்தில் பறை அடிக்கிறார்கள். ஒவ்வொரு கோயிலுக்கும் தல
புராணங்களை எழுதி வைத்து அந்தக் கோயில் கடவுள்களின் வீரதீரப் பிரதாபங்களை
அள்ளி விடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்தக் கடவுள்களின் கைகளில்
ஆயுதங்களையும் கொடுத்து வைத்துள்ளனர். துவார பாலகர்களையும் வேறு காவலுக்கு
வைத்துள்ளனர். இவ்வளவுக்குப் பிறகும் கோயில்களில் பொருள்கள் திருடு போகின்றன.
இதனால் அந்தச் சாமிகளுக்கு சக்தி கிடையாது என்பது; அம்பலமாகிவிடவில்லையா?
குரு – பூசை, திருவிழா, தேர், தீhத்தம், ஹோமம் இவற்றால் பலன் இல்லை
என்கிறாய்?
சீடன் - நாளாந்தம் செய்திகள் வருகின்றன. கோயில்களில் பொருள்கள் திருடு
போகின்றன. கோயில் திருட்டுகள் பெரும்பாலும் அக்கோயிலில் பூசை செய்யும்
அர்ச்சகர்களால்தான் நடக்கின்றன. சிதம்பரம் நடராசன் கோயிலில் அம்மன் தாலியை
அபகரித்தவன் அக் கோயில் அர்ச்சகர்தான். அந்தக் கோயிலில் இருந்த கலசத்தின்
தங்கங்களையெல்லாம் சுரண்டியவர்களும் தீட்சிதப் பார்ப்பனர்களே! கோயிலில்
திருட்டுப் போவதைப் பற்றி சேர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைந்த குழு
விலாவாரியாகத் தெரிவித்துள்ளதே! கோயில் அர்ச்சகர்களின் கொள்ளை, தீயொழுக்கம்
பற்றியும் புட்டுப் புட்டு வைத்துள்ளது.
குரு – அதுதான் இப்போது சிதம்பரம் கோயிலை தமிழக அரசு கையேற்றுவிட்டதே?
சீடன் - அது இலகுவில் நடக்கவில்லை. நீண்ட போராட்டத்தின் பின்தான்
நடந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால் ஒரு காலத்தில் யாரை சிதம்பரத்துக்குள்ளே
வரக் கூடாது என்று தடை போட்டார்களோ அவர் முதலமைச்சராக இருக்கிற காலத்தில்
சிதம்பரம் பொதுக் கோயிலாக மாறியுள்ளது. இனி ஓதுவார் ஆறுமுகசாமியை தேவார
திருவாசகங்களைப் படிப்பதற்கு தீட்சதர்களின் எதிர்ப்பு இருக்காது என
நினைக்கிறேன். இன்னும் ஒன்று. கொஞ்சக் காலத்துக்கு முன்னர் பெரியார்
சாகவேண்டும் என வேண்டி யாகம் வளர்த்தார்கள! ஆனால் பெரியார் 96 வயது மட்டும்
வாழ்ந்தார்!
குரு - சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனையும் குடமுழுக்கும் செய்ய வேண்டும்
அவற்றைத் தமிழில் செய்தால் ஆலயமும் ஆண்டவனும் தீட்டுப்பட்டு விடும்.
புண்ணியம் கிடைக்காது புனிதம் கெட்டு விடும் என்று சொல்வது தொடர்கிறதே?
சீடன் - பார்ப்பனர்கள் அப்படித்தான் சொல்வார்கள். சமஸ்கிருதம் இல்லாவிட்டால்
பார்ப்பனர்கள் மற்றவர்களைப் போல் உடல்வருத்தித்தான் உழைக்க வேண்டும். ஆனால்
எனது கோபம் பார்ப்பனர்கள் மீது அல்ல. தமிழர்களே தங்கள் அடிமைத்தனத்தை
விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மொழிக்கு ஏற்படும் இழிவை அவர்கள் கொஞ்சமும்
எண்ணிப்பார்ப்பதில்லை. வழிபாட்டில் தமிழில்லை. இசையில் தமிழில்லை. ஏன்
தமிழர்களது பிள்ளைகளின் பெயரிலும் தமிழில்லை. பின்னர் எப்படி இந்த இனம்
உருப்படும்?
குரு – திருமணத்திலும் தமிழ் இல்லைத்தானே?
சீடன் - தங்களை இனியில்லாத தமிழ்த் தேசியவாதிகளாகக் காட்டிக் கொள்பவர்களும்
திருமணம் என்று வந்தால் பார்ப்பனர்களைக் கொண்டு சமஸ்கிருதத்தில்தான்
செய்கிறார்கள். கேட்டால் பெண் வீட்டார் ஒப்பவில்லை என்று சாக்குப் போக்குச்
சொல்கிறார்கள்.
குரு – நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாரதி சொன்னது இன்றும் சரியாக இருக்கிறது
என்று சொல்வ வருகிறாய்?
சீடன் - ஆமாம். பாரதியார் சொன்னார்.
தமிழ், தமிழ், தமிழ் என்றும் எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க!
தமிழா! உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிஞ்சி விட்டன. உனது மதக்
கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து
தலை தூக்கி ஆட இடங் கொடுத்து விட்டாய்.
இவற்றை நீக்கி விடு. வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும்
எதிலும் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாய் இருக்க வேண்டும்.
நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை
வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளைக் காட்டிலும்
உண்மைப்பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர.; உண்மை
சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை
பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்
படி செய்! செத்த பிறகு சிவலோகம் வைகுண்டம் போகலாம் என்பது பித்த மனிதர்கள்
சொன்னது. அதனை நம்பாதே!
சொல்லி என்ன பயன்? ஓராயிரம் பாரதியார் பெரியார் வந்தாலும் தமிழர்களைத்
திருத்த முடியாது போல் இருக்கிறது! (Muzhakkam - March 02இ 2009)
குரு – சீடன்
போராட்டத்தை மாணவர்களிடம் கையளிப்போம்
சீடன் - இப்போது தமிழ்நாட்டில் எண்பதுகளில் காணப்பட்ட எழுச்சி காணப்படுகிறது. சகல மட்டத்திலும் உள்ள மக்கள் வீதியில் இறங்கி வன்னியில் தமிழ்மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்துப் போராடுகிறார்கள். சட்டவாளர்கள், மாணவர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், தமிழ்ச்சான்றோர் என எல்லோரும் களம் இறங்கிப் போராடுகிறார்கள். ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சனவரி 21, 2009 அன்று தமிழகம் முழுவதிலும் பல்வேறு நகரங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தும்படி அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்றுச் சென்னை, மதுரை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை, கோவை, சிதம்பரம், சிவகங்கை, கும்பகோணம், கடலூர், விருத்தாசலம், கன்னியாகுமரி, வேலூர், பழனி, கும்பகோணம், மன்னார்குடி உட்பட தமிழகமெங்கும் பல நகரங்களில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினார்கள்.
குரு – ஆமாம் நானும் செய்தித்தாள்களில் படித்தேன். சட்டவாளர்களும் சட்டக் கல்லூரி மாணவர்கள்தான் அதிக ஆவேசத்தோடு உண்ணா நோன்பு, ஆர்ப்பாட்டம் எனப் பல்வேறு வடிவத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். பலர் காவல்துறையால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சீடன் - சென்ன உயர் நீதிமன்றச் சட்டவாளர்கள் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். எதிர்வரும் 18 ஆம் நாள்வரை இப்போராட்டம் தொடரும். கரூரைச் சேர்ந்த 8 சட்டவாளர்களும் தூத்துக்குடியைச் சேர்ந்த 6 சட்டவாளர்களும் ஒரு படகில் முல்லைத்தீவுக்குச் செல்ல முயற்சித்த போது கரையில் இருந்து ஒரு கிமீ தொலைவில் வைத்து கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
குரு – அவர்களது தமிழின உணர்வு எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆனால் இங்குள்ள சட்டவாளர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை விட எமக்கு அல்லவா அதிக வலி இருக்க வேண்டும்?
சீடன் - அப்படிக் கேளுங்கள் குருவே! எங்கடை ஆட்கள் தாங்கள் உண்டு தங்கள் தொழில் உண்டு, குடும்பம் உண்டு எனச் சிவனே என இருக்கிறார்கள். அவர்களில்; ஒருவரையாவது வீதியில் காணமுடியவில்லை.
குரு – போராட்டம் என்று வரும்போது இங்கு சாதாரண மக்கள்தான் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். கொடி பிடிக்கிறார்கள். நா வறள முழக்கம் செய்கிறார்கள்.
சீடன் - அது உண்மைதான். ஆனால் இலண்டனில் உள்ள தமிழ் மருத்துவர்கள் இரண்டு கிழமைகளுக்கு முன்னர் உண்ணா நோன்பு இருந்தார்கள்.
குரு – ஆம் நானும் கேள்விப்பட்டேன். நம்மடை சட்டவாளர்கள், மருத்துவர்கள் மட்டும் ஏன் வீதிக்கு வந்து போராடுவதில்லை? தங்களது தகைமைக்கு (அந்தஸ்துக்கு) அது குறைவு என்று நினைக்கிறார்களா? அல்லது உழைப்புக்கு இடைஞ்சல் என நினைக்கிறார்களா?
சீடன் - இரண்டுந்தான். அவர்கள் ஓடி ஓடி பொருள் தேடித் தேடிப் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சேர்க்கிறார்கள்.
குரு - வராவிட்டாலும் வேறுவிதத்தில் உதவுகிறார்கள் என நினைக்கிறேன்?
சீடன் - விதிவிலக்கு உண்டு. ஆனால் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கடந்த ஆண்டு இங்குள்ள ஒரு பல்மருத்துவரிடம் தமிழ்க் கிழமை கொண்டாடியவர்கள் நிதி கேட்டுப் போனபோது கையை விரித்துவிட்டார். இவ்வளவிற்கும் அவரது உழைப்பு தமிழர்களிடம் இருந்தே வருகிறது.
குரு – இப்படியான கருமிகளைத் தமிழ்ப் புலவர்கள் கடுமையாகச் சாடியிருக்கிறார்கள். ஈயென இரப்பது இழிவன்று அதனினும் ஈயென் என்பது இழிவு. அதாவது பிச்சை எடுப்பது இழிவன்று. அப்படிக் கேட்டுவருபவனுக்கு வைத்துக் கொண்டு இல்லை என்பதுதான் அதைவிட இழிவானது என்பது இதன் பொருள்.
சீடன் - எல்லோரும் சேர்ந்து தேர் இழுத்தால்தான் சாமி மறுபடி
இருப்புக்கு வரும். எல்லோரும் இறங்கிப் போராடினால்தான் - எல்லோரும்
உதவினால்தான் - எங்களது உறவுகளுக்கு ஒரு விடிவு காலம் வரும்.
குரு - இதில் யூதர்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு அரசு இருப்பதால்தான் அவர்கள் கெறுக்கோடு இருக்கிறார்கள். அமெரிக்காவின் பொருளாதாரம் அவர்கள் பிடியில் இருக்கிறது. கூகுள் தொடக்கம் கொக்க கோலா வரை எல்லாவற்றிலும் அவர்களது ஆதிக்கந்தான்.
சீடன் - யூதர்களை மேற்கோள் காட்டுகிறோமே ஒழிய அவர்கள் போல் நாம் நடந்து கொள்வதில்லை. எம்மிடம் போர்க் குணம் இல்லை. தட்டிக் கேட்பதற்குப் பதில் Help us Canada, Help us Obama எனக் கெஞ்சிக் கேட்கும் குணம்தான் அதிகமாக இருக்கிறது. எமது தேசியக் கொடியைப் பிடிக்கக் கூடாது, தமிழீழம் வேண்டும் என்று முழங்கக் கூடாது அப்படிச் செய்தால் National Post காரனுக்குப் பிடிக்காது கோபித்துக்கொள்வான் என நமது பேச்சாளர்களே நம்மைப் பயமுறுத்துகிறார்கள். நமது இளைஞர்களின் வினைத்திறந்தான் நம்பிக்கை தருகிறது.
குரு - Help us Canada என்ற முழக்கத்தை கேட்டுவிட்டு கனடியத் தமிழர்கள் ஏதோ சமூகக் கொடுப்பனவை கூட்டித்தரக் கேட்கிறார்கள் என கார்ப்பர் நினைத்தாராம்!
குரு – இங்கேதான் அப்படி. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் தேசியத் தலைவர் பிரபாகரனது படத்தையே தூக்கிப் பிடித்துக் கொண்டு ஊர்வலம் வந்தார்கள். நாலு பேர் பிடித்தால் நடவடிக்கை எடுக்கலாம். நாலாயிரம் பேர் பிடித்தால் காவல்துறையால் என்ன செய்ய முடியும்?
சீடன் - சரியாகச் சொன்னீர்கள். இங்கே கூட 20 இளைஞர்கள்தான் துணைத் தூதுவராலயத்தை முற்றுகையிட்டு இந்நாள் வரை வராத இங்குள்ள ஊடகங்களை வர வைத்தார்கள். அதன் பின்தான் எங்களைப் பற்றிய செய்திகள் வரத்தொடங்கியுள்ளன.
குரு - இந்தியாவில் வி. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழ்வீரன் முத்துக்குமாரின் உடலை தேசியக் கொடியால் போர்த்தி இருந்தார்கள். அணிவகுத்துச் சென்ற இளைஞர்கள் வி.புலிகள் அணியும் சீருடை போல் சீருடை அணிந்து சென்றார்கள்.
சீடன் - இங்கும் மாணவர்களிடம் போராட்டத்தை கையளித்துவிட்டால்
எல்லாம் சரியாகிவிடும். (முழக்கம் - பெப்ரவரி 13,
2009)
குரு – சீடன்
சாமியே சரணம் அய்யப்பா!
சீடன் - கோயில் குருக்கள்தான் தட்சணையை வாங்கிக் கொண்டு பக்தர்களை
ஏமாற்றுகிறார்கள் என்றால் இங்குள்ள கடைக்காரர்களும் அவர்களை ஏமாற்றுகிறார்கள்.
குரு – குருக்கள் ஏமாற்றுகிறார் என்பது சரி. ஒத்துக்கொள்கிறேன். கடைக்காரர்
எப்படி பக்தர்களை ஏமாற்றுகிறார்?
சீடன் - அப்படிக் கேளுங்கள் குருவே! ஒரு வயதுபோன மூதாட்டி ஒரு கடைக்குப் போய்
நாலு லிட்டர் பால் பை உட்பட அருச்சனைக்கு வேண்டிய தேங்காய், வாழைப்பழம்,
வெற்றிலை, பாக்கு வாங்கினார். அவற்றுக்கு பற்றுச் சீட்டுப்போட்ட கடைக்காரர்
இரண்டு பால் பை ஒவ்வொன்றுக்கும் 4.99 டொலர் படியும் எஞ்சிய இரண்டு பால் பைக்கு
6.99 டொலர் படியும் கணக்குப் போட்டார். அதைப் பார்த்த அந்த மூதாட்டி “எல்லாப்
பால் பையும் ஒன்றுதானே.. பின் எதற்கு இரண்டு பால்பைக்கு மட்டும் 6.99 டொலர் படி
விலை போட்டிருக்கிறாய்” என்று கேட்டார்.
குரு – பாட்டி கேட்டது சரிதானே? ஒரே பால், ஒரே பை பின் ஏன் இரண்டு மாதிரி விலை?
சீடன் - பொறுங்கள் குருவே! கடைக்காரர் மூதாட்டி இரண்டு பால் பையை மேல் தட்டில்
இருந்தும் இரண்டு பால் பையை கீழ் தட்டிலும் இருந்தும் எடுத்ததைப் பார்த்து
விட்டார். அவர் சொன்னார் “அம்மா நீங்கள் மேல் தட்டில் இருந்து எடுத்த பால்
அபிசேகப் பால். அந்தப் பால் கோயில் அபிசேகத்துக்கு என்றே நன்றாக மாட்டைக்
கழுவிக் குளிப்பாட்டிக் கறந்த சுத்தமான பால். அதனால்தான் விலை வித்தியாசம்”
குரு – அப்படியெல்லாம் பாலில் சதாரண பால் அபிசேகப் பால் என்று இருக்கிறதா? நான்
கேள்விப்படவில்லையே?
சீடன் - இது அந்தக் கடைக்காரரின் வியாபார தந்திரம். மூட பக்தர்களின் தலையில்
மிளகாய் அரைப்பதுதான் அவரது குறிக்கோள். அதனை நம்பிய அந்த பக்தை கோயில் காரியம்
ஆயிற்றே என நினைத்துக் கொண்டு மேலதிகமாக 4.00 டொலரைக் கொடுத்துவிட்டுச் சென்று
விட்டார்!
குரு - இது தெய்வ காரியம். அந்த மூதாட்டியை ஏமாற்றிய கடைக்காரரை கடவுள் சும்மா
விடமாட்டார்!
சீடன் - நீங்கள் ஒன்று குருவே! கோயில் பணத்தை இலட்சக் கணக்கில்
கொள்ளையடித்தவர்கள் கல்லுப் போல இருக்கிறார்கள். சிலர் கோயிலில் கொள்ளை
அடிப்பதற்காகவே அறங்காவல் அவையில் தலைவர், செயலாளர், கொருளாளர் எனச் சேர்ந்து
கொள்கிறார்கள். அவர்கள் புத்திசாலிகள். கோயிலில் இருப்பது கடவுள் அல்ல
மாமல்லபுரத்தில் வெட்டியெடுத்த கருங்கல் அது ஒன்றும் செய்யாது. அதற்குப் ‘பவர்’
சுத்தமாக இல்லை என்பது எல்லாம் அவர்களுக்கு விலாவாரியாகவே தெரியும்.
குரு – எப்படி, என்ன அடிப்படையில் அப்படிச் சொல்லுகிறாய்?
சீடன் - சொல்கிறேன் கேளுங்கள் குருவே! இங்குள்ள அய்யப்பன் கோயில் கோபுரத்தை
ரொறன்ரோ மாநகரசபைக்காரன்கள் இடிக்கச் சொல்லிவிட்டார்கள்.
குரு – மதுரைக்கு வந்த சோதனை போல அய்யப்பனுக்கும் சோதனையா? பல
மில்லியன் செலவழித்துக் கட்டிய கோயில் கோபுரம் ஆயிற்றே?
சீடன் - எத்தனை மில்லியனில் கட்டினாலும் என்ன? கோயில் அத்திவாரம் அந்த
கோபுரத்தின் பாரத்தைத் தாங்காதாம். அது இறங்குகிற சாத்தியம் அதிகம் உண்டு
என்கிறார்கள் மாநகர கட்டிட நிபுணர்கள். அதனால்தான் அய்யப்பன் அரங்கு இன்று
வெறிச்சோடிக் கிடக்கிறதாம்.
குரு – பக்தர்கள் கொடுத்த பல மில்லியன் டொலரில் கட்டப்பட்ட கோயில் ஏன்
விதிப்படி கட்டவில்லை? கோயில் கட்ட வரைபடம் வரைந்தவர் யார்?
சீடன் - அவர் முன்னாள் அறங்காவல் அவைத் தலைவராம். கோயில் கட்டுமானத்தில் பல
இலட்சத்தை அவர் ஏப்பமிட்டுக் கொண்டு போய்விட்டார் என அய்யப் பக்தர்கள் ‘சாமியே
சரணம் அய்யப்பா!’ எனத் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.
குரு – கோயில் சொத்தை அபகரிப்பது சிவத் துரோகம் இல்லையா?
சீடன் - சிவத் துரோகம் என்று சொல்வது அந்தக் காலம். இந்தக் காலம் கோயிலைக்
கொள்ளை அடித்தவர்கள் - அடித்துக் கொண்டிருப்பவர்கள் - சீரும் சிறப்பும்
செல்வமும் படைத்து வாழ்கிறார்கள். பல தொழில்கள் நடத்தி நட்டப்பட்டு நொந்து
நூலாகப் போனவர்கள் இந்தப் பக்தி வணிகத்தில் இறங்கி ஓகோ என்று இருக்கிறார்கள்!
(குரு மூச்சை போட்டு விழுகிறார். சீடன் தண்ணீர் கொண்டுவர ஓடுகிறான்) (முழக்கம் - டிசெம்பர் 27,2008)
குரு சீடன்
தமிழ்த் தேசியமும் தமிழ்மொழியும்
சீடன் - குருவே! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அண்மையில் ஒரு
திருமண விழாவுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போது இரண்டு முக்கிய பொருள்
பற்றி எடுத்துக் கூறிக் கவலைப் பட்டார்.
குரு – என்;ன கவலை?
சீடன் - ஒன்று ‘திராவிட இயக்கம் தொடங்கியபிறகு, தமிழ் வாழ, தமிழ் பரவிட, தமிழ்
மொழிக்கு ஆக்கம் கொழிக்க திராவிட இயக்கத்தின் சார்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட
முயற்சிகள் சாதாரண மானவைகள் அல்ல. நம்முடைய வீட்டிலே பிறக்கின்ற
குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்
கொண்டு அத்தகைய பெயர்களைச் சூட்டுகிறோம். தமிழிலே பெயர் வை - உன்னுடைய
பிள்ளைக்கு தமிழ் மொழியைத்தவிர வேறு மொழியில் பெயர் வைக்காதே - என்று
அறுதியிட்டு உறுதியோடு மேடைக்கு மேடை முழங்கியவர் நாங்கள். தமிழிலே பெயர் வை
உன்னுடைய பிள்ளைக்குத் தமிழ் மொழியைத்தவிர வேறு மொழியில் பெயர் வைக்காதே என்று
அறுதியிட்டு உறுதியோடு மேடைக்கு மேடை முழங்கியவர் நம்முடைய முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ.விசுவநாதம். ஆனால், அவருடைய இல்லத்தில் அவருடைய பேத்திக்கு ஜெயஸ்ரீ
எனப் பெயர் வைத்துள்ளார்கள். நான் முத்தமிழ்க் காவலர் விசுவநாதன் அவர்களுடைய
தமிழ்ப்பற்றை, தமிழ் ஆர்வத்தை, தமிழர்களுக்காக அவர் சிறை சென்றதை குறைத்து
மதிப்பிட மாட்டேன. இந்த மாற்றம் எங்கே போய் நிற்கும்? இப்போதே ஜெயஸ்ரீ என்றால்,
அதற்கடுத்த தலைமுறை எந்தப் பெயரில் வரும் என்பதையெல்லாம் தயவுசெய்து நீங்கள்
எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படித் தன்மான இயக்கத்தின் தாக்கத்தால், பகுத்தறிவு
இயக்கத்தின் தாக்கத்தால், தமிழ் இயக்கத்தின் தாக்கத்தால் உருவான இந்தப்
பெயர்கள் - நம்முடைய காலத்திலேயே, நம்முடைய கண்ணுக்கு நேராகவே மாறுகின்றன்றன -
மாற்றப்படுகின்றன - என்றால், எதிர்காலம் என்ன ஆகுமோ என்கின்ற கவலை
எங்களுக்கெல்லாம் இருக்கிறது.’
குரு – அடுத்த தலைமுறைக்குப் போவானேன்? இந்தத் தலைமுறையிலேயே ஜெயஸ்ரீ என்ற
பெயரை விடப் பொருள் கொஞ்சமும் இல்லாத பெயர்களைப் பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளுக்கு வைக்கிறார்களே?
சீடன் - ஆமாம் குருவே! நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. தமிழ்ப் பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகளுக்குக் கண்டபடி வைக்கும் பெயர்களை ஒரு சாவு அறிவித்தலைப்
படித்தாலே பட்டென்று தெரிந்துவிடும். பாட்டனுக்குப் பெயர் கதிரவேலு இளையதம்பி.
அவரது தாய் - தந்தையர்களுக்குப் பெயர் கதிரவேலு – வள்ளியம்மை.
உடன்பிறப்புக்களின் பெயர்கள் அய்யம்பிள்ளை, வேலாயுதம், மருதை. பிள்ளைகளின்
பெயர் பாக்கியலெட்சுமி, இராஜேஸ்வரி, நிர்த்தானந்தன், பதஞ்சலி. ஆனால் அவரது
பேரப்பிள்ளைகளுக்குப் பெயர் ஜெயந்தினி, நிஷாந்தன், நரூபன், சுகன்யா, விநோத்.
பூட்டப்பிள்ளைகளுக்குப் பெயர் கிசான், சுயன், பாகவி........... இருந்தும் சில
பேரப்பிள்ளைகளுக்கு பூங்குன்றன், பால்வண்ணன், பாவேந்தன், பாமொழி என்றும் சில
பூட்டப்பிள்ளைகளுக்கு கோகீரன், பாரி, பரிதி என அழகான தமிழ்ப் பெயர்களை
வைத்திருக்கிறார்கள்.
குரு – தாய்மொழிக்குத் தமிழ்ப் பெற்றோர்கள் செய்யக் கூடிய ஆகக் குறைந்த தொண்டு
தங்கள் பிள்ளைகளுக்குத் தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள்
தமிழர்கள் என அடையாளம் காட்ட வேண்டும். பல பெற்றோர்கள் கிரந்த எழுத்துக்களான
ஜ,ஷ,ஹ, ஸ வரும் பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். ஆசா, கோசா,
யூரேனியா, டில்ஷன், டில்ஷி, லக்ஷன், லக்ஷி, அபிநாத், விபிஷன், தளிர்னா,
இனிந்தா, அனாமிகன், சானுகா எனப் பொருள் இல்லாத பெயர்களை வைக்கும் பெற்றோர்களும்
இருக்கிறார்கள்.
சீடன் - சரியாகச் சொன்னீர்கள் குருவே! வேடிக்கை என்னவென்றால் மேடைகளில் தமிழ்த்
தேசியம் பற்றிக் கொட்டி முழக்குவோர் கூட தங்கள் பிள்ளைகளுக்கோ,
பேரப்பிள்ளைகளுக்கோ தனித்தமிழ்ப் பெயர்களை வைப்பதில்லை. ‘ஊருக்குச் சொன்னேனடி
பெண்ணே! உனக்கல்லடி என் கண்ணே’ என்று சொன்ன குருவானவர் போல் நடந்து
கொள்கிறார்கள்!
குரு - இரண்டு பொருள் என்றாய். அதில் ஒன்றைச் சொல்லிவிட்டாய். மற்றதைச்
சொல்லவில்லையே?
சீடன் - ஓ அதுவா? ‘திராவிட இயக்கத்தால் கிடைத்த பதவி, கிடைத்த ஆதாயம் இது என்று
எண்ணிக் கொண்டிருப்பவர்கள், சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கூட தங்களுடைய வீட்டிலே
திருமணங்கள் என்றால் பிள்ளையார் படம் போட்ட திருமண அழைப்பிதழை, திருப்பதி
வெங்கடாசலபதி படம் போட்ட திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, பெண் வீட்டார்
கேட்கவில்லை, மறுக்கிறார்கள், நான் என்ன செய்வது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று
என்னிடத்திலேயே மன்னிப்பு கேட்பவர்கள் பலர் உண்டு’ என்கிறார் முதல்வர்
கருணாநிதி.
குரு - தமிழ்த் தேசியம் என்பது தமிழ் மண் மீட்புப் போர் மட்டுமல்ல. தமிழ் மொழி,
கலை, பண்பாட்டு மீட்பும் அதில் உள்ளடங்கியுள்ளன. தமிழ்மொழியை ஆங்கிலம்,
வடமொழியோடு கலக்காமல் தூய தமிழில் பேச வேண்டும். எழுத வேண்டும். வீணாகத்
தமிழோடு ஆங்கிலத்தையும் வடமொழியையும் கலக்கக் கூடாது. அது பாலில் நஞ்சு கலப்பது
போன்றது!
சீடன் - யார் எதைச் சொல்லி என்ன குருவே? தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களையே
திருத்த முடியாமல் இருக்கிறது. மற்றவர்களைத் திருத்துவது எப்ப்டி?
குரு – எப்படிச் சொல்கிறாய்?
சீடன் - ஓரு பேப்பர் (12-12-2008) என்ற இதழைப் பார்த்தேன். அட்டைப்படத்தில்
தாய் தனது பிள்ளைக்குக் கதை சொல்லிக் கொடுப்பது போன்ற படம். அதன் நடுவில் ஒரு
ஊரில் ஒரு 'புசயனெ ஆய' என்ற ஆங்கிலச் சொற்றொடர். கீழே ‘டோனட்’ சுட்டாவாம்’ என்ற
சொற்றொடர். பாட்டிக்குப் பதில் 'புசயனெ ஆய' வடைக்குப் பதில் ‘டோனட்’. புதுமை என
நினைத்துக் கொண்டு அந்த இதழ் தமிழ் உறவு முறையை மட்டுமல்ல தமிழர்களது உணவுப்
பழக்கத்தையும் மாற்ற நினைக்கிறது.
குரு - கேட்டால், தாங்கள் வன்னிக்கு மிக நெருக்கம் என்றும் அங்குள்ள தலைவர்களது
பெயர்களை நுனி நாக்கில் வைத்திருப்பதாகவும் சொல்கிறார்களே?
சீடன் - இவர்கள் போலி தேசியவாதிகள் குருவே! சென்ற கிழமை மறைந்த தேசத்தின் குரல்
பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். நிகழச்சி
அறிவிப்பார்ளர் ‘எங்கே உங்கள் கரகோஷம்’ என மேடையில் அடிக்கடி கேட்டு என்னைக்
கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்.
குரு – கனடிய வானொலி அறிவிப்பாளர்கள் கூட ‘பேட்டி’ ‘விசேட’ ‘பூஜ்யம்’ என்ற
வடமொழிச் சொற்களை விடமாட்டேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.
“ personal wealth” “recession”
“Public Service Trade Unions” என்பதைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல மாட்டேன்
என்கிறார்கள். அதனை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிவிடுகிறர்கள்.
சீடன் - இவர்களைப் பார்த்துத்தான் கவிஞர் காசி ஆனந்தன் “கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா? ... வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா? எனச் சினத்தோடு கேட்டார்! (முழக்கம் - 12-18-2008)
குருவும் - சீடனும்
வைணவ இராமாயணமும் சைவ கந்தபுராணமும்
சீடன் - ஆண்டுதோறும் அனுட்டிக்கப்படும் கந்த சஷடி நோன்பும் அதன் முடிவில்
சூரன் போரும் இந்த ஆண்டும் கோயில்களில் இடம்பெற்றது.
குரு – ஆமாம் சில கோயில்களில் மாங்காய்கள் தொங்கும் மாங்கொப்பைக் கட்டி
அமர்க்களம் பண்ணிவிட்டார்களாம்!
சீடன் - அதெற்கொன்றும் குறைவில்லை. ஆனால் இநத கந்தபுராணக் கதை இருக்கிறதே அது
நுனி முதல் அடிவரை கற்;பனை! புளுகு மூட்டை!
குரு – அதுதான் இந்தப் புளுகு கந்தபுராணத்துக் கடைசி ஒற்றையிலும் இல்லை என்ற
பழமொழி பிறந்தது!
சீடன் - அதேதான். கந்தன் பிறப்பு. கந்தன் சிறுவயது திருவிளையாடல்கள். கந்தன்
போருக்குப் புறப்பட்டுச் சென்று அசுரர்களை அழித்தல். பின்னர் வள்ளி
தெய்வானையை மணத்தல். இதுதான் கந்தபுராணம்.
குரு - கந்தபுராணம் இராமயணக் கதையைத் திருடி எழுதியதாமே?
சீடன் - அதேதான். வைஷ்ணவர்களுக்கு இராமன் கதை கூறும் இராமாயண காவியம்
இருந்தது. சைவர்களிடம் அப்படியொரு அவதாரக் கதை இல்லை. சைவர்கள்
வாழாவிருப்பார்களா? இராமாயாணத்தைப் பின்பற்றி ஸ்கந்தபுராணத்தை வடமொழியில்
எழுதினார்கள். அதனை கச்சியப்பசிவாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்து
எழுதினார்.
இராமாயணத்தில் இராமன் கதைத்தலைவன். இராவணன் வில்லன்.
கந்தபுராணத்தில் முருகன் கதைத்தலைவன். சூரபதுமன் வில்லன்.
இராமாயணத்தில் இராவணனுக்கு கும்பகர்ணன், விபீடணன், சூர்ப்பனகை
உடன்பிறப்புக்கள்.
கந்தபுராணத்தில் சூரபத்மனுக்கு தாராகாசூரன், சிங்கமுகன். தங்கை அசமுகி
உடன்பிறப்புக்கள்.
இராமாயணத்தில் இராவணனை கொல்ல இராமன் பிறப்பை தேவர்கள் வேண்டுதல்.
கந்தபுராணத்தில் சூரபத்மனை கொல்ல கந்தன் பிறப்பை தேவர்கள் வேண்டுதல்.
இராவணன் சிவபக்தன். தவங்கள் பல இயற்றி வரங்கள் பல பெற்றவன்.
சூரபத்மனும் சிவபக்தன். தவத்தின் மகிமையால் சிவத்தின் சக்தியன்றி வேறொன்றால்
மரணமில்லையென வரம் பெற்றவன்.
இராவணனின் வீரமகன் இந்திரஜித் இந்திரனைப் போரில் வென்றவன்.
சூரபத்மனின் மகன் பானுகோபன் சிறுவயதில் சூரியனை பிடித்து தன் தொட்டில் காலில்
கட்டிப்போட்டவன்.
இராமன் சீதையை சிறைமீட்கப் போர் தொடுத்தான்.
கந்தன் ஜயந்தன் முதலான தேவர்களை சிறைமீட்கப் போர்தொடுத்தான்.
போருக்கு முன் இராமனின் தூதனாக அனுமன் கடல்தாண்டி செல்லுதல். சீதையை கண்டு
பின் இராவணனிடம் தூதுரைத்துத் திரும்புதல்.
போருக்கு முன் கந்தனின் தூதனாக வீரபாகு கடல்தாண்டி செல்லுதல். ஜயந்தனை கண்டு
சூரபத்மனிடம் தூதுரைத்துத் திரும்புதல்.
போரில் தன்னை எதிர்ப்பவன் மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமனே என அறிந்தும்
இராவணன் தொடர்ந்து போரிட்டு இறைவன் திருவடியை அடைந்தான்..
எதிர்த்துப் போர்புரியும் குமரன் சிவனின் திருக்குமரனே என அறிந்தும்
சூரபத்மன் தொடர்ந்து போரிட்டு மயிலாகவும் சேவல் கொடியாகவும் முருகன்
திருவடியை அடைந்தான்.
குரு - இன்னும் இருக்கா?
சீடன் - இருக்கிறது குருவே! எப்படி சூர்ப்பனகையின் அதீத ஆசையும் உரையாடலும்
இராமாயணக் கதையின் திருப்பத்துக்கு வித்திடுகிறது. அதே போல் அசமுகியின் ஆணவப்
பேச்சும் இந்திராணியிடம் அவளது ஆணவப் போக்கும் கந்த புராணத்தில்
திருப்பத்துக்கு வித்திடுகிறது!
இராமாயணப் பகுதிகள் சில இலங்கையில் நடப்பது போல் சொல்லப்படுகிறது.
கந்தபுராணப் பகுதிகள் சில இலங்கையில் நடக்கின்றன!
திருச்செந்தூர் திரும்பி வந்து வீரபாகு தூதின் தோல்வியைச் சொன்னவுடன் முருகப் பெருமான் இலங்கை சென்று
ஏமகூடத்தில் முகாம் அமைக்கிறான்! அங்கிருந்து தான்
வீரமகேந்திர புரியைத் தாக்குகிறார்கள்!
இராவணன் மனைவி மண்டோதரியைப் போல சூரபதுமனின் மனைவியும் கற்புக்கரசியே!
இராமயணத்தில் இராவணன் கிளையோடு மாண்டான்! அவனுக்கு முன்னரே அனைவரும்
மாண்டுவிடுகிறார்கள்.
கந்த புராணத்திலும் அப்படியே!
சூரனை அழித்து மயிலும் சேவலுமாய் முருகன் ஆட்கொண்டது போல இராவணனும்
மறுபடியும் வைகுண்டத்தில் ஜய விஜயனாக ஆட்கொள்ளப்படுகி;றான்!
சூரபதமனைக் கொன்ற மனக்கேதம் தீர முருகன் திருச்செந்தூரில் சிவபூசை செய்வது போல, இராவணனைக் கொன்ற
இராமன் இராமேஸ்வரத்தில் சிவபூசை செய்கிறான்!
குரு – ஒன்றில் இருந்து மற்றது திருடியது உண்மை என்றே படுகிறது. அது சரி
கந்தன், கடம்பன், குகன், அறுமுகன், சரவணன், செந்தில் ஆண்டவன் என
அழைக்கப்படும் முருகன் தமிழ்க் கடவுளா?
சீடன் - பஃறுளி ஆற்று பன்மலை அடுக்கத்து வாழ்ந்த பாட்டன் முருகன் தமிழ்
“கடவுள்” தான். அவரது மனைவி தினைப்புனை வள்ளியும் வேட்டுவிச்சிதான். முருகன்
ஆரியமயப்படுத்தப்பட்ட போது க(ஸ்க)ந்தசாமி ஆனார். தெய்வயானை மனைவியானார்.
ஆனால் கந்தபுராணமும் இராமாயணமும் புலவர்களது கற்பனையே!
(முழக்கம்
-11-12-2008)
ஏமாளித் தமிழர்கள்
சீடன் - வேறு எந்த மதத்தையும்விட இந்து மதம் மக்களை 365 நாளும்
சுரண்டுவதில் முன்னணியில் இருக்கிறது. இதனால் “இருக்கு மட்டும் சோதிடன் விடான்;
இறந்தபின்னும் புரோகிதன் விடான்” என்ற பழமொழியே பிறந்தது.
குரு – சுற்றி வளைக்காமல் விளக்கமாகச் சொல்லு?
சீடன் - பிறந்தது முதல் இறக்கும் வரையும் இறந்த பின்பும் துடக்குக் கழிப்பு,
சோறு தீத்தல், காது குத்தல், குடிபுகுதல், பூப்பு நீராட்டல், தோசபரிகாரம்,
விளக்குப் பூசை, கலியாண சுபமுகூர்த்தம், ஆண்டுத்திவசம், அமவாசை, ஆடிப் பிறப்பு
விரதம் என புரோகிதன் தட்சணை, அருச்சனை என்ற உருவில் தமிழர்களிடம் இருந்து பணம்
கறந்துவிடுகிறான். ஆண்டுத் திவசத்தின் போது மாடு, வேட்டி, செருப்பு, குடை,
அரிசி, காய்கறி எனப் பொருளாகவும் சுரண்டிவிடுகிறான். வசதிபடைத்த தமிழர்கள்
காசி, இராமேசுவரம், சிதம்பரம், ஸ்ரீPரங்கம், திருச்செந்தூர் எனக் கடல்கடந்து
போய் புரோகிதனுக்கு வாரி வழங்கி காசைக் கரியாக்குகிறார்கள்.
குரு – புரோகிதர்கள் உடலை வளைக்காமல், மேனி நலங்காமல், மெய் வருந்தாமல் வயலில்
இறங்கி உழாமல், களை பிடுங்காமல், சூடு மிதிக்காமல் இருந்த இடத்தில் இருந்து
கொண்டு அறுவடை செய்கிறார்கள் என்று சொல்?
சீடன் - அதேதான் குருவே! தமிழர்களிடம் காணப்படும் மூடநம்பிக்கைகளை, குருட்டு
நம்பிக்கைகளைப் புரோகிதர்கள் காசாக்குகிறார்கள். அதனால்தான் பாரதியார் –
இன்நாளிலே பொய்மைப் பார்பான்
அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்
பேராசைக்காரனடா பார்ப்பான்
ஆனால் பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
பிள்ளைக்குப் பூநூலாம் என்பான்
நம்மைப் பிச்சுப் பணம் கொடெனத் தின்பான்
என பார்ப்பனர்களைச் சாடியிருக்கிறார். ஏமாறுபவர்கள் இருக்கு மட்டும்
ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள். ஏமாறுகிறவன் ஏமாளி ஏமாற்றுகிறவன் களவாளி.
இப்போது ஏமாளித் தமிழர்களைச் சுரண்டுவதற்கு புதுப்புது வழிகளைக் கண்டு
பிடித்துள்ளார்கள்.
குரு – விளக்கமாகச் சொல்.
சீடன் - வேதகாலத்தில் மட்டுமல்ல ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இப்போது நாங்கள்
பார்க்கும் யந்திர ஊர்திகள் இருக்கவில்லை. முதன்முதல் எரிபொருளில் ஓடும்
மகிழுந்துவை கண்டு பிடித்தவர் முயசட டீநணெ (1885) என்ற ஜென்மானியர்
என்கிறார்கள். வானூர்தியை கண்டு பிடித்தவர்கள் அமெரிக்க உடன்பிறப்புக்களான Orville White (1871 – 1948) மற்றும் Wilbur
( 1867 – 1912) ஆவர். கண்டு பிடித்த ஆண்டு 1903 ஆகும். இன்றைய நவீன
மகிழுந்துகள் 10,000 க்கும் அதிகமான உதிரிப்பாகங்களைக் கொண்டு
தயாரிக்கப்படுகின்றன. ஆனால் தமிழன் இதனை நம்பாமல் ஒரேயொரு எலுமிச்சம் பழத்தை
மட்டும் நம்புகிறான்.
குரு - இந்தக் கருத்தைத் திரைப்பட நடிகர் விவேக் ஒரு படத்தில் சொல்லி கிண்டல்
அடிப்பதைக் கேட்டிருக்கிறேன்.
சீடன் - விலை உயர்ந்த புத்தம் புதிய பென்ஸ் வண்டியை வாங்கிய ஒருவர் அதற்கு ஒரு
வில்லங்கமும் வரக்கூடாது என்பதற்காக அதன் பேரில் அருச்சனை செய்ய கேட்ட வரம்
எல்லாம் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் கண்கண்ட தெய்வம் சித்தி கொடுக்கும்
விநாயகர் கோயிலுக்கு ஓட்டிப் போய் இருக்கிறார்.
குரு – புதிதாக வண்டி வாங்குபவர்கள் எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள்.
சீடன் - நான் கதையை முடிக்கவில்லை குருவே! கோயில் குருக்கள் 101 டொலருக்கு
அருச்சனை செய்து முடித்த பின்னர் ஒரு தேசிக்காயைக் கொடுத்து அதன் மீது வண்டியை
ஓட்டி நசிக்கும்படி உரிமையாளரிடம் சொன்னார்.
குரு - இதுவும் வழக்கமான சங்கதிதான்!
சீடன் - கொஞ்சம் பொறுங்கள் குருவே! தேசிக்காயை நிலத்தில் போட்டு அதன் மேல்
வண்டியை ஏற்றினார் பக்தர். என்ன செய்தாரோ தெரியவில்லை. வண்டி தேசிக்காயை
நசுக்கியதோடு நில்லாமல் நேரே கோயில் கதவோடு வேகத்தோடு பாய்ந்து மோதியது! வண்டி
முற்றாகச் சேதம். குப்பை மேட்டில் தள்ளுவதை விட வேறு வழியில்லை!
குரு – அருச்சனை செய்ததற்குக் கைமேல் பலன் என்று சொல்?
சீடன் - அதேதான் குருவே! இப்போது குருக்கள் கோயிலைப் பாதுகாக்க ஒரு காவல்காரரை
முழுநேரமாகக் காவலுக்குப் போட்டிருக்கிறார்!
குரு – அய்யோ பாவம்!
சீடன் - எங்கடை ஆட்களைத் திருத்தவே முடியாது. ஒரு தமிழ்த் திருமணப்பதிவுகாரரை
விட அய்யர் உசத்தி என்று நினைக்கிறார்கள். திருமணப் பதிவு என்பது ஊழியம் இல்லாத
தொழில். மண வீட்டார் விரும்பினால் ஒரு சிறிய தொகையை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.
ஆனால் அய்யர்மார் அரசுக்கு 100 டொலர் தங்களுக்கு 50 டொலர் என்று 150 டொலர்களைக்
கறந்துவிடுகிறார்கள்! ஒரு சாதாரண தமிழ்த் திருமணப்பதிவாளர் 85 டொலர் வாங்கிக்
கொண்டு பதிவைச் செய்ய முன்வந்தாலும் எங்கடை ஆட்கள் 150 டொலர் கொடுத்து அய்யரைக்
கொண்டே திருமணப் பதிவு செய்து கொள்ள விரும்புகிறார்கள்.
குரு – அட கறுமமே!
(முழக்கம் - 12-09-2008)
குரு சீடன்
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!
சீடன் - முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். முயற்சி திருவினையாக்கும் என்ற
பொன்மொழிகள் இன்று பலித்து வருகின்றன.
குரு - இதிலென்ன அய்யம். திருவள்ளுவர் முயற்சி மெய்வருந்தக் கூலிதரும் என்றும்
சொல்லியிருக்கிறார்.
சீடன் - அறத்தால் வருவதே இன்பம் என்று சொன்னவரும் திருவள்ளுவர்தான். ஈகையினால்
வரும் சிறப்புப்பற்றி ஒரு அதிகாரமே எழுதியுள்ளார். ஈகை என்பது செல்வர் வறியோரான
இல்லார்க் கீதலும் இரப்போர்க்கிடுதலுமாம். தமிழர்கள் தங்கள் திருமணம் பிறந்த
நாள், பூப்பு நீராட்டு விழா போன்ற நிகழ்வுகளின் போது வறியோர்க்கு முடிந்தளவு
கொடுத்துதவ வேண்டும் என எழுதியும் பேசியும் வந்தது வீண்போகவில்லை. ஒரு சிலராவது
அந்த அறத்தைச் செய்கிறார்கள். குறிப்பாக தமிழ்முறைத் திருமணம் செய்யும் இணையர்
அதனைத் தவறாது செய்கிறார்கள்.
குரு – விளக்கமாகச் சொல்?
சீடன் - கடந்த மாதம் மொன்றியலில் அன்ரனி – கிரிஜா தமிழ்முறைத் திருமணம்
நக்கீரன் தலைமையில் இனிது நடைபெற்றது. அப்போது மணமக்கள் தமிழர் புனர்வாழ்வுக்
கழகத்துக்கு 500 டொலரை அன்பளிப்புச் செய்தார்கள். அதுமட்டுமல்ல வன்னியில்
இயங்கும் குருகுலத்துக்கும் 500 டொலரை வழங்கினார்கள். இதேபோல் ரொறன்ரோவில்
திரு. தருமகுலசிங்கம் - திருமதி பவானி தருமகுலசிங்கம் இணையர்கள தங்கள் அருமை
மகள் கஸ்தூரி – அஜந்குமார் திருமணத்தின் போது 1,000 டொலர்களை தமிழர்
புனர்வாழ்வுக் கழகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள். இவர்களது ஈகை
போற்றத்தக்கது.
குரு - ஸ்ரீவரசித்த விநாயகர் கோயில் மற்றும் ஸ்காபரோ துர்க்கையம்மன் கோயில்
போன்றவற்றுக்கு பலத்த பணச்செலவில் தேர்செய்து கொடுத்தும் தேர்த்திருவிழா
செய்வதும் பெரிய :”சேவை” என்றும் அப்படிச் செய்பவர் சமூகத்தில் நன்கு
மதிக்கப்படும் “பிரமுகர்” என்றும் சிலரால் வருணிக்கப்படுகிறதே?
சீடன் - யாரும் தங்களைப் “பிரமுகர்” “ஸ்ரீலஸ்ரீ” “சைவமணி” “நாட்டியச்செல்வி”
“நாட்டியமணி” என்று அழைத்துக் கொள்ளலாம். ஏன் பல்கழைக் கழகத்தில் பாடுபட்டுப்
படிக்காமல் பணத்துக்கு “கலாநிதி” பட்டம் வாங்கி அதனைத் தங்கள் பெயரோடு ஒட்டிக்
கொள்ளலாம். ஆனால் எது சேவை எது சேவை இல்லை என்ற கேள்விக்குத் திருமூலர்
விளக்கமாக விடை அளித்துள்ளார். சென்ற தடவை அந்தத் திருமந்திரம் பற்றி
குறிப்பிட்டிருந்தேன்.
அந்தணர் குடியிருக்க ஆயிரம் வீடுகள் கட்டுதல், கோயில்களை ஆயிரக்கணக்கில் எழுப்புதல் ஆகியவற்றால் வரும் பயன் ஒருவருக்கு ஒருபொழுது உண்ண உணவளிப்பதால் வரும் பயனுக்கு ஈடாகாது என்கிறார் திருமூலர்.
அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே!
குரு – தேர் செய்தால், தேர்தீர்த்தத் திருவிழா செய்தால் புண்ணியம் கிடைக்கும் அது மறு உலகுக்கு உதவும் மாறாக மக்களது பசிப்பிணி போக்கக் கொடுத்தால் அதனால் எந்தப் பலன் இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள்?
சீடன் - நீங்கள் சொல்வது சரி. ஆனால் பெரியோர்கள், சான்றோர்கள் “மக்கள் தொண்டே
(சேவை) மகேசன் தெண்டு” என மதநம்பிக்கையாளர்களே சொல்கிறார்கள். வன்னியில்
பசியால் வாடும் எங்கள் மக்களுக்கு ஒரு வெள்ளி கொடாதவரை நான் “பிரமுகர்”
பட்டியலில் சேர்க்க மாட்டேன்! மாறாக இம்மை செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை
வணிகன் போலல்லாது திரு திருமதி அன்ரனி, திரு திருமதி தருமகுலசிங்கம் போன்றோரைப்
பிரமுகர் வரிசையில் சேர்ப்பேன்! இருப்பவன் கொடுப்பதில்லை இல்லாதவனே
கொடுக்கிறான் என்பதற்கு இவர்கள் சான்றாக விளங்குகிறார்கள். (முழக்கம்
- 31-10-2008)
குரு - சீடன்
கோயில் குருமார்
வீட்டிலும் சோதிடர்கள் காட்டிலும் பண மழை கொட்டுகிறது!
சீடன் - இராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் அருகில் உள்ள மெரங்கார் கோட்டை
சாகுண்டதேவி கோயிலில் நடந்த நவராத்திரி திருவிழா நடந்தது. புகழ் பெற்ற சுற்றுலா
தலமான மெக்ரன்கார் கோட்டை அமைந்துள்ள மலையில் இந்தக் கோயில் இதில் ராஜஸ்தான்
மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டபக்தர்கள்
கலந்து கொண்டனர். விடிய, விடிய திரு விழா நடந்தது. ஒரு கட்டத்தில் சுவாமி
கும்பிடச் செய்ய பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னுக்குப் போனார்கள்.
அப்போது பாரம் தாங்காமல் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பயந்துபோன
பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இதை பார்த்த சிலர் கோயிலில்
வெடிகுண்டு இருப்பதாகப் புரளியை கிளப்பி விட்டனர். இதனால் பயம் மேலும் கூடியது.
பெரும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு நெரிசலில் இருந்து
தப்பிக்க முயன்றனர். நெரிசல் மேலும் அதிகமாகியது. ஏராளமான பெண்களும்
குழந்தைகளும் பக்தர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவர்களும் நெரிசலில் சிக்கிக்
கொண்டனர்.
இதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு
மற்றவர்கள் ஓடினார்கள். கீழே விழுந்தவர்கள் மிதிபட்டே செத்தனர். பலர் மூச்சுத்
திணறிக் கீழே சாய்ந்தனர். அங்கு ஒரே கூச்சலும் மரண ஓலமுமாக இருந்தது. கோயில்
வளாகம் முழுவதும் பக்தர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினார்கள். நெரிசலில்
சிக்கி 214 பக்தர்;கள்
பலியானார்கள். மேலும் 300 பேர்
படுகாயம் அடைந்தனர்.
குரு - இப்படியான அவலம் இடம்பெறுவது இது முதற்தடவை அல்ல. வேறு கோயில்களிலும்
இதுபோன்ற நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நேரே பரலோகம் போயிருக்கிறார்கள்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் கோயிலில் 2005
ஆம் ஆண்டு சனவரி மாதம் நெரிசல் ஏற்பட்டு 265
பக்தர்கள் பலியானார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனாதேவி மலைக் கோயிலில் நெரிசல்
ஏற்பட்டு 162 பேர் பலியானார்கள். 47 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
கடந்த யூலை மாதம் ஒரிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயில் நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலியானார்கள்.
2005, யூன 25 இல் மந்திரதேவி
கோயில் (மகாராட்டிரம்) 340 பேர் செத்துப் போனார்கள்.
2003 ஆகஸ்ட் 27 இல் மகாராட்டிர
மாநிலம் நாசிக்கில் கும்பமேளாவில் 39
பேர் பலியானார்கள. பலர் காயமுற்றனர.
2006 மார்ச் 7 ஆம் நாள் புனிததலம்
என்று இந்துக்களால் போற்றப்படும் வாரணாசியில் (காசியில்) பலியானவர்களின்
எண்ணிக்கை 28 ஆகும்.
சீடன் - அளவுக்கு மீறிய மூட பக்திதான் இந்த உயிர்ப் பலிகளுக்குக் காரணமாகும்.
பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின்
பொன்மொழிக்கு இவை சரியான எடுத்துக்காட்டு! கடவுளை வழிபட்டு அருளைப்
பெற்றுக்கொள்ள வந்த பக்தர்கள் ஏன் அதே கடவுள் சன்னிதானத்தில் பரிதாபமாகச்
செத்தார்கள்? எல்லாம் வல்ல கடவுள், கருணையே வடிவான கடவுள், எங்கும் நிறைந்த
கடவுள் ஏன் அந்த பக்தர்களைக் காப்பாற்றவில்லை? இந்தச் சாவுக்கெல்லாம் காரணங்கள்
பல கூறப்படலாம். ஆனால், பக்தர்கள் ஒன்றைத் தீர்க்கமாக உணர வேண்டும். கடவுள்
சக்தியின் மீதான நம்பிக்கையை அவர்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும். யார்
கைவிட்டாலும் கடவுளை நம்பினோர் கைவிடப்படார், கோயிலுக்குச் சென்று கும்பிட்டால்
கடகம் கடகமாக அருள் கிடைக்கும் வில்லங்கங்கள் பனிபோல் விலகிவிடும் என பக்தர்கள்
நம்பிக் கோயில்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அந்தக் கோயில் விழாக்களிலேயே
பக்தர்கள் பலியாகிறார்கள் என்றால் அவர்கள் நம்பும் அந்தக் கடவுளுக்கு ஆற்றல் (சக்தி)
இல்லை என்றுதானே முடிவு கட்ட வேண்டும்? தன்னை நாடிவந்த பக்தர்களையே காப்பாற்ற
முடியாத கடவுள் உலகத்தையா கட்டிக் காக்கப் போகிறார்?
குரு – மதம் என்பது ஒரு போதை. உள்ளே போதை போகப் போக மேலும் மேலும் போதை
தேவைப்படும். அதற்கு அடிமைப்பட்டவர்கள் அதில் இருந்து மீள முடியாது.
சீடன் - அய்யப்பன் கோயில்கூட பற்றி எரிந்ததுண்டு. திருப்பதி கோயிலிலும்
திருவண்ணாமலைக் கோயிலிலும்கூட தீ விபத்து ஏற்பட்டதுண்டு. தஞ்சைப் பெரிய கோயில்
(பிரகதீசுவரர்) குடமுழுக்கின்போதுகூட பந்தல் பற்றி எரிந்து பக்தர்கள் -
குறிப்பாகப் பெண்கள்
- பதறப் பதறத் துடிதுடித்துச் செத்த கோரம் பெருஞ்சோகமாகும்.
மனிதனின் விலைமதிக்க முடியாத மூலதனமான மூளையை இந்தப் பக்திக் கரையான் முற்றாக
அரித்து விட்டதை எண்ணி மானுடத்தை நேசிப்பவர்கள் கவலை கொள்ள வேண்டும். அவர்களை
இந்தக் கொடிய நோயின் தாக்குதலிலிருந்து பிழைக்க வைக்க பகுத்தறிவுவாதிகள்
முன்வரவேண்டும்.
குரு – கனடாவில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பாபு கேட்டறிங் கிளை
திறப்பது போல - புதிய புதிய கோயில்களைத் திறக்கிறார்கள். பெரும்பாலும் அவை
தமிழகம் அல்லது ஈழம் இவற்றில் காணப்படும் கோயில்களின் கிளைகளாக இருக்கின்றன.
சீடன் - குருவே! இதுதான் எனக்கு விளங்கவில்லை. அங்கு எங்களைச் சிங்கள
இராணுவத்திடம் இருந்து காப்பாற்ற முடியாத கடவுள்கள் இங்கு எப்படிக் காப்பாற்றப்
போகின்றன? யாகம், யோகம், இலட்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், கும்பாவிஷேஷங்கள், தேர்,
தீர்த்தம், திருவிழாக்கள், வெண்பொங்கல், சித்ரான்னம், ஆராதனைகள் போன்றவற்றை
பொன்னும் பொருளும் நேரமும் நினைப்பும் செலவிட்டு நடத்தினோமே கண்ட பலன் என்ன?
அந்கக் கோயில்களாவது ஆகமமுறைப்படி கட்டப்பட்டவை. இங்கே பண்டகசாலைகளைக் கோயில்
என்கிறார்கள்!
குரு – கோயில் குருமார் பக்தி வாணிகம் செய்து கோடி கோடியாகப் பொருள்
தேடுகிறார்கள். கோடிநாம அர்ச்சனை, விளக்குப் பூசை, மோட்ச அருச்சனை என வெவ்வேறு
வடிவில் பக்தியை மூடர்களிடம் சந்தைப் படுத்தி அதனைக் காசாக்குகிறார்கள். மோட்ச
அருச்சனை என்பது ஆகமத்தில் காணப்படாத கிரியை! அதை எனக்குச் சொன்னவர் ஒரு
குருக்கள். அது சரி கொழும்பில் முத்து மாரியம்மனை ஒரு பவுத்த தேரர் தாக்கிப்
படுகாயப்படுத்தி விட்டாரமே?
சீடன் - ஆமாம் குருவே! கொழும்பு, கிராண்ட்பாஸ் டீ மெல் வத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ
முத்து மாரியம்மன் கோயில் அம்மன் மற்றும் சிவலிங்கம் உட்பட 6 சிலைகளைக் கடந்த மாதம்
பவுத்த தேரர்
உட்பட மூவர் தாக்கி உடைத்து சேதப்படுத்தி விட்டார்கள். அம்மனுக்கு முகத்தில்
பெரிய காயம். பவுத்த தேரரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தாலும் பின்னர்
அவர் உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட தேரரை
மகிந்த இராசபக்சே அலரிமாளிகைக்கு வரவழைத்து இராசமரியாதை செய்தார்.
குரு - பாவம் முத்துமாரியம்மன். அவரால் தன்னையே காக்க முடியவில்லை. அந்த பவுத்த
தேரரின் கண்ணைத் தோண்டவோ கையை முறிக்கவோ, காலை முறிக்கவோ முடியவில்லை! இரண்டு
நாட்களுக்கு முந்தித்தான் அம்மனுக்கு ‘பவர்’ ஏற்ற குடமுழுக்கு (கும்பாவிஷேஷம்)
நடந்தது!
சீடன் - இன்னொருபுறம் தமிழகத்தில் இருந்து பத்தாம் வகுப்பைத் தாண்டாத அறிவிலிகள்
தங்களைச் சோதிடரத்தினம், சோதிட ஆசான், சோதிட சக்கரவர்த்தி என்றும் முகநாடி,
கைரேகை, சாதகம் பார்த்து அச்சொட்டாகப் பலன் சொல்வதாகத் தம்மை விளம்பரப்படுத்திக்
கொண்டு ஏமாந்த சோணகிரிகளிடம் சுளை சுளையாகப் பணம் கறக்கிறார்கள். இந்த
சோதிடர்களோடு இங்குள்ள அங்காடிகள் சில கூட்டணி வைத்துள்ளன!
குரு – நானும் கேள்விப்பட்டேன். ஒரே நாளில் உண்டியல் மூலம் 42 இலட்சம் இந்திய உரூபாயை இந்தியாவுக்கு
அனுப்பினார்களாம். ஒரு மாதத்தில் உழைக்கிற தரகுப் பணத்தை ஒரே நாளில்
உழைத்துவிட்டதாக உண்டியல்காரர் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்!
சீடன் - நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத் தண்ணிதான் என்பார்கள்.
மூன்றாம் உலகை விட்டு முதலாம் உலகுக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தங்கள்
மூட பக்தியையும் மூட நம்பிக்கையையும் தமிழ்மக்கள் கைவிடாமல் இருக்கிறார்கள்!
அதனால் கோயில் குருமார் வீடுகளிலும் சோதிடர்கள் காட்டிலும் பண மழை கொட்டோ கொட்டோ
என்று கொட்டுகிறது! (Muzhakkam
- October 03,2008)
வாடும் மக்களும்
பொருள் தேடும் கோயில்களும்
குரு – சீடன்
சீடன் - தமிழீழம் மீது சிங்களம் தொடுத்திருக்கும் கொடிய போர் காரணமாக இரண்டு
இலட்சத்துக்கும் மேலான மக்கள் இடம்பெயர்ந்து மர நிழல்களிலும் சாலை ஓரங்களிலும்
வெய்யிலில் காய்ந்து மழையில் நனைந்து பெரும் அல்லல் படுகிறார்கள். போதாக்
குறைக்கு வன்னிக்கு உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச்
செல்வதை சிங்களக் கொடுங்கோலர்கள் மட்டுப்படுத்தியுள்ளனர். அரசு சார்பற்ற
நிறுவனங்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடு அரசினால் விதிக்கப்பட்டிருக்கிறது.
குரு – நானும் கேள்விப்பட்டேன். தமிழ்நாதம் இணையதளம் வன்னி மக்களின் அவலத்தை
விளக்க இரண்டு படங்களை அனுப்பி வைத்துள்ளது. ஒரு படத்தில் “சொந்தங்களே! ஏதிலியாய் அலையும் எங்களில் இறைவனைக்
காணுங்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் உடையாத
தேங்காய் குவியல். அருகே உடைத்த தேங்காய் மூடிகள். ஒரு தேங்காய்ப் பாதியில் ஒரு
பச்சிழங் குழந்தையின் முகம் தெரிகிறது. சற்றுத் தள்ளி தாய், தந்தை, சின்னக்
குழந்தைகள் கொண்ட இடம்பெயர்ந்த குடும்பம். பசியால் மெலிந்து பட்டினியால் வாடிய
முகங்கள். அடுப்பில் ஒரு சின்னச் சட்டி. அதில் ஏதோ உணவு வெந்து கொண்டிருக்கிறது.

சீடன் - குருவே நானும் அந்தப் படங்களைப் பார்த்தேன்! இரண்டாவது படத்தில் கீழே
தேங்காய் குவியல். பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை கல்லில் ஓங்கி எறிந்து
உடைக்கிறார். பாதித் தேங்காயில் ஒரு குழந்தையின் வாடிய முகம். மேலே வலது
புறந்தில் ஒரு இரண்டு அகவைக் குழந்தை ஒரு வெறுஞ் சட்டியோடு உட்கார்ந்து
இருக்கிறது. அதற்கு மேலே “அடியார்களே! நான் பசியால்
இருக்கிறேன். எனக்குச் சாப்பாடு தாருங்கள்” என்ற வாசகம்! இதைப்
பார்த்தபோது இரட்டைப் புலவர்கள் பாடிய ஒரு பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது.
இரட்டைப்புலவர்கள் சோழ, பாண்டியர் ஆட்சி வீழ்ந்த பின்னர் தமிழகத்தில்
வாழ்ந்தவர்கள். அவர்கள் ஊர்தோறும் சென்று சிற்றரசர்களையும் வள்ளல்களையும் பாடிப்
பிழைத்து வந்தார்கள். ஒரு சமயம் அவர்கள் திருஆங்கூர் என்னும் ஊரில் உள்ள
கோவிலுக்குச் சென்றனர். வழி நடந்த களைப்பும் பசியும் அவர்களை வாட்டியதால் பகல்
பூசை நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் பூசையின்போது
இறைவனுக்குப் படைக்கும் தயிர்ச்சோறு, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்
போன்றவற்றைப் படைத்த பின் கோயிலுக்கு வரும் அடியார்களுக்கு வழங்குவது வழக்கம்.
பகல் நேரம் வந்தது. பூசை மணி ஒலிக்க சங்கு ஊத, பூசை நடைபெற்றது. அப்பூசையில்
வைக்கப்படும் தட்டில் அமுது இல்லை. அதற்குப் பதில் சுட்ட செங்கல்லுக்கு மேல்
ஈரத் துணியைப் போர்த்தி வைத்து அருச்சகர் படைத்ததைக் கண்டார். பூசை முடிந்ததும்
பசி தாளாத குருடர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட படையலை அருச்சகர்
கொடுக்காமலிருக்கவே அவரைக் கேட்பதற்குப் பதில் அவ்விறைவனைப் பார்த்து,
தேங்கு புகழ் ஆங்கூர் சிவனே அல்லாளி அப்பா
நாங்கள் பசிதிருக்க நியாயமோ?
என வெண்பாப் பாடல் வாயிலாகக் கேட்டார். இதைக் கேட்ட முடவரான
புலவர்
போங்காணும் கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
சோறுகண்ட மூளீயார்சொல்?
கல்வியை education industry என்று அழைத்தார்கள். கல்வி ஒரு பெரிய வணிகமாக மாறிவிட்டது. அடுத்து medical industry என்று அழைத்தார்கள். மருத்துவமும் ஒரு பெரிய வணிகமாக மாறிவிட்டது. சமயமும் religious industry ஆகிவிட்டது. மூட பக்தர்களைப் பயமுறுத்திக் காசு கறக்கச் சடங்குகள், ஹோமங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் எனப் பலவிதமான உத்திகளையும் தந்திரங்களையும் கோயில் முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள்.

குரு – அறிவியல் கண்டு பிடித்த தொலைக்காட்சியில் எஸ்பி இம்போட்டேர்ஸ் செய்யும் தளபாட
விற்பனை விளம்பரம் மாதிரி கோயில்களும் பக்தியை விற்பனை செய்ய விளம்பரம்
செய்கின்றன. நீ பார்க்கவில்லையா?
சீடன் - பார்த்தேன்.; கன்னிப் பெண்கள் விளக்குப் பூசை செய்தால் நல்ல கணவன்
விரைவில் கிடைப்பானாம். திருமணமான சுமங்கலிகள் செய்தால் தாலி நிலைக்குமாம்.
அதாவது கணவர்மார்களுக்கு நீண்ட அகவை பலமாம். ஒரு விளக்குப் பூசையின் விலை 101
டொலர். ஒரே பொழுதில் அய்யருக்கு 40,400 டொலர் வரியில்லாத வருமானம். இதில்
கருவறையில் நீஷ பாசையில் மந்திரம் சொல்ல மாட்டோம் என்று அடம் பிடிப்பது வேறு.
இந்த அய்யர்மார் வன்னி மக்களுக்கு ஒரு டொலர் கொடுத்ததில்லை. எங்களது மக்களது
மூடத்தனத்தை முதலாக வைத்துக்கொண்டு கோயில்கள் பக்தி வாணிகம் செய்கின்றன. இதை
யாருக்குச் சொல்லி அழுவது? இந்தப் பெண்களிடம் பட்டினியால் வாடும்
வன்னிமக்களுக்கு உதவுங்கள் என்றால் சில்லறை தருகிறார்கள். பலர் அதுவும்
தருவதில்லை.
குரு – நீ சொல்வதைப் பார்த்தால் ஆண்டொன்றுக்கு பல மில்லியன் கணக்கில் வருமானம்
கிடைக்கிறது?
சீடன் - அதேதான் குருவே! வருமானத்துக்கு வரியும் இல்லை. இந்தக் கோயில்
மட்டுமல்ல. ரொறன்ரோவில் இருக்கும் 60 க்கும் மேற்பட்ட கோயில்களில் பக்தி வாணிகம்
ஓகோ என்று நடக்கிறதாம். ஸ்காபரோவில் ஒரு சின்னக் கோயில்
15 நாள் நடந்த திருவிழாக் காலத்தில் ஒரு இலட்சத்துக்கு
மேலாக அடியார்களிடம் இருந்து கறந்துவிட்டதாம்.
குரு – கோயிலுக்கு மட்டுமல்ல, திருமணம், பூப்பு நீராட்டு விழா என புதுப்
பணக்காரர்கள் ஆடம்பரச் செலவு செய்கிறார்கள். திருமணம் என்றால் ஆயிரம்
விருந்தினர்களுக்கு பத்துவகைக் கறியோடும் பால் பழத்தோடும் அறுசுவை விருந்து
வைக்கிறார்கள். பூப்பு நீராட்டு விழா என்றால் உலங்குவானூர்தியில் உலா!
இவர்களுக்கு வன்னியில் வாடும் எங்களது சொந்தங்கள் பற்றி எள்ளளவு கவலைதானும்
இல்லை.
சீடன் - இந்த அழகில் “சொந்தங்களே! ஏதிலியாய் அலையும்
எங்களில் இறைவனைக் காணுங்கள்” என்றோ
“அடியார்களே --- நான் பசியாய் இருக்கிறேன் எனக்கு சாப்பாடு தாருங்கள்”
என்றோ அழும் குரல் யார் காதில் விழப் போகிறது?
“ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்” என்ற அண்ணாவின் பொன்மொழி
யார் இதயத்தைத் தட்டுகிறது? மேலும் வன்னியில் பசித்து அழும் குழந்தை என்ன
ஞானசம்பந்தனா? அழு குரல் கேட்டு சிவன் பார்வதி நேரில் இடப வாகனத்தில்
காட்சியளித்து பொற்கிண்ணத்தில் பால் கறந்து கொடுக்க? .இது சூத்திரக் குழந்தை;
ஆயிற்றே!
குரு – எப்போது எங்கள் மக்கள் திருந்துவார்களோ தெரியாது! (Muzhakkam - September 05,2008)
குரு – சீடன்
தமிழன்
எத்தனை இழிவுகளைச் சுமந்து வாழ்கிறான்
சீடன் - தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.
தகதிமிதோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்.........
குரு – கிழமை இறுதியில் ஏதோ நடன அரங்கேற்றத்துக்குப் போய் இருக்கிறாய் என்று
சொல்!
சீடன் - ஆமாம் குருவே! நீங்கள் சொல்வது நூறு விழுக்காடு சரி. நீண்ட
இடைவெளிக்குப் பின்னர் அரங்கேற்றம் ஒன்றுக்குப் போயிருந்தேன். அதன்
பாதிப்புத்தான் என்னை அறியாமல் வெளிவந்துவிட்டது.
குரு – விட்டால் ஆடல்கலையை ஒரு கை பார்த்துவிடுவாய் போலிருக்கிறது? ஆடல் கலையைக்
கற்பது எளிதல்ல. அதற்கான உடல்வாகு இருக்க வேண்டும். நல்லாசிரியரிடம் ஆண்டுக்
கணக்கில் முறைப்படி பாடம் கேட்க வேண்டும்.
சீடன் - இதையும் கேளுங்கள் குருவே! சம்போ! சிவ சம்போ! யுக சம்போ!
குரு - என்ன தெலுங்குப் பாட்டை அவுட்டு விடுகிறாய்? அரங்கேற்றம் ஏறியவர்
தெலுங்கரா?
சீடன் - இல்லை! இல்லை! அரங்கேறியவர் அசல் தமிழர். நட்டுவனார் அசல் தமிழர்.
பாடியவர் அசல் தமிழர். பக்க வாத்தியம் மட்டும் கொஞ்சம் கலப்பு!
குரு – பின் ஏன் தெலுங்கு?
சீடன் - இசை என்றால் தெலுங்கு. வழிபாடு என்றால் வடமொழி. அரங்கேற்றம் என்றால்
பாதி ஆங்கிலம். இதுதான் தமிழனின் தலைவிதி. தமிழ்த்தாய் ஏழை போல் காட்சி
அளிக்கிறாள். அரங்கேற்றத்துக்கான நிகழ்ச்சி நிரல் முற்றிலும் ஆ;ங்கிலத்தில.
தமிழ்ச் சொல் மருந்துக்கும் இல்லை! வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் மட்டும்
தனது வாழ்துக்களை தமிழில் எழுதியிருந்தார். நிகழ்ச்சி அறிவிப்பைக் கூட முதலில்
ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் சொல்ல வைத்தார்கள். ஆனால் மதுரக் குரலுக்குச்
சொந்தமான ஹமீததைக் கூட ஆங்கில அறிவிப்புக்குப் பின்னர் தமிழில் அறிவிப்புச்
செய்ய வைத்து விட்டார்கள். கடல் கடந்து பறந்து வந்த அவருக்கு ஒரு மாலை போட்டு
மேடையில் மேன்மைப் படுத்தப்படவும் இல்லை. குடும்ப நண்பர் என்றால்
மேன்மைப்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஏதாவது இருக்கிறதா?
குரு – பரதக் கலை - கூத்துக் கலை – தமிழர்களுடைய முதிசம் ஆயிற்றே? இற்றைக்கு
ஆயிரத்து எண்ணுhறு ஆண்டுகளுக்கு முன் மாதவிப் பொன்மயிலாள் ஆடல், பாடல், அழகு
மூன்றையும் அய்ந்து அகவையில் இருந்து கற்று பன்னிரண்டாவது அகவையில் அரங்கேறினாள்.
மேடையில் ஆடலாசிரியன், இசையாசிரியன், இயற்றமிழாசிரியன், குழலாசிரியன், தண்ணுமை
(மத்தளம்) புலவன், யாழ்ப் புலவன் ஆகியோர் உடனிருக்க நாட்டிய நன்னூல் நன்கு
கடைப்பிடித்து அரங்கேறினாள்.
சீடன் - நீங்கள் சொல்வது சிலப்பதிகாரக் காப்பிய காலம். இந்தக் காலத்தில்
இயற்றமிழாசிரியரை மட்டுமல்ல தமிழையே காணோம். ஆடுகிறவருக்கும்
ஆட்டுவிக்கிறவருக்கும் தமிழே தெரியாது. எல்லாம் ஆங்கிலம் - தெலுங்கு மயம்.
குரு – ஏன் அப்படி? எல்லோரும் தமிழர்கள்தானே?
சீடன் - பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ்மொழி வரலாறு தெரியாது. அதன் சீரும்
சிறப்பும் நீர்மையும் அழகும் தொன்மையும் வண்மையும் தெரியாது தமிழின வரலாறு
தெரியாது. இதனால் தமிழில் பேசினால் எழுதினால் தங்கள் தகைமை குறைந்துவிடும் என்று
பயப்படுகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்கிறார்கள்
இல்லை. பொருள், அதிகாரம், ஆடை அலங்காரம் போல் ஆங்கிலமொழியும் ஒருவரது தகைமையைப்
பறைசாற்ற ஒரு கருவியாக அல்லது ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இல்லாவிட்டால்
தமிழர்கள் தாய்மொழியான தமிழைப் புறக்கணிக்க - இரண்டாம் இடத்துக்குத் தள்ள -
எந்த ஏதும் இல்லை.
குரு – யாராவது சிறப்பு விருந்தினர் வந்திருப்பாரே? அவன் என்ன சொன்னார்?
சீடன் - மிருதங்க வித்துவான் கலைமாமணி திருவாரூர் பக்தவச்சலம் அவர்கள்தான்
சிறப்பு விருந்தினர். அவர் ஒருவருக்குத்தான் தமிழின் சிறப்புத் தெரிந்திருந்தது.
பரதக்கலை பற்றி, அதன் நுணுக்கம் பற்றி, அதன் நளினம் பற்றி ஆங்கிலத்தில்
எடுத்துச் சொல்லமுடியாது எனவே தமிழிலேயே பேசுகிறேன் என்று சொல்லி தமிழிலேயே
பேசினார். இடைக்கிடை ஆங்கிலத்தைக் கலந்தாலும் ஒப்பீட்டளவில் அவரைப் பாராட்ட
வேண்டும். கலைமாமணி பக்தவச்சலம் அவர்களாலேயே பரதப் பற்றி ஆங்கிலத்தில் விளக்க
முடியாது என்று கூறும்போது பரதம் பழக்கும் நட்டுவனார்கள் நடனத்தை ஆங்கிலத்தில்
எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பது புரியவில்லை. அதேபோல் தமிழ்; தெரியாத
மாணவிகள் எப்படி அதனை ஆங்கிலத்தில் உள்வாங்கிக் கொண்டு பாவத்தை முகத்தில்
காட்டுகிறார்களோ தெரியவில்லை!
குரு – நன்றியுரை இருந்திருக்குமே?
சீடன் - இருந்தது. நன்றியுரையை தமிழில் தொடங்கியவர் “இங்கு வருகை தந்திருக்கும்
விருந்தினர் சிலருக்கு தமிழ்த் தெரியாது. எனவே ஆங்கிலத்தில் பேசப் போகிறேன்.
ஆங்கிலத்தில் பேசினால் அது தமிழர்களுக்கும் விளங்கும்” என்றார். உடனே அவையோரிடம்
இருந்து பலத்த கைதட்டல். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது தமிழில் பேசுங்கள்
என்று நான் எப்படி அவருக்குச் சொல்வது?
குரு – கை தட்டினார்களா? சரியான மந்தைக் கூட்டமாக இருக்கிறதே?
சீடன் - அரங்கேறிய நர்த்தகிக்கு தமிழ் தெரியும். அவராவது தமிழில் சில வார்த்தை
பேசுவார் என்று பார்த்தால் அவரும் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினார்!
குரு – கனடிய அரசியல்வாதிகளே பேச்சைத் தொடங்கும் போது இரண்டொரு தமிழ்ச்
சொற்களைப் பாடமாக்கிச் சொல்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜிம்
கரிஜியானிஸ் மேடையில் “வணக்கம்” சொல்லி பேச்சைத் தொடங்குகிறார். பேச்சை
முடிக்கும் போது “நன்றி” என்று சொல்லி முடிக்கிறார்!
சீடன் - நன்றாகச் சொன்னீர்கள் குருவே! தமிழன்தான் தமிழை ஒதுக்குகிறான். தமிழனது
வீட்டுமொழி தமிழ் இல்லை. கோயில் வழிபாடு தமிழில் இல்லை. இசை தமிழில் இல்லை.
திருமணம் தமிழில் இல்லை. பிள்ளைகளது பெயர் தமிழில் இல்லை. இறுதிக்கடன் கூட
தமிழில் இல்லை. சுத்ததமிழ்; சைவக் குருமார் வடமொழி மந்திரத்தை நெட்டுருச் செய்து
ஒப்புவிக்கிறார்கள். “பைந்தமிழ்மொழியை எவன்
பழித்தாலும் பழித்தவன் தலை கொண்டு வாடா அய்ந்து துண்டாக வெட்டி அடுப்பில்
வைப்போம்” என்று உணர்ச்சிக் கவிஞர் பாட்டைப் படித்து யாருக்கு சொரணை வருகிறது? இத்தனை இழிவுகளையும் தமிழன் சுமந்து கொண்டிருக்கிறான். இரண்டு கால்
மாடுகள் போல் வாழ்ந்து மடிகிறான்.
குரு – அதனால்தான் தமிழ்மொழி அடுத்த நூறு ஆண்டுகளில் மறைந்துவிடும் என்று
எதிர்கூறல் சொல்கிறார்கள்!
சீடன் - கனடாவைப் பொறுத்தளவில் அய்ம்பது ஆண்டுகள் போதும். அதன் பின்னர் தமிழை
வெறுமனே வருவாய்க்குப் பயன்படுத்தும் வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்
போன்றவை என்ன செய்யப் போகின்றனவோ எனக்குத் தெரியாது! இன்னும் ஒன்று. மண்டபத்தை
விட்டு வெளியில் வந்தபோது எனது நண்பர் கட்டிடச் சுவரைப் பார்த்து அதில் என்ன
எழுதியிருக்கிறது என்று கேட்டார். “ஆர்மீனியன் தனது மொழியில் கட்டிடத்தின் பெயரை
எழுதி வைத்திருக்கிறான்” என்றேன். ஆர்மீனியன் எங்கே? தமிழன் எங்கே? ஏணி
வைத்தாலும் எட்ட முடியாதே! (முழக்கம் - ஆகஸ்ட்
22, 2008)
குரு - சீடன்
“பழமை பழமை என்று பாவனை பேசலன்றி.........
சீடன் - “பழமை பழமை என்று பாவனை பேசலன்றி பழமை இருந்த நிலை பாமரர் ஏதறிவார்!” என பாரதி நூறாண்டுகளுக்கு முன் பாடியிருக்கிறார்.
குரு – ஆமாம். “கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்வாரடி! நாளும் மறப்பாரடி!” என்றும் பாடியிருக்கிறார்.
சீடன் - தமிழர்கள் போல் பழமை பேசுவதில் கெட்டிக்காரர்கள் வேறுயாருமில்லை. யாரோடாவது பேச்சுக் கொடுத்துப் பாருங்கள் “எனது பாட்டன் எண்பது வயதிலும் கல்லுப் போல் இருந்தார். ஒரு பல் விழவில்லை. ஒரு நாள் பார்த்து அவர் மருந்து குடித்ததில்லை. அந்தக் காலத்தில் அப்பம் ஒரு சதம், ஒரு கொத்து அரிசி ஒரு பணம்.......................ஆனால் பழமைவாதிகள் சொல்ல மறந்த சங்கதிகளும் உண்டு.
குரு – என்ன சங்கதிகள்?
சீடன் - நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் சராசரி அகவை 31. ஒரு குடும்பத்தில் 10 பிள்ளைகள் பிறந்தால் 2 தான் மிஞ்சும். காலை உணவு பனாட்டு. மதியம் பனங்காய். இரவு ஒடியல் பிட்டு. சராசரி வருமானம் நாளொன்றுக்கு 1 ரூபா மட்டுமே!
குரு – அப்படியா?
சீடன் - தமிழர்களை விட்டு விடுங்கள். நூறு ஆண்டுகளுக்கு முன் இன்று குபேரநாடாகத் திகழும் அமெரிக்காவில் வாழ்க்கைத் தரம் எப்படி இருந்தது என்பதை ஒரு பட்டியலாகப் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
குரு – எப்படி இருந்தது?
சீடன் - ஒரு அமெரிக்கனின் சராசரி அகவை – 47 ஆண்டுகள்! மக்கள் தொகை 89 மில்லியன. 2008 இல் 301
மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளையர் அல்லாதார் 8 – 1
விழுக்காட்டினராக இருந்தார்கள். இப்போதைய விழுக்காடு 1 – 4 என அதிகரித்துவிட்டது.
பதினான்கு விழுக்காடு வீடுகளில் மட்டும் குளியல் அறை இருந்தது.
எட்டு விழுக்காடு வீடுகளில் மட்டும் தொலைபேசி இருந்தது.
மொத்தம் 8,000 மகிழுந்துகள் மட்டும் இருந்தன. 144 மைல் தூர வீதிகள் மட்டும் கல்பதித்த வீதிகள்!
வண்டிகளின் ஆகக் கூடிய வேகம் மணிக்கு 10 மைல்!
சராசரி ஒரு வேலையாளுக்குக் கூலி – மணிக்கு 22 சதம்! ஆண்டொன்றுக்கு 200 – 400 டொலர் வரை! பல்
மருத்துவர் வருமானம் ஆண்டொன்றுக்கு 2500 டொலர். விலங்கு வைத்தியர் – 1,500 – 4000 டொலர். பொறியாளர் – 5,000 டொலர்.
மகப்பேறு 95 விழுக்காடு வீட்டில் இடம்பெற்றது.
மருத்துவர்களில் 95 விழுக்காட்டினர் கல்லூரியில் படிக்காது பெரும்பாலும் தரமற்ற மருத்துவப் பள்ளிகளில் படித்தவர்கள்.
சீனி விலை ஒரு இறாத்தல் 4 சதம்! முட்டை ஒரு டசின் 14 சதம். கோப்பி ஒரு இறாத்தல் 15 சதம்.
பெண்கள் தங்கள் தலையை மாதம் ஒருமுறை போறக்ஸ் அல்லது முட்டை வெள்ளக்கருவைப் பயன்படுத்தி கழுவினார்கள்.
கனடாவில் ஒரு சட்டம் இருந்தது. வறியவர்கள் யாரும் நாட்டுக்குள் நுழையக் கூடாது.
பின்வரும் நோய்கள் இறப்புக்கு முக்கிய காரணமாக இருந்தன.
நுரையீரல் நோய் (Pneumonia) காசநோய், வயிற்றோட்டம், இருதயநோய் மற்றும் மாரடைப்பு.
லாஸ் வேகாஸ், நெவாடா மக்கள் தொகை 30 மட்டுமே!
குறுக்கெழுததுப் போட்டி, அடைக்கப்பட்ட பியர், பனித் தேநீர் கண்டு பிடிக்கப்படவில்லை
தந்தையர் நாள், தாயார் நாள் இருக்கவல்லை.
உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த அமெரிக்கர்களின் விழுக்காடு 5 மட்டுமே!
மருந்துக் கடைகளில் கஞ்சா, hநசழin மற்றும் மயக்க மருந்து விற்கப்பட்டன.
Heroin உடல் தோற்றத்தை அதிகரிக்கும் மனதுக்கு உற்சாகத்தை அளிக்கும் வயிறு மற்றும் குடலை சுத்திகரிக்கும் என விளம்பரம் செய்யப்பட்டது.
பதினெட்டு விழுக்காடு வீடுகளில் குறைந்தது ஒரு முழு நேர வேலையாள்
வேலையில் வைக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்கா முழுதும் 230 கொலைகள் இடம்பெற்றன! 2008 இல் 17,000 கொலைகள்.
குரு – மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் இருடிகள், கின்னரர், கிம்புருடர் ... வாழ்ந்த இந்தியா அமெரிக்காவை விடப் படு மோசமாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை?
சீடன் - ஆம் குருவே! அடுத்த 100 ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் என நினைத்தால் தலை சுற்றுகிறது குருவே! (Muzhakkam - Augut 15,2008)
குரு
– சீடன்
மடுமாதா சொரூபத்தைக் கடத்திய கத்தோலிக்க பாதிரிமார்
சீடன் - நாட்டில் திருட்டு அதிகரிததுக் கொண்டே போகிறது. யார், எதைத் திருடுவது
என்ற கணக்கே இல்லாது போய்விட்டது.
குரு – கடந்த திங்கள்கிழமை மாலை (21 யூலை 2008) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள
வீடொன்றில்; 7 இலட்சம் பணத்தையும் தங்கநகைகளையும் கொள்ளையடித்தது தொடர்பாக
அரசின் கூலிப்படையான பிள்ளையான் குழுவைச் சேர்ந்த அய்ந்து ஆசாமிகளை காவல்துறை
கைது செய்ததைச் சொல்கிறாயா?
சீடன் - சேச் சே! அதெல்லாம் சின்னக் கொள்ளை. கொள்ளை அடிப்பதற்காகவே திருடர்கள்
அநதக் குழுவில் சேர்கிறார்கள். கல்முனைப் பகுதியிலும் இதே குழுவைச் சேர்ந்த
கந்தசாமி புஷ்பராசா ஒரு கோடிக்கு மேல் கொள்ளை அடித்துள்ளாராம். ஆனால் காவல்துறை
அவரைக் கைது செய்யாது சும்மா விட்டு வைத்திருக்கிறது. கொள்ளையில் அவர்களுக்கும்
பங்குபோல் தெரிகிறது. அது போகட்டும். நான் சொல்ல வந்தது சிலை கடத்தல்
............ ...................
குரு – பொறு... பொறு.... கோயில் சிலைகள் கடத்துவது சர்வ சாதாரணம். அது நல்ல
வருவாயுள்ள தொழில். தமிழகத்தில் நெடுங்காலமாக நடந்து வருகிறது. இந்த சாமி சிலை
கடத்தலை முழுநேரத்தொழிலாகக் கொண்டுள்ள குடிமக்களே இருக்கிறார்கள். சில பல
சமயங்களில் கோயில் குருக்கள்மாரும் இந்தத் தொழிலைச் செய்வதுண்டு. தங்கத்தில்
செய்த சிலைகளை கொஞ்சம் கொஞ்கமாகச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். அய்ம்பொன்னால்
செய்த சிலையைக் களவாடி விட்டு அதற்குப் பதில் செப்பினால் செய்த சாதாரண சிலையை
வைத்துவிடுவார்கள்.
சீடன் - நான் சொல்லவந்தது வேறு செய்தி. பாவமன்னிப்பு ........
குரு - அநதக் செய்தியும் எனக்குத் தெரியும். இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட
முருகப் பெருமானின் சிலை தமிழக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக அண்மையில்
தமிழோசையில் சொன்னதைத்தானே சொல்ல வருகிறாய்......அந்தச் சிலை திருகோணமலை
மாவட்டத்தில் உள்ள மூதூர் வெருக்கலம்பதி முருகன் கோயிலில் இருந்து 2006 ஆம்
ஆண்டு இடம்பெற்ற சண்டையின் போது காணாமல் போன சிலை என மூது}ர் வெருகல் கோயில்
அறங்காவல் அவையின் தலைவர் சிதம்பரப்பிள்ளை தமிழோசையிடம் தெரிவித்திருக்கின்றார்.
தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் ஒரு தனி ஆளிடம் இருந்து அந்தச் சிலையை காவல்துறை
கைப்பற்றியிருக்கிறது. இந்தச் சிலையின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கையில் இது
தோராயமாக 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலை என்று தொல்லியல் ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். அய்ம்பொன்னால் வடிக்கப்பட்ட இந்தச்; சிலையின் பழமை
காரணமாகவும் கலைநேர்த்தி காரணமாகவும் அதன் அனைத்துலக் சந்தைவிலை 50 இலட்சத்தையும் (இலங்கை நாணயத்தில் ஒரு
கோடி) தாண்டும் என்று தமிழக அரசின் சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் காவல்துறை
துணை அதிகாரி (DIG) ஆறுமுகம் தமிழோசைக்குக் கொடுத்த செவ்வியில் தெரிவித்தார்.
பாவம் முருகப் பெருமான்! இரண்டு மனைவிகளோடு ஒவ்வொரு நாளும்
ஆறுகாலப் பூசையின் போது புக்கை, மோதகம், வடை, சுண்டல், முறுக்கு, வாழைப்பழம்,
பலாப்பழம், மாம்பழம், பால், தயிர் என்று வயிறாரச் சாட்பிட்டவர் இப்போது
அநாதரவாகப் பட்டினியால் வாடுவதை நினைத்தால் பாவமாக இருக்கிறது!
சீடன் - என்னைக் கொஞ்சம் பேசவிடுங்கள் குருவே! நான் சொல்ல வந்தது முற்றிலும்
வேறான செய்தி. மனிதர்கள் பாவம் செய்தால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கும்
பாதிரிமாரே இந்தப் பாவத்தைச் செய்திருக்கிறார்கள்!
குரு - இதென்ன புதுக்கதை?
சீடன் - புலிகளுக்கும் - சிங்கள இராணுவத்துக்கும் மன்னாரில் சண்டை மும்மரமாக
நடந்த காலத்தில் மடுமாதா சொரூபத்தை பாதிரிமார் அங்கிருந்து தேவன்பிட்டி என்ற
ஊருக்குப் பத்திரமாக எடுத்துச் சென்றார்கள் அல்லவா? இப்போது அந்த மடுமாதா
சொடூபத்தைத்தான் கத்தோலிக்க பாதிரிமார்கள் யாருக்கும் தெரியாமல் கடத்திக் கொண்டு
போயிருக்கிறார்கள்!
குரு – பாதிரிமார்கள் மடுமாதாவைக் கடத்தினார்களா? எப்படிக் கடத்தினார்கள்?
என்னால் நம்ப முடியவில்லையே?
சீடன் - என்னாலும் நம்பமுடியவில்லை குருவே! ஒரு நோய்காவி வண்டியில் வைத்து
களவாக ஓமந்தை வழியாக கடத்திப் போய்விட்டார்கள்! நோய்காவி வண்டி, பயணம்
செய்தவர்கள் பாதிரிகள் என்பதால் அதனைப் புலிகள் சோதனை செய்யாது
விட்டுவிட்டார்கள்! செய்தி அறிந்த மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்!
குரு – பாவ மன்னிப்புக் கொடுப்பவர்களே பாவத்தை செய்கிறார்கள் என்று சொல்?
“இரண்டு தரப்பினரும் மடுமாதா தேவாலய வளவைவிட்டு இரண்டு கிலோமீற்றர் தொலைவிற்குச்
செல்ல வேண்டும் - அந்தப் பகுதி புனித பகுதியாக அறிவிக்க வேண்டும் - அப்படிச்
செய்தால் மாத்திரமே மடு அன்னையின் சொரூபம் மீண்டும் எடுத்துவரப்படும்” என்று
ஆயர் யோசேப் இராயப்பு சொன்னாரே?
சீடன் - சொன்னார் சுரக்காய்க்கு உப்பில்லை என்று! வி. புலிகள் மடுமாதா
தேவாலயத்தை விட்டு எப்போதோ போய்விட்டார்கள். ஆனால் சிங்கள இராணுவம் மடுமாதா
தேவாலயத்தை திருத்திக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் திருவிழாவாம்!
குரு - பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல்
குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம்
அனுப்பியிருந்தாரே? அவரா இப்படி? அக்கடிதத்தில் “இலங்கையின் மிகப் பெரிய
தேவாலயங்களில் ஒன்றான மன்னார் விக்டோரி தேவாலயத்தில் சிறிலங்கா கடற்படையினரது
தாக்குதலில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தியுள்ளமையால் தேவாலயத்தின் புனிதம்
பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பொதுமக்களின் சடலங்களை
எரியூட்டிவிட்டு வந்திருகிறேன். உள்ளுர் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால்
அச்சமடைந்த நிலையில் உள்ளனர். பேசாலையில் உள்ள 7
ஆயிரம் மக்கள் தங்களை இந்தியாவுக்கோ அல்லது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதிக்கோ அனுமதிக்குமாறு கெஞ்சுகின்றனர்” என்றெல்லாம் அந்தக்
கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்?
சீடன் - “எல்லாம் ஊருக்குச் சொன்னேனடி கண்ணே உனக்கல்லடி பெண்ணே” என்று சொன்ன
குருவின் ;கதைதான். இப்போது இதைப் படியுங்கள்.
“The civil war in Sri Lanka between the
government and the separatist Tamil Tigers has now reached a point where
opportunities for dialogue are basically nonexistent, says the archbishop of
Colombo. Speaking from Colombo to Vatican Radio, Archbishop Oswald Gomis
added that “fighting will likely prove to be the only way to end the
conflict.” (Daily Mirror – July 23, 2008)
“ஸ்ரீலங்கா அரசுக்கும் பிரிவினைவாத விடுதலைப்
புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு போர் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம்
என்ற எல்லையைக் கடந்துவிட்டது. அதற்கான வாய்ப்புகளோ அடிப்படையோ இப்போது இல்லாது
போய்விட்டது” எனக் கொழும்பு ஆயர் சொன்னார். கொழும்பில் இருந்து வத்திக்கன்
வானொலியில் பேசிய ஆயர் ஒஸ்வால்ட் கோமிஸ் மேலும் சொன்னதாவது “மோதலை முடிவுக்குக்
கொண்டுவர சண்டைதான் ஒரே வழியாக அமையும்.” (டெயிலி மிரர் – யூலை 23,2008)
குரு – சிவ, சிவ, இராக் மீதான புஷ்சின் வலிந்த போரை ஆதரிக்கும் அமெரிக்க
கிறித்தவ பாதிரிகள் மாதிரி இவரும் போரை ஆதரிக்கிறார். இதைப் படித்துவிட்டு
தென்னிலங்கை இனவெறியர்களான சரத் பொன்சேகா, கோத்தபாய இராசபச்ச, சோமவன்ச வீரவன்ச,
சோமவன்ச அமரசிங்கா, எல்லாவல மேத்தானந்த தேரர் போன்றோர் மெத்த மகிழ்ச்சி
அடைவார்கள்!
சீடன் - சரியாகச் சொன்னீர்கள் குருவே! (முழக்கம்
- யூலை 25, 2008)
குரு சீடன்
பிரார்த்தனை செய்யும் வாயைவிட கொடுக்கும் கை
மேலானது
சீடன் - பொது நன்மைக்கு நிதி திரட்டுபவர்கள் கணக்குக் காட்டுவதில்லை. விதி
விலக்கு இருந்தாலும் பொதுவான எண்ணம் அதுதான். கணக்கைக் காட்டச் சொன்னால்
சிக்கல் தொடங்கிவிடும்!
குரு – கணக்கைக் காட்டச் சொல்லிக் கேட்ட போதுதான் கருணா விலக முடிவு
செய்தார்.
சீடன் - இங்கும் அதற்கு எடுத்துக்காட்டு உண்டு. ஆனால் செந்தில் குமரன் என்று
ஒருவர் இருக்கிறார். அவர் இதற்கெல்லாம் விதி விலக்கு. நிவாரணம் 4 - 10 வரை திரட்டிய மொத்தம் 627,138.51 டொலருக்கும்
விலாவாரியாக கணக்குக் காட்டி 40 பக்கங்களில் நிவாரணம் என்ற செய்தித்தாளையே வெளியிட்டுள்ளார்!
யார், யார் எவ்வளவு தொகை பங்களித்தார்கள் என்ற விபரம் அதில் அகரவரிசையில்
தொழில்வாரியாகத் தரப்பட்டுள்ளது. தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
நிவாரணம் 3 இன் மூலம்
கனடா புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து ஒன்பது குழந்தைகளுக்கும் 3
வயதுவந்தவர்களுக்கும் இருதய மாற்று அறுவை வைத்தியத்துக்கு மொத்தம் 36,887.25 டொலர்களைக்
கொடுத்து உதவியுள்ளன.
குரு – ஒரு அய்ம்பதாயிரம் திரட்டினாலே கணக்கு வைப்பது வில்லங்கமாக இருக்கும்
அப்படி இருக்க 627,138.51
டொலருக்கு கணக்கு வைப்பது மிகப் பெரிய சாதனை.
சீடன் - பங்களித்தவர்களது பட்டியலைப் பார்த்தால் வசதி, வாய்ப்பு, பொருள்
வளம் படைத்தவர்களைவிட வசதி, வாய்ப்பு, பொருள் வளம் குறைந்தவர்களே கூடக்
கொடுத்துள்ளார்கள்.
குரு – கொடுப்பதற்கு காப்பகத்தில் இருக்கும் பணம் முக்கிய மல்ல. மனந்தான்
முக்கியம். வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனைவது உயர்வு என வள்ளுவர் கூறுவார்! உயர்வு என்பதை ஈதல் என்று மாற்றிச்
சொல்லலாம்.
சீடன் - இன்னுமொன்று. இம்மை கொடுப்பது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன்
ஆய் அல்லன் என்ற பாடல் வரிகளுக்கு அமைய நடப்பவர்கள் அதிகம் கொடுக்கிறார்கள்.
குரு – பணம் இருந்தும் கொடுக்காதவர்கள் பிச்சைக்காரர்கள். பணம் இல்லாது
இருந்தும் இயலுமட்டும் கொடுப்பவர்கள் வள்ளல்கள் என்கிறாய்?
சீடன் - அதேதான் குருவே! ரொறன்ரோவில் குறைந்தது
60 க்கும் மேற்பட்ட கோயில்கள் உண்டு. ஆனால் இந்த
நிதிக்கு நிதி வழங்கிய கோயில்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா குருவே?
குரு – நீயே சொல்லு!
சீடன் - எண்ணி இரண்டுதான். ஒன்று றிச்மென்ட் பிள்ளையார் கோயில் 10,000 டொலர்.
மற்றது கனடா கந்தசாமி கோயில் அறங்காவல் அவை. மண்டபத்தை கூலியின்றிக்
கொடுத்து உதவியது!
குரு – ஏனைய கோயில்கள் கொடுக்காததற்குக் காரணம் இருக்கிறது. அவை
புத்தியில்லாத பக்தர்களிடம் இருந்து பணத்தை அருச்சனை, அபிசேகம், விளக்குப்
பூசை, சுமங்கிலிப் பூசை, கோடி அகண்ட நாம அருச்சனை, எனச் சொல்லி சுரண்ட
இருக்கின்றனவே ஒழிய கொடுத்துப் பழக்கம் இல்லை. அது சரி. பென்ஸ், லெக்சஸ் என
சவாரி போகும் அய்யர்மாரும் குருக்கள்மாரும் கொடுக்கவில்லையா?
சீடன் - ஒரு குருக்கள், ஒரு அய்யா இருவர் மட்டும்தான் முறையே 100, 101 டொலர்
கொடுதிருக்கிறார்கள். தங்களை இந்துமத பீடாதிபதிகள் என்றும் இந்துமத குருமார்
என்றும் வருணிப்பவர்கள் ஒரு டொலரும் கொடுக்கவில்லை! பிரசித்தி பெற்ற அய்யர்
ஒருவர் கோயில் உள்ளேயே வரவேண்டாம் வெளியே போகுமாறு செந்திலை விரட்டி
விட்டாராம்! "நான் செஞ்சோலைக்கு நேரே கொடுத்து வருகிறேன்" எனச்
சொன்னாராம். வன்னியைக் கேட்டால் அப்படி யாரும் பணம் அனுப்புவதில்லை
என்கிறார்கள். அய்ந்து மில்லியனில் கோயில் கோபுரம் எழுப்பும் அய்யப்பன் கூட
கையை விரித்துவிட்டார்! தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்களைக் கூட
கோயில் பக்கம் அண்டவிடாது தடுத்துவிடுகின்றனர்!
குரு – தனிப்பட்டவர்களைப் பற்றிச் சொல்லவில்லையே?
சீடன் - தனிப்பட்ட முறையில் அதிகம் பங்களிப்புச் செய்தவர் வண. பிதா
பிரான்சிஸ் சேவியர் அடிகளார். மொத்தம் 4,600
டொலர் கொடுத்துள்ளார். வணிக அங்காடி பாபு கேட்டறிங் 8,100 டொலர்கள்!
தொழில்சார் நிறுவனம்
Canadian Medical and Dental
Association
மொத்தம் 10,000 டொலர்கள்! இலக்கை எய்தப் பிடித்த நாள்கள் 280. நிவாரணம் மூலம்
முழங்காவிலில் கட்டப்படும் வீடுகளின் தொகை 282.
குரு - இத்தோடு செந்தில் குமரன் நின்றுவிடக் கூடாது. அவரது தொண்டு
நாட்டுக்கு மேலும் மேலும் தேவை!
சீடன் - குருவே! இதனால்தான் பிரார்த்தனை செய்யும் வாயைவிட கொடுக்கும் கை
மேலானது எனப் பெரியோர்கள் சொல்கிறார்கள்!
குரு - இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார் என்றும் சொல்லலாம்!
சீடன் - உது அவ்வையார் சொன்னது.திருவள்ளுவர் இதைவிட அழகாகச் சொல்லியிருக்கிறார்.
குரு - எப்படி?
சீடன் -
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் உங்கு
ஆக்கம் எவனோ
உயிர்க்கு?
(மக்கள் உயிருக்கு அறத்தின் மேற்பட்ட
ஆக்கம் இல்லை)
குரு - சீடன்
பக்தியும் - புத்தியும்!
புத்திசாலித்தனம் அதிகரிக்க கடவுள் நம்பிக்கை குறைகிறது!
சீடன் - பக்தி இருக்கும் இடத்தில் புத்தி இருக்காது என்பது தந்தை பெரியார்
அவர்களின் பொன்மொழி. பொன்மொழி மட்டுமல்ல பொய்யா மொழி!
குரு – எதை வைத்துச் சொல்கிறாய்?
சீடன் - இங்குள்ள கணவன் - மனைவி இரண்டுபேர் ஒரு வீடு வாங்க முடிவுசெய்து தமிழ்
முகவர் ஒருவரது உதவியை நாடினார்கள்.
குரு – வேறு இனத்தவரை தேடி ஓடாமல் தமிழ் முகவர் ஒருவரைப் பிடிப்பது நல்லதுதானே?
சீடன் - யார் இல்லை என்று சொன்னது? வீடு வாங்கும் போது மட்டுமல்ல காய், கறி,
துணிமணி, உணவு போன்றவற்றை எம்மவரிடம் இருந்து வாங்கினால் கனடிய தமிழ்ச் சமூகம்
பொருளாதாரத்துறையில் முன்னேற வழிவகுக்கும்.
குரு – தமிழர்கள் தமிழர்களை ஆதரிக்க வேண்டும் என்று சொல்?
சீடன் - அதேதான். குறிப்பிட்ட முகவர் பொறுமையோடு இருபது முப்பது வீடுகளைக்
கூட்டிக்கொண்டு போய் காட்டினார். ஆனால் ஒன்றும் சரிவரவில்லை!
குரு – ஏனாம்?
சீடன் - வீடு வாங்குகிறவர்களுக்கு வாஸ்து சாத்திரத்தில் அபார நம்பிக்கை.
பார்த்த ஒவ்வொரு வீட்டையும் பரிசோதனை செய்து பரிசோதகரின் அறிக்கையை
தமிழ்நாட்டில் இருக்கும் வாஸ்து சோதிடருக்கு அனுப்புவார்களாம். வாஸ்து சோதிடர்
பார்த்துவிட்டு எல்லாம் பொருத்தம் ஆனால் கிணறு இருக்கிற இடம் சரியில்லை என்று
சொல்லி தள்ளிவிட்டு விடுவாராம்! இப்படி வீடுகளைப் பார்த்து பரிசோதனை அறிக்கை
பெறவே மூவாயிரம் டொலர் செலவழிந்து போச்சாம்!
குரு – என்ன விசர்க்கதை கதைக்கிறாய். ரொறன்ரோவில் உள்ள வீடுகளுக்கு எங்கே கிணறு
இருக்கிறது?
சீடன் - வாஸ்து சாத்திரத்தில் வீட்டுக்கு எந்தத் திசையில் கிணறு இருக்கிறது
என்பது மிகவும் முக்கியம். இங்கேயுள்ள வீடுகளுக்குக் கிணறு நடுவீட்டுக்குள்
இருப்பதுதால்தான் வாஸ்து சோதிடர் வீடுகள் பொருத்தம் இல்லை என்று
சொல்லிவிட்டார்!
குரு – மீண்டும் விசர்க் கதைதான் கதைக்கிறாய். இங்கே இருக்கும் வீடுகளுக்குக்
கிணறே இல்லை. பின் என்ன நடு, பக்கம் என்று அலம்பிறாய்?
சீடன் - நீங்கள் ஒன்று. வாஸ்து சாத்திரி கிணறு நடுவீட்டுக்குள் இருக்கிற
காரணத்தால் பொருத்தமில்லை என்று தள்ளிவிட்டது அசல் கிணற்றை அல்ல.
நடுவீட்டுக்குள் இருக்கும் தண்ணீர்த் தொட்டியை!
குரு – தண்ணீர்த் தொட்டியைக் கிணறு என்று வாஸ்து சாத்திரி எப்படிச் சொல்ல
முடியும்?
சீடன் - இரண்டிலும் இருப்பது தண்ணீர்தானே? வாஸ்து சாத்திரத்தை முனிவர்கள்
எழுதும் போது கிணறுதான் இருந்தது. தண்ணீர் தொட்டி இருக்கவில்லை. ஆனால் வாஸ்து
சாத்திரிக்கு தான் படித்த சாத்திரத்தை காலத்துக்கு ஏற்ப மாற்றத் துணிவில்லை.
அவருக்கு அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதையே குடிக்கும்
பாமர மனப்பான்மை.
குரு – அப்ப வீடு வாங்கின பாடுதான்!
சீடன் - இல்லை. ஒரு மாதிரி ஒரு வீட்டை வாங்கிப் போட்டினம். நடுவீட்டுக்குள்
இருந்த தண்ணீர் தொட்டியை பயசயபந க்குள் மாற்றி வைத்துவிட்டார்கள்!
குரு – இப்படி ஒரு முட்டாள்த்தனமான மூடநம்பிக்கையா? நக்கீரன் அய்யா
சோதிடத்தையும் சோதிடர்களையும் அக்கு வேறு ஆணி வேறு சல்லி வேறு ஆகக் கிழித்துச்
சோதிடப் புரட்டு எழுதியது வீண் என்று சொல்!
சீடன் - குருவே! சிலபேரைத் திருத்தவே முடியாது! இப்போது இந்தச் செய்தியைப்
படியுங்கள்.
இன்று பல்வேறு ஆய்வுகளில் புத்திசாலித்தனம் உள்ளோருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை
- என்ற உண்மை எண்பிக்கப்பட்டுள்ளது. புத்திசாலிகளும், அதிக நினைவாற்றலும்
கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பது
ஆய்வில் தெரிய வந்துள்ளது. உல்ஸ்டர் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட
ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல், அனைத்துலக அளவில் பலத்த எதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நூற்றாண்டில், இறை நம்பிக்கையும் மத நம்பிக்கையும் பெரிதும் குறைந்து
வருவதற்குக் காரணம் புத்திசாலிகள் மற்றும் நினைவாற்றல் உள்ளவர்களின் எண்ணிக்கை
அதிகரித்து இருப்பதே என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, புத்திசாலித்தனம் உள்ளவர்களில் 3.3 விழுக்காட்டினர் மட்டுமே கடவுள்
நம்பிக்கை, மத நம்பிக்கை கொண்டிருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் நடத்திய ஆய்வில் வெறும் 7 விழுக்காட்டினரே
கடவுள் நம்பிக்கையும், மத நம்பிக்கையும் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர், லின், ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத்தியில் இறை
நம்பிக்கை பெரிய அளவில் உள்ளது. ஆனால், அவர்கள் பருவ அகவைக்கு வரும்போது
புத்திசாலித்தனம் அதிகரித்து கடவுள் நம்பிக்கையைக் கைவிடுகின்றனர்.
மற்வர்களைவிட நன்றாகப் படிப்போரும், அதிகம் படித்தோரும் இறை நம்பிக்கையைக்
கைவிடுகின்றனர். இதற்குக் காரணம், அவர்களுக்கு புத்திசாலித்தனமும்,
நினைவாற்றலும் அதிகரித்து இருப்பதே.
குரு – நீ சொல்வது சரியாகததான் இருக்க வேண்டும். உன்னைப் பார்த்தாலே அந்த உண்மை
தெரிகிறது. புத்தியில்லாதபடியால்தான் மனிதர் உண்ண வேண்டிய உணவை பக்தர்கள்
செம்புக்கும் கல்லுக்கும் குடம் குடமாகப் பால், தயிர், நெய், தேன், இளநீர்
ஊற்றிக் கழுவுகிறார்கள்!
குருவும் - சீடனும்
தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க மகன் கும்பகோணத்தில் கோதானாம்!
சீடன் - குருவே! தாய் தெருத்தெருவாய் அலைந்து கிண்ணிப்பிச்சை எடுக்க மகன்
கும்பகோணத்தில் பிராமணர்களுக்குக் கோதானம் செய்தானாம்!
குரு – பழமொழியில் நீ ஒரு புலி என்பது எனக்குத் தெரியும். சொல்லவந்ததை சுற்றி
வளைக்காமல் நேரடியாகச் சொல்!
சீடன் - வன்னி பெருநிலப்பரப்பில் எங்களது மக்கள் இங்குள்ள மருத்துவ வசதிகளில்
ஆயிரத்தில் ஒரு பங்கும் இல்லாது அல்லல்படும்போது இருக்கிற மருத்துவ வசதிகள்
போதாதென்று மேலும் வசதிகளைப் பெருக்க நிதி திரட்டுவது அந்த மக்களுக்குச்
செய்யும் இரண்டகமாகும்.
குரு – யாரந்தப் பாவிகள்? வன்னியில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு
நிலவுகிறதாக நானும் கேள்விப்பட்டேன். குறிப்பாக கிளிநொச்சி மருத்துவமனையில்
மருந்துகள் மருந்துக்கும் கிடையாதாம்!
சீடன் - மண்ணையும் அதில் வாழும் எங்களது உறவுகளையும் மறந்தவர்கள் இந்தக்
கோதானத்தில் ஈடுபடுகிறார்கள்.
குரு - பசித்தவனுக்குத்தான் புசிக்கக் கொடுக்கவேண்டும். மூன்று நேரம்
மூக்குப்பிடிக்கச் சாப்பிடுகிறவனுக்குப் பாயாசம், வடை தேவையில்லை.
சீடன் - பசியோடு பலர் வாடப் பதினாறு கறிவகையோடும் பத்துவகைப் பச்சடியோடும்
அறுசுவை விருந்து சாப்பிடுகிறவர்கள் பாவத்தையே சாப்பிடுகிறார்கள். இங்குள்ள
கனடிய தமிழர் வாணிக அவை இங்குள்ள மருத்துவமனைக்கு நடைப் பயணம் மூலம்
பெருந்தொகைப் பணத்தைத் திரட்டிக் கொடுத்துள்ளது. கடந்த பத்தாண்டில் 150,000
டிடாலர் திரட்டிக் கொடுத்துள்ளதாம். இந்த ஆண்டு இலக்கு 50,000 டொலராம்.
குரு – ஏனாம்?
சீடன் - ஸ்காபரோ மற்றும் கிறேஸ் மருத்துவமனைகளில் தமிழர்களுக்கு எனத் தனி
மருத்துவ அறைகள் கட்டத்தானாம் இந்த நன்கொடை. அங்கு மக்களுக்கு அடிப்படை
மருத்துவமும் மருந்தும் இல்லாதபோது இங்கு தமிழர்களுக்குத் தனியான மருத்துவ
அறைகளைக் கட்டுவதற்கு நிதி சேகரிக்கிறார்கள்! இவை வேண்டாம் என்று சொல்ல நாம்
வரவில்லை. ஆனால் எந்தப் பின்புலததில் செய்யப்படுகிறது என்பதுதான் எமது கேள்வி.
எதற்கு முன்னுரிமை என்பதுதான் எமது ஆதங்கம். தமிழ் என்ற பெயரை அடையாக
வைத்திருந்தால் மட்டும் போதாது. நடைமுறையிலும் அதற்கு ஏற்ப நடந்து காட்ட
வேண்டும்.
குரு – அடுத்து என்ன தமிழர்களுக்குத் தனி மருத்துவமனை கட்டப் போகிறார்களா?
சீடன் - அது எனக்குத் தெரியாது. கட்டினாலும் கட்டுவார்கள்!
குரு – பாரதி கலைக் கோயில் என்ற அமைப்பும் அண்மையில் 37,000 டொலர்களை ஒரு இசை
நிகழ்ச்சியின் மூலம் திரட்டி சுழரபந சுiஎநச ஏயடடநல மருத்துவமனைக்குக்
கொடுத்ததாம். நாங்கள்தான் மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளுர் அரசு என வருவாயில்
சரா சரி மூன்றில் ஒரு பங்கு வருவாயை வரியாகக் கொடுத்தி வருகிறோமே? பின் ஏன்
இந்த நிதி திரட்டல்கள்? என்ன காரணம்?
சீடன் - இங்குள்ள சிலர் புகழுக்கும் பெயருக்கும் இதனைச் செய்;கிறார்கள். ஒரு
ஆறுதல். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் கந்தவனம் இப்படியான
நிதி சேகரிப்பு வன்னிக்கும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
குரு – நல்ல அறிவுரை. அடுத்த ஆண்டு திரட்டப்படும் நிதி வன்னிக்குப் போகும்
என்று எதிர்பார்ப்போமாக.
சீடன் - இங்குள்ள முதியோர் சங்கத் தலைவர் ஒருவர் தாங்கள் இப்போது
ஒன்ரேறியோவுக்கு அப்பால், கனடாவுக்கு அப்பால் உல்லாசக் கப்பல்களில ஒன்றுக்கு
மூன்று நாடுகளுக்கு சுற்றுலா போய் வந்ததைப் பெரிய சாதனையாகத் தம்பட்டம்
அடித்தார். 80 அகவை முதியவர்கள் இந்த உல்லாசப் பயணத்தின் பின்னர் 60 அகவை
உடையவராக மாறிவிட்டார்கள் என்றும் பெருமை அடித்துக் கொண்டார்.
குரு எங்கே சொன்னார்?
சீடன் - தமிழ்த் தொலைகாட்சியில். மண்காக்கும் போரில் களப்பலி ஆகும் மாவீரர்களை
ஒரு கணம் மறந்து விடுவோம். மக்களை மட்டும் நினைத்துக் கொள்வோம். நாட்டில்
மக்கள் நாளும் பொழுதும் குண்டு போட்டுக் கொல்லப்படுகிறார்கள். எதிரியின் செல்
வீச்சினாலும் விமானக் குண்டு வீச்சினாலும் மக்கள் செத்துமடிகிறார்கள்.
ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து தகரக் கொட்டகைகளில், மரங்களின் கீழ், வீதி
ஓரங்களில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். வானமே கூரையாகவும் பூமியே பாயாகவும்
படுத்து எழுகிறார்கள். இந்த மக்கள் உண்ண உணவு உடுக்க உடை நோய்க்கு மருந்து
இல்லாமல் வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்ப வாழக்கையைச் சுமந்து
கொண்ண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்த முதியோர்கள் கிஞ்சித்தும்
கவலைப்படுவதாக இல்லை.
குரு - அந்த மக்களது வாட்டத்தைப் போக்க இந்த முதியோர்கள் காட்டமாக ஒன்றும்
செய்வதில்லையா?
சீடன் - சிலர் செய்கிறார்கள். பலர் செய்வதில்லை. சென்ற கிழமை வன்னி,
புதுக்குடியிருப்பில் வாழும் மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான இரஞ்சிதவதனா தனது
8 அகவை மகள் றெபேக்காவுக்கு இருதய அறுவை மருத்துவம் செய்வதற்கு நிதியுதவி
கேட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிமனைக்குச் சென்று மன்றாடியிருக்கிறார்.
அப்படி அவர் அங்கே மன்றாடிக் கொண்டிருக்கும் போது தனது தாயாரோடு விட்டுட்டு
வந்த ஒன்றரை அகவைப் பிள்ளை பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து இறந்துவிட்டது.
கிணறு மண்கிணறு. சுவரில்லை. அந்தப் பிள்ளையின் சாவுக்கு அதுதான் காரணம்.
பாதுகாப்பான கிணறுகள் கட்டுவதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கைகொடுத்திருந்தால்
இத்தகைய சாவுகள் நடக்க வாய்ப்பில்லை. அவற்றைத் தடுத்திருக்கலாம். இதையிட்டு
ஏத்தனை பேர் கவலைப் படுகிறார்கள்?
சரி. அதுதான் போகட்டும். எனது கேள்வி என்னவென்றால் இந்த உல்லாச பவனிகள் பற்றி
தமிழ்த் தொலைக்காட்சி செவ்வி கண்டு ஏன் ஒளிபரப்ப வேண்டும்? அப்படிச் செய்வதன்
மூலம் மக்களுக்கு அது சொல்ல எத்தனிக்கும் செய்தி என்ன? நாடும் மக்களும் எக்கேடு
கெட்டாலும் பருவாயில்லை நீங்கள் கப்பல்களில் உலா போய் வாருங்கள் உங்களை நாங்கள்
படம்பிடித்து தொலைக்காட்சியில் காட்டுவோம் என்று சொல்கிறதா? அடுத்து வெண்ணிலா
போய்வாருங்கள் எனச் சொல்லப் போகிறதா? இவை இன்று எமது தாய்நாடும் மக்களும்
இருக்கும் நிலைமைக்கு ஒத்ததாக இருக்கிறதா? பொருந்தி வருகிறதா?
தாயக வலத்தில் வன்னியில் அன்றாடும் ஒரு வயிறுச் சோற்றுக்கு அல்ல கஞ்சிக்கு
அல்லல்படும் குழிவிழுந்த கண்கள், ஒட்டிய கன்னங்கள், ஒளியிழந்த கண்கள், வாடிய
வயிறுகள், பதுங்கு குழிக்குள் பதுங்கும் பள்ளி மாணவர்கள் போன்றோரது சோகத்தையும
அவலத்தையும் காட்டிவிட்டு அது முடிந்ததும் நாடு விட்டு நாடு உலா போகும்
இங்குள்ள முதியவர்களைச் செவ்வி கண்டு ஒளிபரப்புவது என்ன நியாயம்? இந்த
முரண்பாட்டுக்கு என்ன காரணம்?
குரு – எனக்குத் தெரியாது. தொடர்புடையவர்கள்தான் சொல்ல வேண்டும். எப்படியான
நிகழ்ச்சியை ஒளிபரப்புவது - எப்படியான நிகழ்ச்சியை ஒளிபரப்புவது இல்லை என்ற
நியதி தமிழ்த் தொலைக்காட்சிக்கு இல்லையா? வெறுமனே அது பணத்தை மட்டும் குறியாகக்
கொண்ட ஒரு வணிக நிறுவனமா?
சீடன் - இங்குள்ள தமிழர்களில் ஒரு சாரார் நாட்டையும் மக்களையும் மறந்துவிட்டு
அவசர அவசரமாக கனடியர்களாக மாறிவருகிறார்கள். ஆனால் உலகத்தில் உள்ள சோப்பு
அத்தனையும் போட்டுக் குளித்தாலும் தங்கள் நிறத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள
முடியாது! (முழக்கம் - யூன் 13, 2008)
குருவும் - சீடனும்
தேசியமும் தனிமனிதரும்
சீடன் - கொக்கு பறக்கும் போதுதான் அதற்கு இரண்டு கால் உண்டு என்பது தெரிகிறது.
நிற்கும் போது கொக்கின் ஒரு கால்தான் தெரிகிறது!
குரு – வழக்கம் போல புதிர் போடாமல் சொல்ல வந்த சங்கதியை நேரடியாகச் சொல்!
சீடன் - மண்ணையும் மனங்களையும் நேசிப்பதாகச் சொல்பவர்கள் தேசியமா? தனிமனிதனா?
என்று வரும் போது தேசியத்தைக் கைவிட்டு விட்டு தனிமனிதர் பக்கம் சாய்ந்து
விடுகிறார்கள்.
குரு – தேசியத்தை உணர்வு பூர்வமாக இல்லாமல் அறிவு பூர்வமாக நேசித்தால் இந்த
முரண்பாடு தோன்ற வழியில்லை.
சீடன் - அப்படிச் சொல்லுங்கள் குருவே! தேசியத்தை உணர்வுபூர்வமாக மட்டும்
ஆதரித்தவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வி. புலிகள் பின்வாங்க (1995) நேரிட்ட போது
தேசியத்தைக் கைவிட்டு புலி ஆதரவையும் கைவிட்டு விட்டார்கள். அப்புறம் புலிகள்
ஆனையிறவைத் தாக்கிப் பிடித்த பின்னர்தான் அவர்கள் மீண்டும் தேசியத்தின் பக்கம்
மெல்ல மெல்ல வந்து சேர்ந்தார்கள். தேசியம் என்பது வானளாவ உயர்ந்து நிற்கும்
கோபுரம். அதில் நாம் எல்லோரும் பொம்மைகள். நாங்கள்தான் தேசியத்தைச் சுமப்பதாக
நினைக்கக் கூடாது.
குரு – கிறித்துவுக்கு முன் கிறித்துவுக்குப் பின் என்று அழைப்பது போல அவர்களை
ஆனையிறவுக்கு முன் ஆனையிறவுக்குப் பின் என்று அழைக்கலாம்.
சீடன் - குருவே! சரியாகச் சொன்னீர்கள்! சிலர் தங்களை இனிமேல் இல்லை என்ற
தேசியவாதிகளாகக் காட்டிக் கொள்கிறார்கள். தாங்கள் தேசியத்தை மனம், மொழி, மெய்
மூன்றினாலும் காதலிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் நெருக்கடி வரும்போது
முகத்தில் பூசிய பூச்சுக் கரைந்து தங்கள் சுய உருவத்தைக் காட்டிவிடுகிறார்கள்.
குரு – நீ சொல்வது சரி அப்படியான மனிதர்களும் இருக்கிறார்கள்.
சீடன் - தேசியத்தை நேசிக்கும் வானொலிக் கருவிகளை அதன் சொந்தக்காரர்கள் புதிய
கலையகத்துக்குக் கொண்டு போய்விட்டார்கள். அப்படிச் அவர்கள் நடந்து கொண்டதற்கும்
சிங்கள இராணுவம் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளும் அடாவடிக்கும் வேறுபாடில்லை
என்று பிரியமான ஒருவர் (வை)கறை படிந்த செய்தித்தாளுக்கு செவ்வி
கொடுத்திருக்கிறார்.
குரு – கருத்து வேற்றுமை இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்.
எதிரியிடம் பல்லைக் காட்டக்கூடாது. அது அழகல்ல. அப்படிச் செய்வது இரண்டகமாகும்!
சீடன் - சரியாகச் சொன்னீர்கள்! இதனால்தான் தேசியத் தலைவர் எதிரியைவிட துரோகிகள்
ஆபத்தானவர்கள் என்றார்.
குரு – மறைந்தும் மறையாத மாபெரும் தளபதி பால்ராஜ் அவர்களுக்கு ரொறன்ரோவில் பல
இடங்களில் வீர வணக்க வழிபாடுகள் நடந்ததாமே?
சீடன் - ஆம் குருவே! அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அந்த மாபெரும்
வீரனுக்கு தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினார்கள். தளபதி பால்ராஜ் இறக்கவில்லை
எங்களோடு இருக்கிறார் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருக்கிறது. அவரது இழப்பு
வி.புலிகளுக்கு பெரிய இழப்பு என தென்னிலங்கைச் செய்தி ஏடுகளே எழுதின. எதிரி
அஞ்சிய ஒரே தளபதி அவர்தான். வழக்கமாக வி.புலிகளைக் கரித்துக் கொட்டாவிட்டால்
தூக்கம் வராத பந்தியாளர் ஒருவர் தளபதி பால்ராஜ் பற்றிப் புகழ்ந்து
எழுதியிருந்தார்.
குரு – வீர வணக்கக் கூட்டங்களுக்கு நீ போகவில்லையா?
சீடன் - இது என்ன கேள்வி குருவே? நான் போகாமல் விடுவேனா? மாவீரர்கள்தான் நான்
வழிபடும் தெய்வங்கள்! ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்தவர்களும் தளபதி பால்ராஜ்
அவர்களுக்கு தங்கள் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். நேரில் அல்ல.
வானொலியில்.
குரு – ஏன் அப்படி?
சீடன் - குருவே! என்ன கேள்வி இது? பொது மக்களோடு பொது மக்களாக வரிசையில் நின்று
தளபதி பால்ராஜ் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்த அவர்கள் என்ன
சாதாரணமானவர்களா? அவர்களது படிப்பென்ன? பதவி என்ன? பலம் என்ன? ஆனை சேனை என்ன?
அம்பு வில் என்ன? அதுதான் வானொலியில் வந்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
குரு - இங்குள்ள வானொலி ஒன்று மூன்று மணித்தியாலங்கள் ஊனாத் தானாவை சாக்கடை
மொழியில் வசைபாடியதாமே? மீன்கடை தோற்றும் போகும் என்று சிலர் அதனை
வருணித்தார்கள்!
சீடன் - அம்புலியைப் பார்த்து நாய் குரைத்தால் இழப்பு நாய்க்குத்தான்.
அம்புலிக்கு அல்ல. சேற்றில் புரண்டுவிட்டு தெருவில் வரும் பன்றிக்கு யானைதான்
வழிவிட்டுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் சேறு அதன்மீது படிந்துவிடும். ஒன்று
மட்டும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. முகத்துக்குப் போட்ட அரிதாரம் கரைந்து
தாங்கள் யார் என்பதைத் துலாம்பரமாகக் காட்டிவிட்டார்கள். (முழக்கம் - மே
30,2008)
குருவும் - சீடனும்
நடுச் சாமத்தில் அம்மணமாக இருந்து பூசை!
சீடன் - குருவே! திருடனாகப் பார்;த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க
முடியாது.
குரு - தத்துவம் பேசாமல் சொல்ல வந்ததை நேரடியாகவே சொல்!
சீடன் - மக்களாகப் பார்த்து மூடநம்பிக்களை கைவிடாவிட்டால் மூடநம்பிக்கைகளை
ஒழிக்கவே முடியாது. சோதிடர், மந்திரவாதி, பூசாரி, அருச்சகர் என இவர்கள்
பின்னால் புலம்பெயர்ந்து வந்தும் நம்மவர் நாயாய் பேயாய் அலைகிறார்கள். பணம்,
பதவி, தொழில், வணிகம் ஆகியவற்றில் முன்னேற சாதகத்தில் அல்லது கைரேகையில் ஏதாவது
பலன் இருக்கிறதா என அறிய சோதிடர்களிடம் அலைகிறார்கள்.
குரு – எதிர்காலத்தைப் பற்றிய கவலை எல்லோருக்கும் உண்டு. அதை அறிந்து
கொள்ளத்தான் பெரும்பாலும் சமூக ஏணியின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் நீ சொன்ன
சோதிடர், மந்திரவாதி, பூசாரி, அருச்சகர், சாத்திரிகள் பின்னால் அலைகிறார்கள்.
சீடன் - குருவே! அங்குதான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். சமூக ஏணியின் அடிமட்டம்
இடை மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல மேல்மட்டத்தில் இருப்பவர்களும்
சாத்திரிகளையும் சாத்திரங்களையும் நம்பி முட்டாள்த்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
அரைக்கோடி பெறுமதியான வீட்டின் சொந்தக்காரர் தனது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து
கொள்ளும் அவாவில் இந்தியாவில் இருந்து வந்து இங்கு கடை விரித்திருக்கும் ஒரு
பிரபல சோதிடரிடம் தனது சாதகத்தைக் காட்டிப் பலன் கேட்டிருக்கிறார். வழக்கம் போல
அவருக்கு கிரக தோசம் இருப்பதாகக் கூறிய சோதிடர் அதற்குப் பரிகாரமும் கூறினார்.
குரு – என்ன பரிகாரம்?
சீடன் - வீட்டில் தொடர்ந்து ஒரு மண்டலம் நடுச் சாமத்தில் பூசை செய்ய வேண்டும்.
அப்படிப் பூசை செய்யும்போது ஆடை உடுக்க் கூடாது. அம்மணமாக இருந்து கொண்டு பூசை
செய்ய வேண்டும்! அப்போதுதான் கைமேல் பலன் கிடைக்கும்!
குரு - இதென்ன மூடநம்பிக்கை?
சீடன் - மூடநம்பிக்கையில் பலவகை உண்டு. அதில் இது ஒருவகை. சோதிடர் சொன்னபடி
நடுச் சாமத்தில் அம்மணமாக கணவன் - மனைவி இருவரும் பூசை செய்து கொண்டிருந்த போது
பூசை அறையில் எழுந்த சாம்பிராணிப் புகை வீட்டு எச்சரிக்கை மணியை ஒலிக்கச்
செய்தது. அந்த ஒலி பக்கத்து அறையில் படுத்திருந்த அவர்களது இரண்டு பிள்ளைகளை
எழுப்பிவிட்டது. படுக்கையில் இருந்து துள்ளி எழுந்து என்ன நடந்தது எனப் பார்க்க
வந்த பிள்ளைகள் அம்மணமாகக் காட்சியளித்த அப்பாவையும் அம்மாவையும் பார்த்து
திகைத்துப் போனார்கள். உடனே அவர்கள் 911 காவல்துறைக்கு அடித்துத் தங்கள் வீடு
தீப்பிடித்து விட்டதாகச் சொன்னார்கள்.
குரு – நல்ல வேடிக்கை. அப்புறம்?
சீடன் - வேடிக்கை அல்ல. வேதனை. அடுத்த இரண்டொரு மணித்துளிகளில் வந்த
காவல்துறையினர் அங்கு கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். இந்த
அப்பாவும் அம்மாவும் பிள்ளை வளர்க்கத் தெரியாதவர்கள் எனச் சொல்லிவிட்டு
பிள்ளைகளைக் காப்பகத்தில் கொண்டுபோய் விட்டு விட்டார்கள்.
குரு – அய்யோ பாவம்!
சீடன் - இப்போது கணவன் மனைவி இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறதாம். கதை
இதோடு முடியயவில்லை. இவர்கள் அரைக்கோடி பெறுமதியான வீட்டின் சொந்தக்காரர்களாக
இருந்தாலும் அரசு கொடுக்கும் சமூகக் கொடுப்பனத்தையும் எடுக்கிறார்களாம்!
குரு – பரிகார பூசை செய்ததால் கையோடு பலன் கிடைத்திருக்கிறது என்று சொல்!
சீடன் - இன்றைய சமூகம் அறிவியலில் முன்னேறி இருந்தாலும் மூடநம்பிக்களும்
அதிகரித்த வண்ணமே உள்ளன. இதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சென்ற ஆண்டு
வெளிவந்து மிகப் பரப்பரப்பாக திரையரங்குகளில் ஓடிய சிவாஜி படத்திலும்
மூடநம்பிக்கைகள் புகுத்தப்பட்டுள்ளன. இதில் கதாநாயகிக்கு சாதகம் அதாவது
கிரகநிலை சரியில்லை என்றும் எனவே அவளை மணந்து கொள்ளும் நாயகனுக்கு அதனால்
பாதிப்புகளும் தீமைகளும் ஏற்படும் என்று கூறி உண்மையிலேயே கிரக பாதிப்புகள்
ஏற்படுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளைப்
புகுத்தும் களமாகத்தான் இத்திரைப்படத்தை இயக்குநர் சங்கர்
பயன்படுத்தியிருக்கின்றார். சாதகத்தை நம்பி செவ்வாய் தோசம் உள்ள பெண்கள்
ஏராளமானோர் திருமண வயது கடந்தும் திருமணமாகாமல் இருக்கிறார்கள். திருமணம் செய்ய
வேண்டும் என்றால் அதே செவ்வாய் தோசம் உள்ள சாதகரைத் தேடிப் பிடிக்க
வேண்டியுள்ளது. பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகளையும் பழங்கதைகளையும்
தோண்டிப் புதைக்க வேண்டும். சாதகம் ஏதும் பாராமல் காதல் திருமணம் செய்து கொண்ட
அனைவரும் வாழ்க்கையில் தோற்றதில்லை. நாள் பார்த்து ஓமம் வளர்த்தி மந்திரம்
சொல்லி திருமணம் செய்து கொண்ட அனைவரும் வாழ்க்கையில் ; வெற்றி பெற்றதுமில்லை.
விதியினால்தான் அனைத்தும் நடைபெறுகிறது என்பது பொய். மனிதனின் மதி மட்டுமே
உண்மை. சாதகம், எண்சாத்திரம், நாடி, சகுனம். ஆவி, சாமி, பாவம், புண்ணியம்
போன்றவற்றைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். பகுத்தறிவுக்குப் புறம்பான
மூடநம்பிக்கைகளைப் புகுத்தும் திரைப்படங்களைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
குரு – நீ சொல்வது சரி. ஒரு காலத்தில் அண்ணாவின் வேலைக்காரி, கலைஞரின்
பராசக்தி, நடிகவேள் இராதாவின் இரத்தக் கண்ணீர் பகுத்தறிவைப் பரப்பின. இன்று
பழையபடி வேதாளம் முருங்க மரத்தில் ஏறிவிட்டது! (முழக்கம் - மே 23, 2008)
குரு - சீடன்
கோயில் பணத்தைத் திருடும் கோயில் பெருச்சாளிகள்
சீடன் - வணக்கம் குருவே! மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை விடுவதில்லை!
குரு – தத்துவம் பேசுவதை விட்டு விட்டு சொல்ல நினைப்பதை நேரடியாகச் சொல்.
சீடன் - சொல்கிறேன் குருவே! இந்தக் கோயில், குளம் இவற்றைவிட்டு விட்டு வேறு
ஏதாவது பொருளைப் பற்றிப் பேசலாம் என்றால் இங்குள்ள கோயில்காரர்கள் விடுகினம்
இல்லை. கோயில் பெருச்சாளிகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா குருவே?
குரு – கேள்விப் பட்டிருக்கிறேன். கோயில் பெருச்சாளி கோயிலில் சுதந்திரமாக
ஓடித் திரிந்து கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு மொழு மொழு கொழு கொழு என்று
இருக்கும்.
சீடன் - நன்றாகச் சொன்னீர்கள் குருவே! கோயில்களில் சுதந்திரமாக ஓடித் திரிந்து
கோயில் பணத்தைச் சுருட்டும் மனிதப் பெருச்சாளிகளும் உண்டு.
குரு – கோயில் பொருளைத் திருடுவது சிவத் துரோகம்!
சீடன் - கோயில் பெருச்சாளிகள் அப்படி நினைப்பதில்லை. காற்றுள்ள போதே தூற்றிக்
கொள்கிறார்கள். வேலியே பயிரை மேய்வது போல உண்டியலுக்குக் காவல் வைத்தால்
உண்டியலை உடைத்துப் பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள்!
குரு – ஓ அண்மையில் சென்னை நகரின் மையப்பகுதியில் (மயிலாப்பூர்) உள்ள
கபாலீஸ்வரர் கோயிலின் மூலவர் சந்நிதியிலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணம் திருடப்பட்டதைச் சொல்கிறாயா?
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் கபலீஸ்வரர் கோயிலில் இடம்பெற்ற இந்த
கொள்ளைச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
சீடன் - இல்லை குருவே! உண்டியல் களவு சென்னை கபலீஸ்வரர் கோயிலில் அல்ல. உள்ளுர்
பெரிய கோயிலில் நடந்துள்ளது.
குரு – கோயில் உண்டியல் கொள்ளை போவது சாதாரண நிகழ்ச்சி. நாளும் பொழுதும் ஏதாவது
ஒரு கோயிலில் இந்தக் கொள்ளை நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.
சீடன் - பெரிய கோயிலின் பொருளை ஆளத் தெரிந்தெடுக்கப்பட்டவரே உண்டியலைத் திறந்து
பாதியைத் தனது பைக்குள் போட்டுவிட்டு மீதியை வைப்பகத்தில் சேர்த்துள்ளார்.
இப்படிக் களவாடப் பட்ட பணம் அய்ம்பதினாயிரம் டொலருக்கும் அதிகமாம்!
குரு – கிணற்றுத் தவளை அதிலுள்ள தண்ணீரைக் குடிக்காது எனச் சொல்ல முடியுமா?
கோயில் பெருச்சாளிகளும் அப்படித்தான். ஆனால் நீ ஒரு மசூதிக்குப் போ. அங்கே
களவாடுவதற்கு ஒரு செப்புக்காசோ, நகைநட்டோ கிடையாது. இந்துக் கோயில்களில்தான்
இப்படியான கொள்ளைகள் நடைபெறுகின்றன.
சீடன் - இன்னொரு கோயிலில் பக்தர்களிடம் வாங்கும் பணத்துக்குச் சரியாக பற்றுச்
சீட்டைக் கொடுத்துவிட்டு அதன் படியில் நூற்றியொன்றை இருபத்தொன்றாக றைப்
பத்தாகப் பெருச்சாளிகள் குறைத்து எழுதிவிட்டு மீதி எண்பதை ஏப்பம் விட்டு
விடுகிறார்களாம்.
குரு – கோயில் பெருச்சாளிகள் இப்படிக் களவெடுப்பது காலம் காலமாக நடந்து
வருகிறது. ஆத்தீகர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வெட்கப்படுவதும் இல்லை.
சீடன் - பேராசைக்காரனடா பார்ப்பான், அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்
என்று பாரதியார் சொன்னது பார்ப்பானுக்கு மட்டும் பொருந்தும் என்பதில்லை.
பார்ப்பனியத்துக்கு அடிமையானவர்களுக்கும் பொருந்தும். அவர்களும் ஏது செய்தும்
காசு பெறப் பார்க்கிறார்கள்!
குரு – விளக்கமாகச் சொல்.
சீடன் - அர்த்தசாத்திரம் எழுதிய சாணக்கியன் அரசனின் கருவூலத்தை நிரப்புவதற்குப்
பல உத்திகளை விலாவாரியாக எழுதிவைத்துள்ளான். அருச்சனை, அபிசேகம், தேர்,
தீர்த்தம், தோசபரிகாரம் கருவூலத்தை நிரப்ப அவன் சொல்லும் உத்திகளாகும். ஆனால்
சாணக்கியனை மிஞ்சும் வண்ணம் இங்குள்ள கோயில் பெருச்சாளிகள் பக்தர்களிடம்
இருந்து பணத்தைக் கறக்கிறார்கள்.
குரு – எப்படி?
சீடன் - இப்போது புதிதாக மோட்ச அருச்சனை என்ற மோசடி கோயில்களில் களை
கட்டியுள்ளது. உண்மை என்னவென்றால் மோட்ச அருச்சனைக்குரிய மந்திரம் ஆகமத்தில்
இல்லை!
குரு – உனக்கு எப்படித் தெரியும்? உனக்கு யார் இதைச் சொன்னது?
சீடன் - எனக்கு இதைச் சொன்னவர் ஒரு கோயில் குருக்கள். மோட்ச அருச்சனை என்ற
மோசடியைச் செய்ய மறுத்துவிட்டார். அறங்காவல் அவை வற்புறுத்தியும் அப்படியான
பாவத்தைச் செய்ய மாட்டேன் எனச் சொல்லிவிட்டார். மோட்ச அருச்சனையைத் தனித்தனிப்
பெயருக்குச் செய்யாமல் அருபது, முப்பது பற்றுச்சீட்டுக்கும் (ஒன்று 21 டொலர்)
ஒரே நேரத்தில் அய்யர் கும்பலாக அருச்சனை செய்துவிடுகிறார். இப்படி ஏமாற்றப்பட்ட
ஒரு பக்தர் தனது பட்டறிவுபற்றி முழக்கம் இதழுக்கு அழுதழுது எழுதியிருக்கிறா.
குரு – எனக்கு வால்மீகர் என்ற சித்தர் ஒருவர் எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு
வருகிறது. சொல்கிறேன் கவனமாகக் கேள்.
நில்லென்ற பெரியோர்கள் பாசையாலே
நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்
வல்லமையாய்ச் சாத்திரங்கள் இருமூன்றாக
வயிறுபிழை புராணங்கள் பதினெட்டாக
கல்லுகளைக் கரைப்பது போல் வேதாந்தங்கள்
காட்டினர் அவரவர்கள் பாசையாலே
தொல்லுககில் நால்சாதி, அநேகம்சாதி
தொடுப்தார்கள், அவரவர்கள் பிழைக்கத்தானே!
சீடன் - நன்றாகச் சொன்னீர்கள். மூடபக்தி இருக்குமட்டும் மூடபக்தர்கள்
இருப்பார்கள். மூட பக்தர்கள் இருக்கு மட்டும் கோயில் முதலாளிகளின் இல்லை
வீடுகிளில் பணம் கொட்டுகிறது ; குருவே! (முழக்கம் - ஏப்ரில் 26,2008)
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!
சீடன – குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது
சொல்லடி, சொல்லடி, சக்தி மகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு
படிப்பு வளருது, பாவம் தொலையுது
சாத்திரம் வளருது, சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது, தந்திரம் வளருது!
மக்களுக்கெல்லாம் தயிரியம் பிறக்குது
மூட நம்பிக்கை தொலையுது பகுத்தறிவு வளருது
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு......
குரு – நிறுத்து! நிறுத்து! பாரதியார் பாடலை நீ தாறுமாறாகப் படிக்கிறாய்!
சீடன் - குருவே! நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும் பாரதியாரும் என்னை மன்னிக்க
வேண்டும்! மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப் போன அடியேன் பாரதியார் பாடலை சற்று
மாற்றிப் பாடிவிட்டேன்.
குரு – அப்படியென்ன மகிழ்ச்சி வெள்ளம்?
சீடன் - அப்படிக் கேளுங்கள் குருவே! கேட்ட வரமும் கேளாதா வரமும் கொடுக்கும்
பிள்ளையாருக்கு 1,500 டொலர் செலவழித்துச் சங்காபிசேகம் செய்ய இருந்த ஒரு
பக்;தர் படமாடும் கோயிலுக்குக் கொடுத்துப் புண்ணியமில்லை என்று முடிவு கட்டி
நடமாடும் கோயில் நம்பர்க்குக் கொடுத்து விட்டார்!
குரு – மெத்த நல்லது! மக்களுக்கு எதற்குச் செலவழிக்க வேணடும் எதற்குச்
செலவழிக்கக் கூடாது என்ற தெளிவு வந்துவிட்டால் - பகுத்தறிவு வந்துவிட்டால் -
கனடா தமிழூர் ஒன்றல்ல பலதை எம் தாயக மண்ணில் உருவாக்கலாம்!
சீடன் - இதைக் கேளுங்கள் குருவே! மொன்றியலில் ஒரு கிறித்தவ குடும்பம். அந்தக்
குடும்பம் அண்மையில் ஒரு குடும்ப உறுப்பினரை இழந்து விட்டது. வழக்கம் போல
இறந்தவரது பூதவுடல் அடக்கம் செய்த இடத்தில் ஒரு கல்லறை கட்டத் திட்டமிட்டு
இருந்தது. செந்திலின் நிவாரணம் பற்றித் தமிழ்ச்சோலை வானொலியில் கேட்டுவிட்டு
கல்லறை கட்ட வைத்திருந்த 3,000 டொலரை அந்தக் குடும்பம் செந்தில் குமரனிடம்
கொடுத்து விட்டது! இன்னொரு குடும்பம். ஒரு தாயார் இரண்டு பிள்ளைகள். ஒரு
வீட்டின் அடித்தளத்தில் வாழ்க்கை. பிள்ளைகள் பல்கலைக் கழகத்தில்
படிக்கிறார்கள். பண நெருக்கடி இருந்தும் செந்தில் குமரனை தொலைபேசியில்
கூப்பிட்டு 1,500 டொலரை அன்பளிப்புச் செய்தார். இப்போது நிவாரணம் மூலம்
திரட்டிய நிதி 670,000 தாண்டிவிட்டது! இந்தத் தாயாரின் கொடை உள்ளத்தைக் கண்டு
செந்தில் குமரன் நெகிழ்ந்து போனார்! இந்தத் தாயோடு கழுத்தில் தங்க
உருத்திராட்சை, கைவிரல் பத்திலும் மோதிரங்கள், இடுப்பைச் சுற்றிப் பட்டுப்
பீதாம்பரம், பருகப் பால், தின்னப் பழம், கொப்பிளிக்கப் பன்னீர், பவனிவர லெக்சஸ்
கார் - .இவர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள் குருவே?
குரு - ஈகையை எல்லோரும் செய்ய மாட்டார்கள். அதற்கும் கொடுத்து வைக்க வேண்டும்.
வள்ளுவர் “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது
உடைத்து” என ஈகையை வரையறை செய்கிறார். அதாவது வறியவர்களுக்குப் பயன் கருதாது
கொடுப்பதுதான் ஈகை. அதுவே அறம். நல்ல நிலையில் வாழ்பவர்களுக்குக் கொடுப்பன
எல்லாம் பயன் கருதிய செயல்கள். அவை ஈகை ஆகா. பயன் எதனையும் கருதாது உணவு, உடை,
உறைவிடம் முதலானவற்றைக் கொடுப்பது “ஈகை”. பயன் கருதிக் கொடுப்பது “இடுதல்.”
சீடன் - வள்ளுவரைப் போலவே அல்லது அவரை மிஞ்சும் வண்ணம் திருமூலர் ஈகை பற்றி பல
நிலைகளில் ஆய்கிறார். உண்டியும் உடையும் உறையுளும் கைமாறு கருதாது
வறியவர்களுக்குக் கொடுப்பது ஈகை என்கிறார். செல்வர்கள்தான் கொடுக்க வேண்டும்
என்றில்லை. மக்கள் தங்களால் முடிந்தளவு ஈகையை மேற்கொள்ளலாம். “எளிய நிலையில்
பசுவுக்குக் கைப்பிடியளவு புல்லைக் கொடுப்பது யாவர்க்கும் எளிய செயல். உண்ணும்
உணவில் பசித்த ஒருவனுக்கு ஒரு கைப்பிடி கொடுப்பது எளிய செயல். ஒரு கைப்பிடி
குறைவதால் பெரிய இழப்பு இல்லை. பசித்துன்பம் மிகுவதுமில்லை. ஆனால் ஈகைக் குணம்
பிறர்க்கு நலம் பயக்கும். சமுதாயத்திற்கு நன்மை உண்டாக்கும். பிறர்க்குக்
கொடுப்பதால் ஏற்படும் இன்பம் அறிந்தும் கொடுக்காமல் வாழும் மக்களைத் திருமூலர்
“இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள்” என்கிறார்.
குரு - இறைவனுக்குக் கொடுப்பதால் பயனில்லை. இறைவனால் படைக்கப்பட்ட மக்களுக்குக்
கொடுப்பதே இறைவனுக்குக் கொடுப்பது போன்றது என திருமந்திரம் ஒன்று எடுத்து
விளக்குகிறது. அது உனக்கும் தெரிந்த மந்திரந்தான்.
படமாடக் கோயில் பரமற்கொன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயின்
படமாடக் கோயில் பரமர்க் மே (திருமூலர் திருமந்திரம் - 1857)
சீடன் - இந்தத் திருமந்திரத்தைக் கட்டம் போட்டு ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில்
தொங்கவிட வேண்டும். அருச்சனை, அபிசேகம், தேர், தீர்த்தம், விளக்குப் பூசை,
சுமங்கிலி பூசை, தோசபரிகாரம் போன்றவற்றுக்குச் செலவழிப்பது எல்லாம் வீண். இவை
மக்களது மூடபக்;தியையும் மடமையையும் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டி உழைக்காது
வாழ்வதற்கு எத்தர்கள் கண்டு பிடித்த ஏமாற்று வித்தைகள். அந்த எல்லாம் வல்ல
கடவுளும் அவற்றை விரும்பமாட்டார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான்
உண்மையான பக்தி!
குரு – உன் பக்தியை மெச்சினோம்!
நடமாடும் தெய்வங்களைக் கைவிட்ட படமாடும் கோயில்கள்!
சீடன் - குருவே பெரிய அமைப்புக்களால் சாதிக்;க முடியாத வினையைத் தனி மனிதர்கள்
சாதித்து விடுகிறார்கள்!
குரு – அதில் என்ன அய்யம்? உருசியப் புரட்சி லெனின் என்ற தனிமனிதன் ஆளுமையால்
சாதிக்கப்பட்டது. அது போலவே சீனப் புரட்சியின் வெற்றிக்கு மா சே துங் என்ற
தனிமனிதனே காரணம். ஏன் அதிக தூரம் போவான்? காக்கிச் சட்டையைக் கண்டு சிறுநீர்
கழித்த தமிழ்க் குமுகாயத்தில் இருந்து ஒரு பெரிய புதுமைப் புலிப்படையை
உருவாக்கிய சாதனை தமிழீழத தேசியத் தலைவர் பிரபாகரனால் மட்டுமே முடிந்தது!
சீடன் - கனடாத் தமிழூர் என்ற பெயரில் பூநகரி முழங்காவிலில் 250 வீடுகள்
அமைக்கப்படுவதோடு அங்கு குடிநீர் வசதி, மருந்தகம், பாதைகள், சிறுவர் பள்ளி,
மக்கள் ஒன்றியம் போன்ற அடிப்படை வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட இருக்கிறது.
இத்தி;டத்திற்கான அடிக்கல் நிகழ்ச்சியில் கிளிநொச்சி அரச அதிபர் திரு வேதநாயகம்
அவர்கள் கலந்துகொண்டார். இந்தத் திட்டத்துக்குச் செலவாகும் 625,000 டொலரை
தனித்து நின்று செந்தில் குமரன் நிவாரண நிகழ்சி மூலம் சேர்த்துள்ளார்.
உண்மையில் திட்டத்துக்குத் தேவைப்படும் 625,000 டொலரை விட மேலதிகமாக 15,000
டொலர் சேர்த்து மொத்தம் 640,000 டொலரைச் சேர்த்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை
நடந்த நிவாரணம் 10 இல் மட்டும் இரண்டரை இலட்சம் நிதி சேர்ந்தது.
குரு – கனடிய தமிழ்மக்களிடம் 10,000 டொலர் சேர்ப்பதே வில்லங்கமான காரியம்.
கோயில்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு. ஒருவரே 30,000 டொலரில் தேர் செய்து
கொடுப்பார். அப்படியிருக்க 640,000 டொலர் சேர்த்து திரு செந்தில் குமரன் பெருஞ்
சாதனை படைத்துள்ளார். இது எப்படிச் சாத்தியமானது?
சீடன் - கண் தூங்கார் பசி நோக்கார் கருமமே கண்ணாயினர் என்பதற்கு ஒப்ப
செந்தில் குமரனது தொண்டுள்ளம், இடைவிடா முயற்சி, ஏழையின் சிரிப்பில் இறைவன்
வாழ்கிறான் என்பதில் அவருக்கு இருக்கும் தன்நம்பிக்கை போன்றவையே காரணிகள்.
மற்றவர்கள் தமிழக கலைஞர்களை இங்கு வரவழைத்து ஊருக்கு என்று சொல்லிக்கொண்டு
தங்கள் பையை நிரப்ப நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். அதனைத் தொழிலாகவே
செய்கிறார்கள். ஆனால் செந்தில் குமரன் பொதுப் பணிக்குத் தமிழக கலைஞர்களை
வரவழைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
குரு – தமிழக கலைஞர்களை வரவழைக்கும் சாட்டில் ஆட்களை இறக்கும் தொழிலும்
நடைபெறுகிறதாமே?
சீடன் - முன்னர் அப்படித்தான். இப்போது இசைவுச் சீட்டுப் பெறுவதைக் கனடிய அரசு
இறுக்கியுள்ளது. பத்துக் கண்தெரியாத கலைஞர்களைக் கனடாவுக்கு அழைக்கும் சாட்டில்
அவர்களுக்குத் துணையாக இன்னும் பத்துப்பேரை இறக்க நினைத்த ஒரு
படப்பிடிப்பாளரின் முயற்சி பலிக்கவில்லை.
குரு - இந்தத் திட்டத்துக்கு இங்குள்ள கோயில்கள் உதவவில்லையா? அங்கேதானே எமது
மக்கள் போகுற இடத்தில் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அருச்சனை,
தேர், திருவிழா, தீர்த்தம் என்று காசைக் கொட்டுகிறார்கள்!
சீPடன் - இங்குள்ள தனியார் கோயில்கள் பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் கடிலக்
கார் மற்றும் காணிகளை வாங்குகிறார்கள். மிகுதியைப் பத்திரமாகத் தலையணிகளுக்குள்
பதுக்கி வைத்து விடுகிறார்கள். ஆனால் பொதுப் பணிக்கு நிதி கேட்டால் ஒரே குரலில்
பஞ்சப் பாட்டுப் பாடுகிறார்கள். அவர்கள் அகரமுதலியில் “வாங்குதல்” என்ற
சொற்தான் உண்டு “ கொடுத்தல்” என்ற சொல் இல்லை! இங்குள்ள றிச்மென்ட கில்
பிள்ளையார் கோயில் அறங்காவல் அவை மட்டும் கனடா தமிழூரில ஒரு பள்ளிக்கூடம் கட்ட
10,000
டொலர் அன்பளிப்புச் செய்துள்ளது. அதே போல் அங்கு ஒரு மருந்தகம் கட்டுவதற்கு
கனேடிய மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் சங்கம்
10,000
டொலரை
அன்பளிப்புச் செய்தது.
குரு – இங்குள்ள ஒவ்வொரு கோயிலும் தலைக்குப் பத்தாயிரம் வெள்ளி
கொடுத்திருந்தால் திட்டத்துக்கு வேண்டிய முழு நிதியும் ஒரு நாளில்
சேர்ந்திருக்குமே?
சீடன் - அப்படிச் கேளுங்கள் குருவே! இங்குள்ள பணக்காரக் கோயில்கள் இரண்டில்
ஒன்று தங்களுக்குப் பணக் “கஷ்டம்” என்று சொல்லிக் கையை விரித்து விட்டது.
மற்றது தாங்கள் வன்னிச் செஞ்சோலைச் சிறார்க்கு நேரே மாதம் மாதம் பொருளுதவி
செய்வதாகச் சொல்லிவிட்டது. இன்னொரு பெரிய கோயில் (பெயரில் மட்டுந்தான்) முதலாளி
1,500 டொலர்களை எழுதி விட்டு “எனக்கு உம்மில் நம்பிக்கை இல்லை! நான் விசாரணை
செய்ய வேண்டும்” என்று சொல்லிச் சறுக்கி விட்டார். இரண்டு கோயில்கள் - கனடா
முருகன் கோயில் மற்றும் அய்யப்பன் ஆலயம் - ஒத்துழைப்பு நல்கின. தமிழ் மக்கள்
இவர்களை அடையாளம் காணவேண்டும் என்பதற்காகவே இந்தத் தரவை உங்களுக்குச்
சொல்கிறேன்!
குரு – ஊடகங்களது ஒத்துழைப்பு எப்படி?
சீடன் - வழக்கம் போல் முழக்கம் இதழுக்குத்தான் முதலிடம். தேசியத்தை நேசிக்கும்
வானொலி தொலைக்காட்சி ஊடகம் இந்த நிகழ்ச்சியை முற்று முழுதாக இருட்டடிப்புச்
செய்து விட்டன. செந்தில் குமரனைப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காகத் தாயக
மக்களின் கண்ணீர் துடைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை நிச்சயம்
தமிழ்மக்கள் விரும்பமாட்டார்கள். முகத்தை அவமானம் செய்ய மூக்கை வெட்டக் கூடாது
என்பார்கள். தமிழ்த் தேசியவாதிகளிடம் கருத்து வேறுபாடு இருந்தால் அது பேசித்
தீர்க்கப்பட வேண்டும்! இல்லாவிட்டால் அது தமிழின எதிரிகளுக்குத்தான்
கொண்டாட்டம் ஆகிவிடும்!
குரு – நீ வயதில் குறைந்தவனாக இருந்தாலும் உனக்கு நிறைய அறிவு இருக்கிறது.
பொதுப் பணிக்கு வருகிறவர்களுக்குத் திருவள்ளுவர் ஒரு அருமையான அறிவுரை சொல்லி
இருக்கிறார். “குடிசெய்வார்க்கு இல்லை பருவம், மடிசெய்து மானம் கருதக் கெடும் -
அதாவது தம் குடியை உயரச் செய்பவர், செயலை நோக்காது, காலத்தை நோக்கிச் சோம்பல்
கொண்டு, மானத்தையும் கருதுவாரானால் குடி கெடும். எனவே குடியை உயரச் செய்வோர்
மானம் அவமானம் பாராட்டக் கூடாது!”
சீடன் - ஒன்றே சொன்னாலும் அதனை நன்றே சொன்னீர்கள் குருவே! (முழக்கம் - ஏப்ரில்
11, 2008)
குருவும் சீடனும்
பயம் காரணமாக அருச்சுன இரணதுங்கா வரவில்லை!
குரு – நாட்டிலே என்ன புதினம்? தனி ஒருவனாக இருந்தாலும் ரொறன்ரோ வருகிற
அருச்சுன இரணதுங்காவிற்குக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகச்
சொன்னாயே?
சீடன் - என்ன குருவே! அந்தக் காலத்தில் மன்னர்கள் அமைச்சரைப் பார்த்து “மாதம்
மும்மாரி பெய்கிறதா என்று கேட்பாராம். நாட்டில் மழை பெய்கிறதா இல்லையா என்பது
கூட அமைச்சர் சொல்லித்தான் மன்னர் அறிந்து கொள்வார். இருந்தும் சொல்கிறேன்ன.
கேளுங்கள்.
Can Indo Lanka
என்ற சஞ்சிகை
2008
CSL Awards Gala
என்ற நிகழ்ச்சியை
DoubleTree Internationa Hotel, Toronto, இல் நடத்துகிறதாகவும் அது
ஸ்ரீலங்கா அரசு விரிக்கும் வலைப்பின்னல் என்று சொன்னேன் அல்லவா? அந்த இரவு
விருந்து கடந்த மார்ச்சு 28 ஆம் நடந்தது.
குரு - அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த - தமிழர்களின் குருதியால் நனைந்த
அர்ச்சுன இரணதுங்காவின்; கைகளால் இரண்டொரு தமிழர்கள் விருது வாங்க
இருந்தார்களே?
சீடன் - யாரிடம் விருது வாங்குகிறோம் என்று தெரியாமல் ஒப்புதல் கொடுத்தவர்களில்
பலர் போகவில்லை. நாலு பேர் போனார்கள் என்று சொன்னார்கள். அவர்களும்
போகவில்லையாம். இது கனடிய தமிழ்மக்களுக்குக் கிடைத்த வெற்றி. நிகழ்ச்சிக்குப்
பின்னால் இருந்த ஸ்ரீலங்கா தூதரகத்துக்குக் கிடைத்த படு தோல்வி. தமிழர்களைக்
கூறுபோட எடுத்த முயற்சி பலிக்கவில்லை. 500 பேர்கள் கலந்து கொள்வதாக
விளம்பரப்படுத்தப்பட்ட விருந்தில் 50 பேர்தான் கலந்து கொண்டார்கள்.
குரு – பரத நாட்டிய ஆடல் இடம்பெற்றது என்கிறார்களே?
சீடன் - ஆமாம். அந்த நடனமணிகள் நன்றாக ஆடை ஆபரணம் அணிந்து வந்து இறங்கியதைத்
தெருவுக்கு அந்தப் பக்கத்தில் நின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டு விட்டு
எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். அதைக் கண்டு மிரண்டு போனவர்கள் அவசர அவசரமாக
உள்ளே நுழைந்து விட்டார்கள்.
குரு – யார் அந்த நடனமணிகள்?
சீடன் - இங்குள்ள ஒரு வாதாபி கோயிலில் அடிக்கடி நடனமாடும் அதே குழுதான் இதிலும்
கலந்து கொண்டதாம். அதனை ஏற்பாடு செய்து கொடுத்தவரும் ஒரு வாதாபியாம். அவர்களைப்
பற்றிய முழுத் தரவுகளும் திரட்டப்படுகிறது.
குரு – கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் எப்படி? அருச்சுன இரணதுங்கா வரவில்லையாமே?
சீடன் - அருச்சுன இரணதுங்கா வரவில்லை என்பது பின்னர்தான் தெரியவந்தது. அவர்
பயந்து வரவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் வந்தாலும் சரி, வராவிட்டாலும்
சரி அந்த நிகழ்ச்சியைப் பின்னால் நின்று கொண்டு ஒட்டாவாவில் உள்ள ஸ்ரீலங்கா
தூதரகம் செய்ததால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திட்டமிட்ட படி நடந்தது. ஆயிரம்
அதியுச்ச கட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டார்கள். எங்கும் கருப்புக் கொடி
மயம். அவர்களைக் கட்டுப் படுத்துவது பெரும் பாடாகி விட்டது. இருந்தும் கண்ணியம்
காக்கப்பட்டது.
குரு - இனிமேல் சூடு கண்ட பூனை அடுப்படியை நாடாது என்கிறாய்?
சீடன் - அப்படியும் சொல்ல முடியாது. புதிதாகத் துணைத் தூதராக (ஊழளெரட புநநெசயட)
ஆகப் பதவிக்கு ஒரு கடைந்தெடுத்த சிங்கள – பவுத்த இனவாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பெயர் பந்துல அபெயசேகரா. முன்னாள் இதளாளர். ஸ்ரீலங்கா அரசு சிங்கள
இனவெறியர்களுக்கு இப்படிப்பட்ட பதவிகளைப் பரிசாகக் கொடுத்து வெளிநாடுகளுக்கு
அனுப்பி வருகிறது. பதவிக்கு வந்ததும் வராததுமாக அவர் ஒரு சில தமிழர்களைத்
தொலைபேசியில் அழைத்து ஸ்ரீலங்கா அரசுக்குத் தமிழர்களோடு பகை ஏதும் இல்லை.
வி.புலிகளோடுதான் பகை. எதற்கும் நேரில் வந்தால் பேசிக் கொள்ளலாம் என ஆசை
வார்த்தை சொல்லி அழைப்பு விடுகிறாராம்.
குரு – தமிழ்மக்கள் வேறு வி.புலிகள் வேறு என்பதுதான் அவர்கள் கையாளும்
தந்திரம். கிழக்கில் அந்தத் தந்திரம் பலித்திருக்கிறதே?
சீடன் - இப்படித்தான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வரதராசப் பெருமாள் என்ற ஒரு
செயற்கைத் தலைவரை மாகாண முதல்வராக்கி அழகு பார்த்தார்கள். தமிழ்த் தேசியப் படை
என்ற ஒரு கூலிப்படையையும் உருவாக்கினார்கள். அவர்கள் என்னவானார்கள் என்பது
வரலாறு. கதிரவனைக் கண்ட பனிபோல் காணாமல் போனார்கள். இராஜஸ்தானுக்கு ஓடிய
பெருமாள் அங்கேயே குடியமர்ந்துவிட்டார்! கவலைப் படாதீர்கள் குருவே! விரைவில்
விடியலுக்கான பூபாளம் கேட்கும். மண்ணும் எங்கள் மக்களும் சுதந்திரக் காற்றைச்
சுவாசிப்பார்கள்!
குருவும் சீடனும்
காட்டிக்
கொடுப்பவர்கள்
சீடன் - குருவே! மகிந்தா அரசு தமிழர்களிடையே காணப்படும் எட்டப்பர்களை, காக்கை
வன்னியர்களை வளைத்துப் பிடிக்கப் பல தந்திரங்களைச் செய்கிறது.
குரு – அது தெரிந்த சங்கதிதானே! தொன்று தொட்டு இந்தத் தந்திரத்தை தமிழ்;ப்
பகைவர்கள் கையாண்டு வருகிறார்கள். இராவணனைக் காட்டிக் கொடுத்த விபீடணுக்கு
இராமர் உடனே “நீதான் இலங்கையின் அடுத்த மன்னன், உனக்குத்தான் மகுடம்” என்று
சொன்னதும் விபீடணன் குளிர்ந்து போனான்!
சீடன் - விபீடணன் ஒரு நாட்டை ஆள ஆசைப்பட்டுக் காட்டிக் கொடுத்தான். எட்டப்பன்
ஒரு பாளையத்தை ஆள நினைத்துக் காட்டிக் கொடுத்தான். காக்கை வன்னியன் யாழ்ப்பாண
இராச்சியத்தை ஆள அவாப்பட்டுக் காட்டிக் கொடுத்தான். அந்தத் துரோகிகள்
பருவாயில்லை. இப்போதுள்ள எட்டப்பர்கள் ஓசியில் வானூர்திப் பயணம், அரச செலவில் 5
நட்சத்திரக் ஹோட்டலில் தங்கல், சாகித்தியப் பரிசு, விருது இவை போன்ற
சில்லறைக்கு ஆசைப்பட்டு இனத்தைச் சில்லறையாகவும் மொத்தமாகவும் விலை கூவி
விற்கிறார்கள்!
குரு – மகிந்த இராசபக்சே தனது கவனத்தைப் புலம்பெயர் தமிழர்கள் பக்கம்
செலுத்துவதாகச் சொல்கிறார்கள்.
சீடன் - நான் சொல்லவந்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள் குருவே! அதன் முதல்
கட்டமாகத்தான் கடந்த மாதம் பிரித்தானியாவில் இருந்து ஆறு தமிழர்கள் மூன்று
முஸ்லிம்கள் ஆகியோரை 120,000 ஆயிரம் டொலர்கள் செலவழித்து ஸ்ரீலங்காவிற்கு
வெளியுறவு அமைச்சு இறக்குமதி செய்து அவர்களை கலதாரி 5 நட்சத்திரக் ஹோட்டலில்
தங்க வைத்து நாட்டைச் சுற்றிக் காட்டியது.
குரு – தமிழர்களுக்கு ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்க மகிந்தா அரசு மெத்தப்
பாடுபடுகிறது என்று சொல்!
சீடன் - அதுவேதான் குருவே! எல்லோரும் ஏறிவிழுந்த குதிரையில் மகிந்த இராசபக்சே
இப்போது ஏறுகிறார்! கனடாவைக் கவனிக்க ஒட்டாவுக்கு தயா பேரேரா என்ற பிரபல
வழக்கறிஞரைத் தூதுவராகவும் ரொறன்ரோவைக் கவனிக்க சிங்கள- பேரினவாதத்தைக் கக்கும்
பந்துல ஜெயசேகரா என்ற பத்திரிகையாளரை கொன்சல் ஜெனரலாகவும் மகிந்தா
நியமித்துள்ளார்.
குரு – பூலோகசிங்கம் என்னவானார்?
சீடன் - அவர் எப்போதோ பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். நாடு திரும்பிய
அவரை ஸ்ரீலங்காவின் அமைதிக்கான திணைக்களத்தில் துணைச் செயலராக ஸ்ரீலங்கா அரசு
நியமித்துள்ளது.
குரு - ரொறன்ரோவில் உள்ள ஊயn ஐனெழ டுயமெய என்ற சஞ்சிகை 2008 ஊளுடு யுறயசனள
புயடய என்ற நிகழ்ச்சியை னுழரடிடநவுசநந ஐவெநசயெவழையெட ர்ழவநடஇ வுழசழவெழஇ இல்
நடத்துகிறதாகச் சொன்னாய். அப்போ அதுவும் இந்த வலைப்பின்னலின் ஒரு அலகு என்று
சொல்!
சீடன் - 5 நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் அந்த நிகழ்ச்சிக்கு ஒட்டாவிலுள்ள
ஸ்ரீலங்கா தூதரகம் முழு ஆதரவை நல்குகிறது.
குரு – அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த - தமிழர்களின் குருதியால் நனைந்த
அர்ச்சுன இரணதுங்காவின்; கைகளால் விருது வாங்க இருந்தார்களே?
சீடன் - யாரிடம் விருது வாங்குகிறோம் என்று தெரியாமல் சம்மதம் கொடுத்தவர்களில்
பலர் இப்போது அதிலிருந்து பின்வாங்கி விட்டார்கள். ஆனால் தமிழ்ப் படைப்பாளிகள்
கழகம், ஊர்ச்சங்கங்கள், மாணவ அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள் போன்றவை
சேர்ந்து எதிர்வரும் மார்ச்சு 28 ஆம் நாள் 655 டிக்சன் வீதியில் உள்ள
னுழரடிடநவுசநந ஐவெநசயெவழையெட ர்ழவநடஇ வுழசழவெழ முன் பெரிய கருப்புக்கொடி
ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கின்றன.
குரு – மெத்த நல்லது. நீயும் அதில் கட்டாயம் கலந்து கொள்ளப் போகிறாய் என்று
சொல்?
சீடன் - அதை நான் உங்களுக்கு எப்போதோ சொல்லிவிட்டேனே!
கெஞ்சினால் மிஞ்சுவார்கள் மிஞ்சினால் கெஞ்சுவார்கள்
சீடன் - குருவே கெஞ்சினால் மிஞ்சுவார்கள் மிஞ்சினால் கெஞ்சுவார்கள் என்ற
பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா?
குரு - ஆமாம். கேட்டிருக்கிறேன். அதற்கு இப்போது என்ன அவசியம்?
சீடன் - அவசியம் இருக்கிறது குருவே! தில்லைச்சிதம்பரம் கோயில் அம்பலத்தில்
நின்று கொண்டு யாரும் தேவாரம்இ திருவாசகம் பாடக் கூடாது. பாடுபவர்கள் பூசை
முடிந்த பின்னர் மகாமண்டபத்தில் நின்று மட்டும் தேவாரம் பாடலாம்!
குரு - அம்பலத்தில் நின்று தேவார - திருவாசகங்களைப் பாடினால் என்னவாம்?
"அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் சொற்றமிழில் எமைப் பாடுக" என சிவனார்
சொன்னதாகச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியிருக்கிறாரே?
சீடன் - அதெல்லாம் சரிதான். சமயகுரவர்களில் ஒருவரான சுந்தரர் 'நாளும்
இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன்இ
பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை' என சம்பந்தரைச் சிறப்பிக்கிறார். தமிழிசை
கேட்கும் ஆவலால் சிவன் ஞானசம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்தான் என்கிறார்.
பிற்கால தாயுமானவரும் மொழிக்கு மொழி தித்திப்பாக மூவர் சொலும் தமிழ்
கேட்கும் முக்கண்ணன் திருச்செவிக்குத் தனது தமிழ் வெறும் பிதற்றலா என்று பாடி
இருக்கிறார்.
'தேவரெல்லாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கண்
செங்கரும்பே! மொழிக்குமொழி தித்திப்பாக
மூவர்சொலும் தமிழ்கேட்கும் திருச்செவிக்கே
மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோதான்'
எனத் தாயுமானவர் பாடுகிறார்.
அறுபத்து மூன்று நாயன்மார்கள் பெருமை பேசும் பெரிய புராண நூலை எழுத "உலகெலாம்' என்று சேக்கிழார் பெருமானுக்கு தில்லைத் திருக்கூத்தனே அடியெடுத்துக் கொடுத்தானாம். . திருவாசகம், திருக்கோவையார் பாடல்களை மாணிக்கவாசகர் பாடத்தானே அவற்றை எழுதிஇ "திருச்சிற்றம்பலமுடையான்' என்று ஆடவல்லானே கைச்சாத்திட்டான் என்கிறார்கள். தேவாரப் பாடல்கள் தில்லைக் கோவிலிலிருந்து தான் முதலாவது இராசராசன் சூழ்ச்சி செய்து மீட்டெடுத்தானாம். "என்னை இறைவன் நன்றாகப் படைத்னன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்று இறைவனே தமிழில் தோத்திரம் செய்வதை விரும்புவர் என்று குறிப்பிடுகிறார்.
குரு - நீ சொல்வது சரியென்றால் தில்லைச் தீட்சிதர்களுக்கு தேவார திருவாசகம் மீது ஏன் அப்படி ஒரு வெறுப்பு?
சீடன் - பிராமணர்களைப் பொறுத்தளவில் தேவார திருவாசகம் பண்டாரப் பாட்டுக்களாகும். அவற்றை ஓதும் பார்ப்பனர்களைப் பார்க்க முடியாது. எனவேதான் தேவார திருவாசகம் ஓதுவதற்கு ஓதுவார் என்ற புதிய சாதி உருவாக்கப்பட்டது. தில்லை ஆடலரசன் கோயில் அம்பலத்தில் (சைவர்களின் தாய்க் கோயில்) திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம்இ திருவாசகம்இ சிவபுராணம் பாட யாரையும் தில்லைவாழ் தீட்சிகர்கள் நேற்றுவரை அனுமதிக்கவில்லை. தேவார திருவாசகங்கள் திருமுறையில் சேர்க்கப்பட்டுஇ திருமுறைதான் சைவத்தின் அளவை (பிரமாணம்) என்று சைவர்கள் சிலர் உச்சி மீது வைத்து மெச்சினாலும்இ பிராமணர்களைப் பொறுத்தளவில் அவை பண்டாரப்பாட்டுக்கள்தான்! இன்னொரு காரணமும் இருக்கிறது. ஏனைய கோவில்கள் போலல்லாது தில்லைச் சிதம்பரத்தில் ஆகம வழிபாட்டு முறைக்குப் பதில் வேதநெறி வழிபாட்டுமுறை இருக்கிறது. வேதநெறி வழிபாடு முழுக்க முழுக்க சமற்கிருதத்தில்தான் நடைபெற வேண்டும். மேலும் இந்தச் சூத்திராள் வெறுப்பும் தமிழ் வெறுப்பும் "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க பூதபரம்பரை பொலிய" வந்துதித்த ஞானசம்பந்தர் மற்றும் "நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவைகலந்து ஊன்கலந்து உயிர்கலந்து தித்திக்கும்" திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் போன்ற பிராமணர்கள் மீதும் காட்டப்படுகிறது. அவர்கள் பெயர்களைப் பிராமணர்கள் தங்கள் குழ ந்தைகளுக்கு வைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
குரு - " கெஞ்சினால் மிஞ்சுவார்கள் மிஞ்சினால் கெஞ்சுவார்கள்" என்று தொடக்கத்தில் சொன்னாயே? அதற்குரிய விளக்கத்தை இன்னும் நீ சொல்லவில்லையே?
சீடன் - குருவே! அந்த நல்ல செய்தியைச் சொல்கிறேன். தமிழக அரசாணை பிறப்பித்த பின்னர் காவல்துறையின் பாதுகாப்போடு சிதம்பரம் போவிலுக்குப் போன ஓதுவார் ஆறுமுகசாமியையும் அவரது ஆதரவாளர்களையும் தீட்சிதகர்கள் கூடி அம்பலத்தில் ஏறாது தடுத்து விட்டனர். அப்போது நடந்த தள்ளு முள்ளில் காவல்துறையினருக்கும் காயம். காவல்துறை சும்மா விடுமா? 11 தீட்சிதர்களைக் குண்டுக் கட்டாகக் கட்டிக் கொண்டு போய் சிறையில் அடைத்துவிட்டது. ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 46 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்புறம் தொல். திருமாவளவன் ஒரு அறிக்கை விட்டார். கோவில் கட்டியது தமிழ் மன்னர்கள்இ பராந்தகச் சோழன்தான் தில்லைக் கோயில் கருவறையின் மேற்புறத்திற்குப் பொன் வேய்ந்தான்இ எனவே அந்தக் கோயிலை தமிழக அரசு அரசுடைமை ஆக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே தமிழக அரசு அரசாணையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீட்சிதர்களை எச்சரித்தது. இதனை அடுத்து ஆறுமுகசாமியும் அவர்களது ஆதரவாளர்களும் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் அம்பலத்தில் தேவார திருவாசகம் பாடப்போன ஆறுமுகசாமியை மாலை மரயாதையோடு தீட்சிதர்களால் வரவேற்றார்கள்.
குரு - இதனை நீதிமன்றம்இ காவல்துறை என்று அலையாமல் முதலே அம்பலத்தில் தேவாரம் திருவாசகம் பாட விட்டிருக்கலாமே?
சீடன் - சரியாகச் சொன்னீர்கள்! அய்ம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அம்பலத்தில் தேவார திருவாசகம் பாடப்பட்டது. பின்னர்தான் தடை வந்தது. ஆனால் இன்னும் சைவக் கோயில்களில் தமிழ்மொழி வழிபாடு கிடையாது
மடிகட்டிக் கோயிலிலே
மேலுடை இடுப்பினிலே
வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
பூசி யிருகைகட்டிப்
படிகட்டித் தமிழரெனப்
படிக்கட்டின் கீழ் நின்று
கொண்டுதானே உள்ளனர்?
என்ற இழிநிலை தமிழ்மொழிக்கு இந்தக் கணமும் தமிழ்நாட்டிலும் நீடிக்கிறது.
கனடாவிலும் நீடிக்கிறது. தமிழன் கட்டிய கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யப்
பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருககிறது.
(Muzhakkam
- March 27, 2008)
சீடனும் - குருவும்
சீடன் - குருவே! எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்பது தெரியாமல்
இருக்கிறது!
குரு - என்ன புதிர் போடுகிறாய்? சொல்வதை நேரடியாகச் சொல்லு.
சீடன - ரொறன்ரோவில் உள்ள
Can Indo Lanka
என்ற சஞ்சிகை
2008
CSL Awards Gala
என்ற நிகழ்ச்சியை
DoubleTree Internnational Hotel, Toronto
இல்
நடத்துகிறது.
குரு – விருதுகள் மலிந்து போன இந்தக் காலத்தில் பத்தோடு பதினொன்றாக இன்னும்
பத்து இருபது விருதுகள் கொடுத்தால் அதனால் என்ன இழப்பு?
சீடன் - இந்த விருது விழா ஒட்டாவா ஸ்ரீலங்கா தூதரகத்தின் ஆதரவோடு நடக்கிறது.
சிறப்பு விருந்தினராக ஸ்ரீலங்காவின் கிறிக்கெட் அவையின் தலைவர் அர்ச்சுனா
இரணதுங்கா கலந்து கொள்கிறார்.
குரு – யார் அவர்? முழு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று தனது அரை அமைச்சர்
பதவியை துறந்த அர்ச்சுன இரணதுங்காவா? அவர் பெரிய சிங்கள – பவுத்த வெறியர்
ஆயிற்றே?
சீடன் - அவரேதான்! தேசபிரேமி ஜனதா அமைப்பின் (தேசபக்த மக்கள் இயக்கம்)
வளர்ச்சிக்குத் தொடர்ந்து உழைத்து வருபவர். இந்தத் தேசபிரேமி அமைப்பில் சிங்கள
– பவுத்த இனவாதிகள் அனைவரும் இருக்கிறார்கள். 88ஃ89 காலப்பகுதியில் இந்த
அமைப்பு ஜாதிக விமுக்தி பெரமுன (ஜேவிபி) அமைப்பின் இராணுவப் பிரிவாக இயங்கியது.
குரு – ஓ அந்த தேசபிரேமியா? இந்திய பருப்பைச் சாப்பிட்டவர்களைக் கொன்ற இயக்கம்.
மாகாண தேர்தலில் வாக்களிக்கும் முதல் பத்து வாக்காளர்களது கைகளை வெட்டிய வீர
இயக்கம். அரசியல்வாதிகள், படையினர், காவல்துறையினர், பிக்குகள், மாணவர்கள்,
தொழிலதிபர்கள் என்று யாரையும் விட்டு வைக்காமல் எல்லோரையும் கண்டதுண்டமாக
வெட்டிச் சாய்த்தவர்கள்?
சீடன் - ஆமாம். அதே தேசபிரேமி ஜனதா அமைப்பை 2002 ஆம் ஆண்டு கைச்சாத்தான அமைதி
உடன்படிக்கையை எதிர்க்க ஜேவிபி மீள் தட்டியெழுப்பியது. அதன்; வளர்ச்சிக்குத்
தான் பாடுபடப்போவதாக அர்ச்சுன இரணதுங்கா சூளுரைத்தார்!
குரு – சாக்கடையில் சந்தன மணம் வீசுமா? இனவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள்!
சீடன் - குருவே! வேடிக்கை என்னவென்றால் அதே சிங்கள-பவுத்த இனவாதியின் கையால்
தமிழர்கள் சிலர் விருது வாங்குகிறார்கள்!
குரு - இதென்ன வெட்கக் கேடு? ஆளும் கட்சியைச் சேர்ந்த அர்ச்சுன இரணதுங்காவின்
கைகள் தமிழர்களில் குருதியால் நனைந்த கைகள். குருதி இன்னும் காயவில்லை.
பச்சையாக இருக்கிறது. அந்தக் கறைபடிந்த கைகள் கொடுக்கும் விருதுகளை மானமுள்ள
தமிழர்கள் எப்படி வாங்குவார்கள்? யார் அந்த தமிழ்த் துரோகிகள்?
சீடன் - படிக்கிறேன். கேளுங்கள்!
வீடு விற்பனை முகவர் திரு. ஈசா பரா ஈசானந்தா
வீடு விற்பனை முகவர் திரு. விக்டர் சந்தியாப்பிள்ளை
வீடு விற்பனை முகவர் திரு. மோகன் சுப்பிரமணியம்
வீடு விற்பனை முகவர் திரு. கரு கந்தையா
நிதி முதலீடு ஆலோசகர் திரு. பொபி சிவா
மருத்துவர். ஜோன் பிகராடோ
உதயன் செய்தியிதழ் ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம்
குரு – நிறுத்து! நிறுத்து! எனக்குத் தலைசுற்றுகிறது! இவர்கள் எல்லோரும் தமிழ் இனத்தை நம்பி தொழில் செய்பவர்கள். கடந்த ஆண்டு நடந்த தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவில் பேசிய மருத்துவரும் நீ சொல்கிற மருத்துவரும் ஒருவரா? நம்பமுடியவில்லையே!
சீடன் - குளத்தில் ஓடு மீன் ஓடி உறுமீன் வரும்வரை வாடியிருக்கும் கொக்குக்கு ஒரு கால் மட்டும் உண்டு எனப் பார்ப்பவர்கள் நினைப்பார்கள். அது பறக்கும் போதுதான் அதற்கு இரண்டு கால் உண்டு என்பது தெரிகிறது குருவே!
குரு – அங்கே தமிழ்மக்களை – ஆண், பெண், குழந்தைகள் என்ற வேறுபாடின்றி - குண்டு போட்டு கொன்று குவித்துவிட்டு அவர்கள் குருதியில் நீந்தும் கொடிய அரசுத் தலைவர் மகிந்த இராசபக்சேயின் அரசின் பங்குதாரரான அர்ச்சுன இரணதுங்காவின் கனடா வரவையிட்டு என்ன செய்ய உத்தேசம்?
சீடன் - கருப்புக் கொடி காட்டப் போகிறேன். ஸ்ரீலங்கா அரசினால் படுகொலை
செய்யப்பட்டவர்களின் படங்களை கனடியர்களும் பார்க்கும் வண்ணம் உயர்த்திப்
பிடிக்கப் போகிறேன்! பயங்கரவாதம் என்ற போர்வைக்குப் பின்னால் தமிழ்
இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் மகிந்த இராசபக்சேயின் கொடும்பாவியை
எரிக்கப் போகிறேன்!
குரு – எனது வாழ்த்துக்கள்!
குருவும் சீடனும்
தமிழ்ப் புத்தாண்டு எது?
சீடன் - தை முதல்நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு, திருவள்ளுவர் ஆண்டின்
தொடக்கம் என 1972 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசினால் நடைமுறைப்படுத்து
வந்திருந்தது. இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி அதற்கு சட்ட வடிவம்
கொடுத்திருக்கிறார். சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இதனைத் தமிழ்
கூறும் நல்லுகம் வாழ்த்தி வரவேற்றிருக்கிறது!
குரு - இல்லையே! புதிய தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்புக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பும் பாரதிய ஜனதா கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன? இதுகுறித்து இந்து பரிஷத் அமைப்பின் அனைத்துலக செயல் தலைவர் வேதாந்தம் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசின் முடிவு கண்டனத்துக்குரியதாகும் என்றார். முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. தை முதல் நாள் இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி ஆக அனுசரிக்கப்படுகிறது. எனவே இதைத் தமிழர்களின் தனிப் பெரும் நாளாகக் கருத முடியாது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள சித்திரை முதல் நாள் (ஏப்ரில் 14) தமிழ்ப் புத்தாண்டு என்பது, அறிவியல்பூர்வமானது, கோள்களின் போக்கை வைத்துக் கணிக்கப்பட்டதாகும். மக்களின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாகக் கருணாநிதி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே உடனடியாக இந்த முடிவை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று பேசியிருக்கிறார்?
சீடன் - அவர் அப்படித்தான் பேசுவார். அவரது பெயரைக் கவனித்தீர்களா? தமிழன் எதைச் செய்தாலும் இந்தக் கூட்டம் அதை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கும். வேதாந்தத்தைப் போலவே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இல கணேசன் “நாட்டைத் திசை திருப்பவும், வரலாற்றில் இடம் பெறவும், நாட்டைத் துண்டாடும் முயற்சியாகவும் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியுள்ளார்கள். முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள், நாம் தான் புத்திசாலிகள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்பவர்கள்” எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
குரு – சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியல் அடிப்படையில் ஆனது என வேதாந்தம் சொல்கிறாரே?
சீடன் - சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டதற்கு இலக்கியத்தில் சான்றில்லை. தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் ஆவணி தொடங்கி ஆடியில் முடிந்த காலத்தை ஒரு ஆண்டாகக் கொண்டார்கள் என உரையாசிரியர் நச்சினார்க்கினியர் சொல்கிறார். மேலும் சித்திரைப் புத்தாண்டு அறிவியல் அடிப்படையில் ஆனது என்பது முழுதும் உண்மையல்ல. வௌ;வேறு பண்பாடுகள் வௌ;வேறு நாளைத் தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றன. எல்லோருக்கும் சித்திரை முதல் நாள் புத்தாண்டல்ல. புவி ஞாயிறை ஒரு நீள்வட்டத்தில் சுற்றிவருகிறது. இது எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவதுபோன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். ஞாயிறின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 270) உட்புகும் நாளும் (மகரசங்கராந்தி) அறிவியல் அடிப்படையில் ஆனதுதான். இன்னும் சொல்லப் போனால் இராசி வட்டத்தின் (புவி ஞாயிறைச் சுற்றிவரும் மேலும் கீழும் ஆன பாதை) நான்கு முக்கிய கோணங்கள் இருக்கின்றன. மார்ச்சு மாதம் 20 (மேடம் - 0 பாகை), யூன் 21 (கடகம் - 90 பாகை), செப்தெம்பர் 23 (துலாம் -180 பாகை) டிசெம்பர் 22 (மகரம் - 270 பாகை) என்பவையே அந்தக் கோணங்களாகும்.
சித்திரைப் புத்தாண்டு (ஏப்ரில் 14) ஞாயிறு (புவி) தனது வடதிசை நோக்கிய பயணத்தில் மேடராசியின் 0 பாகையில் வான்நடுக்கோட்டை வெட்டுகிறது என்பது இந்திய சோதிடக் கணிப்பு. இது பிழையான கணிப்பாகும். உண்மையில் ஞாயிறு மேடராசி 0 பாகையை மார்ச்சு 21 ஆம் நாள் கடக்கிறது. இரண்டுக்கும் இடையில் 24 பாகை (அல்லது 24 நாள்) வேறுபாடு (அயனாம்சம்) இருக்கிறது. இதற்குக் காரணம் முன்னது நட்சத்திரத்தை வைத்தும் பின்னது ஞாயிறை வைத்தும் நாள், மாதம், ஆண்டு கணக்கிடப்படுவதுதான். புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அச்சில் ஏற்படும் தளம்பலாலும் அதன் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி (செக்கன்ட்ஸ்) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒரு நாள்) ஆகக் கூடிவிடும். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக அயனாம்ச வேறுபாடு திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் பிந்திப் போகின்றன. திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு மார்ச்சு 21 ஆம் நாள் கொண்டாடப்பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான திகதியில் கொண்டாடப்படுகின்றன. இன்னும் 11,232 ஆண்டுகளில் புவியின் பின்னேகல் காரணமாக வேனில் சமஇரவு துலா இராசியில் 0 பாகையில் ஞாயிறு புகும். அதாவது மேற்குல சோதிடத்தில் மார்ச்சு 20 இல் மேட இராசியில் ஞாயிறு புகும்போது இந்திய சோதிடத்தில் அதே ஞாயிறு துலா இராசியில் புகும். இரண்டும் எதிர்ரெதிராக 180 பாகையில் இருக்கும்! பனிக் காலம் கோடை காலமாகவும் கோடை காலம் பனிக் காலமாகவும் (வட கோளில்) மாறிவிடும்!
குரு – தமிழர்களுக்கு ஏனைய பண்பாடுகளில் உள்ளது போல ஒரு தொடர் ஆண்டு இல்லை. அந்தக் குறைபாட்டையும் தமிழக அரசு சட்டப்படி நீக்கியுள்ளது?
சீடன் - அது மட்டுமல்ல. இப்போதுள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழ் இல்லை. சில ஆண்டுகளுக்கு அருவருப்பான பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஆண்டுகள் பிறந்த கதையிலும் ஆபாசம் வழிந்தோடுகிறது!
குரு – சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்கு நல்ல காலம் பிறந்திருகிறது என்று
சொல்லு! (முழக்கம் - பெப்ரவரி 15,2008)
குருவும் சீடனும்
அய்யப்பா சரணம்!
சீடன் - சாமியே சரணம் அய்யப்பா!
குரு – உன் பக்தியை மெச்சினோம். இன்றைய தலைமுறைக்கு பக்தி குறைந்து
கொண்டுவருகிறது!
சீடன் - திருப்பதி வெங்கடேசுவரரை அடுத்த பணக்கார சாமி அய்யப்பன்தான். அதனால்
அவரைப் பற்றி அடிக்கடி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன!
குரு – என்ன செய்தி?
சீடன் - சபரிமலை அய்யப்பனைத் தரிசிக்க பத்து அகவைக்கு மேலும் அய்ம்பது
அகவைக்குக் கீழும் உள்ள பெண்கள் யாரும்; அனுமதிக்கப்படுவதில்லை.
குரு – ஏன் அப்படி? ஆண்கள் தரிசனம் செய்வதற்குத் தடையில்லை. பெண்கள் தரிசனம்
செய்ய மட்டும் ஏன் தடை?
சீடன் - என்ன குருவே! இது கூட உங்களுக்குத் தெரியாதா? அய்யப்பன் சாமி ஒரு
பிரமச்சாரி. அவருக்குப் பெண் வாடை பிடிக்காது! பெண்களை கோயிலுக்குள் விட்டால்
அய்யப்ப சாமிக்குத் தீட்டுப்பட்டு விடும்! கொஞ்சக் காலத்துக்கு முன் ஜெயமாலா
என்ற கன்னட நடிகை அய்யப்பன் ஆலயத்துக்குச் சென்ற போது கூட்ட நெரிசல் நெட்டித்
தள்ளியதால், கோயில் கருவறைக்குள் போய் விழுந்தாராம். வாய்ப்பபை நழுவவிடாத அந்த
நடிகை அய்யப்பன் திருவுருவத்தைத் தொட்டுக் கும்பிட்டார். அதனால்
அய்யப்பனுக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்று நாட்கணக்கில் பரிகார பூசைகள்
செய்தார்கள்!
குரு – பிள்ளையாரும் பிரமாச்சாரிதானே? அவருக்குத் தீடடு இல்லையே? அவர் பெண்வாடை
எனக்குப் பிடிக்காது என்று சொல்லவில்லையே? அது மட்டுமல்ல. சிவபெருமான் தனது
உடலில் பாதியைப் பெண்ணாக வைத்திருப்பதாக புராணிகர்கள் சொல்கிறார்கள். அதாவது
அர்த்தநாரீசுவரர் வடிவில் இருக்கிறார் என்கிறார்கள்.
சீடன் - சிவன் வேறு அய்யப்பன் வேறு! அய்யப்பன் அரிக்கும் அரனுக்கும் பிறந்தவர்.
எனவே அவருக்குப் பருவ மங்கையர்களைப் பிடிக்காது! பாலாழியைக் கடைந்ததும் அமுதம்
எடுத்ததும் பாகவதத்தில் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. மோகினி வடிவமெடுத்த
விஷ்ணுவைக் கண்டதும், தன்னுடைய மனைவியான பார்வதி அருகில் இருப்பதைக்கூடப்
பொருட் படுத்தாமல் சிவன் காமத்துடன் நெருங்கினார். கடைசியில் அவருக்குச்
சுக்கில வெளிப்பாடு உண்டானது. அது விழுந்த இடங்கள் பொன்னும் வெள்ளியும்
விளையும் பிரதேசங்கள் ஆகின. இந்துமதத்தில் ஏகப்பட்ட சட்டதிட்டங்கள். ஒவ்வொரு
கோயிலுக்கும் ஒவ்வொரு சாமிக்கும் தனித் தனிச் சட்டதிட்டங்கள் இருக்கின்றன!
வயிரவர், முனி, அய்யனார் போன்ற சாமிகளுக்கு ஆடு, கோழி பலி கொடுக்கலாம்!
குரு – பந்தளம் அரசரின் வளர்ப்பு மகன்தான் அய்யப்பன் என்றும் அய்யப்பன்
வேண்டுகோள்படி சபரிமலையில் அய்யப்பன் கோயில் கட்டப்பட்டது என்றும்
சொல்கிறார்களே? அதன்படி அய்யப்பன் மனிதன். கடவுள் அல்ல. சரி விடு.
பார்க்கப்போனால் எல்லாக் கடவுளரும் ஒரு காலத்தில் மனிதர்கள்தான். போகட்டும்.
இப்போது வந்த செய்தியைச் சொல்லு?
சீடன் - அய்யப்பனைத் தரிசிக்க சபரிமலையில் பெண்களுக்கென தனியாக ஒரு விழாக்
காலத்தை ஏற்படுத்தலாம் என்ற ஒரு யோசனையை கேரள அரசு உச்ச நீதிமன்றத்தின் முன்
வைத்திருக்கிறது. இது குறித்து நிபுணர்கள் குழுவை ஏற்படுத்தி, இந்த யோசனை
குறித்து ஆலோசனை செய்யலாம் எனக் சேரள அரசு சொல்கிறது. பெண்களும் கோயிலுக்கு
வந்து சாமி தரிசனம் செய்தால் வருவாய் அதிகரிக்கும் என்பது கேரள அரசின் கணிப்பு!
குரு – ஏன் உச்ச நீதிமன்றம் போக வேண்டும். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க
தனியாகச் சட்டம் கொண்டு வருவதுதானே?
சீடன் - அப்படியான திட்டம் அரசிடம் இல்லையாம். சட்டத்தின் மூலம் பெண்களை உள்ளே
நுழைய விட்டால் வாக்கு வங்கிக்கு ஆபத்து வரக் கூடும் என அரசு அஞ்சுகிறது. இந்து
மதத்தில் புரையோடிப் போயிருந்த எவ்வளவோ மூடத்தனங்கள் சட்டத்தின் மூலம்
வெள்ளைக்காரன் காலததிலேயே ஒழிக்கப்பட்டு விட்டன. உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை,
வரதட்சணை போன்றவை சட்டத்தால் தடைசெய்யப்பட்டுவிட்டன. விதவை மறுமணம் இப்போது
அனுமதிக்கப்படுகிறது. ஆகம விதிகளும் உடைக்கப்படுகின்றன. பிராமணர் கடல் கடக்கக்
கூடாது என்பது சாத்திரம். இப்போது பிராமணர்கள் தாராளமாகக் கடல் கடந்து
செல்கிறார்கள்.
குரு – வேதகாமங்களை - சம்பிரதாயங்களை - சட்ட மூலம் உடைக்கலாம் என்கிறாய்?
சீடன் - ஆம் குருவே!
குருவும் சீடனும்
சீடன் - குருவே ஏறச் சொன்னால் யாருக்குக் கோபம் வரும்?
குரு - இது தெரியாதா? ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் வரும்!
சீடன் - இறங்கச் சொன்னால் யாருக்குக் கோபம் வரும்?
குரு - இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம் வரும்?
சீடன் .. தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் ஒரு வெள்ளிக் காசு கொடுக்காத ஒரு
நடிகரின் படத்தைப் புறக்கணிக்கச் சொன்னால் யாருக்குக் கோபம் வரும்?
குரு - எனக்குத் தெரியாது நீயே சொல்லு!
சீடன் - திரையரங்கு நடத்துபவர்களுக்குக் கோபம் வரும்!
குரு - ஏன்?
சீடன் - சிலர் இனம் எக்கேடு கெட்டாலும் பருவாயில்லை தாங்கள் மட்டும் உழைத்தால்
போதும் என்று நினைக்கிறார்கள்.
குரு - அப்படியா?
சீடன் - ஆம் குருவே! ரஜனி காந்த் என்றொரு நடிகர் இருக்கிறார். காவிரி ஆற்றுத்
தண்ணீரைத் திறந்துவிட முடியாது என சண்டித்தனம் செய்த கர்நாடக அரசைக் கண்டித்து
நூற்றுக் கணக்கான நடிகை – நடிகர்கள் தஞ்சைக்கு ஊர்வலம் போனார்கள். ரஜனி காந்த்
போகவில்லை. அவர் தனியே சென்னையில் உண்ணா நோன்பு இருந்து தனது “தமிழ்” உணர்வைக்
காட்டினார்! அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் 40 – 50 கோடி உரூபாய் சம்பளம்
வாங்குகிறார். எப்படி அது சாத்தியமாகிறது? இயக்குநர் சீமான் சொல்லியது போல
புலம் பெயர் தமிழர்கள் கொடுக்கும் வெள்ளிக் காசுகள்தான் காரணம்!
குரு - அப்படியென்றால் ரஜனி காந்த் நடிக்கும் றோபோ படத்தைப் புறக்கணிக்கப்
போகிறாய் என்று சொல்?
சீடன் - அவர் நடித்த றோபோ படம் மட்டுமல்ல அவர் நடித்த எந்தப் படம் என்றாலும்
உலகளாவிய அளவில் புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிக்கப் போகிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் நாங்கள் முதலே சொல்லவில்லையே என்று பின்னர் குறைபடக்
கூடாது!
குரு – என்னையும் உன் கன்னையில் சேர்த்துக் கொள்! (முழக்கம் - பெப்ரவரி 01,
2008)
குருவும் சீடனும்
சாமியே சரணம் அய்யப்பா!
சீடன் - சாமியே சரணம் அய்யப்பா!
குரு – உன் பக்தியை மெச்சினோம். இன்றைய தலைமுறைக்கு பக்தி குறைந்து
கொண்டுவருகிறது!
சீடன் - திருப்பதி வெங்கடேசுவரரை அடுத்த பணக்கார சாமி அய்யப்பன்தான். அதனால்
அவரைப் பற்றி அடிக்கடி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன!
குரு – என்ன செய்தி?
சீடன் - சபரிமலை அய்யப்பனைத் தரிசிக்க பத்து அகவைக்கு மேலும் அய்ம்பது
அகவைக்குக் கீழும் உள்ள பெண்கள் யாரும்; அனுமதிக்கப்படுவதில்லை.
குரு – ஏன் அப்படி? ஆண்கள் தரிசனம் செய்வதற்குத் தடையில்லை. பெண்கள் தரிசனம்
செய்ய மட்டும் ஏன் தடை?
சீடன் - என்ன குருவே! இது கூட உங்களுக்குத் தெரியாதா? அய்யப்பன் சாமி ஒரு
பிரமச்சாரி. அவருக்குப் பெண் வாடை பிடிக்காது! பெண்களை கோயிலுக்குள் விட்டால்
அய்யப்ப சாமிக்குத் தீட்டுப்பட்டு விடும்! கொஞ்சக் காலத்துக்கு முன் ஜெயமாலா
என்ற கன்னட நடிகை அய்யப்பன் ஆலயத்துக்குச் சென்ற போது கூட்ட நெரிசல் நெட்டித்
தள்ளியதால், கோயில் கருவறைக்குள் போய் விழுந்தாராம். வாய்ப்பபை நழுவவிடாத அந்த
நடிகை அய்யப்பன் திருவுருவத்தைத் தொட்டுக் கும்பிட்டார். அதனால்
அய்யப்பனுக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்று நாட்கணக்கில் பரிகார பூசைகள்
செய்தார்கள்!
குரு – பிள்ளையாரும் பிரமாச்சாரிதானே? அவருக்குத் தீடடு இல்லையே? அவர் பெண்வாடை
எனக்குப் பிடிக்காது என்று சொல்லவில்லையே? அது மட்டுமல்ல. சிவபெருமான் தனது
உடலில் பாதியைப் பெண்ணாக வைத்திருப்பதாக புராணிகர்கள் சொல்கிறார்கள். அதாவது
அர்த்தநாரீசுவரர் வடிவில் இருக்கிறார் என்கிறார்கள்.
சீடன் - சிவன் வேறு அய்யப்பன் வேறு! அய்யப்பன் அரிக்கும் அரனுக்கும் பிறந்தவர்.
எனவே அவருக்குப் பருவ மங்கையர்களைப் பிடிக்காது! பாலாழியைக் கடைந்ததும் அமுதம்
எடுத்ததும் பாகவதத்தில் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. மோகினி வடிவமெடுத்த
விஷ்ணுவைக் கண்டதும், தன்னுடைய மனைவியான பார்வதி அருகில் இருப்பதைக்கூடப்
பொருட் படுத்தாமல் சிவன் காமத்துடன் நெருங்கினார். கடைசியில் அவருக்குச்
சுக்கில வெளிப்பாடு உண்டானது. அது விழுந்த இடங்கள் பொன்னும் வெள்ளியும்
விளையும் பிரதேசங்கள் ஆகின. இந்துமதத்தில் ஏகப்பட்ட சட்டதிட்டங்கள். ஒவ்வொரு
கோயிலுக்கும் ஒவ்வொரு சாமிக்கும் தனித் தனிச் சட்டதிட்டங்கள் இருக்கின்றன!
வயிரவர், முனி, அய்யனார் போன்ற சாமிகளுக்கு ஆடு, கோழி பலி கொடுக்கலாம்!
குரு – பந்தளம் அரசரின் வளர்ப்பு மகன்தான் அய்யப்பன் என்றும் அய்யப்பன்
வேண்டுகோள்படி சபரிமலையில் அய்யப்பன் கோயில் கட்டப்பட்டது என்றும்
சொல்கிறார்களே? அதன்படி அய்யப்பன் மனிதன். கடவுள் அல்ல. சரி விடு.
பார்க்கப்போனால் எல்லாக் கடவுளரும் ஒரு காலத்தில் மனிதர்கள்தான். போகட்டும்.
இப்போது வந்த செய்தியைச் சொல்லு?
சீடன் - அய்யப்பனைத் தரிசிக்க சபரிமலையில் பெண்களுக்கென தனியாக ஒரு விழாக்
காலத்தை ஏற்படுத்தலாம் என்ற ஒரு யோசனையை கேரள அரசு உச்ச நீதிமன்றத்தின் முன்
வைத்திருக்கிறது. இது குறித்து நிபுணர்கள் குழுவை ஏற்படுத்தி, இந்த யோசனை
குறித்து ஆலோசனை செய்யலாம் எனக் சேரள அரசு சொல்கிறது. பெண்களும் கோயிலுக்கு
வந்து சாமி தரிசனம் செய்தால் வருவாய் அதிகரிக்கும் என்பது கேரள அரசின் கணிப்பு!
குரு – ஏன் உச்ச நீதிமன்றம் போக வேண்டும். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க
தனியாகச் சட்டம் கொண்டு வருவதுதானே?
சீடன் - அப்படியான திட்டம் அரசிடம் இல்லையாம். சட்டத்தின் மூலம் பெண்களை உள்ளே நுழைய விட்டால் வாக்கு வங்கிக்கு ஆபத்து வரக் கூடும் என அரசு அஞ்சுகிறது. இந்து மதத்தில் புரையோடிப் போயிருந்த எவ்வளவோ மூடத்தனங்கள் சட்டத்தின் மூலம் வெள்ளைக்காரன் காலததிலேயே ஒழிக்கப்பட்டு விட்டன.
உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை, வரதட்சணை போன்றவை சட்டத்தால்
தடைசெய்யப்பட்டுவிட்டன. விதவை மறுமணம் இப்போது அனுமதிக்கப்படுகிறது. ஆகம
விதிகளும் உடைக்கப்படுகின்றன. பிராமணர் கடல் கடக்கக் கூடாது என்பது சாத்திரம்.
இப்போது பிராமணர்கள் தாராளமாகக் கடல் கடந்து செல்கிறார்கள்.
குரு – வேதகாமங்களை - சம்பிரதாயங்களை - சட்ட மூலம் உடைக்கலாம் என்கிறாய்?
சீடன் - ஆம் குருவே! (முழக்கம் - 08-02-2008)
சீடன் - தை முதல்நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு, திருவள்ளுவர் ஆண்டின்
தொடக்கம் என 1972 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசினால் நடைமுறைப்படுத்து
வந்திருந்தது. இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி அதற்கு சட்ட வடிவம்
கொடுத்திருக்கிறார். சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இதனைத் தமிழ்
கூறும் நல்லுகம் வாழ்த்தி வரவேற்றிருக்கிறது!
குரு - இல்லையே! புதிய தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்புக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பும் பாரதிய ஜனதா கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன? இதுகுறித்து இந்து பரிஷத் அமைப்பின் அனைத்துலக செயல் தலைவர் வேதாந்தம் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசின் முடிவு கண்டனத்துக்குரியதாகும் என்றார். முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. தை முதல் நாள் இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி ஆக அனுசரிக்கப்படுகிறது. எனவே இதை தமிழர்களின் தனிப் பெரும் நாளாகக் கருத முடியாது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள சித்திரை முதல் நாள் (ஏப்ரில் 14) தமிழ்ப் புத்தாண்டு என்பது, அறிவியல்பூர்வமானது, கோள்களின் போக்கை வைத்துக் கணிக்கப்பட்டதாகும். மக்களின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாகக் கருணாநிதி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே உடனடியாக இந்த முடிவை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று பேசியிருக்கிறார்?
சீடன் - அவர் அப்படித்தான் பேசுவார். அவரது பெயரைக் கவனித்தீர்களா? தமிழன் எதைச் செய்தாலும் இந்தக் கூட்டம் அதை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கும். வேதாந்தத்தைப் போலவே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இல கணேசன் “நாட்டைத் திசை திருப்பவும், வரலாற்றில் இடம் பெறவும், நாட்டைத் துண்டாடும் முயற்சியாகவும் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியுள்ளார்கள். முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள், நாம் தான் புத்திசாலிகள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்பவர்கள்” எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
குரு – சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியல் அடிப்படையில் ஆனது என வேதாந்தம் சொல்கிறாரே?
சீடன் - சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டதற்கு இலக்கியத்தில் சான்றில்லை. தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் ஆவணி தொடங்கி ஆடியில் முடிந்த காலத்தை ஒரு ஆண்டாகக் கொண்டார்கள் என உரையாசிரியர் நச்சினார்க்கினியர் சொல்கிறார். மேலும் சித்திரைப் புத்தாண்டு அறிவியல் அடிப்படையில் ஆனது என்பது முழுதும் உண்மையல்ல. வௌ;வேறு பண்பாடுகள் வௌ;வேறு நாளைத் தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றன. எல்லோருக்கும் சித்திரை முதல் நாள் புத்தாண்டல்ல. புவி ஞாயிறை ஒரு நீள்வட்டத்தில் சுற்றிவருகிறது. இது எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவதுபோன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். ஞாயிறின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 270) உட்புகும் நாளும் (மகரசங்கராந்தி) அறிவியல் அடிப்படையில் ஆனதுதான். இன்னும் சொல்லப் போனால் இராசி வட்டத்தின் (புவி ஞாயிறைச் சுற்றிவரும் மேலும் கீழும் ஆன பாதை) நான்கு முக்கிய கோணங்கள் இருக்கின்றன. மார்ச்சு மாதம் 20 (மேடம் - 0 பாகை), யூன் 21 (கடகம் - 90 பாகை), செப்தெம்பர் 23 (துலாம் -180 பாகை) டிசெம்பர் 22 (மகரம் - 270 பாகை) என்பவையே அந்தக் கோணங்களாகும்.
சித்திரைப் புத்தாண்டு (ஏப்ரில் 14) ஞாயிறு (புவி) தனது வடதிசை நோக்கிய பயணத்தில் மேடராசியின் 0 பாகையில் வான்நடுக்கோட்டை வெட்டுகிறது என்பது இந்திய சோதிடக் கணிப்பு. இது பிழையான கணிப்பாகும். உண்மையில் ஞாயிறு மேடராசி 0 பாகையை மார்ச்சு 21 ஆம் நாள் கடக்கிறது. இரண்டுக்கும் இடையில் 24 பாகை (அல்லது 24 நாள்) வேறுபாடு (அயனாம்சம்) இருக்கிறது. இதற்குக் காரணம் முன்னது நட்சத்திரத்தை வைத்தும் பின்னது ஞாயிறை வைத்தும் நாள், மாதம், ஆண்டு கணக்கிடப்படுவதுதான். புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அச்சில் ஏற்படும் தளம்பலாலும் அதன் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி (செக்கன்ட்ஸ்) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒரு நாள்) ஆகக’ கூடிவிடும். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக அயனாம்ச வேறுபாடு திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் பிந்திப் போகின்றன. திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு மார்ச்சு 21 ஆம் நாள் கொண்டாடப்பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான திகதியில் கொண்டாடப்படுகின்றன. இன்னும் 11,232 ஆண்டுகளில் புவியின் பின்னேகல் காரணமாக வேனில் சமஇரவு துலா இராசியில் 0 பாகையில் ஞாயிறு புகும். அதாவது மேற்குல சோதிடத்தில் மார்ச்சு 20 இல் மேட இராசியில் ஞாயிறு புகும்போது இந்திய சோதிடத்தில் அதே ஞாயிறு துலா இராசியில் புகும். இரண்டும் எதிர்ரெதிராக 180 பாகையில் இருக்கும்! பனிக் காலம் கோடை காலமாகவும் கோடை காலம் பனிக் காலமாகவும் (வட கோளில்) மாறிவிடும்!
குரு – தமிழர்களுக்கு ஏனைய பண்பாடுகளில் உள்ளது போல ஒரு தொடர் ஆண்டு இல்லை. அந்தக் குறைபாட்டையும் தமிழக அரசு சட்டப்படி நீக்கியுள்ளது?
சீடன் - அது மட்டுமல்ல. இப்போதுள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழ் இல்லை. சில ஆண்டுகளுக்கு அருவருப்பான பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஆண்டுகள் பிறந்த கதையிலும் ஆபாசம் வழிந்தோடுகிறது!
குரு – சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்கு நல்ல காலம் பிறந்திருகிறது என்று
சொல்லு!
குருவும் சீடனும்
சீடன் - குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது!
மூடநம்பிக்கை ஒழியுது சாத்திரக் குப்பைகள் தொலையுது!
பயம் தொலையுது பாவம் தொலையுது!
பழைய பயித்தியம் படீரென்று தெளியுது!
குருவே! நம்புகிறீர்களோ இல்லையோ
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்!
குரு – என்ன செய்தி? சொல்லித் தொலை!
சீடன் - தலைவர் பிரபாகரனது பிறந்த நாள் விழாவில் சிறப்புப் பேச்சாளராகக்
கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் சீமான் ஒன்றரை மணித்தியாலம் பேசினார்.
சிந்தனையைக் கிளறும் பேச்சு. பொதுவாக மேடைப் பேச்சுக்குரிய இலக்கணம் எதுவும்
இல்லாமல் தனது உணர்வுகளை வார்த்தைகளாக வடித்தெடுத்துப் பேசினார்.
குரு – நானும் கேள்விப்பட்டேன். மக்கள் அடிக்கடி கையொலி எழுப்பித் தங்கள்
மகிழ்ச்சியைத் தெரிவித்தார்களாம்.
சீடன் - கைதட்டல்? தட்டு தட்டு என்று தட்டினார்கள். தட்டிக் கொண்டே
இருந்தார்கள். அதிலும் தீபாவளி கொண்டாடும் தமிழர்களை ஒரு பிடி பிடித்தார். ஒரே
கை தட்டல்!
குரு – விளக்கமாகச் சொல்லு.
சீடன் - ஒரு தமிழன் கொல்லப்பட்டதைத் தமிழர்களே கொண்டாடுகிறார்கள். புராணங்களில்
அரக்கர், அசுரர், அவுணர், இராட்சதர் என்று இழிவாகத் தூற்றப்படுபவர்கள்
தமிழர்களே. தீபாவளி நரகாசுரன் என்ற அசுரனை விஷ்ணு சூழ்ச்சியால் கொன்றதைக்
கொண்டாடும் நாளாகும். இது தமிழனைக் கொன்றுவிட்டு தமிழர்களையே அதைக்
கொண்டாடும்படி பார்ப்பனியம் செய்த சூழ்ச்சி ஆகும். இரண்யாட்சதன் பூமியைப்
பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளித்தானாம். விஷ்ணு வாமன (பன்றி) அவதாரம் எடுத்து
அதனை மீட்டானாம். அப்போது விஷ்ணு பூமாதேவி மீது காதல் கொண்டு கலவி செய்தானாம்.
அந்தக் கலவியில் பிறந்தவன்தான் நரகாசுரன். உருண்டை வடிவமான பூமியைப் பாயாக
எப்படிச் சுருட்டுவது? சுருட்டும் போது இரண்யாட்சதன் எங்கிருந்தான்? பூமியைக்
கடலுக்குள் எப்படி ஒளிப்பது? உலகம் தட்டை என்கிற காட்டுமிராண்டிக் காலக்
கற்பனைக் கதைதானே இது? இப்படிக் கேள்வி மேல் கேள்விகளை அடுக்கி சீமான்
பேசியபோது அவையில் பலத்த கைதட்டல்!
குரு – பருவாயில்லை. கனடியத் தமிழர்களுக்கும் அறிவு பிறந்திருக்கிறது என்று
சொல். தீபாவளிக் கதை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உலக நடைமுறைக்கும் ஒவ்வாதது
என்பது தமிழர்களுக்கு இப்போது தெரிகிறது!
சீடன் - அதேதான் குருவே! தமிழர்களை மூளையுள்ள தமிழர்களாக மாற்ற வேண்டும்.
பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும். அச்சமும், அறியாமையும் சேர்ந்து
பெற்றெடுத்த பிள்ளைகளே மதமும் கடவுளும் என்ற உண்மையைச் சொல்லிக்; கொடுக்க
வேண்டும்.
தமிழேந்தல் ஈழவேந்தனும் கோயில் வழிபாடு செந்தமிழில் இருக்க வேண்டும் என்று
அடித்துப் பேசினார். தமிழ் தெரியாத கடவுள்கள் கனடாவை விட்டுப் போய்விட வேண்டும்
என்று விளாசினார். இதனை முன்னரே உங்கள் காதில் போட்டு வைத்திருக்கிறேன்.
குரு – ஆமாம், தீவிர பக்தர்கள் அவரது பேச்சைக் கேட்டு முகத்தை சுளித்துக்
கொண்டார்கள் என்று கேள்விப்பட்டேன். சரி போகட்டும். அவரது பேச்சுக்கு ஏதாவது
பலன் உண்டா?
சீடன் - ஏன் இல்லை? கனடா முருகன் (கந்தசாமி) கோயில் அருச்சனை தமிழில்
செய்யப்படும் என்று வானொலியில் அறிவித்தல் செய்கிறார்கள்!
குருவும் சீடனும்
திருவள்ளுவருக்கும் நல்ல காலம்
சீடன் - குருவே! தமிழுக்கும் திருவள்ளுவருக்கும் நல்ல காலம்
பிறந்திருக்கிறது!
குரு – எங்கே?
சீடன் - வேறெங்கே? ரொறன்ரோவில்தான்!
குரு – எப்படி?
சீடன் - அப்படிக் கேளுங்கள் குருவே! தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் திருக்குறள்
ஓதி தமிழ்முறைத் திருமணங்களை நடாத்தி வருகிறது. சென்ற கிழமை மட்டும் இரண்டு
தமிழ்முறைத் திருமணங்கள் மிகவும் சிறப்பாக நடந்தேறின.
குரு – அதென்ன தமிழ்முறைத் திருமணம்?
சீடன் - அய்யர் இல்லாமல், அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல், தீ
வளர்க்காமல், அகலியைக் கெடுத்ததால் உடல் முழுதும் ஆயிரம் யோனியைப் பரிசாகப்
பெற்ற இந்திரன் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சி இல்லாமல்,
யாருக்கும் புரியாத சமற்கிருத கூச்சல் இல்லாமல், ஆபாச மந்திரங்கள் இல்லாமல்
எங்கள் தாய்மொழியான தமிழுக்கும் தமிழ் வேதமாகிய திருக்குறளுக்கும் தமிழ்முறைத்
திருமணத்தில் சிறப்புச் செய்யப்படுகிறது. திருக்குறளில் இருந்து 10 குறள்களை
திருமண விழாத் தலைவர் சொல்லிக் கொடுக்க மணமக்கள் அதனை ஓதுகிறார்கள்.
தமிழ்முறைத் திருமணங்களைப் பார்ப்பவர்களுக்குத் தமிழ்முறைத் திருமணம் மிகவும்
பிடித்துவிடுகிறது.
குரு – சமற்கிருதம் தேவ பாஷை. தமிழ் நீஷபாஷை. கடவுளுக்குத் தேவபாஷையான
சமற்கிருதம்தான் தெரியும் என்று சொல்கிறார்களே?
சீடன் - அது வெறும் புலுடா குருவே! சமற்கிருதம் தேவபாஷை என்றால் அது இன்று
செத்துவிட்டதே? அது எப்படி? சைவசமய குரவர்கள் அப்பர், சுந்தரர்,
ஆளுடைப்பிள்ளையார், அருண்மணி வாசகர் எல்லோரும் (இதில் அப்பர் நீங்கலாக
எஞ்சியவர்கள் பிராமணர்கள்) இறைவனைத் தமிழில்தானே பாடி மகிழ்ந்தார்கள்!
“அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் எம்மை மண்ணில் சொற்றமிழில் பாடுக” என சிவனே
சுந்தரரைக் கேட்டதாக சேக்கிழார் தாம் பாடிய திருத்தொண்டர் புராணத்தில் (பெரிய
புராணத்தில்) சொல்லியிருக்கிறாரே!
குரு – அப்படியா?
சீடன் - சிவன் தன்னைப் பாடும்படி சுந்தரைக் கேட்க சுந்தரர் எப்படிப் பாடுவேன்
எனத் திருப்பிக் கேட்;க “என்னைப் பித்தன் என்று சொல்வாயே! ஆதலால் பித்தன் என்றே
தொடங்கிப் பாடுக” எனச் சுந்தரர் “பித்தாப்பிறை சூடி பெருமானே அருளாளாய்.......”
என்று பைந்தமிழில்தானே தேவாரம் பாடினார். அவர் சமற்கிருதத்தில் பாடவில்லையே?
குரு – அப்படியென்றால் கடவுளுக்கு மொழிச் சிக்கல் இல்லை என்று சொல்லு?
சீடன் - அதேதான் குருவே! தமிழ் நீஷபாஷை என்று பார்ப்பனர்கள் சொன்னதை சூடு,
சொரணை கொஞ்சமும் இல்லாத சைவத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டதுதான் பரிதாபம்.
கனடாவுக்கு வருகை தந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தமிழேந்தல் மா.க. ஈழவேந்தன்
கோயில கட்டியவன் தமிழன், சிற்பங்கள் செதுக்கியவன் தமிழன், ஒவியம் தீட்டியவன்
தமிழன் ஆனால் குடமுழுக்குச் செய்தபின் அவன் கருவறைக்கு வெளியே
நிறுத்தப்படுகிறான். அவனோடு சேர்த்து தேவர திருவாசகங்களும் கருவறைக்கு வெளியே
தள்ளப்பட்டுவிடுகின்றன எனக் கடுமையாகச் சாடியுள்ளார்!
குரு – ஈழவேந்தன் சைவராயிற்றே! வேறென்ன சொன்னார்?
சீடன் - தமிழ்த்தெரியாத கடவுளர்கள் தமிழ்நாட்டில் இருந்தும் கனடாவில் இருந்தும்
வெளியேற வேண்டும் என்றார். பிராமணர்கள் ஏன் ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி,
மாணிக்கவாசகர் ஆகியோரது பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு வைப்பதில்லை எனக்
காட்டமாகக் கேட்கிறார்?
குரு – ஏன் வைப்பதில்லை? பிராமணர்களுக்கு சைவமும் தமிழும் வளர்த்த மூவர் மீதும்
ஏன் இந்தக் காழ்ப்பு?
சீடன் - மூவரும் தமிழில் பாடித் தமிழை உச்சிமேல் வைத்துப் போற்றியதுதான்
காரணம். அதிலும் ஞானசம்பந்தர் தமிழுக்குச் சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ்,
ஞானத் தமிழ் என ஏரளமான அடைகளைக் கொடுத்ததோடு வாய்க்கு வாய் தன்னை “தமிழ்
ஞானசம்பந்தன்” என்று அழைத்துக்கொண்டார். இதனால் பிராமணர்கள் நந்தன் பாணியில்
சம்பந்தரையும் மனைவியையும் உறவினரையும் எரித்துக் கொன்றுவிட்டு அவர்
திருக்கோயில் சோதியில் புகுந்து விட்டார் என்று கதை கட்டிவிட்டார்கள்! ஆயிரம்
ஆண்டுகள் கழித்தும் மன்னார்குடி இராஜகோபால் தீட்சிதர்; 'பகவானுக்கே அபச்சாரம்
பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல
அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? எனக் கேட்டு வெறுப்பை உமிழ்கிறார்
என்றால் தமிழைப் போற்றிய தமிழ்ஞானசம்பந்தரை அவர் காலத்து வைதீகப் பிராமணர்கள்
இலேசில் விட்டிருப்பார்களா?
குரு – மவுனம். (முழக்கம் - நொவெம்பர் 16, 2007
குருவும் சீடனும்
கோயில்களது வருமானம் வரண்டு வருகிறது!
சீடன் - குருவே! வாணிகத்தைப் பெருக்க வணிகர்கள் புதிய புதிய
உத்திகளைக் கையாள்கிறார்கள்!
குரு – வணிகத்தைப் பெருக்க வேண்டும் என்றால் புதுப் புது உத்திகளை கையாளத்தான்
வேண்டும். இதில் குறைகாண என்ன இருக்கிறது?
சீடன் - நீங்கள் சொல்வது சரிதான் குருவே! ஆனால் நான் சொல்ல வந்தது பக்தி வாணிகத்தைப் பற்றிக் குருவே!ஷ
குரு – அவர்கள் என்ன செய்கிறார்கள்?
சீடன் - ஒரு கோயிலில் ஒரு ஆண்டில் எத்தனை தேர்த் திருவிழாக்கள் நடக்கும்? அல்லது நடக்க வேண்டும்?
குரு - இதென்ன கேள்வி. ஒரு கோயிலுக்கு ஒரு தேர்த்திருவிழாதான். பிள்ளையார் கோயில் என்றால் பிள்ளையாருக்கு தேர்த் திருவிழா. அதுதான் ஆகமவிதி!
சீடன் - ஆகம விதிகளை யார் இப்ப கடைப்பிடிக்கிறார்கள். பக்தி
வாணிகத்தில் இப்போது கடும் போட்டி. கொஞ்சம் கொஞ்சமாக ரொறன்ரோவில் இப்போது கண்ட
இடங்களில் எல்லாம் கோயில்கள் முளைத்துவிட்டன! எண்ணிப் பார்த்த ஒருவர் மொத்தம்
60 கோயில்கள் இருக்கிறது என்று சொல்கிறார்.
குரு – பக்தி வெள்ளம் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஓடுது என்று சொல்லு?
சீடன் - பக்தி பெருத்துவிட்டதோ இல்லையோ போட்டி வலுத்துவிட்டது. அதுதான் ஆண்டில் இரண்டு மூன்று தேர் இழுக்கிறார்கள்! அய்ந்து வீத வட்டிக்குக் கடன் கொடுத்து ஊரை அடித்து உலையில் போடுபவர்கள்தான் உபயகாரர்கள்!
குரு – தொலைக்காட்சியில் பூங்காவனத் திருவிழா மற்றும் அகண்ட நாம
அருச்சனை காட்சிகளைக் காட்டினார்கள்.
சீடன் - நானும் பார்த்தேன்! எண்ணிப் பத்துப் பேர் இல்லை. ஒரு ஆடலரசி வெறும்
சுவரைப் பார்த்து நடனம் ஆடினார். பார்க்கப் பரிதாபமாக இருந்தது!
குரு – 60 கோயில்கள் என்றால் பக்தர்கள் எந்தக் கோயிலுக்குப் போவது? ஒரு கோயில் இரண்டு கோயில் என்றால் தலைக்கு 300 பக்தர்கள் போயிருப்பார்கள்!
சீடன் - நீங்கள் சொல்வது முற்றிலும் சரி குருவே! சந்தைப் பொருளாதார விதிப்படி இனிக் கோயில் திறப்பு விழாக்களுக்குப் பதில் மூடுவிழா நடக்கப் போகிறது! பல கோயில்களின் வருமானம் வறண்டு வருகிறது! அதன் பொருள் தமிழன் பாரதியார் கனவு கண்ட உலர்ந்த தமிழனாக மாறி வருகிறான் என்பதுதான்!
குருவும் சீடனும்
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்...
சீடன் - செத்தபிறகு சிவலோகம்
வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரையா மென்றிங் கூதடா சங்கம்!
குரு - என்ன காலங்காத்தாலே பாரதியார் பாடலை அள்ளி விடுகிறாய்?
சீடன் - காரணம் இருக்கிறது குருவே! சென்ற கிழமை ஒரு ஆண்டுத்
திவசத்துக்குப் போயிருந்தேன். அங்கு நடந்த இரண்டு மணி நேர சடங்குகளைப் பார்த்த
போது பாரதியாரின் பாடல்தான் நினைவுக்கு வந்தது!
குரு – பாரதி பாடலுக்கும் ஆண்டுத் திவசத்துக்கும் என்ன சம்பந்தம்?
சீடன் - இருக்கிறது குருவே! சோதிடன் உயிரோடு இருக்குமட்டும் விடமாட்டான். புரோகிதன் செத்தபிறகும் விடமாட்டான் என்ற பழமொழி சரிதான். தமிழர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஆண்டுத் திவசம் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு மனிதன் இறந்தால் அவனது உடம்பு அழிந்துவிடுகிறது ஆனால் ஆன்மா அதன் இருவினைக்கும் (நல்வினை-தீவினை) ஏற்க மறுபடியும் பிறக்கிறது என்கிறது சைவ சித்தாந்தம்.
குரு – நீ சொல்வது மெத்தவும் சரி!
சீடன் - இறந்தபோன ஒருவருக்கு ஓர் ஆண்டு கழித்து புரோகிதர் மூலம் அவருக்கு வேண்டிய அரிசி, காய்கறி, மா, பண்டம், பாத்திரம், வேட்டி, குடை, தலையணை, பாய், செருப்பு....... போன்றவற்றைத் தானம் கொடுக்கிறார்கள். புரோகிதரும் அவற்றை வாங்கிக் கொண்டு “திருப்பியஸ்து’ என்று சொல்லி விட்டு வீட்டுக்குக் கொண்டுபோய் சமைத்துச் சாப்பிடுகிறார். இதில் இறந்தவருக்கு என்ன பயன்? அவர் எங்கு இருக்கிறார்? என்ன பிறப்புப் பிறந்திருக்கிறார்? என்பது யாருக்கும் தெரியாது? ஒரு வாதத்துக்கு அவரது கர்மவினைக்கு ஏற்ப அவர் ஒரு விலங்காகப் பிறந்துவிட்டார் என்று வைத்துக் கொண்டால் இந்த செருப்பு, குடை, பாயால் என்ன பலன்?
குரு – எல்லாம் ஒரு நம்பிக்கைதான்!
சீடன் - இல்லை குருவே. இது அப்பட்டமான சுரண்டல். ஆரியப் புரோகிதர்கள் செத்தபிறகு சிவலோகம் வைகுண்டம் இருக்கிறது என்று சொல்லிய பேயுரையை எமது மூதாதையர் நம்பி ஏமாந்து போனார்கள் என்பதற்கு இந்த ஆண்டுத்திவசம் ஒரு துல்லியமான எடுத்துக்காட்டு. இந்து மதத்தில் தோத்திரம் குறைவு. சாத்திரத் சடங்குகள்தான் அதிகம். இந்தச் சாத்திரச் சடங்குகள் மூட நம்பிக்கைகளை வளர்த்து மக்களைச் சுரண்டுவதையே குறியாகக் கொண்டுள்ளன.
குரு இந்துக்கள் மதம் மாறுவதற்கு இதுதான் காரணம் என்கிறாயா?
சீடன் - மசூதியில் பிரார்த்தனை மட்டுமே உண்டு. தேவாலயத்தில் பிரார்த்தனை அதிகம் சடங்குகள் குறைவு. கோயிலில் சடங்குகள் அதிகம். தோத்திரம் குறைவு. சனி, செவ்வாய், இராகு, கேது தோசம் எனப் பயமுறுத்திப் பணம் பறிக்கிறார்கள். அருச்சனை, அபிசாகம், தேர், தீர்த்தம், திருவிழா, விளக்குப் பூசை, வீடுகுடி எனச் சொல்லியும் பணம் பறிக்கிறார்கள். எதிலும் தன்னலமற்ற தொண்டு மனப்பான்மை கிடையவே கிடையாது!
குரு – மவுனம்
குருவும் சீடனும்
தமிழிசை
குரு - குருவே! இங்குள்ள கோயில் ஒன்றில் தியாராஜருக்கு ஆராதனை விழா
எடுக்கிறார்கள்.
சீடன் - சங்கீத மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்,
தியாகராஜர்
அவர்களில் ஒருவரான தியாகராஜருக்கா? அவர் தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகளை
இயற்றிப் பாடியவர் ஆச்சே?
குரு - தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகளை இயற்றிப் பாடியவ அதே தியாகராஜர்தான்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மேடைக் கச்சேரிகளில் தெலுங்கு,
சமஸ்கிருதக் கிருதிகள்தான்
பிரபலமாக இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி தமிழகத்தில் வேரூன்றிய கால
கட்டத்தில் பெரும்பாலும்
ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாயக்க
மன்னர்களும் மற்றும்
மராட்டியர்களும் ஆவர். எனவே, அவர்களும் மற்ற பெருந்தனக்காரர்களும் தெலுங்கு,
சமஸ்கிருத
கிருதிகளை கையாண்டு வந்த கர்நாடக இசைக்கலைஞர்களை ஆதரித்து வந்தனர்.
சீடன் - ஆனால் இப்போது மக்கள் ஆட்சிக் காலம். மன்னர் ஆட்சிக் காலம் அல்ல.
இந்த மும்மூர்த்திகளுக்கு முன்பு பிறந்து தமிழ் இசை வளர்த்த சீர்காழி முத்து
தாண்டவர்,
மாரிமுத்தாப்பிள்;ளை, அருணாசால கவிராயர் ஆகிய இசைப் பேரறிஞர்களைச்
சிறப்பிக்கும் வகையில்
விழா எதனையும் ஏன் கோயில்கள் எடுப்பதில்லை? தேவார திருவாசகங்களை பண்ணோடு
பாடியவர்கள்.
உண்மை என்னவென்றால் சைவத் தமிழர்களுக்கு இவர்கள் யாரென்றே தெரியாது!
குரு – உனக்கு விளக்கம் குறைவு. இனம் இனத்தோடு சேரும் என்பதை மறந்து விட்டாய்!
சீடன் - தமிழ் மொழி என்றாலே, தமிழ் இசை என்றாலே வெறுக்கும் ஒரு கூட்டம்
இன்று தமிழகத்தில் மேலாண்மை செலுத்துகிறது. அந்தக் கூட்டம் கனடாவிலும்
குடிபுகுந்து விட்டது.
இவர்கள் தமிழ்ப் பற்று என்றாலே அது மொழிவெறி எனச் சித்திரிக்கிறார்கள்.
இசைக்கு மொழி இல்லை என்கிறார்கள். இசைக்கு மொழி இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் மொழிக்கு இசை தேவைப்படுகிறதே!
குரு – மவுனம். (முழக்கம் -17-01-208)
குருவும் சீடனும்
மின்னல் தாக்கி இராசகோபுரம் சேதம்
சீடன் - குருவே! இந்தச் செய்தியைப் படித்தீர்களா?
குரு – நான் படிக்கவில்லை! அப்படி என்ன செய்தி போட்டிருக்கிறது?
சீடன் - கேளுங்கள் குருவே! செய்தித்தாளில் வந்ததை அப்படியே படிக்கிறேன்.
“சென்னை - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இராச கோபுரத்தை 21.8.2007 மாலை பெய்த மழையின்போது
மின்னல் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தி விட்டது!”
குரு – உது ஒன்றும் புதிதல்ல. அவ்வப்போது நடக்கிற சங்கதிதான்!
சீடன் - ஆனால் இப்படியான செய்திகள் தெய்வம் இல்லை, கோயில் இல்லை என்று
சொல்பவர்களுக்கு வாயில் அவல்போல் ஆகிவிடுகிறது குருவே! மின்னல் தாக்கியதை
வைத்துக் கொண்டு “கபாலீஸ்வரனின் சக்தி இவ்வளவுதானா” எனக் கேட்டு எள்ளி
நகையாடுகிறார்கள். ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்துள்ளனர்.
அந்தத் தலப் புராணங்களில் அந்தக் கோயிலில் எழுந்தருளி இருக்கும் மூலவர் பற்றி,
அவரின் ஆற்றல் பற்றி, அற்புதங்கள்பற்றி அளவு இல்லாமல் பக்திரசம் சொட்டச்
சொட்டப் பாடியிருக்கிறார்கள்.
குரு - அற்புதங்களைச் சொல்லாவிட்டால் ஆண்டவன் இருப்பதை யார் நம்புவார்கள்?
ஆண்டவன்தான் ஏது? அதனால்தான் அப்படி எழுதிக் குவித்து வைத்துள்ளனர்.
சீடன் - ஆனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரன் கோயிலுக்கு தல புராணங்கள் இருந்தும்
சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் அந்தக் கோயிலின் இராசகோபுரம் மின்னல் தாக்கிச்
சிதறுண்டது என்கிறபோது, அந்தக் கபாலீஸ்வரன்பற்றி எழுதி வைத்த அந்த அற்புத சக்தி
எங்கே போயிற்று? எனக்குள் கூட அப்படி ஒரு கேள்வி எழுகிறது குருவே! அது நியாயம்
போலவும் எனது மனதுக்குப் படுகிறது குருவே!
குரு - நாட்டுக்கு ஏதோ அழிவு வரப்போகிறது! நாட்டுக்கு வந்ததை எம்பெருமான் தன்
தலையில் தாங்கிக் கொண்டார்! உடனடியாக தோஷம் கழிக்க வேண்டும்; யாகங்கள்
செய்யவேண்டும்; சிறப்புப் பூசைகள் நடத்தவேண்டும்.......................
சீடன் - அவனின்றி ஓரணுவும் அசையாது என்றால் மின்னல் எப்படி வந்தது? எப்படி
துல்லியமாக கபாலீஸ்வரனின் இராச கோபுரத்தைப் பதம் பார்த்தது?
எல்லாம் அவன் செயல் என்றால் தோஷம் எங்கிருந்து குதித்தது? இப்படி நான்
கேட்கவில்லை குருவே! கருஞ்சட்டைகள் கேட்டதைத் திருப்பிச் சொல்கிறேன் குருவே!
குரு – நிறுத்து. நிறுத்து. நீ என்னையே கருஞ்சட்டைக் கட்சியில் சேர்;த்துப்
போடுவாய் போல் எனக்குப் படுகிறது!
சீடன் - நான் பேச நினைப்பதெல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள் குருவே!
குருவும் சீடனும்
சனிப் பெயர்ச்சி
சீடன் - குருவே! யூலை 15 இல் சனிப் பெயர்ச்சி என்று செய்தி இதழ்கள்
தடல்புடலாகச் செய்தி வெளியிட்டுள்ளன. சனிப் பெயர்ச்சி என்றால் என்ன குருவே?
குரு - சனிப் பெயர்ச்சி என்றால் சனிப் பெயர்ச்சிதான். சனிபகவான் அந்த நாளில்
வீடு மாறுகிறார்!
சீடன் - மனிதர்களைப் போல அவருக்கும் வீடு வாசல் இருக்கிறதா? மூட்டை முடிச்சோடு
வீடு மாறுகிறார் என்று சொல்லுங்கோ?
குரு - மூட்டை முடிச்சு என்று ஒன்றும் கிடையாது. அன்று சனிபகவான் கடக இராசியில்
இருந்து சிம்ம இராசிக்குள் சஞ்சரிக்கத் தொடங்குகிறார்.
சீடன் - அப்படியா சங்கதி? எப்போது சஞ்சரிக்கத் தொடங்குகிறார்? பஞ்சாங்கங்கள்
ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றனவே?
குரு – என்ன சொல்கிறாய்?
சீடன் - என்ன சொல்கிறேன் என்றால் வாக்கிய பஞ்சாங்கம் சனிப் பெயர்ச்சி ஆகஸ்ட் 5
ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை (அதாவது ஆடி 20 ஆம் நாள்) என்று சொல்ல திருக்கணிதப்
பஞ்சாங்கம் சனிப் பெயர்ச்சி சென்ற யூலை 16 ஆம் நாள் திங்கட்கிழமை காலை 4.46
(இந்திய நேரம்) மணிக்கே இடம்பெற்றுவிட்டதாகச் சொல்லுகிறதே? இதில் எது சரி? எது
பிழை? இரண்டும் சரியாக இருக்க முடியாது குருவே!
குரு – அப்படியா சங்கதி? எனக்கும் ஏன் பஞ்சாங்கக் காரர்கள் இப்படிப் போட்டுக்
குழப்புகிறார்களோ தெரியாது?
சீடன் - சனிப்பெயர்ச்சி மட்டுமல்ல. சிவராத்திரி, புத்தாண்டு எப்போது என்பதிலும்
குழப்பந்தான்! அது சரி குருவே இந்தச் சனிக் கோளத்துக்கு கோயில் கட்டி கடவுளாக
வழிபடும் மூடத்தனத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் குருவே?
குரு – நான் நினைப்பது இருக்கட்டும். நீ என்ன நினைக்கிறாய். அதை முதலில்
சொல்லு?
சீடன் - சனி என்பது ஒரு அழகான கோள். அது புவியிலிருந்து கிட்டத்தட்ட 80 கோடி
மைலுக்கு அப்பால் ஞாயிறை வலம் வருகிறது. எமது புவியை விட 700 மடங்கு பெரியது.
சனிக் கோளில் உயிர்கள் கிடையாது. அதன் வெப்பம் -244 பாகை பாரன்ஹீட் கடும்
குளிர். உயிர்க்காற்று கிடையாது; எனவே, உயிரினம் வாழும் சாத்தியம் அங்கு இல்லை.
இப்படி அறிவியல் கூறும்போது புராணீகர்கள் என்ன கூறுகிறார்கள்? சனி
சூரியனுக்கும் சம்ஞைக்கும் பிறந்தவனாம். 80 கோடி மைல் தொலைவில் உள்ள சனியின்
சுழற்சிக்கும் புவியில் உள்ள மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? சனி பகவான்
பொல்லாதவன் - அவன் கோபத்தைத் தணிக்கவேண்டும் - திருநள்ளாறு செல்லவேண்டும்; நளன்
தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து முழுகவேண்டும் எள்ளெண்ணைச் சட்டி எரிக்க
வேண்டும் காகத்துக்குச் சோறு போட வேண்டும் என மக்கள் நம்புவதை நினைத்தால்
எனக்கு வெட்கமாக இருக்கிறது குருவே!
குரு – உனக்கு வெட்கமாக இருக்கிறது. எனக்குத் துக்கமாக இருக்கிறது. இந்த 21 ஆம
நூற்றாண்டிலும் சீ... இப்படியும் ஒரு மூட நம்பிக்கையா?
குருவும் சீடனும்
சோதிடப் புரட்டு நூல் வெளியீட்டு விழா
சீடன் - குருவே! சென்ற கிழமை கனடா கந்தசாமி கோயிலுக்குப் போயிருந்தேன்.
குரு – உன் பக்தியை மெச்சினேன்! ஆலயம் பொழுவது சாலவும் நன்று!
சீடன் - இல்லை குருவே! இது முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி. தமிழ்ப்
படைப்பாளிகள் கழகமும் முழக்கம் செய்தி இதழும் சேர்ந்து நடத்திய சோதிடப் புரட்டு
நூல் வெளியீட்டு விழா.
குரு – எப்படிச் சனம்? நூல் வெளியீட்டு விழாவென்றால் ஒரு அய்ம்பது அறுபது போர்
வருவினம்!
சீடன் - இல்லை குருவே! மண்டபம் மக்களால் நிரம்பி வழிந்தது. அவ்வளவு பெரிய
கூட்டம். அரசியல் அல்லாத புத்தக வெளியீடு ஒன்றுக்கு இவ்வளவு தொகை மக்கள்
ஒருநாளும் வந்ததில்லை. அய்யா ஈழவேந்தன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு
சிறப்புரை ஆற்றினார். கோள்கள், நட்சத்திரங்கள் மனிதனை ஒன்றும் செய்யாது என்று
தேவாரம், திருப்புகழ் இரண்டிலும் இருந்து மேற்கோள் காட்டி விளாசினார்!
குரு – சோதிடப் புரட்டு நூலை எப்படிக் கோயிலில் வைத்து வெளியிடலாம்?
சீடன் - அப்படிக் கேளுங்கள் குருவே! சில இந்துத்துவவாதிகளும் இதே கேள்வியைக்
கேட்கிறார்கள். அப்படி நுணுக்கம் பார்த்தால் இந்துக்கள் எப்படி ஆர்மீனியன் ஆலய
மண்டபங்களில் வைதீக திருமணங்களை நடத்த முடியும்?
குரு – உன்னைக் குருவுக்கு மிஞ்சிய சீடன் என்று நான் நினைப்பது மெத்தச் சரி!
சீடன் - பிராமணர் கடல் கடக்கக் கூடாது என்பது ஆகம விதி. ஆனால் கனடாவுக்கு ஒரு
பட்டாளம் பிராமணர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்களே?
குரு – அவர்கள் கடல் கடந்து வரவில்லை. ஆகாய மார்க்கமாக வானூர்திகளில் வந்து
இறங்கினார்கள்!
சீடன் - சரி அதை விட்டுவிடுவோம். சோதிடத்தைக் கண்டிக்கும் நூல் வெளியீட்டு
விழாவை கோயிலில் வைக்கக் கூடாது என்று வாதித்தால் பார்ப்பனர்கள் அர்ச்சகத்
தொழில் செய்யக் கூடாது என்பதை இந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
குரு - இதென்ன புதுக்கரடி?
சீடன் - இது புதுக் கரடியல்ல. பழைய கரடி. திருமந்திரத்தில் அப்படிச்
சொல்லப்பட்டிருக்கிறது. திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாவது
திருமுளையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பாடல் இதுதான்.
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்க்கொண்ட நந்தி தொந்துரைத் தானே.
குரு – (மவுனம்) (முழக்கம் -21-09-2008)
குருவும் சீடனும்!
ஆடி மாதம் கெட்ட மாதமா?
சீடன் - குருவே! இன்று ஆடிப் பிறப்பு இந்தாருங்கள் என் கையாலேயே அடம் பண்ணிய
ஆடிக் கூழ்! என்னதான் இருந்தாலும் எங்களது பண்பாட்டை விடக் கூடாது குருவே!
குரு – அப்படிச் சொல்லு! நமது சோமசுந்தரப் புலவர் கூட “ஆடிப் பிறப்புக்கு நாளை
விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே என்று” அழகாகப் பாடியிருக்கிறார்!
சீடன் - உங்கள் நினைவாற்றல் எனக்கு வியப்பைத் தருகிறது குருவே! நானே இந்தப்
பாடலை மறந்து விட்டேன்!
குரு – பாடலை மட்டுமல்ல பாடலைப் பாடிய புலவரையே மறந்துவிட்டார்கள்!
சீடன் - அதெல்லாம் சரி குருவே! ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் செய்யக்
கூடாது, குறிப்பாக திருமணம் செய்யக் கூடாது, திருமணமான பெண்கள் ஆடி மாதத்தில்
கருத்தரிக்கக் கூடாது என்கிறார்களே? என்ன காரணம் குருவே?
குரு – ஆமாம்! ஆடியில் திருமணம் செய்யக் கூடாது என்பதால்தான் ஆனி முடியும்
முன்னர் திருமணத்தை வைத்துக் கொள்கிறார்கள். இனி ஆடி முடிந்து ஆவணியில்தான்
திருமணத்தை வைத்துக் கொள்வார்கள். ஆடியில் சூல் உண்டானால் சித்திரையில் பிள்ளை
பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல
ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத
நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள்
செய்ய மாட்டார்கள்.
சீடன் - அதுதான் ஏன் என்று கேட்கிறேன் குருவே?
குரு – நீ திருக்குறள் படித்துவிட்டாய் போல் படுகிறது! அதுதான் துருவித்
துருவிக் கேள்வி கேட்கிறாய்! ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை
பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும்
தாய்க்கும் பல உடல்நலக் குறைகளை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம்!
சீடன் - இது பிழையான மத நம்பிக்கை. ஆடியில் கர்ப்பம் தரித்தால், சித்திரையில்
பிள்ளை பிறக்கும் அதனால் கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்று
அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் குருவே?
குரு – அப்படித்தான் அவர்கள் சொல்வார்கள்! திரை உலகைப் பார்! ஆடி மாதம் புதிய
படங்கள் வெளிவருவதில்லை. பள்ளிக்கூடம், உற்சாகம், ஓரம்போ, சொல்லி அடிப்பேன்,
அம்மு ஆகிய திரைப்படங்கள் ஆடி மாதத்திற்குப் பிறகுதான் வெளியிடப்பட
இருக்கின்றன!
சீடன் - ஆனால் ஆடி மாத அச்சுறுத்தலைப் புறக்கணித்து விட்டு வீராப்பு, தீ நகர்
ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன. அது எப்படிக் குருவே? அதுதான் போகட்டும்.
இப்படிப் பலரைப் பயமுறுத்தும் ஆடி நகைக் கடைக்காரர்களுக்கும் புடவைக்
கடைக்காரர்களுக்கும் விற்பனை கூடிய மாதம்! ஆடித் தள்ளுபடி என்ற பெயரில் தங்கள்
வாணிகத்தை பெருக்கிக் கொண்டுள்ளனர். ஆடி மாத மூட நம்பிக்கையை இவர்கள் சரியாக
பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
குரு – நீ வர வர குருவுக்கு மிஞ்சிய சீடனாகப் பார்க்கிறாய்!
(முழக்கம் -ஆகஸ்ட் 2007)
குருவும் சீடனும்
சைவமும் தமிழும் ஒன்றா?
சீடன் - சைவமும் தமிழும் ஒன்றா குருவே?
குரு - இதில் என்ன அய்யம்? சைவம் இன்றேல் தமிழ் இல்லை! தமிழின்றேல் சைவம்
இல்லை!
சீடன் - அது சரி குருவே! ஆனால் சைவக் கோயில்களில் தமிழுக்கு இடம் இல்லையே?
தேவாரம் திருவாசகம் பாட வேண்டும் என்றால் வெளிவீதியில் அல்லது வெளியில்
நின்றுதானே பாட வேண்டும்? அதே சமயம் செத்தமொழி சமஸ்கிருதம் கருவறையில்
ஒலிக்கப்படுகிறதே? மூவர் தமிழ் இப்படிப் புறக்கணிக்கப்படுவது நியாயமா குருவே?
குரு - (மவுனம்)
சீடன் - சரி போகட்டும் குருவே! நடராசப் பெருமான் திருநடனம் செய்கின்ற
தில்லையிலும்
தேவாரம் திருவாசகம் ஒதுக்கப்படுகிறதே? தில்லையில் மேல்தளத்தில் இருந்து தேவாரம்
திருவாசகம் பாட முனைந்த ஆறுமகசாமி என்ற ஓதுவாரை தில்லைவாழ் பார்ப்பனர்கள் அடி
அடியென்று அடித்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விட்டார்களே? மனிதர்
பிழைப்பது கஷ்டம் என்று சொல்கிறார்களே குருவே?
குரு - (மவுனம்)
சீடன் - சரி போகட்டும். ரொறன்ரோவில் என்ன வாழுதாம்? இப்போது கோயில்களில்
திருவிழாக் காலம். தேர், தீர்த்தம், சப்பரம் என்று காசையும் நேரத்தையும்
தமிழர்கள் கரியாக்குகிறார்கள். இந்தக் கோயில்கள் வெளியிட்டுள்ள அறிவித்தல்களில்
மருந்துக்கும் தமிழ் இல்லை. வடமொழி மோகம், பற்றுத்தான் மேலோங்கி நிற்கிறது.
குரு – உனக்கு எப்படித் தெரியும்?
சீடன் - செய்தி ஏடுகளில் வெளிவரும் ‘பிரம்மோற்ஸவ விஞ்ஞாபனம்” படித்தாலே
பொட்டுக் கேடு தெரிந்து விடுமே!
குரு – அதென்ன பிரம்மோற்ஸவ விஞ்ஞாபனம்? விளங்குப்படி சொல்லு!
சீடன் - பிரம்மோற்ஸவ விஞ்ஞாபனம் என்றால் பெருவிழா அறிவித்தல் என்று பொருள்.
துவஜாரோகணம் என்றால் கொடியேற்றம் என்று பொருள். சாயரட்சை என்றால் மாலை என்று
பொருள். பூசை என்ற தமிழ்ச் சொல்லையே வடமொழிப் பித்தர்கள் பூஜை என்று போட்டுத்
தொலைக்கிறார்கள் குருவே?
குரு – சைவமும் செந்தமிழும் ஒன்று என்று சொல்லும் சைவர்களுக்கு சூடு, சொரணை,
தன்மானம் கொஞ்சமேனும் இல்லை என்று சொல்?
சீடன் - அதேதான் குருவே!
(முழக்கம் -ஆகஸ்ட் 2007)
குருவும் சீடனும்
சமயபுரத்து மாரியம்மன்
சீடன் - குருவே! சமயபுரம் மாரியம்மன் கோயிலிருந்து மாரியம்மன் கோபித்துக்கொண்டு
வெளியேறி விட்டாராம்!
குரு – பேய்க்கதை பேசாதே! யார் இந்த வதந்தியைப் பரப்பியது?
சீடன் - வதந்தி இல்லை குருவே! இது செய்தி! பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன்
குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று
திடீர் பரபரப்பு கிளம்பியது. அம்மனுக்குக் கோபம் வந்து கோவிலை விட்டு வெளியேறி
விட்டார்.
செய்தித்தாளில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள் குருவே!
குரு – கடவுள் எப்படிப்பட்டவர்? என்ற கேள்விக்கு கடவுள் விருப்பு வெறுப்பு
அற்றவர்
என்று ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா – விடை என்ற சிறு நூலில் இருக்கிறது. அதை
நீ படிக்கவில்லையா?
சீடன் - என்னை விடுங்கள் குருவே! ஆத்தா கோபம் மக்களுக்கு ஆகாது என்று
பீதியடைந்த மக்கள் அவளைச் சமாதானப்படுத்த தங்கள் தங்கள் வீடுகள் முன்பு
வேப்பிலை கட்டி வைத்திருக்கிறார்கள். பல்வேறு நேர்த்திக் கடன்களையும் செய்து
வருகின்றனர்.
குரு – இப்படியான மூடத்தனம் இந்து மதத்தில் அதிலும் தமிழ்நாட்டு
இந்துக்களிடந்தான் அதிகம் இருக்கிறது. எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கை
இருக்கிறது. ஆனால் இந்து மதத்தில் அது அதிகமாக இருக்கிறது. பக்தி வந்தால்
புத்தி போய்விடும் என்று பெரியார் சொன்னது சரிதான்!
சீடன் - ஆமாம் குருவே! இந்து சமயத்துக்கு இந்துக்களிடையே நிலவும்
மூடநம்பிக்கைகளால் கெட்ட பெயர் வருகிறது! இதனை இந்துக்கள் மனதில் கொண்டு
திருந்தினால் அவர்களுக்கும் நல்லது இந்து மதத்திற்கும் நல்லது!
(யூலை 2007)
குருவும் சீடனும்
அறிவு எங்கிருந்து வருகிறது?
சீடன்: குருவே! எனக்கொரு அய்யம். நீங்கள்தான் அதனைத் தீர்த்து வைக்கவேண்டும்?
குரு: தீர்த்துவைப்பேன். அய்யம் எதுவாக இருந்தாலும் அதனைத் தீர்த்து
வைப்பதுதான் ஒரு
குருவின் கடமை. எனவே நீ தாராளமாக உனது அய்யத்தை தெரிவிக்கலாம்.
சீடன்: குருவே! அறிவு எங்கிருந்து வருகிறது?
குரு: இதென்ன கேள்வி? அறிவு நூல்பல கற்பதால் வருகிறது! தொட்டனைத் தூறும்
மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்று சொல்கிறார் திருவள்ளுவப்
பெருந்தகை. அதாவது தோண்டிய அளவுதான் துரவில் நீர் ஊறும் அது போல அறிவும்
எவ்வளவு நூல்களைப் படிக்கின்றோமோ அவ்வளவுக்கு எமது அறிவும் வளரும். நூல்களைப்
படியாவிட்டாலும் படித்தவர் சொல்வதைக் கேட்டும் அறிவை வளர்த்திக்கொள்ளலாம்!
சீடன்: அறிவு தொடையில் இருந்தும் வருமா?
குரு: தொடையில் இருந்தா? முட்டாள்தனமாகப் பேசாதே! தொடையில் இருந்து அறிவு வரும்
என்று யார் உனக்குச் சொன்னது? எங்கே சொன்னது?
சீடன்: அப்படிக் கேளுங்கள் குருவே! சொன்னவர் ஒரு முன்னாள் கல்லூரி அதிபர்.
சொன்ன இடம்
ஒரு நூல் வெளியீட்டு விழா!
குரு: அப்படிப் பேய்த்தனமாய் அவர் சொல்லியிருக்க மாட்டார்! உனக்குத்தான் ஏதோ
காதுக் கோளாறு போல் இருக்கிறது.
சீடன்: இல்லை குருவே! நான் காதாரக் கேட்டேன். "இந்த நூலின் நீள ஆழத்தைப்
பார்த்தால் இதை எழுதுவதற்கு இவருக்கு எங்கிருந்து அறிவு வந்தது என்று
யோசித்தேன்.
அப்போதுதான் ஞாபகம் வந்தது. ஒரு முறை காரில் நான், வினோதன் போகும்போது
இடநெருக்கடி
காரணமாக நூலாசிரியர் எனது தொடையில் இருந்து வந்தார். அப்போதுதான் எனது அறிவு
அவருக்குத் தொத்தியது!" என அதிபர் அடித்துச் சொன்னார்!'
(இதைக் கேட்ட குரு மூர்ச்சை போட்டு விழுகிறார். சீடன் தண்ணி கொண்டுவர கிணற்றை
நோக்கி
தலைதெறிக்க ஒடுகிறான்!) (முழக்கம் - யூன் 2007)